Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. சிறியர் நான் படத்தை இணைத்து விட்டு கீழே எழுதும்போது எனது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன், அதுக்கு பச்சை மட்டை சரிவராது, கருக்கு மட்டையாலதான் வாங்க வேண்டி இருக்கும் என்று விட்டிட்டன்.......! 😂
  2. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(7). கடை வழமைபோல் நடந்து கொண்டிருக்கு. கடைச் சாவி இப்போதும் பிரேமாவிடம்தான் இருக்குது. சுமதி பின்னேரம் வரும்போது அநேகமாக பிரேமா ரேணுகா கடையில் இருக்க மாட்டார்கள். மிருதுளாவும் கபிரியேலும் வேலை செய்துகொண்டு இருப்பார்கள். பின் மிருதுளாவும் அன்றைய கணக்கு வழக்குகளை சுமத்தியிடம் விபரித்து விட்டு போவது வழக்கம். கபிரியேலும் சுமதியும் அதன்பின் 20:00 மணிவரை வேலை செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு செல்வார்கள். இரு வாரங்களின் பின் சித்தப்பா அவள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஆதாரங்களுடன் கூறிய தகவல்களைப் பார்த்த போது சுமதிக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. சித்தப்பா கடையில் நடப்பனவற்றை தன்னிடமிருந்த சிறிய ரகசிய கமராவில் பதிவு செய்து வைத்திருந்தார். அவர் தந்த தகவல்கள் படி.........! --- கடை காலை 09:00 / 09:30 மணிக்கு மேல்தான் தினமும் பிரேமா வந்து கடை திறக்கிறாள். அதுவரை ரோகிணி, மிருதுளா வீதியில் அல்லது தேநீர் கடைகளில் இருக்கிறார்கள். பல வாடிக்கையாளர்கள் கையில் பார்சல்களுடன் வந்து பார்த்து விட்டு வேறு கடைகளுக்கு செல்கிறார்கள். --- பின் அவர்கள் மூவரும் தேநீர் பிஸ்கட் சாப்பிட்டு கதைத்து வேலை தொடங்க மேலும் அரை மணிக்கு மேல் ஆகிவிடும். --- அப்போது வரும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் கதைத்து ஓடர்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதில் ஒரு குறையுமில்லை. --- அப்பப்ப சில நாட்களில் மட்டும் ரோகிணி தலையில் விக்ஸ் போன்ற ஓயின்மெண்ட் பூசிக்கொண்டு கீழ் அறைக்குப் போகிறாள். மிஷினில் இருந்து வேலை செய்வது குறைவு. --- மிருதுளா எப்போதும் வயர்லெஸ் போனில் கதைத்தபடிதான் அல்லது பாட்டு கேட்க்கிறாளோ தெரியவில்லை .....வேலை செய்கிறாள். தினமும் மாலையில் கடைக்கு வெளியே சென்று ஒரு இளைஞனுடன் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருகிறாள். கடந்த சில நாட்களில் அவர்கள் இருவரும் வீதியால் போகிறவர்கள் திரும்பிப் பார்க்குமளவு நிறைய சண்டை பிடிக்கிறார்கள். ---காலையில் 11:30 மணிக்கெல்லாம் பிரேமா வெளியே போய் விடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து கவனித்ததில் அவள் நேராக ஒரு சிறுவர் பாடசாலைக்கு சென்று இரண்டு சிறு பிள்ளைகளை வீட்டிற்கு கூட்டி செல்வதும் பின் 13:30 க்கு மீண்டும் அவர்களை பாடசாலையில் விட்டுவிட்டு 14:30 மணியளவில் கடைக்கு வருகிறாள்.மாலை 16:45 க்கு மீண்டும் வீட்டுக்கு செல்கிறாள். --- ரோகிணியும் மிருதுளாவும் 13:00 மணிக்கு கபிரியேல் வந்ததும் தாம் கொண்டுவந்த உணவையோ அல்லது கடையிலோ சாப்பிடுவார்கள். --- கபிரியேல் மட்டும் தினமும் சரியாக 13:00 மணிக்கு வேலைக்கு வருகிறான்.ஒரு நிமிடமும் சும்மா இருப்பதில்லை.