Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. சூழல் சுத்தம் மிக நல்ல விடயம், வரவேற்கத் தக்கது, தொடர வேண்டும். ஆனால் பெரிய விடயங்களில் ஒழுக்கமில்லாமல் சிறிய விடயங்களில் கவனம் செலுத்துவதால் பயன்கள் இல்லை. உதாரணமாக, தன் தம்பிகளுக்கு மரியாதையாகப் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்கம் வலியுறுத்தப் படுமா? இல்லை. ஏனெனில் கட்சியின் மூலதனமே அந்த றௌடியிசம் தான்!
  2. கொஞ்சம் செவி மடுத்த போது "ஒழுக்கம்.." பற்றி ஏதோ போதனைகள் நடப்பது போலப் புரிந்தது? "சட்டத்தின் ஓட்டைகளூடாகப் புகுந்து தப்புவது" ஒழுக்கம் என்பதற்குள் அடங்காது போல😂?
  3. உறவே, ஏன் இந்த குத்தி முறியும் சால்ஜாப்பு😂? "திராவிட மொடல் மட்டும் தான் தமிழ்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு ஒற்றைக் காரணம் - the only factor" என்று சொன்னால் ஒரு ஐந்தாம் வகுப்பு சமூகக் கல்வி படித்த பிள்ளை கூட ஏற்றுக் கொள்ளாது, நான் எப்படி அதைச் சொல்வேன்? ஆனால், முக்கியமான ஒரு காரணம் - critical factor அது. எப்படி? நீங்கள் சொல்லும் ஏனைய காரணிகளையும் வைத்துக் கொண்டு, திராவிடத்தை அகற்றி பீகார், உத்தர பிரதேசம் போல பிஜேபி பாணி ஆட்சி இருந்தால், தமிழ்நாடு வளர்ந்திருக்காது. எனவே, தான் திராவிடக் கொள்கைள் முக்கியமான காரணி - critical factor என்கிறேன். திராவிடக் கொள்கைகள் சிறுகச் சிறுக கட்டியெழுப்பிய சமூகச் சூழல், அரசியல் சூழல் என்பவை ஸ்திரத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஸ்திரத்தன்மை தான் திராவிடக் கொள்கையின் ஒட்டு மொத்த நல்ல விளைவு. இதில் இருந்து தான் திராவிடக் கொள்கையின் பொருளாதாரம் மீதான முக்கிய செல்வாக்கு உருவாகிறது.
  4. திராவிட மாடல்: மதச்சார்பின்மை (பிரான்ஸ் போல தடை இல்லை, ஆனால் அரச ஆதரவில்லை) பெண்கள் கல்வி, உரிமைகள் ஊக்குவிப்பு, இதனால் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பு சாதிக்கெதிரான அரச கொள்கைகள் - இதனால் அந்த மக்களினதும் பங்களிப்பு. மிகப் பெரிய காரணி..இந்தியாவுக்கு வெளியே இருந்து முதலீடு செய்ய எந்த மாநிலம் சிறந்தது என்றால், கம்பனிகள் தமிழ்நாடு உட்பட்ட, தென்னக மாநிலங்கள் 3 இனைத் தான் விரும்புகின்றன (போன ஆண்டே ஒரு கட்டுரை வந்திருந்தது, இங்கே இணைக்கப் பட்டது). இதெல்லாம் திராவிட கொள்கைகளால் வந்த ஸ்திரத்தன்மை-stability, அதனால் வந்த முதலீடும், இலாபங்களும். இதை 2023 2024 இற்குள் சுருக்கி விடாதீர்கள், கட்டுரையை முழுவதும் வாசித்து அறிந்து கொண்ட பின் எழுதுங்கள். கருணா நிதி, ஜெயலலிதா, எடப்பாடி இருந்த காலங்களிலும் இதே கொள்கை, இதே போன்ற வளர்ச்சி. மத்திய அரசின் போக்கைச் சொல்கிறீர்கள். அது பொதுக்காரணி-common denominator, அப்படியானால் ஏனைய மாநிலங்களும் தான் வளர்ந்திருக்க வேண்டும். நிதி முகாமையில் இருக்கும் உங்களுக்கு இது புரியாமல் இருக்காது. ஆனால், சில ஆண்டுகள் முன்பு இதே போன்ற உரையாடலில், எந்திரிமார் அடிப்படைக் கணக்கையே தூக்கிக் கடாசி விட்ட மாதிரி, நீங்களும் உங்கள் பொருளியல் அறிவை மடக்கி வைத்து விட்டு வந்திருக்கிறீர்களென நினைக்கிறேன்😂.
