Everything posted by suvy
-
தமிழன்னை அருட்புகழ்
தமிழன்னையின் தோள் சேரும் அழகான பாமாலை........! 💐 நன்றி கரு.......!
-
தையல்கடை.
தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(10). சுமதியும் கதீஜாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு, இவரை நான் புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறேன். மிருதுளாவைப் பார்த்து நீ இவளுக்கு இங்கு செய்ய வேண்டிய வேலைகள் பற்றி விளக்கமாய் சொல்லிக் குடு. அவளின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். பின் கதீஜாவிடம் நீ இன்று மதியத்துடன் வீட்டுக்கு போய் விட்டு நாளை காலையில் இருந்து வேலைக்கு வரவும். காலை 08:30 க்கு கடைக்குள் இருக்க வேண்டும் என்பதை ரொம்ப அழுத்தி சொல்கிறாள். அவளும் சரி மேடம் என்று சொல்லி விட்டு மிருதுளாவுடன் போகிறாள். பின் சுமதியும் நீங்கள் வேலையைப் பாருங்கள் நான் போட்டு பிறகு வருகிறேன். வெளியே போகிறாள்.....! மதியம் ஒன்டரைக்கு சுமதி கடைக்கு வர அங்கு மிருதுளா,ரோகிணி,கபிரியலோடு கதீஜாவும் நிக்கிறாள். பிரேமா இன்னும் வேலைக்கு வரவில்லை. --- ஏன் கதீஜா நீங்கள் 12:00 மணிக்கே போயிருக்கலாமே. --- பரவாயில்லை மேடம், மிருதுளாவோடு வேலை செய்து கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.சரி நான் போயிட்டு நாளை காலை எட்டரை மணிக்கு வந்து விடுகிறேன். நன்றி மேடம் என்று சொல்லி விட்டு போகிறாள். வாடிக்கையாளர்கள் வருவதும் போவதுமாக கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டரைக்கு பிரேமா அங்கு வருகிறாள். அப்போதும் அங்கு சுமதியைப் பார்த்ததும் அவளுக்கு ஒருமாதிரி இருக்கிறது. நேரம் 15:00 மணி.சுமதி ரோகிணியை கூட்டிக் கொண்டு தனது ஆபீஸ் அறைக்குப் போகிறாள். அங்கு ஒரு நீளமான மேசையும் அதன் மேல் மறைவாக கடைக் கேமராக்களின் பதிவுகளைக் காட்டும் தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்கிறது. அது கடையின் ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்துக் காட்டிக்கொண்டிருக்கு. ரோகிணியை எதிரில் அமரச் சொல்லி விட்டு பைலில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள். அதை வாங்கிப் படித்த ரோகிணி,என்ன மேடம் என்னை வேலையில் இருந்து நிப்பாட்டி இருக்கிறீர்கள். நான் ஒழுங்காத்தானே வந்து வேலை செய்து விட்டு போகிறேன். --- இல்லை ரோகிணி நீ இந்த மூன்று மாதத்தில் பலநாட்கள் விடுமுறையில் நின்றிருக்கிறாய். ஆனால் நீ திருப்தியாய் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையும் செய்வதில்லை. --- எப்படி சொல்லுறீங்கள் மேடம், நான் pole emploi வால் வேலைக்கு வந்தனான். தகுந்த காரணமின்றி நீங்கள் என்னை நிப்பாட்டினால் நான் அவர்களிடம் முறையிட வேண்டி வரும். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சினை. --- சுமதிக்கு எழும்பி நின்று அறையணும்போல இருக்கு ஆயினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.அதற்குமுன் இதையும் கொஞ்சம் பாருங்கள். தனது போனை எடுத்து இயக்கி அவளின் பக்கம் திருப்புகிறாள். அதில் ரோகிணி வேலைநேரத்தில் கீழ் அறையில் போனில் பாட்டுக் கேட்டு தலையாட்டிக் கொண்டு இருப்பதும், ஆட்கள் வரும்போது விக்ஸ் பூசிக்கொண்டு படுத்திருப்பதும், அவர்கள் போனதும் மீண்டும் பாட்டுக்கு அபிநயம் பிடிப்பதும் துல்லியமாக பதிவாகி இருக்கு. --- ஆ.....இதல்லாம் எப்படி.....என்னை மன்னித்து கொள்ளுங்கள் மேடம். அப்படியே சரணாகதியாகி விட்டாள். --- நான் இப்பவே இதை pole emploi வுக்கு அனுப்ப முடியும். அது மட்டுமல்ல இந்த மூன்றுமாத காலத்திற்குள் உனது வேலை எனக்குத் திருப்தி இல்லையென்றால் உன்னை வேளையில் இருந்து தூக்க அதிகாரமும் இருக்கு. அதேபோல் இந்த வேலை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் கூட நீயாகவே நிக்கவும் உனக்கும் அதிகாரம் உண்டு. சரி....