Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. இந்தியாவால் புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியும், எம்.ஜி.ஆர் செய்த உதவியும் மற்றைய இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் அளவில்ச் சிறியதாக இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் புலிகளின் திறன் தொடர்பான சிறப்பான மதிப்பீட்டினைக் கொண்டிருந்தனர். மேலும், பிரபாகரன் மீதும் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. 80 களின் ஆரம்பத்திலிருந்து தமிழ் நாட்டில் இயங்கிவந்த தம்ழிப் போராளி அமைப்புக்களை நான்கு இந்திய உளவு அமைப்புக்கள் கண்காணித்து வந்தன. அவையாவன, 1. இந்திய வெளியக உளவுத்துறையான ரோ 2. இந்திய மத்திய உளவு அமைப்பான சி.பி.ஐ 3. இராணுவ புலநாய்வுத்துறை 4. தமிழ்நாடு உளவுத்துறையான கியூ பிராஞ்ச் இவை அனைத்தினதும் மதிப்பின்படி புலிகள் இயக்கமே அமைப்புக்களில் சிறப்பானது என்று கருதப்பட்டது. அதற்குக் காரணமாக புலிகளின் இடையறாத இராணுவச் செயற்பாடுகளும், போராளிகளின் ஒழுக்கமும், கட்டுக்கோப்பும், இலட்சியமான தமிழ் ஈழம் மீதான பற்றும் அமைந்திருந்தன என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு காவல்த்துறையின் புலநாய்வுப் பிரிவிற்கு மலையாளியான மோகன்தாஸ் உதவி ஆணையாளராக அக்காலத்தில் கடமையாற்றி வந்தார். இன்னொரு மலையாளியும், இலங்கையின் கண்டியில் பிறந்தவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான எம்.ஜி.ஆர் உடன் மோகன்தாஸ் மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வந்தார். எம் ஜி ஆர் உடன் பேசும்போது புலிகள் குறித்து மிகவும் பெருமையாகவும், உயர்வாகவும் மோகன்தாஸ் பேசிவந்திருந்தார். அமைப்புக்கள் அனைத்திற்குள்ளும் புலிகளே மிகவும் திறமையானவர்கள் என்பதே மோகன்தாஸின் கணிப்பாக இருந்தது. தான் ஓய்வுபெற்றதன் பின்னர் எம்.ஜி.ஆர் குறித்து புத்தகம் ஒன்றினை மோகன் தாஸ் எழுதினார் . அப்புத்தகத்தில் புலிகள் பற்றியும், தலைவர் பிரபாகரன் பற்றியும் பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார். "புலிகளின் போராளிகள் இலட்சிய உறுதியும், கட்டுக்கோப்பும் கொண்டவர்கள். கவர்ச்சிகரமான வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்குத் தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு அமைப்பும் தமக்கென்று புலநாய்வுப் பிரிவுகளை வைத்திருக்கின்றபோதிலும், புலிகளின் புலநாய்வு அமைப்பே மிகவும் திறமை வாய்ந்தது". 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை நடைபெற்ற காலத்தில் புலிகள் அமைப்பில் வெறும் 30 போராளிகளே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், புரட்டாதி மாதமளவில் அவ்வெண்ணிக்கை 250 ஐத் தொட்டிருந்தது. அவர்களுள் 200 மூத்த போராளிகளை சிறப்புப் பயிற்சிக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்திற்கு தெரிவுசெய்து அனுப்பிவைத்தார் பிரபாகரன். இந்தியாவினால் வழங்கப்பட்ட பயிற்சித் திட்டத்தில் புலிகள் அமைப்பே இறுதியாக இணைந்தது. 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் 100 பேர் கொண்ட இரு குழுக்களை பிரபாகரன் அனுப்பிவைத்தார். தொலைநோக்குப் பார்வையுடனேயே இதனை அவர் செய்தார். ரோ சார்பாக புலிகள் இயக்கத்தின் பயிற்சிகளுக்குப் பொறுப்பாகவிருந்த உயர் அதிகாரி சந்திரசேகரனிடம் இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்து பிரபாகரன் வினவினார். மிகுந்த திறமைசாலிகளான இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சிகளை வழங்குவார்கள் என்றும், புதிய போர்த் தந்திரங்களை அவர்கள் போராளிகளுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்றும் சந்திரசேகரன் பதிலளித்தார். மேலும் சிறிய மற்றும் கனரக ஆயுதங்களைப் பாவிப்பது குறித்த சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். வரைபடங்களை படித்து அறிந்துகொள்ளல், கண்ணிவெடிகளை பொருத்தும் பயிற்சிகள், வெடிபொருட்களைக் கையாளும் பயிற்சிகள், தாங்கியெதிர்ப்புப் பயிற்சிகள், விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளும் பயிற்சிகள் என்பன புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் அடங்கியிருந்தன. புலிகளுக்கு அவசியமானவை என்று தான் கருதிய பயிற்சி விபரங்கள் குறித்து சந்திரசேகரனிடம் பிரபாகரன் கூறினார். தனது உடனடிக் கவலை இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைக் காப்பதுதான் என்று அவர் சந்திரசேகரனிடம் தெரிவித்தார். " இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்குள் தள்ளி முடக்கவேண்டும்" என்று பிரபாகரன் தெரிவித்தார். சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவித்து, சுதந்திரமான தனிநாடான தமிழ் ஈழத்தை உருவாக்கும் வகையில் தனது கெரில்லா இராணுவத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றுவதே பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. 