-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
வாழ்த்துகள் ஆதித்யா. பிரான்சில் வாக்களிக்கும் தமிழர்களில் இரண்டு வகையினரை அவதானித்துள்ளேன். முதலாவது தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் எந்தக் கட்சி என்று பாராமல் அவருக்கு வாக்களிக்கும் தமிழர்கள். மற்றது வெளிநாட்டவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று தீவிர இனவாத வலதுசாரிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள். இந்த இரு தரப்பினரும் இரு வேறு துருவங்கள் அல்லவா ? ஆனால் இருவரும் (பலர்) தமிழ் தேசிய ஆதரவாளர்கள். தமிழர்கள் ஒரு நாட்டு அரசியலுக்குள் நுளைந்து வளர வேண்டும். அதே வேளை வெளிநாட்டவர்கள் அடக்கப்பட வேண்டும். இதேபோன்றுதான் பிரான்சில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலுக்குள் நுளைய வேண்டும் என்பவர்கள் சீமானின் தமிழனைத் தமிழன் ஆள வேண்டும் என்ற கோசத்தை எவ்வாறு ஏற்க முடியும் என்பது புரியவில்லை. (சீமான் பற்றி இத் திரியில் விவாதிக்கப்பட்டதால் உதாரணம் கூற வேண்டி வந்தது)
-
டான்பாஸிலிருந்து உக்ரைன் வெளியேறினால் பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கும் – ஜெலென்ஸ்கி
2022 ஆம் ஆண்டு உக்ரெய்னின் நான்கு மாகாணங்களைத் தனது நாட்டுடன் ரஸ்யா சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது. இதில் ஒன்றுதான் டொன்பாஸ். இந்த 4 வருடத்தில் ரஷ்யா குறைந்தபட்சம் டொன்பாசையாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மட்டுப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே. ஏன் அப்படிச் செய்யவில்லை ? மாறாக ஏன் உக்ரெய்னிடம் அப் பகுதியைத் தருமாறு அமெரிக்கா மூலமாகக் கேட்கிறது ? ரஸ்யா போர் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை என்பதே காரணம்.😂
-
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
ஈரானின் இரண்டு அணுமின் நிலையங்கள் இன்று தாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இன்னும் இரண்டு வாரங்களில் தனது இலக்கை எட்டும் என்று மார்க்கோ ருபியோ கூறியுள்ளார். பார்க்கலாம்.
-
வீதியோரம்.
கதையை மிக விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்த்தியுள்ளீர்கள். இறுதிப் பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பழிவாங்குதல் சட்டப்படி குற்றம் என்பதை உறுத்தியது. நீங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டத்திற்கப்பாற்பட்ட தீர்வைக் கொடுத்து அதற்கான தண்டனையக் கதையின் நாயகர்களுக்குக் கொடுக்காமல் அது தவறு, தண்டிக்கப்படலாம் என்ற தொனியில் முடித்தது அருமை. இரண்டாம் பாகத்துக்கான வாடை தெரிகிறது.
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
20 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் கோயில் ஒன்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாங்கள் கதைக்கும்போது இடையில் பிரெஞ்சில் ஏதோ கதைத்துவிட்டேன். அங்கிருந்த தாய்லாந்துக்காரர் எம்மருகில் வந்து நீங்கள் பிரான்சிலிருந்து வந்துள்ளீர்களா என்று பேசுக் கொடுத்தார். நாமும் பிரெஞ்சு பேசும் ஒருவரைச் சந்தித்த ஆவலில் அவரிடம் பேசினோம். அப் பிரதேசத்தில் பார்த்து ரசிக்கக் கூடிய இடங்களைப் பற்றிய தகவல்களைக் கூறினார். கடைசியாக, இங்கு கல் பதித்த தங்க நகைகளை மிகவும் மலிவாக ஒரு இடத்தில் வாங்கலாம் என்றார். போதாக்குறைக்கு எமது ஆட்டோ ஓட்டுனரிடம் ஏதோ அவர்கள் மொழியில் கூறி அனுப்பி வைத்தார். நாங்களும் சில இடங்களைப் பார்த்துவிட்டு இறுதியாக ஓட்டுனரிடம் நகைக்கடைக்குப் போகலாம் என்றோம். அது ஒரு ஒதுக்குப் புறமாக இருந்தாலும் மிகப் பெரிய கடை. ஏராளமானவர்கள் நகை வாங்குவதைப் பார்க்க முடிந்தது. நாமும் இரண்டு கல் வைத்த நகைகளை வாங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். அன்று இரவு அடுத்தநாள் உலாத்தலைத் திட்டமிடுவதற்காக வழிகாட்டிப் புத்தகத்தைப் புரட்டியபோது எமக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சற்றும் பிசகாமல் அப்படியே அதில் எழுதப்பட்டிருந்தது. அன்று முழுவதும் நித்திரையில்லை. அடுத்தநாள் முதல் வேலையாகக் காலையில் நகைகளை மதிப்பிடும் அலுவலகம் ஒன்றைக் கண்டு பிடித்து நகைகளைப் பரிசோதித்தோம். நல்ல வேளை அவை உண்மையான தங்கமும் கற்களும் என்று அத்தாட்சிப் பத்திரம் தந்தார்கள். ஆனாலும் எதிர்பார்த்த இலாபம் இல்லை.
