Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. எல்லாக் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றன, ஆனால் இது அடிக்கடி எனக்கும் எழும் ஒரு கருத்து: "சாமி கண்ணைக் குத்தும்" என்ற பயம் காரணமாக அறத்துடன் நடப்பது கடிவாளம் போட்ட குதிரை போன்ற நிலை. அறத்திற்காக அறம் என்ற நிலை இருந்தால், "சாமி இருந்தாலும்" எங்கள் கண்ணைக் குத்தாது! ஆனால்...அறம் செய்தால் நமக்கு நன்மையே பதிலாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பொய்யானது. நல்ல விடயங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கே பல்லும் நகமுமாய் தொடர்ந்து போராட வேண்டிய உலகச் சூழலில், கடவுள் நம்பிக்கை எனக்கும் இப்போது ஈடாடி வருகிறது. குறிப்பாக காசாவின் குழந்தைகளைக் காக்காத தெய்வம், எந்த கிளைமாக்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இன்னும்😂?
  2. இந்த விடயத்தில் நானும் உங்களைப் போல அதிர்ஷ்டக் காரன் தான். யாழ்ப்பாண இடம்பெயர்வு, புலிகளின் பாஸ், பின்னர் ஆமியின் பாஸ் போன்றவை காரணமாக தாமதமாக நான் போய்ச் சேர்ந்த போது பகிடிவதை முடிய 2 வாரங்கள் இருந்தன. மிருக வைத்திய பீடத்திலும் ஒரு "சைக்கோ" தமிழ் சீனியர் இருந்தார். மதிய சாப்பாட்டு வரிசையில் முதல் நாள் நின்று கொண்டிருந்த போது, அவரது எச்சில் தெறிக்கும் தூரத்தில் முகத்திற்கு கிட்டவாக வந்து "நீ இண்டைக்கு 6 மணிக்கு இன்ன இடத்துக்கு வாறாய், தப்பியோட எண்ணம் இருந்தால் நாளைக்கு வராமலே போயிரு, தப்பியோடி நாளைக்கு நீ இங்க வந்தால், நீ செத்தாய்!" என்றார். அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு தமிழ் மாணவரை இவர் பல முறை இப்படி அழைத்துப் போய் வன்முறை செய்ததில், அவரது சிறு நீரில் இரத்தம் (hematuria) போயிருக்கிறது என அறிந்தேன். இந்த சக கனிஷ்ட மாணவர் தற்போது என்னையும் சைக்கோவிடம் மாலை அழைத்துப் போவதில் அக்கறையாக இருந்தார். "ஏன் தேடிப் போய் ராக்கிங் வாங்கிறாய்?" என்று நான் அப்பாவியாகக் கேட்டேன் இவரிடம். "சீனியர்களிடம் நோட்ஸ் வாங்கிப் படிக்காமல் பாஸ் ஆகி வெளியே செல்ல முடியாது" என்ற புளிச்சுப் போன பல்லவியைப் பதிலாகச் சொன்னார். அன்று மாலையும், அடுத்த 9 மாலைகளும் நான் இந்த சைக்கோவிடம் போகாமல், ஒவ்வொரு வழிகளால் தப்பி, என் தங்குமிடம், நண்பனொருவரின் அறை, கண்டி ஏரிப் பகுதி என்று போய் வந்து கொண்டிருந்தேன். யாருடைய நோட்சும் எனக்குத் தேவைப் படவில்லை. ராக்கிங் காலம் முடிந்த பின்னர் "சைக்கோ" சீனியரை நான் ஏனையோரை விட ஒரு மட்டம் கீழே வைத்துத் தான் பழகி வந்தேன். தற்போது இந்த "சைக்கோ" சீனியர் கட்டுநாயக்காவில் சுங்க உதவி ஆணையாளராக இருக்கிறார். கடந்த முறை ஒரு நண்பன் போன போது கண்ணாடி அறையினுள், அலுவலக நாற்காலியில் இருந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தாராம்😂!
