Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. நான் எப்போது அடிமையாயிருந்தேன்! September 3, 2009 நேர்காணல்: புஷ்பராணி ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஷ்பராணி. தலைமறைவுப் போராளிகளுக்குச் சோறிட்டு வீட்டுக்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியல் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும் கலகக்காரி. தமிழரசுக் கட்சியின் தொண்டராக ஆரம்பிக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வு எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுதந் தாங்கிய இளைஞர் போராட்டக் குழுக்களின் பக்கம் அவரைக் கூட்டிவந்தது. சில வருட இயக்க அனுபவங்களிலேயே போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர் இயக்க அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டாலும் தொடர்ந்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. புஷ்பராணி 1986ல் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்தார். ஈழப் போராட்டத்தில் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஷ்பராணியைச் சந்தித்து எதுவரை இதழுக்காகச் செய்யப்பட்ட இந்நேர்காணல் அவரின் புத்தகத்திற்கான ஒரு முன்னுரைபோல அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியே. ஒன்றரைமணி நேரங்கள் நீடித்த இந்த நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் பதிவு செய்யப்பட்டது. சந்திப்பு: ஷோபாசக்தி நான் யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் 1950ல் பிறத்தேன். எனக்கு ஆறு சகோதரர்கள், ஆறு சகோதரிகள். குடும்பத்தில் நான் நான்காவது. மறைந்த புஸ்பராஜா எனக்கு அடுத்ததாகப் பிறந்தவர். எனக்கும் தம்பி புஸ்பராஜாவுக்கும் ஒருவயதுதான் இடைவெளி. வசதியான குடும்பம் இல்லையென்றாலும் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த குடும்பம் எங்களது. எங்களது கிராமத்தில் கரையார்களே ஆதிக்கசாதியினர். அவர்கள் மத்தியில் நாங்கள் ஒரேயொரு தலித் குடும்பம். என் இளமைப் பருவத்தில் எல்லாவிதமான தீண்டாமைகளும் எங்கள் கிராமத்தில் நிலவின. தேநீர்க் கடைகள், ஆலயங்கள் போன்றவற்றுக்குள் எங்களை அனுமதிப்பதில்லை. சமூகத்திலிருந்து நாங்கள் புறமாக வைக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு நாங்களே துணைவர்கள், தோழர்கள். குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் மிகுந்த ஒற்றுமையாக இருப்போம். அரசியல் குறித்தோ புத்தகங்கள் குறித்தோ உரையாட வேண்டியிருந்தாலும் எங்களுக்குள்ளேயே உரையாடுவோம். ஆதிக்க சாதியினரின் தேநீர்க் கடைகளுக்குப் போய் போத்தலில் தேநீர் குடிக்கவோ, கோயிலுக்கு வெளியில் நின்று சாமி கும்பிடவோ நாங்கள் தயாரில்லை. புறக்கணிப்புக்கு புறக்கணிப்பையே நாங்கள் பதிலாகக் கொடுத்தோம். எங்கள் காலத்தில் எங்கள் குடும்பம் சாதித் தொழிலிலிருந்து வெளியே வந்துவிட்டது. எனது தந்தையாரும் மூத்த சகோதரர்கள் இருவரும் புகையிரதத் திணைக்களத்தில் வேலை பார்த்தார்கள். வழி தெருவில், பாடசாலையில் ஆதிக்க சாதியினரின் கிண்டல்களுக்கோ பழிப்புகளுக்கோ நாங்கள் ஆளாகும்போது வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம். ஒரு ஆடு போய் அடுத்த வீட்டு இலையைக் கடித்தால் போதும் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விடுவார்கள். சண்டையின் முதலாவது கேள்வியே ‘எடியே உங்களுக்கு கரையார மாப்பிள்ளை கேக்குதோ” என்பதாகத்தானிருக்கும். ஆட்டுக்கும் கரையார மாப்பிள்ளைக்கும் என்ன சம்மந்தம்? நாங்கள் பதிலுக்கு எங்களைக் கலியாணம் கட்டத் தகுதியுள்ள கரையான் இங்கே இருக்கிறானா? எனத் திருப்பிக் கேட்போம். எங்கள் கிராமத்தில் நான் அறியாத காலத்தில் எங்களைத் தவிர வேறு சில தலித் குடும்பங்கள் இருந்தனவாம். அவர்கள் எல்லோரும் பிழைப்புக்காகவும் வேறுகாரணங்களிற்காவும் அங்கிருந்து இடம்பெயர்ந்த பின்பும் கூட எனது தந்தையார் அங்கிருந்து போக விரும்பவில்லை. எங்கள் அய்யா எங்களை ராங்கியாகத்தான் வளர்த்தார். சாவது ஒருமுறைதான் எதுவந்தாலும் எதிர்ந்து நில்லுங்கள் என்று சொல்லிச் சொல்லித்தான் எங்களை வளர்த்தார். நாங்களும் அப்படித்தான் வளர்ந்தோம். வாயால் பேச வேண்டிய இடங்களில் வாயாலும் கையால் பேச வேண்டிய இடங்களில் கைகளாலும் பேசினோம். எங்கள் குடும்பமே ஒரு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் போலத்தான் இயங்கி வந்தது. நான் பத்தாவது வரைக்கும் மயிலிட்டி கன்னியர் மடத்தில் படித்தேன். பொதுவாக இந்துக்கள் கன்னியர் மடங்களில் படிப்பதற்கு வருவதில்லை. இந்துப் பாடசாலைகளிலோ அப்போது தலித்துகள் வேண்டாப் பிள்ளைகளாக நடத்தப்பட்டார்கள். கன்னியர் மடத்திலும் நான் சாதிக் கொடுமைகளை அனுபவித்தேன். அங்கிருந்த ஓரிரு கன்னியாஸ்திரிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சாதிய உணர்வுடனேயே நடந்துகொண்டார்கள். அந்தக் கன்னியாஸ்திரிகள் பணக்காரர்களுக்குப் பல்லிளித்து ஏழை மாணவிகளைத் துரும்பாக மதித்தார்கள். நான் படிப்பில் கெட்டிக்காரியாயிருந்த போதும், உயர்கல்வியைத் தொடர இளவாலை கன்னியர் மடத்தில் எனக்கு இடம் கிடைத்தபோதிலும் குடும்பச் சூழ்நிலையால் என்னால் பத்தாவதுக்கு மேல் படிக்க முடியவில்லை. அப்போது கிராமங்கள் தோறும் பெண்களிற்கு விழிப்புணர்வைத் தூண்டும் வண்ணம் மாதர் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. எங்கள் கிராமத்திலும் அவ்வாறான ஒரு மாதர் சங்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென எனக்கு ஆர்வமிருந்தபோதிலும் ஆதிக்க சாதிப் பெண்கள் என்னுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால் அந்த எண்ணம் நிறைவேறவேயில்லை. நான் ‘தமிழரசுக் கட்சி’யில் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அறுபதுகளில் தலித் மக்கள் மத்தியில் கொம்யூனிஸ்ட் கட்சிகள்தான் செல்வாக்கோடு திகழ்ந்தன. நீங்கள் எப்படித் ‘தமிழரசுக் கட்சி’யிடம் ஈர்க்கப்பட்டீர்கள்? எங்களது தந்தையார் நீண்டகாலமாகவே தமிழரசுக் கட்சியின் ஆதராவாளராயிருந்தார் என்பது ஒரு காரணமாயிருந்தாலும் அன்றைய காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சிகள் சிறிமாவின் கூட்டரசாங்கத்தில் சேர்ந்திருந்ததாலும் அந்தக் கட்சிகளின் தலைமையில் சிங்களவர்களே இருந்ததாலும் எனக்குக் கொம்யூனிஸ்ட் கட்சிகளிடம் எதுவித ஈர்ப்புமிருக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் கூட்டங்களைப் பார்க்கப் போவது என்றளவில்தான் முதலில் என்னுடைய அரசியல் ஈடுபாடு இருந்தது. எழுபதுகளின் தொடக்கத்தில் புஸ்பராஜா யாழ்ப்பாணத்திற்குப் படிக்கச் சென்றபோது அவருக்கு பத்மநாபா, வரதராஜப் பெருமாள், பிரான்ஸிஸ் (கி.பி.அரவிந்தன்) போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. இந்த இளைஞர்கள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்கள். தனிநாடு குறித்து இவர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டும் விவாதித்துக்கொண்டுமிருப்பார்கள். ‘தமிழர் கூட்டணி’யினரின் செயலற்ற தன்மையில் அதிருப்தியடைந்த இவர்களைப் போன்ற இளைஞர்கள் இணைந்து 1973ல் புஸ்பராஜாவின் தலைமையில் ‘தமிழ் இளைஞர் பேரவை’யை உருவாக்கினார்கள். தவராஜா, சரவணபவன், வரதராஜப்பெருமாள், பத்மநாபா, பிரான்ஸிஸ் (கி.பி. அரவிந்தன்) போன்றவர்கள் இளைஞர் பேரவையைத் தொடக்கியதில் முக்கியமானவர்கள். புஸ்பராஜாவை என்னுடைய தம்பி என்பதை விட என்னுடைய அரசியல் தோழர் என்று சொல்வதே பொருந்தும். ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்தாலோ ஒரு நாவலை வாசித்தாலோ அவர் என்னோடு அதுகுறித்துத் தீவிரமாக உரையாடுவார். அதுபோலவே அரசியல் குறித்தும் என்னோடு ஆழமாக விவாதிப்பார். புஸ்பராஜாவின் வழியாகத் தமிழ் இளைஞர் பேரவையில் நானும் இயங்கத் தொடங்கினேன். தமிழர் கூட்டணியின் பாராளுமன்ற நாற்காலி அரசியலுக்கு மாற்றாக தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் பேரவையின் அரசியல் திட்டங்களும்கூட கூட்டணியை அடியொற்றிய வெறும் தேசியவாதமாகத்தானேயிருந்தது. சாதியம், யாழ்மையவாதம் போன்ற உள்முரண்களை அவர்களும் கண்டுகொள்ளவில்லையே? இப்போது அந்தத் தவறை நான் உணர்கிறேன. ஆனால் அப்போது எங்களுக்குத் தமிழர்கள் என்ற ஒற்றையடையாளமும் தனிநாடு என்ற இலட்சியமுமே முக்கியமானதாகப்பட்டது. அந்த இலட்சியத்தை அடைந்துவிட்டால் மற்றைய முரண்களைத் தீர்த்துவிடலாம் என்றே கருதினோம். நாங்கள் அமைக்கப்போகும் தமிழீழம் சாதிமத பேதமற்ற நாடாகவிருக்கும் என நம்பினோம். இன முரண்பாடுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். அப்போது நீங்கள் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து ஒருபோதும் இந்த நாட்டில் வாழ முடியாது என்பதில் உறுதியாயிருந்தீர்களா? ஆம் மிகவும் உறுதியாயிருந்தேன். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள்தான் அரசின் சேவைத்துறைகளில் நிறைந்திருந்தார்கள் என்றொரு பேச்சு உண்டு. உண்மையில் காலனிய காலத்தில்தான் அரச சேவைத் துறைகளுக்குள் தமிழர்கள் நிறைந்திருந்தார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்பு சிங்களத் தேசியவாதம் வீரியத்துடன் உருவாகி வந்தபோது தமிழர்கள் வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள். இராணுவத்திலும் பொலிஸ்துறையிலும் தமிழர்கள் அரிதாகவே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். நடந்த இனக் கலவரங்களும் இத்தகைய புறக்கணிப்புகளும் முக்கியமாகத் தரப்படுத்தல் முறையும் எங்களை அந்த முடிவை நோக்கித் தள்ளின. தரப்படுத்தல் திட்டம் ஒரு இனவாதத் திட்டம் என இப்போதும் கருதுகிறீர்களா? இல்லை. பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை என்றவாறு தரப்படுத்தல் திட்டம் சீரமைக்கப்பட்டபோது இலங்கையின் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு முன்னுரிமைகள் கிடைத்திருக்கின்றன. யாழ்ப்பாணம் தவிர்ந்த பிற தமிழ் மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் முன்னுரிமையும் நன்மையும் பெற்றிருக்கின்றன. ஆனால் அதையும் யாழ்ப்பாணத்தான் இயன்றளவு தட்டிப்பறிக்க முயன்றதுதான் சோகம். யாழ்ப்பாணத்து மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களில் பதிவுசெய்து அங்கிருந்து பல்கலைக் கழக அனுமதியைக் குறுக்கு வழியில் பெற்றுக்கொண்டதும் நடந்தது. ஆனால் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்த போரால் யாழ் மாவட்டம் வெகுவாகப் பாதிப்புற்றிருக்கிறது. சகல உள்கட்டுமானங்களும் நொறுங்கியுள்ளன. எனவே இப்போது யாழ் மாவட்டத்தையும் பின்தங்கிய பகுதியாக அறிவித்துக் கல்வியில் முன்னுரிமை வழங்குவது அவசியமானது. வெறுமனே கல்வியில் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகள், நாடாளுமன்ற உறுப்புரிமை போன்ற சகல துறைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களிற்கும் பின்தங்கியவர்களிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் இளைஞர் பேரவை ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் என்பதில் உறுதியாயிருந்தா? ஆம். அது மேலுக்கு உண்ணாவிரதம், பேரணிகள் என்று அறப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தாலும் ஆயுதப் போராட்டம் ஒன்றைத் தொடக்குவதற்கான முயற்சியில் அது ஈடுபட்டிருந்தது. ஆனால் அதற்கான நிதிவசதி அதனிடமில்லை. யாழ்ப்பாணத்தில் தங்குவதற்கு இடம் பெறுவதிலிருந்து தபாற் செலவுகள், பயணச் செலவுகள் போன்றவற்றிற்கும் அது தமிழர் கூட்டணியையே நம்பியிருந்தது. தமிழர் கூட்டணியோ இந்தத் துடிப்பான இளைஞர்களை தங்களது பாராளுமன்ற அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்த முயன்றுகொண்டிருந்தது. புஸ்பராஜா, பத்மநாபா, தங்கமகேந்திரன் போன்ற இளைஞர்கள் கைகளில் துருப் பிடித்த துப்பாக்கியும் ஈழக் கனவுமாகத் திரிந்துகொண்டிருந்தார்கள். ஒருசில இளைஞர்களையும் துருப்பிடித்த துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு ஆயுதப்போராட்டத்தின் மூலம் இலங்கை அரசை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு எது கொடுத்தது? அது அரசியல் சித்தந்தப் பலமற்ற ஒரு வீரதீர மனநிலையும் பொறுப்பற்ற முட்டாள்தனமும் என்பதை நான் இப்போது ஒப்புக்கொள்வேன். ஆனால் அன்றைய நிலையில் வெகு சுலபமாகத் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் தமிழர்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஈழத்தை வென்றெடுக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். 