Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- பார்வை ஒன்றே போதுமே.......!
படித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மானம் மரியாதை மறந்து வாச உடல் தானம் கேட்பவரை தவிக்கவே விடுகின்ற ஈன பழக்கம் தான் இவளுக்கு இல்லையடா சந்திக்க வந்தவனை பந்திக்கு அழைப்பாலே முந்திக்க மறுத்தவனை முள்ளாக முறிப்பாலே காலம் உன் தலையை வெள்ளையடிக்கும் முன் கவர்ச்சிப்படம் இவளை கொள்ளையடி கோமகனே பாப்பா ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கா எட்ட ஆச மூச்சு முட்ட இருந்தும் இருக்கா எட்ட குளிச்சி முடிச்சி குளத்துக்கு தான் குளிரு காய்ச்சலு நான் பறிக்க மறந்த பூக்கள் சேர்ந்து போடுது கூச்சலு அழகா பொறந்துபுட்டா ஆறடி சந்தன கட்ட அடடா தேனு சொட்ட மணக்கும் லவங்க பட்ட.......! ---அழகா பொறந்துபுட்டே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீயே என் வாழ்வின் நிதியாகுமே.......! 😍- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
- களைத்த மனசு களிப்புற ......!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஆண் : ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன் கொள்ள வந்தால் மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க பெண் : வெப்பம் படருது படருது வெட்கம் வளருது வளருது ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஆண் : காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம் படித்துப் படித்து எடுக்க எடுக்க பெண் : ஆசை ஆஹா பிரமாதம் மோக கவிதா பிரவாகம் தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஆண் : கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது பெண் : உறவும் நெருங்குது நெருங்குது உலகம் மயங்குது உறங்குது......! ---மாசிமாதம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளத்தின் கதவுகள் கண்களடா ........! 😍- களைத்த மனசு களிப்புற ......!
100 வீதம் முயற்சி----அதிர்ஷ்டம் 0.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சித்திரபூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : லவ்வுக்கு காவலா பதில் நீ சொல்லு காதலா பொல்லாத காவலா செந்தூர பூவிலா குழு : வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடி வருது ஆண் : பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன் டெக்சாசில் ஆடி வருது பெண் : கவ் பாயின் கண் பட்டதும் ப்ளேபாயின் கை தொட்டதும் உண்டான செக்ஸானது ஒன்றாக மிக்ஸானது ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா ஸ்ட்ராபெரி கண்ணானதா லவ் ஸ்டோரி கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா பெண் : நம் காதல் யாருமே எழுதாத பாடலா.......! ---முக்காலா முக்காபுலா---- சிரிக்கலாம் வாங்க
- பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே.......(15). வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நின்ற சேவல் சட்டிக்குள் கொதித்துக் கொண்டிருக்கு. மகேஸ்வரியின் பழகிய கை பக்குவமாய் சட்டியை கிளறுகின்றது.அவள் மனசும் அதுபோல் கொதித்துக் கொண்டிருக்க நினைவுகள் உள்ளே பிராண்டிக் கொண்டிருக்கின்றன. கடவுளே எதோ ஒரு எண்ணம் என்னையும் அறியாமல் என்னை அலைக்கழித்து இந்த மனுஷன் என் மனசுக்குள் புகுந்து விட்டார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற திருப்தி. அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா. மனம் ரணமாய் வலிக்கிறது. யோசித்துப் பார்க்கிறாள், இது எப்படி......சில கோவில் தீர்த்தக்கிணறுகளில் ஒரு சான் அளவு தண்ணீர்தான் இருக்கும்.