Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. @suvy ஐயா, உங்கள் தெரிவுகளின்படி, இந்தக் கேள்விக்கு பதில் LSG அல்லது CSK. RR 75) வது போட்டியில் வெளியேறிவிடும். பதிலை LSG அல்லது CSK என்று தாருங்கள். அப்படியே RR என்று விட்டாலும் காரியமில்லை! @சுவைப்பிரியன் அண்ணா, உங்கள் தெரிவுகளின்படி முதல் நான்குக்குள் KKR வந்துவிடும் என்பதால் பத்தாவதாக வரச் சாத்தியமில்லை! எந்த அணி பத்தாவதாக வரும் எனக் கணித்துத் தந்தால் பதிலை மாற்றுகின்றேன்.
  2. இதுவரை போட்டியில் பங்குபற்றியோர். எல்லோருடைய பதில்களையும் இன்னமும் தரவேற்றவில்லை. கூகிள் ஷீற் மூலம் பதிந்து வெட்டி ஒட்டினால் தரவேற்ற இலகுவாக இருக்கும் https://docs.google.com/spreadsheets/d/1kcsdXNbmjH_DgikjBBctvJFH2ulbAnjaEcdBUmVBdxI/edit?usp=sharing பதிந்தது போட்டியாளர் 1 வசீ 2 ஈழப்பிரியன் 3 அல்வாயன் 4 வாத்தியார் 5 வீரப் பையன்26 6 நிலாமதி 7 சுவி 8 சுவைப்பிரியன் 9 பிரபா 10 செம்பாட்டான் 11 கந்தப்பு 12 வாதவூரான் 13 ஏராளன் 14 ரசோதரன் 15 நுணாவிலான் 16 தமிழ் சிறி
  3. @வீரப் பையன்26 , மேலேயுள்ள நான்கு கேள்விகளுக்கான பதில்களைத் தாருங்கள்.. இல்லாவிடில் புள்ளிகள் போய்விடும்!
  4. ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!- நிலாந்தன் adminMarch 16, 2025 சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார். ”சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான நிகழ்ச்சித்திட்டம்”(Sri Lanka accountability project) எனப்படும் அப்பொறிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்பட்டு வருகின்றது. போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பலவீனமான ஆனால் பன்னாட்டுப் பொறிமுறை அதுவாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பன்னாட்டுப் பொறிமுறையை நிராகரித்து ஒன்பது நாட்களின் பின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய் மூல அறிக்கை வெளிவந்து நான்கு நாட்களின் பின், ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நிகழ்ச்சி வெளிவந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் சிங்களத் தலைவர்கள் யாராயிருந்தாலும் குற்றங்களுக்குப் பொறுப்புக்குகூற மாட்டார்கள் என்பதைத்தான் உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி காணொளி வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய காணொளி உள்ளடங்களாக ‘சனல் நாலு’ காணொளிகள் இவ்வாறு ஐநா கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே வெளிவந்தனை என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும். தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்துக்கு மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உள்நோக்கங்கள் இதில் உண்டா என்றும் பார்க்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளிலும் இவ்வாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொகுத்துப் பார்க்கவேண்டும். இனி அந்தக் காணொளிக்குள் நுழைவோம். முதலில்,அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒரு நேர்காணல் என்பதைவிடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்துகொண்டு வந்திருந்தார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். வீட்டுவேலை செய்யாமல் கேள்வி கேட்கப்போகும் ஊடகவியலாளர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக உள்ள ஒரு களம். புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அநாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார். இனி எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு பலதடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது. ஒரு விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பலத்தையும் அது காட்டியது. ரணிலைச் சுற்றிவளைக்கும் கேள்விகள். அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார். சில இடங்களில் ரணில் கூறும் பதில்களைப் பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாகத் தூக்கிப்போட்டு விட்டுப் போகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் சுற்றிவளைத்தாலும் ரணில் பெருமளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் வெகு ‘கூலாக’ பதில் கூறுகிறார். அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரிசெய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக’அவர் பதில் கூறுகிறார். ஒரு இடத்தில் மஹ்தி ஹசனைப் பார்த்து “பொறுமையை இழக்காதீர்கள்”என்று சொல்லுகிறார். அதை அவர் மஹ்தி ஹசனுக்குச் சொன்னாரா? அல்லது தனக்குத் தானே சொன்னாரா? அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை. ஆனால் ரணில் முக்கியமான இடங்களில் மிகவும் கூலாகப் பதில் சொல்லுகிறார். சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார். சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார். சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார். அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநா ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது. அது என்னவென்றால், சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதுதான். 2015ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான். நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்-மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம்,அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர்,ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன? பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மஹிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார். ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க் காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. ஆனால் அதற்காக அவர் வெட்கப்படவில்லை.என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும். ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி,தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி,ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை.பொறுப்பற்ற தனமாகப் பதில் சொன்னார். இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ’உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது’ என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது. சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள்;மட்டுமல்ல சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது. எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும், இனஅழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் இன்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன. அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா? மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார். அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார். இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை. ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பலமான ஒரு படிமம் உண்டு. அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான். எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தையும் பாதுகாத்தார்கள்.சஜித்தும் ரணிலைப்போலதான்.கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது.அப்பொழுது சஜித் ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த,பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில்,மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் தமிழ்மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார்.தேசத் திரட்சிக்காக,பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குச் சாய்த்துக் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை. https://globaltamilnews.net/2025/213515/
  5. ஏ.ஆர்.ரகுமான் ஹெல்த் ரிப்போர்ட்… அப்பல்லோ அப்டேட்! 16 Mar 2025, 12:22 PM லண்டனில் இருந்து நேற்று (மார்ச் 15) சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரகுமான், இன்று (மார்ச் 16) காலை நீர்ச்சத்து குறைபாட்டால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சைகள் முடிந்து ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகளுடன் இன்று காலை சென்னை கிரீம்ஸ் மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி, சினிமா பிரபலங்கள் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர் https://minnambalam.com/cinema/ar-rahman-discharged-from-apollo-hospital/
  6. எல்லோரும் கிளி ஜோய்ஸம்தான் பார்க்கின்றவர்கள்! T20 இல் ஒன்றிரண்டு பந்துகளே மட்சை மாற்றிவிடும்! எல்லா ரீமும் கப்படிக்கவே விளையாடுகின்றார்கள்! எனவே யானையைக் கீற முயற்சிப்பதில் பிரச்சினை வராது! நிறைய statistics எல்லாம் பாவித்து இந்தப் போட்டியில் வெல்லமுடியாது. பின்வாங்காமல் கலந்துகொள்ளுங்கள்!