1976 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் திகதி தனது 21 ஆவது வயதில் தனது அமைப்பிற்கான யாப்பினை அவர் வரைந்தார். அதன்படி தது அமைப்பின் நோக்கங்களை பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருந்தார், முற்றான சுதந்திரம் கொண்ட தமிழ் ஈழம் இறைமையுள்ள, சோசலிச ஜனநாயக மக்கள் ஆட்சியை ஏற்படுத்துதல். சாதி வேற்றுமைகள் உள்ளிட்ட அனைத்து வேற்றுமைகளையும் முற்றாகக் களைதல். சோசலிச முறையில் அமையப்பெற்ற உற்பத்திச் செயற்பாடுகளை உருவாக்குதல். விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினை இராணுவப் போராட்டமாக மாற்றுதல். கெரில்லா போர்முறையில் ஆரம்பிக்கப்பட்டு ஈற்றில் மக்கள் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தை மாற்றுதல். என்பனவே அவையாகும். புலிகள் இராணுவச் செயற்பாடுகளை மூன்று பிரிவுகளாக பிரபாகரன் வகுத்தார்.அவையாவன, 1. பொலீஸ் புலநாய்வு வலையமைப்பையும், அவர்களுக்கு உளவுபார்க்கும் துரோகிகளையும் அழித்தல். 2. சிங்கள அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்குதல். 3. இராணுவ முகாம்களை அழிப்பதன் மூலம், இராணுவ‌ ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளை மீட்டெடுப்பதன் ஊடாக அப்பகுதிகளில் புலிகளின் நிர்வாகத்தை ஏற்படுத்தி தமிழீழத்திற்கான அடிப்படைக் கட்டுமாணங்களை நிறுவிக் கொள்ளல். இந்தியாவினால் வழங்கப்படும் பயிற்சிகுறித்து பிரபாகரன் தீர்க்கமான கொள்கையினைக் கொண்டிருந்தார். அதாவது, தனது கெரில்லா இராணுவத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றக்கூடியவகையில் அப்பயிற்சி அமையவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். தனது கொள்கையின்படியே இந்தியப் பயிற்சியும் அமைதல் வேண்டும் என்று அவர் கூறினார். ஆகவே, இந்திய அதிகாரிகளிடம் தனது அமைப்பிற்கான பயிற்சித் தேவைகள் குறித்துப் பேசும்போது தனது கொள்கையின்படி அவை அமையவேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார். ஏற்கனவே கண்ணிவெடித் தாக்குதல்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த புலிகளின் போராளிகளுக்கு கண்ணிவெடிகளை உருவாக்குவது, வீதிகளிலும், பாலங்களிலும் அவற்றினை சாதுரியமாகப் பொருத்துவது, வெடிபொருட்களைக் கையாள்வது ஆகிய பயிற்சிகளை இந்திய அதிகாரிகள் வழங்கினர். இந்தப் பயிற்சிகளை மிகவும் வெற்றிகரமாகப் பாவித்த பிரபாகரன், 1985 களின் நடுப்பகுதிகளில் இராணுவத்தினரினதும் பொலீஸாரினதும் நடமாட்டங்களை முற்றாக நிறுத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்கிவிடுவதில் வெற்றிகண்டார். புலிகளின் பெண்போராளிகள் புலிகளின் அறிவையும், நுட்பத்தையும் இந்தியப் பயிற்சிகள் மேலும் மெருகூட்டின. அவை புலிகளது இராணுவ வல்லமையினையும், திறனையும் அதிகரித்தன. ஆனாலும், இந்தியாவினால் புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டவை. புலிகளின் 200 போராளிகளை மட்டுமே இந்தியா பயிற்சியளித்தது. புலிகளுக்கான பயிற்சிகளின்போது பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் அக்காலத்திற்குப் பொருத்தமற்றவையாகக் காணப்பட்டன. புலிகளுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் மிகவும் பழமையானவை. தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தனது அமைப்பின் போராளிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதும், நவீன ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதும் அவசியம் என்று பிரபாகரன் கருதினார். குறைந்தது 1000 போராளிகளும் நவீன ஆயுதங்களும் அவருக்குத் தேவைப்பட்டது. அதற்குப் பெருமளவு பணம் தேவைப்படும். ஆனால், அப்போது அவரிடம் அதற்கான பணம் இருக்கவில்லை. அக்காலத்தில் நாளாந்தச் செலவுகளைப் பராமரிப்பதே அவருக்குக் கடிணமாகத் தெரிந்தது. ஆனால், 1985 ஆம் ஆண்டு சித்திரையில் பிரபாகரனுக்கு ஒரு தங்கப் புதையல் கிடைத்தது. எம் ஜி ஆர் மூலமாக அவர் எதிர்பார்த்த உதவி வந்து சேர்ந்தது. எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தினைக் கொண்டு புதிய பயிற்சி முகாம்களையும், அமைப்பிற்கான புதிய போராளிகளையும் அவரால் இணைத்துக்கொள்ள முடிந்ததுடன், தனது அரசியல் வலையமைப்பையும் அவரால் விஸ்த்தரிக்க முடிந்தது.