-
வசந்தம் வருகிறது
ஒவ்வாமையுடனும் ஆஸ்மாவுடனும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். ஓட்டப் பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஆஸ்மா முற்றாக மறைந்து விட்டது. ஒவ்வாமை ஓரளவு உள்ளது. பூத்திருக்கும் வயல் ஓரங்களில் தும்மாமல் ஓட முடிகிறது. விஞ்ஞான ரீதியில் ஒவ்வாமைக்கும் ஓட்டத்துக்கும் தொடர்பு இருக்குமோ அல்லது வேறு காரணங்களாலோ தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தடவை ஊசி போட்டிருந்தேன். தொடர்ந்து ஊசி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். நான் பாவிப்பது levocetrizine. 5 கிராம் குளிசையில் பாதியை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எடுப்பதுண்டு. மார்ச் - ஏப்ரல் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பாதிக் குளிசை எடுப்பேன்.
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
ஆம். சாமியார் சொன்னது. 😂
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
இந்தத் தாக்குதல் ரஷ்யாவினாலேயே சோடிக்கப்பட்டது என்று ரஷ்யா வெளியிட்ட படத்தை வைத்து அப்போதே செய்திகளில் கேலி செய்யப்பட்டது. முதலில் ரம்பும் இத் தாக்குதலைக் கண்டித்தார் பின்னர் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்று ஞாபகம். ரஷ்யாவும் மேற்கொண்டு தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் எதையும் வெளியிடாமல் அதனை மறந்து விட்டது. புதின் போரையே விரும்புகிறார் என்பதற்கு இது இன்னொரு சாட்சி.
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
ஏற்கனவே ரஷ்யாதான் அமெரிக்காவின் தளங்களை ஈரானுக்குக் காட்டிக் கொடுக்கிறது என்று ரம்பின் காதுக்குள் கூறப்பட்டதாகப் பேசப்பட்டது. ஆனால் இவர்தான் கேளாத மாதிரி இருந்தவர்.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
பைடன் எந்த நாட்டின் மீது போர் தொடுத்தார் ? ட்றம்புக்கு முன்பு இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஒபாமா எந்த நாட்டின்மீது போர் தொடுத்தார் ? அதற்குமுன் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஒபாமா எந்த நாட்டின் மீது போர் தொடுத்தார் ? ட்றம்பு முதலாவது ஆட்சிக் காலத்தில் உக்ரெய்னுக்கு ஆயுதம் கொடுத்தார். சிரியா மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடத்தினார். காசிம் சுலைமானியைக் கொலை செய்தார். பைடன் உக்ரெய்னுக்கு ஆயுதம் கொடுத்தார். ஒபாமா லிபியாவில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடத்தினார்.
-
Jaffna Runners - ஓட்டப் பயிற்சி சமூகம்
யாழ்நகரில் சண். சுந்தரம் அவர்களின் முயற்சியால் ஓட்டப் பயிற்சிக் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஓடுவதையும் உடல்நலத்தையும் விரும்பும் அனைவருகாகவும் உருவாக்கப்பட்ட இக் குழுமத்துடன் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் தாராளமாகப் பங்குகொள்ளலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6:00 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் சந்தித்து ஒன்றாக ஓடலாம். நீங்கள் என்றுமே ஓடாத புதியவராக இருந்தாலும் தொடர்ந்து ஓடுபவராக இருந்தாலும் இக் குழுவில் சேரலாம். சண். சுந்தரம் அவர்களைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஒரு சமூக ஆர்வலர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஓவியர், ... இரண்டு வாரங்களுக்கு முன் தனது 73 ஆவது வயதில் டோக்கியோவில் தனது ஆறாவது சர்வதேச மரதன் ஓட்டத்தை நிறைவு செய்தவர். வயதோ, உடல் பருமனோ அல்லது வேறு காரணிகளோ ஓட்டப் பயிற்சிக்குத் தடையில்லை. ஆகவே விரும்புபவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் காலை 6 மணிக்குத் துரையப்பா விளையாட்டரங்கிற்குச் சென்று இக் குழுமத்தில் இணைந்து கொள்ளலாம். நன்றி.
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
அமெரிக்க தேர்தல் நேரம் ட்றம்ப் ஏன் ஆட்சிக்கு வரக் கூடாது என்று சக உறுப்பினர்கள் எழுதியதையெல்லாம் புறம் தள்ளி, ட்றம்ப் ஆட்சிக்கு வந்தால் உலகிற்கே நல்லது சமாதானம் ஏற்படும் என்றெல்லாம் வாதாடியவர் நீங்கள். ஆட்சிக்கு வந்து 3 மாதத்திற்குள் உலகமே அவஸ்தைப்படுகிறது. வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ரஸ்ய வங்கி வட்டி வீதம் சென்ற வருடம் 22 வீதம் வரை உயர்ந்தது. வங்குறோத்தான நாடுகளிலேயே இந்த அளவு வட்டி வீதம் சாத்தியமாகும். முதலீடுகளை அதிகரிப்பதற்காக சிரமப்பட்டு இந்த வருடம் 16-17 வீதத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கான விலையைப் பணவீக்கத்தினை அதிகரிப்பதன் மூலம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இந்த ஹெலிகப்ரர்கள் 60-70 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை. சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் பாவனையிலிருந்து முற்றாக நீக்கப்பட்டவை.
-
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்
நேற்று பாகிஸ்தான் எண்ணைக் கப்பல் ஒன்று இந்த நீரிணையைக் கடந்துள்ளது. Automatic Identification System (AIS) மூலம் ஈரானால் இனம்காணப்பட்டு இக் கப்பல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானுடன் முன்கூட்டியே கப்பல் அனுமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம்.