1975ல் நான் ஹட்டன் நகரில் ஒரு கூட்டத்தில் பேசியபோது எப்போது தமிழீழத்தை அடைவீர்கள் என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் ‘இன்னும் அய்ந்து வருடங்களில் நாங்கள் ஈழத்தை வென்று விடுவோம்’ எனப் பதில் கூறினேன். அது உண்மையென்றும் நினைத்தேன். அந்தக் கூட்டத்தில் என்னிடம் இன்னொரு கேள்வியும் கூட்டணியின் ஆதரவாளர்களால் கேட்கப்பட்டது. தமிழரசுக் கட்சியாலும் பின்பு தமிழர் கூட்டணியாலும் வளர்க்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டணியினருக்கு எதிராகவே திரும்புவது என்ன நியாயம் எனக் கேட்டார்கள். ‘நல்லாசிரியன் எல்லாக்காலமும் தவறிழையான் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை, இப்போது கூட்டணியினர் பாராளுமன்றப் பதவிகளிற்காகத் தமிழர்களின் உரிமைகளை அடகு வைக்கத் தயாராகிவிட்டார்கள்” என்றேன் நான். இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். கூட்டணியினர் தமது அப்புக்காத்து மேட்டுக்குடிக் குணங்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தார்களில்லை. கூட்டணித் தலைவர்களில் பலர் மேட்டுக்குடிச் செருக்கும் திமிரும் கொண்டவர்கள் என்பதே எனது அனுபவம். ஆனால் தமிழ் இளைஞர் பேரவை கூட்டணியின் ஒரு பிரிவுபோல, அடியாட்கள் போல செயற்பட்டதாக ஒரு கருத்துள்ளதே? இல்லை. அது தவறான கருத்து. தமிழ் இளைஞர் பேரவை எக்காலத்திலும் கூட்டணிக்குக் கட்டுப்பட்டதாக இருக்கவில்லை. இந்த உண்மையை புஸ்பராஜா தனது நூலிலும் பதிவு செய்துள்ளார். சொல்லப்போனால் மாணவர்களினதும் இளைஞர்களினதும் தன்னெழுச்சியானதும் அமைப்புரீதியானதுமான போராட்டங்களின் முன்பு கூட்டணிதான் தனது செல்வாக்கை மக்களிடம் மெதுமெதுவாக இழந்துகொண்டிருந்தது. இளைஞர்களின் நிழல்களில் நின்றுதான் கூட்டணி அதற்குப் பின்பு தனது அரசியலைத் தொடர வேண்டியிருந்தது. நாங்கள் அய்ம்பது இடங்களில் நடத்திய தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களில் கூட்டணியினர் தங்களை வலியப் புகுத்த வேண்டியிருந்தது. நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு அனர்த்தங்களின்போது நீங்கள் அங்கிருந்தீர்களா? ஆம். நான் அங்குதானிருந்தேன். மேடையில் நயினார் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, தமிழகத்திலிருந்து மாநாட்டுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த ‘உலகத் தமிழர் இளைஞர் பேரவை’த் தலைவர் இரா. ஜனார்த்தனன் மேடையில் தோன்றி மக்களைப் பார்த்துக் கையசைத்தார். அப்போது, பொலிசார் மாநாட்டைக் குழப்பினார்கள். துப்பாக்கிச் சூடுகளும் கண்ணீர்புகை வீச்சுகளும் நடந்தன. மக்கள் கலைந்து ஓடத்தொடங்கினார்கள். துப்பாக்கிச் சூட்டால் மின்சாரக் கம்பிகள் அறுந்து சனங்கள்மீது விழுந்தன. அன்று ஒன்பதுபேர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரே துப்பாக்கி வெடிச்சத்தமும் ஓலக்குரல்களுமாய் தமிழராய்ச்சி மாநாடு சீர்குலைந்தது. அப்போது பொன். சிவக்குமாரன் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொண்டர்படையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த அனர்த்தம் எங்கள் எல்லோரையும் விட சிவக்குமாரனைத்தான் அதிகம் பாதித்திருந்தது. அவருடைய போராட்ட முனைப்புகள் அதிதீவிரம் பெற்றன. ஆறு மாதங்களிற்குள்ளாகவே, தோல்வியில் முடிந்த கோப்பாய் வங்கிக் கொள்ளையின்போது தப்பிக்க முடியாமல் எப்போதும் சிரித்த முகத்தோடும் எள்ளளவும் சுயநலமுமில்லாத உள்ளத்தோடும் இயங்கிய சிவக்குமாரன் சயனைட் அருந்தி இறந்துபோனார். அரசியற் பிரச்சினைகளைத் தனிநபர்களை அழித்தொழிப்பு செய்வதன் மூலம் அணுகும் கொலைக் கலாச்சாரத்தை சிவக்குமாரன் தொடக்க முயன்றாலும் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்ததன் மூலம் பிரபாகரன் தொடக்கி வைத்தார். துரையப்பாவின் கொலையை நீங்கள் எவ்விதமாகப் பார்த்தீர்கள்? நாங்கள் அந்தக் கொலைச் செய்தியைக் கேட்டதும் மகிழ்ந்தோம். நான் குலமக்கா வீட்டுக்குச் சென்றபோது எனது சக இயக்கத்தோழி கல்யாணி என்னைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். துரையப்பா ஒன்றும் இலேசுப்பட்ட ஆளல்ல. தமிழர் கூட்டணியின் ஆதரவாளர்களைத் தேடித் தேடித் தனது நகரபிதா பதவியின் முலம் அவர் தொல்லைகள் கொடுத்தார். குலமக்காவின் வீட்டு மதிற்சுவர் கூட துரையப்பாவின் உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டது. ஆனால் இன்று சிந்திக்கும்போது அரசியல் முரண்களைத் துப்பாக்கியால் தீர்க்கும் அந்தக் கலாச்சாரம் இன்று தனது சொந்த இனத்துக்குள்ளேயே துரையப்பாவில் தொடங்கி சபாலிங்கம் வரைக்கும் ஆயிரக் கணக்கானவர்களை அழித்துவிட்டதையும் என்னால் உணர முடிகிறது. இந்தப் பதற்றமான காலகட்டத்தில் உங்களின் அரசியற் செயற்பாடுகள் எதுவாயிருந்தன? துரையப்பா கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தமிழ் இளைஞர் பேரவை பிளவுபட்டுப் போயிற்று. அப்போது மக்கள் மத்தியில் வேகமாகச் செல்வாக்குப் பெற்றுவந்த இளைஞர் பேரவையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூட்டணியினர் முயன்றனர். மங்கையயற்கரசி அமிர்தலிங்கம் மேடைக்கு மேடை இது மாவை சோனாதிராசாவால் தொடங்கப்பட்ட அமைப்பு என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் உண்மையில் மாவை சேனாதிராசா தமிழ் இளைஞர் பேரவையில் இருக்கவேயில்லை. இளைஞர் பேரவைக்குள்ளும் கனக மனோகரன், மண்டூர் மகேந்திரன், மதிமுகராஜா, மன்னார் ஜெயராஜா போன்ற கூட்டணியின் ஆதரவாளர்கள் குழப்பங்களைத் தொடங்கினர். இறுதியில் இளைஞர் பேரவை பிளவுற்று தங்கமகேந்திரன், சந்திரமோகன், புஸ்பராஜா, பிரான்ஸிஸ், வரதராஜப்பெருமாள், முத்துக்குமாரசாமி போன்றவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தைத் (T.L.O) தொடங்கினார்கள். துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து புஸ்பராஜா உட்பட பெரும்பாலான தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். புலோலி வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து நானும் கைதுசெய்யப்பட்டேன். புலோலி வங்கிக் கொள்ளையில் உங்கள் பங்கு என்ன? இயக்கம் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தீர்களா? இயக்கத்தை வளர்ப்பதற்கான நிதியாதாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கொள்ளைகள் அவசியம் என்றுதான் நான் கருதினேன். தங்கமகேந்திரன், சந்திரமோகன், வே. பாலகுமாரன் (முன்னைய ஈரோஸ் தலைவர்), கோவை நந்தன் போன்றவர்களின் திட்டமிடலிற்தான் புலோலி வங்கி கொள்ளையிடப்பட்டது. கொள்ளைப் பொருட்களை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு இரகசியமாக் கடத்திச் செல்வதற்கு அவர்களிற்கு நானும் கல்யாணியும் உதவி செய்தோம். வங்கிக் கொள்ளையைத் துப்புத் துலக்கிக்கொண்டிருந்த பொலிஸாருக்கு பிரதீபன் என்றொருவர் துப்புகளை வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். பிரதீபன் அப்போது இயக்க ஆதரவாளராக நடித்து தங்கமகேந்திரனின் நட்பைப் பெற்றிருந்தார். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் துரையப்பா கொலையைத் தொடர்ந்து சிறைப்பட்டிருந்த நிலையில் தங்கமகேந்திரனும் சந்திரமோகனும்தான் இயக்கத்தை தலைமைதாங்கி வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். அந்த உளவாளி பிரதீபன் தன்னை தங்கமகேந்திரனின் நண்பர் என்று அறிமுகப்டுத்திக்கொண்டு என்னிடம் வந்தார். தங்கமகேந்திரனும் அவர் தனது நண்பரென்றும் இயக்க ஆதரவாளரென்றும் என்னிடம் உறுதிப்படுத்தினார். முடிவில் அந்த உளவாளி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் என்னைத்தேடி வீட்டுக்கு வந்தபோது நான் வீட்டின் பின்புறத்தால் ஓடித் தப்பித்துக்கொண்டேன். பொலிஸார் எனது பெற்றோர்களையும் எனது தம்பி, தங்கைகளையும் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். எனது பெற்றோர்களும் சகோதரனும் சகோதரிகளும் பொலிஸ்நிலையத்தில் வதைக்கப்பட்டனர். எனது தம்பி வரதன் அனுராதபுரம் சிறைக்கு அனுப்பப்பட்டார். தங்கை ஜீவரட்ணராணி வெலிகடைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கேட்க நான் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்ற தலைமைத் தோழர்களைத் தேடிப் போனேன். அவர்கள் குருநகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார்கள். பொலிஸார் என்னை வேறுகாரணங்களிற்காகத் தேடியிருக்கலாம் எனவும் வங்கிக் கொள்ளை குறித்துப் பொலிஸாருக்குத் துப்புத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையெனவும் கூறி அந்த அதிபுத்திசாலித் தோழர்கள் என்னைப் பொலிஸாரிடம் சரணடையுமாறு சொன்னார்கள். நான் ஒரு வழக்கறிஞர் மூலம் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தேன். நான் பொலிஸ் நிலையத்திற்குள் கால் வைத்ததுமே பொலிஸார் கேட்ட கேள்விகளிலிருந்து புலோலி வங்கிக்கொள்ளை குறித்து எல்லாத் தகவல்களையும் பொலிஸார் ஏற்கனவே திரட்டி வைத்திருக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன். நான் எனது வழக்கறிஞரிடம் இரகசியமாகச் சொன்னேன்: “தங்கமகேந்திரனிடம் போய்ச் சொல்லுங்கள், அவர்கள் என்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பியிருக்கிறார்கள்” . விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது. குறிப்பாக எங்கள் இயக்கத்தோடு தொடர்புடைய பெண்கள் குறித்தே என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். வங்கிக்கொள்ளை குறித்த தகவல்கள் எதுவும் அவர்களிற்குத் தேவையாயிருக்கவில்லை. ஏனென்றால் அவற்றை எனது தோழர்கள் முன்னமே படம் போட்டுப் பொலிஸாருக்கு விபரித்திருந்தார்கள். உங்கள்மீதான விசாரணைக்குப் பொறுப்பாயிருந்தவர் சித்திரவதைகளிற்கு பேர்போன இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை என்று அப்போது செய்திகள் வந்தன. அவர்தானா உங்களை விசாரணை செய்தார்? இல்லை. என்னை இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தலைமையிலான குழுவே விசாரணை செய்தது. அந்த பஸ்தியாம்பிள்ளையும் இந்தப் பத்மநாதனும் பின்னர் புலிகளால் கொலைசெய்யப்பட்டனர். என்னை சித்தரவதை செய்ததில் சண்முகநாதன், கருணாநிதி, ஜெயக்குமார் போன்ற அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கிருந்தது. இவர்களும் அடுத்தடுத்த வருடங்களில் கொல்லப்பட்டனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் விசாரணை அதிகாரிகள் எல்லோரும் வெள்ளாளர்களாகவேயிருந்தனர். அவர்களிடம் சிக்கிய நானும் கல்யாணியும் தலித்துகளாகயிருந்தோம். நாங்கள் தாக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் பள்ளி, நளத்தி என்று எங்கள் சாதிப்பெயர்களால் இழிவு செய்யப்பட்டே தாக்கப்பட்டோம். பத்மநாதனைப் பொறுத்தவரை இந்த வழக்கை முடித்துவைத்து பதவி உயர்வு பெறவேண்டும் என்ற அதீத துடிப்பு அவரிடம் காணப்பட்டது. ஆனாலும் நானும் கல்யாணியும் பெண்கள் என்ற வகையில் அவர் எங்களை ஓரளவு கண்ணியமாகவே நடத்தினார். மற்றைய பொலிஸாரிடமிருந்து பாலியல்ரீதியான தொந்தரவுகள் வந்தபோது அவரே எங்களை அவற்றிலிருந்து காப்பாற்றினார். ஆனால் சித்திரவதைகளில் அவர் குறை வைக்கவில்லை. என்னைக் குப்புறப்படுக்கப் போட்டுவிட்டு அவர்கள் பொல்லுகளால் என்னைத் தாக்கியபோது நான் ‘அடியுங்கடா என்னை! கொல்லுங்கடா என்னை” என்று அலறினேன். அந்தச் சத்தம் முழு யாழ்ப்பாணத்திற்கும் கேட்டிருக்கும். அதைப் பார்த்துக்கொண்டிருந்த செல்வரத்தினம் என்ற பொலிஸ்காரர் கண்ணீர்விட்டு அழுததை என்னால் மறக்க முடியாது. செல்வரத்தினம் இப்போது பிரான்ஸில்தான் வாழ்கிறார். எனது போராட்ட அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் நான் இப்போது ஈடுபட்டிருக்கிறேன். எனது நூலை செல்வரத்தினத்தைக் கொண்டுதான் நான் வெளியிடுவேன். எப்போது வெலிகடைச் சிறைக்கு அனுப்பப்பட்டீர்கள்? யாழ்ப்பாணப் பொலிஸ்நிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டு முதலில் யாழ் கோட்டைக்குள்ளிருந்த கிங் ஹவுஸில் அடைத்து வைக்கப்பட்டோம். இரண்டு வாரங்களில் அங்கிருந்து வெலிகடைச் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டோம். வெலிகடைச் சிறையில்தான் நான் ஜே.