Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. அரபிக்குத்து பாடலால் விஜய்க்கு காத்திருக்கும் பதவி.......! 😂
  2. யாரடா மனிதன் இங்கே.......! 😁
  3. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : பெண்ணே பெண்ணே வா வா கண்ணே தொட்டுப் பழகலாம் தழுவலாம் பெண் : வீரம் ஊறும் சாரம் எல்லாம் அள்ளிப் பருகலாம் உருகலாம் ஆண் : பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம் பெண் : நீ சொன்னால் தேன் மாரி பொழியலாம் வழியலாம் ஆண் : அள்ளிக் கொள் என்று சொல்லும் அழகோ அழகு கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு பெண் : நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுது ஹேய் பெண் : நீ எந்த ஊரு ஆண் : என்னோடு ஆடு எது நிஜம் இளமை ஜெயிக்கும் பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம் ஆண் : இளையவன் கனவு பலிக்கும் பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம் ஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான்......! ---ஹே உன்னைத்தானே---
  4. பார்வை ஒன்றே போதுமே.......... (13). என்ன தம்பி நீங்கள் இப்படிப் பேசுறீங்கள்.நான் மாடு வாங்கத்தான் வந்தனான். தற்செயலாகத்தான் உங்களின் கைக் கடிகாரத்தைப் பார்த்தேன் அவ்வளவுதான். இல்லை அண்ணை , நீங்கள் பொய் சொல்லுறீங்கள். நீங்கள் அணிந்திருப்பது சாதாரண ஆடைகள்தான் ஆனால் உங்களின் மோட்டார் சைக்கிலே லட்சத்துக்கு மேல் இருக்கும். அதைவிட உங்களின் தோற்றமும் வீதிகளில் திரிந்து மாட்டு வியாபாரம் செய்ப்பவர் போல் இல்ல. ஒன்று நீங்கள் வசதியானவராய் இருக்க வேண்டும், அல்லது எங்காவது சைக்கிள் திருடுபவராய் இருக்க வேண்டும் என்கிறான் முத்து. இவர்கள் இப்படி வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க உள்ளே இருந்து என்ன அண்ணா பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே வந்த சித்ரா ரவிதாசைப் பார்த்ததும் திகைத்துப் போய் சார் நீங்களா, இது என்ன கோலம். எதுக்கு சார் இப்படி என்று கேட்கிறாள். உடனே முத்து அக்கா இவரை உனக்கு முன்பே தெரியுமா, உன்னைப் பார்க்கத்தான் வந்து வேலியால எட்டிப் பார்த்துக் கொண்டு நிக்கிறாரோ. ஓம் அண்ணா, இவர்தான் நான் வேலை பார்க்கும் வணிக வளாகத்தின் சொந்தக்காரர். பின்பு யோசித்து நேற்று அப்பா பரிசளித்த செயினைப் பார்த்து அதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்றவர். ஒருவேளை அதுக்காக வந்திருக்கலாம். ஆனால் ஏன் இப்படி மாறுவேடத்தில் வரவேணும் அதுதான் எனக்குப் புரியவில்லை என்று செல்கிறாள். அப்படியா என்னுடைய கடிகாரத்தையும் பார்த்து விலை எல்லாம் விசாரித்தாரே என்று சொல்லி விட்டு ரவிதாசைப் பார்த்து என்ன சார் உங்கட பிரச்சினை எதுவானாலும் சொல்லுங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறம் என்கிறான். அப்போது ஒரு வெண்ணிற ஆடிக்கார் ஒன்று அன்னம்போல் அசைந்துவந்து அவர்கள் அருகில் நிக்கிறது. அதில் இருந்து தமையனைத் தேடி வந்த நிர்மலா இறங்கி வருகிறாள். அவளை பார்த்த