  7. 50, 60, 70 வயது ஒன்றுகூடல்கள் எல்லாம் நமக்கு சரிவராது.. குடுகுடு கிழவன், கிழவிகளோடு கூத்தடிக்க ஏலாது! இது sight seeing ஹொலிடேயும் இல்லை! Relaxing ஹொலிடே!☺️
  8. 300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள் March 13, 2025 2:45 pm மேற்கு வங்காளத்தின் கிராமப்புறப் பகுதியில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் தளைகளை உடைத்து, 130 தலித் குடும்பங்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை முதல் முறையாக பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கிதேஷ்வர் சிவன் கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கட்வா துணைப்பிரிவில் உள்ள கித்கிராம் கிராமத்தின் தஸ்பாரா பகுதியைச் சேர்ந்த தாஸ் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு (நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண்) காலை 10 மணியளவில் கோவில் படிகளில் ஏறி, சிவலிங்கத்தின் மீது பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, தடையின்றி பிரார்த்தனை செய்தனர். உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் முன்னிலையில், எந்தவொரு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளைகளும் ஏற்படாத வகையில் மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் வழிபாடுகள் செய்தனர். ‘தாஸ்’ குடும்பப்பெயர்களைக் கொண்ட தலித் குடும்பங்கள், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகக் கருதப்படும் கிதேஷ்வர் சிவன் கோயிலில் வழிபடுவதற்கான அடிப்படைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி மகா சிவராத்திரி விழாவின் போது பாரம்பரியத்தை மீறி கோவிலில் பிரார்த்தனை செய்ய திட்டமிட்டிருந்த குடும்பங்கள், “தாழ்ந்த சாதி”யைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் கோவில் வளாகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து கோவிலில் வழிபடுவதற்கான தங்கள் உரிமைய நிறைவேற்ற உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, கிராமவாசிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரிடமிருந்து பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதையும் எதிர்கொண்டனர். “கோவிலில் பூஜை செய்யும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்,” என்று கோவில் படிகளில் கால் வைக்க தடை விதிக்கப்பட்ட கிராமவாசி சந்தோஷ் தாஸ் கூறினார். “உள்ளூர் பொலிஸார் மற்றும் நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது, அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம்,” என்று மற்றொரு கிராமவாசி எக்கோரி தாஸ் மேலும் கூறினார். கிராமத்திலிருந்து பொருளாதார ரீதியாக விலக்கு அளிக்கும் ஒரு வழிமுறையாக கடந்த சில நாட்களாக தாஸ் குடும்பங்களிலிருந்து பால் கொள்முதல் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு, புதன்கிழமை காலை வரை அமலில் இருந்ததை கிராம மக்கள் உறுதிப்படுத்தினர். “எங்களுக்குச் சொந்தமான வளர்ப்பு கால்நடைகளிடமிருந்து பால் சேகரிக்கத் தொடங்குமாறு பால் கொள்முதல் மையங்களுக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். இன்று மாலைக்குள் சேகரிப்பு மீண்டும் தொடங்கவில்லை என்றால், நாங்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டியிருக்கும்” என்று எக்கோரி தெரிவித்திருந்தார். “கித்கிராமில் உள்ள கோவிலில் வழிபாடு தொடர்பாக இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தஸ்பராவில் வசிப்பவர்களும் மற்றவர்களைப் போலவே பூஜை செய்ய முடியும். புதன்கிழமை முதல், அனைவரும் கோவிலில் பூஜை செய்வார்கள். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/300-years-of-caste-discrimination-ended-dalits-enter-temple-for-the-first-time/
  9. வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல் நிலைவரங்கள் என்ன?; அறிந்துகொள்வதில் அமெரிக்கா ஆர்வம் தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான எம்.ஏ.சுமந்திரனிடம் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் கேட்டறிந்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் கரிசனை உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தன்னிடம் கேட்டறிந்துகொண்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அமெரிக்கத்துடன் என்னுடன் கலந்துரையாடி கேட்டறிந்தார். இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள், பொருளாதார முன்னேற்றங்கள் போன்ற விடயங்களையும் கேட்டறிந்துகொண்டார். கட்சியின் புதிய செயலாளராக அவர் முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடியதால் இந்த சந்திப்பு முக்கியத்துவமானதாக உள்ளது. இதேவேளை இந்த சந்திப்புக்கு முன்னர் அவுஸ்திரெலிய தூதுவர், பிரதி தூதுவர் மற்றும் அரசியல் அதிகாரி ஆகியோருடனும் சந்திப்பும் இடம்பெற்றது என்றார். இதேவேளை சுமந்திரனுடான சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ.சுமந்திரனை முதற்தடவையாக சந்தித்தேன். இந்த சந்திப்பில் அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கையில் தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=316159
  10. ‘போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால்…. : புதின் விதித்த நிபந்தனைகள்…. March 14, 2025 “30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். முன்னதாக, சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதினும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார் புதின். அப்போது அவர், “ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தத்துக்காக முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டிசில்வா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உன்னத இலக்கு வெறுப்பை, உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக உள்ளது. சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அழுத்தத்தின் பேரில் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் தெரிவித்தது போல் வெளித்தோற்றத்துக்கு புலப்படலாம். ஆனால் உண்மையில், உக்ரைன் தான் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்க தரப்பிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும். கள நிலவரம் அவர்கள் அப்படிக் கோருவதற்கான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும். இது குறித்து அமெரிக்காவும், எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் விவாதிக்க வேண்டும். விரைவில் இவ்விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். இந்தப் போர் நிறுத்தம் என்பது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும். உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாவதற்கு முன்னதாக, அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். அதேபோல் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது பிரச்சினையின் வேரை நாடி சிக்கலைத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.” என்றார். https://www.ilakku.org/we-agree-to-a-ceasefire-but-putins-conditions/
  11. தமிழர் பகுதியில் இரு பெண்கள் - வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலங்களாக மீட்பு! Vhg மார்ச் 14, 2025 திருகோணமலை - மூதூர், தஹாநகரில் பெண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (14-03-2025) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை முன்னெடுப்பு சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.battinatham.com/2025/03/blog-post_244.html
  12. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இஸ்ரேலினால் முழுமையாக முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவின் சில பகுதிகளில் உணவு, எரிபொருள் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hiru Newsஇஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள்...இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம். Most visited website in Sri Lanka.
  13. நான்கு சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய தமிழரசுக் கட்சி செய்திகள் வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட தமிழரசுக் கட்சி இன்று (14) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசு கட்சியானது வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அதற்கான கட்டுப்பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர். https://adaderanatamil.lk/news/cm88fl9ew002vnr5tx1r871dq
  14. அ’புரம் சம்பவம்: சந்தேக நபர் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு 2025 மார்ச் 14 , பி.ப. 12:22 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துய நபர் வசித்து வந்த வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு காவி உடை, தேரர்கள் வைத்திருக்கும் விசிறி, ஒரு போர்வை மற்றும் ஒரு தாள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பைக்குள் இருந்து இந்த கைக்குண்டை பொலிஸார் கண்டுபிடித்தனர்.AN https://www.tamilmirror.lk/செய்திகள்/அ-புரம்-சம்பவம்-சந்தேக-நபர்-வீட்டிலிருந்து-கைக்குண்டு-மீட்பு/175-353735
  15. யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தி! உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வருகைதந்திருந்தனர். https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_கட்டுப்பணம்_செலுத்தியுள்ள__தேசிய_மக்கள்_சக்தி!
