Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. அனேகரால் கண்டு கொள்ளப் படாமைக்குக் காரணம், யூ ரியூப் வீடியோக்களைப் பார்க்க அனேகருக்கு நேரம் இல்லை. இதனால் தான் யாழ் கள விதிகளில் வீடியோக்களை இணைப்போர், வீடியோவில் இருப்பது பற்றி "ஒரு சிறு விபரிப்பு கொடுக்க வேண்டும்" என்று இருக்கிறது (இந்த விதியை யாழ் கள மட்டுறுத்துனர் வீடியோ இணைக்கும் போது கூட பின்பற்றுவதில்லை😎). எனக்கு பொஸ்கோ பற்றி எதுவும் தெரியாது. இந்த இணைப்பின் தலைப்பைப் பார்த்த பின்னர் தேடினேன், அப்போதும் பொஸ்கோ என்ற தமிழ் நபர் பற்றிய செய்திகள் எவையும் கிடைக்கவில்லை. இவரது முழுப்பெயர் என்ன என்று தெரிந்தால் மீண்டும் தேடலாம்!
  2. இது சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்! சீமான் - மலையாள வழி வந்த தமிழர் - தங்களை ஆட் கொள்ளவும் தமிழர்கள் அனுமதித்து விட்டு நிற்கிறார்கள்!
  3. எங்கிருந்து இந்த கௌதமருக்கு இணையான "நடுநிலை" யைப் பெற்றீர்கள் திடீரென😂? எங்கள் சமூகத்தில் நடக்கும் ஒரு நிகழ்வில் றௌடித்தனம் செய்யும் றௌடிகளை லண்டன் பொலிஸ் தான் தட்டிக் கேட்க வேண்டி வந்திருக்கிறது! எதனால்? "நாம யாரு கேட்க?" என்ற உங்கள் திடீர் பௌத்த ஞான வாதம் தான் காரணமென நினைக்கிறேன்! ஆனால், இது கூட செவாலியர் நடிப்பு என்று தான் நான் கருதுகிறேன்! உண்மைக் காரணம் "நம் பக்தியின் பக்கம் றௌடிகள் நிற்கிறார்கள்!" என்பது தான் என நினைக்கிறேன்! இந்த முள்ளப் பன்னி, காட்டுப் பன்னி, பாம்பன் குழுவெல்லாம் பாவிக்கிற அளவு சொற்களை விட தீவிரமான சொற்களை நான் களத்தில் பாவித்தேன் என்று கூசாமல் பொய் பரப்பும் அளவுக்கு றௌடிகளின் விசிறியாகி விட்டீர்கள்😂! அச்சொற்களை நான் பாவித்த சமயங்களில் ஏன் முறையிடாமல் இருந்தீர்கள்? "பௌத்த ஞானம்😂?"
  4. திரியின் பேசு பொருளான றௌடிகளை விட மரியாதைக் குறைவான சொற்களையா நான் பாவித்து விட்டேன் என்கிறீர்கள்? எந்தச் "சொல்" ? உங்கள் நிலைப்பாடு என்று நீங்கள் சொல்லியிருப்பது ஒரு "முகமூடி" என்று தான் நான் சொல்கிறேன். அது தான் என் நிலைப்பாடு. சீமான் அணி எப்படி ஈழத்தமிழர்களை திராவிட அமைப்புகளோடு - அதுவும் தமிழகத்தில் பலமாக இருக்கும் திராவிட அமைப்புகளோடு - தன் சொந்த பதவி ஆசைக்காக மோத விட்டிருக்கிறது என்று எவ்வளவு காலமாக இங்கே சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது? அந்த "ஆப்பைப் பார்க்க மாட்டேன்" என்று நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு, நான் ஏதோ என் நிலைப்பாட்டிற்காக உங்களைச் செயல் படக் கேட்பதாக போக்குக் காட்டியிருக்கிறீர்கள்😂!
  5. "..உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்"😎 இவையெல்லாம் முகநூலில் லைக் வாங்க, அரங்கில் கைதட்டல் வாங்க உதவும் போலியான வாய் வீச்சுகள். நிச்சயமாக முதல் மனிதன் பேசிய மொழி என்னவென்று யாராலும் நிரூபிக்க முடியாது. அந்த நம்பிக்கை இருப்பதால், இது போன்ற பேச்சாளர்களுக்கு கைதட்டலும் விசிலும் கிடைக்கும் என நினைக்கிறேன்!
