Everything posted by இணையவன்
-
இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'
இதேபோன்று வேறொரு திரியிலும் ஹிட்லருக்கும் வெள்ளையடிகும் முயற்சி நடந்தது. அதுவும் இனப்படுகொலை நாள் பற்றிப் பேசப்படும் திரியில். யார் செய்தாலும் இனப்படுகொலைதான். இதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கிடையாது. இவனை விட அவன் திறம் என்பதுபோல் எழுதுபவர் மனித நேயம் பற்றியும் எழுதுவது இரட்டை வேடம்.
- மேட்டிமைவாதமா? - ஜெயமோகன்
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
மனிந நேயத்துக்கு எதிரானது மரண தண்டலை. உலகம் முழுவதும் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போராடி வந்தாலும் சில நாடுகளில் அதனை முற்றாக ஒழிக்க முடியாமல் உள்ளது. பைடன் சென்ற தேர்தலில் 3 மானிலங்களில் இதனை நீக்குவதாக உறுதி அளித்தாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாகத் தெரிகிறது. ட்றம்ப் போட்டியிடும் மாநிலங்களில் மரண தண்டனைக்கு ஆதரவு இருப்பதால் அவர் ஆட்சிக்கு வந்தால் மரண தண்டனைகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
ஏனென்றால் இதற்கு ஏற்கனவே பதில் எழுதியும் நீங்கள் வாசிக்கவில்லை. 👇
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
BIO என்பது மருந்து பாவிக்காமல் விளைவிக்கப்படும் மரக்கறிகளா ? 🤣 நான் இவற்றை அதிகம் வாங்குவதில்லை.
-
இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
நல்லது. அறிவியலுக்குச் சற்றும் தொடர்பற்ற நேர்மறைக் கருத்துக்களையும் அரட்டைக் கருத்துக்களையும் பொழுதுபோக்குத் திரிகளில் எழுதுவதுதான் யாழுக்கும் நல்லது.
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
பிரான்சிலும் இப்படித்தான். அரசியலில் ஒருவர் நுளைந்துவிட்டால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அரசியல் வாழ்க்கைக் காலத்தில் சுத்துமார்ருச் செய்து சொத்தைப் பெருக்காமல் இருக்க இந்த ஏற்பாடு.
-
இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
எனது அறிவுக்கு எட்டியபடி நாள்தோறும் எனக்குத் தேவையான விற்றமின்கள் கனியுப்புகள் புரதம் கொழுப்பு சீனி நார்ப்பொருள் போன்றவற்றைத் தரும் சாதாரண மரக்கறி பழங்கள் மீன் இறைச்சி எண்ணை போன்றவற்றைத் தேடி வாங்கி உண்க்கிறேன். உங்களைப் போல் உலகச் சந்தை பற்றி அதிகம் தெரியாது 🙂
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
விலை அதிகமான உணவுதான் தரமானதா ?
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
உங்களுக்கான பதில் ஏற்கனவே உள்ளது 😂
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
அத்தியாவசிய உணவுகளை வாங்குவதற்கு ஒவ்வொருவரும் பணக்காரர்களாகவோ அறிவியல் மேதைகளாகவோ இருக்க வேண்டியதில்லை. சாதாரணமான பகுத்தறியும் திறன் இருந்தால் போதுமானது.
-
இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
ஏழை பணக்காரராக இருந்தாலும் தாம் உண்ணும் உணவில் என்ன உள்ளது என்ற அறிவியல் அறிவு இருந்தாலே போதுமானது. மேலை நாடுகளில் பொதுவாக இந்த அறிவியல் இல்லாத ஏழை மக்களே அதிக கொழுப்பும் சீனியும் உப்பும் உள்ள உணவுகளை அதிகமாக உண்ணுகிறார்கள். ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப ஆரோக்கியமான உணவை உண்ண முடியும். இதைத்தான் அறிவியல் திரிகளில் விவாதிக்கப்படுகிறது. இதை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்பவர்கள்தான் அதிலுள்ள விடயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் குளறுபடி செய்கிறார்கள்.🙂
-
இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
விகிதாசரப்படி முன்னேறிய நாடுகளில் நிச்சயமாக. சரியான உணவு மருத்துவம் இல்லாத நாடுகளில் ஆரோக்கியமின்றி வாழ்கிறார்கள்.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
நிரூபணமான அறிவியல் விடயங்களே இப்படு படும்போது அரசியல் திரிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அஸ்பத்திரிகளை இடித்து விட்டு டாக்குத்தருக்குப் படிக்கும் பெடியளின் படிப்பை நிறுத்தி வயல் வேலைக்கு அனுப்புவோமா ? 😂 (வயல் வேலையை இகழ்வதற்காக எழுதவில்லை) இதுதான் மிகப் பெரிய தத்துவம். 😂 90 வயது தேவையில்லை. அன்றைய பொற்காலத்தில் மக்கள் 55 - 60 வயதுவரைதான் வாழ்ந்தார்கள். 😂
-
இலங்கையில் 20 வீதத்துக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிப்பு : 35 வயதுக்கு மேற்பட்டோரில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் - ரமேஷ் பதிரண
அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை?