  16. மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி adminMarch 13, 2025 இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை( 13)மன்னாரில் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் வயல் வீதி, சின்னக்கடை என்ற இடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணி வரை குறித்த கண்காட்சி இடம்பெறும். மாற்கு அவர்களின் மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்து குறித்த காண்பியக் காட்சியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் மாற்கு அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கு அதிகமான கலைப்படைப்புக்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே குறித்த கண்காட்சி யை அனைவரும் வருகை தந்து பார்வையிடுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அ. மாற்கு 1933ஆம் ஆண்டு குரு நகரில் பிறந்தார். புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் சிற்பங்கள் செய்வதிலும் விருப்பம் கொண்டிருந்தார். தனது ஆரம்ப ஓவியப் பயிற்சியை ஓவியர் எஸ். பெனடிக்ற் அவர்களிடம் பெற்றுக்கொண்டார். பின்னர் 1 953 இல் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் இணைந்து ஐந்து வருடங்கள் பயின்று பட்டம் பெற்றார். அங்கு அவரின் விரிவுரையாளராக இருந்த டேவிற் பெயின்ரர் இவரின் ஓவியங்களை பாராட்டியும் ஊக்கப்படுத்தியும் வந்தார். இவர் 1958-1967 வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஓவியர் எம்.எஸ் கந்தையாவினால் உருவாக்கப்பட்ட “விடுமுறைக்கால ஓவியக் கழகத்தில்” (Holiday Painter’s Group) இணைந்து இளையவர்களுக்கு ஓவியத்தை கற்றுக் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்து கல்லூரியிலும் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார். அத்துடன், 1960 களின் இறுதியில் இயங்காது போன “விடுமுறை ஓவியக் கழகத்தை” 1980 களின் மத்தியில் வீட்டில் உருவாக்கி இருந்த ஓவியக் கூடத்தில் ஆரம்பித்து, இடம்பெயர்ந்து வன்னியிலும் மன்னாரிலும் வாழ்ந்த காலங்களிலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வர்களுக்கு ஆசானாக திகழ்ந்தார். இவர்களில் பலர் இன்றும் உலகின் பல பாகங்களிலும் ஓவியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 1998இல் மன்னாருக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர். உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக கை,கால்களில் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. கைகளுக்கு கொடுக்கப்பட்ட உடல் பயிற்சிகளின் மூலம் மீண்டும் கைகள் பலம் பெற, மீண்டும் ஓவியங்கள் படைக்க தொடங்கினார். போர் நடைபெற்றுக் கொண்டிருந் ததால் தொடர்புகளற்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த ஓவியங்கள் அனைத்தும் போரால் அழிந்திருக்கும் என்ற நினைப்பில் பழைய ஆக்கங்கள் பலவற்றை மீளவும் உருவாக்கினார். இறுதி வரை எப்போதும் போல் பத்திரிகை தாள்கள், சஞ்சிகைகள், பொருட்கள் வரும் மட்டைகள் என்பவற்றில் எண்ணெய் சுண்ணம், கரித்துண்டு, பேனைகள் எனக் கிடைப்பவற்றைக் கொண்டு ஓவியங்களை படைத்துக் கொண்டே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/213352/
  17. பெண் மருத்துவரின் வாக்குமூலம் பதிவானது editorenglishMarch 14, 2025 அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றன. குற்றவாளி நேற்று அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தப்பட்ட பின்னர் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியரின் சுய வாக்குமூலத்தை காவல்துறையின நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். “நான் 10 ஆம் திகதி பிற்பகல் 3:30 மணி வரை தான் வேலை செய்ததாகவும் என் சேவையை முடித்துக்கொண்டு, ருவன்வெலிசேயவுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு மாலை 6:30 மணியளவில் முச்சக்கர வண்டியில் விடுதிக்குத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது. தனது அறைக்குள் நுழைய கதவைத் திறந்தபோது, தனக்குப் பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்ததாகவும், சாய்ந்து நின்ற ஒருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து, மற்றொரு கையால் தனது வாயைப் பொத்தி, கத்த வேண்டாம் என்றும், கதவைத் திறக்கவும் சொன்னார், தான் பயந்து போய் கதவைத் திறந்ததும் அறைக்குள் தள்ளியதாக தெரிவித்துள்ளார். என் கைபேசியின் கடவுச்சொல்லை அகற்றச் சொன்ன நபர் அதில் இந்தி பாடல்களை ஒலிக்க செய்தார். அவர், ‘சத்தம் போடாதே, இல்லாவிட்டால் நீ சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுப்பேன்’ என்றார்.” “ஒரு கட்டத்தில், நான் அந்த நபரை அவர் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றேன். என் கை வெட்டப்பட்டது. நான் அவரை கத்தியால் குத்த முயன்றபோது, அந்த நபர் மிகவும் கோபமடைந்தார். பின்னர் நான் கொல்லப்படுவேன் என்று பயந்தேன்.” “சம்பவத்திற்குப் பிறகு, சந்தேக நபர் , ‘நான் கைபேசியை எடுத்துட்டுப் போறேன். இனிமே இது கிடைக்காது. நான் எல்லாவற்றையும் போட்டோ எடுத்துள்ளேன். யாரிடமும் சொல்லாதே. சொன்னா, உனக்குதான் பிரச்சனைதான் வரும் மன்னிக்கவும்.” என்று கூறியதாக தெரிவித்தார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தனது முறைப்பாட்டின் மூலம் காவல்துறையினருக்கு இது குறித்து தெரிவித்ததாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரியவிடம் தெரிவித்தனர். வைத்தியர் காவல்துறையில் அளித்த முறைப்பாடு தொடர்பாக காவ்ல்துறையின‌ரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பாலியல் வன்கொடுமைக்கு முன், சந்தேகநபர் அறையின் கதவை மூடிவிட்டு, விளக்குகளை ஔிரச் செய்து, சுற்றுப்புறங்களைச் சரிபார்த்து, பின்னர் குளியலறையில் மட்டும் விளக்குகளை ஔிரச் செய்துள்ளார். “நான் இராணுவத்திலிருந்து தப்பியுள்ளேன். காவல்துறை என்னைத் தேடுகிறது. கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறம் போயிடுவேன். உன்னை எதுவும் செய்ய மாட்டேன். சத்தம் போடாதே. நீ சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுத்துடுவேன். அது எனக்குப் பெரிய பிரச்சனை இல்ல.” என குறித்த நபர் கூறியதாக வைத்தியர் தனது சுய வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பின்னர் சந்தேக நபர் தன்னை, கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டுச் சென்றதாகவும், பின்னர் தானே முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று தான் பணிபுரிந்த வார்டில் உள்ள வைத்தியரிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர், தனது