வி.பி கிளர்ச்சியில் ஈடுபட்டு தெனியாயச் சண்டையில் தலைமை வகித்துப் போராடிய தோழிகளான புத்த கோறளையையும் சந்திரா பெரேராவையும் சந்தித்தேன். அவர்களுக்கும் உங்களுக்குமான உறவுகள் எப்படியிருந்தன? அவர்கள் அற்புதமான தோழிகள். அவர்கள் எங்களிடம் தமிழ் படித்தார்கள். நான் அவர்களிடம் சிங்களம் படித்தேன். நாங்கள் அரசியல் விவாதங்களையும் உரையாடல்களையும் மனம்விட்டுச் செய்தோம். அந்தச் சிங்களத் தோழிகள் என்னையும் கல்யாணியையும் சிறைக்குள் தாய் மாதிரிப் பாதுகாத்தார்கள். அப்போது சிறைக் கண்காணிப்பளாராயிருந்த சைமன் சில்வாவும் அருமையான மனிதர். அவரின் நற்பண்புகள் குறித்து அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காசி. ஆனந்தன் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். எனவே சிறை வாழ்க்கையில் பெரிய துன்பங்கள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை. நான் சிறையிலிருந்த காலங்களில் நிறையவே வாசித்தேன். சிறை நூலகத்திலிருந்து புத்தகங்கள் கிடைக்கும். அந்த நூல்கள் ஆண்கள் சிறையிலிருந்த எங்களது இயக்கத் தோழர்களுடன் நாங்கள் இரகசியமாகத் தகவல்களைப் பரிமாறவும் எங்களுக்கு உதவின. நாங்கள் நூலகத்திற்குத் திருப்பியனுப்பும் புத்தகங்களை அவர்களும் அவர்கள் அனுப்பும் புத்தகங்களை நாங்களும் பெற்றுக்கொள்வோம். புத்தகங்களின் பக்கங்களில் மெல்லிய கோடுகளிட்டும் ஓரங்களில் எழுதியும் சங்கேதங்களாய் நாங்கள் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். புகழ்பெற்ற வழக்கறிஞர்களால் நிரம்பியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உங்களின் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்ததா? அப்போது நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த என். நவரத்தினம் நாடாளுமன்றத்தில் நான் கைது செய்யப்பட்டது குறித்த பிரச்சினையை எழுப்பியிருந்தார். அப்போது பிரதமாராயிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் “நீங்களும் ஒரு பெண். அந்தத் தாயுள்ளத்துடன் நீங்கள் புஷ்பராணியை விடுதலை செய்ய வேண்டும்” என அவர் கேட்டபோது சிறிமாவோ “நான் பெண் என்பதிலும்விட நான் இந்த நாட்டின் பிரதமர் என்பதே எனக்கு முக்கியமானது” என்றார். ஆறுமாதச் சிறைவாசத்திற்குப் பின்பு நான் விடுதலையானேன். வழக்குத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. 1980ல் தீர்ப்பு வழங்கப்பட்டபோது தங்கமகேந்திரன், ஜெயக்கொடி, கோவை நந்தன், நல்லையா ஆகியோருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நான் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே நந்தனும் நல்லையாவும் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த தங்கமகேந்திரனும் ஜெயக்கொடியும் மட்டக்களப்புச் சிறையுடைப்பில் தப்பிச் சென்றார்கள். அதற்குப் பின்னான உங்களது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறிருந்தன? சிறையிலிருந்து வெளியில் வரும்போதே நான் இயக்கத்தின்மீது வெறுப்புற்றுத்தான் வெளியே வந்தேன். ஈழவிடுதலைக்காக உயிரையும் தருவார்கள், பொலிஸில் அகப்படும் நிலைவரின் சயனைட் தின்று வீரச்சாவடைவார்கள் என நான் நம்பியிருந்த தோழர்கள் என் கண்முன்னாலேயே பொலிசாரின் முன் மண்டியிட்டு அழுததையும் என்னைக் காட்டிக்கொடுத்ததையும் என்னால் சீரணிக்க முடியவில்லை. தம்மைச் சுற்றி வீரதீரப் படிமங்களைக் கட்டியெழுப்பி வைத்திருந்தவர்கள் அந்தப் படிமங்கள் சிதறிவிழ எதிராளியிடம் மண்டியிட்டார்கள். ஈழப் போராட்ட வரலாற்றில் இந்த அவலம் திரும்பத் திரும்ப நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. நமது விடுதலை இயக்கங்களின் ஆரம்பநிலைகளிலேயே இளைஞர்களிடையே அதிகார விருப்பும் பதவிப் போட்டிகளும் தோன்றிவிட்டதையும் நான் கவனித்து வெறுப்புற்றிருந்தேன். இயக்கத்தில் என்னுடன் கல்யாணி, டொறத்தி, பத்மினி போன்றவர்கள் தீவிரமாக இயங்கினாலும் பெண்கள் என்றரீதியல் நாங்கள் இயக்கத்திற்குள் இளைஞர்களால் அலட்சியமாகவே நடத்தப்பட்டதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம். சிறையிலிருந்து வெளிவந்த என்னைச் சமூகமும் கொடூரமாகத்தான் எதிர்கொண்டது. பொலிஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவள் என நான் ஒதுக்கப்படலானேன். அப்போது இயக்கம், விடுதலைப் போராட்டம் பற்றியெல்லாம் பொதுப்புத்தி மட்டத்தில் எந்த அறிவுமிருக்கவில்லை. எனக்கு கொள்ளைக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டது. அப்போது இருபத்தாறு வயதேயான இளம்பெண்ணாயிருந்த நான் மனதால் உடைந்துபோனேன். விடுதலை அரசியலில் எனக்கு ஈடுபாடு இருந்தபோதிலும் அந்த ஈடுபாடு இன்றுவரை தொடரும்போதும் நான் இயக்கத்துடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் என்னை இயக்க அரசியலுக்கு அழைத்தபோதும், தோழர் பத்மநாபா போன்றவர்கள் என்னை இயக்க அரசியலுக்குத் தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருந்தபோதும் நான் இயக்க அரசியலில் ஈடுபட மறுத்துவிட்டேன். எப்போது பிரான்சுக்கு வந்தீர்கள்? 1986ல் வந்தேன். இடையில் 1981ல் எனக்குக் கல்யாணம் நடந்தது. நான் மணம் செய்வதில் பல சிக்கல்கள் இருந்தன. சிறையில் இருந்தவள், கொள்ளைக்காரி என்று எனக்குக் குத்தப்பட்ட முத்திரையால் எனது முப்பத்தொரு வயது வரையிலும் எனக்குத் திருமணம் அமையவில்லை. கடைசியில் புஸ்பராஜாவின் நண்பர் ஒருவருடன் எனக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்குத் திருமணத்தில் எந்த ஆர்வமும் இல்லாதிருந்தபோதும் இந்தச் சமூகத்தில் திருமணமாகாத ஒரு பெண்ணாய் நான் எதிர்கொண்ட பிரச்சினைகளாலும் என் பெற்றோரின் விருப்பத்திற்காவும் நான் திருமணத்துக்குச் சம்மதித்தேன். அந்தச் சம்மதம் என் வாழ்க்கையைத் துன்பத்திற்குள் தள்ளியது. என் திருமண வாழ்வு மகிழ்ச்சியாய் அமையவில்லை. பிரான்ஸ் வந்ததன் பின்பாக நான் விவாகரத்துச் செய்துகொண்டேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களோடு வாழ்ந்துவருகிறேன். பிரான்சுக்கு வந்ததன் பின்னாகப் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பெண்கள் சந்திப்புகளிலும் தொடர்ச்சியாக் கலந்து வருகிறேன். இங்கேயும் பல்வேறு தமிழ் அரசியல் இயக்கங்கள் இயங்கிவந்த போதிலும் எவர் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதனால் இயக்க வேலைகளில் நான் என்னை ஈடுபடுத்தவில்லை. தனிப்பட்ட பல தோழர்கள் மீது எனக்கு நம்பிக்கையும் மரியாதையும் இருந்தபோதும் அவர்கள் சார்ந்த இயக்கங்களின் வேலைத்திட்டங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. நான் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தைச் சேராதவளாயிருந்போதிலும் மறைந்த தோழர் பத்மாநாபாவின் மீது எனக்கு அளப்பெரிய தோழமை உணர்வும் மரியாதையும் உள்ளது என்பதை இந்த நேர்காணலில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் ஒரு தீவிரமான இலக்கிய வாசகி என்பது எனக்குத் தெரியும், அது குறித்து? மிகச் சிறிய வயதிலேயே நான் வாசிப்புக்கு அடிமையாகிவிட்டேன். இன்றுவரை ஏதாவது ஒன்றைப் படிக்காமல் நான் உறங்கச் செல்வது கிடையாது. எனது சிறுவயதில்; ‘படிக்கிற பிள்ளை கதைப் புத்தகம் வாசிக்கக் கூடாது” என வீட்டில் கண்டிப்பு இருந்தது. நான் பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துக் கதைப் புத்தகம் படிப்பேன். துப்பறியும் கதைகள், சாண்டில்யன், அகிலன் என வாசிப்புத் தொடங்கியது. நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலரை வாசித்து அரவிந்தன் இறந்தபோது இரவிரவாகக் தனிமையிலிருந்து கண்ணீர் வடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் ஜெயகாந்தனால் முற்றாக ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். அந்தக் காலத்தில்தான் எழுதவும் தொடங்கினேன். இலங்கை வானொலியிலும் ‘லண்டன் முரசு’ என்ற பத்திரிகைக்காவும் நிறைய எழுதினேன். அப்பொழுது சதானந்தனை ஆசிரியராகக்கொண்டு லண்டனிலிருந்து அந்தப் பத்திரிகை வெளியிடப்பட்டது. நான் இலங்கையிலிருந்து அந்தப் பத்திரிகைக்கு சம்பளமில்லாத நிருபராக வேலைபார்த்தேன். அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த கி. பி. அரவிந்தன் எங்களுடைய வீட்டில் ஏறக்குறைய ஒரு வருடமளவில் தலைமறைவாக ஒளிந்திருந்தார். நாங்கள் கவிதைகள் குறித்து விவாதிப்போம், பேசுவோம். நானும் அவரும் இணைந்து புஸ்பமனோ என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறோம். அரவிந்தனிற்கு மனோகரன் என்ற பெயருமுண்டு. என் திருமண வாழ்க்கையும் அதனால் எற்பட்ட மனச்சிதைவுகளும் என்னை எழுதுவதைக் கைவிட வைத்தன. ஆனால் இன்றுவரை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். வார இதழ்களிலிருந்து நவீன இலக்கியம்வரை கையில் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிறேன். பிரபஞ்சனும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் என்னை மிகவும் ஈர்த்த இலக்கிய ஆளுமைகளாகயிருக்கிறார்கள். புஸ்பராஜாவின் ஈழப் போராடத்தில் எனது சாட்சியம் நூல் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் மறுப்புகளையும் உருவாக்கியிருந்தது. அந்த நூல் குறித்து உங்களின் பார்வை என்ன? புஸ்பராஜா இலங்கையிலிருந்தபோதும் சரி, பிரான்ஸிலிருந்தபோதும் சரி எப்போதும் என்னோடு தொடர்ச்சியான அரசியல் உரையாடல்களை நடத்திக்கொண்டேயிருந்தார். அவரின் தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, போராட்ட வாழ்வானாலும் சரி நான் எல்லாவற்றையும் அறிந்துவைத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை மிக நேர்மையாக புஸ்பராஜா தனது சாட்சியத்தைப் பதிவு செய்திருக்கிறார். புஸ்பராஜா ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மகாணசபை ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பின்பும் அந்த இயக்கத்திற்காக வேலை செய்தது எனக்கு பிடிக்கவில்லையென்றபோதும் அந்த அனுபவங்களையும் பாரபட்சமில்லாமல் தனது நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார் என்றே கருதுகிறேன். அந்த நூலில் புஸ்பராஜா அளவுக்கு அதிகமாகத் தன்னை முன்னிலைப்படுத்துகிறார் என்றொரு விமர்சனத்தைக் கூட நீங்கள் ‘சத்தியக்கடதாசி’ இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். ஆனால் உண்மையிலேயே புஸ்பராஜா எல்லா விசயங்களிலும் முன்னுக்குப் போகிற ஆளாகவும் விறைப்பான ஆளாகவுமேயிருந்தார். அதுதான் நூலிலும் பதிவாகியிருக்கிறது. சோதிலிங்கம், வசீகரன், பேபி சுப்பிரமணியம் போன்றவர்களின் போராட்டத்திற்கான பங்களிப்புகள் நூலில் போதியளவு முக்கியத்துவம் கொடுத்துப் பதிவாகவில்லை என்றொரு குறை எனக்கிருக்கிறது. என்நூலில் அவர்கள் குறித்து விரிவாக எழுதுவேன். குறிப்பாக பேபி சுப்பிரமணியம் தினந்தோறும் எங்கள் மயிலிட்டி வீட்டுக்கு வருவார். மிகுந்த அமைதியான குணமும் அன்புள்ளமும் கொண்ட அவர் எப்படி இவ்வளவு காலமாகப் புலிகள் இயக்கத்திலிருக்கிறார் என்பதுதான் எனக்கு விளங்கவேயில்லை. வெளிநாட்டு வாழ்வை எப்படி உணர்கிறீர்கள்? குறிப்பாக ஆணாதிக்கம், சாதியம் போன்ற அடிமைத்தளைகளிலிருந்து ஓரளவாவது விடுதலையை இந்தச் சூழல் உங்களிற்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது என நினைக்கிறீர்களா? நான் எப்போது அடிமையாயிருந்தேன் இப்போது விடுதலை பெறுவதற்கு! சமூகத் தளைகளை எதிர்கொண்டபோது எந்த இடத்திலும் நான் பணிந்துபோனதில்லை. உறுதியாக எதிர்த்தே நின்றிருக்கிறேன். எதிர்ப்பு என்பதே என்னைப் பொறுத்தளவில் விடுதலைதான். புகலிடத்திலும் நான் சார்ந்த தலித் சமூகம் ஆதிக்கசாதித் தமிழர்களால் புறக்கணிக்கப்படுகிறது. எனது மகள் இரவு பன்னிரெண்டுமணிக்கும் தனியாக வீடுவரும் போது நமது தமிழர்களால் ‘கறுவல்கள்’ எனப் பழிக்கப்படும் ஆபிரிக்கர்களோ ‘அடையார்’ எனப் பழிக்கப்படும் அரபுக்களோ என் மகளைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் என் மகளால் தனியாக லா சப்பல் (பாரிஸில் ஈழத் தமிழர்களின் கடைத்தெரு) போக முடியாமலிருக்கிறது. அவளை ஒரு கும்பல் தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்து ‘எடியே நீ தமிழாடி? நில்லடி!” எனச் சேட்டை செய்கிறார்கள். மோசமான கெட்டவார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்களின் பண்பாடு என்றெல்லாம் எழுபதுகளில் மேடைமேடையாய் நான் தொண்டைத்தண்ணி வற்றக் கத்தியதை நினைத்தால் இப்போது சிரிப்பாயிருக்கிறது. சிரிப்புக்குப் பின்னால் விரக்தியிருக்கிறது. தமிழீழப் போராட்டம் தோல்வியைத் தழுவியதற்கு முதன்மையான காரணம் எதுவென நினைக்கறீர்கள்? முதன்மையான காரணமும் கடைசிக் காரணமும் விடுதலை இயக்கங்களின் அராஜகங்கள்தான். எதிரியைக் கொல்கிறோம் எனப் புறப்பட்டவர்கள் எமது சமூகத்தின் போராளிகளையும் அறிவுஜீவிகளையும் ஒழித்துக்கட்டினார்கள். முஸ்லீம் மக்களை விரட்டியது, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்ற தலைவர்களைக் கொன்றது, பத்மநாபா போன்ற நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்றது என எத்தனை அராஜகங்கள். இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தப் புகலிடத் தேசங்களிலும் இன்று ஒவ்வொரு தமிழனும் வாயைத் திறக்கவே பயப்படுகிறான். அங்கே ஆரம்பிக்கிறது தமிழீழப் போராட்டத்தின் தோல்வி. https://www.shobasakthi.com/shobasakthi/2009/09/03/நான்-எப்போது-அடிமையாயிரு/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR4ehBKeFAWjafNGE3fCXpXSN8VUuogY59wi8GkZz5lsKkCF2-6agZjZAPJbPw_aem_5a_csAzdwS3IqgTWA6hGWA