  6. 😂 யாருடைய விருதுக்காக இப்படி நடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை! தமிழகத்தில் எல்லோரும் தேவையென்றால், தமிழகத்தில் பல திராவிடக் கட்சிகளின் அடையாளமாக இருக்கும் பெரியாரைப் பற்றி போலித் தரவுகளையும் பொய்களையும் வைத்துக் கொண்டு வசவுகள் எறியும் சீமான் குழுவை அல்லவா நீங்கள் கண்டிக்க வேண்டும்? தனது போலித் தரவுகளில் "பிரபாகரன் தெளிவூட்டினார்" என்று ஈழத்தமிழர்களை இழுத்து விட்ட சாக்கடை அரசியல் வாதியை அல்லவா கண்டிக்க வேண்டும்? நீங்கள் கண்டிக்காமல் இருக்கக் காரணம் அவர் புலிக்கொடியையும் பிரபாகரன் படத்தையும் தாங்கியிருக்கிறார் என்பது மட்டும் தான். இப்போது கூட இந்தத் திரியில் றௌடிகளைக் கண்டிக்க உங்களால் இயலவில்லை. மாறாக றௌடிகள் செய்ததை மறைத்து, நிகழ்வை நடத்தியவர்களைக் குறை சொல்லும் ஒரு பதிவை மட்டும் தான் உங்களால் போட முடிந்தது.
  7. "தமிழ் காட்டு மிராண்டி மொழி" என்ற பின்னணியை வெட்டி விட்ட பெரியார் வாசகத்தை, கூகிள் துணுக்கை திரும்பவும் இங்கே தூக்கி வருகிறீர்கள் போல! இந்த "சருவச் சட்டி" 😎யெல்லாம் பல பேர் சேர்ந்து போட்டு மிதிச்சு முடிஞ்சுது, நீங்கள் இப்ப தான் புதிதாகப் பாக்கிறியள் போல!
  8. ஈழத்தமிழ் உலகம் நினைவிற் கொள்ள வேண்டியது, பேரறிவாளனின் விடுதலைக்கும், பின்னர் அதே வழக்கில் எஞ்சிய கைதிகள் விடுதலைக்கும் ஆட்சியில் இருந்த அதிமுக, திமுக ஆகிய "திராவிடக்" கட்சிகளின் செயல்பாடுகளும், அக்கறையும் பாரிய காரணங்கள்! "பட்டி மன்ற ஆவேசப் பேச்சுகள்" இந்தக் கைதிகளை விடுதலை செய்ய உதவவில்லை, அத்தகைய பேச்சுக்களால் இந்திய உயர் நீதிமன்றம் அழுத்தத்திற்குள்ளாகவில்லை. ஆதாரம், பேரறிவாளன் விடுதலையான செய்தியிலேயே இருக்கிறது👇: "..The court held that the Tamil Nadu Council of Ministers’ advice on September 9, 2018 to pardon Perarivalan was binding on the Governor under Article 161 (Governor’s power of clemency) of the Constitution" https://www.thehindu.com/news/national/supreme-court-invokes-extraordinary-powers-to-release-perarivalan/article65425403.ece
  9. எனக்கு இருந்த ஒரு வாக்கை (குடும்பத்தில் இரண்டு வாக்குகள்) "பலஸ்தீனர்களுக்கு அந்தப் பகுதியிலேயே ஒரு நாடு வர வேண்டும்" என்ற கொள்கையை சில தசாப்தங்களாகக் கொண்டிருக்கும் கட்சிக்கு நான் அளித்து என் கடமையைச் செய்தேன். அதே நேரம், பலஸ்தீனத்தில் இருந்து புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் மிச்சிகனில் எப்படி தங்கள் வாக்குரிமையை தங்கள் மண்ணுக்கே ஆப்பாக மாற்றினார்கள் என்றும் மேலே சுட்டிக் காட்டியிருக்கிறேன். பலஸ்தீன வழி வந்த அமெரிக்கர்களுக்கே காசா மீது வராத அக்கறை எனக்கோ, வேறு எந்த பலஸ்தீனம் சாராத அமெரிக்கருக்கோ வர அவசியமில்லை எனக் கருதுகிறேன்!