நன்றாக வேலை செய்கிறான். --- கடையில் மிருதுளாதான் ஓடர் துணிகளை வெட்டுகிறாள். கபிரியேலும் ரோகிணியும் அவற்றை தைக்கிறார்கள். --- ஆட்கள் பொருட்கள் வாங்க வரும்போது ரோகிணி கீழ் அறையில் இருந்து வந்து வியாபாரம் செய்துவிட்டு போகிறாள். --- பிரேமாவுக்கு இன்னும் மிஷின்களை சரியாக செட் செய்து தைக்கத் தெரியவில்லை.மிருதுளாவோ ரோகிணியோதான் அவளுக்கு உதவி செய்கிறார்கள். மேலும் அவள் தனது வீட்டில் இருந்து துணிகளை இங்கு கொண்டுவந்து தைத்துக் கொண்டு போவதுபோல் தெரிகிறது. --- பின் மாலை 17:00 மணிக்கு நீ வந்து விடுகிறாய். நீயும் கபிரியேலும் 20:00 வரை வேலை செய்து பின் கடையை பூட்டி விட்டு செல்கிறீர்கள். --- மேலும் கபிரியேல் பகலில் என்ன செய்கிறான் என்று நான் கவனித்ததில் அவன் விரைவில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விடுவான் போல்தான் தெரிகிறது.நன்கு நாட்களுக்கு முன் அவன் பரிசுக்கு வெளியே இருக்கும் ஒரு லொறிக் கம்பெனியில் ஒரு மிக நீளமான (long vehicle) லொறியை அவர்களுக்கு ஓடிக் காட்டியதைப் பார்த்தேன். அவனிலும் பிழையில்லை காரணம் இளம் பொடியள் இப்படி ஒரு அறைக்குள் இருந்து வேலை செய்வது மூச்சு முட்டுறது மாதிரி இருக்கும் அவங்களுக்கு. அவரிடமிருந்து அவ்வளவு தகவல்களையும் வீடியோக்களையும் தனது போனுக்கு மாற்றிவிட்டு எழும்ப சுரேந்தர் வந்து வாங்கோ மாமா, இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ. --- வேண்டாம் மருமோன் அங்க பிரிட்ஸில நேற்றையான் மீன் குழம்பு இருக்கு நான் போறன். --- அதெல்லாம் நாளைக்கு சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு ஒரு கிளாசில் சிகப்பி நிற வைனை குடுத்து விட்டு இது கையாக் (gaillac) வைன் மாமா நல்லாய் இருக்கும். நான் மாசிக் கருவாட்டு சாம்பலுடன் பிட்டும் மற்றும் இறால் குழம்பும் வைத்திருக்கிறன் சூப்பராய் இருக்கும். --- இஞ்சேருங்கோ, இரவாச்சுது பிறகு மாமா தனியா வீட்டுக்கு போகவேனும், கணக்க ஒண்டும் எடுக்கிறேல்ல கொஞ்சமா எடுத்துட்டு போய் சாப்பிடுங்கோ இரண்டு பேரும் என்று சொல்லி விட்டு சுமதி போகிறாள். இன்னும் தைப்பார்கள்.........! 🎀
  3. கந்தையர் சும்மா அவசரப் படக்கூடாது, அவ இப்பதானே கடை திறந்து பிரச்சினைகளை சந்திக்கிறா........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே......! 😁
  4. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ஆண் : பூஞ்சோலையில் வாடை காற்றும் வாட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான் என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்......! --- நிலாவே வா செல்லாதே வா---
  5. எழுதினங்கள் ஒரு வாரம்.......! 💞
  6. என்ன விசுகர் சரியான இடம் பார்த்து m .r ராதா சொன்னதெல்லாம் சொல்லுறியள்......இனிமேல் என்னை தம்பி என்று கூப்பிடவேணும் சரியா......! 😂
  7. ஓம்.....அவையள் தான் தைக்கினம்........நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஏராளன் ........! 👍 உங்களின்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.......கொஞ்சம் ஊறுகாய் உணவுக்கு மட்டுமல்ல கதைக்கும் தேவையாய் இருக்கிறது.......! 😁 என் நிலைமை உங்களுக்கென்ன தெரியும், மனுசியைக் கூட்டிக் கொண்டு தையல் கடையெல்லாம் ஏறி இறங்கியதில் வந்த அனுபவம்தான்.......! 😂