சித்ராவும் அண்ணா இவர் நிர்மலா இவரின் தங்கை என்று முத்துவுக்கு அறிமுகம் செய்கிறாள். அந்நேரம் தங்கள் வீட்டின் முன்னால் கார் வந்து நிக்கும் சத்தம் கேட்டு திண்ணையில் இருந்து எழும்பிய சாமிநாதன் திரும்பி இவர்களைப் பார்க்க ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து தகப்பனைக் கண்ட நிர்மலா அண்ணா எங்கட அப்பா அண்ணா என்று சொல்லி விட்டு அப்பா அப்பா என்று கத்திக் கொண்டு உள்ளே சாமிநாதனை பார்த்து ஓடுகிறாள். பின்னாலேயே ரவிதாசும் அப்பா என்று அழுதுகொண்டு ஓட முத்துவும் சித்ராவும் ஒன்றும் புரியாமல் பின்னால் போகிறார்கள். ஓடிப்போய் தகப்பனின் காலைக் கட்டிப் பிடித்த நிர்மலா ஏனப்பா எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போனனீங்கள். உங்களை எங்கெல்லாம் தேடி அலைந்தோம் கிடைக்கவில்லையே என்று கதறுகிறாள். பின்னால் வந்த ரவிதாசும் தந்தையின் தோளில் முகம் புதைத்து அழுகின்றான். இதற்குள் மகேஸ்வரியும் சித்ராவும் முத்துவும் நிலைமையை ஓரளவு புரிந்து கொள்கிறார்கள். மகேஸ்வரி முன்னால் வந்து மெதுவாக நிர்மலாவின் தலையை வருடி தன்னுடன் அணைத்துத் தூக்குகிறாள். சாமிநாதன் கண்களில் இருந்தும் கண்ணீர் நிரம்பி கன்னங்களில் வழிந்தோடுகின்றது. அவரும் ரவிதாசை அணைத்துக் கொண்டு தேம்பி அழுகின்றார். ரவிதாசும் நீங்கள் எங்களை விட்டுட்டுப் போன சில மாதங்களிலேயே அம்மாவும் எங்களை அனாதையாக விட்டுட்டுப் போய் விட்டா அப்பா. உங்களை நாங்கள் தேடாத இடமில்லை. ஏனப்பா இப்படி என்று அழுகிறான். ஒருவாறு எல்லோரும் ஒருவரையொருவராக தேற்றிக் கொண்டபின் மகேஸ்வரி எல்லோருக்கும் தேநீர் போட உள்ளே போகிறாள்.முத்துவும் ரவிதாசும் சிநேகபூர்வமாய் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தோளில் சாய்ந்திருந்த நிர்மலாவிடம் சித்ரா அவரை முதன் முதல் சந்தித்ததில் இருந்து எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்கிறாள்.அதை எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தேநீர் குடித்தபின் அந்த இடங்களை பார்ப்பதற்கு ரவிதாசும் நிர்மலாவும் செல்கின்றனர். அப்போது பின்னால் வந்த முத்து சித்ராவிடம் கண் ஜாடை செய்து தனது கையில் இருந்த கடிகாரத்தைக் கழட்டி ரவிதாசிடம் தர சித்ராவும் கழுத்தில் இருந்து சங்கிலியைக் கழட்டுகிறாள். உடனே அவர்களைத் தடுத்த ரவிதாசும் கொஞ்சம் பொறுங்கோ, என்ன இது இவை உங்களுக்கு அன்போடு அப்பா தந்த பரிசுகள்.அவை உங்களிடமே இருக்கட்டும்.நாங்கள் இவற்றுக்காக இங்கு வரவேயில்லை முத்து, எங்கள் அப்பாவைப் பற்றி ஏதாவது விபரம் அறியலாம் என்றுதான் வந்தோம் வந்ததுக்கு அப்பாவே கிடைத்து விட்டார். இவ்வளவு நாளும் ஒரு விரக்த்தியில் வாழ்ந்திருந்தோம் இப்போதான் உயிர் வந்ததுபோல் இருக்கிறது. நீங்கள் எங்கள் அப்பாவை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கு நாங்கள் உங்களுக்கு எவ்வளவு செய்தாலும் ஈடாகாது என்கிறான்.........! பார்ப்போம் இனி.......! ✍️