  5. Tamil Nadu’s Gross State Domestic Product grew 8.23% in 2023-24 The State’s average economic growth rate was 5.80% in real terms from 2012-13 to 2020-21. The growth rates for 2021-22, 2022-23, and 2023-24 were 7.89%, 8.13%, and 8.23% respectively at constant prices. The HinduTamil Nadu’s Gross State Domestic Product grew 8.23% in 2...Tamil Nadu's economic growth, per capita income, and sector-wise contributions compared to national averages from 2012-24. "திராவிட மாடல்" காரணமாக தமிழ்நாடு பொருளாதாரத்தில் ஏறுமுகமாகத் தான் இருக்கிறது. NB: இத்தகைய ஒரு தகவலை சில ஆண்டுகள் முன்பு இங்கே யாரோ பகிர்ந்த போது "இந்த காலாண்டுகளின் வளர்ச்சி வீதங்களைக் கூட்டி, 12 ஆல் பிரித்து வரும் இலக்கத்தைத் தான் நான் ஏற்றுக் கொள்வேன்!" என்று அடம் பிடித்த எந்திரிமாரும் இருக்கீனம்! கண்மூடித்தனமான திராவிட எதிர்ப்பு, கற்ற பிரயோக கணிதத்தை தூக்கிச் சாப்பிட்ட கணம் அது😂!
  6. கொஞ்சம் பொறுத்திருங்கள்: போன கட்சிகள் எல்லாம் ஒத்துக் கொண்ட நிலைப்பாட்டை மத்திய அரசு நிராகரித்து அறிக்கை விட்டால், சீமான் முகாம் விடும் யூ ரியூப் காணொலியின் தலைப்பு: "பகிஷ்கரித்த நாதக, பிசுபிசுத்துப் போன தமிழக கட்சிகள் தீர்மானம்"😂
  7. சொல்ல வேண்டியதை மட்டும் தான் சொல்ல முடியும்! விளங்கிக் கொள்வது கேட்பவர்/வாசிப்பவரின் இயலுமையைப் பொறுத்தது!😎
  8. எக்ஸ்யூஸ்மி விசுகர்😎? யாருக்கு, யார் உதவவில்லையென முறைப்பாடு செய்கிறீர்கள்? பிரபாகரன் படத்தை, புலிக்கொடியை வைத்து தனக்கு வாக்கு சேகரிக்கும், திரள் நிதி சேர்த்து தன் குடும்பத்திற்கு மாட மாளிகை கட்டும், பிள்ளைகளை ஆங்கில, தனியார் பாடசாலைகளில் படிப்பிக்கும் ஒரு தமிழக சராசரி அரசியல் வாதிக்கு உதவவில்லையென்கிறீர்களா? புலத்திலும், வெளிநாடுகளிலும் உதவி தேவையான எத்தனை ஈழமக்கள் இருக்க, பத்தோடு பதினொன்றாக இருக்கும் இன்னொரு தமிழக அரசியல் வாதிக்கு , அவரது குற்றங்களை நியாயம் செய்ய நாம் உதவ வேணுமா? ஏன்?
  9. இங்கே இருப்போர் எல்லோரும் கருத்தாளர்கள், தனி மனிதர்கள். ஒரு சிலர் , நான் "சத்தமாகக் கல் உடைத்தேன், தூணாக இருந்தேன்" 😎 என்று பிரபலம் தேடலாம், அது அவர்கள் உரிமை. ஆனால், ஏனையோர் சாதாரண கருத்தாளர்கள். எனவே, சீமான் போன்ற மக்களிடம் திரட்டிய பணத்தில் வாழும் அரசியல் வாதிகளோடு ஒப்பிட்டுப் பேச இயலாது. குறிப்பாக, இங்கே இருக்கும் கருத்தாளர்கள் மீது ஒரு பாலியல் சார்ந்த குற்றச் சாட்டும் இல்லாத போது, நிச்சயமாக சீமான் போன்ற ஒருவரோடு அவர்களை ஒப்பிட இயலாது. இதைத் தான் சரியாகச் சுட்டிக் காட்டினேன்: நீங்களும் சரி, உங்களுக்கு ஒழிந்து நின்று பச்சை போட்டு மகிழ்வோரும் சரி, மண்டை கழுவப் பட்ட சீமான் தம்பிகளின் இயல்புகளையே காட்டுகிறீர்கள் என! சீமான் என்ற குற்றசாட்டை எதிர்கொள்ளாமல் ஓடி ஒழிந்து கொள்ளும் (அதுவும் அவர் எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தியத் தேசியத்தின் உச்ச கோர்ட்டில் ஒளிந்து கொள்ளும்😂) பிரபலத்தை தாக்கினால், நாம் தாக்குபவரின் குடும்பத்தைத் தாக்குவோம் என்ற சீமான் தம்பிகள் மன நிலையை - அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்!