தந்தைக்கும், வெளி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் பணிபுரியும் தனது நெருங்கிய நண்பருக்கும், குறித்த வைத்தியரின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றத்தைச் செய்த நபரை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் என்றும் அவர் காவல்துறையின‌ரிடம் கூறியுள்ளார். காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறையின‌ருக்கு உத்தரவிட்டார். இதேவேளை, சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரித்து, பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, அநுராதபுரம் தலைமையக காவல்துறையின‌ருக்கு உத்தரவிட்டார். இந்தக் குற்றத்தின் பிரதான சந்தேக நபரான கல்னேவ புதிய நகரப் பகுதியைச் சேர்ந்த நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற 34 வயதுடைய நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். சந்தேக நபர் நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, காவல்துறையின‌ரால் தான் கொடூரமாக தாக்கப்பட்டதாக நீதவானிடம் தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/213378/
  18. தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி! தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக்கட்சியை எப்படியாது சிதைத்து அதனை உடைத்து கட்சியை பிளவுபடுத்தி விட வேண்டுமென சிலர் செயற்படுகின்றனர் என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த அடிப்படையில் புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை. அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால பாரம்பரியக் கட்சியாக இருக்கின்ற இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்துவிட வேண்டுமென விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகிறது. இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டு உள்ளது. இவ்வாறான நிலைமையில் ஐனநாயக தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக் கொள்கின்றனர். அவ்வாறாக தமிழரசை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சர்யமானது. ஆக மொத்தத்திலர தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனாலும் தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும் முயற்சியை தொடர்ந்தும் செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம். மேலும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லலை. யாப்பில் குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு வரவில்லை. எமது கட்சியின் யாப்பிற்கமைய தான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கிறோம். இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைப் பரப்பி விசமத்தனமான பிரச்சாரங்களை சிலர் மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். எனவே தமிழரசை பிளவெபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறாக தமிழரசை இலக்கு வைத்து தமிழரசை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதனூடாக விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம். மாற்றான சிந்தனையில் பொறுப்பான அனுகுமுறையை பின்பற்றி அனேகமாக எல்லா இடங்களிலும் சபைகளை கைப்பற்றுவோம். ஆனாலும் aஆட்சியமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம் என்றார். https://www.samakalam.com/தமிழரசுக்-கட்சியை-இல்லாம/
  19. அப்படியாவது வாற கள்ளன் பாவம் பாத்து ஏதாவது எக்ஸ்பென்ஸிவான பொருட்களை கொண்டுவந்து வைப்பான் என்ற நப்பாசைதான்🤪 இது பெடியளோடு போகும் ஹொலிடே! https://vm.tiktok.com/ZNdewgWvX/
  20. அவர் ராதே ஜக்கி. சத்குருவுக்கும் அவர் மனைவி விஜி என்ற விஜயகுமாரிக்கும் 1990 இல் பிறந்த மகள். விஜி 1997இல் இறந்துவிட்டார். ஜக்கி தன் மனைவி ஒரு பெளர்ணமி நாளன்று உடலில் ஒரு காயமோ, தீங்கோ இல்லாமல் உடலைவிட்டு வெளியேறியதாகச் சொல்கின்றார். இது “மஹா சமாதி” என்று சொல்லுகின்றார். விஜியின் மர்ம மரணம் பற்றி பொலிசாரிடம் முறைப்பாடு செய்தபோதும் எல்லாம் மூடிமறைக்கப்பட்டு, பத்திரிகைகள்கூட மெளனமாக்கப்பட்டிருந்தன. சத்குரு அந்தளவுக்கு பவர்புல் ஆனவர்
  21. இந்த வார இறுதிக்குள் வரும் பதில்களைத்தான் தரவேற்றமுடியும். பின்னர் நான் ஆபிரிக்காவில் விடுமுறையில் நிற்பேன் என்பதால் 24 வரை எதுவும் செய்யமுடியாது! பலர் பங்குபற்றினால்தான் எனது நேரத்தைச் செலவிடமுடியும்!
  22. பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் - அருண்மொழிவர்மன் “பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? “ என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். சீமானின் திட்டமிட்ட அவதூறுகளில் ஒன்றினை அப்படியே நம்பிக் கொண்டே நண்பர் என்னிடம் கேள்வி கேட்கின்றார்; அவருக்கான தனிப்பதிலாக இல்லாமல் இந்தக் கேள்வி இருக்கக் கூடிய பலருக்குமான விளக்கமாக இதுபற்றிச் சற்றே பகிர்கின்றேன். ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே ஒப்பிக்காமல் சிறிதளவேனும் ஆராய்ந்து முடிவெடுத்தலே பகுத்தறிவு; அதன்படி சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் தர்க்கபூர்வமாக யோசித்தால், அது உண்மை தானா என்று தேடினாலே, பகுத்து ஆராய்ந்தாலே, இப்படிச் சீமான் சொல்வதை அப்படியே திருப்பிக் கேட்கின்ற நிலைமை வராது. பெரியார் சொல்லாத ஒருவிடயத்தை, அவர் சொன்னதாகச் சொல்வது அவதூறு. சீமான் அவ்வாறு சொல்லி, அது இந்தத் திகதியிட்ட பத்திரிகையிலும் வந்துள்ளது என்றும் சொல்கிறார். ஆனால் அந்தத் திகதியிட்ட பத்திரிகையில் அப்படி இல்லை என்று கூறி ஆதாரத்தைக் கேட்கின்றார்கள், அதற்கு பெரியார் எழுத்துகளைப் பூட்டி வைத்துள்ளார்கள், நாட்டுடமை ஆக்கினால் ஆதாரம் காட்டுவேன் என்று சொல்கிறார் சீமான். தான் வாசித்ததாகச் சொன்னவரிடம் எங்கே வாசித்தாய் என்று கேட்டால் சொல்லும் பதில் இதுவா? எழுத்துகளை நாட்டுடமை ஆக்குவது என்பதே எனக்குத் தெரிந்து ஒக்ரோபர் புரட்சிக் காலத்தில் சில காலம் ரஷ்யாவில் நடைமுறையில் இருந்தது; மற்றும்படி தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றது. ஏதோ உலகம் முழுவதும் எழுத்துகளை நாட்டுடமையாக்குவது நடைமுறையாக இருக்கின்றது; பெரியாரின் எழுத்துகளை மட்டும் ஒழித்து வைத்துள்ளார்கள் என்பது போல சீமான் சொல்கின்ற, உள்நோக்கம் கொண்ட உளறலை அப்படியே நாமும் எதிரொலிப்பது அபத்தமானது அல்லவா? எழுத்துகளை நாட்டுடமை ஆக்குதல் என்றால் என்ன? தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையத்தளத்தில் நாட்டுடமை ஆக்குதல் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: மறைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பாரெங்கும் பவனி