Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by இணையவன்

  1. Andreï Morozov. இவர் பிரபலமான ரஸ்ய புளொக்கர். ரெலிகிராமில் இலட்சம் பேர் இவருடன் இணைந்திருந்தனர். 2014 இல் உக்ரெய்னுக்கு எதிராகப் போரிட்டவர். இராணுவத்திலுள்ள தனது தொடர்புகளால் ரெலிகிராம் மூலம் களச் செய்திகளையும் வீடியோக்களையும் பகிர்ந்தவர். அட்விக்கா சமரில் மட்டும் 16000 ரஸ்ய படையினர் இறந்தும் காயமடைந்தும் களத்தை விட்டு நீக்கப்பட்டதை முதலில் தெரிவித்தவர் இவர்தான். ரஸ்ய படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளாலும் இழப்புகளைக் குறைத்துக் காட்டுமாறு இவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தாலும் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இறக்குமுன் தனது வீட்டை விற்று ரஸ்ய படையினருக்கு ட்றோன்கள் வாங்கிக் கொடுக்குமாறு எழுதி வைத்துள்ளார்.
  2. ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ? உக்ரைன் மீதும் மேற்கு நாடுகள் மீதும் பழி போட்டுப் போரை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ரஸ்யாவுக்கே உள்ளது. ஆறாயிரம் பேருக்குமேல் கூடும் இடத்தில் ஏன் அதற்குரிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது ? தாக்குதல் நடத்தியவர்கள் சாவகாசமாகச் சுட்டுவிட்டு தப்பிப் போகும்வரை காவல்துறை என்ன செய்தது ? பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான் ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை. ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.
  3. அநாவசிய திசைதிருப்பல்கள் வேண்டாம். தமிழ்நாடு 100 வருடம் பிந்தங்கியுள்ளது என்று ஏன் எழுதினீர்கள் என்பதை விளக்கினால் நீங்கள் அரசியல் அறிஞர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முடியாவிட்டால் பதில் தரவேண்டாம். பொய்யான கற்பனைத் தகவல்கள் யாழுக்கு நல்லதல்ல.
  4. ISIS அமைப்பு தனது தாக்குதலுக்கு ஆராதமான வீடியோவினை வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்தவுடன் புட்டின் அறிக்கை விடவில்லை அடுத்த நாள் தான் அறிக்கை விட்டார். ISIS உடனடியாகவே இத் தாக்குதலுக்கு உரிமை கோரியபோதும் அவரது அறிக்கையில் ISIS என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. வேறு ஆதாரங்கள் வெளியாகாததை உறுதிப்படுத்தியபின் புட்டின் தனது புழுகு மூட்டையை அவிள்த்துள்ளார். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது.
  5. உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள காழ்ப்புணர்வால் உங்கள் கற்பனையில் தோன்றுவதை யதார்த்தம் என்று நினைத்து எழுதுகிறீர்கள். மேலே இணைத்த கட்டுரையையாவது வாசித்திருக்கலாம்.
  6. எந்த ஆதாரமும் இல்லாத எழுந்தமான கருத்து.
  7. போர் ஆரம்பித்தபோது சாதாரண பிரெஞ்சு இளைஞர்கள் இங்கிருந்து போய் உக்ரெய்ன் இராணுவத்தில் சேர்ந்து போரிட்டனர். பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கியபோது அவற்றைப் பராமரிப்பதற்காக இராணுவத்தினர் சென்றிருக்கலாம். ஆனால் உத்தியோகபூர்வமாக இல்லை. இந்தப் போர் ஐரோப்பாவை நோக்கிய அச்சுறுத்தலாக இருப்பதால் அமெரிக்காவின் உதவிகள் பின்னடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் தன்னை முன்னிலைப் படுத்த முயல்கிறது. பிரெஞ்சு அதிபருக்கு உள்நாட்டில் முற்றிலும் ஆதரவு இல்லாத நிலையிலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரெய்னுக்கான உதவிகள் தொடர்பாக மிகப் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. இதனால் மக்ரோன் பிரஞ்சு இராணுவம் உக்ரெய்னுக்குச் செல்லவேண்டி வரலாம் என்ற கருத்தைக் கைவிடவில்லை.
  8. செய்தியின் உள்ளடக்கத்தின்படி அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரியும் பங்குபற்றிதிலிருந்து, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டாம் என்று அறிவூட்டுவதற்காக இருக்கலாம்.
  9. ரஷ்ய படைகள் Avdiïvk நகரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து Orlivka என்ற கிராமத்தையும் கைப்பற்றி முன்நேறி வருகின்றன. நேற்று இரவு உக்ரெய்னை நோக்கி ரஸ்யா 90 ஏவுகணைகளையும் 60 ஈரானிய டிரோன்களையும் ஏவியுள்ளது. உக்ரெய்ன் மீதான படையெடுப்பை இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாகக் கூறி வந்த ரஸ்யா, இன்று முதல் தடவையாக உக்ரெய்ன் மீது போர் தொடுத்திருப்பதாகக் கூறியுள்ளது.