  8. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(6). கடந்த இரண்டரை மாதங்களாக கடை நல்ல வருமானத்துடன் நடந்து கொண்டிருக்கு. சுமதியும் காலையில் தனது வேலைக்கு போவதும், மாலையில் கடைக்கு வந்து வேலையும் செய்து, கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக் கொண்டு போவதும் வழமை. கடையில் பிரேமா, ரோகிணி, மிருதுளா மற்றும் கபிரியேல் வேலை செய்கிறார்கள். மூன்று பெண்களும் காலை 8:30 க்கு வேலைக்கு வந்து மாலை 5:00 மணிக்கு கிளம்பி விடுவார்கள்.கபிரியேல் மட்டும் மதியம் 13:00 மணிக்கு வந்து 20: 00 மணி வரை இருந்து சுமதியுடன் சேர்ந்து வேலை செய்து விட்டு கடையை பூட்டிக்கொண்டு போவார்கள். சுமதி அப்படி அவர்களின் வேலை நேரத்தை அமைத்திருந்தாள். மிருதுளாவும், சுமதியும் ஆடைகள் வெட்டித் தைப்பதைப் பார்த்து பார்த்து கபிரியேலும் தைக்கப் பழகியிருந்தான்.அதற்கு அவன்முன்பு தோல் பக்டரியில் வேலை செய்ததும் ஒரு காரணம். லா சப்பலில் செவ்வாயில் இருந்து ஞாயிறுவரை கடைகள் திறந்திருக்கும். திங்கள் பெரும்பாலான கடைகள் பூட்டியிருக்கும். அன்று செவ்வாய் கிழமை. பிரேமாவிடம் ஒரு வேலை சொல்வதற்காக சுமதியும் காலை 8:40 க்கு கடைக்குப் போன் செய்கிறாள். யாரும் போன் எடுக்கவில்லை. என்ன பார்ப்பம் என்று காரில் 9:00 மணிக்கு வந்திருந்தாள். கடை பூட்டி இருக்குது. திறப்புகளில் ஒரு செட் பிரேமாவிடம் இருக்கும். பிரேமாதான் காலையில் எட்டரைக்கு கடை திறப்பது.அவள் இன்னும் வரவில்லை. தன்னிடம் இருந்த சாவியைப் போட்டு கடையை திறந்து விட்டு வேலை செய்யும்போது 9:15 க்கு மிருதுளாவும் ரோகிணியும் வருகின்றார்கள். --- என்ன மிருதுளா இப்ப வாறீங்கள்.நான் எட்டரைக்கெல்லோ கடை திறக்க வேண்டும் என்று சொன்னனான். --- இல்லை அக்கா நாங்கள் எட்டரைக்கு வந்திடுவோம்.ஆனால் பிரேமாவிடம்தான் சாவி இருக்கு. அவ 9:30 போல்தான் வந்து கடையை திறக்கிறவ. --- இது எவ்வளவு நாளா நடக்குது.ஏன் நீங்கள் இதை எனக்கு முன்பே சொல்லவில்லை. சனி,ஞாயிறு நான் காலையில் கடைக்கு வரும்போது நீங்கள் மூவரும் எட்டரைக்கே வருகிறீர்கள் தானே. --- சிறிது நேரம் இருவரும் பேசாமல் நிக்க ரோகிணி முன்வந்து, அது வந்து அக்கா கிழமை நாட்களில் அவ ஒன்பதரைக்குத்தான் வாறவ. ஏனென்று தெரியாது. --- அப்ப மத்தியானம் என்ன செய்கிறனீங்கள். --- மத்தியானமும் அவ 11:30 க்கு வெளியே போவா பின் 14:30 க்குத்தான் வாறவ. நானும் மிருதுளாவும் இங்கேயே சாப்பிட்டுட்டு தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். 13:00 மணிக்கு கபிரியேலும் வந்திடுவான். --- சரி....அவனின் நேர அட்டவனை 13:00 லிருந்து 20:00 வரை என்று சொல்லி விட்டு சரி நீங்கள் போய் வேலை செய்யுங்கோ. அவர்கள் சென்று தங்களது மிஷின்களில் அமர்ந்ததும் பிரேமா கையில் ஒரு பெரிய பையுடன் அசைந்து அசைந்து வருகிறாள். தூரத்தில் வரும்போதே கடை திறந்திருப்பதைக் கண்டு இன்னும் வேகமாக அரக்கப் பரக்க ஓடி வருகிறாள். கடைக்குள் வந்த பிரேமா எதிர்பாராமல் அங்கு சுமதியை கண்டதும் திகைத்துப் போய் விட்டாள். சுமதியும் எதுவும் தெரியாததுபோல் இருக்க அவள் சென்று தனது மிஷினில் அமர்ந்து கொள்கிறாள். சிறிது நேரம் கழித்து சுமதி பிரேமாவிடம் என்ன பிரேமா இவ்வளவு தாமதமாக