  10. அமெரிக்காவில் சீமானுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக ட்ரம்ப் இருக்கிறார்: ஒவ்வொரு முறையும் "இது தான் எல்லை, ரெட் லைன்" என்று எல்லோரும் நினைத்துக் கண்டித்துக் கொண்டிருக்கும் போது, "பண்ணிப்பார்!" என்ற தோரணையில் ட்ரம்ப் எல்லையைத் தாண்டி அடுத்த கோட்டுக்குப் போயிருப்பார். எல்லோரும் பொறுத்திருந்து பாருங்கள்: பொட்டம்மான் மீதான வசவு, இப்போது பெரியார் மீதான போலித்தகவல் அடிப்படையில் வசை என்று போய்க் கொண்டிருக்கும் சீமான், ஒரு கட்டத்தில் உரிய "தெளிவு"😎 பெட்டி/wire transfer வடிவிலோ அல்லது உயிர் அச்சுறுத்தல் வடிவிலோ கிடைக்கும் போது "பிரபாகரன் என்ன...?" என்ற வசவுடன் இன்னொரு கோட்டையும் தாண்டுவார். யாழ் கள சீமான் விசிறிகள் என்ன செய்வார்கள் அப்போது என்று காண்பதற்காகவே நான் இங்கே இருப்பேன்😂!
  11. ஏன்? H1B இனை மாற்றும் திட்டமெதுவும் ட்ரம்பிடம் இல்லை. H1B கோட்டா அதிகரிக்காது, ஆனால் விசா இருக்கும். சஞ்சய் ..சே ..விவேக் ராமசாமி மாற்ற விடார்! எனவே தொடர்ந்து வரிசையில் நில்லுங்கள்👍!
  12. நீங்கள் இருவரும் Sputnik news போல நம்பிக்கையான இடங்களில் செய்திகள் பார்ப்பதில்லைப் போல! சுரங்கத்தை அமைத்தது மட்டுமல்ல, இஸ்ரேல் காரர் தான் ஹமாஸ் வேசத்தில் வந்து 1200 இஸ்ரேலியரைக் கொன்றவை, சிலரை பணயமாகப் பிடிச்சு அப்படியே எகிப்துக்குக் கொண்டு போய் வைத்திருந்து விட்டு இப்ப காசாவுக்குள்ளால களவாகக் கொண்டு வாறாங்கள்😎!
  13. அப்பன், இது பொன்சி முறை-Ponzi Scheme தெரியாதோ😎? ஆக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொடுத்துத் தான் பிரமிட்டின் உச்சிக்கு வரலாம், அப்ப இருநூறு ரூபாய் கிடைக்கலாம்! புது பல்போடு வந்தவுடன் ஒன்றும் கிடைக்காது!
  14. இரண்டு பேரும் பந்தயத்திற்குரிய பணத்தை நடு நிலை trustee ஆக செயல்படக் கூடிய என்னிடம் தந்து வையுங்கள்! நான் பத்திரமாகப் பாதுகாத்து முடிவிற்கேற்ப உரியவரிடம் பணத்தை ஒப்படைக்கிறேன்😎!
  15. ட்ரம்பே "பலஸ்தீனரை காசாவில் இருந்து நிரந்தரமாக அகற்றுவது தான் நோக்கம்" என்று சொல்லியிருக்கிறார்! இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்களென தெரியவில்லை😂. https://www.bbc.com/news/articles/cn57neepx4vo US President Donald Trump has said the two million Palestinians who would be resettled in neighbouring countries under his plan to take over and rebuild the Gaza Strip would have no right of return. "No, they wouldn't, because they're going to have much better housing," he told Fox News. "I'm talking about building a permanent place for them."