  2. கிட்டு பூங்காவில் அனுர கூறியதன் பொருள்? - நிலாந்தன் “திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவானது. வடக்கில் இதை மையமாக வைத்து செய்யப்படும் அரசியலை விலக்கி வைக்க வேண்டும்.தெற்கில் இதை மையமாக வைத்து செய்யப்படும் அரசியலை விலக்கி வைக்க வேண்டும். திஸ்ஸ விகாரையை மையமாக கொண்ட அரசியலை விலக்கி விட்டு, விகாராதிபதியும் மக்களும் சேர்ந்து பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.” இது கடந்த வியாழக்கிழமை கிட்டு பூங்காவில் அனுர பேசிய பேச்சின் ஒரு பகுதி. தையிட்டி விகாரையில் இருக்கும் தமிழ் அரசியலையும் சிங்கள அரசியலையும் நீக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். மிகத் தவறான ஒப்பீடு. தையிட்டி விகாரை என்பதே ஓர் அரசியல் விவகாரம்தான். அது ஓர் ஆக்கிரமிப்பு; நிலப் பறிப்பு; சிங்கள பௌத்த மயமாக்கலின் ஆகப்பிந்திய நடவடிக்கைகளில் ஒன்று. அதில் உள்ள சிங்கள பௌத்த அரசியல்தான் இங்கு பிரச்சினையே. அதற்கு எதிராகத்தான் தமிழ் மக்கள் போராடுகிறார்கள். தமிழ் மக்களுடையது ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரு போராட்டம். இங்கு ஒடுக்கும் அரசியலையும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் அரசியலையும் சமப்படுத்த முடியாது. ஒடுக்குமுறை இல்லையென்றால் போராட்டத்திற்கு தேவையும் இருக்காது. எனவே முதலில் நீக்க வேண்டியது அந்த விகாரையைக் கட்டிய சிங்கள பௌத்த அரசியலைத்தான். அதைவிடக் குறிப்பாக பிக்குகள் அந்த அரசியலின் ஒரு பகுதி. இலங்கைத்தீவின் இன ஒடுக்குமுறையில் மகாசங்கம் அரச கட்டமைப்பின் ஒரு பகுதி. எனவே ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகக் காணப்படும் மத குருக்களிடம் போய் பேசித் தீருங்கள் என்று கூறுவதே ஒடுக்கு முறைதான்.எனவே தையிட்டி விகாரை விடயத்தில் அதன் அரசியலை நீக்க வேண்டும் என்று அனுர கேட்பதே அரசியல்தான். ஒடுக்கும் அரசியல்தான். அப்படித்தான் அவருடைய யாழ்.மாநகர சபைக்கான பிரதான வேட்பாளர் கூறுகிறார், தான் அரசியல் கதைப்பதை விடவும் அபிவிருத்தியைத்தான் கவனிக்கப் போவதாக. ஆனால் அரசியல் இல்லாமல் அபிவிருத்தி இல்லை.எதை அபிவிருத்தி செய்வது? எங்கே செய்வது? எப்படிச் செய்வது? எப்பொழுது செய்வது? யாரை வைத்துச் செய்வது? போன்ற எல்லாமே அரசியல் தீர்மானங்கள்தான். அபிவிருத்தி என்பது அரசியலின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி. இந்த அடிப்படை விளக்கம் வேட்பாளரிடம் இல்லையா? அல்லது அபிவிருத்திக்குள் இருந்து அரசியலை நீக்கும் அரசியலை அவர் வேண்டுமென்று செய்கிறாரா? அதே போலதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் தொடர்பாக ஒரு கோட்பாட்டு விடயம் சுட்டிக்காட்டப்படுகிறது. உள்ளூராட்சி சபைகள் உள்ளூருக்கானவை; உள்ளூர் உணர்வுகளைப் பிரதிபலிப்பை; உள்ளூர் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயில் களங்கள். எனவே அந்த சபைகளுக்கான தேர்தல் களங்களிலும் தமிழ்த்தேசிய அரசியலைப் பேசக்கூடாது என்று ஒரு விளக்கம். அப்படிச் சொல்பவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை விளங்கிக் கொள்ளவில்லை. தேசியவாத அரசியல் என்றால் என்ன? ஒரு மக்கள் கூட்டத்தை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அதை எங்கிருந்து தொடங்க வேண்டும்? கீழிருந்து மேல் நோக்கித்தான் அதைத் தொடங்க வேண்டும்.மேலிருந்து கீழ்நோக்கி அல்ல.அதாவது ஊர்களில் இருந்து தொடங்க வேண்டும். எனவே கீழிருந்து மேல் நோக்கி அதாவது ஊர்களில் இருந்துதான் தேசியவாதக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும் அசமத்துவங்கள் அதிகமாக கிராமங்களில்தான் நிலவும். பால்,சாதி,சமய,பிரதேச அசமத்துவங்கள், முரண்பாடுகள் கிராமங்களில் ஆழமாக இருக்கும்.எனவே அங்கேயே அவற்றைத் தீர்க்க வேண்டும். அதற்கு தேசியவாத தரிசனமும் அணுகுமுறையும் வேண்டும்.ஒரு மக்கள் கூட்டத்தை பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவது என்றால் எந்த அடிப்படையில் கூட்டிக்கட்டுவது? ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில்தான் அதைச் செய்யவேண்டும். ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் தேசியவாத அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும்.எனவே தேசிய உணர்வைக் கட்டியெழுப்புவது என்ற விடயத்தை ஊர்களில் இருந்தே, ஊராட்சி அரசியல் களத்தில் இருந்தே தொடங்க வேண்டும். ஊரில் சாதிமானாக இருப்பவர், சமய வெறியராக இருப்பவர்,பால் அசமத்துவத்தை ஆதரிப்பவர் போன்றவர்களை தேர்தலில் நிறுத்தி உள்ளூராட்சி சபைகளை உருவாக்க முடியாது. ஊருக்கு நல்லவர்; அல்லது சாதிக்கு நல்லவர்; அல்லது சமயத்துக்கு நல்லவர்; தேசியவாதியாக இருப்பார் என்று இல்லை. உள்ளூராட்சி சபைகள் உள்ளூர்த் தன்மை மிக்கவை என்றாலும் உள்ளூரில் இருக்கக்கூடிய அசமத்துவங்களை தேசியவாத நோக்கு நிலையில் கடக்கின்ற, நீக்குகின்ற ஒருவர்தான் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினராக இருக்க வேண்டும்.எனவே வேட்பாளர்களைத் தெரியும்போது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்தே அதைச் செய்ய வேண்டும். இப்படிப் பார்த்தால் தேசியவாத அரசியலை கிராமங்களில் இருந்துதான் கட்டியெழுப்ப வேண்டும்.எனவே உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அதற்குரியவைதான்.உள்ளூர் உணர்வுகளை பிரதிபலிப்பது என்பது தமிழ்த்தேசிய உணர்வுக்கு எதிராக இருக்க முடியாது.அது தமிழ்த் தேசிய கூட்டுணர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் உள்ளூர் அபிவிருத்தி தொடர்பான பொருத்தமான தரிசனங்களை கொண்டவர்களும், அதேசமயம் உள்ளூர் அசமத்துவங்களை நீக்கி ஊர் மட்டத்தில் தேசிய ஐக்கியத்தை,தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பக் கூடியவர்களுந்தான் தேர்தலில் நிற்க வேண்டும். அங்கிருந்து தொடங்கி மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் தாயகம் அளவிலும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். கிராம மட்டத்தில் பலமான கட்டமைப்புகளை அல்லது வலைப்பின்னலையோ கொண்டிராத கட்சி மாகாண மட்டத்திலோ அல்லது தாயக அளவிலோ வெற்றி பெற முடியாது. தமிழரசுக் கட்சியின் பலமே அதற்கு கிராம மட்டங்களில் இருந்த அடிமட்ட வலைபின்னல்தான். அக்கட்சி வடக்கு கிழக்கு தழுவியதாக எழுச்சி பெறவும் அதுதான் காரணம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராகிய சிறீதரனுக்கு கிளிநொச்சியில் உள்ள பலமும் அதுதான். எனவே கிராம மட்டத்தில் பலமான கட்டமைப்பு இல்லையென்றால் மாவட்ட, மாகாண, தாயக மட்டத்தில் கட்சியைப் பலப்படுத்த முடியாது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய ஒவ்வொரு அரசியல் அசைவும் தம்மைத் தேசமாகத் திரட்டும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்க வேண்டும். அதை குடும்பத்தில் இருந்தே தொடங்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு குடும்பத்திலேயே வாக்குகள் சிதறி விழுந்தன. தமிழ் மக்கள் ஒரு சமூகமாகச் சிதறுகிறார்கள். எனவே ஊர்களில் இருந்தே தேசத்தைக் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும். உள்ளூராட்சி சபைகளில் மட்டுமல்ல மாகாண சபைகளிலும் இனப்பிரச்சினையை அதிகம் விவாதிக்கக்கூடாது என்ற ஒரு விவாதம் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபொழுது எழுந்தது.வட மாகாண சபையில் அபிவிருத்தித் திட்டங்களை விடவும் இனப் பிரச்சினை அரசியல்தான் அதிகமாக பேசப்பட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரனிடமும் வடமாகாண சபையிடமும் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலான பொருத்தமான பொருளாதார தரிசனங்கள் இருக்கவில்லை என்பது உண்மை.ஆனால் அதற்காக மாகாண சபை மட்டத்தில் இனப்பிரச்சினையைப் பேசக்கூடாது என்று கூறுவது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டது. மாகாண சபை எனப்படுவது மக்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு சட்டமன்றம். ஒற்றையாட்சிக்கு கட்டமைப்புக்குள் அதற்குள்ள அதிகாரங்கள் போதாது. எனினும் இருக்கின்ற அதிகாரங்களை உச்சபட்சமாக பயன்படுத்தி எப்படி மாகாணத்தைக் கட்டியெழுப்பலாம் என்பது தொடர்பில் பொருத்தமான பொருளாதார தரிசனங்கள் தமிழ்க் கட்சிகளிடம் குறைவு. அதேசமயம் மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு மாகாண சபையில் இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை மகத்தானது.அத்தீர்மானத்துக்கு மக்கள் ஆணை உண்டு. தேச நிர்மாணம் என்பது அதாவது தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது அதன் பொருளாதார அர்த்தத்தில் தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுதான். இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் உள்ளூராட்சி சபை மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் மாகாண சபை மட்டத்திலும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும். உள்ளூராட்சி சபைகளில் இனப் பிரச்சினையை பேசக்கூடாது என்பது தையிட்டி விகாரையில் இருந்து இன அரசியலை அகற்றுவோம் என்று கூறும் அனுரவின் கோரிக்கைக்கு நிகரானது. அது ஒடுக்குமுறையின் ஒரு பகுதி. தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான கோஷம் “வெற்றி நமதே ஊரும் எமதே”என்பதாகும்.உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு விஸ்தரிப்பதுதான் அவர்களுடைய நோக்கம். நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர்கள் பெற்ற வெற்றியானது தமிழ்த்தேசிய கட்சிகளைத் தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.இப்பொழுது தமிழ்த் தரப்பு எனப்படுவது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் அல்ல என்பதனை அவர்கள் அழுத்தமாக டில்லியிலும் ஐநாவிலும் கூறத்தொடங்கி விட்டார்கள். உள்ளூராட்சி சபைகளிலும் அந்த வெற்றியை அவர்கள் ஸ்தாபிப்பார்களாக இருந்தால் அதாவது ஊரும் அவர்களிடம் போய்விட்டால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக; தேசிய இனமாகக் கருதவில்லை என்று கூறத்தொடங்கி விடுவார்கள்.எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் மிகத்தெளிவான முடிவை எடுக்க வேண்டும். தாங்கள் ஒரு தேசமா?இல்லையா? என்று. அது உள்ளூர்த் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு தேர்தல்தான்.உள்ளூர் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு தேர்தல்தான்.அதைவிட ஆழமான பொருளில் அது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியலின் ஒரு பகுதி. https://www.nillanthan.com/7336/