வர வேண்டும்; எளிய வகையில் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையருக்குப் பரிவுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, காப்புரிமை போன்ற காரணங்களினால் ஒரு எழுத்தாளரின் எழுத்துகள் அவரது குடும்பத்தினரிடமோ அல்லது அவற்றுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளவரிடமோ முடங்கி இருக்கும்போடு, அவரது எழுத்துகளைப் பொதுக்களத்திற்குக் (Public Domain) கொண்டு வருவதன் மூலம் அவர்களது எழுத்துகள் பரவலாகச் சென்றடையச் செய்வதே இந்த நாட்டுடமையாக்கலின் நோக்கமாகும். எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படும்போது குறித்த எழுத்தாளரின் நூல்களுக்கான மரபுரிமை யாரிடம் இருக்கின்றதோ, அவருக்குப் பரிவுத் தொகையாக பணமும் வழங்கப்படும். இவ்வாறு முதலில் நாட்டுடமையாக்கப்பட்டவை பாரதியின் எழுத்துகளும் பாடல்களும்; இதனை இன்னொரு விதத்தில் பாரதியின் பாடல்கள் தனியார் சொத்தாகிவிடாமல் மீட்டெடுப்பதற்காகவே இந்த நாட்டுடமையாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சொல்லலாம். பாரதியாரின் குடும்பத்தினரிடம் இருந்த பாரதியின் பாடல்களுக்கான உரிமை பல்வேறு கைகள் மாறி, ஒரு கட்டத்தில் மெய்யப்பச் செட்டியார் 9500 ரூபாய் கொடுத்து பாரதியாரின் பாடல்களின் ஒலிப்பதிவாகப் பாவிக்கின்ற உரிமையை வாங்கி வைத்திருந்தார். பிரபல நாடகக் கலைஞரான அவ்வை டி.கே. சண்முகம் பாரதியாரின் “தூண்டில் புழுவினைப் போல” என்ற பாடலைத் தனது திரைப்படம் ஒன்றில் சேர்த்தபோது, மெய்யப்பச் செட்டியார், பாரதியின் பாடல்களுக்காக உரிமை தன்னிடம் உள்ளதால் அவ்வை. டி.கே. சண்முகம் தனக்கு 50,000 ரூபாய்கள் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்குப் பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போராட்டங்களும், காப்புரிமை பற்றிய விழிப்புணர்வும். பாரதியாரின் பாடல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதில் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி காட்டிய ஆதரவும் சேர்ந்து பாரதியாரின் முழு எழுத்துகளும் நாட்டுடமையாக்கப்பட்டன. இதுபற்றி “பாரதி: கவிஞனும் காப்புரிமையும்” என்கிற ஆய்வு நூலொன்றினை ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ளார். இப்போது “பெரியாரின் எழுத்துகளை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? என்கிற கேள்வியை எடுத்துக் கொள்வோம். பெரியாரின் எந்த எழுத்துகள் இன்று பொதுக்களத்தில் இல்லை?, எந்த எழுத்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னால்தானே இதற்குப் பதிலளிக்கலாம்? தான் சொன்ன அவதூறுக்குப் பதிலளிக்க முடியாமல் சீமான் உளறுவதை காவித் திரிந்தால் நாமும் அந்த மந்தைக் கூட்டத்தில் ஒருவராகி விடுவோமேயன்றி வேறொன்றும் நடக்கப் போவதில்லை. இதே சீமான் எதிர்வரும் காலத்தில் புலிகள் இயக்கம் பற்றியும் ஏதேனும் ஓர் அவதூறைக் கூறிவிட்டு அதற்கு ஆதாரம் கேட்டால், புலிகள் இயக்கத்தின் ஆவணங்கள் அனைத்தையும் பொதுவெளியில் பகிருங்கள் நான் ஆதாரம் தருவேன் என்று உளறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்பதையும் சீமானை நம்புகின்ற ஈழத்தமிழர்கள் உணர வேண்டும். ஏனென்றால் சீமானின் வரலாறு அப்படித்தான் இருக்கின்றது. பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் பெரியாரின் எழுத்துகளை முழுமையாகத் தொகுத்துக் காலவரிசையில் வெளியிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மிக நீண்ட காலமாக பெரியாரியவாதிகளாலும் ஆய்வுத்துறை சார்ந்தோராலும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில் 1925 முதல் 1938 வரை குடியரசு ஏட்டில் பெரியார் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், அறிக்கைகள், பேச்சுகள் என்பவற்றை முழுமையாகத் திரட்டி கால வரிசைப்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட உள்ளதாக பெரியார் திராவிடர் கழகம் 2008 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் பெரியாரின் எழுத்துகளுக்கான வாரிசுரிமை தனக்கே இருப்பதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி உரிமை கோரி வழக்குப் பதிவு செய்திருந்தார். பெரியாரின் பொதுவாழ்வின் தொடக்க காலத்திலிருந்து அவரது எழுத்துகள், பேச்சுகள், சிறுநூல்கள் என்பவற்றை வெளியிடுவதற்காக பெரியார் ஆரம்பித்ததுப் பின் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்” உரிமை கி. வீரமணிக்கு உண்டென்பதால் பெரியாரின் எழுத்துகளுக்கும் தனக்கே உரிமை உள்ளது என்பது அவரது வாதமாக இருந்தது. இதன்மூலம் பெரியாரின் எழுத்துகள் காலவரிசைப்படி வெளியிட முன்வந்த பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஒன்றினை வீரமணி இட்டிருந்தார். இக்காலப்பகுதியில் பெரியாரின் எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன், எஸ்.வி. ராஜதுரை, உள்ளிட்ட பெரியாரியவாதிகளும், பெரியாரிய ஆய்வறிஞர்களும் சட்டப் போராட்டத்தையும் பிரச்சாரங்களையும் முன்னெடுத்தார்கள். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு ஜூலை 27, 2009 அன்று “பெரியாரின் எழுத்துகளுக்கும் பேச்சுகளுக்கும் பதிப்புரிமை கூறும் உரிமை கி. வீரமணியை செயலாளராகக் கொண்டுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்குக் கிடையாது என்றும் பெரியார் அந்த உரிமைகளை தனக்கும் கோரவில்லை; மற்றவர்களுக்கும் வழங்கி விடவில்லை” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கி இருந்தார். 1957 ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின் 52(1) (எம்) பிரிவை ஆதாரமாக வைத்து இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, எவற்றுக்கு எல்லாம் பதிப்புரிமையைக் கோர முடியாது என்பதனை விளக்கும் இந்தச் சட்டப்பிரிவின்படி பொருளாதாரம், அரசியல், சமூகம், அல்லது மதம் தொடர்பான தலைப்புகளில் நாட்டின் நடப்புகள் குறித்துச் செய்தித்தாள்களிலும் இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிட்டால் அதற்கு பதிப்புரிமை கோர முடியாது என்றும், இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள் அதற்கான பதிப்புரிமையைக் கோரியிருக்க வேண்டும் என்றும் இந்த பிரிவு குறிப்பிடுகின்றது; பெரியார் திராவிடர் கழகத்தின் வக்கீல் வைத்த இந்த வாதம் வலிமையானது என்று சுட்டிக்காட்டி கி.