  3. "தமிழர் சார்பாகக் கருத்து" என்பது தமிழர்களிடையே இருக்கும் செய்தி சொல்வது போன்ற மிருகக் குணங்களை ஆதரித்துக் கருத்து வைப்பதாக இருக்கக் கூடாது. அப்படி "தமிழேண்டா!" என்று நடந்து கொள்ளும் தீவிர தமிழ் தேசியப் பற்றாளர்களின் தடவல் பிரான்சில், அவுசில் எப்படி வன்முறைகளை ஊக்குவித்து, சாதாரண தமிழர்களை விலகிச் செல்ல வைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டிய தேவையில்லை! பகிடி வதையை இலங்கையின் தென் பகுதியில் பல வருடங்களாக அவதானித்தமையால் இந்த வேறு பாட்டை இங்கே விளக்கியிருக்கிறேன். இதே அவதானிப்பைப் புரிந்து கொண்டோர் நான் சொல்வதைப் புரிந்து கொள்வர். நீங்கள் "யானையைத் தடவிப் பார்க்கும் குருடன்" போல உங்களுக்குப் புரிந்ததை மட்டும் வைத்து அலட்டிக் கொண்டிருங்கள், பாதகமில்லை😎!
  4. அதென்னன்னாக்க, திராவிடம் இலக்கை அடையவில்லையாம்! அதனால் "திராவிடத்தை வெறுக்கிறோம், அதை சங்கிகளோடு கூட்டுச் சேர்ந்து அழிப்போம்" என்கிறார்கள். தாயகத்தில் 30 வருடம் கோலோச்சிய ஆயுதம் தரித்த தமிழ் தேசியம் சாதியையும் ஒழிக்கவில்லை, பெண் வெறுப்பையும் ஒழிக்கவில்லை, சிறு பான்மை மதங்கள் மீதான வெறுப்பையும் ஒழிக்கவில்லை. அப்படியானால் ஈழ தமிழ் தேசியத்தை ஏன் இன்னும் தலையில் தூக்கித் திரியுறம்? அதுவும் பெய்லியர் தானே😎?
  5. மனிதப் பாலில் இருக்கும் புரதத்தின் வகை மட்டுமே ஏனைய பாலூட்டிகளினுடையதை விட வேறு, ஆனால், இருக்கும் மொத்தப் புரதத்தின் செறிவு பசுப்பாலில் மனிதப் பாலை விட அதிகம்! இந்த அடிப்படை "பொடியை" மட்டும் பில்ட் செய்யும் பொடி பில்டர்களுக்குத் தெரியாது, ஆனால் மருத்துவருக்குமா தெரியவில்லை? இதே போல இன்னொரு அநியாயமும் நடக்கிறது. பசு கன்று போட்டு முதல் இரு நாட்களில் வரும் பால், கொழுப்பு மிக அதிகமாக இருப்பதால் சுவையாக இருக்கும். ஊரில் கடும்புப் பால் (colostrum) என்பார்கள். காய்ச்சினால் கட்டியாக வரும். உண்மையில், இந்த முதல் 48 மணி நேரப் பாலை கன்று குடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த 48 மணி நேரத்தினுள் தான் பசுவில் இருந்து கன்றுக்கு நோயெதிர்ப்பு சக்தி கடும்புப் பாலினூடாகக் கடத்தப் படும். இதைக் குடித்தால் கன்று தொற்றுக்கள் இல்லாமல் வளரும். ஆனால், ஊரில் கன்றுக்குக் கொஞ்சமாகக் கொடுத்து விட்டு கடும்புப் பாலை மனிதர்கள் கறந்து காய்ச்சிக் குடிப்பார்கள். கன்று நோய் வாய்ப்பாட்டு அல்லல் படும்!
  6. "உண்மை விளம்பும்"😂 ஸ்புட்னிக் செய்தியை நீங்கள் பகிடி பண்ண உங்கள் கூட்டாளிகளுக்கு கோபம் வரப்போகுது கவனம்! ஆனால், ஒரு கறுப்பு வெள்ளையான விடயத்தில் கூட "சரி பிழை" என்று சொல்ல முடியாமல், இனப்பிரச்சினைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டு "நாங்கள் திறம்" எண்டு சாதிக்க அனுபவம் அவசியமில்லை. இதைக் கற்றுத் தராத "அனுபவம்" இருந்தாலும் ஒரு பயனுமில்லை😎!