  3. ஷோபா சக்தியைச் சூழும் கேன்சல் கலாச்சாரவாதிகள் - ஆர். அபிலாஷ் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களுமாகக் கையெழுத்திட்டு வெளியிட்ட ஷோபாசக்திக்கு எதிரான "குற்ற அறிக்கையை" அது வெளியான சமயத்தில்உடனடியாகப் படித்தேன். நான் அடிப்படையில் ஒழுக்கவாதியோநியாயவாதியோ அல்லன். அதேநேரம் எனக்குள் அபத்தமானநீதியுணர்வு உண்டு, அதை மீறும் விழைவும் உண்டு. இந்த இரண்டுஎதிர்விசைகளுக்கு நடுவே நிற்கும் எழுத்தாளர் நான். என் இடத்தில்இருந்து பார்க்கையில் அமைப்பின்மைவாதிகள் மீது தோன்றும்திகைப்பும் பயமுமே அறிக்கையில் தோன்றும் ஷோபா சக்தியின்சித்திரத்தைப் படிக்கையில் ஏற்பட்டது. அவர் கெட்டவரா எனும்அதிர்ச்சியல்ல, அது வேறொன்று - அதை இங்கு அபுனைவில்விளக்க முடியாது. (புனைவில் மட்டுமே இயலும்.) ஷோபாவின் எதிர்வினையையும் அது வந்த உடனே படித்தேன்: அதுசற்று பலவீனமானது - ஏனென்றால் ஒழுக்கமீறல், துரோகம் போன்றமிக அந்தரங்கமான குற்றச்சாட்டுகளை ஏற்று பின்னர்நியாயப்படுத்த முடியாது. ஒன்று, நமது கட்டுரை வடிவம்அடிப்படையில் அறம் எனும் கட்டமைப்பினுள் எழுப்பப்பட்டது. புத்தொளிக் காலத்தில் மதக்கருத்துக்களை மறுத்து தோன்றியபுரட்சிகர சிந்தனைகளை வெளிப்படுத்தவும், தனிமனிதவாதத்தைமுன்னெடுக்கவும் தோன்றிய வடிவமே கட்டுரை வடிவம். அதுகுற்றங்களுக்கு கடவுளிடம் அல்ல தனிமனிதனின் நடத்தையிலும்மனசாட்சியிலும் பதிலைக் கோரும் வடிவம். அதற்குள் நீங்கள் மனிதநடத்தையின் குழப்பமான நிழலான பகுதிகளை விவரிக்கவோ நம்பவைக்கவோ முடியாது. அடுத்து, நம் சமூகம் மிகவும்கட்டுப்பெட்டியானது. ஆணோ பெண்ணோ பாலியல் மீறலை அதுமன்னிக்காது (ஆனால் தினம் தினம் அதில் ஈடுபட்டவாறும்இருக்கும்). இம்மாதிரிக் குற்றச்சாட்டுகளைப் பற்றி நான் ஏற்கனவே என் நூலில்விரிவாக என் கருத்துக்களைப் பதிவு செயதிருக்கிறேன். நான் இந்தwoke பண்பாட்டை, அதன் அம்பலப்படுத்து, சமூகவிலக்கம் செய்என முழங்கும் cancel cultureஐ ஏற்கவில்லை. அது முற்றதிகாரத்தைநோக்கி உலகைக் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பே என்றுமுன்பு எழுதியிருக்கிறேன் - இப்போது பாருங்கள் அமெரிக்காவில்டிரம்பின் சர்வாதிகாரத்திற்கு அடிகோலியதே woke பண்பாட்டுக்குஎதிரான வெறுப்பும், அவநம்பிக்கையும்தான். மேலும் இதுஉருவாக்கும் கும்பல் மனப்பான்மை, ஒற்றை உணர்வின் கீழ்மக்களை டிஜிட்டல் ஊடகத்தில் திரட்டும் முறைமை ஆபத்தானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஏனென்றால் அது நீதியின்பெயரிலான அவநம்பிக்கையில் பிறக்கிறது, ஆனால் வினோதமாகநீதியைக் கோரவோ, பெறவோ செய்யாமலே மனதளவில்முற்றுமுழுமையான அமைதியை நாடுகிறது. அதற்காக குற்றம்சாட்டப்பட்டவரை மிகப்பெரிதாகப் பெருக்கி அவரை ஒற்றைத்தீமையாக நம் முன் நிறுத்துகிறது, அவரைப் போன்றவர்களையும்பட்டியலில் சேர்த்து அவரை மட்டுமே அந்நேரத்தில் நம்கண்முன்னால் பெருக்கிக் கொண்டே போகிறது. அவர் சமூகத்தீமைக்கு மொத்தமான உருவகமாகிறார். அதன்பின்னர் அதுதிருப்தியாகி நின்றுகொள்கிறது. அவரைக் காம வேட்டையாடி, வேட்டை மிருகம் என்று திரும்பத்திரும்பச் சொல்லும்போதே குற்றம்ஏன், எப்படி, எதனால் நடந்தது, அது குற்றம் தானா என்றெல்லாம்விசாரிக்கக் கூடாது என்கிறது. அதற்கான நியாயப்பாடுகளையும்அது சொல்கிறது. இது சமூகக்கூச்சம், பாதிக்கப்பட்டவருக்கானபாதிப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல என நினைக்கிறேன். மாறாக கவனம் முழுக்க ஒற்றை நபர் மீது வைப்பதற்கான உத்திஇது. அவரை "வெற்றுக் குறிப்பான்" ஆக்குவதே நோக்கம். அவர்அதன்பிறகு ஒரு பேயாக மாறுகிறார், எல்லாரும் அவரைப் பற்றிமுணுமுணுப்பார்கள், ஆனால் அவரது வாழ்க்கை சட்டென நமக்குஉடலற்றதாக, மர்மமாக மாறுகிறது, அது தன் பொருண்மையை, அர்த்தத்தை இழக்கிறது, யாரும் அதை நாட மறுப்பார்கள். அதைத்தேடாதிருப்பதே அவருக்கான தண்டனை ஆகிறது. இம்மாதிரிகேன்சல் கலாச்சாரத்தில் "விசாரணையும் தண்டனையும்" இந்தநடைமுறையைக் கொண்டிருப்பதைத் திரும்பத்திரும்பப்பார்க்கிறேன். வெற்றுக்குறிப்பான் ஆக்கப்பட்டவர் அதன்பிறகுநம்மிடையே பேயாக மட்டுமே உலவ முடியும். அவரைஆதரிப்பவர்களுக்கும் இதுவே நடக்கும். முற்றதிகார வலதுசாரி அரசியலும் இதே நடைமுறையையேபின்பற்றுகிறது. நமக்குத் தோன்றலாம் அவர்களின் இலக்கும், கொள்கையும் வேறுவேறு என்று. ஆனால் முற்போக்கு தாராளவாதசிந்தனையின், பண்பாட்டின் முற்றதிகாரச் சார்பு, வலதுசாரிமுற்றதிகாரத்துடன் தீவிர தாராளவாத முற்போக்காளர்கள்கைகுலுக்கும் சந்தி (intersection) இது. அதனாலே இந்த woke பண்பாட்டைத் தொடர்ந்து வலதுசாரி அரசியல் பெரும் எழுச்சிபெறுகிறது. உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இது நடக்கிறது. முந்தைய நடுநிலை முற்போக்காளர்கள் இப்படியான அரசியலைவரிக்க மாட்டார்கள். அவர்கள் சமநிலையான நிலைப்பாட்டைஏற்பார்கள். அதை இந்த தீவிர தாராளவாத முற்போக்காளர்கள்ஏற்பதில்லை. ஒரு கட்டத்தில் முன்னவரை ஒழித்து woke அரசியல்செயல்பாட்டாளர்கள் மேடையை ஆக்கிரமித்துக் கொள்வார்கள், அவர்கள் அப்படியே அம்மேடையை அரசியல் மேடையாக்கிமுற்றதிகாரிகளுக்கு கைமாற்றி விடுவார்கள். இந்தியாவில் இது2013இல் காங்கிரஸின் கடைசி கட்டத்தில் நிர்பயா விசயத்தில்நடந்தது. நிர்பயா விவகாரத்தில் மக்களிடம் பரவலாக ஏற்பட்டஅவநம்பிக்கை நீதிமன்றம், காவல்துறை, சிவில் சமூகத்தால்பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாது, ஜனநாயகம்தோற்றுவிட்டது என்பதே. அதன்பிறகு மோடி வந்து இந்தநிறுவனங்களை ஒவ்வொன்றாக ஒழித்தார். நிக்கோலே மாட்டேச்சி தன் இத்தாலிய தகவல் களஞ்சியம்டிரெக்கானிய நூலில் சொல்வதைப் பாருங்கள். முற்றதிகாரம்ஜனநாயக அமைப்புகள் மீது அவநம்பிக்கையை உருவாக்கிதனக்கான சித்தாந்தத்தின் அடிப்படையில் தீர்வைக் காணக்கோருகிறது எனும் அந்த விளக்கம் அப்படியே இந்த கேன்சல்பண்பாட்டுக்கும் பொருந்துகிறது: "In totalitarian regimes we have a charismatic bureaucracy alongside a terror-mongering secret police: the moment of legality and predictability is lost, as the enemy is not only the real one because it is possible to invent a target enemy, chosen by whomever has the sovereign power to interpret the ideology.” எட்கர் மோரின் தனது “For a Crisiology” நூலில்முற்றதிகார அரசுகள் பொதுவாக மற்றமைகளைத் தாக்கும்போதுஅவர்களுடைய நோக்கம் அச்சத்தை விளைவித்து எல்லாவிதமானஎதிர்ப்புகளை ஒடுக்குவதாக இருக்கும் என்கிறார். அதாவது ஒழுக்கமீறலுக்கு சமூகத்தில் எப்போதுமே இடமிருக்கிறது. நேரடிவன்முறையை சமூகம் அனுமதிக்காது என்றாலும் அது அராஜகமானதனிமனிதர்களையும், அவர்களுடைய உறவுகளையும்ஒடுக்குவதில்லை. அவர்கள் - ஆணோ பெண்ணோ - ஒன்றுக்குமேலான உறவுகளில் இருப்பார்கள், ஒரேசமயத்தில் கூடஇருப்பார்கள், சரி-தவறு எனும் இருமைக்கு அப்பால் காதலிக்கமுயல்வார்கள், பரஸ்பரம் மனதைக் காயப்படுத்துவார்கள், துரோகம்இழைப்பார்கள், அதை நியாயம் என நினைக்கவும் செய்வார்கள். ஆனால் அதுவும் சேர்ந்ததுதான் ஜனநாயக சமூகம். இவர்களைஒழித்து பரிசுத்தமான sterile சமூகத்தை உருவாக்க முயலும்போதுஅது ஒழுக்கமீறல் குறித்த அபரிதமான பயத்தை சமூகத்தில்விதைக்கிறது, இது பின்னர் அரசதிகாரத்தை எதிர்ப்பதற்கானபயமாக உருவெடுக்கிறது. அப்கானிஸ்தானில் ஹசாராஇனக்குழுவினர் சிறுபான்மையினர். அவர்கள் ஷியா இஸ்லாமியர்எனினும் அப்பகுதியில் உள்ள பிரம்மாண்ட புத்தர் சிலைகள்அவர்களுக்கு கடந்த கால பெருமையின் சின்னமாக (வெற்றுக்குறிப்பானாக) இருந்தன. தாலிபான்கள் அவற்றை தகர்த்தபின்னர்ஏற்பட்ட வெற்றிடத்தில் ஹாசார மக்களால் எதையும் வைக்கமுடியவில்லை. அவர்கள் தலைகுனிந்து தாலிபான்களை(இன்னொரு வெற்றுக்குறிப்பான்) ஏற்றுக்கொண்டு சமரசம்பண்ணிக்கொண்டனர். இந்தியாவில் இப்போது அது இஸ்லாமியமத நிர்வாகத்தில் குறுக்கிடுவதன் வழியாக நடக்கிறது. பண்பாட்டளவில் கேன்சல் பண்பாட்டினர் ஆண்களில் சிலரைக்குறிவைத்து இதைச் செய்கிறார்கள். அவர்கள் தம்மைப்பாதிக்கப்பட்டவர்களாக முன்வைப்பதால் அவர்களுடைய செயலின்தாக்கம் நமக்கு உடனே விளங்காது - ஆனால் மறைமுகமாகஅவர்களும் சமூகத்திற்கு நீதி பரிபாலனம் மீதுள்ள, தீவிரகண்காணிப்பு இன்றி வாழ்வதில் உள நம்பிக்கையைக் குலைக்கஉதவுகிறார்கள். அதாவது நம்மால் கண்ணால் பார்க்க முடியாத சமூகஅரசியல் பாதிப்புகளை இவர்கள் உருவாக்குகிறார்கள். ஸ்டீவன்கிரீன்ஹட் தன் கட்டுரையில் இதை ஒரு எதேச்சதிகாரப் போக்கு எனஅழைப்பது இதனால்தான். அவர் இப்போக்கு முன்பு ரஷ்யாவில்ஸ்டாலினிய குலாக்குகளின்போது தேசத்தை விமர்சிப்போரைஅம்பலப்படுத்துவது எனும் நடைமுறையாக இருந்தது என்கிறார். ஜேம்ஸ் ரெனால்ட்ஸ் தனது கட்டுரையில் முற்றதிகாரம் ஒழிந்தாலும்அதன் தன்மைகள் சமூகத்தில் நீடிக்கும், சாதாரணர்களே அந்தபோக்குகளை முன்னெடுப்பார்கள் என்று ஹானா ஆரெண்ட்சொன்னதைக் குறிப்பிட்டு இன்றுள்ள கேன்சல் கலாச்சாரம் அதன்நீட்சியே என்கிறார். ஏனென்றால் உண்மைக்கும் கற்பனைக்கும்இடையிலான எல்லைக்கோட்டை முழுக்க ஒரு நொடியில்அழித்துவிட்டு, தம்மால் சொல்ல்படுவன எல்லாமே பரிசீலனைக்குஅப்பாலான நிஜங்கள் என நம்பும்படி அவை கோருகின்றன. இதுசமூகத்தை முற்றதிகாரத்துக்குப் பழக்குகிறது. ("For Arendt, a key feature of totalitarianism - in contrast to other forms of tyranny or dictatorship – is the toying with truth, deliberate confusion of fiction and reality, and incessant use of mass media to manipulate the way millions of people experience the world. In our era of fake news, targeted messaging and ‘cancel culture’, there is still something profound in this warning. Arendt is alerting us to the use of propaganda and conspiracy to change the perceived structure of reality on a whim.”) லெய்டில் மற்றும் தாரியா தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் கேன்சல்கலாச்சாரம் பெரும்பான்மைக்காக சிறுபான்மையை வாய்மூடவைக்கும் கருத்துச் சுதந்திர, ஜனநாயக ஒழிப்புச் செயல்பாடு எனும்பார்வையை வைக்கிறார்கள். “A distinctive feature of the new information culture is thepredominating discourse of the majority group, where the minority, under the threat of pressure, will strive not to express their opinion at all, since their views have ceased to fit into the dominant culture [Noelle-Neumann 1974].) அவர்கள் ரஷ்யாஉக்ரேனில் படையெடுத்ததை ஒட்டி ஐரோப்பா முழுக்க ரஷ்யகலைஞர்களும் சினிமாவும் எழுத்தாளர்களும் “கேன்சல்” செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, அவர்களிடத்தில் உக்ரேனியஜனாதிபதிக்கு மேடைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுஎன்கிறார் (ஆனால் இப்போது அவரும் பின்னுக்குப் போய்விட்டார்). இந்த கலைஞர்கள் ரஷ்ய அரசின் நடவடிக்கைகளுக்கு ஏன்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனக் கேட்க இயலாது. அதன்பெயர் தான் கேன்சலேஷன். கேன்சல் கலாச்சாரம் கீழிருந்துகுரலற்றவர்கள் அதிகாரத்தை எதிர்ப்பதற்கான கருவி அல்ல, அதுஅயலுறவு விவகாரங்களில் முற்றதிகாரத் தலைவர்களின்கருவியாகவும் மாறுகிறது என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனாலே - நான் ஏற்கனவே ஒருமுறைக் குறிப்பிட்டதைப் போல - இந்தியாவிலும் உற்பத்தி சாதனங்களை, முதலீட்டைக் கையில்வைத்திருப்போர் மீது கேன்சல் பிரச்சாரம்முன்னெடுக்கப்படுவதில்லை - முதல்வர், கட்சித் தலைவர், மதத்தலைவர், பெருமுதலாளிகள் எப்போதும் பாதுகாப்பாகஇருப்பார்கள். உதாரணமாக ஜக்கியின் இஷா ஆசிரமத்தில்நடக்கும் பாலியல் குற்றங்களை விசாரிக்கவும் அந்தஅறக்கட்டளையை தடைசெய்யும்படி ஏன் பெண்ணிய கேன்சல்கலாச்சாரக் குழுமங்கள் கோருவதில்லை? ஏன் தேவாலயமதகுருமார்கள் மிது அவர்கள் கேள்வி எழுப்புவதில்லை? அவர்கள்பண்ணாத அட்டகாசமா? பல ஆயிரம் பெண்களும் இளைஞர்களும்புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் கேன்சல்கலாச்சாரவாதிகள் அவர்களுடன் நிற்க மாட்டார்கள். மோடி மீதுகுஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் தொந்தரவுசெய்ததாக, விசாரணை அமைப்புகளை அப்பெண்ணைஉளவுசெய்ய அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தபோது ஏன் அவரைகேன்சல் செய்ய யாரும் கோரவில்லை? ஏனென்றால் கேன்சல்பிரச்சாரகர்களும் தேசத்தின் கருவிகளே. அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், பெருமுதலாளிகளுக்கு அப்பால் பிரபலங்களைஎடுத்துக் கொண்டால்கூட அவர்கள் தம் மீது வைக்கப்படும் கேன்சல்கலாச்சாரப் பிரச்சாரத்தை தூசைப் போல தட்டிவிட்டுக் கொண்டுநகர்ந்து விடுகிறார்கள். ஏனென்றால் சமூக அவமதிப்பை மீறிச்செயல்படும் செல்வமும் அதிகாரமும் கட்டமைப்பும் அவர்களுக்குஉண்டு. உ.