  5. இது ஒரு நல்ல கேள்வி. இதில் வியப்பொன்றும் இல்லை கு.சா.......! பொதுவா 1990 க்கு முன்பெல்லாம் இவை போன்ற பெயர்கள் ஈழத்தமிழர்களிடம் பரவலாக நிறைந்து இருக்கும். அதுபோல் கிறிஸ்தவர்களும் குறிப்பான சில பெயர்களையே வைத்து வருவார்கள்.பாடசாலையில் ஆசிரிய/ ஆசிரியைகள் ஆனாலும் சரி, கூடப் படிக்கும் பிள்ளைகள் ஆனாலும் சரி பெரும்பாலும் 4/10 இந்தப் பெயர்களே இருக்கும். ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது......பலரும் எந்தவொரு அர்த்தத்திலும் வராத பெயர்களையே நாகரீகம் என்று பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள்.(எனது உறவுகளுக்குள்ளும் இது நடக்கிறது). ஆண் பிள்ளையெனில் தாய் தந்தையின் முதல் எழுத்துடன் "ன்" போட்டு விடுகிறார்கள். அப்படியே பெண் என்றால் "லா" அல்லது "னி" போட்டு விடுகிறார்கள்.....இங்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் மற்றும் தாங்கள் வசிக்கும் இடத்தின் பெயர் என்று வைத்து விடுகின்றார்கள். பார்த்து மௌனமாக கடந்து போக வேண்டியுள்ளது. அதனால் இந்த நாகரீகப் பெயர்களை நான் கூடியவரை தவிர்த்து விடுகின்றேன்......! 😢
  6. ஆடம்பரமும் அத்தியாவசியமும்.......! 👍
  7. அழகாக சொல்லப்பட்ட அருமையான கட்டுரை.....! 🌹 நன்றி வளவன்......!
  8. வணக்கம் வாத்தியார்.........! லைலா Like a like my லைலா Like a like your லைலா Like a Like my லைலா மன மன மன mental மனதில் லக்க லக்க லக்க பொல்லா வயதில் டக்க டக்க டக்க கொட்டும் இசையில் ஓ கே என் கண்மணி மடியில் Hey நேற்று என்பது இன்றில்லை நாளை நினைப்பே ஓ தொல்லை Like a like my லைலா லைலா இன்று மட்டும் king and queen ஆ லைலா... Like a like my லைலா Like a like your லைலா Like a like my லைலா கண்ணாலே கிள்ளாதே சீண்டாமல் செல்லாதே தொட்டாலே துள்ளாதே விட்டாலும் போகாதே கல்யாணம் கச்சேரி சம்சாரம் சம்மந்தி பெண்பிள்ளை ஆண்பிள்ளை அய்யய்யோ ஓ மானே.......! ---மன மன மன mental மனதில்---
  9. காற்றினிலே பெரும் காற்றினிலே .......! 😁
  10. பார்வை ஒன்றே போதுமே......... (12). அன்று வக்கீல் தவராசாவின் அலுவலகத்துக்கு கையில் பைலுடன் நிர்மலா வருகிறாள். அங்கு சித்ரா போன் பேசிக் கொண்டு இருக்கிறாள். பேசி முடித்ததும் போனை மேசையில் வைத்து விட்டு நிர்மலாவிடம் நலம் விசாரித்து விட்டு என்ன விடயம் நிர்மலா, ஒரு போன் செய்திருந்தால் நானே அங்கு வந்திருப்பன் என்கிறாள். நிர்மலாவும் பரவாயில்லை சித்ரா, இந்த ஒரு கேசில் உங்களின் ஆலோசனை தேவை என்று சொல்லி பைலை எடுத்து நீட்ட அதனுள் இருந்த பேப்பர்கள் சில கீழே விழுகின்றன. அடடா என்று நிர்மலாவுடன் சித்ராவும் குனிந்து அவற்றைப் பொறுக்குகின்றாள். அப்பொழுது சித்ராவின் ப்ளவுசுக்குள் இருந்து சங்கிலி டாலருடன் நழுவி கீழே தொங்குகிறது. அதைக் கவனித்த நிர்மலாவுக்கு அது தனது தந்தையின் செயின் போல் தோன்ற என்ன சித்ரா உங்களின் செயினும் டாலரும் அழகாய் இருக்கிறது, ஆனால் ஆண்களுடையது போல் இருக்கிறது என்ன. ஆமாம் நிர்மலா இது என் அப்பா நான் பட்டம் பெற்றபோது பரிசளித்தவர். ஓ ....