Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. தெரியவில்லை, "சுருட்டு பத்த வைக்க நெருப்பிருக்கிறதா?" என்று கேட்கப் போயிருப்பாரோ😂? தெரிவத்தாட்சி அலுவலர் (யாழ் அரச அதிபர்) பணியில் இருந்தார். பணியில் இருக்கும் தெரிவத்தாட்சி அலுவலரை உத்தியோக பூர்வ வேட்பாளர்கள், அவர்களின் ஏஜெண்டுகள் யாரும் போய் சந்திக்கலாம். காரணம் உங்களுக்கும் எனக்கும் தெரியாமல் இருக்கலாம், அவர் சந்தித்தாலேயே ஏதோ கோல் மால் நடந்திருக்கிறது என்பதை "எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுகிறது" என்பதை நம்பும் யாரும் நம்புவர்😎. ஆனால், வாக்கு எண்ணும் இடத்தில் சுமந்திரன் இருந்ததாகச் சொன்ன சசிகலாவுக்கு, அதை இன்னும் காவித்திரிவோருக்கு தேர்தல், எண்ணும் நிலையம் என்பன பற்றி ஒன்றும் தெரியாது என்பது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
  2. ஐங்கரன் மாஸ்ரர் இதே கோசத்தோடு பொதுத் தேர்தலில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில சமயம் அதியுச்ச வாக்குகள் பெற்று பா.உ ஆவார்😂!
  3. உண்மையில் நடந்தது வேறு விடயம்: உள் தகவல் அறிந்தவர் என்ற அறிமுகத்தோடு இருந்த யாரோ "நீங்கள் உச்ச விருப்பு வாக்குகளோடு வென்று விட்டீர்கள், வாழ்த்துக்கள்" என்று சசிகலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அதை அவரது மகளும் சரியாக ஆராயாமல் (அதுவும் ஒரு சட்டத் தரணியாம்!) முகநூலில் பகிர்ந்து விட்டு ஆவெண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முடிவு வந்த போது அதிர்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுதிருக்கிறார் சசிகலா. அடுத்த நாள் "சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்தினுள் இருந்ததைப் பார்த்தேன், அவர் தான் ஏதோ செய்து போட்டார்!" என்று வேறு சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தில் , சுத்தக் கோணங்கியாக தன்னைத் தானே வெளிக்காட்டிக் கொண்டவர் சசிகலா எனலாம். எப்படி? சுமந்திரன் வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் போது மத்திய கல்லூரிக்கு வந்தது உண்மை. ஆனால், அவரும் சரி, சித்தார்த்தனும் சரி தெரிவத்தாட்சி அலுவலரின் அலுவலகமாக இருந்த றொமெய்ன் மண்டபத்தினுள் சென்று தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் அரச அதிபரை மட்டுமே சந்தித்தனர். இந்த அலுவலகம் வாக்கு எண்ணும் இடமல்ல. வாக்கு எண்ணும் வேலை நடந்தது, றொமைன் மண்டபத்தின் இடது பக்கம் இருந்த பழைய Cash Block என்ற வகுப்பறைகள் இருந்த பகுதியில். இந்தப் பகுதிக்குள் தேர்தல் பணியாளர்கள் தவிர வேறு யாரும் நுழைய முடியாத படி ஏற்பாடுகள் இருந்தன. அப்படி வாக்கு மோசடிகள் ஏதும் செய்வதானால், எண்ணுவோரும், யாழ் அரச அதிபரும் தான் செய்திருக்க வேண்டும், யாரும் அவர்கள் மீது முறைப்பாடு செய்யாமல், சும்மா இந்த போலித் தகவலை "சுமந்திரன் பாசத்தில்" இன்னும் காவித் திரிகிறார்கள்! இந்த தகவல்களை நானுட்பட இங்கே சிலர் ஏற்கனவே பல முறை பகிர்ந்திருக்கிறோம். ஆனாலும், செலக்ரிவாக மறந்து விட்டு பழைய ரெக்கோர்ட் மாதிரி தமிழ்சிறி போன்றோர் அலட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது.
  4. சரி: 1. சிறிமாவோ, 2. சந்திரிக்கா. இவர் இப்போது 3 வது பெண் பிரதமர்.