தா., ஆயிரம் கோடிக்கு லாபமீட்டும் படமெடுக்கும் நடிகர்மீது மீடூ குற்றச்சாட்டு எழுந்தால் அவர் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை. அவரால் நீதிமன்றத்துக்குச் சென்று அதற்குஎதிராக தடையுத்தரவு வாங்க முடியும். அவர்களுடையஆதரவாளர்கள் பெரும் தடையரணாக எழுந்து அவர்களைப்பாதுகாப்பார்கள். உ.தா., ஒருவேளை உதயநிதி மீது மீடூ எழுந்தால்(எழ வேண்டுமென நான் கூறவில்லை) பல லட்சம் பேர்கள் அவரைஆதரித்து எழுதுவார்கள், ஊடகங்களில் பலர் கருத்துதெரிவிக்கையில் இதை அரசியல் சதி என்பார்கள். ஆனால் எளியமத்திய வர்க்க ஊழியர்களில் இருந்து தம் அதிகாரத்தைஇழந்துவரும் சோபையிழந்த பிரபலங்கள் வரை சுலபத்தில்இரையாகிவிடுவார்கள். அவர்களே கேன்சல் கலாச்சாரத்தின்உண்மையான இலக்கு, அதிகாரவர்க்கம் அல்லர், கேன்சல்கலாச்சாரம் அதிகாரத்துக்கு எதிரான குரலற்றவர்களின் எழுச்சிஅல்ல, அது குரலற்றவர்களை மேலும் ஊமையாக்கும் முயற்சியே எனசெயித் ஜிலானி சொல்கிறார். எனக்கு இது முற்றதிகாரச்சமூகங்களில் உள்ள “சுயதணிக்கை, சுயகண்காணிப்புக் கருவி” எனவும் தோன்றுகிறது - 2020இல் அமெரிக்காவில் எடுக்கப்பட்டகருத்துக்கணிப்பில் 60%க்கு மேலான மக்கள் தனக்கு அன்றாடவாழ்வில் சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க பயமாகஉள்ளதாகத் தெரிவித்தார்கள். டைம்ஸ் இதழ் நடத்தியகருத்துக்கணிப்பில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இந்தகேன்சல் கலாச்சாரத்தை அஞ்சுவதாகத் தெரிய வந்தது (சாதி, மதம், இனம், பாலினம் என எதைப் பற்றியாவது தப்பாகப்பேசிவிடுவோமோ, அதனால் வேலை போய்விடுமோ, சமூக ஒதுக்கம்நடக்குமோ எனும் அச்சம்.). டுரோல்கள் பொதுவாக ஈடுபடுவதும்கேன்சல் கலாச்சாரத்திலே - இம்மாதிரி கேன்சல் டுரோக்களால்பாதிக்கப்பட்டு ஒரு பெண் எழுத்தாளர் ஓராண்டுக்கு மேலாக எழுதமுடியாமல் போய் உளவியல் சிகிச்சை எடுக்க நேர்ந்ததாக என்னிடம்சொன்னார். அதனாலே இதை வலதுசாரி கேன்சல் கலாச்சாரம் என்று இன்றுஅழைக்கிறார்கள் (conservative cancel culture). அமெரிக்காவில்ஆரம்பத்தில் இடதுசாரிகளே கேன்சல் கலாச்சாரத்தைஊக்கப்படுத்துவதாக வலதுசாரிகள் கூறி வந்தனர், ஆனால்அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் தமக்கு எதிரான அரசியல்சக்திகளை ஒடுக்குவதற்கும், சிறுபான்மை இனத்தவர்களின், பாலினத்தின் உரிமையை மறுப்பதற்கு, நிதியை ரத்துசெய்வதற்குமிகப்பெரிய அளவில் வலது கேன்சல் கலாச்சாரவாதிகளை அரசுபயன்படுத்துகிறது என வில்டெல் பிலார் சொல்கிறார். இந்தியாவில்கேன்சல் கலாச்சாரத்தின் இன்னொரு முகமாக உயர்கல்விநிறுவனங்களில் நூல்களைத் தடைசெய்வது, எதிர்ப்பாளர்களைவாயை மூடவைப்பது பரவலாக நடக்கிறது. இரண்டு கேன்சல்கலாச்சாரங்கள் இருவேறு இலக்குகளைக் கொண்டிருப்பதாகத்தோன்றினாலும் ஒன்று மற்றொன்றை தன் முறைமையால்ஆதரிக்கிறது என்பதே உண்மை. டேவிட் பிரென்ச் சொல்வதைப்பாருங்கள்: There’s no question that the Left leads the way in academic cancel culture. Most attempted cancellations have come from the Left — a statistic that makes sense when one considers that the American academy is an overwhelmingly left-wing institution. But while fewer come from the Right, they are responsible for most of the cancellation attempts that included violent threats. அதாவதுமுற்போக்கு கேன்சல்வாதிகள் மூட்டும் நெருப்பை உலகம் முழுக்கப்பரப்பில் பெரும் அழிவாக மாற்றுவது வலது கேன்சல்வாதிகளே. முக்கியமாக இதனால் அதிகமாக பாதிக்கப்படுவோர்முற்போக்காளர்களே என்று செபாஸ்டியன் மில்பேங்க் சொல்கிறார் - ஏனென்றால் முற்போக்காளர்கள் கேன்சல் செய்ய அதிகமாகமுயல்வது ஒழுங்குக்குள் வராத தமது சகபாடிகளையே. கத்தி ஒன்றுதான் - ஆனால் இன்று எல்லாருமே குத்துப்படுகிறார்கள். அதனாலே பாலியல் குற்றவிசாரணைகளை இம்மாதிரி ஊடகஅம்பலப்படுத்தலாக, சமூக ஒதுக்கமாக, ரத்து செய்வதாகமுன்னெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நியாயத்துக்காகபேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு பெண்ணியவாதிகளில்சிலர் வேறுவிதங்களில் அதிகமாக குரலற்ற மக்களை அழிக்கப்பயன்படுத்தப்படுகிற ஆயுதத்துக்கு தகுதியாக்கலை (validation) அளிக்கிறார்கள். நாம் ஷோபா சக்திக்குத் திரும்ப வருவோம் - இந்த அறிக்கையைஎழுதியோரும் அதில் குறிப்பிட்டப்படுவோரும் ஏன் மர்மமாகஇருக்கிறார்கள் என அவர் கேட்கும் கேள்வி முக்கியமானது. அவர்களில் சிலர் ஏன் தன்னுடன் உறவு முறிந்தபின்னரும்நல்லுறவில் தொடர்ந்தார்கள் என்று கேட்கிறார். அவர்கள் தம்மைப்இருட்டில் வைத்திருக்க விரும்புவதில் நியாயமிருக்கலாம் - ஆனால்அறிக்கையின் எழுத்தாளர்கள் விசயத்தில் ஏன்வெளிப்படைத்தன்மை இல்லை? இதுவும் கேன்சல் கலாச்சாரத்தின்இயல்பே - வெளிப்படைத்தன்மையைக் கோருவதே தண்டனைதான்எனக் கூறி எல்லாரையும் அச்சுறுத்துவார்கள். வெளிப்பட்டால் அதுஒரு சிலரின் பிரச்சினை, வெளிப்படாதபோது அது எண்ணற்றபெரும் தொகையொன்றின் பிரச்சினை. அது பூதாகாரமாகிவிடும். சரி ஏன் வெளிப்பட முடியாதெனில் அவர்களுக்கு அந்தரங்கவாழ்க்கை உள்ளது, அதைக் கெடுக்க முடியாதுதானே, டுரோல்களிடம் சிக்கி அழிய முடியாதுதானே எனக் கூறலாம். சரி, அவர்களே சொல்லுவதுபடி பார்த்தால் பாலியல் வன்முறையோதாக்குதலோ நடக்கவில்லை. அப்பெண்களும் பால்புதுமையினரும்மாற்று உறவுக்குள் செல்லும்போது ஷோபா சக்தி அவர்களைவிட்டுவிட மறுத்தார் என்பதும், அவர்களுடன் இருக்கையில் அவர்வேறு நபர்களுடன் உறவில் இருந்தார் என்பதுமே மீளமீள வரும்குற்றச்சாட்டு. இது சம்மந்தப்பட்ட நபர்கள் தமக்குள் பேசி ஏற்படுத்தவேண்டிய எல்லையல்லவா? திறந்தநிலை உறவில் வேறெப்படிஇருப்பார்கள், இருக்க முடியும்? அவர்கள் விட்டுத் தொலைக்கவும்சுதந்திரமாக இருக்கவும் கட்டுப்படுத்தவும் உடைமையாகவும்தத்தளித்துக் கொண்டே இருப்பார்கள். இதைக் குற்றமாக பொதுச்சமூகத்தில் எடுத்து வரக்கூடாது. இன்னொரு குற்றச்சாட்டு ஷோபாசக்தி இப்பெண்களுக்கு துரோகம் இழைத்தார் என்பது - அதுதான்அவ்வுறவின் தாத்பரியம். ஆனால் உறவில் இருக்கும்போது ‘நீதான்என் உலகம், நீதான் எனக்கு காலமெல்லாம் உயிராக இருப்பாய்’ எனச் சொல்பவர்களும் இருப்பார்கள். ஷோபாவால் பாதிக்கப்பட்டவர்களாக முன்வந்துள்ளவர்களுக்குஉள்ள மற்றொரு முக்கியமான புகார் அவர் அவர்களைஅடிப்படையான மரியாதையின்றி நடத்தி அதைக் குறித்தகுற்றவுணர்ச்சி இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே. இதுஆணின் அடிப்படையான பலவீனம் எனப் புரிந்துகொள்ள வேண்டும்- குற்றவுணர்வில் தள்ளாடுவது, பாவ மன்னிப்பு கோரி தெருவில்நின்று அழுவது, தண்டனையைக் கேட்டுப் பெறுவது ஆணைபலவீனமாக்கும். ஆண்கள் இதை வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள். சுதந்திரவாதியான, அரசின்மைவாதியான ஷோபாசக்தியின் கதைகளில் மேற்சொன்ன பலவீனமான மனதுக்குள்குமுறிக்கொண்டே தம்மை அழித்துக்கொள்ள விழையும் ஆண்கள், மன்னிப்புக் கோரும் ஆண்கள் வரலாம். அது அவரது சுயமுரண். இயல்பில் ஒருவேளை அவரால் அது இயலாது போவதில்ஆச்சரியமில்லை. இயன்றால் அவர் அரசின்மைவாதியே அல்ல, அவர்ஒரு ரஸ்கோல்நிக்கோவ் மட்டுமே. ஷோபா சக்தி எதிர்காலத்தில் தன்கதைகளில் இந்த எதிர்-ரஸ்கோல்நிக்கோவ் மனநிலையைக்கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்விவகாரத்தில், விஸா வாங்கித் தருவதாகச் சொல்லிஏமாற்றியதாகச் சொல்லுவது மட்டுமே குற்றமாக எனக்குத்தோன்றுகிறது. அதை ஆதாரத்துடன் சுலபத்தில் முன்வைத்துவிவாதிக்க முடியும். சரி, ஒரு ஆண் அதிகாரத்தின் குறியீடாக இருப்பதால் அவன்ஒழுக்கவிதியை மீறும்போது ஆதிக்கத்தை பெண் மீதுசுமத்துவதில்லையா? இக்கேள்வியையே பெண்ணியவாதிகள்பொதுவாக எழுப்புகிறார்கள். பெண் துரோகம் செய்தால் அதுதுரோகம், ஆண் செய்தால் அது மேலாதிக்கம், சுரண்டல் எனவகைப்படுத்துகிறார்கள். அதிகாரம் என்பது ஒரு செயலுக்கு புதியபரிமாணத்தை அளிக்கும், அதிகாரத்தில் இருப்போர் அதிகநீதியுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால்ஆண் எல்லா தளங்களிலும் சமயங்களிலும் அதிகாரத்துடன்இருப்பதில்லை. ஏனென்றால் ஆணாதிக்கம் (patriarchy) ஒருபண்பாட்டுக் குறியீடு (ஆணாதிக்கம் எனும் சொல்லேபாசிசத்தன்மை கொண்டதே என்பது தனிப்பிரச்சினை.). அதற்குப்பல உடல்கள். எப்போதும் ஆணுடலை அது தரிப்பதில்லை. அக்கருத்து பெண்ணியத்தின் இரண்டாம் அலையுடன்வழக்கொழிந்து விட்டது. குறிப்பாக, உறவுக்குள் சிலநேரங்களில்ஆண் கவனத்திற்காக மன்றாடும் அதிகாரமற்றவனாகவும், குரலற்றவனாகவும் மாறுகிறான். வேறு சமயங்களில் அவன் கைஓங்குகிறது. பணம், சமூக அடையாளம், ஆரோக்கியம், சாதி, மதம், அமைப்புகளின் ஆதரவு என பல விசயங்கள் ஆணாதிக்கத்தைசாத்தியமாக்குகிறது. ஆணை நிரந்தரமாக அதிகாரத்தின்முகமாகவும் பெண்ணை நிரந்தர பாதிக்கப்பட்டவராகவும் பார்ப்பதுகண்மூடித்தனமான மனநிலையே. உறவுக்குள் பல முடிவுகளும்செயல்களும் அதிகாரத்தின் சஞ்சலம் மிக்கவையாக உள்ளன, நியாய தர்மத்துக்கு வெளியே இருக்கின்றன, சுயநலத்தால்நடத்தப்படுகின்றன எனும்போது அந்த பழுப்பான பகுதிக்குள்வெளியாள் நுழைந்து மேலாதிக்கவாதி யார் எனச் சொல்ல முடியாது. மேலும், அது பெண்ணிற்கு அதிகாரம் பெறும் வாய்ப்பைமுழுமையாக ரத்து செய்யவும் செய்கிறது. “குற்றப்பத்திரிகையில்” வரும் வேறு பிரச்சினைகளைப்படிக்கையில் சிமன் டி பூவரின் The Woman Destroyed நாவல்நினைவுக்கு வந்தது - அதில் பூவர் தான் ஏன் தனக்குப்போட்டியாளராக வரப்போகும் இளம்பெண்ணை உறவுக்குள் தானேகொண்டு வந்தோம் என விசாரிப்பார். திறந்தநிலை உறவுகளில்எல்லாம் அனுமதிக்கப்படும் அனுமதிக்கபடாமலும் இருக்கும், அதைக் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் வருந்தவும் செய்வார்கள். இந்த பழுப்பான பக்கங்களை அவர்களேதாம் கையாண்டுநியதிகளை உருவாக்க வேண்டும். பின்குறிப்பு: 1) ஷோபா சக்தி என் நண்பரல்லர். நான் அவரது வாசகன், சக-எழுத்தாளன் எனும் கணக்கில் உரையாடி இருக்கிறேன். ஆனால்இவ்விசயத்தில் தன்னைப் பற்றி எழுத அவர் கேட்கவும் இல்லை. எனக்கு அவரைக் காபபற்றும் உத்தேசமில்லை. என் நோக்கம் இந்தகத்திக்குத்து கந்தன் நடைமுறையை, அதன்முற்றதிகாரத்தன்மையை எதிர்ப்பதே. இது சக்தி ஷோபாவாகஇருந்தாலும் நான் இதையே எழுதுவேன். 2)இந்த கேன்சல் கலாச்சாரம் எதிர்காலத்தில் பெண்களுக்குஎதிராகத் திரும்பும் என நினைக்கிறேன் - பாலியல் ஒழிக்கம்மிகத்தீவிரமாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு அவர்களில் சிலர்தேர்ந்தெடுக்கப்பட்டு பூதாகாரமாகப் பெருக்கப்படுவார்கள். இதேமாதிரி ஆனால் வேறு விழுமியங்களின் அடிப்படையில்(பரத்தை, துரோகி, திருமண அமைப்பிற்கு வெளியே நிற்கும்சூழ்ச்சிக்காரி) குற்ற அறிக்கைகள் வாசிக்கப்படும். நாம் அப்படியேநூறாண்டுகள் பின்னுக்குச் செல்வோம். இன்றுள்ள அடிப்படையானசுதந்திரம் பறிபோகும். நம்பிக்கை இல்லாவிட்டால் நான் கீழேதந்துள்ள தொடுவழிகளில் உள்ள கட்டுரைகளைப் படியுங்கள். https://www.wbur.org/onpoint/2022/04/26/women-fascists-democracy-backslides-abortion-rights https://philosophynow.org/issues/148/The_Origins_of_Totalitarianism_by_Hannah_Arendt https://www.researchgate.net/publication/372100356_Cancel_culture_towards_Russia_and_how_to_deal_with_it [accessed Apr 17 2025]. https://www.persuasion.community/p/the-powerless-are-hurt-most-by-cancel https://sapirjournal.org/cancellation/2022/when-right-cancels-right/ https://www.usnews.com/opinion/articles/2024-07-24/even-while-railing-against-it-the-republican-party-has-become-a-champion-of-cancel-culture https://www.city-journal.org/article/cancel-culture-conservatives-social- https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_17.html
