-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக } (2) ஆண் : கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக ஆண் : கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக ஆண் : { நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு } (2) ஆண் : இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு ஆண் : உண்மை என்பது என்றும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும் ஆண் : { பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை } (2) ஆண் : மனம் என்ற கோயில் பிறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் ஆண் : அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை ஆண் : ஒருவனுக்கென்றே உள்ளது எல்லாம் இறைவனும் தந்ததில்லை .......! --- புத்தன் இயேசு காந்தி பிறந்தது ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக .........! 😍- களைத்த மனசு களிப்புற ......!
- குட்டிக் கதைகள்.
Suguna Muthusamy · Suivre derotoSnps53159a0g:2eh7m67601124tit5rh01 02g1H5g07 à6ac55m,0 · எதிர்பாராத அன்பு என்னசெய்யும்... திக்குமுக்காட செஞ்சு நாம் இதற்கு தகுதியானவர்களா னு தோண வைக்கும்... இனியும் இனியும் மக்களிடம் அன்பு மிகுதியாக காட்ட வேண்டும் என்று நினைக்கத் தோன்றிய தருணங்களில் இதுவும் ஒன்று.... எப்போதும் பச்சை கடலை வந்தால் முதலில் பஸ் இறங்கியவுடனேயே நமது வீட்டுக்கு வந்து விடுவார்...கல்லைக்காய் நல்லா இருக்கு...உனக்கு புடிக்குமே என்று கொண்டு வந்தேன் என்பார்... நேற்று கண்ணு னு சத்தம் போட்டுட்டு வரும்போதே கைகளில் இந்த பனங்குச்சி கிழங்கு வைத்திருந்தாராம்....இவர் திண்ணை பெஞ்சில் அமர்ந்து இருந்தார்..இது அம்மாவிற்கு காசு வேண்டாம்.. என்னோட பரிசு அம்மாவிற்கு என்றராம்...உள்ளே வந்து உன்ற தோழி வந்து இருக்காங்க.. இந்த குச்சி கிழங்கு உனக்கு கிப்ட் ஆமா என்றார்... பாவம் பா என்று கூறி கொண்டு வெளியே வந்தால் நானு அதுக்கு காசு வாங்க மாட்டேன்... நீங்க மட்டும் எனக்கு எல்லா கொடுக்கறீங்க...நானு இதை உனக்கு கொடுக்ககூடாதா னு ....நீ எனக்கு எதுக்கு கொடுக்கிற ...நானு பாசமாக கொடுக்கறேன் னு கூற நானு பிரியத்துக்கு கொடுக்கறேன் சரியா...கடலைக்கு மட்டும் காசு கொடு னு வாங்கி போனார்.... இந்த மாதிரி மக்கள் மேன்மக்களாகி விடுகின்றனர் ஒரு சில நொடியில்...... சிரித்து கொண்டே சாப்பிட்டீங்களா னு கேட்க மழை பெய்ஞ்சுட்டே இருந்ததா வரவேண்டாம் னு பாத்தா மழை ஓய்ஞ்சதா...நாம காலு ஊட்டுலே தங்கதல்லா... அதனால் வெறுஞ்சோறு எடுத்துட்டு அதா அந்த பாக்கெட்டில நயிரு வாங்கி கொண்டு வந்து உள்ளேன்.... நீ ஊறுகாய் வைச்சிருந்தா கொஞ்சுண்டு கொடு னு கேட்க மாங்காய்.. எலுமிச்சை ஊறுகாய் கொடுத்தேன்.... எடுத்து கொண்டு வியாபாரம் செய்ய போய் விட்டார்.. பெண் இப்படி சுமையைத்தூக்கிட்டு போகவேண்டாம் என்று திட்டுகிறராம்...எனக்கு தா ஊட்டுல இருக்க முடியலை...ஏதோ ரெண்டு காசு சம்பாரிசாசா யாருகாசையும் எதிரு பாக்கமா நாம பாட்டில நம்ம பொழைப்ப பாக்கலாமல்ல என்றார்... சரி தா மா..பத்திரமாக போய் விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பினேன்...வாரமோருமுறை...கூடையும் அம்மாவும் ஒன்றே...அவ்வப்போது பொருட்கள் மாறும்....மீன்..வெள்ளரி..தக்காளி.. காய்க என்று ஏதாவது ஒரு பண்டம் வாங்கி வந்து ஊருக்குள் சுற்றி விட்டு விற்பனை செய்து விட்டு தான் போவாரே.....