வாறீங்கள். --- அது சுமதி திடீரென்று வீட்டில் விருந்தாளிகள் வந்திட்டினம், நேற்றிரவு படுக்க நேரமாயிட்டுது. அதுதான் வரத் தாமதமாயிட்டுது. --- நீங்கள் போன் செய்திருந்தால் நான் வந்து திறந்திருப்பேன். அல்லது மிருதுளாவிடம் திறப்பைக் கொடுத்திருக்கலாம். --- நான் அதை யோசிக்கேல்ல சுமதி. --- கடை திறந்து இந்த இரண்டரை மாதத்தில் நீங்களும் ரோகிணியும் கன விடுமுறைகள் எடுத்திருக்கிறீங்கள். பத்தாதற்கு இடையிலயும் சோற் லீவுகளும் எடுக்கிறீங்கள். இப்படியென்றால் நான் என்னென்று கடையை நடத்துவது.உங்களை நம்பித்தானே நான் இந்தக் கடையை விட்டுட்டு போறனான்.சரி வேலையை செய்யுங்கோ. எனக்கு வேலை இருக்கு நான் போட்டுவாறன். வெளியே போகிறாள்.....! வெளியே வந்த சுமதி தனது சித்தப்பா முறையான ஒருவரிடம் போகிறாள். அவர் இப்போது பென்ஷன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.முன்பு ஒரு சொசைட்டியில் இரவுக் காவலாளியாக ஒரு பெரிய நாயும் வைத்துக்கொண்டு வேலை பார்த்தவர். அந்த நிர்வாகம் அவருக்கும் நாய்க்கும் தனித்த தனியாக சம்பளம் கொடுத்து வந்தது. அவர் ஒய்வு பெற்ற சில மாதங்களில் அந்த நாயும் வயதாகி இறந்து விட்டது. --- என்ன பிள்ளை திடீரென்று உனக்கு சித்தப்பாவின் ஞாபகம் வந்திருக்கு. --- அதொன்றுமில்லை சித்தப்பா நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். --- என்ன உதவி, என்ன செய்யவேணும் சொல்லு. --- நான் கடை திறந்தது உங்களுக்கு தெரியும்தானே,அங்கு நாலுபேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைக்கு எந்தெந்த நேரம் வருகினம், எப்பப்ப வெளியே போக்கினம் என்றெல்லாம் ஒரு இரண்டு கிழமை வேவு பார்த்து எனக்கு அப்பப்ப தெரிவிக்க வேண்டும். நீங்கள் கடைப்பக்கம் வந்தாலும் என்னை தெரிந்தமாதிரி காட்டிக் கொள்ளக் கூடாது. சரியா ....! --- அதுக்கென்ன துப்பறிய சொல்கிறாய் செய்திட்டால் போச்சு. --- நான் சித்தப்பா, என்ர வேலைக்கு காலம போயிட்டு பின்னேரம்தான் கடைக்கு வாறானான். வந்து பார்த்தால் அங்கு சரியாக வேலை நடப்பதில்லை போல் தெரிகிறது.அதுதான் உங்களிடம் வந்தனான். --- ஓம்.....எனக்கு விளங்குது பிள்ளை என்று சொல்லிவிட்டு அவர் குடுத்த ஜூசையும் குடித்து விட்டு சுமதி வீட்டுக்கு போகிறாள்..........! இன்னும் தைப்பார்கள்..........! 🎽
  9. வீட்டுக்காரர் பாவம், கொஞ்சம் சபல புத்தி, இனி வருவாரோ தெரியவில்லை......! 😂 இது போன்ற ஊக்கங்கள் கதையை தொடர மகிழ்சியாக இருக்கும்.....நன்றி கு. சா.....! 😂 வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நுணா .........! 👍 சனியை குரு பார்த்தால் அவர் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்......குரு மறைந்ததினால் அவர் நிறைய குத்தாட்டம் போடத்தான் செய்வார்.........!😂
  10. வணக்கம் வாத்தியார்.........! கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா புண்னான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் என் மின்னல் தோன்றுமா தண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும் கற்கண்டாய் மாறுமா அலை கடலின் நடுவே அலைந்திடவா தனியே படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே... புதை மணலில் வீழ்ந்து புதைந்திடவே இருந்தேன் குறு நகையை எரிந்தே