  2. சிவசங்கர் மேனன் - ஒன்றரை லட்சம் தமிழரது இரத்தம் குடித்த காட்டேரி. கொலைகாரி சோனியாவின் வேட்டை நாய்.
  3. நீலன் கொல்லப்பட்டது தவறு என்று புலிகளே கூறியபின்னர் ஏனையவர்கள் அதனைச் சரியென்று வாதிடுவதில் அர்த்தமில்லை. அவரது கொலையினால் கிடைத்த நண்மை எதுவுமில்லை, மாறாக எமது போராட்டத்தினைப் பயங்கரவாதம் என்று பேரினவாதம் பிரச்சாரப்படுத்த உதவியிருந்தது. இவரைப்போன்றே அமிர், யோகேஸ்வரன் போன்று நீளும் இன்னும் சில தமிழ் மிதவாதிகளின் கொலைகள். எவையுமே செய்யப்பட்டிருக்கத் தேவையில்லை. இக்கொலைகளை விவாதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று நினைப்பது தேவையானதுதான். ஆனால், இத்திரியில் எழுதும் சிலரது நோக்கம் அதுவல்ல என்பதும், தமிழரின் இருப்பிற்கான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதே அவர்களின் உண்மையான‌ நோக்கம் என்று தெரிந்தபின்னரும் அவர்களை சிலர் தொடர்ந்தும் ஆதரிப்பது கவலையளிக்கிறது. தவறுகளை விவாதிப்பதே இனிமேல் இவை நடவாமலிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, தமிழரின் விடுதலைக்கான போராட்டத்தை மேம்படுத்துவதுதான் உங்களின் உண்மையான நோக்கம் என்றால், அப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, பேரினவாதத்திடம் முற்றான சரணாகதியை அடையச் சொல்லும் சிலரின் நோக்கங்களுக்கு நீங்களும் துணைபோய்விடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லை, ஊரிலிருப்பவர்கள் சொல்கிறார்கள், அதைக் கேட்கத்தான் வேண்டும். தமிழருக்கு இனிமேல் அரசியல் அபிலாஷைகள் என்று எதுவும் வேண்டாம், சிங்களத்திற்குள் உள்வாங்கப்படு இலங்கையராக எம்மை அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று நீங்களும் முடிவுசெய்துவிட்டால், அதனை இங்கே வெளிப்படையாகவே கூறிவிடுங்கள். ஏனென்றால், புலிகளின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை நீங்கள் விமர்சித்தாலும் தமிழருக்கான நீதி தேடுதலில் நீங்கள் இன்னமும் உறுதியாக இருப்பதாக எண்ணி நாம் தொடர்ந்தும் உங்களைத் தொந்தரவு செய்வதை குறைத்துக்கொள்ளலாம். இக்கொலைகள் நடத்தப்பட்டபோது உண்மையான கரெக்டர் அஸாஸினேஷன் நடந்துவிட்டது. ஆனால், இப்போதும் அவற்றை மீளவெடுத்து திரும்பத் திரும்பச் செய்யவேண்டியதன் அவசியம் என்ன? இது யாருக்குத் தேவைப்படுகிறது? இதனால் அவர்கள் அடையப்போகும் நண்மையென்ன? சரி, விவாதத்தைத் தொடர்ந்து என்ன செய்வதாக உத்தேசம்? புலிகளை விமர்சிக்க வந்தேன், என் பணி முடிந்துவிட்டது என்று சென்று விடப்போகிறீர்களா? உங்களின் வாதத்தை இன்னும் சிலர் தமது தேவைகளுக்குப் பாவிப்பது தெரியவில்லையா உங்களுக்கு? ஏதோ செய்துவிட்டுப் போங்கள். எனது கருத்திற்கு செம்புள்ளி குத்திய கொழும்பானுக்கும் மற்றையவருக்கும் நன்றிகள்.
