Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. நல்ல பாடல்கள் அவரது குரல்வளம் நன்றாக இருக்கு........! 👍
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்.....உங்களின் வழமையான பொழிப்பா எடுத்து வர்ணம் தீட்டிய கருத்துக்கள்தான் பிடிக்கும்.... 😁 இப்போதெல்லாம் கடைசி சீட்டை காண்பதே அரிது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோஷான் -சே.......! 😂 வாசியுங்கள் சகோதரி, உங்களின் ஊக்கம்தான் என்னையும் இங்கு கதையென்று எதோ ஒன்றை எழுத வைக்கின்றது......நன்றி தாயே......! 😁
  3. இந்தப் பூனை பால் குடிக்காது ஆனால் புறா பிடிக்கும்........! 😎
  4. அருமை அற்புதம், ராகத்தில் கூட பிசிறு இல்லை ......நீ போய் அந்த முதலாவது கதிரையில் அமரலாம்......! 🙏
  5. இரண்டு சிகரங்கள்.........! 👍
  6. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(4). பிறிதொருநாள் சுமதி வெளியில் இருந்து தனது வீட்டுக்குள் வரும் போது அங்கு அவள் கணவன் சுரேந்தருடன் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் கதைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.அவளும் அவர்கள் தனது கணவனின் நண்பர்கள் என நினைத்துக் கொண்டு அவர்களுக்கு bonjour (வணக்கம்) சொல்கிறாள்.திரும்பி அவள் உள்ளே போக எத்தனிக்கையில் சுரேந்தர் அவளை அழைத்து இவர் எனது வேலையிடத்து சக நண்பர்.எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இந்தப் பெண் மிருதுளா இவரது மருமகள் என்று சொல்ல அவர்களும் சுமதிக்கு bonjour சொல்கின்றனர். தொடர்ந்து இவாவும் இங்கு தையல் வகுப்புகளுக்கு போயிருக்கிறா. மற்றும் புடவைக் கடைகளில் விற்பனைப் பகுதியில் வேலைசெய்த அனுபவமும் இருக்கு என்று சொல்ல சுமதியும் மிருதுளாவைப் பார்க்கிறாள். அவள் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறாள். வயதும் ஓரு இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். சரளமாக பிரெஞ்சும் கதைக்கிறாள்.......அவர்களும் இவர்களின் கடையில் வேலை கேட்டுத்தான் வந்திருந்தார்கள். மிருதுளாவுடன் கதைத்த சிறிது நேரத்திலேயே அவள் கடையை நிர்வகிக்கக் கூடிய ஆளுமையான பெண் என்று சுமதி புரிந்து கொள்கிறாள். சுமதி ஆண்களைப் பார்த்து நீங்கள் சற்று நேரம் கதைத்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு, மிருதுளாவைக் கூட்டிக் கொண்டு தான் தைக்கும் மிசின் உள்ள அறைக்குப் போகிறாள்.அங்கு அவள் ஒரு ப்ளவுஸ் துணியையும் அதை கத்தரித்து தைக்க வேண்டிய அளவுகளையும் குடுத்து இதை இப்போது உன்னால் வெட்டித் தைக்க முடியுமா என்று கேட்க, மிருதுளாவும் ஓம்....டிசைனை சொல்லுங்கள் என்று எதுவித பதட்டமுமின்றி சொல்கிறாள். உடனே சுமதி அவளிடம் இது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியுடையது,ஒரு நாற்பது வயதிருக்கும். அளவுகளைப் பார்த்தாலே உனக்குப் புரியும். அவவுக்கு கொஞ்சம் பெரிய மார்புகள். நார்மலா சிறிது கீழிறங்கி இருக்கும். அதனால் ப்ளவுசில் அவை எடுப்பாக இருப்பதுபோல் "கப்" வைத்து தைக்க வேண்டும். அவவுக்கு இடுப்பிலும் சிறிது சதை போட்டிருக்கு, அதற்கேற்றாற் போல் கீழ்ப்பட்டி 5 செ.மீ அகலமாயும் இருக்கட்டும். மற்றது பின்பக்கம் பிரா லேஸ் மட்டத்துக்கு ஓப்பனாக இருக்கட்டும். கழுத்தடியில் குஞ்சம் வைத்து ஒரு நாடா தைத்து விடு. கவனம் இது அவ நாளைக்கு ஒரு திருமணத்துக்கு போடுவதற்காக கொண்டு வந்து தந்தவ. நல்ல ரிச் லூக்கா இருக்க வேண்டும். --- நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தடித்த துணியில் உள்ளே லைனிங் வைத்து "கப்" எடுப்பாக இருக்கும்படி தைக்க வேண்டும். முக்கியமான இடங்களில் "ஷி துரூ" வாகவும் இருக்க வேண்டும். ..... ஓம் அப்படித்தான், லைனிங் துண்டும் மேசையில் இருக்கு, நீங்கள் வேலை செய்யுங்கோ, நான் போய் முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று கிளம்பும் பொழுது மிருதுளாவும் அந்த சில்க் துணிக்கேற்றவாறு மிசின் ஊசி மற்றும் பொபின் இலக்கங்களை சரிசெய்கிறாள். அதை பார்த்த சுமதியும் திருப்தியுடன் ம்......