மீட்டாய் என்னை விண்ணோடும் மண்ணோடும் வாடும் பெரும் ஊஞ்சல் மணதோரம் கண்பட்டு நூல் விட்டு போகும் என ஏதோ பயம் கூடும் மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன் இந்த உற்சாகம் போதும் சாக தோன்றும் இதே வினாடி நீ தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும் போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி நான் காவல் காக்கணும் எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில் பேசணும்..........! ---கண்ணான கண்ணே ---
  11. வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்.......! 😍
  12. நுணாவிலான் அகஸ்தியன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........! 💐
  13. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(5). அன்று "லா சப்பலில்" சுரேந்தர் சுமதியின் தையல்கடை "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" அதிக ஆடம்பரமின்றி எளிமையாக திறப்புவிழா நடந்தேறியது. அங்கிருக்கும் அக்கம் பக்கத்து கடை முதலாளிமார் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் வந்திருந்து சிறப்பித்திருந்தார்கள்.எல்லோருக்கும் சிற்றூண்டிகளுடன் குளிர்பானங்களும் வழங்கப் பட்டன. கண்ணாடி அலுமாரிகள் நிறைய துணிகள்,புடவைகள் இத்யாதியுடன் நவீனமான நான்கு தையல் மெஷின்களும் கொலுவீற்றிருந்தன.சுமதி சுரேந்தர் ,ரோகிணி,மிருதுளா, பிரேமா எல்லோரும் விருந்தாளிகளை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் குறும்பாக அக்காமாரே மத்தியானம் சாப்பாடும் இருக்குதோ என்று கேட்க ரோகிணி முன்வந்து ஓமண்ணை பக்கத்தில கோயிலில் அன்னதானம் நடக்குது வயிறு முட்ட சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். அன்றுமட்டும் சுமதிக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் நிறைய சேர்ந்திருந்தன. காரணம் அவள் எல்லோர் வீட்டு வைபவங்களுக்கு போய் தாராளமாய் மொய் வைத்துவிட்டு வருவாள். அதுகள் எல்லாம் இப்ப வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.அவையெல்லாம் தனியாக பிரேமாவின் பாதுகாப்பில் இருந்தன. ஆரம்பத்தில் கடை வேலைகளைக் கவனிப்பதற்காக சுமதி ஒருமாதம் விடுப்பு எடுத்திருந்தாள். அடுத்தநாள் சுமதியின் போனில் துறைமுகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வருகின்றது. அதில் அவள் இந்தியாவில் இருந்து தருவித்த சில பெட்டிகள் வந்திருப்பதாகவும் அவற்றை வந்து பெற்றுக்கொள்ளும் படியும் குறிப்பிட்டிருக்கின்றது. அந்தப் பெட்டிகளுக்குள்தான் நிறைய துணிமணிகள், றோல்கோல்டு ஆபரணங்கள்,கைக்கடிகாரங்கள் மற்றும் தையல்களுக்கு தேவையான ஊசிகள்,கிளிப்புகள் லொட்டு லொசுக்குகள் எல்லாம் இருக்கின்றன.அவற்றை எடுப்பதற்காக ஒன்லைனில் ஒரு வானை ஒழுங்கு செய்துகொண்டு பாரிஸில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும்" le havre"என்னுமிடத்துக்கு பயணப் படுகிறாள். வானை ஒட்டிக்கொண்டு வந்தவர் ஒரு இளைஞன்.