Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. "முள்ளை அகற்ற இன்னொரு முள்" என்பது போல, மேலும் மேலும் யூ ரியூப் அலட்டலாளர்களை இங்கே இணைத்து அறிமுகம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இந்த லூசுப் பட்டாளங்களின் வீடியோக்களை மேலும் பகிர்ந்து சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தையும் உருவாக்க முடியாது நண்பர்களே. இவர்களை அடித்துப் பூட்டி விட்டு பேசாமல் வேறு வேலையைப் பாருங்கள்! தாமாகவே மறைந்து விடுவர்!
  2. மக்களால் வெளியேற்றப் பட்டவரை விடுங்கள். மக்களால் தேர்வு செய்தல் நிகழும் தேர்தலில் நிற்காத தலைவர்களைக் கூட வெளிநாடுகள் சந்தித்திருக்கின்றனவே? எனவே இந்த "தேர்தலில் வென்றவன் தான் சந்திப்புக்குப் போக வேண்டும்" என்ற உங்கள் விதி பாரபட்சமாகப் படுகிறது!
  3. இது தான் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். வாசிப்பில்லை, உழைப்பில்லை, படிப்பை ஒழுங்காக முடிப்பதில்லை, வெளி நாடு போகும் திட்டம் தவிர வேறெந்த மாற்றுத் திட்டமும் இல்லை என்று ஒரு குறிப்பிடத் தக்க அளவு மக்கள் தொகை உருவாகியிருக்கிறது. இவர்களை இன்ஸ்ரா, முகநூல், யூ ரியூப் என்று தொலைபேசித் திரை மூலம் வசியம் செய்து வைத்திருக்கும் வேலையை அர்ச்சுனா செய்திருக்கிறார். புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களும் இதற்கு உடந்தை. நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் 60 தாண்டிய அன்ரிமாரிடம் இருந்து மட்டும் அர்ச்சுனாவுக்கு தேர்தல் நேரம் சென்ற பணம் சில கோடி ரூபாய்கள் என்கிறார்கள். இந்தப் பண வரவைக் கண்ட பின்னர் தான், அர்ச்சுனாவின் பால்ய நண்பனான மயூரன் அர்ச்சுனாவை வெட்டி விட்டு தான் தலைமை வேட்பாளராக வர ஒரு முயற்சி செய்து, பிடிபட்டு வெட்டி விடப் பட்டார் என்றும் ஒரு கதை உலவுகிறது.
  4. மாட்டின் மீதான கவனத்தைக் கலைத்து, மாட்டைக் கொண்டு போய் மரத்தில் கட்டி, மரத்தைப் பற்றி மட்டும் பேச வைப்பதற்காக, என்ன வகை கற்பனையெல்லாம் செய்ய வேண்டியிருக்கு😂? நான் அறிந்த வரை, ஒரு ஜிபிஎஸ் திசைகாட்டி காட்டும் இடத்தை அதற்கென உருவாக்கப் பட்ட மென்பொருட்களை வைத்து தவறாக மாற்றலாம். எல்லை மீறும் மீனவரின் (மாடு) முதலாளிகள் (மரம்) வேலை மெனக்கெட்டு ஒவ்வொரு திசைகாட்டியையும் இப்படி மாற்றி வேண்டுமென்றே அனுப்பி வைக்கிறார்கள். இது வரை மீனவர்களுக்கும் இப்படி நடக்கிறதெனப் புரியவில்லை😎!
  5. 🤣அப்பிடிப் போடுங்கோ "பிளேட்டை" மாத்தி! இப்படி "காப்புரிமை, பதிப்புரிமை" என்பவை பற்றிய அறிவை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காகத் தான் சீமான் பெரியார் பற்றி ஒரு அவதூறைச் சும்மா சொல்லி விட்டு, இன்னும் மன்னிப்புக் கேட்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் போல! பிகு: பெரியார் பற்றி சீமான் 2025 இல் பரப்பிய அவதூறு உண்மையில் 2017 இல் இணைய வெளியில் பரப்பப் பட்டு அப்போதே பொய் என்று நிரூபிக்கப் பட்ட ஒன்று! எனவே, இணையக் குப்பையில் இருந்து சீமான் தன் நோக்கத்திற்காகக் கிண்டி எடுத்த குப்பை தான் பெரியார் அவதூறு என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்!
  6. இவரை பிலிப்பைன்ஸ் சிறையொன்றிலேயே கொஞ்ச நாட்கள் வைத்திருந்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். யாராவது பாதிக்கப் பட்டவர்களின் ஆட்கள் சிறைக்குள்ளேயே இவருக்குப் பாடம் படிப்பித்திருப்பர். நெதர்லாந்தில், ஹேக் நகரில், இவர் போன்றோருக்கு மூன்று நேரம் சத்தான உணவும், பல சலுகைகளும் கிடைக்கும். ஐரோப்பிய மக்களின் வரிப் பணத்தில் உண்டு உறங்கி இளைப்பாறுவார்😂!
