Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by இணையவன்

  1. மதுரங்கேணி, நான் எழுதியதைத்தான் நீங்களும் எழுதியுள்ளீர்கள். இதில் எங்கே புரளி உள்ளது ? 🙂 பாகற்காய்க்குப் பதிலாக புடலங்காயைச் சேர்த்துக் கொண்டாலும் ஒன்றுதான். அது தவிர மரக்கறியிலுள்ள நார்ப்பொருள் இரத்தத்தில் சீனியின் அளவைக் (glycemic index) கட்டுப்படுத்துமே தவிர நீரிழிவு நோயைக் (இன்சுலின்) கட்டுப்படுத்தாது.
  2. யாழ் இணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதால் சாக்குச் சொல்லாமல் நிச்சயமாக நீங்கள் பதில் எழுத வேண்டும். கருத்தை நீக்க வேண்டுமா இல்லையா என்பது கள விதிகளைப் பொறுத்தது.
  3. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
  4. நாம் குறுகிய காலம் பாவித்துவிட்டு மாற்றும் கைத்தொலைபேசிகள் ஆபிரிக்காவில் மனிதர்கள் வெறும் ஒருசில டொலர்கள் சம்பளத்தில் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துச் சுரங்கங்களிலிருந்து எடுத்துத் தரும் கனிமப் பொருட்களைக் கொண்டுள்ளன. நான் தற்போது பாவிக்கும் iPhone 6s 2016 ஜனவரியில் மகளுக்கு வாங்கியது. 2020 மீள்மெருகேற்றப்பட்ட iPhone X ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு iPhone 6s இனை எனதாக்கிக் கொண்டேன். இதன் பற்றியை மட்டும் மாற்றினேன். இது பாவிக்க முடியாமல் போகும் போது மகளின் iPhone X இனை நான் எடுத்துக் கொள்வேன். பொதுவாக அப்பிள் மென்பொருள் மீள் பதிவுகளை (system security update) 7 வருடங்களுக்கு மேல் செய்துகொள்ள முடியும். Google Pixel தவிர்ந்த ஏனைய Android கைத் தொலைபேசிகளில் பொதுவாக 4 வருடங்களே இதன் ஆயுட்காலம். நான் 25 வருடங்களாகப் பாவிக்கும் கணணிகளும் அப்பிள்தான். வீட்டில் நான் பாவித்த iMac (ஏற்கனவே பாவித்த ஒருவரிடமிருந்து 2011 இல் வாங்கியது) தற்போது எனது மாமனார் ytube பார்ப்பதற்காகப் பாவிக்கிறார். 2013 இல் வாங்கிய iMac 21 தற்போது பாவிக்கிறேன். இதன் Disk வேகம் முறைந்தது என்பதாலும் வேலையில் மடிக்கணணி தந்துள்ளதாலும் இதனைப் பாவிப்பது இப்போது மிகக் குறைவு. அப்பிள் பொருட்கள் விலை அதிகமானாலும் அவற்றைப் பாவிக்கும் காலம் அதிகமானதாலும் பழுதுகள் வருவது முறைவு என்பதாலும் தொடர்ந்து அவற்றையே பாவிக்கிறேன்.
  5. உங்கள் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும் என்று யாரோ தவறான தகவல் தந்துள்ளனர். ஜனநாயகம் இல்லாத மேற்கு நாடுலளில் எவ்வாறு மனிதர்கள் சுதந்திரமாக வாழ முடியும் ? போலி ஜனநாயகம், நீதி நியாயமற்ற வெளிநாட்டுக் கொள்கை, உண்மைத் தகவல்களை மூடி மறைத்துத் தங்களுக்குத் தேவையானபடி செய்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குதல், ஆயுத வியாபாரத்துக்காக உலகில் போர்களைத் தூண்டுதல் போன்ற இன்னும் எண்ணற்ற அராஜகங்கள் செய்யும் மேற்கு நாடுகளில் நிற்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் கால்கள் கூச வேண்டும். 🤣 அதுமட்டுமல்ல, உணவு முழுவது மருந்து கலப்பவர்கள், அநாவசியமான மருந்துகளைச் சாதாரண வியாதிகளுக்குத் தருபவர்கள், மருந்து விற்பதற்காகவே வியாதிகளை உருவாக்குபவர்கள் என்று உங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்துகொண்டிருக்கும் மேற்கு நாட்டில் மனிதன் எவ்வாறு சுதந்திரமாக வாழ முடியும் ? 🤣
  6. சர்க்கரை - இனிப்பு, பாகற்காய் - கைப்பு. ஆகவே நீரிழிவு நோய்க்குப் பாகற்காய் நிவாரணம் என்று ஒரு புரளி உள்ளது. பாகற்காயில் சர்க்கரை நோயை எதிர்க்கும் ஆற்ற்றல் இல்லையாம். அது ஏனைய மரக்கறி வகைகள் போலவே நார்ப்பொருளைக் கொண்டுள்ளதால் இரத்தத்தில் சீனியின் அளைவைக் கட்டுப்படுத்தும். அதுபோல் கோவைக்காய் கைப்பாக இருப்பதால் சர்க்கரை நோய் எதிரியாகக் கருதப்படலாம். எதற்கும் கோவைக்காயில் என்ன மருத்துவப் பொருள் உள்ளது என்று ஆராய்ந்து பார்ப்பது நல்லது. கட்டுரையாளர் கோவைக்காய் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகிறாரே தவிர எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை.