வீரமணியின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும் பெரியாரின் எழுத்துக்களை இலக்கியம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, பெரியாரின் எழுத்துகள் அறிவுசார் சொத்துரிமையாகக் கருதப்பட வேண்டும் என்ற கி வீரமணி தன் மனுவில் குறிப்பிட்டு இருந்ததற்கும், “அறிவுசார் சொத்துரிமை கோருவதற்கும் எழுத்துப்பூர்வமாக உரிமை தரப்பட்டிருக்க வேண்டும்; அப்படி எழுத்து மூலமாக பெரியார் எதுவும் வழங்கவில்லை என்பதுடன் பெரியார் எந்த உயிரும் எழுதி வைக்காமல் தான் இறந்துள்ளார்; இது எல்லோருக்கும் தெரியும் என்றும்” விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஊடாக பெரியார் வெளியிட்ட நூல்களுக்காக பதிப்புரிமையைப் பொறுத்தவரை, அந்த அறக்கட்டளை அமைக்கப்பட்ட போது இருந்த காப்புரிமை விதிகள் எழுத்தாளர் இறந்து 25 வருடங்களின் பின்னர் அவரது எழுத்துகள் பொதுக்களத்திற்கு வரும் என்றே இருந்ததால், அதன்படி அவையும் பெரியார் இறந்து 25 வருடங்களின் பின்னர், அதாவது 1998 இன் இறுதியில் பொதுக்களத்திற்கு வந்து விட்டன என்றும் இந்தத் தீர்ப்பு உறுதி செய்தது. இதன்படி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்ற தீர்ப்பின் வழியாக இனி பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் வெளியிடும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதையும் நீதிபதி கூறியுள்ளார். எனவே பெரியாரின் எழுத்துகள் இப்போது பொதுக் களத்திற்கு (Public Domain) வந்து விட்டன. காப்புரிமை என்ற பெயரால் எவரிடமும் அவரது எழுத்துகளும் பேச்சும் பதுக்கிவைக்கப்படவில்லை. எழுத்துகளை நாட்டுடமையாக்கல் என்பதன் நோக்கமே, காப்புரிமை போன்ற காரணங்களினால் ஒரு எழுத்தாளின் எழுத்துகள் அவரது குடும்பத்தினரிடமோ அல்லது அவற்றுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளவரிடமோ முடங்கி இருக்கும்போடு, அவரது எழுத்துகளை பொதுக் களத்திற்குக் (Public Domain) கொண்டுவருவதன் மூலம் அவர்களது எழுத்துகள் பரவலாகச் சென்றடையச் செய்வதுதானே. இன்னொரு விதத்தில் சொன்னால், ஒருவரின் எழுத்துகளுக்கான காப்புரிமை குறித்த ஒரு தரப்பிடம் இருப்பதன் காரணமாக அந்த எழுத்துகள் பரவலாகச் சென்றடைவது தடைப்படுகின்றது என்ற சூழலில், காப்புரிமையை வைத்திருப்பவருக்கு குறித்த தொகையைக் கொடுப்பதனால் அந்த எழுத்துகளை எவரும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்குவதே எழுத்துகளை நாட்டுடமையாக்குதல். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் பொறுத்தவரை அது 2009 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புடன் நிறைவேறி விட்டது. காலவரிசைப்படியாக எழுத்துகள் தொகுக்கப்படுவதன் அவசியம் பெரியாரின் எழுத்துகளை முழுமையாகத் தொகுத்து வெளியிடவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தவர்கள், அவை கால வரிசைப்படியான தொகுப்புகளாகத் தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் சேர்த்தே கேட்டுக் கொண்டனர். இது ஒரு முக்கியமான வேண்டுகோளாகும். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் கால வரிசையில் வைத்துப் பார்த்தாலே ஒட்டுமொத்த விடுதலைக்கான, சமூகநீதி நோக்கிய பயணத்துக்கான அவரது படிமுறை வளர்ச்சி தெரியும். தனிப்பட்ட முறையில், காலவரிசையில் தொகுக்கப்பட்ட பெரியாரின் குடியரசு எழுத்துகளையும் பேச்சுகளையும் வாசித்ததே எனக்குப் பெரியாரைப் புரிந்து கொள்ள உதவியது. அதுபற்றியும் இங்கே குறிப்பிடுவது முக்கியம் என்று நினைக்கின்றேன். பெரியார் திராவிடர் கழகம் 1925 முதல் 1938வரையான குடியரசில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் மின்னூல்களாக வெளியிட்டிருந்தது. அவற்றினை முழுமையாக படிக்க ஆரம்பித்த எனக்கு பெரியாரின் எழுத்துநடையும், சமத்துவக்கான அவரது பயணம் எப்படி எப்படியெல்லாம் முகிழ்ந்து வந்தது என்கிற அந்தப் பரிணாம வளர்ச்சியும் மிகுந்த ஆர்வத்தைக் கொடுத்தது. அவை அனைத்தையும் ப்ரிண்ட் பண்ணி கோப்புகளில் இட்டு வைத்து வாசித்து வந்தேன். ஈழப் பிரச்சனை, சாதியம், பெண்ணுரிமை, மதங்கள், அறிவியல் பார்வை, பகுத்தறிவு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வப்போது வாசித்தவை தரவுகளாகவும் சம்பவங்களாகவும் செய்திகளாகவும் மூளைக்குள் தேங்கி குழப்பங்களும் துலக்கமற்ற பார்வையுமே அப்போது இருந்தது. பெரியாரை வாசிக்கத் தொடங்கிய பின்னர், அவரது அணுகுமுறையும் சிந்தனைமுறையும் எனக்குப் பெரிதும் கைகொடுத்தன. அந்த வகையில் பெரியாரின் எழுத்துகள், சமூக உறவுகளையும், அரசியலையும் புரிந்து கொள்வதற்கு உதவியதுடன் சமத்துவத்துக்காகச் செயற்பட வேண்டும் என்கிற உந்துதலையும் எனக்கு ஏற்படுத்தின. குறிப்பாக, மிக நீண்டகாலம் பொதுவாழ்வில் ஈடுபட்ட பெரியாரின் எழுத்துகளை அவற்றின் காலவரிசையில் வைத்துப் பார்க்கின்றபோதே அவரது எழுத்துகளின் முழுமையான அர்த்தமும், சிந்தனை வளார்ச்சியின் பரிணாமமும் தெரியும். உதாரணத்துக்கு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாகுவதற்கு முன்னர் திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்ன பெரியார் தான், மொழிவழி மாநிலங்கள் உருவான 1965 இற்குப் பின்னர் தமிழ் நாடு தமிழருக்கு என்பதையே தன் கடைசி மூச்சு வரை சொல்லி வந்தார். திருக்குறளை ஆரம்பத்தில் நிராகரித்தவர் பின்னர் திருக்குறள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதனைத் தமிழர்களின் அடையாளமாகச் சொல்ல வேண்டும் என்று பேசியவரும் அதே பெரியார் தான். காலவரிசையை பின்பற்றாமல் எழுத்துகள் தொகுக்கப்பட்டால் அரசியல் நிலைப்பாடுகளே திரிக்கப்பட்டு விடக்கூடும் என்ற அச்சம் வீரமணிக்கு இருந்திருக்கலாம். இன்று, வாசித்து, ஒவ்வோர் விடயத்தையும் கேள்வி கேட்டு சான்றாதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தேடித் துலங்கி உண்மையக் கண்டடையாமல் கேள்விச் செவியன்களாக பெரும்பான்மையானோர் மாறிப் போய்விட்ட "post-truth" காலத்தில் எல்லாத் திரித்தல்களுக்குமான வாய்ப்பும் இருக்கின்றது. ஆயினும் பெரியார் உள்ளிட்டோர் ஏற்றிய சமூகநீதிக்கான தீபத்தின் வெளிச்சத்தில் நாம் மானுட சமத்துவம் பேணுவோம் பின்குறிப்பு: குடிஅரசு ஏட்டில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் வெளியிடுவது தொடர்பாகவும் அவற்றுக்கான காப்புரிமை குறித்தும் நடந்த வழக்கு விபரங்களையும் வெவ்வேறு கட்டுரைகளையும் தொகுத்து குடிஅரசு வழக்கு என்ற பெயரில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ளது. - அருண்மொழிவர்மன் https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47925-2025-03-11-08-40-53