அப்படியா நல்லாயிருக்கு என்று சொல்கிறாள். அப்படியே தற்செயலாக மேசைமேல் இருந்த போனைப் பார்த்ததும் அதுவும் தனது தந்தையுடையது போல் இருக்கவும் அங்கு அவளால் நிக்க முடியவில்லை. நீங்கள் இவற்றைப் பாருங்கள் நான் மாலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கிளம்ப, சித்ராவும் பரவாயில்லை நிர்மலா நானே கொண்டுவந்து தருகிறேன் என்றதும் சரி என்று சொல்லி உடனே கிளம்பி அவர்களுடைய அலுவலகத்துக்கு வந்து நேராக தமையனின் அறைக்கு சென்று நடந்ததை சொல்கிறாள். உடனே ரவிதாசும் வா போய் விசாரிப்பம் என்று வெளிக்கிட அவனை நிர்மலா தடுத்து அவள் மாலை இங்கு வருகிறாள் அப்பொழுது பக்குவமாய் விசாரிக்கலாம் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று தோன்றுகின்றது. அன்று மாலை சித்ரா பைலுடன் அங்கு வரும்போது நிர்மலாவோடு ரவிதாசும் வரவேற்பறையில் அங்கிருந்தான். இருவரும் கோப்பி குடித்துக் கொண்டிருந்தனர். சித்ராவிடம் நீங்களும் ஒரு கோப்பி குடிக்கலாமே என்று சொல்ல சித்ராவும் வேண்டாம் நன்றி என்கிறாள். அப்போது நிர்மலா தமையனிடம் அண்ணா சித்ராவின் செயினைப் பாரேன் வித்தியாசமாக அழகாக இருக்கிறது என்கிறாள். ரவிதாசும் எங்கே பாப்போம் என்று அவன் ஜாடையாய் கேட்டு அவள் மார்பை நோக்க, ம்....இருங்கள் கழட்டித் தருகிறேன் என்று சித்ராவும் செயினைக் கழட்டி அவனிடம் தருகிறாள்.அதை கையில் வாங்கி நன்றாகப் பார்த்த ரவிதாஸ் நானும் இதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அதை அவளிடம் தந்து விட்டு உங்களின் போன் நம்பரைத் தர முடியுமா எனக் கேட்கிறான். அவளும் அதுக்கென்ன என்று சொல்லி தனது போனால் அவனது நம்பரைக் கேட்டு அதுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைக்கிறாள். அப்போது அவர்கள் இருவரும் அந்தக் கைபேசியை நன்றாக உற்றுப் பார்க்கின்றனர். பின்பு பொதுவாக அவன் அவளை விசாரிப்பதுபோல் விசாரித்து அவளது இருப்பிடத்தையும் அறிந்து கொள்கிறான். அதன்பின் சித்ரா கிளம்பி செல்கிறாள். அப்போது நிர்மலா என்ன அண்ணா ஒன்றும் விசாரிக்காமல் அவளை அனுப்பி விட்டாய் என்று சொல்ல அதற்கு ரவிதாசும் இந்தப் பெண்ணைப் பார்த்தால் பொய்யானவள் போல் தெரியவில்லை, ஒருவேளை நமது அப்பா இவைகளை இவளது தந்தைக்கு விற்றிருக்கலாம். இவளின் தந்தையை சந்தித்தால் அப்பாவின் விபரம் தெரியவரும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல நிர்மலாவும் ஓம்...அதுவும் நல்ல யோசனைதான் என்று சொல்கிறாள். நாளைக்கு நானே நேரில் சென்று இவர்களை நோட்டம் விடப்போகிறேன் என்கிறான். அடுத்தநாள் ரவிதாஸ் மிகவும் சாதாரண உடுப்பு அணிந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சித்ராவினது வீட்டருகே சென்று நிறுத்தி விட்டு வேலியால் எட்டி எட்டி இவர்களது வீட்டை நோட்டம் விடுகிறான். அங்கே பட்டியில் மாடுகள் நிக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் முற்றத்தில் செல்லமாக முட்டி முட்டி விளையாடுகின்றன. அங்காலே வீட்டு விறாந்தையில் ஒருவர் இருக்கிறார்.