நல்ல களையான முகம் முகத்தில் இருக்கும் குறுந்தாடி மிகவும் அழகாய் இருக்கின்றது. (இந்த சுரேனிடம் சொல்லுறனான் நீங்கள் ஒரு தாடி வையுங்கோப்பா உங்களுக்கு எடுப்பா இருக்கும் என்று சொன்னால் மனுஷன் கேட்குதே இல்லை. இந்தப் பொடியனுக்கு நல்ல வடிவாயிருக்கு என்று நினைத்துக் கொள்கிறாள்) இருவரும் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டு வருகிறார்கள். வெளியே மென்மையான மழைத்தூறல். வானின் வைப்பர் 10 செக்கண்டுக்கு ஒருமுறை அசைந்து கொண்டிருக்கு. வானுக்குள் A / C யின் கதகதப்பு இதமாய் இருக்கிறது. --- என்ன இன்று மழை பெய்து கொண்டிருக்கும் போல ....(இங்கு அறிமுகம் இல்லாதவருடன் பேச்சு வரும்பொழுது முதல்ல காலநிலை பற்றி கதைப்பினம்). --- பெரிசாய் மழை வராது, நாள் முழுதும் இப்படித்தான் தூறிக்கொண்டிருக்கும். --- என்பெயர் சுமதி......உங்களை எப்படி அழைப்பது..... ---என் பெயர் கபிரியேல் ஜான்சன் .....ஆனால் முதற்பெயர் கபிரியேல் மேடம்..... ---மேடம் அவசியமில்லை நீ சுமதி என்றே அழைக்கலாம்.....கபிரியேல் நீ கனகாலமாக இங்கு வேலை செய்கிறாயா .....(இங்கு பெரும்பாலும் வயது வித்தியாசமின்றி ஒருமையிலும் பெயர் சொல்லியும் அழைப்பது வழமை). --- ஓம் சுமதி, சுமதி அழகான பெயர்.......மூன்று வருடங்கள் இருக்கும். --- உனக்கு இந்த வேலை நல்லா பிடித்திருக்குது போல ரசித்து வண்டி ஓட்டுவதுபோல் தெரிகிறது. --- ரொம்பப் பிடிக்கும் சுமதி ஆனால் இந்த வாரத்துடன் எனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இனி வேறு வேலை தேட வேண்டும்.... --- எதற்காக வேலையை விடுகிறாய். --- எங்கள் கொம்பனியை வேறொரு கொம்பனி வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் கொம்பனி பாரிசில் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது அதுதான் சிலரை சம்பளத்துடன் நிப்பாட்டுகிறார்கள். --- இதற்கு முன் நீ என்ன வேலை செய்தனி. --- நான் முன்பு ஒரு தோல் ஆடைகள் தைக்கும் பக்டரியில் வேலை செய்தேன். சில நாட்களில் அந்த தோல் சுவாசம் எனக்கு அலர்ஜி ஆகி விட்டது.அதனால் அதை விட்டுட்டு இந்த வேலையில் சேர்ந்தேன். --- அப்படியா.....அதற்குள் வானும் அவர்களது பொதி இருக்கும் களஞ்சிய அறைக்கு வந்து விட்டிருந்தது. அங்கிருந்த அவர்களின் பார்சல்கள், பெட்டிகள் எல்லாம் எடுத்து வானில் ஏற்றிவிட்டு அருகே இருந்த கடற்கரையில் ஒரு நல்ல ரெஸ்டூரன்ரில் போய் மதிய உணவை சாப்பிட்டபின் பில் குடுக்கப் போன காபிரியேல்லை சுமதி தடுத்து தானே பணமும் டிப்ஸும் குடுக்கிறாள். சிறிது ஓய்வெடுத்தபின் இருவரும் பரிசுக்கு திரும்பி வருகிறார்கள். ஏன் சுமதி நீங்கள் இவ்வளவு பொருட்கள் இறக்குமதி செய்திருக்கிறீர்கள் ஏதாவது ஒன்லைனில் விற்பனை செய்கிறீர்களா...... --- இல்லை கபிரியேல்,நான் சமீபத்தில்தான் லா சப்பலில் ஒரு தையற்கடை திறந்திருக்கிறேன்.அதற்குத்தான் இவையெல்லாம். இனியும் மலேசியா சிங்கப்பூரில் இருந்தெல்லாம் பொருட்கள் இறக்குமதி செய்ய வேண்டும். ---வெறும் தையற்கடை மட்டுமா. --- தையற்கடையுடன் டெக்ஸ்ட்டைலும். இப்போது நாங்கள் அங்குதான் போகிறோம், அப்போது நீ பார்க்கலாம். மேலும் நீ விரும்பினால் கொஞ்ச நாள் எனது கடைக்கு வந்து வேலை செய்யலாம். பின்பு உனக்குப் பிடித்த வேலை கிடைத்ததும் தாராளமாக நீ விலகிச் செல்லலாம். --- ஓ.....நீங்கள் இவ்விதம் சொன்னதுக்கு நன்றி சுமதி, ஆனால் நான் யோசித்து பதில் சொல்கிறேன். இன்னும் தைப்பார்கள்......! 🥽
  14. ஐயன் வள்ளுவர் கன்யாகுமரி......! 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.