Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. 2024 ன் பிரான்சின் அழகுராணி .......! 😍
  2. உலகின் சிறப்பான பாலங்களில் ஒன்று பிரான்சில் இருக்கின்றது.........நானும் சிலமுறை இந்தப் பாலத்தின் வழியாக சென்றிருக்கின்றேன்.......! 👍
  3. கருணைக்கிழங்கை இவ்வளவு பெரிதாக வெட்டி வறுத்து நான் பார்த்ததில்லை......அனால் நல்லா இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.......இப்பவெல்லாம் யூ டியூபில் காட்ட வேண்டும் என்பதற்காக கண்டபடி எல்லாம் செய்கிறார்களோ தெரியவில்லை.........! 😂
  4. நடனங்கள் ஒவ்வொன்றும் சும்மா அள்ளி எறியுது ........அருமை......! 👍
  5. வணக்கம் வாத்தியார்........! மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே குழலும் யாழிசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே கனவில் தோன்றி சிரித்து நான் காணும் இடமெங்கும் இருக்கின்றாய் கனியில் ரசமாய் இனித்து இனித்து என் கையில் கிடைக்காமல் மறைகின்றாய் மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ? தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க என் தலைவா உனக்கிது வேடிக்கையோ? தலைவா உனக்கிது வேடிக்கையோ.......! --- மலரும் வான் நிலவும் சிந்தும் ---
  6. குத்தாலம் அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா......! 😍
  7. Variety of images Lakshmi Venkatesan · · முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது. "இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்... நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம். நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் . இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் . நான் இறந்து விட்டால்... என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை. எனவே எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன். வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பகதிற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால்... தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்." இப்படிக்கு மீனாள் ராமசாமி. என்று எழுதி இருந்தது. சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர். தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டிருந்தது. 'யார் இந்த மீனாள் ராமசாமி? ' என்று அறிந்து கொள்ள காப்பக மேனேஜருக்கு, ஆவல் அதிகரித்து வந்தது. 'ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும்' என்று நினைத்தார். ஆனால், வேலைப் பளு காரணமாக முடியவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை... 'இன்று, கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார். அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. சின்ன கட்டிடம்... வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது. பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது. எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். "நீங்கள் தானே மீனாள் ராமசாமி?” என்று கேட்டார். “ஆமாம் தம்பி! நீங்கள் யார்? “ என்று கேட்டார். விவரங்களைச் சொன்னார். “அப்படியா தம்பி ரொம்ப சந்தோஷம்... உட்காருங்க. ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” என்று இருக்கையைக் காண்பித்தார். “ஒன்றும் வேண்டாம் தண்ணீர் மட்டும் கொடுங்கள்” தண்ணீர் கொடுத்தபடியே, “நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்... ஆரம்பித்தில், இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் . பிறகு இரண்டு, மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம். எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும். கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள். நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை... எனவே, அதிகம் செலவுகள் இல்லை. அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம். வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்... அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார். எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்” என்று விபரமாகச் சொல்லி முடித்தார். இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது. “இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். “சரிங்க ஐயா, உங்களைப் பார்க்க வந்தேன். வேறு விஷயம் இல்லை... கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார் மானேஜர். சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது . அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது . வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் “நான்கு கொடுங்கள் ஐந்து கொடுங்கள் " என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அங்கு கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லை. வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக் கொண்டார்கள். பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை. இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள். “கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே? யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “ என்று கேட்டார் மானேஜர். “இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் போனால் போகிறது. காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்” “இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்” என்று சொன்னார். மானேஜருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 'இப்படியும் மனிதர்களா?' என்று வியப்படைந்தார். மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார். மாதங்கள் போனது. கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை. 