  7. மருதருக்கு வேற பிரச்சினை, அதைப் புரிந்து கொள்ளாமல், நான் மேலே எழுதியதையும் தவறாகப் புரிந்து கொண்டு கருத்து வைக்கிறீர்கள் என நினைக்கிறேன். வட பகுதிப் பல்கலைகளின் நிலை எனக்கு அவ்வளவு தெரியாது, அங்கே நான் படித்ததில்லை. ஆனால், தென் பகுதியில் என் அனுபவத்திலும், அவதானிப்பிலும் தமிழ் மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, சிங்கள மாணவர்களை விட மோசமானது. உதாரணம்: சிங்கள மாணவர்களிடையே சில விதிகள் இருக்கின்றன. பகிடிவதையின் போது, கனிஷ்ட மாணவர் மீது கை, கால் படக் கூடாது. நேரடி வன்முறை தடை என்பது தான் இதன் அர்த்தம். இன்னொரு குறிப்பிடத்தக்க விதி, கனிஷ்ட மாணவர்களை சேவகம் செய்யும் வேலையாட்களாகப் பயன்படுத்த முடியாது. ஆனால் பேராதனையில் இந்த விதிகளை தினசரி மீறிய பல சிரேஷ்ட தமிழ் மாணவர்களை நான் அறிவேன். இதை சிங்கள மாணவர்கள் தடுக்க முனைந்தால், தமிழர்களைப் பிரித்து தனியாக அழைத்துச் சென்று சித்திரவதை செய்யும் வழக்கமும் தமிழ் மாணவர்களிடம் இருந்தது. அப்படித் தனியாக அக்பர் அறையொன்றிற்கு அழைத்துச் சென்று செய்த பகிடி வதையின் போது தான் வரப்பிரகாஷ் சுகவீனமுற்று இறந்தார். பகிடிவதை என்ற ஒரு சிறு வட்டத்தினுள் காணப்படும் இந்த நடத்தை வேறு பாடு, இலங்கையின் சிங்கள தமிழ் பிரச்சினையிலும் அப்படியே பிரதிபலிக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை, இங்கே இருக்கும் அனேக உறவுகளுக்கும் இல்லை. உங்களுக்கு அத்தகைய எதிர்பார்ப்பு இருப்பது போல தெரிகிறது. இது இலங்கையில் இருந்து வெளியேறிய பிறகு , வெளிநாட்டில் ஒரு "முட்டைக் கோதுக்குள்" இருந்து செய்திகளை வாசித்ததால் வந்த விளைவாக இருக்கலாம்😂!
  8. இல்லை! இத்தகைய "பகிடிவதைகள்" என்ற பெயரில் நிகழும் வக்கிரங்களுக்கு போதை அவசியமில்லை. புதிய மாணவர்களை பகிடியாகக் கலாய்த்து வரவேற்று அவர்களை சமூகத்தினுள் உள்வாங்க என்று மேற்கு நாடுகளில் உருவான முறைகளை, எங்களுடைய ஆசியத் தரத்திற்கு மாற்றி உள்வாங்கியிருக்கிறார்கள். இந்த இடத்தில் பேச்சு வாங்கினாலும் பரவாயில்லையென்று ஒன்று சொல்ல வேண்டும்: நான் அவதானித்த வரையில், சிங்களப் பகுதிகளில் சிங்கள மாணவர்கள் செய்யும் பகிடிவதையை விட தமிழ் மாணவர்கள் செய்யும் பகிடி வதைகள் மிகக் கேவலமானவையாக இருக்கும். இப்படியான ஒரு வன்முறை கலந்த பகிடிவதையின் போது தான் வரப்பிரகாஷ் என்ற பேராதனை மாணவன் சிறு நீரகம் செயலிழந்து இறந்தான். அந்தப் பகிடி வதை செய்த பிரதான நபர், வரப்பிரகாஷின் நிலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மோசமாகிறது என்று தெரிந்த காலையிலேயே சிங்கப்பூர் சென்று அங்கிருந்து பின்னர் கனடா குடிபெயர்ந்து இப்போது அங்கே பெரிய முதலாளியாக இருக்கிறார். பக்கத்தில் வேடிக்கை பார்த்து நின்ற சிலர் (இவர்கள் தடுத்திருக்க வேண்டும், எனவே கூட்டுப் பொறுப்பாளிகள் தான்!), வரப்பிரகாஷ் கொலைக்காக சிறை சென்று வந்தனர். இந்த வன்முறையாளர்களை பல்கலையை விட்டு நீக்கி விடுவது தான் ஏனையோர் இத்தகைய வன்முறைகளை நினைத்தும் பார்க்க இயலாமல் செய்யும் ஒரே வழி!