  23. அங்கீகார மறுப்பால் அகிலத்தை வென்ற இளையராஜா! -சாவித்திரி கண்ணன் உள்நாட்டில் மறுக்கப்பட்ட தனக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் உருவாக்கிக் கொண்டார் இளையராஜா! இசைமேதை இளையராஜா இயல்பிலேயே ஒரு கலகக்காரர். சிம்பொனியும் கலகக்கார்களால் உருவாக்கப்பட்டதே! கர்நாடக இசை மேடைகளில் அங்கீகாரம் மறுக்கப்பட்ட இளையராஜா மேற்கத்திய இசை மேடைகளை வென்றதை பற்றிய ஒரு அலசல்; இளையராஜா மண்ணின் இசையையும், மக்கள் இசையையும் மரபு வழியாக உள்வாங்கி வளர்ந்தவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக இசை வாழ்வை தொடங்கிய அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை எந்த அமைப்பிற்கும் கட்டுப்பட்டதன்று! எனவே, அது, தன் கட்டற்ற சுதந்திர வெளியை தொடகத்திலேயே கண்டடைந்தது. தன்ராஜ் மாஸ்டருடன் இளையராஜா தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையை பயின்ற போதே மொசார்ட்டும், பீத்தோவனும் அவரது இதய சிம்மாசனத்தில் வந்தமர்ந்தனர். மயிலாப்பூர் லஸ் கார்னர் சாயி லாட்ஜ் தன்ராஜ் மாஸ்டர் அறையில் தான் அவர் பீத்தோவனையும், மொஸார்ட்டையும், பாஹ்கையும், மேண்டல்ஸனையும், ஷீபர்ட்டையும், சைக்காவ்ஸ்கியையும் அறிந்துணர்ந்தார். ஏனென்றால் ஒரு கலகக்காரனாலேயே இவர்களை கண்டடைய முடியும். மொழிகளின் ஆதிக்கத்தைக் கடந்த இசையின் மீதான அவரது ஆரம்பகால ஈர்ப்பாக வெளியானதே ஹவ் டூ நெம் இட், நத்திங் பட் விண்ட் போன்ற மொழிகளற்ற இசை ஆல்பங்கள்! உலகின் தலை சிறந்த இசை கலைஞர்களைக் கொண்ட ராயல் பிலார்மோனிக் இசைக் குழு லண்டன் மா நகரில் அவரது இசையை இசைக்கிறது. இன்னும் உலகின் 13 நாடுகளில் உலகப் பெரும் இசைக் கலைஞர்கள் அவரது இசை நோட்சை பார்த்து இசைக்க உள்ளனர். உலகத்தில் மதம் சார்ந்தும், மன்னர்களின் அதிகாரம் சார்ந்தும் உருவான இசைகள் காலப் போக்கில் காணாமல் போயின. ஆனால், தமிழகத்தில் மட்டும் மதம் சாதி ஆகியவற்றின் அதிகார பீடமாக அங்கீகாரம் பெற்ற கர்நாடக இசையை இன்னமும் விட்டுக் கொடுக்காமல் பிராமணர்கள் தங்கள் சாதிக்கான இசையாகவே வளர்த்து நிலை நிறுத்தி வருகின்றனர். இதில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் மாற்று சாதியினருக்கு பெரிய அங்கீகாரத்தை தரமாட்டார்கள்! அந்த வகையில் இங்கு தனக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தான் இளையராஜா உலக அரங்கில் பெற்றுள்ளார். மக்கள் உணர்வுகளில் இருந்து அவருக்கு எல்லா இசையுமே அத்துப்படி. சிம்பொனி ஒரு இனம் தன்னை தேசியமாக உணர ஆரம்பித்த பிறகான மாற்றங்களின் விளைவாய் கட்டற்று சுதந்திரமாக உணர்கிறது! அவ்வித உணர்வுகளின் வளர்ச்சி போக்கே சிம்பொனி இசையாய் உருக்கொண்டது.! ஒரு வகையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியோடு தொடர்புடையது சிம்பொனி இசை! பிரெஞ்சுப் புரட்சியில், கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் கிறிஸ்துவ மதக் குறீயீடான ’லத்தீன்’ மொழி ஆதிக்கத்திற்கும் எதிரான கூறுகள் வெளிப்பட்டன என்பதை நாம் அறிவோம். ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்ததையும் எதிர்த்து மக்கள் புரட்சி வெடித்தது. தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கு எதிராக உருவானதே பல இசைக் கருவிகளை பயன்படுத்தி உருவான சான்சன் (Chanson) இசை வடிவமாகும்! இதை உருவாக்கியவர், குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) என்ற பிரான்சின் இசை அறிஞராவார்! இதை இந்த மண்ணுக்கான மதச் சார்பற்ற இசை என அவர் பிரகடனப்படுத்தினார்! இதே போல இத்தாலி இசைக் கலைஞன் பிரான்சிஸ்கோ லன்தினி (Francesco Landini) என்ற கண் பார்வையற்ற அறிஞர் தன் தாய் மொழியில், அதன் நாட்டுப் புற இசை அம்சமான மாத்ரிகல் (madrigal) என்ற இசை வடிவதை அறிமுகப்படுத்தி, அதை மதச் சார்பற்ற இசை எனப் பிரகடனப்படுத்தினார். இப்படியாக பிரான்சும், இத்தாலியும் சேர்ந்து சிம்பொனி என்ற புதிய இசை தோற்றத்திற்கான மூலக் கூறுகளை வழங்கின…என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள்! எதற்காக இதை சொல்கிறேன் என்றால், புறக்கணிக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் தங்களுக்கான இசையை தாங்களே உருவாக்கிக் கொள்வர்! அப்படி ஒரு ஆதிக்க மொழிக்கும், மத ஆதிக்கத்திற்கும் எதிராக உருவானதே சிம்பொனியின் தோற்றத்திற்கான அடித்தளமாகும். தன் தாயிடமிருந்தும், தன்னைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்களிடம் இருந்தும் இசைப் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே நாட்டுப் புற இசையில் காலூன்றி மேலெழுந்து வந்தவர் தான் இளையராஜா! அவர் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு எல்லாம் அடித்தளமிட்டது அவர் கேட்டும், பாடியும் வளர்ந்த கிராமிய இசை தான்! ஆனால், இதற்கு பின்னணியில் சில நூற்றாண்டுகள் நடந்த நிகழ்வுகள் இதற்கு முன்னோட்டமாயின. அது கத்தோலிக்க மதத்தில் இருந்து உருவான புரோடஸ்டண்ட் மதத்தின் தோற்றம், ஜெர்மனியில் நடந்த மதப்போர்கள், இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (Civil war) ஐரோப்பிய நாடுகளில் உருவான பொருளாதார விடுதலைக்கான குரல்கள் அகியவை மேற்கத்திய இசையில் தாக்கத்தை உருவாக்கி மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டன. அது ஹைடன் (Haydn), மொசார்ட் (Mozart) போன்ற இசை மேதைகள் சிம்பொனியை படைக்க காரணமாயிற்று! இசை மேதைகள் பித்தோவன், மொசார்ட் சிம்பொனியை அதற்கடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் புரட்சிகரமான சிந்தனையை கொண்டிருந்த பீத்தோவன் என்ற மாபெரும் இசைமேதையாகும். இந்த காலகட்டத்தில் அச்சு ஊடகம் வளர்ந்த நிலையில், இசைக் குறியீடுகளை அச்சிடத் துவங்கியதால் இசையின் வளர்ச்சி அனைவருக்குமானதானது. மொசார்ட், பீத்தோவன் ஆகிய இந்த இருவரும் தான் நம் இளையராஜாவின் இதய ராஜ்ஜியத்தில் பல்லாண்டுகளாக கோலோச்சுபவர்கள்! சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே நம் இளையராஜா இவர்களின் சமாதிகளை தேடிக் கண்டடைந்து கண்ணீர் உகுத்து அழுது வந்ததை எழுதி உள்ளார். மொழிகளின் ஆதிக்கத்தை கடந்த மனித சுதந்திரத்தின் முழு வெளிப்பாடாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த இசை வடிவம் இளையராஜாவை வசீகரித்தது. இதன் விளைவாக நம் இளையராஜா 1993 ஆம் ஆண்டே சிம்பொனியை படைத்தார்! ஆயினும் அந்த இசைக்கு பரிச்சியமல்லாத இந்திய இசைக் கருவிகளையும் அதில் இளையராஜா இணைத்து ஏற்படுத்தியதால் அது மேற்கத்திய இசை உலகின் முழு ஏற்பையும் பெற முடியாமல் போயிற்று! ஆனால், தற்போது முற்றிலும் மேற்கத்திய இசைக் கருவிகளுக்கு மட்டுமே இளையராஜா நோட்ஸ் எழுதி சிம்பொனியை அரங்கேற்றிவிட்டார்! மேஸ்ட்ரோ, ராகதேவன், இசை ஞானி..என பலவாறாக மக்களால் அழைக்கப்பட்டாலும் கர்நாடக இசை விற்பன்னர்கள் இளையராஜாவை கர்நாடக இசை கச்சேரி செய்ய சபா தருவார்களா? ஒரே ஒரு முறை வலிந்து அந்த வாய்ப்பை பெற்ற இளையராஜா வரவேற்பில்லாததால் நிறுத்திக் கொண்டார். ஆனால், அவருக்குள் அந்த ஆசை நிறைவேராத ஆசையாக தொடர்கிறது. இளையராஜா சாதிகளைக் கடந்து சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டார். எனினும், இங்கே தமிழ் நாட்டில் கர்நாடக சங்கீத வித்வான்கள் நம் இளையராஜாவை ஏற்பார்களா? அவரது நிறைவேறாத நீண்ட நாள் கனவான பெருமளவு பிராமணர்கள் மட்டுமே கோலோச்சும் டிசம்பர் மாத கர்நாடக சங்கீத கச்சேரிக்கு அவரை அழைப்பார்களா? திருவையாற்றில் ஆண்டுதோறும் நடக்கும் தியாகய்யர் ஆராதனைக்கு அழைப்பார்களா..? இசை மும்மூர்த்திகளின் வரிசையில் தன்னையும் நான்காவதாக சேர்க்க வேண்டும் என்ற அவரின் கனவை நினைவாக்குவார்களா? இவை எதுவும் நடக்காவிட்டாலும், இளையராஜா வேறு எவரையும் விட கோடானு கோடி மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு கொலுவிருக்கிறார் என்பது மட்டுமல்ல, இந்த தொடர் மறுப்பே அவரை இன்னும், இன்னும் உயரப் பறந்து மறுத்தவர்களை அண்ணாந்து பார்க்க வைக்கும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20989/ilaiyaraja-symphony/
