Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. ஒருவர் "பரிசுத்த வேதாகமம் சொல்வதெல்லாம் உண்மை, அதன் படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாதோர் எல்லோரும் அழிக்கப் படுவர்" என்கிறார். அந்த முட்டாள் தனத்தை எதிர்ப்பதா அல்லது "எனக்குப் பிடிக்காதவனைத் திட்டுகிறார்" என்று குழுவாதச் சகதியில் படுத்துக் கிடப்பதா என்ற தெரிவில் ஒரு நாலு பேர் இரண்டாவது தெரிவை எடுத்திருக்கின்றனர். என்ன ஒரு தூர நோக்கு, யோசிக்கும் திறன், கோசான் சொன்னது போல "கே.எf.சிக்கு கொடி பிடித்து வாக்குப் போடும் கோழிகள்😂" !
  2. இல்லை. உங்களைப் போன்ற சிலரை அப்படி சொல்லலாம் என்பது தான் நான் 🤐 மூலம் சொல்லாமல் சொன்னது!
  3. என்ன நொஸ்ட்ராடமஸ் திரி? நான் காணவில்லை? நானும் வந்து என் "பாசிச அடக்கு முறையை" வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் தவறி விட்டதே, ஐயகோ😂! பி.கு: எங்கோயோ பல வருடங்கள் முன்பு வாங்கிய ஒரு அடியின் கோபத்தில் இன்றும் எல்லா இடங்களிலும் நுழைந்து territory marking செய்யும் ஆட்களைக் கண்டு கொள்ளாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள்! சில விடயங்களில் மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனை தூக்கி ஏற்றி விட வேணுமேயொழிய, கீழே தான் இருப்பேன் என்பவர் இழுத்து விழுத்த இடம் கொடுத்தலாகாது, #அடக்கு முறைக் கருத்தாளன்😎
  4. இது போன்ற black & white விடயங்களுக்கெல்லாம் "மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்" என யோசிக்காமல் பதில் சொல்லி விட வேண்டும்! இல்லா விட்டால் கிடைத்த இடை வெளியில் #மண்ணு லாறி புகுந்து வாரிக் கொட்டி விடும் - புரியுதா நாஞ்சொல்றது😂?
  5. குறுசோ, உங்கள் எழுத்துக்கள் தீவிர evangelical christian நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதே மூட நம்பிக்கைகளை கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் சீரியசாக நம்பித் தான் "இயேசுவைக் கொன்ற யூதர்கள்" என்று யூத எதிர்ப்பு வன்முறை உருவாக்கப் பட்டு ஜேர்மனியில் மில்லியன் கணக்கான யூதர்கள் நாசிகளால் கொல்லப் பட்டதில் முடிந்தது. இவை காலத்திற்கொவ்வாத, மனித நாகரீகத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள்! பைபிளைக் கடவுள் எழுதவில்லை, கடவுள் சொன்னதாக சில நூற்றாண்டுகளாக வந்த வாய்வழிக் கதைகளின் எழுத்து வடிவமே பைபிள். மனித வரலாற்றை பைபிளின் ஊடாக மட்டும் பார்க்கும் போது இதைக் கவனத்திலெடுங்கள்.
  6. ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாடுகளின் அரசுகளுக்கே உள்ளூர் நிகழ்ச்சி நிரல், வெளியுலக நிகழ்ச்சி நிரல் எனப் பல திசைகளில் இழுபடும் "அட்ஜஸ்ட்மென்ற் வாழ்க்கை" எனும் போது, ஒரு உருப்படியான இலக்கும் இல்லாமல் "கொல்,ஒளித்திரு, கொல்" என்றிருக்கும் பயங்கரவாதக் கும்பல்களுக்கு எவ்வளவு தலையிடிகள் இருக்கும்😂? பலஸ்தீனர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்ற அக்கறை உண்மையிலேயே அரபுலகில் இருந்திருந்தால், 1993 இலிருந்தே கப்பலைத் திருப்பியிருக்க முடியுமே இந்த நாடுகளால்? ஏன் முடியவில்லை? சவூதி ஒரு திசை, ஜோர்தான் , எகிப்து இன்னொரு திசை என்று அவர்கள் பாடு தான் அவர்களுக்கு முக்கியம். கிளின்ரனும், ராபினும், நோர்வேயும் பலஸ்தீனருக்குச் செய்த நன்மைகளை விடக் குறைவாகத் தான் அரபு சக்திகள் செய்திருக்கின்றன. இன்னொரு பக்கம், அமெரிக்கா மறைமுகமாகக் கூட தங்கள் மீது பாய்ந்து விடக் கூடாதென்ற அக்கறையும் இந்தப் பயங்கரவாதக் குழுக்களுக்கு இருக்கிறது. இப்படி தீய வன்முறைச் சக்திகளை ஒடுக்கி வைக்க அமெரிக்கா, நேட்டோ, AUKUS போன்றவை தேவை தான்!