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
சாதாரண வேவு அதிகாரியாகப் பணியாற்றி இன்றுவரை பத்தாயிரம் யூரோ சம்பளம் எடுக்கும் புதின் எவ்வாறு 2023 இல் உலகில் மிகப் பெரிய பணக்காரராக ஆக முடிந்தது ? உக்ரெயின் போர் தொடங்கியதிலிருந்து பலர் படியால் தடுக்கியும் ஜன்னலால் விடுந்தும் தூக்கு மாட்டிக் கொண்டும் இறந்தனர். இவர்களில் பலர் சாதாரணமானவர்கள் கிடையாது. ரஸ்யாவின் Gazprom மற்றும Gazprombank நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் முதலீட்டாளர்களும். பெரும் கோடீஸ்வரர்கள். ஒருவர் தனது குடும்பத்தோடு அழுந்து போனார். இவர்களது சொத்துகளுக்கு என்ன நடந்த்தது என்று தெரியாது. புதின் பற்றி எழுதியவுடனேயே அவன் முதுகைப் பார்த்தாயா இவன் முதுகைப் பார்த்தாயா என்று முண்டியடித்துக் கொண்டு வந்து புதினுக்கு வெள்ளையடிப்போருக்கு ஒருவன் அயோக்கியனாக இருந்தால் அதனை ஏற்கும் பக்குவம் கிடையாது. வசி ஏற்கனவே தந்த இணைப்பில் சென்று வாசித்தால் கோடிக்கு எத்தனை இலக்கம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம். 👇 👆 செலன்ஸ்கி மட்டுமல்ல பிரெஞ்சு அதிபரும் இந்தப் பட்டியலில் உண்டு.
-
ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!
அதுசரி, கட்டுரையின் இறுதியில் கூறப்பட்ட விடயம் தொடர்பாக முந்தநாள் ஜேர்மனியில் நடைபெற்ற போராட்ட ஊர்வலங்கள் பற்றி ஜேர்மன்காரர் வாய் திறக்கவில்லை. 😀
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
இப்போதுதான் கருத்துக்கணிப்பு முடிவைப் பார்த்தேன். சிறிதரனை இரண்டாவது தெரிவில் பரிந்துரை செய்திருப்பதால் நீங்கள் மட்டும் ஓரளவாவது முடிவை ஊகித்துள்ளீர்கள் போலுள்ளது.
-
டாடோ என்கின்ற டாலிபோ
விறுவிறுப்பான நேர்த்தியான எழுத்து நடை. ஓவியம் மட்டுமன்றி எழுத்தாற்றலும் உங்களுக்கு நன்றாக வருகிறது. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எழுதுங்கள்.
-
பனஞ்சீனியின் மருத்துவ பலன்கள்.
இதை நான் மிகப் பெரிய பகிடி என்று சொன்னால் இந்தத் திரியும் கிழித்துத் தொங்க விடப்படும். 😂 உள்ளூரில் வெள்ளைச் சீனிக்கு மாற்றீடாக பனஞ்சீனியைப் பாவிக்கலாம். அதற்காகப் புரளிகளைப் பரப்பக் கூடாது.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
பேரீச்சம் பழம் சுகருக்கு சொன்ன சாமான் என்று சொல்லும்போதே நினைத்தேன், நீங்கள் கூட வேலை செய்யும் நண்பர்கள் சொல்வதைத்தான் ஒப்புவிக்கிறீர்கள் என்று. வெள்ளை சிவப்பு வைன்களில் சீனி இல்லை. 100 கிராம் சிவப்பு வைனில் 0.6 கிராமும் வெள்ளையில் 1கிராமும் உண்டு. கலோரி அளவில் வெள்ளை வைனை விட சிவப்பில் சற்று அதிகமாக உள்ளது (ஜஸ்ரின் குறிப்பிட்ட sweet wine வேற). உங்கள் வைத்தியர் தலையாட்டியது மிகச் சரி. வெள்ளை வைன் அருந்தியதால்தான் மாரடைப்பு வந்தது என்று முடிவெடுப்பதற்கு நீங்கள் ஒன்றும் பகுத்தாய்வாளர் இல்லை. சிவப்பு வைன் பாவித்திருந்தால் சில வேளை முன்னதாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். இன்றைய அறிவியல் வளர்ந்த காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று தெரிந்து கொள்வது தவறல்ல. கடைகளில் விற்கும் உணவுப் பொருட்களில் எத்தனை