சரி எனக்கு நேரமில்லை. பேசாமல் கையொப்பமிட்டு விட்டு பேப்பரை எடுத்துக் கொண்டு கிளம்பு. உனது சம்பளப் பாக்கிப் பணம் உனது வங்கிக் கணக்குக்கு வரும். உனக்கு வேலைகள் நன்கு தெரியும். இப்படி நடிப்பது, தேவையின்றி லீவு எடுப்பது போன்ற தவறுகள் செய்யாது விட்டால் நீ நல்லா முன்னேறலாம். ---ரோகிணியும் கையொப்பமிட்டு கவலையுடன் கடிதத்தை வாங்கிக் கொண்டு போகிறாள். அடுத்து வெளியே வந்த சுமதி பிரேமாவை அழைத்துக் கொண்டு ஆபிஸ் அறைக்குப் போகிறாள். அவளிடமும் சுமதி அந்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள். அதை பார்த்த பிரேமா, என்ன சுமதி என்னையும் வேலையை விட்டு நிப்பாட்டி இருக்குதுபோல. --- ஓம் பிரேமா, எனக்கு வேற வழியில்லை. --- ஏன் நான் தாமதமாய் வந்து போகிறேன் என்றா. --- அது மட்டுமல்ல பிரேமா, நீங்கள் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதனால் புதிதாக கடை திறந்த எனக்கு மிகவும் உதவியாய் இருப்பீர்கள் என்றுதான், உங்களுக்கு இந்த நவீன தையல் முறைகள் தெரியாது என்ற போதிலும் உங்களை வேலைக்கு எடுத்தேன். ஆனால் இங்குள்ளவர்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்பவர் நீங்கள்தான். இது எனக்கு பெரிய ஏமாற்றம்தெரியுமா. --- நான் மட்டுமா, ஏன் மிருதுளா கூட வெளியே போய்..... போய் வருகிறாதானே. --- ப்ளீஸ் பிரேமா அவளை பற்றி இப்போது கதைக்க வேண்டாம். இதை நீங்கள் சொல்ல வேண்டிய நேரம் இப்போது அல்ல, முன்பே சொல்லியிருக்க வேண்டும். மிருதுளா வெளியே போய் வருகிறாள், ரேணுகா வேலை நேரத்தில் கீழ் அறையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறாள் என்று. ஆனால் இப்போது நான் பல கண்களால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.நீங்கள் செய்யும் வேலைகள் உட்பட. --- பிரேமாவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. தலை குனிந்து கொண்டு இருக்கிறாள். --- சுமதி மேலும் தொடர்ந்து எட்டரைக்கு திறக்க வேண்டிய கடையை நீங்கள் ஒன்பதரைக்கு வந்து திறப்பதால் இரண்டு வேலையாட்கள் இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யாமல் வெளியே நிக்கினம். இந்தக் கடைக்கு வரவேண்டிய ஓடர்கள் வேறு இடங்களுக்குப் போய் விடுகிறது. மேலும் நீங்கள் தினமும் 11:30 க்கு போய் பின் 14:30 க்கு வருகிறீர்கள். அதன்பின்பு 16:30 க்கு போய் விடுகிறீர்கள். ஒரு பையில் இருந்து வெட்டிய துண்டு துண்டு துணிகளை எடுத்து மேசைமேல் போடுகிறாள். அவற்றைப் பார்த்ததும் பிரேமா திகைத்து விட்டாள், முழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்திடும் போல் இருக்கின்றன. சுமதி தொடர்ந்து இவையாவும் எங்கட கடைத் துணிகள் இல்லை. நீங்கள் பாட்டுக்கு தனி ஓடர்கள் எடுத்து இங்கு கொண்டுவந்து இங்குள்ள பொருட்களை பயன்படுத்தி தைத்துக் கொண்டு போகிறீர்கள். அதிகம் ஏன் இப்போது கூட நீங்கள் கொண்டுவந்த பையில் உங்களது தனிப்பட்ட ஓடர் துணிகள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை உங்களால் மறுக்க முடியுமா. இது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா. உங்களுக்கு பின் வந்த பொடியன் துணிகளை வெட்டிட பழகியதுடன் விதம் விதமாக தைக்கவும் செய்கிறான். உங்களாலும் கூட முயற்சியுடன் வேலை செய்திருந்தால் அது முடிந்திருக்கும். ஆனால்.......சரி ....சரி நீங்கள் கடிதத்தில் கையொப்பமிட்டு விட்டு செல்லுங்கள். --- இல்லை சுமதி இது முழுக்க முழுக்க எனது தவறுதான்.இனிமேல் இப்படி செய்ய மாட்டேன். இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கோ. கண்களில் கண்ணீர் முட்டி நிக்கிறது, குரல் தளும்புகிறது. --- இல்லை பிரேமா ......நீங்கள் விரும்பினாலும் உங்களால் அது முடியாது. உங்களின் பேரப்பிள்ளைகளை காலையில் பாடசாலைக்கு கொண்டுபோய் விடவேண்டும்.