  10. அதிகம் பதறினால் இது நடக்கும். இங்கே எங்கள் ஆட்கள் (இந்திய, இலங்கை வம்சாவழியினர்) யாராவது வளர்ப்பு நாயை நடை பாதையில் கூட்டி வருவதைக் கண்டால், அரை மைல் தூரத்திலேயே வீதியின் மறு கரைக்குப் போய் விடுவார்கள்😂. அவ்வளவு பயம். ஆனால், இங்கே அனேக வளர்ப்பு நாய்கள் பழக்கப் பட்டவை, உரைத்துக் குரைக்கக் கூட முடியாதவை. அதிலும் Labrador போன்ற சாதுவான வகை நாயினம் என்றால் ஓனர் தான் அதனை அணில், பூனை ஆகியவற்றிடமிருந்து பாதுகாக்க வேண்டும்! அவ்வளவு சாது இவை!
  11. எங்கள் வயது மட்டத்தினருக்கு வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட காலம் என்றால் இந்த இந்திய இராணுவக் காலம் தான். ஏற்கனவே நான் சில தடவைகள் "மண்டையன் குழு" தொடர்பாக அங்காங்கே எழுதியிருக்கிறேன். கணக்கு, விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் என்று சகல பாடங்களிலும் திறமையாக இருந்த பல சக வகுப்பு மாணவர்கள் இந்திய இராணுவப் பிரச்சினையோடு ஊரை, நாட்டை விட்டு நீங்கினார்கள். சிலர் படிப்பை விட்டு ஐரோப்பாவில் கிடைத்த தொழில்களைச் செய்ய ஆரம்பித்து தற்போது நன்றாக இருக்கிறார்கள். சிலர் இந்தியாவில் படிக்க ஆரம்பித்தார்கள். குடும்பங்கள் சிதறிப் போன காலமும் இது தான். எங்கள் சின்ன அண்ணருக்கு, ஷெல், ஹெலி, சியாமாசெட்டி, ஆமி என்றால் மிகவும் பயப்படுவார். இந்தியன் ஆமிக்கு இவரது பயமே சந்தேகமாகத் தெரிந்திருக்கும் போல, 3 தடவைகள் சுற்றி வளைப்பில் கைது செய்து கொண்டு போய் ஒரு நாள் வைத்திருந்து விடுவித்தார்கள். அந்த நேரங்களில் அப்பாவும், அம்மாவும் எதுவும் செய்ய இயலாமல் அந்தரிக்கும் நிலை எனக்கு இன்னும் நினைத்தால் சோகம் வரும். இதனாலேயே சின்ன அண்ணரை, அவரது அரசாங்க வேலையையும் விட்டு விலக்கி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். "உனக்கும் மீசை அரும்பீற்றுது, நீயும் வீட்டோட இரு" என்று என்னையும் வீட்டோடு பொத்தி வைத்துக் கொண்டார்கள். பொழுது போக்க வேற வழியில்லாமல் தான் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிற பழக்கம் வந்தது. பிறகு அந்தப் பழக்கமே, சராசரியாக இருந்த படிப்பை உயர்த்திக் கொடுக்கக் காரணமாக இருந்தது. துன்பத்திலும் ஒரு silver line என்று சொல்லலாம்!