  9. இந்தக் கருத்து ஏன் உங்கள் தண்டம் பற்றிய போலித் தகவலோடு தொடர்பு என விளங்கவில்லை. திமுக 2004 இல் ஆட்சிக்கு வந்தது. 2006 இல், Tamil Nadu Learning Act 2006 என்ற சட்டம் மூலம் ஆண்டு 1 முதல் 10 வரை தமிழைப் பாடமாகக் கற்பிக்க வேண்டுமென்ற சட்டம் இயற்றப் பட்டது. சில வகைப் பள்ளிகளுக்கு மட்டும் விதி விலக்கு இருக்கிறது, ஆனால் எல்லா அரசுப் பள்ளிகளும், பெரும்பான்மையான தனியார் பள்ளிகளும் இந்தச் சட்டத்திற்கு உட்பட்டவை. இணைப்பு: https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/sedu_e_145_2014.pdf
  10. சரி. அப்படியானால் எப்படி தமிழ் நாடு அரசு இதற்குப் பொறுப்பு என்கிறார்கள்? தனியார் பாடசாலைகளின் போதனா மொழி, சீருடை, இது போன்ற விதி முறைகளை எப்படி அரசு கட்டுப் படுத்த முடியும்? இந்தப் போலிச் செய்திகளைப் பரப்பும் தரப்பின் தலைவர்களின் பிள்ளைகளே இப்படியான ஆங்கில மூலப் பாடசாலைகளில் கற்கும் போது, இது போன்ற குற்றச் சாட்டுகளுக்கு என்ன வலு இருக்கிறதென நினைக்கிறீர்கள்?
  11. "தமிழ் நாட்டு அரசுப் பள்ளிகளில் தமிழ் பேசினால் அல்லது ஆங்கிலம் பேசா விட்டால் தண்டம்" எனக் கூறும் செய்தியை எங்கே நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்று இங்கே மூலத்தை இணைத்தாலே வாசகர்கள் உண்மை பொய் பிரித்தறிய முடியும் என நினைக்கிறேன். எனக்கு எந்தத் தரப்பு, எந்த வழி முறைகளால் இந்தப் பொய்த்தகவலைப் பரப்புகிறது எனத் தெரியும். ஆனால், நீங்கள் செய்தி மூலத்தை இணையுங்கள், மேற்கொண்டு பேசலாம்! (திராவிட "லவ்வர்ஸ்" வெளியிடும் மீம்கள், யூ ரியூப் அலட்டல்களை நான் "செய்தி" மூலங்களாகக் கருதுவதில்லை😎!)
  12. www.ndtv.comSchool 'Fines' Student For Speaking In TamilA girl student today petitioned the district collector alleging that she was fined Rs 300 by her school for speaking in Tamil."பெரியார் சொன்னார்..." என்ற "போலிச் செய்தி" போலவே இதுவும் 8 ஆண்டுகள் பழைய செய்தியொன்றை தோண்டியெடுத்து திமுக "லவ்வர்ஸ்" இப்போது பரப்பி வரும் வட்சப் போலிச் செய்தி தான். ஆங்கிலம் மூலம் கற்பிக்கும் ஒரு தனியார் பள்ளியில், தமிழில் பேசினால் தண்டம் அறவிடும் முறை இருந்ததாக 2017 இல் ஒரு முறைப்பாடு கலெக்ரர் வரை போயிருந்தது. தனியார் பள்ளிகளின் இந்த விதியை தமிழ் நாடு அரசு தடுக்க இயலாது என்பது தெரிந்தும் திமுக லவ்வர்ஸ் "திமுக அரசின் கீழ் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் தமிழ் பேசினால் தண்டம்" என்று காதில் பூச்சுற்றுகிறார்கள். கேட்பவர்களுக்கு "விசாலமான செவி" என்ற நம்பிக்கை தான்😂!
  13. நன்றி! "எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறான்" என்று யாழ் களத்தில் திட்டு வாங்கித் தான் எனக்குப் பழக்கம்😂. இப்படியான துலங்கலை எதிர்பார்க்கவில்லை.