  7. முதியவர் = அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்தவர் வயோதிபர் = அதிக வயதில் வாழ்ந்துகொண்டிருப்பவர் பருவங்கள் மாறினாலும் ஒவ்வொரு நாள் விடியலையும் ஆவலோடு எதிர்பார்த்து வாழ்பவர்களுக்கு இறக்கும் வரை மனதளவில் 70, 80 எல்லாம் கடந்துவந்த ஆண்டு எண்ணிக்கைகள் மட்டுமே 🙂
  8. உக்ரெயின் போரில் ரஸ்யா வென்றால் அது சீன மேலாதிக்கத்திற்கான கதவுகளைத் திறந்து விடுவதற்க்கு ஒப்பானது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது அமெரிக்கா நேரடியாக ஈடுபடாத உக்ரெயின் போருக்காகச் செலவிடும் பணத்தை விடப் பன்மடங்கு பணச் செலவை அமெரிக்காவுக்கு உண்டாக்கும். ஏனென்றால் ரஸ்யா வெல்லும் பட்சத்தில் ஐரோப்பாவை நோக்கி அமெரிக்கா தனது கடல் ஆகாய கண்காணிப்பு எதிர்ப்பு இராணுவத் தளபாடங்களை நகர்த்த வேண்டி வரும். இதனால் தாய்வானின் பிடியை அமெரிக்கா தளர்த்த வேண்டி வரும். வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் இஸ்ரெயில் போரும் இதேபோல் இருக்கலாம். இந்த இரு போர்களுக்கும் அமெரிக்கா தற்போது செலவிடும் பணம் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரத்துக்கு வாய்ப்பானவையே. இதில் ஐரோப்பாவும் பெரும் பலனடைகிறது. அமெரிக்கா உக்ரெயினைக் கைவிட்டால் இப் போரை முழுமையாக ஐரோப்பிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டி வரும்.
  9. இதில் ஒரு நல்ல விடயம், ஏமாற்றுக் கும்பல் பொல்லைக் கொடுத்து அடி வாங்கியுள்ளது. சமூக வலைத் தளங்களிலும் வறுத்தெடுக்கிறார்கள். உண்மையென நம்பி இவர்கள் வலையில் சிக்கிய அப்பாவிகள் பாவம்.
  10. காணொளியிலுள்ள பேச்சினை நிதானமாகக் கேட்கப் பொறுமை இல்லை. சுருக்கமாக விளங்கியது என்னவென்றால் மக்களே மறுபடி போராடித் தமிழீழம் எடுக்க வாருங்கள் என்கிறார் (தவறு என்றால் யாராவது விளக்குங்கள்). 14 வருட அஞ்ஞாதவாசச் சிந்தனை இவ்வளவுதானா ? ஏதாவது ஒரு சிறு துரும்பு கூட இல்லாமல் இந்த அறிக்கை தேவையா ? ஆளுமை அறிவியல் ராஜதந்திரம் எதுவுமே இல்லாத பிரயோசனமில்லாத இந்த அறிக்கையை வாசிப்பதை விட பேசாமல் இருந்திருக்கலாம்.
  11. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பையா !
  12. யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  13. எலன் மஸ்கின் Tesla நிறுவனத்தின் நிதி அறிக்கை இன்று வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் இந் நிறுவனம் பாரிய சரிவைச் சந்தித்தது. இன்று 70 பில்லியன் டொலர்களுக்கு மேல் பங்குச் சந்தையில் இழந்துள்ளதாகக் கூறம்படுகிறது.
  14. மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா. எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும் போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.
  15. பிரபா சிதம்பரநாதனின் வேண்டுகோளுக்கு அமைய அவர் பெயர் 'P.S.பிரபா' என மாற்றப்பட்டுள்ளது.
  16. ரஸ்ய ரூபிள் வீழ்ச்சியால் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயமாற்றுச் செய்வதை நேற்றிலிருந்து தடை செய்துள்ளது. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரூபிளை வாங்கி வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் இலாபம் தருமா ?
  17. உறுதிப்படுத்தப் படாத செய்தி. கிரிமியா பாலம் உள்ள பகுதியில் சற்று நேரத்துக்கு முன் பாரிய வெடிச்சத்தமும் அதனைத் தொடர்ந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  18. மென்பொருள் புதுப்பித்தல் காரணமாக இன்னும் அரை மணித்தியாலத்தில் சில நிமிடங்களுக்கு யாழ் இயங்காமல் போகலாம்.
  19. சிறந்த முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள் ஜஸ்ரின். நன்றி.
  20. உங்கள் முயற்சிக்கும் ஆக்கத்துக்கும் நன்றி நன்னிச்சோழன்.
  21. தற்காலிகமாக Update செய்துள்ளேன். எதனால் பிழை என்று பார்க்க வேண்டும்.
  22. சுவி அண்ணா, உங்களது தனிமடல் பெட்டி நிரம்பி விட்டதால்தான் உங்களால் தனிமடல் அனுப்ப அல்லது பெற முடியாமல் உள்ளது. தேவையில்லாதவைகளை நீக்கி இடம் ஒதுக்கினால் மறுபடி வேலை செய்யும். நன்றி. @suvy

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.