  12. சந்தேகம் வேண்டாம். தியரி பிழை😂. நாய் போன்ற வேட்டைக்குப் பழக்கமான மிருகங்களை முன்னே நின்று நேரே கண்களைப் பார்த்தால், அவை உங்களை அச்சுறுத்தலாகத் தான் பார்க்கும்! அதனால் நிச்சயம் கடிக்கவே செய்யும். ஏராளன் சொல்வது போல, ஓடினால் நாய் துரத்துவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனெனில், வளர்ப்பு நாய்க்குக் கூட, ஓடும் ஒன்றைத் துரத்த வேண்டுமென்ற default setting இருக்கிறது. இதனால் தான் வளர்ப்பு நாய் உள்ள வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எனவே, கடி வாங்காமல் இருக்க ஒரே வழி, கடி நாய்/தெரு நாயைத் தவிர்ப்பது தான். அப்படித் தவிர்க்க முடியா விட்டால், பையப் பைய (கூலாக ஒரு பாட்டை முணுமுணுத்தபடி) சாதாரணமாக நடந்து போக வேண்டும்😂. திரும்பிப் திரும்பி பார்த்து வேகமாக நடந்தால், கடி வாங்கும் வாய்ப்புகள் அதிகம். என் அனுபவத்தில் சுவாரசியமான விடயம்: நான் மிருக வைத்தியராக வருவதற்கு முன்னர் 3 தடவைகள் நாய்க் கடி வாங்கியிருக்கிறேன். மிருக வைத்தியராக வந்து நூற்றுக் கணக்கான நாய்களைக் கையாண்ட போது, ஒரு தடவை கூடக் கடி வாங்கவில்லை. எந்த விலங்கை எப்படி அணுக வேண்டுமென்ற பயிற்சியை முதல் வருடத்திலேயே தந்து விடுவார்கள்.
  13. இதெல்லாம் கோர்ட் தீர்மானிக்க வேண்டியது, விரும்பி இருந்தாரா, ஆசை காட்டி ஏமாற்றியதால் இருந்தாரா என்று - இனி கோர்ட்டும் தீர்மானிக்காது, சீமான் உச்ச நீதி மன்றில் போய் ஒளிந்து கொண்டதால். அதுவல்ல முக்கியம்: சீமான் உங்களுக்கு யார், நான் உங்களுக்கு யார்? நான் ஒரு சக கருத்தாளன், என் குடும்பம் இங்கே விவாதத்தில் இல்லை! ஒரு பிரபலம் கடந்த சில நாட்களாக நடந்து கொண்ட விதம், இந்திய இராணுவ விங் என்று புதிதாக ஆரம்பித்திருப்பது போல பாலியல் குற்றவாளிகள் விங் என்றும் தொடங்கலாம் என்றேன். இதற்காக, என்னை நீங்கள் தாக்கும் அளவுக்கு உங்களுக்கு "சுட்டு" விட்டதா? அப்படியானால் நீங்கள் சீமானா😂? அல்லது சீமானின் அடிமையா? கருத்தொன்று உங்களை நோக்கி சொல்லப் படுகிறதா அல்லது வாதத்தின் மையப் பொருளான அரசியல்வாதி நோக்கிச் சொல்லப் படுகிறதா என்ற அடிப்படைத் தெளிவை வாசித்துப் பெற இயலாமல், ஏன் பெயரில் மட்டும் "தமிழ்" வைத்திருக்கிறீர்கள்😂? இந்த போலிப் பந்தாவைத் தான் "சீமான் தம்பிகளின் இயல்பு" என்றேன்!
  14. இதில் இயற்கைக்கு மாறாக என்ன இருக்கிறது? பறவையின் முட்டைக்குள் இருக்கும் மஞ்சள் கரு தான் பறவையின் நிஜமான முட்டை (ovum). சில சமயங்களில், இரண்டு முட்டைகள் (ova) ஒரே நேரத்தில் வெளியிடப் பட்டு, பலோப்பியன் குழாயினூடாகச் சென்று, முட்டைக் கோதுக்குள் அடைபட்டு நாம் சாதாரண பேச்சு வழக்கில் அழைக்கும் முட்டையாக (egg) வெளிவரும். இது இளம் கோழிகளில் சாதாரணம். இயற்கைக்கு மாறாக எதுவும் இதில் இல்லை. Enjoy the double yolk😂!