மதியம் அவர்களை கூட்டிப்போய் சாப்பிடவைத்து மீண்டும் பாடசாலையில் விட்டுட்டு வரவேண்டும். அதனால் இந்த வேலை உங்களுக்கு சாத்தியமில்லை. புரிந்து கொள்ளுங்கள். --- பிரேமாவும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கையொப்பமிட்டு விட்டு கடிதத்தை எடுத்துக் கொள்கிறாள். --- உங்களுடைய சம்பளப் பணம் வழமைபோல் வங்கிக் கணக்குக்கு வரும்.என்று சுமதி சொல்கிறாள். இருவருமாக வெளியே வருகிறார்கள். சுமதியும் மறக்காமல் கடையின் சாவிக்கொத்தை அவளிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்கிறாள். பின் பிரேமாவும் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே போகிறாள். அடுத்து மிருதுளாவைக் கூட்டிக்கொண்டு ஆபிஸ் அறைக்கு அழைத்து வந்து கவருடன் கடிதத்தைக் கொடுக்கிறாள். --- என்ன மேடம் அவர்களைப் போல் எனக்கும் வேலை நிறுத்தக் கடிதம்தானே.......நான் உங்களுடன் விவாதிக்கப் போவதில்லை, நான் செய்த தவறு எனக்குத் தெரியும். என் பொல்லாத நேரம் தப்பு செய்தபோது வேலை இருந்தது, அந்தத் தப்பு விலகியதோடு வேலையும் விட்டுப் போகிறது. என்று சொல்லி கடிதத்தைப் பார்க்காமல் கையொப்பமிடப்போகிறாள். --- அவளை இடைமறித்த சுமதி கடிதத்தை வாசித்துப் பார்த்து ஒப்பமிடு மிருதுளா. அப்படித்தான் கடிதத்தில் எழுதியிருக்கிறது. பின் அதைப் படித்துப் பார்த்த மிருதுளா, என்ன மேடம் எனக்கு மேலும் ஆறு மாதங்கள் வேலையை நீட்டித்து இருக்கிறீங்களா. --- ஓம் மிருதுளா.....நியாயமாய் பார்த்தால் நான் உனக்கு நிரந்தர வேலைக் கடிதம்தான் தந்திருக்க வேண்டும். ஆனால் நீ வேலை நேரத்தில் வெளியே போய் விடுகிறாய் அதன் காரணம் எனக்குத் தெரியாது,அதுதான் இந்த ஆறு மாதகால ஒப்பந்தக் கடிதம். வெளியே உனக்கிருக்கும் பிரச்சினைகள் பற்றி நான் கேட்கப்போவதில்லை. ஆனால் அது தெரிந்தால் உனது வேலை நேரத்தை மாற்றித் தருகிறேன். அதற்கு ஒரே காரணம் உனது வேலைத் திறமையும் வேலை நேரத்தில் உன் உண்மையான உழைப்பும்தான். கடைக்குள் ஒரு நிமிடமும் வீணாக்காமல் ரொம்பத் திறமையாக வேலை செய்கிறாய். அதைபோல் தொடர்ந்தும் நீ வேலை செய்ய வேண்டும். நீ என்னை விட இளையவளானாலும் நான் உன்னிடம் இருந்து நிறைய வேலை கற்றுக்கொள்ள வேண்டும். இதை சொல்ல நான் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. அவ்வளவு கெட்டிகாரி நீ. --- மேடம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.நீங்கள் என்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்துக்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி மேடம். இப்போது எனது வேலை நேரம் மாற்ற வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன். என் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு செய்ய இருந்தேன், இரு நாட்களுக்கு முன் அது எல்லாம் விலகி விட்டது. --- உனக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லு நான் அதைத் தீர்த்து வைப்பேன். --- அதொன்றுமில்லை மேடம், கடந்த ஒரு வருட காலமாக நான் ஒருவரை விரும்பி வந்தேன். அவன் ஒரு வேலையும் செய்யிறதில்லை, எந்த வேலையிலும் நிலைத்து நிப்பதில்லை. (எப்படித்தான் இவங்கள் ஒரு வேலை விட்ட உடனே அடுத்த வேலை எடுக்கிறாங்களோ தெரியாது.) உங்களுக்குத் தெரியுமா நான் இந்த வேலைக்கு வருவதற்கு முன் ஆறு மாதங்கள் chômage சில் வேலை தேடிக் கொண்டிருந்தேன். ( ஒருவர் வேலை இன்றி இருக்கும்போது pole emploi அவர்கள் முன்பு செய்த வேலைகளை கணக்குப் பார்த்து அவர்கள் வேலை எடுக்கும் வரை பணம் குடுக்கும். அது மட்டுமன்றி அவர்கள் வேலை எடுப்பதற்கு உதவிகளும் செய்யும்). இவன் அடிக்கடி என்னிடம் பணம் கேட்பான் நானும் குடுப்பேன்.