அடுத்த நாள் அடுத்த ஊரு..... வாழ்க்கை படிப்பினைகள்... உழைப்பு உயர்வுதரும்... வாழ்தல் இனிது அனைவரோடும்.....!- மலரும் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Mantras and Miracles · Suivre ersotnSopd2brh951 n1924e7fl2m02l9cuh 1gm6e5vft08t6i,of9c:262 · அஹோபிலம் மடத்தில் அழுத முஸ்லீம் மூதாட்டி! நேரம் மாலை மணி 5 இருக்கலாம். தஞ்சை ஜில்லா மாயவரம் பக்கத்தில் உள்ள தேரழுந்தூர் அக்ரஹாரம் , அஹோபில மடத்தின் வாசல் திண்ணையில் நடந்தது இந்த சம்பாஷணை. ஊரில் இருந்த ஒரே அக்ரஹாரத்தில் மிச்சம் மீதி இருந்த நான்கைந்து பிராமண குடும்பத்தில் ஒன்று அஹோபில மடத்தின் இந்தக் கிளை. 600 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தில் அஹோபில மலையில் துவங்கிய இந்த மடம், ஒரு காலத்தில் விண்ணைப்பிளக்கும் வேத பாராயணம் விழாக்கள் மற்றும் நான்கு வீதி முழுதும் நிறைந்திருக்கும் பெரிய பெரிய பிராமண அய்யங்கார் வீடுகள் என்று கல கலப்பாக இருந்தது . இன்று அக்ரஹாரங்கள் முஸ்லிம் மயமாகி மசூதிகளில் பாங்கு சொல்லும் சத்தங்கள் மற்றும் அக்ரஹார திண்ணைகளில் முஸ்லிம் சிறுவர்கள் குரான் ஓதும் சத்தமும் கேட்கிறது ! சில ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தேரழுந்தூரில் ஒரு கிளை கொண்டுள்ளது இந்த அஹோபில மடம் .கருங்கல் மண்டபங்கள் கொண்ட இந்த மடத்தில் ஊரில் உற்சவம் என்றால் மட்டும் மடத்தை சேர்ந்த வைஷ்ணவ அய்யங்கார் வகுப்பை சேர்ந்த மக்கள் கூடுவர். வெளி ஊர்களில் இருந்து அந்த ஊரிலிருந்து சென்று விட்டவர்கள் , அங்கு தங்கி ஊர் வேலை செய்வர். ஆமருவிப் பெருமாள் கோவில் உற்சவம் தான் என்றாலும் உற்சவங்கள் அஹோபில மடத்தின் திண்ணையில் இருந்தே பெரியவர் களால் தீர்மானிக்கப்படும், கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்படும். இது சில நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. பல நூறு ஆண்டு காலக் கோவிலுக்கும், மடத்துக்கும் வருமானம் இல்லையா ? என்று பல முறை பலர் கேட்டதுண்டு. நாற்பது வேலி நிலம் உள்ளது பெருமாளுக்கு. சொந்தமாக நிலங்கள் ஆனாலும் அவர் பக்தர்களை நம்பியே உள்ளார் என்றால் நம்பவா முடிகிறது ? ஆனால் அதுதான் தமிழகக் கோவில்களில் பலவற்றின் நிதர்ஸனம். மடம் கோவில் சார்ந்தது அல்ல. இதற்கும் சில நில புலன்கள் உண்டு. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை. வெளியூர் வாசிகள் போவதோ ஒரு வாரம். கோவில் வேலைகள் செய்து விட்டு பிழைப்பு வேண்டி வெளியூர் செல்ல வேண்டும். ஒரு வாரத்தில் நில அளவைகள் செய்ய முடியாது.அவை எங்குள்ளது என்று தேட அவகாசம் இல்லை! ஒரு நாள் கணக வழக்கு சரிபார்க்க சில மட ஊழியர்கள் ரஸீதுகளைத் துழாவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது. ‘சாமி, இங்கெ கொஞ்சம் வரீங்களா ?’, என்றது அந்தக் குரல். தூரத்தில் இருந்து பார்த்த போது வெள்ளை துப்பட்டி முக்காடு போட்ட வயதான் பெண் போல் தெரிந்தது. வாசலில் ,வந்திருந்தது 75 வயது மதிக்கத் தக்க முஸ்லீம் பெண்மணி. மடத்தில் இந்த அம்மாளுக்கு என்ன வேலை என்று யோசித்தபடியே மற்றவர்கள் நிமிர்ந்து பார்த்தால் அந்த பெண்மணி, ‘சாமி, பெரியவங்க யாராது இருக்காகளா ?’, என்றார் அவர். மடத்தில் ஒரு பெரியவர் யாரென்று கேட்டபடியே வந்தார். ‘யாரும்மா நீ?’, என்று கேட்டார். ‘மடத்து ஐயா நீங்க