  4. பாக்கு நீரிணை ஒற்றைக் காலுடன் நீந்திக்கடந்து சாதனை படைத்த இந்தியப் பெண் Vhg ஏப்ரல் 19, 2025 பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெலி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 இற்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக்கு நீரிணை கடலை நீந்தி கடந்துள்ளனர். அனுமதி கிடைத்த நிலையில், நேற்று (18-04-2025) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி சென்றனர். இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.இவர்கள் ரிலே முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர். மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனைக்கு வலது காலில் பிறவி குறைபாடு காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளி. இவர் முன்னதாக பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை பெற்றுள்ள சஷ்ருதி நக்காது இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை கடலை நீந்தி சாதனை புரிவதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணி அளவில் தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கி மாலை 4.55 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தார். இந்த சாதனைக்காக 11 மணி 05 நிமிடங்கள் சஷ்ருதி நக்காது எடுத்துக் கொண்டார். அரிச்சல்முனை வந்தடைந்த சஷ்ருதி நக்காதவை அவரது தாய் கண்ணீர் மல்ல முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், மரைன் போலீசார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார். மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து இன்று (19-04-2025) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார். ஒற்றைக் காலுடன் கடலில் நீந்திக் கடப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். முன்னதாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி முதல் முறையாக தலைமன்னார் தனுஷ்கோடி பாக்நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளதாக இந்திய நீச்சல் கழகத்தின் பார்வையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2025/04/blog-post_229.html
  5. நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயது இளைஞன் - உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் Vhg ஏப்ரல் 20, 2025 யாழ்ப்பாணம் கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய இளைஞன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸாரும் அவரின் மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை எனது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எனது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் கூறியவேளை எனது மகன் அவரிடம் சென்றுள்ளார். இதன்போது கொடிகாமம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவர்களுடன் இருந்துள்ளார். தாமரை பூ பறிப்பதற்காக சென்று நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறியது பொய். அவரது சடலம் தாண்டு இருந்த இடத்தில் ஒரு நீளமான மீற்றர் கட்டை ஒன்று குற்றப்பட்டு இருந்தது. அப்படி அவர் தாழ்ந்திருந்தால் அத்த கட்டையில் பிடித்து ஏறியிருப்பார். மந்திகை வைத்தியசாலையில் எங்களது பிள்ளையின் சடலம் இருப்பதாக கேள்வியுற்று நாங்கள் அங்கே சென்றவேளை, அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவர்கள் இருவர் பொய்யான பெயர் கொடுத்துள்ளனர் என்ற விடயம் தெரியவந்தது. ஏன் பொய்யான பெயர் கொடுக்க வேண்டும்? அன்றையதினம் அவர் யாருடன் பேசினாரோ அவ்வளவு விபரங்களும் கைபேசியில் இருந்து அழிக்கப்பட்டிருந்தது. எங்களுடைய தம்பி ஒருவர் கைபேசியை வாங்கும் போது அங்கிருந்த ஒருவர் கைபேசியை பறித்தார், ஒரு மணத்தியாலம் அந்த கைப்பேசியை வழங்கவில்லை. சடலம் தாண்டு இருந்த இடத்தை நீதிவானுக்கு காட்டிய பொலிஸார் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். பிறகு அவர்கள் வரவில்லை. எங்களிடம் விசாரணைகளுக்கு வந்த பொலிஸார், நீதிமன்றத்தில் நீங்கள் சட்டத்தரணி வைக்க வேண்டாம், நாங்கள் உங்களுக்காக வாதாடுகின்றோம் என்றனர். https://www.battinatham.com/2025/04/23.html
  6. ஞாயிறு 20 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் பிரபா செம்பாட்டான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 12 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் 11 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் ஈழப்பிரியன் வீரப் பையன்26 பிரபா செம்பாட்டான் கந்தப்பு தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் நிலாமதி சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் கிருபன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  7. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் எவரும் அரைச் சதங்கள் அடிக்காவிட்டாலும் வேகமாக அடித்தாடியதால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்தது. அவர்கள் அடித்த வேகத்திற்கு இன்னும் 20 - 30 ஓட்டங்கள் கூட எடுத்திருக்க வாய்ப்பிருந்தது, ஆனால் இறுக்கமான இறுதி ஓவர்களினால் அதிக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களான சாய் சுதர்சன், ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த ஜொஸ் பட்லர் ஆகியோரின் மிகவேகமான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக முன்னேறி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களான எய்டன் மார்க்கம், ஆயுஷ் படோனி ஆகியோரின் மின்னல் வேக அரைச் சதங்களுடனும் அப்துல் சமட்டின் நான்கு சிக்ஸர்களின் உதவியுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் உள்நுழைந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வேகமான 74 ஓட்டங்களுடனும், ரியான் பராக்கின் 39 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியபோதும் 18 வது ஓவரில் இருவரும் விக்கெட்டைப் பறிகொடுத்தமையாலும், இறுதி ஓவரை ஆவேஷ் கான் ஹெட்மயரின் விக்கெட்டை எடுத்ததோடு ஓட்டங்களைக் கொடுக்காது மட்டுப்படுத்தியதாலும் இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களையே எடுத்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  8. விலகலுக்கு காரணம் இதுதான்… துரை வைகோ அறிக்கை முழு விவரம்! 19 Apr 2025, 12:55 PM அண்மைக்காலமாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் மோதல் முற்றிய நிலையில், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ இன்று (ஏப்ரல் 19) விலகியுள்ளார். தன்னுடைய விலகலுக்கான காரணத்தை பட்டியலிட்டு துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சத்யாவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக துரை வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியினரின் அன்பு நெகிழச் செய்தது! அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான், உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர், ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன். இந்த சூழ்நிலையில் தான் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வைகோ உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். வைகோ இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தொண்டர்களின் எதிர்பார்ப்பு! வைகோ மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது. இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் வைகோ உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக வைகோ பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மதிமுகவை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில் திமுகவை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் மதிமுக குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது. மதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் வைகோ அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த போது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர். தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த வைகோ, நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். எந்த பதவியையும் விரும்பியதில்லை! நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கட்சியில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மதிமுகவில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், வைகோவுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்றத் தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும், அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன். அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கட்சியினர் உறுப்பினர்களாக பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன். மதிமுகவில் புத்துணர்ச்சி! அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன். தமிழகத்தில் நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக கட்சி தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கட்சி தோழர்கள் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டு அரசியலில் மதிமுக நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன். இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கனிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்த போது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன். ஆனால், நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம். வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம்! எனக்கு வாய்ப்பினை தந்த மதிமுகவிற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் நாடாளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன். திருச்சி தொகுதியில் மக்கள் கட்சிக்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன். ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு வைகோவை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன். அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன். வைகோவை நேசிப்பதை போல என்னையும் கட்சியின் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன். வைகோ உருவாக்கிய மதிமுக என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். வைகோ அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும்” வாழ்நாள் போராளி”என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள். வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல் தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். சிவகாசி ரவி தீக்குளித்த போது எழுந்த மன வேதனையில் இருந்து வைகோ மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது. அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர். நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். https://minnambalam.com/durai-vaiko-lists-out-why-he-resigned-from-mdmk-post/