  4. இந்தியாவில் பயிற்சியில் ஈடுபடும் பிரபாகரன் இந்தியாவினால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சி போராளிகளைப்பொறுத்தவரையில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் இதன்மூலம் பெருமளவு இலாபமடைந்தன. தம்முடன் இணைந்துகொள்ள வந்த அனைவரையும் அவர்கள் உள்வாங்கிக்கொண்டனர். இணைந்துகொண்டவர்களின் தரம், இலட்சியத்தின் மீதான‌ உறுதிப்பாடு குறித்து அவர்கள் கவனம் எடுக்கவில்லை. அவர்களுக்கு அன்று தேவைப்பட்டதெல்லாம் தாமே மிகவும் பெரியதும், செல்வாக்குக் கொண்டதுமான போராளி அமைப்பு என்று இந்தியாவுக்குக் காட்டுவது மட்டும் தான். போராளிகளை அமைப்பில் இணைக்கும்போது அவர்கள் கைக்கொண்ட தேர்வு முறையே அவர்களின் வீழ்ச்சிக்குப் பிரதானமான காரணமாக அமைந்தது. ஒழுக்கச் சீர்கேடுகளும் இயக்க உள்முரண்பாடுகளும், போட்டிகளும் இவ்வமைப்புக்களுக்குள் தலைவிரித்து ஆடத்தொடங்கின. ஆனால் பிரபாகரனோ தனது அமைப்பில் இணைய விரும்பிய இளைஞர்கள் குறித்து மிகுந்த அவதானமும், அவர்கள் குறித்த சரியான கணிப்பீட்டினையும் கொண்டிருந்தார். இணைந்துகொள்ள விரும்பிய போராளிகள் ஒவ்வொருவரையும் தானே தேர்ந்தெடுத்தார். கட்டுப்பாடும், கண்ணியமும், இலட்சிய உறுதியும் ஒவ்வொருவரிடமிருந்தும் கண்டிப்பாக அவரால் எதிர்பார்க்கப்பட்டது. தன்னால் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, உணவளிக்கக் கூடிய அளவிலான போராளிகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார். 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய அமைப்பாகக் காணப்பட்டது. ஏனைய அமைப்புக்களின் திடீர் எண்ணிக்கைப் பெருக்கம் குறித்து அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஒரு தரமான இராணுவ அமைப்பு திட்டமிட்ட ரீதியிலேயே பரிணாம வளர்ச்சி அடையவேண்டும் என்பதில் பிரபாகரன் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் என்று அன்டன் பாலசிங்கம் போரும் சமாதானமும் என்று தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். "அமைப்புக்களின் அசாதாரணமான எண்ணிக்கை வீக்கம் பல்வேறான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, ஈற்றில் அவ்வமைப்பின் அழ்விற்கும் காரணமாக அமைந்துவிடும் என்று அவர் கருதினார்" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
  5. தமிழ் ஈழத்திற்கான அடிப்படைகளை நிறுவுதல் 1984 ஆம் ஆண்டென்பது பிரபாகரனைப் பொறுத்தவரையிலும், போராட்டத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்த வருடத்திலேயே தாக்கிவிட்டுத் தப்பியோடும் கெரில்லாப் பாணியிலிருந்து ஒரு இடத்தில் நின்று சண்டைபிடித்து அப்பகுதியைத் தக்கவைக்கும் போர்முறைக்கும் அவர் தனது அமைப்பினை மாற்றியிருந்தார். மேலும், தனது அமைப்பினை தேசிய விடுதலை இராணுவம் எனும் நிலைக்கும் மேம்படுத்தியிருந்தார். அவ்வருடத்திலேயே ஒரு தனிநாட்டிற்கான கட்டமைப்புகளான நிர்வாகம், வரி, சட்டம் ஒழுங்கு உட்பட பல நடைமுறைகளையும் அவர் உருவாக்கத் தொடங்கியிருந்தார். ஒரு தனிநாட்டிற்கான அடிப்படைகளை நிறுவிக்கொள்ளவும், தேசிய விடுதலை இராணுவமாக புலிகளைக் கட்டியெழுப்பவும் பிரபாகரனுக்கு மூன்று விடயங்கள் உதவியிருந்தன. முதலாவதும் மிக முக்கியமானதுமான காரணம் தமிழ் மக்கள் ஒரு இனமாக அவரின் பின்னால் அணிதிரண்டது. ஜெயவர்த்தனவும், போராளிகளின் துணிச்சலான இராணுவச் செயற்பாடுகளும் இவ்விடயத்தில் அவருக்கு உதவியிருந்தன. 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையும், தமிழ் மக்கள் மீது ஜெயாரின் படைகள் கட்டவிழ்த்துவிட்ட பழிவங்கும் தாக்குதல்களும் தமிழ் மக்களைப் பிரபாகரனை நோக்கித் தள்ளிவிட்டிருந்தன. இராணுவத்தினர் மீதான புலிகளின் திருப்பியடிக்கும் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மனங்களில் பிரபாகரனுக்கு அழியாத இடத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. எம்.ஜி.ஆர் உடன் பிரபாகரனும் கேணல் சங்கரும் - 1980 களின் நடுப்பகுதியில் இரண்டாவது மூன்றாவது காரணங்களும்ம் ஏறக்குறைய அதேயளவு முக்கியமானவைதான். அவையாவன, இந்தியாவினால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் மற்றும் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இனால் பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தின்மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களும். தம்மீதான 83 ஆம் ஆண்டுப் படுகொலைகள் தமிழ் மக்களின் சுய கெளரவத்தினை வெகுவாகப் பாதித்திருந்ததுடன், அவர்களின் உணர்வுகளையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டிருந்தது. பெருமளவு தமிழ் இளைஞர்கள், குறிப்பாக சிங்களப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள், ஐந்து பெரிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்துகொண்டதுடன், சிங்கள தேசத்திற்கும், ஜெயாரின் அரசிற்கும் எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட விரும்பி முன்வந்தனர். பெருமளவு இளைஞர்கள் தமது அமைப்புக்களில் இணைந்துகொண்ட போதிலும் ஆரம்பத்தில் இவ்வமைப்புக்களிடம் குறிப்பிடத் தக்களவு ஆயுத தளபாடங்களோ அல்லது தேவையான வசதிகளோ இருக்கவில்லை. "எம்முடன் வந்து இணைவோரைத் தங்கவைப்பதற்கான வசதிகள் கூட எம்மிடம் இருக்கவில்லை. அவர்களுக்கு உணவளிக்கத் தன்னும் எம்மிடம் போதியளவு பணம் இருக்கவில்லை" என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்திருந்தார். .