ஒருநாள் யோசித்து, இவன் என்ன செய்கிறான் என்று சில நாட்களாக அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து கண்காணித்தேன். பார்த்தால் அந்த அயோக்கியன் என்னைப்போல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான். நான் பின்பு மற்ற இரு பெண்களையும் சந்தித்து அவரின் ஏமாற்று வேலைகள் எல்லாவற்றையும் சொல்லி இரண்டு நாட்களுக்கு முன் நாங்கள் மூவருமாக சேர்ந்து அவருக்கு நல்லா அடி, குத்து, உதை எல்லாம் குடுத்து விட்டு வந்தோம். இனி நான் யாரையும் நம்பி ஏமாறமாட்டேன் மேடம். --- ஏன் நீ அவனுடன் செக்ஸ் ஏதாவது ...... --- அந்த கன்றாவியை ஏன் கேட்கிறீங்கள் மேடம், அந்த கயவனை காதலன் என்று நம்பி நாலைந்து முறை டேட்டிங் எல்லாம் போனோம், எல்லாம் என் செலவில்தான். --- சுமதியும் அடிப்பாவி என்று சொல்ல அவளும் நானாவது பரவாயில்லை மேடம்.அதுல ஒருத்தியுடன் அவன் "லிவிங் டு கெதராய்" வாழ்ந்து வந்திருக்கிறான். (இருவரும் கவலையை மறந்து சிரிக்கிறார்கள்). பின் சுமதியும் அவளிடம் கடைச் சாவிக்கொத்தை குடுத்து இனிமேல் நீதான் காலையில் வந்து கடை திறக்க வேண்டும். கடை திறந்ததும் நேரே உள்ளே போகக் கூடாது. முதலில் அலாரமை நிறுத்த வேண்டும்.தவறினால் அது சத்தமிட்டு ஊரைக் கூட்டிவிடும். போலீசும் வந்து விடுவார்கள் ஆதலால் கவனமாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். --- மிருதுளாவும் அது எனக்கு தெரியும் மேடம்.பிரேமாவுடன் சில சமயங்களில் நானும் திறந்திருக்கிறேன் என்கிறாள்.......! இன்னும் தைப்பார்கள்.......! 👗
-
கொஞ்சம் ரசிக்க
- தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
என்ன ஏராளம் இது கூடத் தெரியாமல் இருக்கிறீங்கள் ........ திருமணம் செய்யாமல் போவது தேன்நிலவுக்குள் வராது, அது டேட்டிங் என்று சொல்லப்படும்......! 😁- தையல்கடை.
உங்களுக்கு சாரம் தைக்க வேறொருத்தர் வருகிறார்...... இன்று உங்களின் பிறந்தநாளுக்கு ஓடர் குடுங்கோ உடனே விசேஷமாய் தைத்து அனுப்பப் படும்......! 😂 பிரான்ஸ் வந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றது, இதில் கூட அனுபவப் படவில்லையென்றால் எப்படி .... உங்களின் கருத்துக்கள் என்னை மேலும் ஊக்கப் படுத்துகின்றது புங்கை.....நன்றி ......! 😂 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....நன்றி நன்னிச் சோழன் ......தொடர்ந்து வாசியுங்கோ, இன்னும் சுவாரஸ்யம் கூட இருக்கும்.......! 😁 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ....... அவற்றுக்கெல்லாம் நிறைய மினக்கட வேண்டும்.சும்மா ஏனோ தானோ என்று எழுதேலாது..... இது எங்கள் யாழ் உறவுகளுக்குள் சரியோ பிழையோ சமாளித்துக் கொண்டு போவார்கள் என்னும் நம்பிக்கைதான்.......! 👍- தையல்கடை.
வர வேண்டும் ....வரவேண்டும்.......உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.கமராக்கள் வரும் ஆனால் அங்கு வராது.....! 😁 எல்லாம் உங்களின் ஊக்கத்தினால்தான்.....முடிந்தவரை யாழுக்கு நல்ல கதையொன்று குடுப்பம் என்று.....! 😁 தம்பிக்கு வெள்ளி திசையோ என்னமோ சுமதிக்கு சிரமத் திசை என்று யோசியர் சொல்லியிருக்கிறார் பார்க்கேல்லையோ.......! 😂- தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
பிறகென்ன கோதாரிக்கு அங்க போவான்.......! 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறியர்.....! 💐- சிரிக்கலாம் வாங்க
- மனிதா உன்னைத்தான்!
- கருத்து படங்கள்
கருத்துக் படங்கள் அருமை .........தொடருங்கள்........! 👍- தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
நல்ல தகவல்கள் நன்றி ஏராளன் ........அடுத்த தேன்நிலவு அங்குதான்......! 😂- களைத்த மனசு களிப்புற ......!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஐயா முழிக்கிற முழியைப் பாரு......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........!- தையல்கடை.
தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(9). --- உன்னுடைய பெயர் என்ன. --- கதீஜா மேடம். நீ போட்டிருக்கிற ஆடைகளும் அணிகலன்களும் அழகாய் இருக்கு. உனது ஊர் எங்கு இருக்கிறது. --- நன்றி மேடம், எனது பெற்றோர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள்.ஆனால் நானிங்குதான் பிறந்து வளர்ந்தேன். --- அட இந்தச் சிறுமியும் அழகாக தலையலங்காரம் (தலையில் சின்னன் சின்னனாய் நிறைய பின்னல்கள் பின்னி அவற்றில் அழகழகான ரிப்பன் கட்டியிருந்தாள்). செய்திருக்கிறாள். யார் செய்தது. சிறுமியை கேட்க அவளும் இவளைக் கை காட்டுகிறாள். --- நல்லது இனி நீ என்ன செய்யப் போகிறாய். --- வேலை ஒன்று எடுக்கும்வரை மீண்டும் வகுப்புக்கு போக வேண்டும். இல்லையென்றால் pole emploi இரண்டு மாதம் காசை வெட்டி விடுவார்கள். வேலையொன்று கிடைத்தால் அங்கு போகத் தேவையில்லை, அவர்களுக்கு அறிவித்து விட்டு வேலைக்குப் போகலாம். --- எதுவரை படித்திருக்கிறாய். --- அவள் தனது பையில் இருந்து c .v யை எடுத்துக் கொடுக்கிறாள். அதில் அவளது படிப்பு, இதுவரை அவள் செய்த வேலைகள் + வேலையிடங்கள் எல்லாம் விபரமாக இருக்கிறது. --- ஓ....பேஷன் & மாடலிங் எல்லாம் படித்திருக்கிறாய். --- ஓம் ....மேடம். --- சரி....அப்படியெனில் நீ ஒன்று செய், வாற செய்வாய் கிழமை காலை 08:30 க்கு முன் இந்த இடத்துக்கு வந்து என்னைப் பார், நான் உனக்கேற்ற தகுதியான வேலை தருகிறேன் என்று சொல்லி தனது கடை விலாச அட்டையைக் கொடுக்கிறாள். பின் உதவியாளர் அங்கு வர அவரிடம் "arret de travail" சான்றிதழை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு இருவரும் போகிறார்கள். அவர்கள் சென்றதும் சுமதி தனது உதவியாளரிடம் அவளின் வேலை மற்றும் ஒழுங்கு பற்றிக் கேட்க அவர் சொன்னதும் அவளுக்குத் திருப்தியாய் இருக்கு. பின் அந்த உதவியாளர் சுமதியிடம் மேடம் அந்த இருவரின் இடத்துக்கு இன்னும் ஆட்கள் போகவில்லை அதனால் அவர்களை அங்கு அனுப்பி இருக்கலாம் என்று சொல்ல அவளும் அது எனக்குத் தெரியும், அந்த ஹோட்டல் வேலைதானே அதை நாமிருவரும் போய் செய்து விட்டு வரலாம். அவர்களது விடுமுறை நாளில் அவர்களுக்கு வேலை ஒன்றைக் குடுத்து இந்த லீவு நாளை சரிசெய்து விடுங்கள் என்கிறாள். "கல்லுக்குள் ஈரம்" போல் இருக்கும் அவளது உள்ளத்தைப் பார்த்து அவர் புன்முறுவல் செய்கிறார். --- என்ன சிரிக்கிறீர்கள், இந்தக் கம்பெனி நன்றாக இருக்க வேண்டும். அதுக்கு நாமெல்லாம் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும். அதே நேரம் தொழிலாளிகளும் பாதிக்கப் படக் கூடாது புரியுதா. --- புரியுது மேடம். வேலை முடிந்து காரில் வரும்போது நினைக்கிறாள், என்னுடைய வேலைத்தளத்தில் முப்பது பேருக்கு மேலாக ஆட்களை வைத்து கையாளுகிறேன்.ஆனால் எனது கடையில் மூன்று நான்கு பேரை வைத்துக் கொண்டு தடுமாறுகின்றேன். அன்றைய நாளை நினைத்துப் பார்க்கும்போது தான் விடும் தவறுகள் புலப்படத் தொடங்குகிறது. அத்துடன் மனதில் ஒரு தெளிவும் ஏற்படுகிறது. லா சப்பலுக்கு வந்த சுமதி பார்க்கிங்கில் காரை விட்டுட்டு தனது போன் மூலம் காருக்கு டிக்கட் கட்டனம் செலுத்திவிட்டு சுற்று முற்றும் பார்க்கிறாள்.17:00 மணிக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் இருக்கின்றன. எதிரே "கபே பரத் " தை பார்த்ததும் இரண்டு பாலப்பம் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. உள்ளே சென்று இரண்டு அப்பத்துக்கும் இஞ்சி போட்ட பாலதேனீருக்கும் சொல்லிவிட்டு ஆயாசமாய் கதிரையில் சாய்ந்து கொள்கிறாள். பின் தனது" comptabilité " க்கு (கணக்காய்வாளர்) போன்செய்து தனது வேலையாட்களின் வேலை ஒப்பந்தங்கள் பற்றி கேட்டு அவற்றில் சில திருத்தங்கள் செய்ய சொல்லி விட்டு கொண்டுவந்து தரும்படி சொல்கிறாள். உபசரிப்பாளர் சுட சுட கொண்டுவந்த அப்பத்தை ரெண்டு கடி கடித்து இஞ்சித் துருவல் போட்ட அந்த டீ தொண்டைக்குள் இறங்கும்போது ரொம்ப சுகமாக இருக்கின்றது.