-
Posts
6120 -
Joined
-
Last visited
-
Days Won
68
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Justin
-
சதிக் கோட்பாட்டாளர்கள் சரியான 'நடுநிலையாக' எழுதுவார்கள் போல! அப்ப சரி.😂
-
நன்றி, இணைந்திருங்கள். வரலாற்றை கதை போல (ஆனால் புனைவல்லாத உண்மைகளை வைத்து) எழுதி வாசகர்களை ஈர்க்கும் இருவர் எரிக் லார்சனும் (Erik Larson), பில் ஒ றைலியும் (Bill O'Reilly) . இவர்களுள் எரிக் லார்சன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்.
-
நீங்கள் வாசித்து விட்டுத் தான் கருத்து சொல்கிறீர்களென தவறாக நினைத்து விட்டேன்😂. ஹிற்லரின் கூட்டை ஏன் ஜேர்மனியர்கள் தேர்ந்தார்களென முதல் பாகத்திலேயே எழுதியாகி விட்டது (அதே போல இனப்படுகொலையாளர் குடும்பமான பக்ஷக்களை ஏன் சிங்களவர்கள் தேர்ந்தார்களென நீங்களும் தேடிப் பார்த்து அதன் பின்னாலுள்ள நியாயங்களையும் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன், அப்படியா?😎 ) ஜேர்மனிய யூதர்கள் ஹிற்லருக்கு முன்னர் செய்த அக்கிரமங்களை நீங்கள் தான் சொல்ல வேண்டும்! ஏனெனில் ஒழுங்கான ஒரு வரலாற்று நூலிலும், ஆவணத்திலும் யூதர் செய்த அக்கிரமங்களைக் காணவில்லை. நீங்கள் பார்க்கும் சதிக் கோட்பாட்டு வீடியோக்களில் மட்டுமே அவை இருக்கின்றன என நினைக்கிறேன்.
-
ஜப்பான் வர இன்னும் மூன்று நான்கு பாகங்கள் இருக்கு. ஆனால், நுணாவும் கோசானும் சுட்டியது போல, இம்பீரியல் ஜப்பான் இராணுவம் நாசிகளுக்கு சளைக்காத கொடூரர்களே! நன்றி! நன்றிகள்! ஆம், அதனால் தான் இடையிடையே நாசிகளுக்குப் பிந்திய காலங்களையும் சுட்டிக் காட்டி எழுதுகிறேன். கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்!😎 நான் வாசித்த வரலாற்றின் படி, பேர்லின் உட்பட்ட ஐரோப்பிய நகரங்களில் வர்த்தகம், கலை, விஞ்ஞானம், அரசியல் என எல்லப் பரப்புகளிலும் வெற்றிகரமாக வாழ்ந்தது தான் ஐரோப்பிய யூதர்கள் செய்த "அக்கிரமம்"! 😂. அந்தக் காலத்தில் கள்ள மட்டை போடுதல், களவாக வேலை, போன்ற "அக்கிரமங்கள்" கூட இருந்திருக்கவில்லை! நீங்கள் என்ன அறிந்து கொண்டீர்கள் என்று சொன்னால் அறிந்து கொள்கிறோம்! நன்றி!
-
திரும்பும் வரலாறு -பாகம் 4 போர்மேகமும் இடிமுழக்கமும் நாசி ஜேர்மனி 1938 இலேயே அயல் நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டதை முன்னைய பாகத்தில் பார்த்தோம். இந்த ஆக்கிரமிப்புக்கள் பாரியளவு எதிர்ப்புகளின்றி நிகழ்ந்தன. முதலில் ஆஸ்திரியா பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவின் எல்லைப் பகுதிகள் என்பன வீழ்ந்தன. இந்த நாடுகளின் இயற்கை வளங்களை நாசி ஜேர்மனி தன் இராணுவ மயப்படுத்தலுக்கும், பொருளாதாரப் பலத்திற்கும் பயன்படுத்திக் கொண்டது. அதே வேளையில், ஜேர்மனியின் யூதர்களுக்கெதிரான கொள்கைகளும் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குப் பரவின. ஐரோப்பாவில் யூத மக்களுட்பட்ட ஆரியல்லாத மக்களுக்கு எதிர்காலம் கேள்விக் குறியானது. இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாத யூதர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள். இன்னும் பல்லாயிரம் பேர், அத்திலாந்திக்கைத் தாண்டி அமெரிக்கக் கண்டத்து நாடுகளில் அடைக்கலம் தேடினர் - எல்லோருமே இந்த விடயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கவில்லை. உதாரணமாக, கியூபாவை நோக்கியும், கனடாவை நோக்கியும் யூத அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல்கள் சில திருப்பி விடப் பட்டன. அந்தக் கப்பல்களில் இருந்து இறக்கப் பட்ட யூத அகதிகள் வதை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர், அவர்களுள் பலர் உயிரோடு மீளவில்லை! யூத அகதிகளுக்கு நடந்த இந்த அவலம், மீள நிகழாமல் இருக்க பிற்காலத்தில் ஐ.நா எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஒன்று தான் ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) என்ற பதவியின் உருவாக்கம். இந்த அமைப்பினால் பயனடைந்தவர்களுள் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் அடங்குகின்றனர். அதே வேளை ஈழத்தமிழர்கள் போல அதிர்ஷ்டம் கிட்டாத றோஹிங்கியா அகதிகளும் கூட ஓரளவுக்கு இந்த அமைப்பினால் தான் பாதுகாக்கப் படுகின்றனர். (இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!) ஹிற்லரைக் குளிர்வித்தல்! ஏற்கனவே சுட்டிக் காட்டப் பட்டது போல, ஹிற்லர் , நாசிகள் அவர்கள் கொள்கைகள் என்பன உடனடியாக உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவில்லை. உதாரணமாக, அமெரிக்கா நாசி ஜேர்மனிக்குத் தான் கொடுத்த கடன்களை எப்படிப் பவ்வியமாகத் திருப்பி வசூலிப்பதென மட்டும் யோசித்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, ராஜதந்திர அனுபவமில்லாத ஆனால் ஜேர்மன் மக்கள் மீது அபிமானம் கொண்ட ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியரை தன் தூதுவராக பேர்லினில் நியமித்தது. நாசி ஜேர்மனியை எதிர்க்கும் வலுவுடன் எஞ்சியிருந்தவை மூன்று நாடுகள்: பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம். பிரான்ஸ், மஜினோ லைன் என்ற ஒரு எல்லைக் கோட்டை பாதுகாப்பு அரண்களுடன் அமைத்து விட்டு போர் வரும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தது. பிரிட்டனில் ஆட்சியில் இருந்த நெவில் சம்பர்லின் போரை விரும்பவில்லை. "ஹிற்லர் மரியாதையை எதிர்பார்க்கிறார், அதைக் கொடுத்து விட்டால் அடங்கி விடுவார்" என்று நினைத்த பிரிட்டன் அரசியலாளர்களுள் ஒருவராக இருந்த சம்பர்லின், 1938 இல் ஜேர்மனி சென்று ஹிற்லரை நேரடியாகச் சந்தித்து ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டு வந்தார். மியூனிக் (Munich) ஒப்பந்தம் எனப்பட்ட அந்த ஒப்பந்தம், ஜேர்மனியும் பிரிட்டனும் இனி ஒரு போதும் யுத்தத்தில் எதிரிகளாக இருக்க மாட்டா என்றிருந்தது. இத்தகைய "சர்வாதிகாரி எதிர்பார்ப்பதைக் கொடுத்தால் சமாதானம் நிலைக்கும்" என்ற கொள்கையை "குளிர்வித்தல் கொள்கை" (appeasement policy) என்று அழைப்பர். இன்றும் ரஷ்யாவின் புட்டின் கேட்பதைக் கொடுத்தால் உக்ரைனில் அழிவு நிற்கும் என்போர் இதே குளிர்வித்தல் கொள்கையையே வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால், ஹிற்லர் மியூனிக் உடன்படிக்கை உருவாகி சில மாதங்களிலேயே முழு செக்கோஸ்லோவாக்கியாவையும் ஆக்கிரமித்து குளிர்வித்தல் சரிப்பட்டு வராத ஒரு கொள்கையென நிரூபித்தார். இவ்வளவு நிகழ்ந்த பின்னும் ஹிற்லரை நம்பிய உலக நாடுகளும் தலைவர்களும் இருந்தனர், அவர்களுள் ஒருவர் சோவியத் ஒன்றியத் தலைவர் ஸ்ராலின். ஏற்கனவே பிரான்சுடன் ஒரு எதிர்கால ஒத்துழைப்பை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து, நாசி ஜேர்மனியை எதிர்க்கக் கூடிய அணியில் சோவியத் ஒன்றியத்தை வைத்திருந்தார். ஆனால், 1939 ஆகஸ்ட் மாதம், மின்னாமல் முழங்காமல் நாசி ஜேர்மனியோடு ஒரு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து கொண்டார். மொலரோவ் - றிப்பன்ட்ரொப் உடன்படிக்கை என்ற பெயர் கொண்ட இந்த உடன்பாடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தமாக இருந்தாலும், அது உண்மையில் ஐரோப்பாக் கண்டத்தைப் பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு ஒப்பந்தமாக இருந்தது. இந்தப் பங்கு பிரிப்பு ஆரம்பித்தது போலந்தில். 1939, செப்ரெம்பர் 1 ஆம் நாள் ஜேர்மனி போலந்தின் மீது ஆக்கிரமிப்பை முடுக்கி விட்டது. அதிகாலை 4.45 மணிக்கு, நாசி ஜேர்மனியின் பீரங்கிக் கப்பலில் இருந்து போலந்தின் வட கரையோர நகரான டான்சிக் (Danzig, தற்போதைய பெயர் கடைன்ஸ்க் - Gdansk) மீது ஏவப்பட்ட முதல் குண்டு தான், இரண்டாம் உலகப் போரின் முதல் வெடியெனக் கருதப் படுகிறது. இரண்டு வாரங்கள் கழித்து, ஸ்ராலினின் சோவியத் ஒன்றியம் போலந்தின் கிழக்குப் பாதியைப் படையெடுத்து ஆக்கிரமித்தது. ஹிற்லர் ஸ்ராலின் கூட்டின் முதற்பலி போலந்து! போலந்தின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த நாசி எதிர்ப்பு நாடுகளான பிரான்சும், பிரிட்டனும் நாசி ஜேர்மனி மீது போர்ப் பிரகடம் செய்தன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் நாசி ஜேர்மனியின் இராணுவ வலிமையை இந்த இரு நாடுகளின் தரை, வான், கடற்படைகளால் மழுங்கடிக்க இயலவில்லை. 1940 ஏப்பிரலில், மீண்டும் ஒரு சுற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்த நாசி ஜேர்மனி சடுதியாக நோர்வே, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளை ஆக்கிரமித்திருந்தது. 1940 மே மாதம் ஆரம்பித்த போது மேற்கில் பிரான்ஸ் மஜினோ எல்லையை நோக்கி நாசிகள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். முடிவிற்கு வந்த குளிர்வித்தல் கனவு ஹிற்லரின் சடுதியான இராணுவ வெற்றிக்கு சம்பர்லினின் குளிர்வித்தல் கொள்கை ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 1939 இல் சம்பர்லின் மியூனிக் உடன்படிக்கை மூலம் போரை தற்காலிகமாக ஒத்தி வைத்தாரென சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, பிரிட்டனின் றோயல் விமானப் படை (RAF) 1939 இல் ஒரு போரை எதிர்கொள்ளக் கூடிய ஆள், தளபாட பலங்களோடு இருக்கவில்ல. ஆனால் 1940 இல் நாசிகள் பிரிட்டன் மீது தொடர் விமானத் தாக்குதல்களை நடத்திய போது, ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு றோயல் விமானப் படை வளர்ந்திருந்தது. ஆனால், ஹிற்லரின் வளர்ச்சிக்கு வழி கோலி விட்டார், தொடர் தோல்விகளுக்கு தலைமையாக இருக்கிறார், ஆகிய காரணங்களால் சம்பர்லின் தொடர்ந்து பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என்ற எண்ணம் ஓங்கியது. அவரும் உடல் நலக் குறைவால் பதவி விலக, வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரதமரானது 1940, மே 10 ஆம் திகதி. சேர்ச்சிலின் வரவோடு, சண்டைக்காரனைக் குளிர்விக்க வேண்டுமென்ற குரல்கள் பிரிட்டனில் அடங்க ஆரம்பித்தன. வின்ஸ்ரன் சேர்ச்சில் சேர்ச்சில் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர் அவர் அப்பழுக்கற்ற ஒரு பூரணமான அரசியல் தலைவர் அல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் (அப்படி யாரும் இன்றும் இல்லை என்பதே உண்மை). பிரிட்டனின் காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதை எதிர்த்த பிரிட்டன் அதிகார மட்டத்தில் சேர்ச்சில் முக்கியமானவர். உள்ளூரில், அரசியல் கொள்கையை விட தனது அரசியல் முன்னேற்றத்தை ஒரு படி மேலே வைத்திருந்த சேர்ச்சில் ஓரிரு தடவைகள் கட்சியை மாற்றிக் கொண்டார். ஆனால், இந்தக் குறைபாடுகளைத் தாண்டி ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தலைமையேற்க அவசியமான பல பண்புகளுக்கு சேர்ச்சில் சொந்தக்காரராக இருந்தார். 1. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் - இதனால் தன் கருத்துகளை இலகுவாக பகிரங்கப் படுத்த முடிந்தது, போர்க்கால இங்கிலாந்தில் இந்தத் தொடர்பாடல் மிகவும் பலன் தந்தது. 2. பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய அனுபவமும், முதல் உலகப் போரில் நேரடியாகப் பங்கு பற்றிய அனுபவமும் சேர்ச்சிலிடம் இருந்தன. எனவே, பிரதமரான சேர்ச்சில் அது வரை இல்லாதிருந்த பாதுகாப்பு அமைச்சை புதிதாக உருவாக்கி, தன்னிடமே வைத்துக் கொண்டு நேரடியாக பிரிட்டனின் படை நடவடிக்கைகளைக் கண்காணித்தார். 3. சேர்ச்சில் இறுதி வரை ஒரு வரலாற்று மாணவனாகவே இருந்தார். கடந்த காலங்களின் போர் வரலாறுகளை வாசிப்பதிலும், சமகாலப் போர்களை வரலாறாகப் பதிவு செய்வதிலும் ஆர்வமாக இருந்த சேர்ச்சிலுக்கு, அவரது எழுத்துப் பணிக்காக பிற்காலத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் வழங்கப் பட்டது. நாசி விமானப் படை விமானங்களைத் தேடி தூரநோக்கிக் கண்ணாடியூடாக அவதானிக்கும் றோயல் விமானப் படைத் தொண்டர் - இப்படி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரேடாருக்கு மேலதிகமாக பணியில் இருந்தனர் (பட உதவி: நன்றியுடன் அமெரிக்க அரசு ஆவணக்காப்பகம்) நாசிகளை எதிர்க்கும் முயற்சியில், சேர்ச்சில் சில உடனடி நடவடிக்கைளை எடுத்தார். இது வரை நாசிகளின் தாக்குதல் பாணி, செறிவான விமானக் குண்டு வீச்சுகள் , பீரங்கித் தாக்குதல்கள் மூலம் இலக்கைச் சிதைத்து விட்டு, பின்னர் தரைப் படையை அனுப்பி ஆக்கிரமிப்பது என்பதாக இருந்தது (blitzkrieg - அதிரடி அல்லது செறிவடி எனத் தமிழில் கூறலாம்). எனவே, நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து நாட்டைக் காக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப் பட்டன. பிரிட்டனின் கரையோரங்களில் ரேடார் நிலையங்கள் அமைக்கப் பட்டன. றோயல் விமானப் படைக்கென புதிய விமானங்களை உற்பத்தி செய்வதற்கு தனியான ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டது - அதன் தலைவராக செயல்திறன் மிக்க ஒருவர் நியமிக்கப் பட்டு, ஆயிரக்கணக்கான புதிய தாக்குதல் விமானங்கள் சில மாதங்களிலேயே பாவனைக்கு வெளிவிடப் பட்டன. பிரிட்டனின் அந்தக் கால விமான இயந்திரவியல் தொழில்னுட்பத்திற்குச் சாட்சியாக ஹரிகேன் (Hurricane), ஸ்பிற்fயர் (Spitfire) ஆகிய சிறந்த சண்டை விமானங்கள் உருவாக்கப் பட்டன. கடற்படையைப் பொறுத்தவரை, பிரிட்டனை விடப் பலம் வாய்ந்த கடற்படை பிரான்சிடம் இருந்தது, ஆனால் பிரான்ஸ் நாசிகளிடம் தோற்றால் அந்தக் கடற்படையே பிரிட்டனுக்கு ஆப்பாகும் என்பதையும் சேர்ச்சில் உணர்ந்திருந்தார். இதனாலேயே, பிரான்ஸ் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை அடிக்கடி பிரெஞ்சுத் தலைவர்களிடம் நினைவுறுத்தி வந்தார் சேர்ச்சில். வீழ்ந்தது பிரான்ஸ் இந்த இராணுவ நிலவரத்தை மறுகரையில் இருந்த நாசிகளும் உணர்ந்திருந்தனர். எனவே, சேர்ச்சில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற அன்றே பிரான்சை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையையும் நாசிகள் ஆரம்பித்தனர். பிரெஞ்சுப் படைத்தலைமை தனது மஜினோ கோட்டின் வலிமையை சற்று அளவுக்கதிகமாகவே நம்பியிருந்தது. ஆனால், இந்த மஜினோ எல்லை என்பது ஒரு தொடரான காவலரண் சுவர் அல்ல. தெற்கே பிரான்ஸ் - இத்தாலி எல்லையில் ஆரம்பிக்கும் இந்தக் காவலரண்கள் நிறைந்த கற்பனைக் கோடு, சுவிஸ் எல்லையில் முடிவுற்று, பின்னர் ஜேர்மனியின் எல்லையோடு மீள ஆரம்பித்து, வடக்கில் பெல்ஜியத்தின் எல்லையோடு முடிவுறுகிறது. இந்த பெல்ஜியம்- பிரான்ஸ் எல்லையில் இருக்கும் ஆர்டென் காடுகள் (Ardennes forest) மிக அடர்த்தியான, நதிகளால் நிறைந்த ஒரு கன்னிக் காட்டுப் பிரதேசம். பிரெஞ்சுப் படைகளுக்கு, மஜினோ லைனைத் தாக்குவதாகப் பாசாங்கு காட்டிய நாசிகள், தங்கள் தாங்கிப் படையினரை இந்த ஆர்டென் காடுகளூடாக அனுப்பி பிரான்சின் வட கிழக்குப் பகுதியில் நுழைந்தார்கள். இது வரை எந்தப் படையாலும் ஊடுருவப் படாத ஆர்டென் காட்டினூடாக நாசிகள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின்றி இருந்த பிரான்ஸ், பாரிய இழப்புகளுடன் அடுத்த ஒரு மாதத்தினுள் நாசி ஜேர்மனியிடம் சரணடைந்தது. தற்போது பிரிட்டனின் நிலைஅபாயகரமானதாக மாறி விட்டது. நிச்சயம் பிரிட்டன் நாசிகளின் இலக்காக இருக்கும். "பிரெஞ்சுக் கடற்படையை தான் கைப்பற்றப் போவதில்லை" என ஹிற்லர் உத்தரவாதம் வழங்கியிருந்தாலும், அவ்வுறுதியின் நம்பகத் தன்மையை உலகம் அறிந்திருந்தது. எனவே, சேர்ச்சில், பிரான்சுக்கு வெளியே அதன் காலனிகளில் தரித்திருந்த பிரெஞ்சுக் கடற்படையினருக்கு மூன்று தெரிவுகளைக் கொடுத்தார். ஒன்று: பிரிட்டனுக்கு அல்லது பிரிட்டன் காலனிகளுள் ஒன்றுக்கு கப்பல்களோடு வந்து விடுங்கள், உங்களை இணைத்துக் கொள்கிறோம், இரண்டு: எங்களிடம் சரண்டையுங்கள், கப்பல்களை வைத்துக் கொண்டு உங்களை விட்டு விடுகிறோம், மூன்று: கரீபியன் தீவுகளுக்குச் சென்று அமெரிக்காவிடம் கப்பல்களை ஒப்படையுங்கள், அமெரிக்கா யுத்தம் முடியும் வரை கப்பல்களை வைத்திருக்கும். சில நாட்கள் அவகாசம் கொடுக்கப் பட்ட பிறகும் இந்த மூன்றில் ஒன்றுமே நடக்காமையால், பிரிட்டன் கடற்படை பிரெஞ்சுக் கடற்படையின் கப்பல்களைக் கைப்பற்றும் நடவடிக்கைளை எடுக்க ஆரம்பித்தது. இத்தகைய ஒரு நடவடிக்கையின் போது ஆயிரம் பிரெஞ்சுக் கடற்படையினர் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரொக்கோவின் துறைமுகமொன்றில் பிரிட்டனின் தாக்குதலில் கொல்லப் பட்டனர். இந்தக் காலப்பகுதியில், ஹிற்லரும் அவரது உள்வட்டத்தினரும் அடுத்த கட்ட நகர்வுகளைத் திட்டமிட ஆரம்பித்து விட்டிருந்தனர். ஹிற்லர் இன்னும் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை வழங்கவில்லை. இதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தை அடுத்த பாகத்தில் நாம் பார்க்கும் போது, ஏன் சேர்ச்சிலும், 1940 களில் வாழ்ந்த பிரிட்டன் மக்களும் உலகத்தை பேரழிவிலிருந்து காத்த புண்ணியவான்கள் என்பது புலப்படலாம். -தொடரும்..
-
உலகில் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழும் நான்கு இடங்கள் எவை? அதன் ரகசியம் என்ன?
Justin replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
நல்ல கட்டுரை. இணைப்பிற்கு நன்றி ஏராளன்! சில அவதானிப்புகள்: 1. இதய நோய், நீரிழிவு நோய்களுக்கு மட்டுமன்றி ஆயுளுக்கும் ஒரு பரம்பரைக் கூறு (genetic component) இருக்கிறது. ஆனால், அந்தப் பரம்பரைக் கூறை மாற்றியமைக்கும் வல்லமை எங்கள் பழக்க வழக்கத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் இருக்கிறது. 2. இது எப்படி நிகழ்கிறது? எங்கள் ஜீன்களின் செயல்பாட்டை நாம் உள்ளெடுக்கும் உணவு, பானங்கள், சுவாசிக்கும் காற்று, மனரீதியான காரணிகள் என்பன மாற்ற முடியும். ஜீன்களை உருவாக்கும் மூலக் கூறுகளில் இரசாயன மாற்றங்களை உருவாக்குவதால் இது நிகழ்கிறது. இதை மேலாண் மரபியல் (epigenetics) என்று அழைப்பர். 3. இப்படி இரசாயன ரீதியாக ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள், எங்கள் சந்ததிக்கும் கருமுட்டை, விந்து ஆகியவை மூலமாகக் கடத்தப் படக் கூடியவை (heritable). எனவே, ஒரு சமூகம் கைக்கொள்ளும் வாழ்க்கை முறையின் விளைவுகள், அப்படியே அடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கின்றன. எனவே, நல்ல போசணை, மது-புகையிலை தவிர்ப்பு, மன அமைதியும் தூக்கமும் - இவையெல்லாம் சமூக நலனை பல தலைமுறைகளுக்கு செம்மை செய்யும் வழிகள்! -
பாசையூரும், குருநகரும் அதிக கத்தோலிக்கர்கள் வாழும் பகுதிகள். அது மட்டுமல்லாமல் பலவழிகளில் பிரபலமான ஊர்கள் : உப்புக் காற்று வீசும் கடற்கரை, உதை பந்தாட்டம், ஊர்ச்சண்டை (அப்பவே குழுக்கள் இருந்தன) இப்படிப் பல காரணங்களால் தனித்துவமான ஊர்கள். உலர வைத்த திருக்கை (stingray) வால் இந்த இரு ஊர்களிலும் பிரபலமான ஆயுதம், உலோக வாளை விட ஆபத்தானது என்பார்கள்!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
Justin replied to goshan_che's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
அட, எதிர்பார்க்காத மாதிரியான முடிவு! நைற் ஷியாமளனின் The Sixth Sense படம் நினைவிற்கு வந்தது! பி.கு: "முருகர்சாமி" வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு சைட் கேசையும் பிலிப்ஸ் முன்னெடுக்க வைக்கலாமோ? 😂 -
நிச்சயமாக, வாரம் இரு முறை போடுவதாகத் தான் திட்டம், இந்த வாரம் வேலை கூடி நேரம் சுருங்கி விட்டதால் நாளை போடுவேன்! நன்றி
-
எந்தக் காலத்திலும் இருக்கும் ஒரு ராஜதந்திர வழமை தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. நாசிகள் பாரிசை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நாட்களில் கூட சேர்ச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தன் விமானத்தில் ஏறி பாரிஸ் போய் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது நடந்தது, இப்போது நிலைமைகள் இதை விட முன்னேற்றம். இனி இதை "இரகசிய ஒப்பந்தம்" என்று "ரிக் ரொக்" வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வார்கள் தான்- இதையெல்லாம் நம்பும் ஆட்கள் இருக்கும் வரை!!😂
-
🤣 penile fracture or penis fracture. இது ஒரு அரிதான விடயம் என்றாலும் நடக்கக் கூடியது. அனேகமாக பெண் இணை மேலேயும், ஆண் கீழேயுமாக உறவு கொள்ளும் போது ஒத்திசைவு பிசகினால் இது நடக்கும். முறிவு என்பதால் எலும்பு முறிவு போல இருக்காது. ஆணுறுப்பின் பெரும்பகுதியை ஆட்கொண்டிருக்கும் corpus cavernosum என்ற பகுதியினுள் இரத்தம் நிரம்புவதால் தான் ஆணுறுப்பு விறைப்படைகிறது. இந்த பஞ்சு போன்ற கண்ணறையான அமைப்பை ஒரு மெல்லிய, ஆனால் உறுதியான மென்சவ்வு (tunica albugninea) மூடியிருக்கும். அந்த சவ்வு உடைவதையே ஆணுறுப்பு முறிவென்பர். இதனால் இரத்தம் வெளிவந்து சவ்வுக்கும் தோலுக்குமிடையே கட்டியாகி விடும். வலியும் எக்கச்சக்கமாக இருக்கும். சத்திர சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டியிருக்கும்!
-
சில உறவுகள் நெடுமாறன் ஐயா வயது மூப்பினால் வந்த மறதி காரணமாக இப்படி பேச வைக்கப் பட்டிருக்கிறார் என்கின்றனர். பேட்டியைப் பார்க்கையில் எனக்கு விளங்கிய படி, ஐயா அபாரமான நினைவாற்றல், mental acuity என்பவற்றோடு இருக்கிறார்.
-
படங்கள் இணைப்பது எப்படி என்று பரிட்சித்து பார்க்கிறேன்
Justin replied to Sasi_varnam's topic in யாழ் அரிச்சுவடி
நன்றி. ஆம், நான் பதிப்புரிமை விடயத்தில் மிகக் கவனம். நான் எழுதும் தொடருக்கு தேவையான சில விம்பங்கள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பொது நோக்கில் பயன்படுத்தும் அனுமதியோடு கிடைக்கின்றன. -
ஐயா சொல்லும் சில தகவல்கள் முற்றிலும் தவறானவை. இலங்கையில் டி.என்.ஏ பரிசோதனைகள் செய்யும் வசதி 2006 இல் இருந்து கொழும்பு பல்கலையில் இருக்கிறது. அதற்கு முன்னரே 2002 இல் இருந்து Genetech (https://www.genetechsrilanka.com/) என்ற தனியார் நிறுவனம் அடையாளம் காணும் டி.என்.ஏ பரிசோதனைகளை வழங்கி வந்திருக்கிறது. டி.என்.ஏ பரிசோதனையை இலங்கை அரசு செய்ததா என்பதைச் சொல்ல முடியாது. ஆனால், இந்தியாவில் மட்டும் தான் செய்திருக்க முடியும் என்பது தவறான தகவல்.