  14. சோம அழகு அவர்களின் தமிழ் சேவை பாராட்டுதலுக்குரியது! ஆனால், சிறார்களின் தமிழின் மீதான ஆர்வத்தை போலி விஞ்ஞானத்தை முன்வைத்து உருவாக்குவது நல்ல விடயமாகத் தெரியவில்லை. எபிரேயத்தில் இருக்கும் "ஆதாம், ஈவ்" போன்ற சொற்கள் தமிழில் இருந்து தான் அங்கே சென்றன என்பதும், ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த இடம் "செரண்டிப்" என பைபிளில் இருக்கிறது (பைபிளில் செராபிம்- Seraphim என்ற தேவதைப் பெயர் தான் இருக்கிறதேயொழிய செரண்டிப் என்ற பெயர் எங்கேயும் இல்லை) அது இலங்கை/இந்தியாவின் தென்முனை என்பதும் கோராவில் எந்த ஆதாரங்களுமில்லாமல் பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் போலி விஞ்ஞானக் கருத்துக்கள். குமரிக் கண்டமும் அப்படியானது தான். இதை பற்றி இங்கே பல ஆண்டுகள் முன்பே விவாதித்திருக்கிறோம். இப்படியான போலி விஞ்ஞானத்தின் பால் அடுத்த தலைமுறையை ஈர்க்க எந்த தமிழ் ஆசிரியரும் உதவக் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!
  15. உலகம் அணுவாயுதப் போருக்கு மிக நெருங்கி வந்த ஒரு தருணம் இக்கட்டுரை குறிப்பிடும் 1983 காலப் பகுதி. Able Archer என்று பெயரிடப் பட்ட இந்த நேட்டோ ஒத்திகை ஒரு உண்மையான நேட்டோ தாக்குதல் என்ற நம்பிக்கையை அப்போது சோவியத் தலைவராக இருந்த யூரி அந்த்ரபோவ் தானும் நம்பி, தன்னைச் சுற்றியிருப்போரையும் நம்ப வைத்தார். இப்படி ஒத்திகைக்கும், தாக்குதலுக்கும் வித்தியாசம் காண இயலாத அந்த்ரபோவ் ஒரு முன்னாள் கேஜிபி தலைவர் என்பது ஆச்சரியமான விடயம். இந்த இரட்டை உளவாளி இல்லாதிருந்திருந்தால், ஐரோப்பா மீது அணுவாயுத ஏவுகணைத் தாக்குதல் போலந்தினுள் இருந்து வந்திருக்கும். இந்த விளிம்பு நிலைக்கு பனிப்போர் சென்ற பின்னர் தான், றேகனும் தன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டார். சோவியத்தை "evil empire" என்று அழைப்பதை நிறுத்தி, அணுவாயுதப் போட்டியையும் குறைக்கும் முயற்சிகளை ஆரம்பித்தார். "பரஸ்பர அழிவு-Mutually Assured Destruction (MAD) பற்றிய அச்சம் அணுவாயுதப் போரைத் தவிர்க்கும் வழி" என்பதையும் றேகன், இந்த அரும்பொட்டில் தவிர்த்த அழிவின் பின்னர் நிராகரிக்க ஆரம்பித்தார்.
  16. இது சரியான தகவல் அல்ல. இரண்டாம் உலகப் போர் மே 8, 1945 இல் முடிவுக்கு வருகிறது. உலகப் போர் முடிந்ததும் அமெரிக்கா செய்த முதல் வேலை: ஏப்ரல் 1945 இல் மார்ஷல் திட்டம் என்ற ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தை அமெரிக்காவில் சட்டமாக இயற்றி, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மீள்கட்டுமானத்தை ஆரம்பித்து வைத்தது தான். இதன் பிறகு தான் எல்லாம். இதை செய்திருக்கா விட்டால், கிழக்கு ஜேர்மனி போல மேற்கு ஜேர்மனியும் தேங்கிப் போயிருக்கும். எனவே, அமெரிக்காவிற்கு நன்றியுடன் இன்றைய ஜேர்மனி நடந்து கொள்வது அதிசயமல்ல! சுவிஸ் மலைப்பகுதிகளில் போய் ஒளித்திருந்த von Braun உம் ஏனையோரும் செப்ரெம்பர் '45 வரை அமெரிக்காவின் கைகளில் கிடைக்கவில்லை.
  17. அரசியல் காரணங்களுக்காக உதாசீனம் செய்யப் படும் பல்வேறு தரவுகள், தகவல்கள் வெளியே பிரபலமாக்கப் படாமல் மூலையில் கிடக்கின்றன. உதாரணமாக வடக்கின் கந்தரோடையில் விகாரைகள் போன்ற சிறு அமைப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதி வடக்கில் கிமு 600 அளவில் இருந்தே மக்கள் குடியேறி வாழ்ந்த பகுதி என்று கார்பன் 14 பரிசோதனையில் நிரூபித்திருக்கிறார்கள். பௌத்தம் தமிழரிடையே இருந்த காலமொன்று இருந்திருக்கிறது, இது அதிசயமல்ல. இனியும் அப்படியொரு காலம் உருவாகாது என்றும் உறுதி செய்ய முடியாது.