இஞ்சித் துருவல் பல்லிடுக்கில் சிக்குவதும் நாக்கு அதை தேடிச்சென்று ருசித்து இழுத்து வருவதும் அருமையாக இருக்கிறது. அவள் 17:00 மணிக்கு கடைக்குள் வந்ததும் மிருதுளா அவளிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்து விட்டு போய் வருகிறேன் என்று இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். கபிரியேல் கொப்பியில் அளவுகள் பார்த்து துணிகளை வெட்டிக் கொண்டிருக்கிறான். அங்கு வரும் ஓடர் சாரங்களை அளவுகள் பார்க்காமலே அதன் கோடுகளை நேர்ப்படுத்தி அழகாக தைத்து வைக்கிறான். இந்த மூன்று மாதத்துக்குள் அவன் சுமதியிடமும் மிருதுளாவிடமும் பார்த்துப் பார்த்து துணிகளை நன்றாக வெட்டித் தைக்கப் பழகியிருந்தான். பிரேமாவும் ரோகிணியும் அங்கில்லை. கதவின் மணியொலி கேட்டு நிமிர்ந்த கபிரியேல் சுமதியைப் பார்த்து சிநேகபூர்வமான ஒரு புண்ணகை செய்து விட்டு மீண்டும் தனது வேலையில் கவனத்தை செலுத்துகிறான். சுமதியும் ஏற்கனவே மிருதுளா தைத்து வைத்த கட்டிங்ஸ்சை எடுத்து சிரத்தையுடன் தைக்கிறாள்.சிலர் வந்து தைத்த ஆடைகளை வாங்கிக் கொண்டு பணம் குடுத்துவிட்டு செல்கின்றனர். வேறு சிலர் காசோலைகள் குடுத்த போது அதை மறுத்து பணமாகவோ அன்றி விசாகாட் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறாள். அன்று சுமதி காலை 08:30 க்கு வேலைக்கு வருகிறாள். முன்பே அங்கு கதீஜா வந்து நிக்கிறாள். பெரிய பெரிய வயலட் கலரில் பூக்கள் போட்ட ட்ரவுசரும் அதே துணியில் மேலே கொலர் வைத்த கோட்டும், ட்ரவுஸர் தொடைகளையும் பின்னழகையும் இறுக்கமாய் பிடித்திருக்க முழங்காலின் கீழே அது பெல்பாட்டமாய் விரிந்து இறங்குகிறது. கால்களில் அகலமான குதியுள்ள வெள்ளைநிற உயரமான சாண்டில்ஸ் அவளது பின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. மேலே அணிந்திருக்கும் கோட்டினுள்ளே நீளமான வெள்ளை பெனியன் அணிந்திருக்கிறாள். அவள் நடக்கும் போது மார்புகள் இரண்டும் உள்ளாடை அணியாததால் தென்றலில் அசையும் சன்பிளவர்ஸ் போல் மென்மையாக அசைகின்றன. கழுத்தை சுற்றி இருக்கும் வெள்ளிசெயினில் இருந்து ஒரு செயின் இழை மட்டும் நேராக நெஞ்சுக்குள் ஒற்றை மின்னல்போல் இறங்கி மோட்ஷமடைகிறது. காதுகளில் இருந்து தோளைத் தொடுவதுபோல் பெரிய வெள்ளி வளையங்கள், தேனில் மிதக்கும் குலோப்ஜாமூன் போல் கண்ணக் கதுப்புகள், துரு துறுவென அங்குமிங்கும் அலையும் விழிகள், இமைகளின் மேல் முடியை முற்றாக மழித்துவிட்டு வில்போன்று நீளமாக கண் மை பூசி இமையின் மேற்புறத்தில் மயில் கழுத்து வர்ணத்தில் வர்ணம் பூசி இருந்தாள். சற்றே பெருத்த உதடுகளில் கடுஞ் சிகப்பு கலரில் உதட்டுச்சாயம் போட்டிருந்தாள். பெண்களையே கிறங்கடித்து விடும் அவள் அழகின் முன் ஆண்கள் எம்மாத்திரம். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். பின் சுமதி கடையைத் திறந்து அலாரங்களை நிறுத்தி விட்டு அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே வருகிறாள். அப்போது அங்கு வந்த கணக்காய்வாளர் ஒரு பைலை அவளிடம் குடுத்து விட்டு போகிறார். அவள் அதை தனது மேசை லாட்சியில் வைத்து விட்டு மேலே வருகிறாள். பின் சுமதி கதீஜாவுக்கு கடையையும் கீழே இருக்கும் ட்ரெஸிங் அறையையும் சுற்றி காட்டிக்கொண்டிருக்கும் பொழுது மிருதுளாவும் ரோகிணியும் உள்ளே வருகின்றார்கள். இவர்கள் இருவரையும் பார்த்து அவர்கள் இருவரும் வணக்கம் சொல்லிவிட்டு தத்தமது வேலைகளை செய்கின்றனர். சுமதி இவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கதீஜா அங்கிருந்த நவீனமான மெஷின்களையும் ஆபிரிக்கன் திருமண ஆடைகளையும் நீளநீளமான தலைமுடிகள் பக்கட்டுகளையும் பார்த்து வியந்து நிக்கிறாள். அப்போது தன்னருகே வந்த சுமதியிடம் மேடம் எனக்கு நீங்கள் என்ன வேலை தரப்போகிண்றீர்கள், தையல் வேலையா, தலை பின்னுகிற வேலையா. நீ மட்டும் இங்கு எனக்கு பிடித்த மாதிரி வேலை செய்தால் அவற்றுடன் அதை விட பெரிய வேலையொன்றும் உனக்குத் தருகிறேன் என்கிறாள். வழக்கம்போல் பிரேமாவும் 09:30 க்கு வருகின்றாள். அங்கு சுமதியைப் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு தனது மெஷினில் சென்று அமர்கிறாள்.மறக்காமல் தான் கொண்டுவந்த பெரிய பையை தனது காலுக்கருகில் வைத்துக் கொள்கிறாள்......! இன்னும் தைப்பார்கள்..........! 🎀- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
மியான்மார்.......! 🌹- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- தையல்கடை.
தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(8). அன்று இரவு சுமதிக்கு தூக்கமே வரவில்லை.அங்கும் இங்கும் புரண்டு புரண்டு படுக்கிறாள். அடிக்கடி எழுந்து போய் தண்ணீர் குடித்து விட்டு வருகிறாள். அவளைப் பார்க்க சுரேந்தருக்கு பாவமாய் இருக்கிறது. முன்பென்றால் இந்த நேரம் நல்ல உறக்கத்தில் இருப்பாள். --- என்னப்பா இந்தக் கடை திறந்ததில் இருந்து நீங்கள் நிம்மதியாய் உறங்கி நான் பார்க்கேல்ல. ஏன் கடையில் ஏதாவது பிரச்சனையோ. --- அதில்லையப்பா, ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களில்லை. இப்ப ஏன்தான் கடை திறந்தேன் என்று இருக்கு. --- எல்லாம் அந்த சீட்டுக்காசு வந்ததால் வந்த வினை. இனிமேல் ஒரு சீட்டும் போடவேண்டாம். கொஞ்சம் பொறுத்து, நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், இதெல்லாம் சரி செய்திடலாம், இப்ப நிம்மதியாக தூங்கும். --- கணவனின் அந்த ஆறுதல் வார்த்தை அவளுக்கு இதமாக இருக்கிறது. சுரேந்தர் லேசில் ஒண்றிலையும் தலையிடுவதில்லை. ஆனால் தலையிட்டால் மனுசன் அதில் ஒரு தீர்வு காணாமல் விடாது. மெதுவாக கொஞ்சம் எழுந்து அவன் மார்பில் தலை வைத்துப் படுக்க அவனும் தனது நீண்ட கரங்களால் அவளைத் தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொள்கிறான். அன்று திங்கட்கிழமை. லா சப்பலில் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு. சுரேந்தர் சொல்லியபடி சுமதியும் வேலைக்கு விடுமுறை போட்டிருந்தாள். இருவருமாக காலை 09:00 மணிக்கு கடைக்கு வருகிறார்கள். சற்று நேரத்தில் கடைகளுக்கு c c t v கமரா பொருத்துபவர்கள் வர இருவரும் அவர்களை கடைக்குள் அழைத்து செல்கிறார்கள்.உடனே வேலையைத் தொடங்கியவர்கள்,கடைக்கு உள்ளே வெளியே எல்லாம் கமரா பொருத்தி மேலும் சில இடங்களில் சின்னஞ்சிறிய ரகசியக் காமராக்களையும் அங்கு வேலை செய்பவர்களும் அறியாதவாறு பொருத்திவிட்டு, இவர்களது ஒவ்பீஸ் அறையில் சில சிறிய டீ .வீ களையும் பொருத்தி இருந்தார்கள். பின்பு இவர்களது போனுக்கும் போலீசுக்கும் தொடர்பு ஏற்படுத்தி விட்டு போகிறார்கள். செவ்வாய்கிழமை வழமைபோல் வேலைக்கு வந்தவர்கள் கடைக்கு வெளியேயும் உள்ளேயும் கமராக்கள் பொருத்தி இருப்பதைப் பார்த்து விட்டு அது சாதாரணமானது தானே என்று பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தத்தமது வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள். (1) CDD : contrat à durée déterminée = வேலை ஒப்பந்தம் முடிவடையும் காலம். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். அது ஒரு மாதமோ,மூன்று மாதமோ, ஒரு வருடமோ, இரண்டு வருடமாகவும் இருக்கலாம். அந்தந்த திகதி முடிய அவர்கள் வேலையால் நிப்பாட்டுப் படுவார்கள். சில சமயம் புதுப்பிக்கப் படுவதும் உண்டு. (2) CDI : contrat à durée indéterminée.= நிரந்தரமான வேலை ஒப்பந்தம். தற்போது இவர்களின் கடையில் வேலை செய்ப்பவர்களின் காலம் மூன்று மாதங்கள். இந்த காலகட்டத்தில் முதலாளியும் அவர்களை வேளையில் இருந்து நிப்பாட்டலாம். அல்லது தொழிலாளியும் வேலை பிடிக்காதவிடத்து தாங்களே விட்டு விலகலாம். இவர்களுக்கு அந்த ஒப்பந்தகாலம் முடிய இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருந்தன. சுமதியும் இது சம்பந்தமாக தனது கணக்காய்வாளருடன் ( comptabilité) கலந்தாலோசித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.