  16. இது சரியான தகவல் அல்ல. ட்ரம்ப் பொலிசாரும் ஒருவரின் குடிவரவு நிலையை கேள்வி கேக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அமெரிக்காவின் மிகப் பெரும்பாலான நகர , மாநில காவல் துறையினர் ஒருவரின் குடிவரவு நிலையை (immigration status) கேள்வி கேட்க அதிகாரமில்லை. அப்படிக் காவல் துறை குடிவரவு நிலையைக் கேட்டாலும், தடுத்து வைக்கப் படுபவர் சொல்ல வேண்டிய கடமை இல்லை. இதை "right to remain silent" என்பார்கள். இந்த சட்டப் பாதுகாப்பு அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டு வெவ்வேறு திருத்தங்களில் (5th and 14th amendments) உள்ளடக்கப் பட்டிருக்கிறது. அமெரிக்காவினுள் - சட்ட ரீதியாகவோ, சட்ட விரோதமாகவோ- வசிக்கும் அனைவருக்கும் இந்த அரசியலைப்பு விதிகள் பொருந்தும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சில தடவைகள் உறுதி செய்திருக்கின்றன. எனவே, நகரகாவல் துறை, மாநில காவல்துறை குடிவரவு நிலையைக் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லை.
  17. ஓம், AI! நெடுக்கர் சொல்வது என்னவென்றால், கடந்த இரு வாரங்களாக வெவ்வேறு திரிகளில் இணைக்கப் பட்ட புலிகள், பெரியார், பிரபாகரன் பற்றிய grainy VHS-grade காணொளிகளை தூக்கிக் கடாசி விட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப் பட்ட பொய்க் காணொளிகளையும் , படங்களையும் வைத்து வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார். இதைத் தான் சீமான் தம்பிகள் யாழுக்கு வெளியே செய்து கொண்டிருக்கிறார்கள் - யாழில் அவற்றை இணைக்கும் போது தூக்கி விடுகிறார்கள் அல்லது கருத்தாளர்களிடம் கல்லெறி கிடைப்பதால் அதைப் பற்றி முறைப்படுகிறார்கள்! புரிகிறதா உங்களுக்கு😎?
  18. இள வயதிலிருந்தே "கைதட்டலுக்கும், விசிலுக்கும் பேச்சு" என்று பழக்கி dopamine craving உடைய தமிழ் அரசியல் வாதிகளை காலா காலமாக உருவாக்கி வருகிறோம். இப்படிப் பேசாதோருக்கு வாக்கும் இல்லை, மரியாதையும் இல்லை என்ற நிலை நல்லதோ தெரியவில்லை. Dopamine craving என்றால் என்னவென்று அறிய ஒரு நல்ல கட்டுரை: https://www.npr.org/2022/03/31/1090009509/addiction-how-to-break-the-cycle-and-find-balance
  19. சீமான் ஆதரவாளர்கள் ஒருவரையும் இங்கால காணவில்லை. "தொண்டையில் முள்ளா" அல்லது "மௌனம் சம்மதம்" என்ற நிலையா தெரியவில்லை😂!
  20. பைடன் இல்லாமல் சிவப்புக் கட்சியின் தலைவர் ஆட்சியில் இருந்திருந்தால் காசாவின் மீது பூக்கள் தான் தூவியிருக்கும் இஸ்ரேல் என்று "நம்புகிறோம்" 😎! காசா மீது இஸ்ரேல் செய்தது படுகொலை என்று நீங்கள் யாழுக்கு வராமல் இருந்த போதே எழுதியவர்கள் தான் இந்தத் திரியிலும் எழுதுகிறார்கள். ஆனால், ஒரு தரப்பு அடிக்கடி இங்கே தங்கள் உடைந்த அறத் திசைகாட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து திரிக்கொரு திசையாக எழுதுவது வழமை: "காசாவில் இஸ்ரேல் புகுந்து செய்தது அநியாயம்".."ஆனால் உக்ரைனில் ரஷ்யா புகுந்து செய்தது நியாயம்". "ட்ரம்ப் வந்தால் உலக அமைதி நிலைக்கும், அவர் தான் வேண்டும்!" இப்போது ட்ரம்ப் வந்து "காசாவை பலஸ்தீனரிடம் இருந்து புடுங்கி இஸ்ரேலுக்கு கொடுப்போம்" என்றால் உடனே "கோமா" போல மௌனம். இத்தகையோரின் flip-flop show இல் நீங்கள் நடிகராக இல்லா விட்டால், நீங்களும் உருண்டு பிரண்டு சிரியுங்கள்😎!