  6. ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை நாசுக்காக முன்னெடுக்கும் நோக்கம், அதுதான் போராடிப் பிரியோசனமில்லை, அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது, இலங்கையராக எல்லாரும் வாழுவோம் என்று சுலோகங்கள் ஓதப்படுகின்றன. இந்த இரு பகுதியினரும் ஒன்றிணையும் புள்ளிதான் புலிகளை வசைபாடல். முதலாமவருக்கு வசைபாடலுடன் எல்லாம் முற்றுப்பெற்றுவிடும். மற்றைய இருவருக்கும் புலி வசைபாடல் ஊடாக அவர்களை கரெக்டர் அஸாசினேஷன் செய்வதன் மூலம் தாங்கள் ஏலவே நடத்திவரும் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் வழிகளை மேலும் பலப்படுத்துவது. அந்த இருவரையும் பொறுத்தவரையில் இத்திரி வெறுமனே புலிகளை விமர்சிப்பதுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. மாறாக அதற்கும் அப்பால்ச் சென்று, அவர்களின் நிகழ்ச்சி நிரலான தமிழருக்கான தீர்வை மறந்துவிட்டு இலங்கையராக ஒன்றுபடுங்கள், பேரினவாதத்திற்குள் உள்வாங்கப்படுங்கள் என்று பரப்புரை செய்யவும் பயன்படுகிறது. முதலாமவருக்கு நடப்பது தெரிந்தும், புலிகளை வசைபாட ஒத்தூதிகள் இருவர் கிடைத்த களிப்பில் அவர் அந்த இருவரினதும் ஏனைய நோக்கங்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார். அதுசரி, நீலன் கொல்லப்பட்டது 1999 இல் அல்லவா? முள்ளிவாய்க்காலின் பின்னரான மனமாற்றம் என்பது 2009 இற்குப் பின்னர்தானே? இடைப்பட்ட 10 வருடத்தில் நீலனின் கொலைபற்றி முதலாமவர் என்ன நிலைப்பாட்டிலிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன். எனக்கெதற்குத் தேவையில்லாத வேலை??
  7. பொடியன்களை விட்டு நாம் வெளியேறப்போவதில்லை ‍- யாழ் மக்கள் இராணுவமும் பொலீஸாரும் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். அவர்களை ஊக்குவிக்கும் முகமாக "இராணுவத்தினருக்கு உதவுவோம்" எனும் பெயரில் நிதிச் சேகரிப்பு நிகழ்வினையும் தேசியப் பாதுகாப்பு நிதியத்தையும் ஆரம்பித்துவைத்தார் லலித்.பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க நாட்டு மக்கள் அனைவரும் முப்படைகளுக்கு தாராள மனது கொண்டு உதவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பணத்திற்கு மேலதிகமாக மழைக்காலத்தில் பாவிக்கும் ரெயின்கோட்கள், தண்ணீர்ப் போத்தல்கள், கட்டில்கள், நீர்க் கொல்கலன்கள், அலவாங்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், அலுமீனியத்தால் உருவாக்கப்பட்ட ஏணிகள், மின் சுவிட்சுக்கள், கைப்பந்து மற்றும் ஏனைய விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றையும் பொதுமக்கள் இராணுவத்தினருக்குக் கொடுத்து உதவிட முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். லலித் அதுலத் முதலியின் தேசியப் பாதுகாப்பு நிதிக்கு நிகரான ஒரு நிதியத்தை பிரபாகரனும் ஆரம்பித்தார். அதற்கு தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதியம் என்று அவர் பெயரிட்டார். தமிழ் மக்களுக்கென்று தனியான வேண்டுகோள் ஒன்றினையும் பிரபாகரன் வெளியிட்டார், தலைவர் - 1980 களில் "தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். ஒடுக்குமுறைகொண்ட இராணுவ ஆட்சி தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் அழித்துவிட அரசாங்கம் முயல்கிறது. ஆனால், அடக்குமுறைகள் வெற்றிபெற்றதாக வரலாறுகள் உலகில் எப்பக்கத்திலும் இருந்ததில்லை. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களின் எழுச்சியை அடக்குமுறை மேலும் மேலும் உரமாக்கிவிடவே உதவும். சுத‌ந்திரத்திற்கான மக்களின் அவாவையும் அடக்குமுறை ஊக்குவிக்கும். சுதந்திர எழுச்சிக்கான மக்களின் மனவுணர்வையும் அடக்குமுறை புத்துயிர் பெறச் செய்யும். எமது ஆயுத ரீதியிலான போர் முன்னெடுப்புக்களை அரசாங்கம் முகம்கொடுக்க முடியாது திணறுவது தெரிகிறது. ஆகவேதான் தனது கோபத்தை அப்பாவித் தமிழ் மக்கள் மீது அது காட்டுகிறது. தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அட்டூழியங்கள் ஊடாக தமிழ் மக்கள், போராளிகளை வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிட‌லாம் என்று அரசாங்கம் நினைக்கிறது.