  5. சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பான பின்னடிப்பினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் கோபமும். இவை போல, பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மக்களுக்கு திண்மையான/தொட்டுணரக் கூடிய (tangible) காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. எனவே, பொது வேட்பாளர் தோற்றார். இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் பகுதியெண்ணைக் குறுக்கி "பொது வேட்பாளர் ஓரளவுக்கு வென்றார்" என்று காட்டும் முயற்சி நம்மை நாமே ஏமாற்றும் வேலை தான். இதையே, பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தால், இப்போது இருக்கும் பா.உ எண்ணிக்கையும் சுருங்கும்!
  6. 20% பதில் வந்த பின்னத்தின் பகுதியெண் என்ன? பொது வேட்பாளரின் சொந்த தொகுதியையும் தூக்கி விட்டுக் கணித்திருக்கிறீர்கள் என ஊகிக்கிறேன்!
  7. இது தான் இலக்கு👆! இதை பொது வேட்பாளர் மூலம் செய்ய இயலாமல் போய் விட்ட கோபத்தில் தான் இனி பொதுத் தேர்தலை எதிர் கொள்வர்😂! இதைத் தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்: தீவிர தேசியவாத தமிழர் அரசியலில் - குறைந்த பட்சம் இந்த வட்சப் பதிவை எழுதுவோர் போன்றோரின் பார்வையில்- ஒரு சில குறிப்பிட்ட கருத்துகளை உரத்துச் சொல்வோர் மாத்திரமே கை தட்டி வரவேற்கப் பட வேண்டும், ஏனையோர் மக்கள் தேர்வு செய்தாலும் விரட்டப் பட வேண்டும். இந்த மக்கள் தீர்ப்பை மதிக்காத ஜனநாயக மறுப்பை ஆதரிக்கும் ஆட்களோ தேடிப் போய் அடைக்கலம் தேடுவது ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகளில்! அங்க இருந்து தான் ஊரில் ரௌடிகளும், ஒத்த ரூட் தீவிர போக்காளர்களும் உருவாக ஆசிர்வாதம் வழங்குவர்😂! இவர்கள் எத்தனை தரம் வாக்காளர்கள் வாக்குகள் மூலம் சொன்னாலும் திருந்தப் போவதில்லை! விளக்குமாறால் தான் இந்த தீவிர தேசிய ரௌடிகளை அடித்து விரட்டுவர் மக்கள்!
  8. "ஒற்றுமை" என்பதை நீங்களும், விசுகரும் புரிந்து கொண்டிருக்கும் விதம் பிழையாக இருக்கிறது, ஆனால் "தீ கக்கும் தீவிர தேசியர்களின்" இயல்பு எங்கேயும் இப்படித் தான் இருக்கிறது. ஒரு முட்டாள் தனத்தை, அது நிகழும் போதே "இது முட்டாள் தனம்" என்று கூறியவர்கள் அந்த முட்டாள் தனத்திற்கு ஆதரவு தராமையால் தான் தோல்வி வந்தது என்று நீங்கள் முறையிடுகிறீர்கள்😂. அது ஏன் முட்டாள் தனம் என்பதற்கான காரணங்களை (இந்தியாவின் சதி என்ற உறுதியாகாத காரணம் பின்னர் உருவானது) பந்தி பந்தியாக பலர் எழுதி விட்டார்கள், எனவே மீள எழுத வேண்டியதில்லை! எனவே, ஒற்றுமை என்பதன் முதல் படி "என்னோடு ஒத்துப் போகாதவன் எல்லாம் எதிரி!" என்ற கட்டுப் பெட்டித் தனத்தைக் கைவிடுவது தான். பொது வேட்பாளர் தமிழ் பகுதிகளில் கூட மூன்றில் இரண்டு வாக்காளர்களால் நிராகரிக்கப் பட்ட பின்னும் உங்களுக்கு இது உறைக்கவில்லையானால், எதுவுமே உங்களுக்கு உறைக்காது!
  9. தகவல் மூலங்களை சரிபார்க்காமல் வெட்டி ஒட்டியவர் அப்படியே கூகிள் ட்ரான்ஸ்லேற்றரில் போட அது "பொரியலுக்குத் தடை" என்று மொழிமாற்றம் செய்திருக்கிறது😂!
  10. அப்பிடியே 2005 (2006?) உரையையும் புலனத்தில் இருந்து எடுத்துப் போட்டு விடுங்கோ! "..மகிந்த யதார்த்தவாதியாகத் தெரிகிறார்.." என்ற வரிகளை மீட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்😂!
  11. முதலில், இந்த உள்ளகப் போட்டியே, இந்த தேர்தலில் நிகழ்ந்திருக்கக் கூடாதென நான் கருதுகிறேன். தமிழர்களுக்கு தீரவைப் பெற்றுக் கொடுக்க ஆர்வமாயிருப்போர் பொதுத் தேர்தலில் தங்கள் திட்டங்களை முன்வைத்து வாக்குக் கேட்டுப் போட்டியிடுவது தான் முறை. 2020 இல் அப்படிப் போட்டி போட்டு, 3 வெவ்வேறு நிலை கொண்ட தமிழ் கட்சிகளையும், இரு தேசியக் கட்சி ஆட்களையும் வடக்கு கிழக்கு மக்கள் தேர்தெடுத்தார்கள். அதே போல மீண்டும் 2024/25 இலும் தேர்ந்தெடுக்க போட்டி போடுவது தான் முறை. அதை விட்டு விட்டு, ஜனாதிபதி தேர்தலில் இந்த சிறு பிள்ளை வேளாண்மையை பொதுக் கட்டமைப்பு ஆரம்பித்தது பயனற்ற வேலை! "விலகி இடங்கொடு, நான் வர வேணும்😎!" என்று சும்மா அலட்டிக் கொண்டிருக்காமல் பொதுத் தேர்தலில் நின்று மக்கள் ஆணையைப் பெற்ற பின்னர் பேசினால், பொதுக்கட்டமைப்பின் பின் நிற்கும் ஆட்களுக்கு மரியாதை திரும்பக் கிடைக்கலாம்!
  12. தேர்தலைப் புறக்கணிக்கும் படியான இவர்களின் வேண்டுகோள் வடக்கு கிழக்கு மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. இதை தரவுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் நேர்மையை முதலில் கஜேந்திரகுமார் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 2015, 2020, 2024 - இந்த எல்லா தேர்தல்களிலும் யாழ் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் பங்கேற்பு வீதம் 66- 67% தான்! கிழக்கில், சராசரியாக 70% பங்கேற்பு. எந்த அடிப்படையில் இப்படி ஒலி வாங்கி முன்னால் இருந்து வழமையாக 70 தாண்டும், இந்த முறை நாங்கள் கேட்டு யாழில் 67 இற்கு குறைந்து விட்டது என்கிறார்?
  13. இப்படி மூன்றாகப் பிரியும் போது, ஒப்பீட்டளவில் இப்போது இருக்கும் சுமூக நிலையை குலைத்துப் போடக் கூடிய ஒரு நிர்வாகம் தெற்கில் உருவானால் தாயக மக்கள் என்ன செய்வது? பொது வேட்பாளரை எதிர்ப்போரை பந்தி பந்தியாக திட்டும் ஆய்வாளர்கள் கூட இந்த எளிமையான கேள்வியை காணாதது போல கடந்து போயிருக்கின்றனர்😂!
  14. ஆரம்பம்: சர்வ தேசத்த்திற்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்! நடுக்கதை: சிங்களக் கட்சிகளுக்கு (முக்கியமாக ரணிலுக்கு, 2005 பாணியில்😎) ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்! கடைசி மூலை: "எங்களுக்குப் பிடிக்காத" தமிழ் தலைவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லப் போகிறோம்! ஆரம்பத்திலேயே செல்வத்தார் வாய் தவறிப் போட்டுடைத்திருக்கிறார்: முன்னாள் ஆயுத தாரிகள் அல்லாத, "தீவிர தமிழ் தேசிய வண்டியில் மிதிபலகையில் தொத்திக் கொண்டு வயிறு வளர்க்கும்" நிலையில் இல்லாத தலைவர்களை எதிர்க்கத் தான் இந்த பொது வேட்பாளர் கூத்து! இதைத் தான் நீங்கள் இப்ப மீளவும் சொல்லியிருக்கிறீர்கள் எனக் கருதுகிறேன்!