  21. அமெரிக்க குடிவரவுத் திணைக்களம் "கொலம்பியாவை வந்து கூட்டிப் போகுமாறு அழைத்ததாக" எந்த ஆதாரமும் செய்தியில் இல்லை. இந்தியர்களைக் கொண்டு போனது போல அமெரிக்க C-17 இராணுவ விமானத்தில் அனுப்பி வைத்த போது, தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பியது கொலம்பியா, பின்னர் தாமே தம் விமானத்தை அனுப்பினர். இது வெளிநாட்டுப் பயண ஏற்பாடுகளில் அனுபவம் கொண்ட உங்களுக்கு புரியாத விடயமாக இருக்காது.
  22. சீமானை ஆதரிக்கும் தமிழக மக்கள் பேச்சிற்கு மயங்கும் "விசிலடிச்சான் குஞ்சுகள்" என்று மறைமுகமாகச் சாடியிருக்கிறார்😂!
  23. நீங்கள் தாராளமாகத் தட்டுங்கள், அதை விட நீங்கள் யாழில் வேறு எதையும் செய்ததாக நான் இத்தனை ஆண்டுகளில் காணவில்லை😂! ஆனால், உரையாடப் படும் விடயத்தில் விமர்சனம் வைக்காமல், அஞ்சாப்பு, அரிவரி என்று நீங்கள் அலைவது தாழ்வுச் சிக்கல் என நினைக்கிறேன்! நீங்கள் பல்வேறு திரிகளிலும் எழுதும் கருத்துக்களைப் பார்க்கையில் புரிந்து கொள்ளக் கூடியதே😎! நீங்கள் எங்கே போய் எதைக் கற்றாலும் இறுதியில் எஞ்சுவது உங்கள் அரசியல் பார்வைக் கண்ணாடியூடாக உங்களுக்குக் கிடைக்கும் பார்வை தான்: #பிபிசி பொய், முகநூல் துணுக்கு மெய்!😂
  24. க்ளூ தந்திருக்கிறாரே மேலே? VW தான், அதிலும் பழைய VW Beetle ஆக இருக்கும் என ஊகிக்கிறேன்😂! நான் சொல்வது தவறாக இருக்கலாம் (வசி "ரச்"😎)
  25. 😂 ஏழுமலையான் எந்த உலகத்தில் இருந்து எழுதுகிறார் என விளங்கவில்லை. சட்ட விரோதமாக இருப்போரை "வந்து அழைத்துப் போங்கோ" என்று நாடுகளுக்கு அறிவிப்பார்களாம். நாடுகளும் வந்து கௌரவமாக அழைத்துப் போகுமாம். எந்த நாட்டில் இது நடக்கிறது😂? அமெரிக்காவில் இவ்வளவு சட்ட விரோதக் குடியேறிகள் தேங்கக் காரணம், பிடித்து அடைத்து வைக்காமல், பெயரைப் பதிந்து விட்டு வழக்கைப் பின் போட்டு விடுவர். பிணையில் வெளியே விடப் பட்டவர், வழக்கிற்கு வராமல் ஒளித்து வாழ்ந்து கொண்டிருப்பார். இதை going underground என்பார்கள். இதற்கு ஒரே வழி, கைது செய்து, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றி விடுவது தான். உடனடியாக வெளியேற்றா விட்டால், சட்டத்தரணி நீதி மன்றில் தடையுத்தரவு வாங்கி, ஒரு குடிவரவு நீதிபதியின் முன் ஆஜராக்கக் கோர முடியும். நீதிபதியப் பொறுத்து அவரது விண்ணப்பம் நிராகரிக்கப் படும் அல்லது மேலும் பரிசீலிக்கப் படும். இதனால் தான் உடனடியாக அனுப்பப் படுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து சுய விருப்பில் (voluntary) வெளியேறும் குடியேறிகள் மட்டும் தான் பயணிகள் விமானத்தில் பயணிப்பர். ஏனையோர் காலா காலமாக சரக்கு விமானங்களில் கிடைக்கும் ஓரிரு ஆசனங்களில் அமர்த்தப் பட்டுத் தான் நாடு கடத்தப் படுவர். இந்த C-17 இராணுவ விமானம், துருப்புகள் பயணிக்கும் விமானம். முன்னேற்றம் (upgrade) என்று சொல்லலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.