Everything posted by இணையவன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அமெரிக்க இராணுவ உதவிகள் கிடைக்காத நிலையில் உக்ரெய்ன் இராணுவம் எதிர்த்தாக்குதல் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றது. ரஸ்ய படைகள் Avdiïvka நகரினை மூன்று பக்கத்தாலும் சுற்றி வளைத்துள்ளன. இங்குள்ள உக்ரெய்ன் இராணுவத்தினரை வெளியேற்றும் முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்படுகின்றது.
-
மரணம்
கதையை நேற்று நடந்த நிகழ்வு வரை தொடர்புபடுத்தியது மிகச் சிறப்பு. மிகுந்த சிரமம் எடுத்து ஒரே மூச்சில் எழுதி முடித்த ரஞ்சித்துக்குப் பாராட்டுகள்.
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
இங்கும் போதை வஸ்து தொடர்புபட்டுள்ளது. தமிழ் அரசியல் வாதிகள் தமது போலியான தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதைவிட சமூக நலன்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. சமுதாயத்தைச் சிதைத்து விடுதலையை முன்னெடுக்க முடியாது.
-
மரணம்
தொடர்ந்து எழுதுங்கள் ரஞ்சித். வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஏவுகணைத் தளத்தினைக் கொண்டிருந்த ரஷ்ய கப்பல் ஒன்றை உக்ரெய்ன் மூழ்கடித்திருந்தது. இத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆளில்லா படகுகளில் இரண்டு கப்பலின் உந்து சுழல் கருவிகளைத் தாக்கி கப்பலை நகர முடியாமல் செய்ய ஏனையவை கப்பலின் நடுப் பகுதியைத் தாக்கி அங்கிருந்த ஏவுகணக்களை வெடிக்க வைத்தன.
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
'கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரை விமர்சித்து எழுதிய கருத்துகள் மற்றும் அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.
-
எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
இது மிகவும் ஆழமாக இலக்கண பிரெஞ்சு மொழியைப் படிப்பதற்கு நல்லதொரு திரி. ஆனால் இங்கு சுவி அண்ணா இங்கு குறிப்பிட்டதுபோல் மிக இலகுவாகக் கற்பது கடினம் போல் தோன்றியது
-
எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
🙂 எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் 30 வருடங்களாக பிரான்ஸில் இருந்தும் ஒரு வசனம்கூட பிரெஞ்சில் சரியாகக் கதைக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். இப்போது பிரான்சில் இருப்பிட அனுமதி பெற வேண்டுமாயின் மொழிப் பரீட்சையில் தேற வேண்டும் என்பதால் புதிதாக வந்தவர்களும் மொழி படிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.
-
எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
சுவி அண்ணா நீங்கள் தந்த இணைப்பு வேலை செய்யவில்லை.
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
இன்னும் 10 நிமிடத்திலிருந்து சில நிமிடங்கள் யாழ் இயங்காமல் போகலாம்.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
இலங்கையில் காய்கறிகளின் விலை ஓரளவேனும் சீரானதாக இருந்ததில்லை. பருவ காலங்களை ஒட்டிய பயிர்ச்செய்கை இதற்கு ஒரு கரணமாக இருக்கலாம். நவீன முறையில் வெயில் அதிகமாக உள்ள இலங்கையில் குறுகிய இடத்தில் குறைந்த நீர் வசதியுடன் வருடம் முழுவதும் மரக்கறி பயிர்செய்யலாம்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாழ்த்துகள் சுவி அண்ணா.
- இன்று மாவீரர் தினம்!
-
துவாரகா உரையாற்றியதாக...
இதில் ஒரு நல்ல விடயம், ஏமாற்றுக் கும்பல் பொல்லைக் கொடுத்து அடி வாங்கியுள்ளது. சமூக வலைத் தளங்களிலும் வறுத்தெடுக்கிறார்கள். உண்மையென நம்பி இவர்கள் வலையில் சிக்கிய அப்பாவிகள் பாவம்.
-
துவாரகா உரையாற்றியதாக...
காணொளியிலுள்ள பேச்சினை நிதானமாகக் கேட்கப் பொறுமை இல்லை. சுருக்கமாக விளங்கியது என்னவென்றால் மக்களே மறுபடி போராடித் தமிழீழம் எடுக்க வாருங்கள் என்கிறார் (தவறு என்றால் யாராவது விளக்குங்கள்). 14 வருட அஞ்ஞாதவாசச் சிந்தனை இவ்வளவுதானா ? ஏதாவது ஒரு சிறு துரும்பு கூட இல்லாமல் இந்த அறிக்கை தேவையா ? ஆளுமை அறிவியல் ராஜதந்திரம் எதுவுமே இல்லாத பிரயோசனமில்லாத இந்த அறிக்கையை வாசிப்பதை விட பேசாமல் இருந்திருக்கலாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பையா !
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எலன் மஸ்கின் Tesla நிறுவனத்தின் நிதி அறிக்கை இன்று வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் இந் நிறுவனம் பாரிய சரிவைச் சந்தித்தது. இன்று 70 பில்லியன் டொலர்களுக்கு மேல் பங்குச் சந்தையில் இழந்துள்ளதாகக் கூறம்படுகிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா. எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும் போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.
-
பெயர் மாற்றங்கள்.
பிரபா சிதம்பரநாதனின் வேண்டுகோளுக்கு அமைய அவர் பெயர் 'P.S.பிரபா' என மாற்றப்பட்டுள்ளது.
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ரஸ்ய ரூபிள் வீழ்ச்சியால் மத்திய வங்கி வெளிநாட்டு நாணயமாற்றுச் செய்வதை நேற்றிலிருந்து தடை செய்துள்ளது. முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ரூபிளை வாங்கி வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் இலாபம் தருமா ?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உறுதிப்படுத்தப் படாத செய்தி. கிரிமியா பாலம் உள்ள பகுதியில் சற்று நேரத்துக்கு முன் பாரிய வெடிச்சத்தமும் அதனைத் தொடர்ந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
மென்பொருள் புதுப்பித்தல் காரணமாக இன்னும் அரை மணித்தியாலத்தில் சில நிமிடங்களுக்கு யாழ் இயங்காமல் போகலாம்.
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1