  10. இது திரியை விட்டு விலகும் கருத்தாடல். 🙂 சமணர்களும் பௌத்தர்களும் களப்பிரர்களும் தமிழை வளர்த்தனர். இவர்களை அழித்து சைவம் தமிழின் வளர்ச்சியைப் பற்றிக் கொண்டு தன்னை வளர்த்தது.
  11. சைவம் தமிழை ஒருபோதும் வளர்க்கவில்லை. தமிழை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சைவம் தமிழைத் தன்னுடன் இணைத்து உரிமை கோருவதன் மூலம் மக்களிடமிருந்து அந்நியப்பட வைக்கிறது. தமிழுக்கு மதம் கிடையாது.
  12. Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
  13. ஆம், வேறு திரியில் பதிந்திருக்க வேண்டிய கருத்தைத் தவறுதலாக இங்கே பதிந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்குதான் யாழ் கள புடின் ஆதரவாளர்கள் வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். 😂
  14. இந்த மூன்றாவது பரீட்சார்த்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது பற்றிச் செய்தியில் சொல்லப்படவில்லை.
  15. சில பிரச்சனைகள் உள்ளன. சரி செய்ய முயற்சிக்கிறோம்.
  16. மென்பொருள் புதுப்பித்தல் காரணமாகச் சில நிமிடங்களுக்கு யாழ் இயங்காமல் போகலாம்.
  17. தமிழ் அரசியல் வாதிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இது ஒரு பாரதூரமான நிகழ்வு.
  18. சீனி தவிர, நெட்டோ போன்ற பானங்களும் மா உணவுகளின் பாவனை (கொத்துரொட்டி, நூடில்ஸ், இடியப்பம்) அதிகரிப்பும் அதிகம் உடலை அசைத்து வேலை செய்யாமையும் முக்கிய காரணங்கள். இவற்றை விட்டு அப்பாவி பால்மாவுக்குக் கெட்ட பெயர். ஊட்டச் சத்துக் குறைந்த நாடுகளில் பால் இல்லாவிட்டால் பால்மாவை மாற்றீடாகப் பாவிப்பதில் பிரச்சனையில்லை (இதற்காகப் பால்மாவை முழுமையாக ஆதரிக்கவில்லை).
  19. ஆழ்ந்த அனுதாபங்கள். இங்கே மரதன் என்று குறிப்பிடப்படுவது 42 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியாக இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. விதுர்ஷனின் வயது 16 ஆக இருப்பதும் ஓடி முடிந்ததும் பாடசாலை வகுப்புக்குச் சென்றதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை இந்தியாவில் 10 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியையும் மரதன் என்று சொல்வார்கள். இந்தியாவில் 5 கிலோமீட்டரை மினி மரதன் என்று சொல்லக் கேட்டுள்ளேன். எதுவாயினும் தற்போதுள்ள வெக்கை காலத்தில் 10 கிமீ ஓடினாலும் அதிகமான வியர்வையுடன் பெருமளவு உப்புகள் உடலிலிருந்து வெளியேறும். சிறிய தூரமாக இருந்தாலும் வெக்கை காலத்தில் இவ்வாறான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது அதற்கேற்ற மருத்துவ முன்னேற்பாடுகளும் போட்டியாளர்களுக்குப் போதுமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மரதன் ஓடுவதற்குப் பொதுவாக 3 அல்லது 4 மாத பயிற்சி தேவைப்படும். பயிற்சியின் போது ஒருபோதும் 42 கிமீ ஓடுவதில்லை. 8 முதல் 20 கிமீ தான் ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடுவது வழக்கம். வாரத்தில் 3 நாள் தொடங்கி போட்டி நெருங்கும்போது 5 நாட்கள் வரை ஓட வேண்டும். இதன்போது மெதுவான ஓட்டம், வேகம் கலந்த ஓட்டம் (interval training) மேடு பள்ளமான பாதை வழிவே ஓடுதல் போன்ற எல்லா விதமான இடையூறுகளையும் உடலுக்குப் பழக்கப் படுத்தப்படும். வாரத்தில் ஒரு தடவை தூர ஓட்டம் 20 கிமீ ஓட வேண்டும். போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தடவை மட்டும் 25 கிமீ ஓடலாம். இது இறுதிப் போட்டியின்போது என்ன வேகத்தில் ஆரம்பிப்பது ஓடி முடிப்பது போன்றவற்றைக் கணிப்பிட உதவும். நான் 30 கிமீ ஓடியிருந்தேன். இவ்வாறான பயிற்சிகள் சாதாரண மரதன் போட்டியாளர்களுக்கானதே. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் மரதன் ஓடுபவர்களுக்கான பயிற்சி முற்றிலும் வேறானது. விதுர்ஷனின் துரதிஷ்டமான மரணம் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மீதான பயத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக பயிற்சியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வரும்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்க்க வேண்டும். பயிற்சிகளும் போட்டிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரன்.
  21. போலி நோட்டு என்ற சொல் நமது ஊரில் பாவிக்கப்படுவதில்லை. அது தவிர தமிழில் எழுதாமல் ஏன் வீரகேசரி இப்படி எழுதுகிறது ?
  22. வணக்கம் ரசோதரன், உங்கள் பெயர் நீங்கள் கேட்டுக்கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.