  15. மேல் முகநூல் பதிவுக்கு வந்த பின்னூட்டமொன்று, பலரின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது, எனவே இணைத்திருக்கிறேன். "...உங்கள் பிரச்சனையே இதுதான் நாலு இளசுகள் மைக்கு முன்னுக்கு பேசின விடையம் உங்களுக்கு இனிச்சுது... ஆனால் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அது அவர்களது கருத்து... (பல்கலையிலேயே பலர் அதை ஏற்கப்போவதில்லை அது வேறு கதை) இப்போது சில விரிவுரையாளர்கள் மைக்குக்கு முன் பேசிய விடையம் கசக்குது... உடனே அருகதை பற்றிப் பேசுகிறீர்கள்... நாட்டை விட்டு தப்பியோடி வெளிநாட்டில் சொகுசாக இருந்து கருத்துவிடும் பலரைவிட...படித்துவிட்டு புலம்பெயராமல் சொந்த நாட்டில் சேவையாற்றும் இந்த கல்வியாளர்களுக்கு அருகதை இருக்கிறது பிடிக்காவிட்டால் பாசிசவாத அவயங்களை மூடிக்கொள்ளுங்கள் குறிப்பு - அவையள் என்ன சொன்னாலும் நாங்க "
  16. இது மிகவும், தூர நோக்கும் இராஜதந்திரமும் மிக்க புலிகளின் செயல்களுள் ஒன்று என்பேன்! புலிகளின் தண்டனையால் ரணில் படு தோல்வி அடைந்தார். மகிந்த பதவிக்கு வந்து, யுத்தம் மீண்டும் ஆரம்பித்து, முள்ளி வாய்க்காலில் பத்தாயிரக் கணக்கான தமிழர்கள் இறந்தார்கள். சர்வதேச நாடுகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தமிழர் பக்க நியாயத்தை ஏற்றுக் கொண்டு இப்போது தமிழர் பக்கமே நிற்கின்றன. இனப்படுகொலையாளிகளான பக்சாக்கள் ஹேக் நகரில் சிறையில் இருக்கிறார்கள்! ரணில், இன்னும் தோல்வியில் இருந்து மீள இயலாமல் வீழ்ந்து கிடக்கிறார்! பி.கு: முடிவிலி எண்ணிக்கையான சமாந்தர அகிலங்கள் (parallel universe) இருக்கின்றன, அந்த சமாந்தர அகிலங்களில் ஒன்றில் 👆 இது நடக்கிறது என்ற நம்பிக்கையோடு வாசிக்கவும்!
  17. அப்பிடியோ? இந்த தலை கீழ் வரலாற்றை எங்கே எடுத்தீர்கள்? பதில் அவசியமில்லை. 2014 இல் கிரிமியாவை ஒரு எதிர்ப்புமில்லாமல் வந்து ரஷ்யா பிடித்தது நட்புறவான செயல் என்கிறீர்களா? அந்த நேரம் சும்மா இருந்தது போல இப்போதும் சும்மா மேற்கு இருந்திருந்தால், நீங்களும் இப்ப அகதியாக மேற்கு நோக்கி வந்திருப்பீர்கள் என நான் ஊகிக்கிறேன்! கிழக்கு நோக்கி ரஷ்யாவுக்கு போயிருப்பீர்கள் என்று சொன்னாலும் நம்புகிறேன்😎! இவ்வளவு "உலக நலன்" கருதி எழுதுகிறீர்கள் என்கிறீர்கள்! ஆனால், நீங்கள் வந்து தஞ்சம் பெற்ற நாடே அமெரிக்காவினால் நாசிகளிடமிருந்தும், பின்னர் நேட்டோவினால் ஸ்ராலினிடமிருந்தும் காப்பாற்றப் பட்ட நாடு என்பதை எங்கேயும் வாசித்தறியவில்லையா? அல்லது உருப்படியான ஒலி ஒளி மூலங்களில் கேட்டுக் கூட அறிய முடியவில்லையா? இதற்கு தற்போது உங்களிடம் இருக்கிற ஒரு சோடி கண்ணும் காதுமே போதுமே உங்களுக்கு? பாவிக்க மாட்டீர்களா😂?