அபிஷேகத்தின் பொழுது பத்து குடமா, நூறு குடமா, ஆயிரம், லட்ஷம் குடமா நீர் சுரந்து கொண்டு இருக்கும் வற்றாது, அதுபோல் இப்பொழுது அவர்மீதுள்ள அன்பு பிரவாகித்து வருகிறதே, நான் என்ன செய்வேன். குழம்புபோல் மனமும் கொதிக்கிறது. அவளின் நிலையில்தான் சாமிநாதனும் இருந்தார். சமீபகாலமாக அவளின் நடவடிக்கையில் மாற்றங்களை அவர் பார்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது திண்ணையில் இருந்து மகேஸ்வரியைப் பார்க்க அவளின் பரிதவிப்பு அவரை என்னமோ செய்கிறது. இதற்கெல்லாம் தானும் காரணமாகி விட்ட குற்றவுணர்வு மேலோங்கி அவரை என்னமோ செய்கிறது. கண்கள் பனிக்கின்றன. பிள்ளைகள் வந்து விட்டதால் மறுபுறம் திரும்பிப் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கவனித்து விடுகிறார்கள். மகேஸ்வரி வெளியில் வந்து வாங்கோ பிள்ளைகள் சாப்பாடு தயார். எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். தம்பி முத்து ஓடிப்போய் எல்லோருக்கும் வாழையிலைகள் வெட்டிக் கொண்டு வா அப்பு. பிள்ளை பாய்களை எடுத்து வந்து போடனை என்று சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுழல்கிறாள். எல்லோரும் சாப்பிடும்போது சாமிநாதனும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழும்புகிறார், மகேஸ்வரிக்கு சாப்பிடவே மனமில்லை வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு எழும்புகிறாள். அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, இப்படி ஒரு விருந்து சாப்பிட்டு ரொம்ப காலமாச்சுது என்று ரவிதாஸ் சொல்ல நிர்மலாவும் ஓம் அம்மா என்று சொல்கிறாள். கிளம்புகிற நேரம் எல்லோருக்கும் ஒரு தயக்கமாய் இருக்கு. சாமிநாதனுக்கும் தான் எப்படி இனியும் இங்கிருப்பது என்ற தயக்கம் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு முன்வந்து "முத்தம்மா" ஆம் இதுவரை அவளை அவர் அப்படித்தான் கூப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவரையும் உங்களின் பிள்ளைகளில் ஒருவரையும் மணமுடித்து வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு அவளும் அதென்ன புதிதாக இன்றைக்கு உங்க பிள்ளை , என் பிள்ளை என்று பிரித்துப் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சம்மதம். இவ்வளவு நாளும் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் ஒரு அரணாக இருந்து அதுகளை சொந்தக்காலில் நிக்குமளவு ஆளாக்கி விட்டது நீங்கள்தான். அன்று நீங்கள் சொல்லவில்லை யென்றால் முத்துவால் படித்திருக்கவே முடியாது. அந்த நன்றியை நாங்கள் ஒருகாலமும் மறக்க மாட்டோம்.எதுக்கும் பிள்ளைகளையும் ஒரு வார்த்தை கேளுங்கள்.அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதும் அவலறியாமல் குரல் கம்முகிறது கண்களில் நீர் தளும்புகிறது. சாமிநாதனும் பிள்ளைகள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ என்று சொல்ல ரவிதாஸ் முன்வந்து அப்பா நீங்களும் இவ்வளவுகாலமாய் வேலை வேலை என்று வீட்டையும் மறந்து எங்களுக்காக உழைத்தீர்கள். அதனாலோ என்னவோ எங்கள் அம்மாவையும் இழக்க வேண்டி வந்து விட்டது. பின் வந்த இடத்தில் இவர்களின் குடும்பத்தையும் ஒரு மேல் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறீங்கள். அதுபோல்தான் இந்த அம்மாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இனி நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகின்றோம் என்று சொல்ல, சித்ரா முன்வந்து ஓமம்மா அண்ணா சொல்வதுதான் சரி என்கிறாள். சற்றுமுன் நாங்கள் தோட்டத்தில் இதை பற்றித்தான் கதைத்தோம் என நிர்மலாவும் சொல்லிவிட்டு ஓம்....நீங்கள் "பார்வை ஒன்றே போதுமே" என்று பார்வையால் வாழ்ந்தது போதும் மகேஸ்வரியின் கையைப் பிடித்து நீங்கள் எங்களுக்கும் அம்மாவாக வேணும் இதை நீங்கள் மறுக்கக் கூடாது என்கிறாள். மகேஸ்வரி வெட்கத்துடன் சாமிநாதனைப் பார்க்க அவரும் மௌனமாக ஓம் என்று தலையசைக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஆடைகள் மாற்றிக்கொண்டு வந்த முத்துவும் சித்ராவும் அம்மா இன்று நாங்கள் அண்ணாத்தை படம் பார்த்துவிட்டு அண்ணாவின் பங்களாவில்தான் இரவு தங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஆடி காரில் ஓடிப்போய் ஏற அது கோர்ன் அடித்துக் கொண்டு சீறிச் செல்கின்றது. திண்ணைத் தூணைப் பிடித்தபடி ஒருக்களித்து நின்று கொண்டு மகேஸ்வரி வெட்கமும் காதலும் கலந்து காலால் நிலத்தை கீறிக்கொண்டு நிக்கிறாள். "காணாத உறவொன்று கண்முன் நிற்க வாழாத பெண் ஒன்று வழி கண்டதுபோல்" தலை தாழ்திருக்க விழிகளை அசைத்து மேற்கண்ணால் அவரைப் பார்க்கிறாள். சாமிநாதனும் மெல்ல நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு முத்தம்மா என்று மெல்ல சொல்ல ..... ம்.....