இவளிடம் கொஞ்சம் விசயம் இருக்கு என்று நினைத்துக் கொண்டு கதவைச்சாத்தி விட்டு போகிறாள்......! சற்று நேரத்தின் பின் சுமதி தன்னை சிறிது அலங்கரித்துக் கொண்டு ட்ரேயில் நான்கு கோப்பியும் சீனிக்கட்டிகளும் சிறிய கரண்டிகளுடனும் வந்து ஆண்களிடம் இரண்டைக் குடுத்து விட்டு அறைக்குள் சென்று மிருதுளாவுக்கும் கோப்பியை வைக்கும் போது அவளும் அந்த ப்ளவுசை தைத்து முடித்து அங்கிருந்த பொம்மைக்கு அதை அணிவித்து பினிஷிங் வேலையை செய்து கொண்டிருந்தாள். சுமதிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. தான் சொன்னதை அப்படியே புரிந்து கொண்டு சிறப்பாக வேலை செய்திருந்தாள். மேலும் தன கற்பனையையும் செலுத்தி தேவையான இடங்களில் பொன் நிற லேஸ்சும் சின்ன முத்துக்களும் தைத்திருந்தாள். பின் இருவரும் கோப்பியை அருந்திவிட்டு கதைத்துக் கொண்டு ஹாலுக்கு வருகின்றார்கள்.......! இன்னும் தைப்பார்கள்.........! 🦺
  7. ஆஹா.......உங்களைப் புரிந்து கொள்ளுமளவுக்கு அவன் புத்திசாலியாகி விட்டான். மிச்சத்தையும் எழுதவும்.அவர்களையும் பார்க்க ஆவல்......! 😂
  8. தொடருங்கள் சகோதரி.......படங்களும் அழகாக இருக்கின்றன.......! 😁
  9. தொடருங்கள் ஜஸ்டின்........! அன்று அழிவின் எல்லையில் இருந்த யூதர்கள்தான் இன்று உலகை ஆட்டிப் படைக்கின்றனர்.....அன்றைய தமது நிலையை மறந்து இன்று இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு எம்மினத்தை அழிக்கவும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.......!
  10. வணக்கம் வாத்தியார்........! பெண் : { ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே } (2) பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே பெண் : ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே பெண் : ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே பெண் : மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா பெண் : நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான் பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன் இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சான்......! --- ஊரு சனம் தூங்கிருச்சு---
  11. அழகிய மிதிலை நகரினிலே ......! 😍
  12. சிவன் மாடு என்றால் இதுதான்......! 🤣 🤣
  13. இராம இலக்குமணர்கள் ஜடாயுவை சந்தித்தபோது.......! 🌹
  14. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(3). "லா சப்பல்" யூரோப் மட்டுமன்றி உலகில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் அது ஒரு மயக்கும் சொர்க்கம். அங்கிருந்து மனைவி அல்லது காதலியை கையைக் கோர்த்துக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றால் கூடப் போதும் உலக அதிசயமாம் ஈபிள்டவர் கண்முன் தெரியும். அந்த இடத்தில் ஒரு சதுர அடி இடம் எடுப்பதே பெருங் கஷ்டம். சுரேந்தரும் சுமதியும் பல தரகர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி ஒரு மாதிரி கடையொன்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்தக் கடைக்கு கீழேயும் சாமான்கள் வைத்து எடுக்க சௌகரியமாக பாதாள அறையொன்று உண்டு.