  15. இவரையும் நீங்கள் அண்டர்கவரில் பின் தொடர்கிறீர்களா விசுகர்? 😂
  16. இதை நீங்கள் சீமானுக்குத் தான் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். அவர் அல்லவா 3 மாதங்களில் சென்னை நீதிமன்றம் முடிக்கும் படி சொன்ன வழக்கை, "விசாரிக்கக் கூடாது" என்று உச்ச நீதிமன்றில் மனு செய்தவர்😂?
  17. ஒரு பெண் - அவர் யாராக இருந்தாலும்-பாலியல் ரீதியான ஒரு குற்றம் தனக்கு இழைக்கப் பட்டதாக நீதி கோரியிருக்கிறார். அதைக் குறித்தும், பெண் சார்பாகப் பேசுவோர் குறித்தும் இங்கே தூக்கலாக நக்கல் அடிக்கும் உறவுகளுக்காக இந்த உண்மைச் சம்பவத்தைப் பகிர்கிறேன்: https://people.com/sports/kyle-stephens-larry-nassar-sexual-abuse/ லரி நசார் (Larry Nassar) என்ற ஒரு காமுகன், மிச்சிகனில் ஒரு பல்கலையில் 150 வரையான பதின்ம வயதுப் பெண்களை 10 ஆண்டுகளாக பாலியல் இம்சை கொடுத்து வந்தான். அமெரிக்க ஜிம்னாஸ்ரிக் அமைப்பின் உத்தியோக பூர்வ மருத்துவர் என்ற போர்வையில் தான் அனேகமான இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்தன. ஆனால், கைல் ஸ்ரிபன்ஸ் (Kyle Stephens) என்ற ஒரு பெண் மட்டும் லரி நசாரின் குடும்ப நண்பரின் மகள். அவரை 6 வயது முதலே , அவளது வீட்டில் வைத்தே பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறான் நசார். 12 வயதான போது கைல் ஸ்ரிபன்ஸ் இதை தன் பெற்றோரிடன் சொல்லியிருக்கிறார். முதலில் இருவரும் நம்பவில்லை. பின்னர், தாய் மட்டும் நம்பியிருக்கிறார். ஆனால், பிள்ளை 18 வயதாகி, பல்கலை செல்லும் வரையில் கைல் ஸ்ரிபன்சின் தந்தை அவரை நம்பாதது மட்டுமல்ல, அடிக்கடி "லரி நசாரிடம் மகள் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று வேறு சொல்லி தொல்லை கொடுத்திருக்கிறார். இறுதியில், 150 பேர்களை லரி நசார் துஷ்பிரயோகம் செய்த ஒருவன் என்ற செய்தி பகிரங்கமான போது தான், கைல் ஸ்ரிபன்சின் தந்தை நம்பினாராம். ஆனால், இத்தனை ஆண்டுகளாக தன் மகளைத் தானே நம்பாமல் சித்திரவதை செய்ததை எண்ணி, இறுதியில் தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொண்டார் கைல் ஸ்ரிபென்சின் தந்தை. Bottom line? இத்தகைய விடயங்களை உங்களுக்குக் "கிச்சு கிச்சு மூட்டும் நக்கல்களாக-amusement" மாற்றும் போது உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் கண்ணில் படாமல் நக்கல் செய்து கொள்ளுங்கள்! இப்படியான விடயங்களை நகைச்சுவையாக்கும் ஆண்களிடம், வீட்டுப் பெண்கள் ஒரு போதும் மனந்திறந்து தமக்கு ஏதும் அனியாயம் நிகழ்தாலும் சொல்ல மாட்டார்கள்!
  18. இந்த விடயத்தில், உயர்நீதிமன்றத்தின் ஏனைய இரு நீதிபதிகள் சொல்வதையும் பாருங்கள்: The HinduJustice G.R. Swaminathan passed orders ‘hastily’ in Savuk...Justice G. Jayachandran of the Madras High Court has said that Justice G.R. Swaminathan has exhibited bias against the State police by “showing interest in passing orders hastily without consulting... “Rarely such [a] thing happens to a judge while discharging the duty. Even if such event happens, past history of this court says, judges used to report it to the Chief Justice and/or take action for interfering in the administration of justice and/or recuse from hearing the case. From the words of the learned judge, he being triggered by approach of two emissaries, has been forced to bypass the normal course.” "இந்த அசாதரணமான, அரிதான தலையீட்டை , தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பது தான் முறையாக இருக்கிறது" தற்போது சீமான் மீது உயர் நீதிமன்றம் வழங்கிய "உரிய முறையில் விசாரித்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள்" என்ற ஆணை, எப்படி சீமானுக்கு எதிரான ஒரு ஆணை என்று விளக்குங்கள்? மைனஸ் துப்பாக்கியெல்லாம் ஜுஜுபி சாரே😂! உங்கள் பச்சை பலன்சைக் கூடப் பாதிக்காது! ஆனால், உங்களிடம் நிஜமாக மரியாதை வைத்திருக்கிறார்கள். கூண்டெல்லாம் பஞ்சு மெத்தை துணிந்தவர்களுக்கு! யாழில் அடிக்கடி எனக்குக் கிடைக்கிற "மரியாதையை" 😎 வைத்துச் சொல்கிறேன்!