'என்ன விஷயம்?' என்று அவருக்குப் புரியவில்லை. காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள். மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள். எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மாள் மட்டும் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார். எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள். அதே கல்லாப்பெட்டி . எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள். சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்... மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை. உள்ளே நுழைந்த போது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள். மேனேஜருக்கு புரிந்து விட்டது. விசாரித்ததில்... அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம். அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம். இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி. “உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும் “என்று சொன்னார். “நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றார். “இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்து விட்டது. எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன். அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானே தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன். அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும். அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். “சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்” என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள். இப்போது அவர்களுக்குபுரிந்து விட்டது... *இந்த உலகம் எப்படி பட்டது * என்று... எதையும் பெறுவதை விட... *கொடுப்பதில் தான்... * *ஆனந்தம்,* *அமைதி,* *திருப்தி* *நிம்மதி* உள்ளது. இதை புரிந்து கொண்டால் நாமும் புத்திசாலி தான். நன்றி! Singaravelu Balasubramaniyan
  8. வணக்கம் வாத்தியார்.........! வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது கந்தன் முருகன் கை வேலைக் கொடுத்தான் கங்கை கொண்டவன் மான் தொலைக் கொடுத்தான் அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள் அல்லி மலர் போல் இந்த பிள்ளை பிறந்தான் வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது அள்ளி அணைத்தால் அன்பு வெள்ளம் பெருகும் அங்கம் முழுதும் தமிழ் சங்கம் முழங்கும் பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும் பிள்ளை சிரிப்பைக் கண்டு தெய்வம் வணங்கும்......! --- வாயார முத்தம் தந்து---
  9. ஏய் புள்ள ஏய் புள்ள எங்கே போறே .........! 😍
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி .....! 💐
  11. வணக்கம் வாத்தியார்.......! மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதடி ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல சந்தனப் பொட்டுக்கு மேலே கொஞ்சம் செந்துருக்கம் வெச்சதால இந்த மனசுக்கு வேல அது எட்டிப் பறக்குது மேல சின்ன இடுப்புல வண்ண உடுப்புல எண்ணம் தவிக்குது என்ன சொல்ல சின்ன இடுப்புல வண்ண உடுப்புல எண்ணம் தவிக்குது என்ன சொல்ல மன்மதன் அம்பையும் விட்டுப் புட்டான் வந்தென்ன தொட்டுப் புட்டான் இந்திரன் கண்ணால சுட்டுப் புட்டான் இன்பத்தக் கொட்டிப் புட்டான் சொந்தமா வந்த சோடிய தேடுது சொல்லிக் குடுக்குது அள்ளிக் குடிக்குது அந்திப் பொழுதுக்கு மேலே அந்த ஆத்தங்கரப் பக்கம் வாரேன் சொந்தம் இருப்பதனாலே என் சொத்து சொகங்கள தாரேன் சுந்தரியே கொடி முந்திரியே உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன் சுந்தரியே கொடி முந்திரியே உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன் சொல்லி பரிசத்தப் போடு மச்சான் தோப்புக்கு வரேன் மச்சான் வெள்ளியில மெட்டி போடு மச்சான் வீட்டுக்கு வரேன் மச்சான் வெக்கத்தால் இவ வேகமும் தாகமும் வேடிக்க காட்டுது வாடிக்கை ஆகுது.....! ---மல்லி மல்லி செண்டு மல்லி ---
  12. தேன் உண்ணும் வண்டு ......! 😍
  13. அளவான குடும்பம் அழகான குடும்பம்........! 😂
  14. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.......நிஜமாக இப்பதான் வெளியே போய் விட்டு வந்தேன் இந்தப் பக்கத்தை பார்த்ததும் என் காலைப் பார்க்கிறேன் கால்கள் ஒன்றின்மேல் ஒன்றாகத்தான் இருக்கின்றது.......! 😂
  15. வணக்கம் வாத்தியார்.........! அமைதி புறாவே அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கின்றேன் உன்னை காலங்களாலே தென்றல் வருக புயலே வர வேண்டாம் மேகங்களாலே மழையே வருக வெள்ளம் வர வேண்டாம் வீடுகள் தோறும் ஒளியே வருக இருளே வர வேண்டாம் நாடுகள் தோறும் உறவே வருக பகையே வர வேண்டாம் சமாதானமே சமாதானமே தழுவுகின்றேன் உன்னை தர்ம தேவனே தர்ம தேவனே சரணடைந்தேன் உன்னை புத்தரின் வழியில் அசோகன் சேவை புரிந்தது எதற்காக புன்னகை முகமே தேவனின் வீடென சொன்னது எதற்காக சத்திய நெறியை தாரணியெங்கும் தந்தது எதற்காக சமாதானமாம் சமாதானமாம் தாயே உனக்காக........! ---அமைதி புறாவே அமைதி புறாவே ---
  16. பால் வண்ணம் பருவம் கண்டு .........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.