வணக்கம் வாத்தியார்.......!
தேவன் கோவில் கனியும் மனமும்
தேவி என்னிடம் தந்தாயோ
ஆவி கலந்து கோவில் எடுக்க
அழகுச் சிலையென வந்தாயோ
என்னை அழைக்கும் உந்தன் சன்னதி
தன்னைக் கொடுத்தால் நிம்மதி
கேள்வி இங்கே மௌனம் அங்கே
கிள்ளை மொழிகள் போனதெங்கே .
அன்பே அமுதா, அன்பே - நீ பால் அமுதா, சுவை தேன் அமுதா - இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா - உந்தன் சொல்லமுதா, இதழ் சுவை அமுதா, - கொஞ்சம் நில் அமுதா, அதை சொல் அமுதா.....!
கண்கள் என்னும் கனிந்த திராட்சை
கன்னி என்றுனைச் சொல்லாதோ
கன்னம் இரண்டில் மின்னும் அழகு
காதல் மயக்கம் கொள்ளாதோ
வெள்ளி நிலவை பாதி பிளந்து
அள்ளி அணிந்த குங்குமம்
போனதெங்கே எங்குமில்லை
என்றும் இருக்கும் என்னிடம் ........!
--- அன்பே அமுதா, அன்பே ---