என்கிறாள். சற்று மௌனம்..... பின் ஏன் நீங்கள் ரஜினி படம் பார்க்க போகவில்லையா...... இல்லை...... ஏனாம் ..... நாங்கள் வலிமை பார்க்கலாம் என்று ...... அப்படியா எனக்கு அஜித் படமும் பிடிக்கும். அப்படியென்றால் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம். தோள் மீதிருந்த கையை மெதுவாக அழுத்துகின்றார். அவளறியாமலே உடல் இசைவாக குழைகிறது.கூடவே மேனியெங்கும் சிறு நடுக்கமும்......இவ்வளவு காலமும் இருவருக்குள்ளும் தூங்கிக் கிடந்த ஹார்மோன்கள் சலனமடைந்து கிளர்ச்சியுற்று ஹார்மோனியம் வாசிக்கத் தயாராகின்றன. இதற்கு மேலும் தாங்க முடியாமல் "அரங்கனின் தோளில் ஆண்டாள் மாலைபோல்" கைகளை அவர் கழுத்தில் போட்டு மார்பில் மலர்கிறாள். துவளும் அவளது இடையை தன் இரு கைகளால் இறுக்கி அந்த மலரை தன்னுடன் சேர்த்தணைத்தபடி திண்ணையில் அமர்கிறார் சாமிநாதன்......! யாவும் கற்பனை......! யாழ் 24 அகவைக்காக அன்புடன் சுவி......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
யானையும் கூட அடி குடுக்கும் இதை அறிந்தும் பாகனுக்கேன் கிறுக்கு......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உங்களுக்கு பதின்ம வயது எனக்கு, பருவ வயது கிறக்கத்தில் இருவருக்கும் பேதம் அதிகமில்லை கொழும்பான் ........! 😂 இங்கு வந்து செல்கிறீர்கள் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கு.......! 🌹- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
வீட்டுக்குள் இப்படியெல்லாம் இருக்குமா.......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மழை பொழிந்துகொண்டே இருக்கும்........! 💞 அபிநயசரஸ்வதி என்னும் அழகோவியத்தை அந்த முகபாவங்களை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம்......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு ஆண் : ஏய்..வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு பெண் : ஹோய் ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு பெண் : ஹான் வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு ஆண் : ஏய்.. தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம் தூக்கத்துல கட்டிக்குவோம் யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது பெண் : வா வா வா வாத்தியாரே வா.......! ---வா வா வாத்தியாரே---- பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே..........(14). அப்போது நிர்மலாவும் தனது கைப்கையில் இருந்து காசோலை புத்தகத்தை எடுத்து நீங்கள் குறை நினைக்கக் கூடாது உங்களுக்கு தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று ஒரு வெற்றுக் காசோலையை ஒப்பமிட்டுக் குடுக்க உடனே முத்து அதை மறுத்து வேண்டாம் தங்கச்சி அது உங்களிடமே இருக்கட்டும். அப்பாவே எங்களுக்கு எவ்வளவோ செய்து விட்டார். சித்ராவும் ஓம் நிர்மலா நான் அவர் மானம் காக்க ஒரு தாவணித்துண்டுதான் குடுத்தேன், நிர்மலா இடைமறித்து அண்ணா இவளின் தாவணியைக் கட்டிக்கொண்டு அப்பா எப்படி இருந்திருப்பார் என்று நினைத்துப் பார் செமையாய் இருக்குதில்ல அவனுக்கும் சிரிப்பு வருது அதை மறைத்து கொண்டு உனக்கு நேரங்காலம் தெரியாமல் எப்போதும் குறும்புதான் என்று சொல்லி அவள் தலையில் குட்டுகிறான். போ அண்ணா வலிக்குது என்று சினுங்க, சித்ராவும் தொடர்ந்து அப்பா எங்களுக்கு கல்வி மட்டுமல்ல நிரந்தர வருமானத்துக்குரிய வழிகளும் செய்து, கடைத்தெருவில் பெரிய கடை ஒன்றை வாங்கவும் ஆலோசனைகள், வங்கியில் கடன் வாங்க என்று எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார்.