தானே, கொஞ்சம் பேசணும்’, என்றார். வாசல் திண்னையில் அமர்ந்தார். மடத்தின் உள்ளே இருந்து சில வயதான பிராமணர்கள் எட்டிப் பார்த்தனர். அவர்கள் அனைவரும் ஸேவார்த்திகள். உற்சவத்திற்காக வந்திருந்தனர். ‘சாமீ, முடியலெ சாமீ’, என்று அழ ஆரம்பித்தார் அந்த அம்மாள். மடத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னன்னு சொல்லும்மா. யாராவது ஏதாவுது சொன்னங்களா ?’, என்று கவலையுடன் கேட்டார் மடத்து பெரியவர் ! ‘அதில்லீங்க. கொஞ்ச நாளா தூக்கமே இல்லீங்க. சொப்பனம் ஒண்ணு வருது. தினம் அதுவே வருது. சிங்கம் ஒண்ணு வந்து மூஞ்சீலெ அறையுது. என்னுது, எங்கிட்டே குடுத்துடுன்னுது. ஒண்ணும் புரியலீங்க’, என்றார் அந்த அம்மாள். மட சிப்பந்திகளுக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த அம்மாள் காணும் கனவுகளுக்கும், மடத்துக்கும் என்ன சம்பந்தம் ? ‘சரிம்மா, தூக்க மாத்திரை ஏதாவது போட்டுக்குங்க. நான் என்ன செய்ய முடியும் ?’ என்றார் மடப்பெரியவர் . ‘அப்பிடி சொல்லப் பிடாது சாமி. நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரணும் சாமி. இங்கெ பலரு இருக்காங்க, சில விஷயங்கள் இங்கெ சொல்ல தோதுப்படாதுங்க ஐயா’, என்றார் அந்த அம்மாள். யோசிச்சுச் சொல்வதாக பெரியவர் சொன்னார். கோவில் தேர் ஓடி, அதன் பின் புஷ்பப் பல்லாக்கு நடந்து முடிந்தது. உற்சவங்கள் முடிந்தன அன்று கொடி இறக்கப்பட்டது. அன்று இரவு சென்னை செல்ல ரயில் டிக்கெட் எடுத்த வெளியூர் வாசிகளுக்கு 11 மணிக்கு ரயில். 9 மணி அளவில் கிளம்பி வாசலில் வந்து கோபுரம் நோக்கிக் கை கூப்பி னார் மடப் பெரியவர் திரும்பிப்பார்த்தால் எதிரே அந்த முஸ்லிம் அம்மாள். ‘சாமி, வரேன்னு சொன்னீங்களே’, என்றார். அப்போதுதான் அவர்களுக்கும் நினைவு வந்தது. ‘ஊருக்குக் கிளம்பிட்டீங்க போல. பயணம் தொடருங்க. சித்தே அஞ்சு நிமிஷம் திண்ணைலெ அமருங்க’, என்று சொல்லித் தன் கையில் கொண்டுவந்திருந்த ஒரு காகிதச் சுருளை எடுத்துத் திண்ணையில் பரப்பினார். ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பெரியவர் .அப்போது அவரே பேசினார். ‘சாமீ, நான் சின்ன புள்ளையா ஒரு 7–8 வயசு இருந்தப்ப எங்க வாப்பா வருஷம் தோறும் ‘மடத்துக் கிரையம்’ன்னு சொல்லி பத்து மூட்ட நெல்லு எடுத்து வெப்பாரு. அவுங்க வாப்பா காலத்துலே ஐயமாருங்க சில பேரு மடத்தும் பேர்ல இருந்த நஞ்சை நாலு ஏக்கரா நிலத்த எங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தாங்க. அப்பொலேர்ந்து வருஷம் தவறாம எங்க தாத்தாவும், வாப்பாவும் விளைச்சல்ல நாலுல ஒரு பங்கு மடத்துக்குக் கொடுப்பாங்க. எங்க புருஷங்ககாலத்துல அது மாறிப்போச்சு. இப்போ எனக்கு வயசானப்புறம் இது நினைப்பு வந்துது. ஆனாலும் அப்பிடியே உட்டுட்டேன். ரெண்டு மாசமா தூக்கத்துல சிங்கம் வந்து அறையுது. தூக்கமும் வரல்லே. ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். மடத்து வாசல்லெ சிங்கம் முகம் இருக்கற சாமி சிலை தெரிஞ்சுது. பொட்டுல அறஞ்ச மாதிரி இருந்தது. ‘என்னுது என்னுது’ன்னு சிங்கம் சொன்னது இது தான் போலன்னு உங்ககிட்டே அன்னிக்கி வந்தேன். ஆனாலும் பல பேர் இருந்தாங்க. அப்பிடியே போயிட்டேன். தேடிப் பார்த்ததுல, எங்க வாப்பாவோட பெட்டில இந்த பத்திரங்கள் கெடைச்சுது. இது என்னான்னு வக்கீல் ஐயர் கி்ட்டே கேட்டேன். அவுருதான் சொன்னாரு 100 வருஷம் முன்னாடி நடந்த கிரையம் பத்தி. அப்பவே உங்க கிட்டே குடுத்துடணும்னு நெனைச்சேன். பாருங்க, அப்பலேர்ந்து சொப்பனம் நின்னு போச்சு’, என்று கதறிக் கதறி அழுதார் அந்த அம்மாள். பத்திரங்கள் யாவையும் வெள்ளைக்கார அரசாங்கப் பத்திரக் காகிதங்கள். துரைசாமி ஐயங்கார் என்பவர் 1908-ம் வருஷம் ஜனாப் அப்துல் வஹாபுக்குக் குத்தகை கொடுத்த விபரம் இருந்தது. அவர் இந்தப் பாட்டியின் தாத்தா. சுமார் 40 வருடம் குத்தகை நெல் வந்துள்ளது. பின்னர் நின்றுவிட்டது. அஹோபில மடத்தின் வழிபடு தெய்வம் நரசிம்மப் பெருமாள் தன் சொத்தை கனவில் அந்த முஸ்லீம் மூதாட்டிக்கு உணர்த்தி மீட்டுள்ளார் என்று அங்குள்ள மடத்து சிப்பந்திகளுக்கு புரிந்து விட்டது ! இந்த முறை மடத்திலிருந்து ஒருவர் தேரழுந்தூர் சென்றபோது அந்த அம்மாளின் வீட்டைத்தேடிச் சென்றார். அவரது பேரனும் மனைவியும் இருந்தனர். அந்த அம்மாள் பத்திரங்களை ஒப்படைத் தவுடன் மிக நிம்மதியாக இருந்ததாகவும் பின்னர் ஆறு மாதங்கள் கழித்துக் காலமா னதாகவும் சொன்னார்கள். சுவற்றில் தெரிந்த படத்தில் அவரது முகம் சாந்தமாகத் தெரிந்தது. பெருமாள் சொத்து பொல்லாதது ........!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- குட்டிக் கதைகள்.
கெட்டவன் கருப்பு · Suivre Stsdeporno641h u93t3n8826622t883vo4,082b 01e:gcrmec26acg715g · ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம். அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார். அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க. அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க. அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர். கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம். இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் , "நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ.........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாடினாள் ஒரு பாட்டு .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலிலாலி லாலோ (3) லாலிலாலி லாலோ…ஓ.. என் மச்சான… மச்சான…ஆ… பெண் : மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே பெண் : குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே பெண் : வெள்ளிச்சரம் புன்னகையில் நான் அள்ளி வச்சேன் காணலியே நான் அள்ளி வச்சேன் காணலியே பெண் : ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன் மயிலாடும் கட்டில் தனியாக அவரை பார்த்தாதான் சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் பெண் : {பச்சை புள்ளை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க} (2) பெண் : அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள பெண் : கஸ்தூரி கலை மான்களே அவர கண்டாக்கா சொல்லுங்களேன் ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் பெண் : {கல்யாணம் பேசி கண்டாங்கிச் சேலை தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன் (2) பெண் : புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக பெண் : தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க பெண் : பூ போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன் எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்.......! --- மச்சான பார்த்தீங்களா ---- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.