  7. மேற்கு எதிர்ப்பு, அமெரிக்க குலைப்பன், "கிளிசரின் கண்ணீர்" மனிதாபிமானம் எல்லாம் கலந்து இப்ப புரின் ஆதரவாளர் நசரல்லா விசிறிகளாக மாறப் போகிறார்கள்! தோல், கண் நிறம் கூட நெருங்கி வந்து விட்டது! ஆனால் ஒரு விடயம் துருத்திக் கொண்டு இடிக்குமே? மதத்தை என்ன செய்வது😂?
  8. யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
  9. இஸ்ரேல் இப்படி அப்பாவிப் பலஸ்தீனர்களைக் கொல்வது அற ரீதியில் தவறு மட்டுமல்ல, அதன் சொந்தப் பாதுகாப்பிற்கும் உதவாத ஒரு முட்டாள் தனமான செயல்! காசாவில் இருக்கும் 2 மில்லியன் வரையான மக்களில் 50% வரை 18 வயதுக்குக் கீழான இளையோர் என்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு இஸ்ரேலை நோக்கிய வன்மத்தை வளர்க்க இதுவே போதும். பயங்கரவாத ஒழிப்பு/ஹமாஸ் ஒழிப்பு விடயத்தில் இஸ்ரேல் தோல்விப் பாதையில் செல்கிறது எனக் கருதுகிறேன்.
  10. ஓம், இத்தளத்தை நான் "breitfart"என்று பகிடியாக அழைப்பதுண்டு. கீழ் வரும் பந்தியை வாசித்த போது அமெரிக்காவின் பிரபல நையாண்டிப் பத்திரிகையான The Onion வாசிக்கிறேனோ என்ற குழப்பம் வந்தது: "...Obama ignored Israel’s long record as one of the best, if not the best, countries in the world in upholding human rights and international humanitarian law in war against a ruthless, terrorist enemy"😂
  11. நேரப் பற்றாக்குறை, ஆனால் சுருக்கமாக: ஓம், சில விடயங்கள் தவறு, சில விடயங்கள் தவிர்ப்பு (omission) என்று அபிப்பிராயத்திற்கேற்ப தரவுகளை வளைத்திருக்கிறார். சில நுட்பமான உள்குத்துக்களும் கூட: "வட்டி, வர்த்தகம் என்று வாழ்ந்தார்கள்" என்கிறார். ஐரோப்பாவில் 1900 இல் யூதர்கள் மருத்துவம், விஞ்ஞானம் , வர்த்தகம் என்று எல்லாத் துறைகளிலும் கோலோச்சினார்கள், இந்த "cunning வியாபாரிகளாக இருந்தனர்" என்பது நாசிகள், யூத எதிர்ப்பாளர்கள் பாவிக்கும் ஒரு anti-Semitic trope! 1897 இல் முதல் சியோனிஸ்ட் காங்கிரஸ், ஆனால் அது தான் யூதர்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கும் முதல் முன்மொழிவு அல்ல. யூத நாடு இயக்கம் ஆரம்பித்தது 1800 ஆரம்பத்தில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த யூதர்களிடையே. இதைப் பார்த்து வளர்ந்த தியோடர் ஹேர்ஷல் தான் முதல் சியோனிஸ்ட் காங்கிரசை உருவாக்கி யூதப் பணக்காரர்களை நாடி பலஸ்தீனம் நோக்கிச் செல்லும் யூதர்களை அதிகரிக்க வைத்தார். டொக்ரர் குறை எதை வாசித்து விட்டு இதை எழுதினாரோ தெரியவில்லை!
  12. இப்பிடிச் சொல்லி விட்டீர்கள், இனி ராசம்மா வர மாட்டா😂!
  13. எனக்கும் யார் குறி போடுகிறார்கள் என்று அறிந்து பயனில்லை. அதை விட, இந்த மாற்றம் இல்லாமலே யார் கருத்திற்கு யார் விருப்பக் குறி போட்டிருப்பர் என்று ஊகிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சரியாக ஊகித்திருக்கிறேனா என்று பரிசோதிக்க, சில திரிகளை தற்போது சுற்றிப் பார்த்த போது, என் ஊகிப்பு கிட்டத் தட்ட 100 வீதம் துல்லியமாக இருக்கிறது😂!
  14. என்னுடைய கருத்து குணா எப்படி "அமெரிக்க ஷதி" கதையாடலை நடக்கும் சம்பவங்கள் வைத்து உருவாக்குகிறார் என்பது பற்றி மட்டும் தான், இது தான் கிளி ஜோசியம். யாழ் களத்தில், உலகின் முக்கியமான சம்பவங்கள் பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடப்பது சாதாரணமானது, அனேகமானோர் தகவல்களை, வரலாற்றுத் தரவுகளைப் பகிர்கிறார்கள், எனவே பயனுள்ளவை தான் இந்தப் பரிமாற்றங்கள். நீங்கள் சொல்வது போல, "நமக்கு தொடர்பென்ன, எனவே பேசாமல் இருப்போம் என்றால் எதையும் கற்றுக் கொள்ளாமல் அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் வாழும் (Middle America) அமெரிக்கர்கள் போல நாமும் மாறி விடுவோம் - என்ன நன்மை? ஒன்றுமில்லை. என்ன தீமைகள்? பல.
  15. குணாவின் காணொலிகள் தற்போது ஊரில் கிளி ஜோசியம் சொல்வோரின் கதைகள் போல மாறி வருகின்றன: இயல்பாக நடக்கும் சம்பவங்களை எடுத்து, "பார் நான் முதலே சொல்லியிருக்கிறேன், இது தீர்க்க தரிசனம்" என்பதான தோற்றம் காட்டல்! 1979 முதல் அமெரிக்காவிற்கு ஈரான் ஒரு முள்ளு மத்திய கிழக்கில். ஹிஸ்புல்லாவும் , ஈரானும் ஹமாசின் தாக்குதலைப் பயன்படுத்தி தாமும் யுத்தத்தில் இறங்கக் கூடாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியே அமெரிக்கா கப்பல்களை அனுப்பியது. இது தினசரி செய்திகள் பார்ப்போருக்கே விளங்கும் விடயம். இதற்கு எப்படி குஞ்சம் கட்டி வீடியோ போடுவது என்று யோசித்த போது, உக்ரைன் ரஷ்யா யுத்தம் வசதியாக கிடைத்து விடுகிறது. அமெரிக்கா தான் புரினுக்கு கிச்சு கிச்சு மூட்டி பெப்ரவரி 2022 இல் பெலாரசிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த படைகளை கியேவ் நோக்கிப் போக வைத்தது என என்று கற்பனை வலை பின்னாதவரை குணாவை நம்பலாம்😎!
  16. அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்த நாட்டுக்குமே காசை சேமிக்கத் தான் விருப்பம் இருக்கும். ஆனால், காசை மட்டும் சேமித்து வைத்து, நாட்டின் நலன்களை ஜனநாயக மறுப்பாளர்களிடம் கையளித்து விட்டால் (புரின், ஹமாஸ்), சித்திரத்தை போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு சுவரை இடித்து விடுவது போலாகும்! பல உரையாடல்களில் உங்களுக்கு நான் விளக்க முயல்வது இதைத் தான்: அமெரிக்கா என்பது பணக்கையிருப்பு என்ற ஒற்றைக் கூடைக்குள் மட்டும் தன் எல்லா முட்டைகளையும் வைத்து விட்டுக் காத்திருக்கும் தூர நோக்கற்ற தேசமல்ல! கடன் இருக்கும்/வளரும், உள்நாட்டில் புறுபுறுப்பு இருக்கும், சாதாரண அமெரிக்கர்களின் வருமானம் குறையும்/கூடும், ஆனால் அமெரிக்காவும் பல நூறு ஆண்டுகளுக்கு இருக்கும்! ஏனெனில் you can chew gum and walk!
  17. இது போன்ற கணக்குகளில் சொல்லப் படும் கருத்துக்களை கொஞ்சம் உப்புப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ மனைக் கட்டிடம் மீது நேராக எதுவும் விழுந்து வெடிக்கவில்லை என்பது உண்மை, ஆனால் வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பட்ட வெடிப்பினால், கட்டிடத்தின் ஒவ்வொரு ஜன்னலும் உடைந்து சன்னம் பறந்திருக்கிறது. மருத்துவமனை பாதுகாப்பு என்று நம்பிய மக்கள் தஞ்சமடைந்து, வாகனத் தரிப்பிடதிலேயே தங்கியிருந்த சான்றுகள் தெரிகின்றன (மெத்தைகள்). அருகில் ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம் இருந்திருக்கிறது, அங்கே சிறுவர்களின் உடைமைகள் சிதறிக் கிடக்கின்றன. இவையெல்லாம் நூற்றுக் கணக்கானோர் இறந்து, காயப்பட்டிருக்கின்றனர் என நம்பக் காரணங்களாக இருக்கின்றன. ஒரு வீடியோ உட்பட பலரின் பேட்டிகள் கருத்துகளை உள்ளடக்கிய செய்தியில் இவையெல்லாம் காட்டப் படுகின்றன. https://www.nytimes.com/2023/10/18/world/middleeast/gaza-hospital-israel-hamas-explained.html மனித உயிர் இழப்புகளைப் பொய் என்று நிறுவ நாம் உதவக் கூடாது, இது பாதிக்கப் பட்ட மக்களை இன்னும் காயப்படுத்துவது போலாகும்!
  18. "ஒருவர் ஆட்சியில் இருக்கும் போது போரே இல்லையென்றால், அது உத்தம ஆட்சி தான்" என்பதை ஏன் இலங்கையிலும் பிரயோகிக்க முடியாது எனக் கேட்டேன்! இதன் பதில் உங்களுக்குத் தெரியுமென்பதால் பேசாமல் இருக்கிறீர்கள்! இது ஒன்றும் தேவையில்லாத புகுத்தல் அல்ல: ட்ரம்ப் ஆட்சியின் உலக அமைதி, அமெரிக்கா முழுவதும் தன் கவனத்தை உள்நோக்கித் திருப்பிக் கொண்டதால் உலகைக் கைகழுவி விட்ட அமைதி! இது ஏற்கனவே முன்னர் ஒரு தடவை நடந்திருக்கிறது 30 களில் - அதன் விளைவு என்னவென்பதை ஏற்கனவே ஒரு தொடரில் எழுதியாகி விட்டது. அப்படித் தான் இன்றும் விளைவு விபரீதமாக (குறிப்பாக ஐரோப்பாவிற்கு) இருந்திருக்கும்!
  19. அப்ப இலங்கைக்கு கோத்தா, மகிந்தா, மைத்திரி ரீம் ஓகேயா உங்களைப் பொறுத்த வரை? அவர்களும் "அமைதி" யான சிறிலங்காவைத் தந்தார்கள் என்பீர்களா😂? அமைதி என்பது "யுத்தமில்லா நிலைமை" என்பது மிகவும் எளிமையான, நுனிப்புல் மேயும் பார்வை. ட்ரம்ப் இருந்திருந்தால், இப்ப புரின் கியேவில் நின்று ஜேர்மனிக்கு எரிவாயுவை வெட்டுவதா இல்லையா என்று திட்டம் போட்டிருப்பார்! இது யுத்தமில்லாமல் நடந்திருக்கும் என்பது உண்மை!
  20. இதில் விதி எங்கே இருக்கிறதெனத் தெரியவில்லை. இரண்டு பிரதேச அழிவுகளும் முதிர்ச்சியற்ற மனிதர்கள் தலைமையேற்றமையால் வந்த அவலங்கள். உக்ரைனில் அவலத்திற்கு 100% காரணம் ரஷ்யாவின் தலைமை, பலஸ்தீனத்தின் அழிவுக்கு இரு தரப்பும் சமபங்காளிகள்!
  21. சீனா ட்ராகன் எழும்பி விட்டது (ஆனால், உள்ளூரில் ~20% இளையோர் வேலை வாய்ப்பின்மையாம் சீனாவில்!😎) பிறிக்ஸ் நாணயம் டாலரை விழுங்கி விட்டது இந்தா கியேவ் விழுந்து விடப் போகிறது.. இப்படி பல "அமிக்டலா" வழியாக யோசிக்கும் அபிப்பிராயங்களைப் பார்த்தாயிற்று, ஒன்றும் நடந்த மாதிரித் தான் தெரியவில்லை! பி.கு: இங்கே உள்ளூரில் இதே போல அமிக்டலா வழியாக யோசித்து "உக்ரைனுக்கு நிதியை நிறுத்து" என்ற கூப்பாட்டின் வழியாக கீழ் சபையின் சிவப்புக் கட்சியின் ஒரு சிறு அணி மக்கார்தியை சபாநாயகர் பதவியில் இருந்து அகற்றியது. இப்போது, இஸ்ரேலுக்கு அதை விட அதிக உதவி குறுகிய நாட்களில் போகிற நிலையில், "இஸ்ரேலுக்கு உதவியை நிறுத்து" என்று கத்த முடியாமல் தொண்டையில் முள் சிக்கித் தவிக்கிறார்கள்😂! இப்படி எதிர்த்து, அடுத்த தேர்தலில் யூத அமெரிக்கர்களின் வாக்கை சிவப்புக் கட்சி இழக்க வேண்டுமென நான் யாசிக்கிறேன்! அமிக்டலா - Amygdala: மூளையின் அடிப்பாகத்தில் இருக்கும் உணர்ச்சிக்குப் பொறுப்பான பகுதி! இதனை முன் மூளைப் படையின் (prefrontal cortex) தரவு கிரகிக்கும் பகுதி கட்டுப்படுத்தா விட்டால், உணர்ச்சி மயமான கோசங்கள் மட்டுமே தரவுகள் போலத் தெரியும்!
  22. வழமையாக "தர்மத்தின் தலைவன்😎" புரினின் ஆதரவாளர்கள் பரப்பும் போலிச் செய்திகளில் ஒன்று. இதைப் போன வாரமே "தகவல் சோதிக்கும்" அமைப்புகள் பொய்யென்று அறிவித்து விட்டன. https://apnews.com/article/fact-check-misinformation-weapons-israel-hamas-draft-5a12af9e78e5cbd42d74b026cb4e566c https://www.verifythis.com/article/news/verify/israel-hamas-war/bbc-ukraine-hamas-video-fake-fact-check/536-ab186ea2-4907-4ad0-8db8-7969dded6d85
  23. கதியில்லாமல் அலையும் றொகிங்கியா முஸ்லிம்களை விட்டு விட்டீர்கள்! அவர்களையும் நல்ல விதமாகப் பார்க்காத "பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள்"!😎
  24. இவையெல்லாம் பற்றி முன்னரும் உரையாடியிருக்கிறோம் வேறு திரிகளில். அமெரிக்காவின் பொருளாதாரம், இராணுவ மேலாண்மை, தேசிய பாதுகாப்பு, சட்ட ஆட்சி என்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இராணுவ மேலாண்மை இல்லயெனில் பொருளாதாரம் நிலைக்காது, ஐரோப்பாவில் பாதுகாப்பு இல்லையெனில் அமெரிக்காவிற்கும் பாதுகாப்பில்லை, பாதுகாப்பில் குறைபாடு வந்தால் அமெரிக்க டொலர், பங்குச் சந்தை எல்லாம் பாதிக்கப் படும். எனவே, தான் எவ்வளவு நிதி உக்ரைனுக்கோ, இஸ்ரேலுக்கோ அமெரிக்கா கொடுக்கிறது என்பதை விட, அதனால் அமெரிக்கா எதைப் பெறுகிறது என்பதையும் பார்த்தே எல்லாம் தீர்மானிக்கப் படுகிறது. இதற்கு ஒரு டொலர் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பார்த்து "போரை முடித்து விடலாம், உக்ரைனை வெட்டி விடலாம்" என்ற tunnel vision முடிவை அமெரிக்கா இலகுவாக எடுக்காது. அப்படி வெட்டி விட வேண்டும் என்று கூறும் சிவப்புக் கட்சியினர் 2024 இல் காங்கிரஸ் தேர்தலில் ஆசனங்கள் இழப்பார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேணும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.