என்று பலதையும் நினைத்துக் கொண்டு தனது வேலையிடத்துக்கு காரில் போகிறாள். மனதில் இதே சிந்தனை. நான் எங்கே பிழை விடுகிறேன். ஏன் என்னால் இதை சரிவர நிர்வகிக்க முடியவில்லை. ஒரு சிறு கடையை வைத்திருக்கும் நானே இவ்வளவு சிரமப்படுகிறேன் என்றால் ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு கடையாக பல கடை வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கும். எல்லா இடத்திலும் இருபது , முப்பது பேர் என்று சம்பளத்துக்குத்தானே ஆட்களை வைத்து நடத்துகின்றார்கள். ஒருவேளை என்னால் கடையை நடத்த முடியாமல் போய் விடுமோ. தினமும் நானும் கபிரியேலும் ஐந்து மணியில் இருந்து எட்டு மணிவரை செய்யும் வேளையில் பாதியளவு கூட பகலில் இவர்கள் செய்யவில்லையே. இதோ இந்தக் கருக்கலில் காலை 04:30 க்கு நான் வேலைக்கு போய்கொண்டிருக்கிறேன். இவர்களுக்கு எட்டரைக்குத்தானே வேலை தொடங்குது, அதுக்கும் ஒழுங்காய் நேரத்துக்கு வருவதில்லையே.......நிறைய யோசிக்கிறாள். வேலையிடம் வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு கந்தோருக்குள் போகிறாள். அவள் வருவதற்கு முன்பே பெரும்பாலான தொழிலாளிகள் வந்திருந்தனர்.எல்லோரும் அவளுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தத்தமது வேலையிடங்களுக்கு செல்கின்றனர். அவளது உதவியாளர் அன்று வேலைக்கு வந்தவர்கள், வராதவர்கள் மற்றும் சுகயீன விடுப்பில் இருப்பவர்கள் என்று அனைவரின் அறிக்கையையும் கொண்டு வந்து அவளிடம் தருகிறார். இப்போது சுமதி தனது கடைப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.அந்த கம்பெனியன் மேலதிகாரியாக மாறிவிட்டிருந்தாள் .அப்போது அரை மணி நேரம் தாமதமாக இருவர் வேலைக்கு வருகின்றனர். --- அவர்கள் மன்னிக்கவும் மேடம், கொஞ்சம் தாமதமாகி விட்டது என்கிறார்கள். --- சுமதி தனது உதவியாளரைப் பார்த்து ஏன் இன்று மெட்ரொ,பஸ் எதுவும் ஓடவில்லையா. அப்படி ஒன்றும் இல்லை மேடம் எல்லாம் வழமைபோல் ஓடுகின்றன என்று அவர் கூறுகிறார். உடனே சுமதி அவர்களின் பக்கம் திரும்பி,நீங்கள் போயிட்டு நாளைக்கு வாங்கோ.உங்களின் இடங்களுக்கு ஆட்களை அனுப்பியாகி விட்டது. --- கொஞ்சம் தயவு செய்யுங்கள் மேடம் இனிமேல் இப்படி நடக்காது என்கிறார்கள். --- உங்களுக்குத் தெரியும்தானே காலை 08:45 க்கு முன்பாக ஒவ்வொரு கந்தோர்களிலும் எமது கிளீனிங் வேலையை முடித்து விட்டு நாங்கள் வெளியேறிவிட வேண்டும் என்பது. நீங்கள் இப்படி தாமதமாய் வந்தால் எப்படி. ஒன்றும் செய்யேலாது நீங்கள் போகலாம். அவர்களும் கொஞ்ச நேரம் சோகமாய் நின்று விட்டு திரும்பிப் போகிறார்கள். இன்னொரு இளம் ஆபிரிக்கன் பெண் அங்கு ஒரு அழகிய சிறுமியுடன் நிக்கிறாள். சுமதியும் அவர்களை பார்த்து நீங்கள் ஏன் இன்னும் இங்கு நிக்கின்றீர்கள் என்று கேட்க உடனே உதவியாளர் அவளிடம் அந்தப் பெண்ணை வேலை பழக pole emploi அனுப்பி இருக்கு.இவவின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிந்து விட்டது. அந்த சான்றிதழ் எடுக்கிறதுக்கு வந்திருக்கிறா. அது தயாராக அறையில் இருக்கு, நான் போய் எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு போகிறார்.......! இன்னும் தைப்பார்கள் ................! 🎽- களைத்த மனசு களிப்புற ......!
சறுக்கிய விளையாட்டுகள்.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மண்மீது பாயும் மா நதியாவும் பெண்களின் கண்ணீரோ ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே ஆண் : { என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை } (2) எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா ஆண் : நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் ஆண் : { நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் } (2) முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே பெண் : ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட பெண் : { இருதயம் முறைப்படி துடிக்கவில்லை இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை } (2) நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது.......! --- முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே--- - தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.