  19. அப்ப இப்பவும் "அண்டர்கவர் ஒபரேசன்" தான் திட்டம்😂? நல்லது, நமக்கும் இப்ப ஜேம்ஸ் பொண்ட் 007 படங்கள் இல்லாமல் அலுப்படிக்கிறது! யாழ் கள 007 களையாவது பார்த்து பரவசமடைவோம்😎!
  20. எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see something, say something" "ஏதும் சந்தேகத்துக்கிடமாகக் கண்டால், உம்மென்றிருக்காமல் வாயைத் திறந்து சொல்லு" என்பது தான் தொனி. இதை அமெரிக்கர்கள் எல்லோரும், எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றியிருந்தால் இன்றைக்கு உலகம் தலைகீழாக மாறியிருக்காது! 2015 இலேயே வெட்டிப் போட்டிருக்க வேண்டிய விஷச் செடியை, சின்னச் சின்ன லாபங்கள், கோபங்களுக்காக சிலர் ஆதரிக்க, ஆதரிக்காதோர் மௌனமாக இருக்க, இன்று அந்த விஷச் செடியே உலகின் சக்தி மிக்க அரசைச் சுற்றி வளைத்திருக்கிறது. பாடம்? சிறிதோ, பெரிதோ - பிழையை, மொள்ளமாறித்தனத்தை சுட்டிக் காட்டவும், போட்டு மிதிக்கவும் வேண்டும்! நாம் மிதிப்பதால் உலகம் மாறிவிடுமா என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்காமல், அறரீதியில் சரியான பக்கம் நிற்கவும், பேசவும் வேண்டும்!
  21. 👆 "சீமான் என்ற தமிழக அரசியல்வாதியையும், நா.த.க என்ற தமிழகக் கட்சியையும் கண்டித்தால், கண்டிக்கும் சக கள உறவின் குடும்பத்தை நக்கலடிப்போம்" என்று மிரட்டும் சீமான் தம்பிகளுக்கு இந்தக் கருத்து சிறந்த உதாரணம். "களவிதிகள் பேணல், ஒற்றுமை சிதறுதே!" என்று மூக்குச் சிந்தும் @விசுகு போன்றோரும் கடந்து செல்ல😎 வேண்டிய கருத்துக்கள் இவை! பி.கு: பையனுக்கு சொல்ல எதுவும் இல்லைப் போல, வெறும் "லைக்" தான்!
  22. களவிதிகளில் நீங்கள் திடீர் கரிசனை காட்டுவதால், கீழே விதிகளைத் தந்திருக்கிறேன். "....பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும்/மறைந்த பிரபலமானவர்களின் படங்கள். குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள். தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் படங்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்). மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்). பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் இதில் எந்த விதி மீறப் பட்டிருக்கிறது என்கிறீர்கள்? படங்கள் அல்லாமல் சித்திரங்கள் (Artwork), கேலிச்சித்திரங்கள் (cartoon) ஏனையோரும் பயன்படுத்துகிறார்கள் (சசி வர்ணம் எஸ்பிபியின் சித்திரத்தைப் பயன்படுத்துகிறார்) தடை இல்லை! எனவே, கருத்துக்களை எழுதுவதை விட்டு விட்டு, நொய்மையான முறைப்பாடுகளோடு வராதீர்கள். ஒரு பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் ஒழித்து ஓடும் ஒரு அரசியல்வாதியை எதிர்த்து, நக்கலடித்து 90% வீதம் கருத்துக்கள், அதுவும் 3 உறுப்பினர்களால் எழுதப் பட்டிருக்கின்றன. இடையிடையே வந்து "வுட்ரா, வுட்ரா" பாணியிலும், "இது சினிமாவில் சகஜம், எனவே ஓகே" என்ற பாணியிலும் எழுதிய 10% வெள்ளையடிப்புக் கருத்துக்கள் பற்றி உங்களுக்கு முறைப்பாடெதுவும் இல்லையா? இங்கே இது நடக்கவேயில்லையா? "கறுப்புத் தங்கம்" வைரமுத்துவுக்கும் இதே முட்டுக் கொடுத்தார்களே? இங்கே பொய் உரைப்பதும், மிகவும் தவறான கருத்துகளை உங்கள் "பக்தி" யின் காரணமாகப் பரப்புவதும் நீங்கள் மட்டும் தான்! அதற்கு புதிதாக நீங்கள் கோசானுக்குக் கொடுத்த விளக்கம் பார்த்துச் சிரித்தேன்: "அண்டர்கவர் Op செய்து பிடிக்க இருந்தேன், சத்தம் போட்டுக் கெடுத்து விட்டீர்கள்" என்று😂!