  24. இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் – அருட்தந்தை மா.சத்திவேல் ‘இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.” – என்று சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, ” மலையகத்தில் படித்த பட்டதாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான வேலையற்ற தமிழ்மொழியிலான பட்டதாரிகள், வேலையின்மை காரணமாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் மலையக கல்வித் துறை சார்ந்து அவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கும் சமூக எழுச்சி வேலைத்திட்டத்தை முன்வைக்காது , அவர்களை புறந்தள்ளி மலையக கல்வி வளர்ச்சிக்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது. தற்போது இந்தியாவில் இயங்கும் அதி தீவிரவாத சமய இயக்கமான சிவசேனா போன்ற அமைப்புகள் பல்வேறு முகங்களோடு மலையகத்தில் தமது கூடாரங்களை அமைத்து பலப்படுத்தி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு மலையகத்தில் ஆசிரியர் நியமனம் கொடுக்க வேண்டும் என்பது மறைமுக இந்திய அரசியல் நலன்கள் இருந்த கோரிக்கையாகவே சிந்திக்க வேண்டும். மலையகத்தில் ஏற்கனவே அடிப்படைவாத கிறிஸ்தவ சமய கட்டமைப்போடு பல இறக்குமதி செய்யப்பட்ட சமய அமைப்புகள் மலையகத்தின் பாரம்பரிய சமய பண்பாட்டு கலாச்சாரத்தை அழிக்கவும் சிதைக்கவும் பல்வேறு பலமான வேலை திட்டங்களோடு களமிறங்கியிருக்கையில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மலையகத்தில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கொடுக்க ஆலோசனை முன்வைப்பது மலையக மக்களின் கல்வியை மையப்படுத்தி அங்கு சமய மற்றும் கலாச்சார ரீதியில் இன அழிப்பினை துரிதப்படுத்தும் மாற்றுத் திட்டமாகவும் இருக்கலாம். மலையக மக்கள் இந்நாட்டின் இன்னும் ஒரு தேசிய இனமாக வரத்துள்ளதோடு இந்திய வம்சாவளியினர் என தம்மை அடையாளப்படுத்தாது மலையத் தமிழ் என்றே அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை அரசியல் வலுப்பெற்றுள்ளது. இதனை விரும்பாத இந்திய அடிவருடி அரசியல்வாதிகளும் அவர்களின் கை கூலிகளும் மலையகத்தில் இயங்கி வரும் சுழல் நிலையில் இந்திய ஆசிரியர் நியமன கோரிக்கை என்பது மலை மக்களின் அரசியல் சிந்தனையை அழிக்கும் வேலை திட்டம்களில் ஒன்றாகவும், இன அழிப்பின் இன்னுமொரு வடிவமாகவுமே பார்க்க வேண்டி உள்ளது. மலையக மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் தமக்கான நாடாளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு 1977 தொடர்ந்து கிடைத்தது. 1977-2024 இடையிலான காலகட்டத்தில் மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியலை பலப்படுத்திக் கொள்வதற்கும் தாங்கள் கட்சியையும் அதனோடு ஒட்டிய தொழிற்சங்கத் தையும் வளர்க்க எடுத்த பல்வேறு முயற்சிகளை சிந்திக்கும்போது மலையக கல்வியின் எதிர்காலம் திட்ட நலன் கருதி என்னவாக கட்சிகளையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பின்னால் சிறந்தது வரலாறு தங்களுடைய அரசியலையும் கட்சி அரசியலையும் வளர்த்துக் கொள்வதற்கு இவர்கள் எடுத்த முயற்சியோடு ஒப்பிடுகையில் மலையக கல்வி தொடர்பான இவர்களுடைய செயற்பாடு மிக மந்த கதியிலேயே நிகழ்ந்தது என்பதற்கு தற்போது முன் வைத்திருக்கின்ற இந்திய ஆசிரியர்களை வரவழைப்பதற்கான கோரிக்கை நல்ல உதாரணமாகும். அரச பாடத்திட்டத்திற்கு ஏற்ப அந்தந்த துறைகளில் நிறைவான அறிவு சார்ந்த ஆசிரியர்கள் மலையகத்தின் இல்லையாயின் அரச கல்வி கொள்கை மலையகத்தில் அமுலாக்கத்தில் பிழை உள்ளது. இந்த நூற்றாண்டிலும் மலையக பிள்ளைகள் கல்வியிலிருந்து தூர விலகி செல்கின்றார்கள். அல்லது கல்வியில் தேர்ச்சி அடையாதிருக்கின்றார்கள் என்று கூறுவதும் மலையக மக்களின் வாழ்வு கலாச்சாரத்திலும் பொருளாதாரத்திலும் பிழையான திட்டம் உட்புகுத்தபபட்டுள்ளது என்றே பொருள் கோடல் வேண்டும் . இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வர வேண்டும் என்பது அரசியல் அறம் இன்மையின் வெளிப்பாடு எனலாம். மலையக கல்வியை பலப்படுத்தவும் வளப்படுத்தவும் மலையக படித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுக்கவும்; மேலதிகா ஆசிரியர்களை பெற்றுக்கொள்ள வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு நியமனங்களை உரித்தாக்கவும் அவசர வேலை திட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுபினர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசுக்கு முன்மொழிதல் நலமாகும்.” – என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=315936
  25. யாழ் சென்ற அமெரிக்க தூதுவர் adminMarch 12, 2025 வடக்குக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பயணம் செய்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர். அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ ஆகியோரே பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தனர். துணைவேந்தர் பேராசிரியரைச் சந்தித்து வடக்கு நிலைமைகளைக் கேடட்டறிந்த தூதரகக் குழுவினர், தொடர்ந்து பீடாதிபதிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிபதிகள் கலந்து கொண்டனர். கடந்த 11 ஆம் திகதி முதல் நாளை 13 ஆம் திகதி வரை வடக்குக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதரகக் குழுவினர் காங்கேசன்துறையில் அமைந்துள்ள துறைமுகங்கள் அதிகாரசபையின் வதிவிட முகாமையாளர் மற்றும் இலங்கைக் கடற்படையின் வடபிராந்திய அதிகாரிகளுடனும், மன்னாரில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சின் காற்றாலை மின்னுற்பத்தி செயற்றிட்ட அதிகாரிகளையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://globaltamilnews.net/2025/213291/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.