-
படங்கள் இணைப்பது எப்படி என்று பரிட்சித்து பார்க்கிறேன்
Justin replied to Sasi_varnam's topic in யாழ் அரிச்சுவடி
இணையவன் தகவலுக்கு நன்றி. ஒரு கேள்வி: பதிவில் படம் இணைத்த பின்னர், விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றி விடலாமா? பதிவில் படம் தொடர்ந்து இருக்குமா? இது சரியெனில் வழங்கியின் சுமையை பாதியாகக் குறைக்கிறோம், அல்லவா? -
"புத்தியுள்ளவனுக்கே உலகம் சொந்தம்" என்று யூதர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எளிய விளக்கத்தை ஒதுக்கி விட்டு "யூதர்கள் உலகை ஆட்டிப் படைக்கிறார்கள்" என்ற சதிக் கோட்பாடு கலந்த ஒரு கருத்தை சிலர் பரப்பி வருவது உண்மை. "தகுதியே இல்லாமல் யூதர்கள் ஜேர்மனியில் மேலாண்மை செய்கிறார்கள், எனவே அழிக்க வேண்டும்!" என்று முழுமையான சதிக் கோட்பாட்டை வைத்துத் தான் நாசிகள் யூதப் படுகொலையை நியாயப் படுத்தினர்.
-
திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்
-
சுவி, கரு, என் கண்ணுக்கு ஏன் இது எச்சிலும், சளியுமில்லாத இன்னொன்று மாதிரித் தெரியுது? என் சாக்கடை மனசா?😵
-
ஹன்னா அறென்ட், ஒரு தத்துவவியலாளர் - மக்களை எப்படி சர்வாதிகாரிகள் தம் பக்கம் இழுக்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய எழுதிய ஒருவர்: அவரது ஒரு கருத்துப் படி: "சர்வாதிகாரிகள் முற்றாகத் தமக்கு எதிராக நிற்போரைக் கவர முற்படுவதில்லை. அதே போல, தங்களை முற்றாக ஆதரிக்கும் தீவிர ஆதரவாளர்களையும் கவர முற்படுவதில்லை. ஆனால், சரி எது பிழை எது என்பதைத் தெளிவாகப் பிரித்தறிய முடியாமல் தடுமாறும் குழுக்களையும், மக்களையும் குறி வைத்துக் கவர முற்படுவர்" இந்த கறுப்பு வெள்ளை வேறுபாடு தெரியாமல் "எல்லாம் ஒன்று தான்" என்று தடுமாறும் மக்களே சர்வாதிகாரிகளின் வரப்பிரசாதம்!" இங்கே டபுள் எம்.ஏ செய்ய முயல்வதும் அதே தான்! எனவே, அமைதி கொள்ளுங்கள்!😂
-
நிச்சயமாக. இரண்டாம் உலகப் போரின் கதையை, பிரிட்டன், சேர்ச்சில், ப்ளெட்ச்லி பார்க், RAF இவையெல்லாம் குறிப்பிடாமல் எழுதவே முடியாது! - அலன் ரூரிங்கும் வருவார்!
-
உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது. நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது. மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது. பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள் கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர். ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. இருளிரவின் ஆரம்பம் இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்? இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது. -இன்னும் வரும் ஜஸ்ரின்
-
யாழ் இணையத்தின் ஸ்தாபகர் மோகன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
Justin replied to nunavilan's topic in துயர் பகிர்வோம்
மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!