மறுபுறம் திரும்பி அவர் இருப்பதாலும் தாடி மீசையுடன் இருப்பதாலும் அவனால் அந்த ஆளை மட்டுக்கட்ட முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து அவருக்கு தேனீர் குடுத்து விட்டு அவர் அதை அருந்தும் அழகை ரசிப்பதுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டு அருகில் நிக்கிறாள். அவன் தனக்குள் நினைக்கிறான் இவர்கள் சித்ராவின் பெற்றோராய் இருக்க வேண்டும் என்று. ரவிதாசுக்கு அந்தப் பெண்மணியின் வசீகரமான சாந்தமான முகம்தான் தெரிகிறது. இன்னும் அவரைத் தெரிய வில்லை. அதனால் அங்கும் இங்குமாக நடந்து வேலியால் எட்டி எட்டி அவர் முகத்தைப் பார்க்க முயன்று கொண்டிருக்கிறான். அப்போது பேப்பர், பால் எல்லாம் வீடுகளுக்குப் போட்டு விட்டு சையிக்கிளில் வீட்டுக்கு வந்த முத்து தனது வீட்டருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ரவிதாசைக் கண்டு மறித்து அண்ணே நீங்கள் யார் வேலியால எட்டி எட்டி பார்க்கிறீங்கள். இதற்குமுன் உங்களை நான் இங்கு பார்த்ததில்லையே என்று கேட்க ரவிதாசும் அவசரத்துக்கு என்ன சொல்வதென்று யோசித்து சட்டென்று தம்பி நான் மாடு வாங்க வந்தனான். முத்தத்தில் மாடுகளைக் கண்டதும் நின்று பார்க்கிறன். வீட்டுக்காரர் விப்பினமோ தெரியேல்ல என்று சொல்கிறான். ஓ....அப்படியா இது எங்களுடைய வீடுதான். ஆனால் நாங்கள் மாடுகள் விக்கிறதில்லை என்று சொல்லிவிட்டு சைக்கிள் ஹாண்டிலில் கை வைத்து திருப்ப முயல அவன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்த ரவிதாசும் உங்களின் கடிகாரம் அழகாய் இருக்கு, என்ன விலையிருக்கும் என்று இயல்பாகக் கேட்கிறான். தெரியவில்லை இது அப்பா எனக்கு பரிசாகத் தந்தது என்று சொல்லிவிட்டு, என்ன நீங்கள் மாடு வாங்க வந்ததாக சொல்லுறீங்கள். பின் கடிகாரம் பற்றி விசாரிக்கிறீங்கள், உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் என்று கொஞ்சம் கடுமையாக கேட்கிறான். முத்துவின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது........! பார்ப்போம் இனி ...................! ✍️
  11. ராஜாவின் நிகழ்ச்சியை பார்ப்பதும் கேட்பதும் இன்பம் அதிலும் தரையில் அமர்ந்து புற்களை கிளறிக் கொண்டே கேட்பது பேரின்பம் .......நீங்கள் அதிஸ்டக்காரர்.......! 👍
  12. தமிழச்சி விஜயகுமார் (36 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழச்சி & விஜயகுமார்.......! 💐
  13. வணக்கம் வாத்தியார்......! ஆண் : மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு ஆண் : நான்தான் உன் தோனி என்னோட வா நீ தங்கம்போல் பள பளக்குதடி உன்னோட மேனி ஆண் : நான்தான் உன் ரைனா குழு : ரைனா நீதான் என் குயினா குழு : குயினா வானத்தில் பறக்குது பார் கலர் கலரா மைனா ஆண் : அடி கட்ரினா கைஃப் நீதான் எனக்கு வைஃபூ என்னோட நீ இருந்தா நல்லா இருக்கும் லைஃப் குழு : அடி கட்ரினா கைஃப் நீதான் எனக்கு வைஃபூ என்னோட நீ இருந்தா நல்லா இருக்கும் லைஃப்......! ---மாட்டிக்கிச்சு---
  14. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்.........! 😢

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.