  18. ஹிஸ்பல்லா அமைப்பின் மீது ஒரு எதிர்கால இராணுவ நடவடிக்கையின் போது அதிர்ச்சி வைத்தியமாக (element of surprise) செய்யவிருந்த வேலையை, இஸ்ரேல் இப்போதே அவசரமாகச் செய்ய வேண்டி வந்து விட்டது என்கிறார்கள். இனி புதுக் கொம்பனியொன்றை உருவாக்கி, புதிய அண்டர் வேர் மாதிரி ஏதாவது ஹிஸ்பல்லா போராளிகளுக்கு விற்றுத் தான் அடுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் இஸ்ரேல்😎!
  19. இது இராணுவத்திற்கு மட்டுமல்ல, சகல வளங்களுக்கும் பொருந்துமென நினைக்கிறேன். வளைகுடா எமிறேற் நாடுகள் பல, குடிமக்களுக்கு சகலவற்றையும் இலவசமாக வழங்கும் அளவுக்கு செல்வம் மிகுந்தவை. ஆனால், மக்கள் அங்கேயிருந்து சில சமயங்களில் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் வந்து தங்கி விடுகிறார்கள். (சவூதி அரச குடும்பத்தினரே தங்கள் இராட்சத போயிங் விமானத்தில் பறந்து வந்து இங்கே தான் உடுப்பு வாங்குகிறார்கள்!). ரஷ்யாவிடம் எரி சக்தி வளம், பாரிய நிலப் பரப்பு எல்லாம் இருந்தாலும், ஒருவரும் ரஷ்யாவின் எல்லையில் போய் "அசைலம்" கேட்டு வரிசையில் நிற்பதில்லை (இங்கே ரஷ்யாவை தலையில் தூக்கி வைத்திருப்போர் கூட ரஷ்யாவை அண்டவில்லை😂!). எனவே, ஒரு பலன்ஸ் இருக்க வேண்டும் எந்த நாட்டிலும். ஒரு விடயத்தில் பலத்தை வளர்த்து, இன்னொரு முக்கியமான விடயத்தில் பூச்சியத்தில் நின்றால் ஒரு நாடு சம நிலையில் இருக்கிறதெனச் சொல்ல முடியாது!
  20. உளறுவாயன் ஜே.டி. வான்ஸைக் கட்டுப் படுத்தாமல் பேச அனுமதித்தால், நீலக்கட்சிக்குத் தான் இலாபம்! எனவே, இவர்களைப் பேச விட வேண்டும் என நினைக்கிறேன்😂!
  21. நுணாவிற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  22. இப்பவும் எருமை மாடுகள் அமெரிக்காவையோ, வேறு லிபரல் ஜனநாயக நாடுகளையோ மதிப்பதில்லைத் தானே? கடாபி, சதாம் ஹுசைன், இடி அமீன், லீ பென், புரின் போன்ற பேர்வழிகளைத் தானே புகழ்ந்து கொண்டாடுகின்றன😎?
  23. கந்தையருக்கு கிளிநொச்சி செய்தி இன்னும் அப்டேற் ஆகவில்லைப் போல: நேற்று வந்த தகவல்படி மாவை பொது வேட்பாளருக்கு ஆதரவு. இன்றைய செய்தி இன்னும் வரவில்லை😎!
  24. கிருபன் பகிடிக்குச் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன்😎. சிவப்புக் கட்சியின் பழமை வாதக் கொள்கைகளுக்காக அந்தக் கட்சியை ஆதரிப்பது வேறு (அப்படியொரு "பழமை வாத சிவப்புக் கட்சி" இப்போது இல்லை என்பது வேறு கதை!). "ட்ரம்பை 2020 இற்குப் பின்னர் ஆதரித்து வாக்குப் போடுவது" என்பது சீரியசான பிரச்சினையிருக்கும் ஆட்களால் தான் முடியுமான காரியம். அதுவும், குடியேறிகளாக வந்தவர்கள் இப்போது ட்ரம்பிற்கு வாக்களித்து ஆதரிப்பது, குந்தியிருக்கிற மரத்தின் கிளையை வெட்டுவது போன்ற செயல். ஒஹையோவில் சட்ட பூர்வ குடியேறிகளாக வசிக்கும் ஹெயிற்றி மக்களைப் பற்றிய ட்ரம்ப் கூட்டத்தின் வெறுப்புப் பேச்சின் பின்னரும், ஏனைய நாட்டுக் குடியேறிகள் சிலர் ட்ரம்பை விரும்புகிறார்கள் - மிகவும் ஆச்சரியமான விடயம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.