  9. வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான் 19 Apr 2025, 8:33 AM மே 18-ஆம் தேதி கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சீமான், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நானே உங்களை சேர்த்து விடுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து சென்றால் ஸ்டாலின், விஜய் ஆகியோர் தேர்தலில் நிற்க உடனடியாக சீட் கொடுத்துவிடுவார்கள். இந்தப் படையை சரியாக வழிநடத்திக் கொண்டுபோய் நான் வென்று காட்டுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் என்னுடன் வாருங்கள். உங்களுக்கு ஒதுக்கும் தொகுதியில் நீங்கள் வென்று காட்ட வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றால் பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்றால் பாடையில் ஏற்றி மாலை போடுவேன். எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபார்ம். தோற்றால் சிறிது பால்டாயிலை வாங்கி குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள். வேறு வழியே கிடையாது. நம்முடைய கட்சி பிளக்ஸ் பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். தறுதலைகளை போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு ஃபோட்டோ வைக்க கூடாது. எங்கெங்கு நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அங்கு நம்முடைய குரல் ஒலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். https://minnambalam.com/ntk-seeman-speech-about-win-in-2026-election/
  10. யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கமும் எங்கே போனது ? யுத்தம் முடிவடைந்த பின்னர் 220 கிலோ தங்கம் வடக்கில் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுதா கிரியடேஷன் என்ற யூடிப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே முன்னாள் இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, யுத்தம் முடிவடைந்து மூன்று மாதங்களில் நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிவிட்டேன். ஆனால் நான் இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் 220 கிலோ தங்கத்தை பல்வேறு இடங்களில் குழிகளில் இருந்து மீட்டோம். இரும்பு பெட்டிகளில் அவை இருந்தன. அந்தத் தங்கம் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்கள் அடகு வைத்தவையாகும். அடகு வைத்தவர்களின் பெயர், ஊர் விபரங்கள் அந்தந்த நகைகளில் பொலித்தினால் சுற்றப்பட்டிருந்தன. அவற்றை நாங்கள் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்தோம். எனினும் அதற்கு பின்னர் அவற்றுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அதேபோன்று பெருமளவு தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 110 கிலோ தங்கம் கிடைத்திருந்தது என்று பஸில் ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார். அப்படியென்றால் அதில் அரைவாசியை பையில் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இதேவேளை திறைசேரியில் இருந்த ஆறாயிரம் கிலோ தங்கம் ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் ஜப்பானுக்கு விற்கப்பட்டுள்ளதாக உள்ளக விசாரணைகள் நடக்கின்றன. அப்படியென்றால் அரச பொறுப்பில் இருந்த தங்கத்திற்கும் வேலையை காட்டியுள்ளார்கள் என்றே கூற வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=321235
  11. ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்! adminApril 18, 2025 1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த செயற்பாட்டாளராக இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அஞ்சாது, துஞ்சாது, அயராது, தளராது, எந்த இடர் வந்த போதும் கலங்காது ஏறு நடை போட்ட ஈழப் போராட்டத்தின் போராளியாக விளங்கியவர். 1970களின்முற்பகுதியில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சுடராக ஒளிர்ந்தவர் புஸ்பராணி என்ற ஆளுமை. ஒரு காலத்தின் சரித்திரக் குறியீடு . 1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை ஸ்தாபனங்களின் அறிக்கைகளில் நீக்கமற இடம் பெற்றன .4 ஆம்மாடியின் இருண்ட வதை கூடங்கள் அறிமுகமான காலமது . 1970களின்முற்பகுதியில் தெற்கிலும் வடக்கு கிழக்கிலும் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு சவாலாக எழுந்த தெற்கு வடக்கு இளைஞர்களின் கதை வதைகளின் கதைகளான காலமது. பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் பல தசாப்தங்கள் கடந்து 1970களின் அனுபவத்தை புதிய புலம் பெயர் மற்றும் சமூக அனுபவ வெளிச்சத்தில் அகாலம் என்ற தலைப்பில் எழுதினார். பிரான்சின் ஈழ முற்போக்கு அணியின் பெண் ஆளுமை அவர். தமிழ் சிங்கள ஆளும் வர்க்க மன நிலை இந்த புத்தகத்தின் ஊடாக உணர்த்தப்படுகிறது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சமூக பிரக்ஞையுடன் முன்னெடுத்த இளைஞர் இயக்க வரலாற்றில் மறைந்த புஷ்பராஜா அவரது சகோதரிபுஸ்பராணி அவர்களின் பங்களிப்பு குறித்துரைக்கப்பட வேண்டியது இவர்கள் ஈழப் போராட்ட இளைஞர் இயக்க வரலாற்றின் முன்னோடிகள் சின்னங்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். மூலம் – Sritharan Thirunavukarsu – Varathar Rajan Perumal https://globaltamilnews.net/2025/214472/
  12. தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்! adminApril 19, 2025 தையிடி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்கிற ஜே.விபி யினர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அனுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தனர். இவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசை திருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர். ஆனால் இன்று குத்துக்கரணம் அடித்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர். இனவாதத்தை தூண்டும் இந்த தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தின் வெளிப்பாட்டை காட்டுகின்றனர். முன்னைய அரச தலைவரான கோட்டாவுக்கு இரண்டு வருடம் தேவைப்பட்டது அவரது உண்மை முகத்தைக் காட்ட, ஆனால் இந்த ஜேவிபியின் உண்மையான முகம் 6 மாதங்களுக்கள் வெளிப்படுவிட்டது. முன்னைய அரசாங்கத்தவர்கள் இனவாதிகள். அதை அவர்கள் வெளிப்படையாகவே காட்டினர். ஆனால் இவர்கள் அதைவிட மோசமனவர்கள். மக்களை நம்பவைத்து தம்வசப்படுத்தி கழுத்தறுக்க முயற்சிக்கின்றனர். இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் தமிழ் மக்களின் இருப்பை சூட்சகமாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாகவே முன்னெடுப்பதாக உள்ளது. இது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் போக்காகவே இருக்கின்றது. மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் அந்த வாக்குறுதிகளுள் ஒன்றைக்கூட நிறைவேற்றாது மீண்டும் புதிய பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றது. இது தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடும் முயற்சியாக இருக்கின்றதே தவிர தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இதை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அத்துடன் இதன் வெளிப்பாட்டை உள்ளூராட்சித் தேர்தலிலும் வெளிப்படுத்த வேண்டும். அந்தவகையில் தமக்கு வாக்களித்தால்தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்தானது ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா? என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/214483/
  13. இப்பத்தான் பாதிக்கிணறு தாண்டி இருக்கு! எல்லாம் அடுத்த பாதியில் தலைகீழாக மாறும்! அதனால் நம்பிக்கையுடன் பொறுத்திருந்து உன்னிப்பாக அவதானிக்கவேண்டும். அணிகளின் தற்போதைய நிலைகள்: தற்போது பட்டியல் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகளில் ஒன்றை ஐபில் சம்பியனாகக் கணித்தவர்கள்! DC - 0 PBKS - 0 GT - 0 RCB - 3
  14. பிள்ளையானின் சாரதி ஜெயந்தன் சிஐடியினரால் கைது செய்திகள் மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் சாரதியான ஜெயந்தன், இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த 8ஆம் திகதி பிள்ளையான் அவரது அலுவலகத்தில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளைத் தொடர்ந்து, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிள்ளையானின் சாரதி ஜெயந்தனை, கொழும்பிலிருந்து வந்த சிஐடி அதிகாரிகள், வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cm9mx35gp00hyhyg3leur5p0n
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா🎉🎂🎊🎈
  16. சனி 19 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 17 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிலாமதி சுவி கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 18 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சுவி கந்தப்பு ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  17. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 34வது போட்டி மழை காரணமாகத் தாமதமாகியதால் 14 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் ரிம் டேவிட்டின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களும் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி இலக்கை அடையக்கூடிய ஓட்டவிகிதம் குறைவாக இருந்தமையால் ஆட்டமிழக்கால் 33 ஓட்டங்கள் எடுத்த நெஹால் வதேராவின் பங்களிப்புடன் 12.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 98 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதலாவது இடத்தை @நந்தன் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பாதுகாப்பாகத் தக்கவைத்துள்ளார். @goshan_che மீண்டும் தனக்குப் பிரியமான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!
  18. ஒருத்தருடனும் டீல் கிடையாது. என்ன பதிலாகத் தந்தார்களோ, அதற்கேற்பத்தான் படி அளக்கப்படும்! கொப்பியடித்தால் வெல்லமுடியாது. கும்பலில் “கோவிந்தா”தான் போடமுடியும்😝
  19. 90களின் நடுப்பகுதியில் இருந்து நம்ம கொண்டாட்டங்களின் டிஜேயாக ட்ரிங்கோ வசி இருந்தவர்.. 😃
  20. ஆமா! “கதம் கதம், முடிஞ்சது முடிஞ்சு போச்சு”
  21. மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்! 17 Apr 2025, 5:18 PM இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார். விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் பதிந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்று, அதில் மக்களின் ஆதரவுடன் இரண்டாவது வெற்றியாளர் ஆனார். இதற்கிடையே பிரியங்காவின் அம்மா, தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தான் நேற்று தனது காதலரான வசி என்பவரை திடீரென திருமணம் செய்துள்ளார். டிஜே மற்றும் ஈவெண்ட் மேனஜராக பணியாற்றி வருகிறார் வசி. இருவீட்டு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் அமீர் – பாவனி ஜோடி, நிரூப், சுனிதா, அன்ஷிதா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமீபத்தில் தன்னுடைய பக்கெட் லிஸ்ட் பற்றி பிரியங்கா அளித்த பேட்டியில், “பிக் பாஸ் போக வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது.. இனி நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.. என்னை என்னுடைய கணவர் தாங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். தற்போது அவரது திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து குவிந்து வருகிறது. https://minnambalam.com/priyanka-deshpande-marraige-hits-social-media/
  22. அன்னை பூபதியின் நினைவு தினம் ; சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை 18 Apr, 2025 | 12:32 PM சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிஸாரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கடிதமானது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது மொழி உரிமை மீறப் பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரான ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 19 ஆம் திகதி அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் மேற்படி விசாரணைகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/212279

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.