  23. இப்படி யார், எங்கே எழுதியிருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுங்கள்? நான் எல்லா இடங்களிலும் எழுதா விட்டாலும், எல்லாத் திரிகளையும் வாசிக்கிறேன் எல்லா இடங்களிலும் இருக்கும் சீமான் எதிர்ப்பாளர்களின் கதையாடல்: "சீமான் சின்னக் கருணாநிதி, இன்னொரு தமிழக சராசரி அரசியல் பிழைப்பு வாதி. ஆனால், தன் பிழைப்பிற்கு புலிகளின் விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார், அவர் அப்படி பயன்படுத்தா விட்டால் நாமும் கண்டு கொள்ளப் போவதில்லை". "தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் தான் சீமானை எதிர்க்கிறார்கள்" என்பதும் உங்களுடைய self-fulfilling prophecy. உதாரணமாக நான் புலிகளை விமர்சிக்கும் ஒருவன், தீவிர , றௌடித் தனமான தமிழ் தேசியர்களை "தேசிக்காய்கள்" என்று அழைப்பவன். ஆனால், தமிழ் தேசிய எதிரியல்ல.
  24. இங்கே சீமான் பிரபாகரன் போல இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை, ஏனையோர் எதிர்பார்க்கிறார்களாக தெரியாது. ஒரு சாதாரண குடியானவனுக்கு இருக்கக் கூடிய மனித ஒழுக்கம், அறவுணர்வு என்பன இல்லாத அரசியல்வாதியான சீமானை, தனிப்பட்ட ரீதியில் தலையில் சுமப்பது (புரினை, ட்ரம்பை சுமப்பது போல!) அவரவர் உரிமை. ஆனால், யாழ் பொதுவான களம் - இங்கே அறவுணர்வு என்பன இல்லாத அரசியல்வாதியான சீமானைதலையில் சுமந்தால் அது சவாலுக்குள்ளாகும். அந்தச் சவாலை எதிர்கொள்ள இயலாமல் பைத்தியம் முற்றி விட்டதென எழுதும் நிலை இருக்கிறது. இவை தான் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல். மற்றபடி சீமான் எங்களுக்கு யார்? இங்கே காலங்காலமாக இருக்கும் யாழ் உறவுகளை விட சீமான் எவ்வளவு முக்கியம்? அவருக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் உறவுகளிடம் தான் இதைக் கேட்க வேண்டும்!
  25. பகிடியாகத் தான் நீங்கள் எழுதியிருப்பீர்கள் (பதில் சொல்ல இயலாமல் மூலைக்குள் அம்பிட்டால் வேறெப்படி சமாளிப்பதாம்😂?). நாங்களும் பகிடியாகத் தான் எடுத்துக் கொண்டோம். ஆனால், களவிதி ஒருவரை மனநோயாளி என்று குறிக்கும் பதங்களைப் பாவிப்பதைத் தடுக்கிறதென நினைக்கிறேன். எனவே, பகிடியை விட்டு விட்டு, ஏன் சீமான் பஞ்சாயத்து கோர்ட்டில் இருந்து டில்லி உச்ச கோர்ட் வர ஓட வேண்டிய தேவை வந்திருக்கிறதென எழுதுங்கள், கேட்கிறோம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.