  18. வெளிநாடுகளில் "அர்ச்சனை" வாங்குவது பல விதங்களில் பரவாயில்லை. தும்புத் தடி பாரம் குறைந்த பிளாஸ்ரிக்கினால் ஆனது, ஊரில் போல மரத்தடியால் ஆனதல்ல😎!
  19. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியைத் தான் வெளிநாட்டு ஊடகங்களில் இருந்து அப்படியே கொப்பி செய்து போடும் போது பூனெரின் (Pooneryn) எனப் போட்டிருக்கிறது. செய்தி கூட முழுவதும் கூகிள் மொழி பெயர்ப்பி மூலம் செய்யப் பட்டிருக்கிறது என ஊகிக்கிறேன். 👇இது தான் ஆதவன் கொப்பி செய்த செய்தியின் மூல வடிவம்! The Times of India'Misleading': Adani Group denies report on Sri Lanka revo...India Business News: Adani Group has debunked rumors about the cancellation of their 484 MW wind power projects in Sri Lanka, asserting the deal is still on. The Sri Lankaகொப்பி பேஸ்ற் ஊடகங்களின் நிலை இது தான்😂!
  20. நெடுக்கருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
  21. பார்த்தீனியத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று தான் வெளியே தெரிகிறது, ஆனால் வேறெதையோ குறிக்கும் உருவகக் கவிதையெனப் புரிகிறது!
  22. இது வரை கூட்டமைப்பிலும் சரி, ஏனைய தமிழ்க் கட்சிகளிலும் சரி, தேர்தல் நேரம் தானே ஆட்கள் வெளியேறுவதும் இணைவதும் நடந்திருக்கிறது? வெளியேறியோர் "தமிழ் தேசியத்திற்காகப் பயணிக்க வெளியேறினோம்"😎 என்று பேட்டிகள் கொடுப்பர், "சீற் கிடைக்காமல் வெளியேறினர்" என்பதை மக்கள் எப்போதும் புரிந்து கொண்டே மௌனமாக இருப்பர். இந்த இணைவும் இதே வழமையின் அங்கம் தான்!
  23. "கொந்தல்" இல்லாத மாம்பழமும் சைக்கிளும் இணைவது "நல்லது"! "யாருக்கு நல்லது?" என்பது உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியவரும்😂!
  24. குற்றமும் குறையும் கண்டு பிடித்தது யார் இந்த திரியில்? தமிழரசுக் கட்சி தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய கட்சி. அதன் பதில் செயலாளரை இரண்டு தூதுவர்கள் தனியே சந்தித்தார்கள். இதில் குற்றமும் குறையும் கண்டு பிடித்தது யார்? நீங்கள் எழுதியதையே மறந்து விட்டு நீங்கள் இங்கை பாய் போட்டுப் படுத்திருப்பதில் என்ன பயன் விசுகர்😂? பேசாமல் "பதில் செயலாளர் விக்கிரகத்தைத் தலையில் சுமக்காத காரணத்தினால் அவர் வேண்டாப் பெண்டாட்டி"😎 என்று ஒப்புக் கொண்டு விட்டு இளைப்பாறுங்கள்!
  25. ஓம், இது போன்ற விடயங்கள் உங்களுக்கு விளங்காது என்பது நம்பக் கூடியதாகத் தான் இருக்கு😂. தனியே சந்திப்பு வன்னியில் நடக்கவில்லை, ஆனால் லண்டனில் இருந்த ஆட்களோடு கமெராவுக்கு தெரியாத சந்திப்புகள் நடந்திருக்கின்றன என்று தான் "போரும் சமாதானமும்" சொல்கிறது. எனவே, தேர்வு செய்த பிரதிநிதிகள் மட்டும் தான் சந்திக்க வேண்டுமென்ற நியதி நியாயமும், முன்னுதாரணமும் அற்றது தானே? ஏன் ஒரு கட்சியின் பதில் செயலாளருக்கு மட்டும் இந்த விதி பிரயோகமாக வேணுமென நினைக்கிறீர்கள்? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.