அரசாங்கத்தின் இச்சூழ்ச்சிகளை நாம் அறியாதவர்கள் அல்ல. இராணுவம் மக்களைத் தாக்குகிறது என்பதற்காக எமது விடுதலைப் போராட்டத்தை பிற்போடுவது விவேகமானதாக இருக்காது. தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் தமிழ் மக்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசாங்கம் நினைப்பதைத் தவறு என்று நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களின் இராணுவத்தை நாம் தொடர்ச்சியான போர் ஒன்றிற்குள் வைத்திருக்க வேண்டும். இராணுவத்தை அவர்களின் முகாம்களுக்குள்ளேயே நாம் முடக்கி வைத்திருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் நாம் தனியாக நிற்கவில்லை. தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் எமக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய மக்களின் அனுதாபமும் எம்பக்கம் இருக்கிறது. ஆனால், எம்மீது போடப்பட்டிருக்கும் அடக்குமுறை விலங்கினை நாமே உடைத்தெறிய வேண்டும், அதற்காக நாம் தொடர்ந்தும் போராட வேண்டும். இழப்புக்கள் இல்லாது எம்மால் எமக்கான விடுதலையினைப் பெற்றெடுக்க முடியாது. தியாகங்கள் இன்றி விடுதலை கிடைக்கப்பெற்றதாகச் சரித்திரங்கள் இல்லை. சுதந்திரம் கொண்ட , பாதுகாப்பான வாழ்வினை நாம் வாழவேண்டுமானால் நாம் தியாகங்களைப் புரிவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்". பிரபாகரனின் இந்தக் கோரிக்கை உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் மனங்களை வென்றது. அது அவர் எதிர்பார்த்த நிதியினையும் அவருக்கு வழங்கியது. யாழ்ப்பாணத்தின் இன்னும் வசித்துவரும் எனது நெருங்கிய உறவுகளை கொழும்பிற்கு வந்துவிடுமாறு அழைக்க நானும் மனைவியும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றோம். நாவற்குழி இராணுவ முகாமிலிருந்து ஏவப்படும் எறிகணைகள் எமது வீட்டுப் பகுதிக்குள்ளும் வந்து விழலாம் என்கிற சாத்தியம் இருந்ததனால் நாம் அஞ்சினோம். முதலில் இதுகுறித்து எனது தந்தையுடனும் மாமியாரோடும் பேசலாம் என்று நினைத்தோம். நாம் இதுகுறித்து தந்தையிடம் கேட்டபோது, "பொடியளை விட்டு விட்டு எங்களை ஓடச் சொல்கிறாயா? நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நாம் அனைவரும் இதுகுறித்துப் பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம். நாம் அவர்களுடன் தான் இருக்கப்போகிறோம்" என்று அவர் கூறினார். எனது மாமியாருடன் பேசும்போதும், "பொடியன்கள் எங்களுக்காகச் சண்டை பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களுடனேயே இருக்கப்போகிறோம்" என்று அவரும் கூறிவிட்டார். அவர்கள் இருவரும் அப்போதுதான் எழுபது வயதைக் கடந்திருந்தார்கள். எனது தங்கையும், மனைவியின் தங்கையும் அதே முடிவில் உறுதியாக இருந்தார்கள். பிள்ளைகளும் தான். எவருக்குமே யாழ்ப்பாணத்தையும், பொடியன்களையும் விட்டு விட்டுத் தப்பியோட விருப்பம் இருக்கவில்லை. நாவற்குழி முகாமையும் எமது கிராமத்தையும் பிரிக்கும் வயல்வெளிக்குச் சென்றேன். தூரத்தில் வரிசையாக அமைக்கப்பட்ட காப்பரண்களை என்னால் காண முடிந்தது. முகாமைச் சுற்றிப் போராளிகள் இந்தக் காப்பரண்களை அமைத்து வைத்திருந்ததுடன், முகாமை எப்போதும் தமது கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். ஒரு போராளி என்னுடன் பேசுகையில், "நாங்கள் முகாமைச் சுற்றி வளைத்திருக்கிறோம். அதனைச் சுற்றிக் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறோம். இராணுவத்தினர் வெளியே வரமுடியாது" என்று கூறினார். நான் அவர்களுடன் அப்பகுதியில் நெடுநேரம் நின்றிருந்தேன். உலங்கு வானூர்திகள் மூலம் உள்ளே அடைபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு பொருட்கள் இறக்கப்படுவது தெரிந்தது. அப்போராளி என்னுடன் தொடர்ந்தும் பேசுகையில், "யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தை முடக்கும் நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம்" என்றும் கூறினார். போராளிகளின் மனோதிடத்தையும், எனது உறவினர்களின் உறுதியையும் கண்ட நாங்கள் நம்பிக்கையுடன் மீளவும் கொழும்பு திரும்பினோம். மக்கள் போராளிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது தெரிந்தது, குறிப்பாக