  7. நிலக்கரி, மசகெண்ணை - இவற்றை எடுப்பது இலகுவான வேலை. நிலக்கரி, படிப்படியாக பூமியை அகழ்ந்து சென்று சுரங்கத்தினுள் மனிதர்கள் சென்று மேலே கொண்டு வருவார்கள். ஆபத்தான வேலை. இருந்தும் நிலக்கரிப் பாவனை இப்போது மிகவும் குறைவு. இதன் காரணம் நிலக்கரி உச்ச சூழல் மாசடைதலை உருவாக்கும் எரிபொருள் என்பது தான். பாவனை குறைவென்பதால் நிலக்கரி அகழ்வதும் அருகி விட்டது. ஆனால், இந்த Shale gas எனப்படும் வாயுவை வெளியே கொண்டு வர hydraulic fracturing என்ற சிக்கலான முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது (படம் கீழே). சுருக்கமாக, நிலத்தினுள் ஒரு ஆழமான துளையிட்டு, அந்த துளையூடாக உயர் அழுத்தத்தில் இரசாயனத் திரவங்களை அனுப்பும் போது, ஆழத்தில் வெடிப்புகள் ஏற்பட, வாயு வெளியே வரும். இந்த முறையினால் ஆழத்தில் இப்படி வெடிப்புகள் உருவாக்கும் போது காலப் போக்கில் சிறு நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால், ஷேல் வாயுவை எடுப்பது மிகவும் பாதகமான ஒரு முறை - அப்படியே விட்டு விடுவது தான் புத்தி சாலித்தனம்.
  8. சரியான கருத்து👍. நன்மையான விடயங்களைப் பகிரும் யூ ரியூபர்களை ஊக்குவிக்கலாம். அவசியமில்லாத அலட்டல்களை வெளியிடுவோர், இப்படி திருட்டு வேலைகள் செய்வோரை முறைப்பாடு செய்து சனலைப் பூட்ட வைக்கலாம். அப்படி செய்ய நேரமில்லா விட்டால் கூட , குறைந்த பட்சம் இப்படி பட்டவர்களது சனல்களைப் பார்க்காமல், பகிராமல் சும்மா இருந்தாலே இவர்களை ஒதுக்கலாம். பி.கு: மேலே 1200 பவுண்ஸ் திறன்பேசியை வாங்கி யூ ரியூபருக்குப் பரிசளித்த வெளிநாட்டுத் தமிழரை நினைத்து வியக்கிறேன்: சிலருக்கு "சந்தனம்" மெத்தித் தான் விட்டது😂!
  9. செய்தி உண்மை, ஆனால் வாசி சுட்டிக் காட்டியாது போல மிகவும் பழசு: 2023 இல் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. https://www.cnn.com/2023/10/29/climate/white-hydrogen-fossil-fuels-climate/index.html இந்த பழைய செய்தியை இந்தியாவின் இன்னுமொரு காப்பியடி இணையத் தளம் பிரசுரிக்க, ஆதவனும் காப்பியடித்து அதிரடியாக வெளியிட்டிருக்கிறது! அதி வேகமாக செய்தி கொப்பியடிக்கும் ஆதவன் ரீமுக்கு இப்ப தான் "அதிரடியாக" தெரிய வந்திருக்கிறது! "கற்பூர ரீம்" தான் வைத்திருக்கிறார்கள்😂! Times NowIndia's Ally In Europe Hits Jackpot Worth $92 Trillion, U...France has discovered a massive 46-million-ton white hydrogen reserve in the Moselle region, valued at $92 trillion. Unlike gray and green hydrogen, white hydrogen requires no industrial production...
  10. இது வேற பிரச்சினை. "சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல்" பிரச்சினையென்றால் இங்கே சிறுபான்மை மதங்களை நேரடியாகவே தாக்கிய திரிகளில் அல்லவா அவர் முன்னின்று எழுதியிருக்க வேண்டும்😂?
  11. ஆரப்பா இந்த "அரசியல் வல்லுனர்கள்"😂? நேட்டோவில் இப்போது 32 நாடுகள், 29 அல்ல. இதை நம்பி லைக் வேற போட்டிருக்கீனம் "அமெரிக்கன் லவ்வர்ஸ்"!