இவை யாவும் அவர் செய்திரா விட்டால் எங்களால் முடிந்திராது. இதுவே எங்கள் ஆயுளுக்கும் போதும். இந்த அயலில் எங்கள் குடும்பத்தை ஒரு கௌரவமான நிலைக்கு உயர்த்தி விட்டுள்ளார். அதைவிட எந்நிலையிலும் தாழாத தன்னம்பிக்கையை எங்களுக்கு ஊட்டி இருக்கிறார். இதைவிட எங்களுக்கு வேறென்ன வேண்டும். ரவிதாசும் உடனே நீங்கள் இருவரும் இன்றிலிருந்து எங்களுடைய சகோதரர்கள், இது வெறும் வார்த்தையல்ல என் இதயத்திலிருந்து சொல்கிறேன் என்று சொல்ல, நிர்மலா இடைமறித்து வேண்டாம் சித்ரா இவனுக்கு தங்கையாய் இருந்தால் குட்டி குட்டியே உன் மூளையை கூழாக்கி விடுவான். நீ விரும்பினால் எனக்கு அண்ணியாக வாயேன் நான் அப்பாவிடமும் அம்மாவிடமும் கதைக்கிறேன் என்று சொல்ல சித்ராவின் முகம் மலர்ந்தாலும் உடனே சிறிது வாட்டமடைகிறது. ஏன் சித்ரா நான் சொல்வது உனக்குப் பிடிக்கவில்லையா அல்லது அண்ணாவைப் பிடிக்கவில்லையா வேறு யாரையாவது விரும்புகிறாயா எதுவானாலும் தைரியமாகச் சொல்லு என்கிறாள். முத்துவும் கொஞ்சம் யோசிக்க, அப்படியல்ல நிர்மலா உங்கள் குடும்பத்தில் வாழ்க்கைப் படுவதென்றால் அது எங்களுக்கு மிகப்பெரும் பாக்கியமாகத்தான் இருக்கும். ஆனால் என்று இழுக்க, ஆனால் என்ன சொல்லு நிர்மலாவும் முத்துவும் கேட்க, ரவிதாசுக்கு மனம் நிம்மதியாய் இருக்கு, அவன் இப்பொழுதுதான் வெளியூர் பயணமாக லண்டன் போகும் போதெல்லாம் அங்கு ஒரு தமிழ் யுவதியை காதலிக்க ஆரம்பித்திருந்தான். அது இன்னும் நிர்மலாவுக்கு தெரியாது. சித்ராவும் ஆனால் நீங்கள் யாரும் குறை நினைக்க வேண்டாம். சில நாளாக நான் கவனித்துக்கொண்டு வருகின்றேன், இவ்வளவு காலமும் இல்லாமல் எங்கள் அம்மா மனம் சலனமடைகின்றா போல் இருக்கிறது. அப்பாவிடமும் அது தெரிந்தாலும் எதுவோ தடுப்பதுபோல் அம்மாவைத் தவிர்த்து அவர் விட்டேற்றியாக செல்வதையும் பார்க்கிறேன். ஆனால் இப்போதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கும் அம்மாவின் விருப்பத்தை ஏற்கத் தயங்குவதுமாக "இருதலைக் கொள்ளி எறும்பு போல்" தவிப்பதையும் உணரமுடிகிறது. நாங்கள் அறிய எனது அம்மாவையும் சிறுவயதிலேயே அப்பாவுக்கு கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். உடனேயே அடுத்தடுத்து பிள்ளைகள் என்றும் குடிக்கும் அப்பாவோடு எப்போதும் சண்டை என்றும் ......அவ வாழ்க்கையில் எந்த ஒரு சுகமும் கண்டதில்லை. இப்ப சமீபகாலமாகத்தான் அம்மா முகத்தில் ஒரு மலர்ச்சியையும் மந்தகாசத்தையும் பார்க்கிறேன். அதுதான் நான் யோசிக்கிறேன். இது ஒன்றும் எனக்குத் தெரியாதே அக்கா என்று முத்து சொல்ல உனக்கு என்னதான் தெரியும் முன்பெல்லாம் அம்மா என்கூட அறையில்தான் படுப்பது வழக்கம்.இப்போ உள்ளே குசினிக்குள்தான் படுக்கிறா. அதன் வரிச்சு மட்டைகளினூடாக அப்பாவைப் பார்ப்பதுபோல், பழைய காதல் பாட்டுக்களை ரேடியோவில் ரசித்துக் கேட்கிறா, என்னுடைய பவுடர் கியூடெக்ஸ் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாவிக்கிறா. இதெல்லாம் நான் பார்க்காத புது அம்மாவாக இருக்கு. சொல்லும்போதே அவள் குரல் கரகரக்கிறது, கண்களில் நீர் கோர்க்கிறது. ஓம்...சித்ரா சொல்வது சரிதான், இன்று நானும் அதைப் பார்த்தேன் என்கிறான் ரவிதாஸ் . எது வேலியால் எட்டி எட்டி பார்த்தீங்களே அப்போதா. என்கிறான் முத்து. தனக்குள் மாட்டைத்தவிர மற்றதெல்லாத்தையும் பார்த்திருக்கிறார் அண்ணர். ஆமாம் அப்போது அப்பாவின் முதுகுதான் தெரிந்தது அம்மாவ நன்றாகவே பார்த்தேன் ரொமான்ஸ் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர்கள் உங்களின் பெற்றோர் என்றுதான் நினைத்தேன். நினைத்துப் பார்த்தால் அப்பாவின் வாழ்க்கையும் அப்படித்தான் போய் இருக்கிறது எந்நேரமும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார்........! பார்ப்போம் இனி ...........! ✍️- இனித்திடும் இனிய தமிழே....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது