Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by இணையவன்

  1. உக்ரெயின் அழிவுகளை ஆதரித்தது போலவா ? பலஸ்தீன் அழிவுகளை எங்காவது ஆதரித்து எழுதியுள்ளேனா ? மேலுள்ள செய்தியில் இறந்தவர்கள் அனைவரும் இராணுவத்தினரும் போராளிகளும் மட்டுமே.
  2. நீளமான ஆங்கிலச் செய்திகளை வாசிக்காமலே திரிகளில் கொண்டு வந்து ஒட்டிவிட்டுப் போவதைவிட ரஞ்சித் செய்திக் குறிப்பைத் தமிழில் எழுதி அதனுடன் தொடர்புடைய ஆங்கிலச் செய்தியின் இணைப்பையும் கொடுத்துள்ளார். இதனை ஊக்குவிப்பதற்கான விருப்புப் புள்ளி முக்கிமான காரணம். திரிகளில் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு விவாதத்துக்கு மத்தியில் இரண்டு வரியில் நக்கலாக எழுதும் கருத்துகளுக்கு விருப்புப் புள்ளி போடுவதை விட ஊக்குவிப்பும் பாராட்டும் சிறந்தது. புரிகிறதா ?
  3. குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும்.
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் (பிந்திய) யாயினி
  5. பணத்துக்காக இருக்கலாம். கறுப்புத் தோலுடன் குடியுரிமை எடுத்துத் துன்பப்படுவதை விட இலங்கையில் இருந்து பிச்சையெடுக்கலாம்.
  6. இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?
  7. சமீபத்தில் ஐரோப்பாவில் உடல் எடை குறைவாக உள்ளவர்களைப் பட்டியலிட்டபோது பிரான்ஸ் இரண்டாம் இடத்தில் இருந்தது. உணவில் உப்புக் குறைப்பும் இதற்கான காரணங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன் பிரெஞ்சு அரசாங்கம் உணவுகளில் குறிப்பாகப் பாண் வகைகளில் உப்பைக் குறைக்குமாறு வலியுறுத்தியது. சுவையில் பெரிய மாற்றம் இல்லாமல் உப்புக் குறைக்கப்பட்டது. நாம் சமைக்கும் கறிவகைகளில் உப்புப் போட்டு அவிய விடுவதால் உணவுகள் அதிக உப்பை உறிஞ்சிக் கொள்கிறது. சிலர் சோறு அவிக்கும்போதும் அதிகளவு உப்புச் சேர்க்கின்றனர். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவுகளை உப்புடன் சேர்த்து அவிக்காமல் தூவிச் சாப்பிட்டால் குறைந்த அளவான உப்பில் அதிக சுவை இருக்கும்.
  8. உங்கள் சொந்த அனுபவத்தை வைத்து மருத்துவத்தில் சரி பிழையைத் தீர்மானிக்க முடியாது. அது தரவாகவும் கணிக்கப்பட மாட்டாது. ஆக்கபூர்வமான திரிகளில் ஏனையவர்களால் பகிரப்படும் ஆதாரபூர்வமான பலருக்கும் பயன்படும் தகவல்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பதே யாழுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். நன்றி.
  9. போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
  10. நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  11. ஒருபுறம் பெலாருஸ் அதிபர் புடினுக்கு எதிரான கருத்தைத் தெரிவிக்க மறுபுறம் பெலாருஸ் டெலிகிராம் தளமான NEXTA இந்தத் தாக்குதல் தொடர்பான இன்னொரு தலையிடியை புடினுக்குக் கொடுக்கின்றது. மேலதிக செய்திகள் வரட்டும் பார்க்கலாம். 🙂
  12. எனது தந்தை சினிமா அரங்கு ஒன்றில் வேலை செய்தவர். சிறுவனாக இருந்தபோது நீங்கள் குறிப்பிடும் அத்தனையையும் அச்சொட்டாக நானும் அனுபவித்துள்ளேன்.
  13. தனது பொய்கள் எடுபடவில்லை என்று தெரிந்துகொண்டு புடின் இஸ்லாமியப் பயங்கரவதிகளின் தாக்குதல் என்று தன் வாயாலேயே தயங்கித் தயங்கிக் கூறுகிறார். ஆனாலும் உக்ரெயின் தானாம் இவர்களை ஏவியது. மேலே சிலர் சொல்வதுபோல் எந்த இடத்திலும் மேற்கு நாடுகளையோ அமெரிக்காவையோ ISIS மூலமாக இத் தாக்குதலைச் செய்ததாகக் கூறவில்லை. ஏன் ? அடுத்த தடவை புடின் விசுவாசிகள் அவர் வாய் திறக்குமுன் கச்சேரியை ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. 😂
  14. நல்லது. தனிப்பட்ட காழ்ப்புணர்வினால் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது என்ற தவறான கருத்தை எழுதியதை ஒப்புக் கொண்டதற்காக. இது தொடர்பாக மேற்கொண்டு விவாதிக்க எதுவுமில்லை.
  15. பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ? அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?