கலோரி, சீனி, கொழுப்பு உண்டென்று குறிக்கப்படுவது கட்டாயம். ஏனென்றால் நாமாகவே இன்னென்ன உணவில் சீனி உண்டு இல்லை என்று முடிவெடுக்க முடியாது. நாம் தெரியாமலே இத்தனை நாள் சாப்பிடும் உணவில் கலோரிகள் ஏதாளமாக இருக்கலாம். அரைகுறை அறிவோடு எனக்கு நானே வைத்தியன் என்ற முடிவை நான் எப்போதும் எடுக்க மாட்டேன். வைத்தியரின் ஆலோசனையைப் பிரதானமாகவும் எனது தேடலை மேலதிகமாகவும் கொண்டே எனது உணவு, மருந்து பாவனைகள் இருக்கும். இறுதியாக, இது இலங்கையில் சராசரி ஆயுட்காலம் 60 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை. 60 ஆம் ஆண்டுக்கு முன் வைன் குடிக்கவில்லை, சீனி, பசுமதி, இனிப்பு, இறைச்சி உண்ணவில்லை, சதாரண வருத்தத்துக்கு மாத்திரைகள் எடுக்கவில்லை, அமெரிக்கன் மருந்து விற்பதற்காகப் புதிய நோய்களை உருவாக்கிப் பரப்பவில்லை, வைத்தியர் வியாபாரியாக இருக்கவில்லை… ஆனாலும் அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை? இவ்வளவு அறிவுரை கூறும் உங்களிடமே இதற்கான பதிலையும் எதிர்பார்க்கிறேன் (வழக்கம்போல், எழுதினால் வெட்டுவீர்கள் என்று நழுவ வேண்டாம்).
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
Cognac போன்ற மதுபானங்களில் சீனி மிக மிகக் குறைவாக உள்ளது. ஆனால் ஏராளமான கலோரிகள் உண்டு. இந்தக் கலோரிகளை பிரெஞ்சில் வெறுமையான கலோரிகள் என்று சொல்வார்கள். இவற்றை உடலில் சேமிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. உடலால் உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டியவை. தேவைக்கதிகமான கலோரிகள் உடலில் ஏறியதும், ஜஸ்ரின் குறிப்பிட்டதுபோல் உடலுக்குச் சக்தியை வழங்க வேண்டிய இரத்தத்தில் உள்ள சீனி சும்மா சுற்றித் திரிந்து எரிக்கப்படாமல் சீனி அளவைக் கூட்டும். 5 சென்ரிலீற்றர் Cognac இல் 100 கிலோ கலோரிகள் உள்ளன. இது 5 கட்டிச் சீனிக்குச் (25 கிராம்) சமன்.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
ஒரு பேரிடம் பழம் ஏறத்தாள 10 கிராம் = ஏறத்தாள 25 கிலோகலோரிகள். ஒரு கட்டிச் சீனி 5 கிராம் = 20 கிலோகலோரிகள் Glycemic index இரண்டுக்குமே 100. அதாவது சீனி எந்த வேகத்தில் கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் சேருமோ அதே வேகத்தில் பேரீச்சம்பழ இனிப்பும் இரத்தத்தில் ஏறும். இரண்டிற்கும் வித்தியாசம், பேரீச்சம் பழத்தில் சிறிது நார்ப்பொருளும் விற்றமின்களும் உள்ளன. என்னைப் பொறுத்தவரை ஒரு சீனிக் கட்டியுடனோ அல்லது ஒரு முழு பேரீச்சம்பழத்துடனோ தேனீரை நண்றாக ச் சுவைத்துக் குடித்துவிட்டு 5 நிமிடங்கள் மெதுவாக நடந்தால் எல்லாம் சமனிலையாகும்.
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
இன்னும் 10 நிமிடத்திலிருந்து சில நிமிடங்கள் யாழ் இயங்காமல் போகலாம்.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
இலங்கையில் காய்கறிகளின் விலை ஓரளவேனும் சீரானதாக இருந்ததில்லை. பருவ காலங்களை ஒட்டிய பயிர்ச்செய்கை இதற்கு ஒரு கரணமாக இருக்கலாம். நவீன முறையில் வெயில் அதிகமாக உள்ள இலங்கையில் குறுகிய இடத்தில் குறைந்த நீர் வசதியுடன் வருடம் முழுவதும் மரக்கறி பயிர்செய்யலாம்.