கடையை அவர்கள் ஒரு தகுதிவாய்ந்த கம்பனிமூலமாக தமது வேலைகளுக்கு ஏற்றவாறு திருத்தி,பாதாள அறை உட்பட வர்ணங்கள் பூசி அங்கு தமக்கும் ஒரு ஆபிஸ் அறையும், நிலைக் கண்ணாடியுடன் உடைகள் மாற்றும் அறையும் அமைத்து முன்பக்கம் விராக்கிகள்,கண்ணாடி அலுமாரிகள் எல்லாம் பொருத்தி விட்டிருந்தார்கள். கடைக்கு "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" என்று பெயர்பலகையும் நியான் லைட்டுடன் பூட்டி விட்டிருந்தார்கள். பின் வங்கியிலும் கடன் எடுத்து நான்கு நவீன மாடல் தையல் மிஷின்களும் இன்னபிற சாமான்களும் வாங்கிப் போட்டிருந்தார்கள். இன்னும் 15/20 நாளில் கடை திறப்புவிழா செய்யுமளவுக்கு வேலைகள் முடிந்து விட்டிருந்தன. சுமதி தையல்கடை திறக்கப் போகிறாளாம் என்னும் செய்தி அவளது உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் "அணைந்த எரிமலையாய் புகைந்து அமேசன் காட்டுத் தீயாய் " வியாபித்து அடுத்து வந்த கலியாணவீடு,சாமத்திய வீடு,பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எல்லாம் முக்கியமான பேசுபொருளாகி இருந்தது. அன்று காலை பத்து மணியிருக்கும் சுமதி தொலைக்காட்சியில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கைத்தொலைபேசி "ரஞ்சிதமே"என்று அழைக்கிறது. ---ஹலோ....ஓ....ஓ நான் சுமதி யார் நீங்கள் என்று கேட்க , அக்கா அது நான்தான் பிரேமா நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீங்கள். உங்களிடம் ஒரு விஷயம் கதைக்க வேணும் ..... ---ஓம்....இண்டைக்கு விடுமுறைதானே வீட்டில்தான் நிக்கிறன், என்ன விஷயம் சொல்லுங்கோ.... --- இருங்கோ அக்கா, நான் பக்கத்துலதான் நிக்கிறன் ஐந்து நிமிசத்தில அங்கு வாறன் போன் கட்டாகின்றது. தொடர்ந்து சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்க சுமதி கதவைத் திறக்கிறாள். பிரேமா கையில் ஒரு சொக்கிலேட் பெட்டியுடன் உள்ளே வருகிறாள். --- வாங்கோ பிரேமா ! வந்து இருங்கோ, கண்டு கனகாலம். என்ன குடிக்கிறீங்கள். --- பிரேமாவும் சொக்கிலேட் பெட்டியை அவளிடம் கொடுத்து விட்டு கொஞ்சம் தயங்கியபடி அது வந்து சுமதியக்கா நீங்கள் "லா சப்பலில்" தையல்கடை திறக்கப் போவதாக அறிந்தனான்.அதுதான் உங்களிடம் வேலை இருக்குமோ என்றுதான்......எனக்கு தையல் வேலை எல்லாம் தெரியும். --- சுமதியும் அவளிடம், பிரேமா நான் அங்கு தையல்கடை திறக்கத்தான் போறன். ஆனால் அதுக்கு "pole emploi " (ஆட்களின் தகுதிக்கு ஏற்றபடி வேலை எடுத்துக் கொடுக்கும் அதிகாரமுள்ள அரசாங்க அமைப்பு) மூலமாகத்தான் ஆட்கள் எடுக்க பதிஞ்சிருக்கிறன். மேலும் எனக்கு புதிய மொடல் மிசின்களில் ஆடைகளை நன்றாக வெட்டித் தைக்கத் தெரிந்த ஆட்கள்தான் வேணும். பெண்களின் சட்டைகள், ப்ளவுஸ்கள் மட்டுமன்றி பிள்ளைகளின் உடுப்புகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். நேற்றுத்தான் அப்படி ரோகிணி என்றொரு பிள்ளையையும் எடுத்தனான். அதுசரி நீங்கள் இங்கு தையல் வகுப்புகளுக்கு போன சான்றிதழ்கள் ஏதாவது வைத்திருக்கிறீங்களோ. --- இல்லையக்கா , நான் ஊர்ல தையல் வேலை எல்லாம் செய்தனான்.அக்கம் பக்கம் எல்லாம் நான்தான் தைத்துக் குடுக்கிறது. நீங்களும் இங்கு எல்லாருக்கும் தைத்து குடுக்கிறனீங்கள் என்று எனக்குத் தெரியும்.நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் டிசைன்கள் காட்டித் தந்தால் நான் கெதியா தச்சுப் போடுவன். ---பிரேமா நீங்கள் கடைசியா எப்ப தைத்தனீங்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் இங்கு வந்தே பத்து வருடங்கள் இருக்கும் போல ....... ---ஓமக்கா, கொஞ்சம் டச் விட்டுப் போச்சு என்டாலும் நான் சமாளிச்சுடுவன். --- அதுக்கில்லை பிரேமா ஏற்கனவே 5 / 6 பேர் என்னிடம் வேலை கேட்டிருக்கினம்.அதிலும் எனக்கு இந்த ஆபிரிக்கன்ஸ் , அல்ஜீரியன்ஸ் ஆட்களின் ஆடைகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். எதுக்கும் உங்கட பெயரையும் நான் குறித்து வைத்து கொள்கிறன். பின்பு வளமையாய் கதைத்து விட்டு போகும் போது அக்கா நானும் கடைக்கு கிட்டத்தான் இருக்கிறன் இருப்பது நிமிச நடை கடைக்கு வாறதுக்கு என்று சொல்லி விட்டு போகிறாள். அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள். இன்னும் தைப்பார்கள் ..........! 👗

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.