புலிகளுடன் அவர்கள் மிகவும் நெருக்கமாகக் காணப்பட்டார்கள். போராளிகளும் சிறிது சிறிதாக பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்திருந்தார்கள். மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலேயே நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டவற்றை எனது சிங்கள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். லேக் ஹவுஸ் ஸ்த்தாபனத்தின் மூத்த ஆசிரியரான மேர்வின் சில்வாவும் அவர்களுள் ஒருவர். அவர் என்னுடன் பேசும்போது, "சபா, இதுகுறித்து இங்கு எவருடனும் பேசாதீர்கள். இதைக் கேட்கும் மனோநிலையில் எவரும் இங்கு இல்லை. இராணுவ ரீதியில் தாம் வென்று வருவதாகவே இங்கு அனைவரும் நினைக்கிறார்கள். எங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் பயிற்சியையும் வெளிநாடுகள் வழங்குகின்றன, ஆகவே நாம் வெல்வது உறுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். அவர் மட்டுமல்ல, இங்கே பொதுவாக அனைத்துச் சிங்களவர்களும் அதையே நம்பினார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர், அனுபவம் அற்றை ரஜீவ் காந்தி அரியணை ஏறியிருக்கும் நிலையில், அரசியலில் சாணக்கியமும், சூட்சுமமும் நிறைந்த ஜெயவர்த்தனவும் அவரது வலதுகரமாகச் செயற்பட்ட லலித் அதுலத் முதலியும் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து எப்படியாவது இராணுவ ரீதியில் தமிழ்மக்களின் கோரிக்கைகளையும் அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டனர். மார்கழி 26 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டினை முற்றாக நிறுத்திவிடுவது என்று பாராளுமன்றம் முடிவெடுத்தது. பாராளுமன்றத்தின் இம்முடிவினை லலித் அதுலத் முதலி அறிவித்த செய்தியாளர் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இதுகுறித்து நான் வெளியிட்ட செய்தியின் முதலாவது வசனம் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அச்செய்தி வெளியாகியிருந்தது, அரசியல் தீர்வொன்றைக் காணவே அரசு விரும்புகிறது. ஆனால் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிடுவதென்பது அதனைக் காட்டிலும் மிக முக்கியமானது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மனமுடைந்து போயினர். இது குறித்து அமிர்தலிங்கத்தின் கருத்தினையறிய நான் சென்றவேளை அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அரசியல் அரங்கிலிருந்து மிதவாதிகள் முற்றாக அகற்றப்பட்டுவிட்டார்கள் என்பதை அவர் நன்கு அறிந்துகொண்டார். மிதவாதிகளை சிங்கள அரசியல்வாதிகள் கைவிட்டு விட்டார்கள் என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் முன்னால் தம்மால் போகமுடியாது ஆகிவிட்டது என்று அவர் என்னிடம் கூறினார். அன்டன் பாலசிங்கம் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டே அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசமுடியும் என்று லலித் அறிவித்ததையடுத்து புலிகளும் தமது பதிலினை சென்னையில் அறிவித்தனர். அவர்களின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு தெரிவித்தார், "தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இராணுவ வழியில் வழங்கவே அரசாங்கம் உறுதிபூண்டிருப்பது தெரிகிறது. இதுதான் அவர்களுக்குத் தேவையென்றால், நாமும் அதற்கான பதிலை இராணுவ வழியிலேயே வழங்க ஆவலாக இருக்கிறோம். எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை எமது நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்துவோம்". 1984 இல் பலமான இராணுவக் கட்டமைப்பொன்றினை உருவாக்குவதன் மூலம் தமிழருக்கான தனிநாட்டினை உருவாக்கிவிட பிரபாகரன் உறுதிபூண்டபோது அவருடன் கூடவிருந்தவர் என்கிற வகையில் இராணுவ ரீதியில் இராணுவத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை பாலசிங்கம் முழுவதுமாக நம்பினார். இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏறத்தாள 75 வீதமான நிலப்பரப்பினைத் தமது கட்டுப்பாட்டில் புலிகளால் வைத்திருக்க முடிகிறதென்றால் அவர்கள் 1984 இல் இட்ட உறுதியான அடித்தளத்தினாலேயே இது சாத்தியமானது என்றால் அது மிகையில்லை (2005 இன் படி).