  16. பொருத்தமற்ற திரி என்பதால் உங்களுக்கான பதில் இங்கே. அட்விகா மட்டுமல்ல Orlivka விலும் உக்ரெயின் தோல்வியுடன் வெளியேறிறியது. தேர்தலுக்கு முன்னரான இந்த வெற்றிக்கு ரஸ்ய படைகள் கொடுத்த விலை மிக அதிகம். 9 மாதங்கள் போராடி Bakhmout வெற்றி. 6 மாதங்கள் போராடி பாரிய இழப்புகளுடன் அட்விகா வெற்றி. இப்படியே போனால் உக்ரெயினை வீழ்த்த 10 - 15 வருடங்கள் ஆகும். உக்ரெய்னுக்கு வெளிநாட்டு உதவிகள் குறைந்துள்ளதால் அடுத்த உதவி கிடைக்கும்வரை பீரங்கிக் குண்டுகளைச் சிக்கனமாகப் பாவிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆட் பற்றாக்குறையும் உள்ளது. மக்ரோன் திடர்பான உங்கள் கருத்து தவறானது. தேவை ஏற்பட்டால் தனது படைகளை அனுப்புவது பற்றிய யோசனையைப் புறம்தள்ள முடியாது என்றுதான் கூறியுள்ளார்.
  17. Andreï Morozov. இவர் பிரபலமான ரஸ்ய புளொக்கர். ரெலிகிராமில் இலட்சம் பேர் இவருடன் இணைந்திருந்தனர். 2014 இல் உக்ரெய்னுக்கு எதிராகப் போரிட்டவர். இராணுவத்திலுள்ள தனது தொடர்புகளால் ரெலிகிராம் மூலம் களச் செய்திகளையும் வீடியோக்களையும் பகிர்ந்தவர். அட்விக்கா சமரில் மட்டும் 16000 ரஸ்ய படையினர் இறந்தும் காயமடைந்தும் களத்தை விட்டு நீக்கப்பட்டதை முதலில் தெரிவித்தவர் இவர்தான். ரஸ்ய படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளாலும் இழப்புகளைக் குறைத்துக் காட்டுமாறு இவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தாலும் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இறக்குமுன் தனது வீட்டை விற்று ரஸ்ய படையினருக்கு ட்றோன்கள் வாங்கிக் கொடுக்குமாறு எழுதி வைத்துள்ளார்.
  18. ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ? உக்ரைன் மீதும் மேற்கு நாடுகள் மீதும் பழி போட்டுப் போரை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ரஸ்யாவுக்கே உள்ளது. ஆறாயிரம் பேருக்குமேல் கூடும் இடத்தில் ஏன் அதற்குரிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது ? தாக்குதல் நடத்தியவர்கள் சாவகாசமாகச் சுட்டுவிட்டு தப்பிப் போகும்வரை காவல்துறை என்ன செய்தது ? பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான் ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை. ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.
  19. அநாவசிய திசைதிருப்பல்கள் வேண்டாம். தமிழ்நாடு 100 வருடம் பிந்தங்கியுள்ளது என்று ஏன் எழுதினீர்கள் என்பதை விளக்கினால் நீங்கள் அரசியல் அறிஞர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முடியாவிட்டால் பதில் தரவேண்டாம். பொய்யான கற்பனைத் தகவல்கள் யாழுக்கு நல்லதல்ல.
  20. ISIS அமைப்பு தனது தாக்குதலுக்கு ஆராதமான வீடியோவினை வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்தவுடன் புட்டின் அறிக்கை விடவில்லை அடுத்த நாள் தான் அறிக்கை விட்டார். ISIS உடனடியாகவே இத் தாக்குதலுக்கு உரிமை கோரியபோதும் அவரது அறிக்கையில் ISIS என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. வேறு ஆதாரங்கள் வெளியாகாததை உறுதிப்படுத்தியபின் புட்டின் தனது புழுகு மூட்டையை அவிள்த்துள்ளார். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது.
  21. உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள காழ்ப்புணர்வால் உங்கள் கற்பனையில் தோன்றுவதை யதார்த்தம் என்று நினைத்து எழுதுகிறீர்கள். மேலே இணைத்த கட்டுரையையாவது வாசித்திருக்கலாம்.
  22. எந்த ஆதாரமும் இல்லாத எழுந்தமான கருத்து.
  23. போர் ஆரம்பித்தபோது சாதாரண பிரெஞ்சு இளைஞர்கள் இங்கிருந்து போய் உக்ரெய்ன் இராணுவத்தில் சேர்ந்து போரிட்டனர். பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கியபோது அவற்றைப் பராமரிப்பதற்காக இராணுவத்தினர் சென்றிருக்கலாம். ஆனால் உத்தியோகபூர்வமாக இல்லை. இந்தப் போர் ஐரோப்பாவை நோக்கிய அச்சுறுத்தலாக இருப்பதால் அமெரிக்காவின் உதவிகள் பின்னடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் தன்னை முன்னிலைப் படுத்த முயல்கிறது. பிரெஞ்சு அதிபருக்கு உள்நாட்டில் முற்றிலும் ஆதரவு இல்லாத நிலையிலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரெய்னுக்கான உதவிகள் தொடர்பாக மிகப் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. இதனால் மக்ரோன் பிரஞ்சு இராணுவம் உக்ரெய்னுக்குச் செல்லவேண்டி வரலாம் என்ற கருத்தைக் கைவிடவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.