  12. ஓணாண்டியார், திரும்பவும் நான் சீமான் வியாதியில் பேசுகிறேன் என்று சொல்ல மாட்டீர்களென நினைக்கிறேன்☺️. கீழே இருப்பது தான் இந்திய அரசியலமைப்பின் ஆட்சியதிகாரப் பகிர்வை பட்டியலிட்டிருக்கும் 7 வது அட்டவணை. இதில் எங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாநில அரசின் மீனவர்கள் மீதான அதிகாரம் வருகிறதெனக் காட்டுங்கள்? https://www.mea.gov.in/images/pdf1/S7.pdf
  13. இது விளம்பர உத்தி! மிகவும் சனநெருக்கடி (crowded) மிகுந்த ஆபாசப் பட சந்தையில், யாரை, எதைப் பார்ப்பது என்று எப்போதும் குழப்பம் இருக்கும். இப்படி வேறு வழிகளில் பெயரை வர வைத்தால் "ஆர்வலர்கள்" தேடிப் பார்த்து இவரது படங்களைப் பார்ப்பர் என நினைக்கிறேன்! (இது என் தனிப்பட்ட அனுபவம் அல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்!😎)
  14. முதலீடு இல்லாத குடிசைக் கைத்தொழிலாக ஆரம்பித்து இப்போது றௌடிகளை உருவாக்கி விடும் பெருந்தொழில் பேட்டையாக மாறி நிற்கிறது. ஏன் இந்த லூசுகளின் அலட்டல் வீடியோக்களைப் பார்த்து வளர்த்து விடுகிறார்கள் மக்கள்? நுகர்வோர் இல்லா விட்டால் உற்பத்தியும் குறைந்து விடும், எனவே நுகர்வைக் குறையுங்கள், சந்தா தாரராக இருந்தால் நீங்கி விடுங்கள்.
  15. இன்னும் சீமான் திரி எfபெக்ரில் இருப்பதால் உங்களுக்கு நான் குறிப்பிட்டது விளங்கவில்லை என நினைக்கிறேன்😂. கோசான் சொன்னது போலவே, எது பொது இடம், எது தனியார் இட எல்லை என்பதை சட்டம், வரையறுக்க இரண்டு அளவு கோல்களைப் பாவிக்கிறது: 1. reasonable expectation of privacy, 2. the intent of suspected violator. எனவே, தெருவில் நின்று ஒரு தனியார் இடத்தின் வாசலை படமெடுத்தால் "photography/vieography is prohibited" என்ற கட்டிட ஓனரின் விதியை மீறுவதாகத் தான் சட்டம் எடுத்துக் கொள்ளும். இதை உங்கள் உதாரணத்தில் பொலிஸ் பின்பற்றவில்லை என்பதால் அது தான் சட்ட நியமம் - legal standard என்று புரிந்து கொண்டமை உங்கள் பிரச்சினை. அதை நான் மறுக்க இயலாது.
  16. சட்டங்கள் அனேக நாடுகளில் ஒரே மாதிரித் தான் இருக்கின்றன. அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் "படம் எடுப்பது தடை" என்று அறிவிப்பு இருந்ததாம். அனேகமாக அமெரிக்காவிலும் தனியார் சொத்து/பொது இடமல்லாத இடங்களில் இப்படி அறிவித்தல் வைக்கலாம். மீறினால் அது சட்டப் பிரச்சினை. பொலிஸ் "வலது சாரி மூலக் கொதியர்"😂 என்பதால் பேசாமல் விட்டிருப்பரென நினைக்கிறேன்.
  17. உங்களுக்குப் "பின் கதை" தெரியாததால் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உண்மையில் என் நிலைப்பாடு, பரிச்சயமாகும் ஒவ்வொரு மொழியும் ஒரு ஜன்னல் கதவைத் திறந்து வைப்பது மாதிரி (இப்படி ஏதோ ஒரு நாட்டுப் பழமொழி இருக்கிறது). ஆங்கிலம் உலகின் இணைப்பு மொழியாக இருப்பதால், அதைத் தெரிந்திருப்பது கூடுதல் அனுகூலம் தரும். இப்படி யோசியுங்கள்: நீங்கள் வாகன திருத்தகம் நடத்தும் ஒருவரென்றால், உங்களிடம் எல்லா வகையான கழட்டிப் பூட்டும் சாவிகளும் இருக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்து திருத்தகத்தில் கடன் வாங்க வேண்டும் அல்லது வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே உங்கள் சாவிப் பெட்டகத்தில் இருக்கும் சாவிகளின் எண்ணிக்கை உங்கள் வாகனம் திருத்தும் தொழிலை நிச்சயம் பாதிக்கும். வாழும் நாட்டிலும், செய்யும் தொழிலிலும் புளங்கும் மொழியும் இதே போன்ற ஒரு அத்தியாவசியமான சாவி தான்!
  18. இதுக்கேன் இவ்வளவு சீரியசாக இருக்கிறாங்கள்? "ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, அது அறிவல்ல" 😉
  19. என்னுடைய விருப்பமும் விஜயலக்ஷ்மி இந்த உச்சநீதி மன்ற வழக்கில் பதிலும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். இந்த மன்றம் தாண்டி வேறெங்கும் இனிப் போக இயலாது. இதில் சீமான் மீதான வழக்கு தள்ளுபடியானால், அதை வைத்தே அவர் தான் நிரபராதி என்று மக்கள் மன்றத்தில் நிறுவ முற்படுவார் (அதை விட உக்கிரமாக சீமான் தம்பிகள் நிறுவ முயல்வர்!). எல்லாம் தமிழ்நாடு பொலிஸ், விஜயலக்ஷ்மி ஒத்துழைப்பு என்பவற்றில் தங்கியுள்ளது!
  20. பெரிதாக உருவத்தைக் காட்டிக் கொள்வது நாய்களைப் பின்வாங்க வைக்காது என நம்புகிறேன். இதன் காரணம், நாய், கரடி, புலி ஆகியவை வித்தியாசமான கூர்ப்புப் பாதையில் (evolutionary behavior) வந்தமையாக இருக்கலாம். நாய், காட்டு விலங்கான ஓநாய்களில் இருந்து வந்தது. ஓநாய்கள் கூட்டமாகச் (pack) சேர்ந்து வேட்டையாடுபவை. பெரிய இரை விலங்கையும் சுற்றி வளைத்து தாக்கும் ஓநாய் மூதாதையரின் பழக்கம் நாய்களில் "உருவம் பெரிதானாலும் பரவாயில்லை" என்ற பயமின்மையை பதித்திருக்கக் கூடும். புலி, தனியாக வேட்டையாடும். நிச்சயமாக தனக்கு சேதமில்லை என்று உறுதியான இடங்களில் மட்டுமே தாக்கும் (அதுவும் பதுங்கி, இரைக்கு வாய்ப்புக் கொடுக்காமல் தாக்கும்). கரடி வேட்டையாடும் விலங்கல்ல. ஆபத்தை எதிர் கொண்டால் தாக்கும், மற்றபடி சத்தம் உட்பட்ட வேறு அச்சுறுத்தல்களில் இருந்து விலகிச் செல்லும். இது என் ஊகம் தான், இதற்கு ஆதாரங்கள் எவையும் என்னிடம் இல்லை.
  21. உங்களுக்கா? நான் நினைக்கவில்லை😎! எனவே, உங்களுக்காக அமெரிக்காவின் புதிய "உத்தியோக பூர்வ மொழியான" ஆங்கிலத்தில்: Relevant sections: Sections like 370 of the IPC encompass different forms of coercion, including using threats, force, or deception. Consent under deception: If someone is deceived into giving consent, it is not considered valid consent in the eyes of the law. Recent amendments: The Criminal Law Amendment Act of 2013 further strengthened the legal framework 👉regarding consent and sexual assault, including considering deception as a form of coercion. விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டு இது தான். இதை இல்லையென்று கோர்ட்டில் போய் நிறுவக் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கேசை தள்ளுபடி செய்யவும், குற்றம் சாட்டுபவரை செல்வாக்கினால் அகற்றவும் முயன்றமையால் தான் உங்களிடம் கேட்கிரேன்: ஏன் சீமான் எதிர்கொள்ளத் தயங்குகிறார்? ஒரு விளக்கம் தானே இருக்க முடியும் இதற்கு? மடியின் கனம்!
  22. அண்ணன் ஜஸ்ரின் "திராவிட மாடல்" என்பதால் என்ன கருதினார் என்பதற்குப் பதில் ஜஸ்ரின் முன்னர் எழுதிய இந்தக் கருத்திலேயே இருக்கிறது👆! 🤣..செருப்பு சின்னதாகி விட்டதா, பாதங்களை வெட்டிக் கொள்! கேள்விக்குப் பதில் இல்லையா? கேள்வியையே மாற்றி விடு!
  23. ஓணாண்டியார் விளங்கினாலும் விளங்காதமாதிரி நடிப்பது தான் அவருக்கு ஒரே வழி! சிரிப்புக் குறி போட்ட விசுகருக்கு பாலியல் வல்லுறவு என்றால் "பழைய தமிழ் திரைப்படங்களில் லிப்ஸ்ரிக் பூசிய வில்லன் கதறக் கதற கதாநாயகியை பலாத்காரம் செய்வது தான் வல்லுறவு" என்ற புரிதல் என நினைக்கிறேன். ஆனால், நீங்கள் மட்டும் தான் உண்மையாக விளங்காமல் இருக்கிறீர்கள் என நம்புகிறேன்: வயது குறைந்தவர், அனுமதி கொடுக்கும் நிலையில் இல்லாதவரோடு மென்மையாக உறவு வைத்துக் கொண்டாலும் அது சட்ட ரீதியாக பாலியல் வல்லுறவு தான். அதே போல, கட்டிக் கொள்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி (coercion by deception) உடல் இன்பம் பெற்றுக் கொள்வதும் பாலியல் வல்லுறவு தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.