  8. முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழினச் சுத்திகரிப்பு கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களும், கொக்கிளாய் ‍ நாயாறு மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்களும் முல்லைத்தீவு மாவட்டம் மீது அரசினதும் மக்களினதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. இத்தாக்குதல்களில் 120 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இதற்குப் பழிவாங்கலாக இராணுவமும் சிங்களக் குடியேற்றக்காரர்களும் நடத்திய பழிவாங்கல்த் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு தென்னமரவாடி, அமரவயல் ஆகிய புராதனத் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழ்மக்கள் நிரந்தரமாகவே சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்கள் மீதான பழிவாங்கல்ப் படுகொலைகள் மார்கழி மாதத்திலும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டன. போராளி அமைப்புக்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி வவுனியா இராணுவ முகாமில் அடைக்கப்பட்டிருந்த 21 தமிழ் இளைஞர்களை மார்கழி 1 ஆம் திகதி வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றது இராணுவம். இராணுவக் காவலில் இருந்து தப்பிச் செல்ல எத்தனித்தபோதே தாம் அவர்களைக் கொன்றதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கு மேலதிகமாக டொலர் மற்றும் கென்ட் பண்ணைகளுக்கு அருகில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த 12 இளைஞர்களையும் இராணுவம் சுட்டுக் கொன்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒதியாமலை எனும் புராதனத் தமிழ்க் கிராமத்திற்கு மார்கழி முதாலாம் திகதி இரவு சென்ற 35 இலிருந்து 40 பேர் அடங்கிய பதவிய இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் , மலைக்காடு கோவில்ப் பகுதியில் அன்றிரவைக் கழித்து, பொழுது புலரும் வேளையில் ஒதியாமலைக் கிராமத்தைச் சுற்றிவளைத்துக்கொண்டனர். பின்னர் வீடு வீடாகச் சென்று 15 வயது முதல் 35 வயதுவரையான ஆண்களைக் கைதுசெய்தனர். சர்வதேச மன்னிப்புச் சபைக்கு உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டில் இளைஞர்களைக் கைதுசெய்தபோது அவர்களது குடும்பங்களின் முன்னிலையிலேயே அவர்களைக் கடுமையாகத் தாக்கத்தொடங்கியிருக்கின்றனர் இராணுவத்தினர். பின்னர் அவ்விளைஞர்கள், கைகள் பின்னால் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் சிலரை 25 சிறீ 6511 எனும் இலக்கத் தகடு உடைய உழவு இயந்திரத்தில் ஏற்றி கிராமத்தின் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் இராணுவத்தினர். இவ்விளைஞர்களுடன் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்களையும் இராணுவத்தினர் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களில் 27 பேர் மிகக்கடுமையான சித்திரவதைகளை அனுபவித்ததுள்ளதோடு இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகவும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பின்னர் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு மிகக் கிட்டத்திலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதே உழவு இயந்திரத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களை ஏற்றிய இராணுவத்தினர் கிராமத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று தீமூட்டியிருக்கின்றனர். மீதமாயிருந்த ஐந்து 60 வயது ஆண்களினதும் சடலங்கள் பாதி எரிந்த நிலையில் டொலர் பண்ணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. பாதி எரிந்த் நிலையிலிருந்த சடலங்களில் காணப்பட்ட ஆடைகளைக் கொண்டே கொல்லப்பட்டவர்கள் ஒதியாமலையில் இருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பது தெரியவந்திருந்தது. இக்கிராமத்திலிருந்து அன்று மட்டும் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்ட குறைந்தது 32 ஆண்களின் விபரங்களை சர்வதேச மன்னிப்புச் சபையிடம் உறவினர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒதியாமலையில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய படுகொலைகள் புலிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை. மார்கழி 4 ஆம் திகதி பதவியா பகுதியில் இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றினை புலிகள் நடத்தினர். இத்தாக்குதலில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட்ட, பழிவாங்கும் தாக்குதல்களில் இறங்கிய இராணுவத்தினர் அப்பகுதியில் வசித்து வந்த குறைந்தது 90 தமிழர்களை அன்று சுட்டுப் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும், சிறுவர்களும் முதியவர்களும் அடங்கும். காமிணி திசாநாயக்க‌ மாதுரு ஓயாவில் தான் நடத்த முயன்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தின் தோல்வியையடுத்து தனது நேரம் வரும்வரை காத்திருந்த காமிணி, தனக்கான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்திருப்பதாக எண்ணினார். நிவிட்டிகலையில் மார்கழி 3 ஆம் திகதி, பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர் நாட்டின் ஒற்றையாட்சி யாப்பினைக் காத்துக்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் நேரம் வந்துவிட்டதாக அவர் அறைகூவல் விடுத்தார். "நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும், பயங்கரவாதிகளிடமிருந்து இந்த நாட்டைக் காக்க வரும்படி அரசிடம் இருந்து அழைப்பு வந்தால், தமது கைகளில் கிடைக்கும் எந்தவொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு சண்டைக்குச் செல்லத் தயாராக இருக்கவேண்டும் . அந்த ஆயுதம் கத்தியாகவோ, மண்வெட்டியாகவோ அல்லது இரும்புப் பொல்லாகவோ கூட இருக்கலாம். நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்பட்டாலன்றி இந்த நாட்டையும் மக்களையும் காப்பதென்பது சாத்தியமாகாது" என்று கூறினார். காமிணியின் புதிய அவதாரத்தால் தான் பிந்தள்ளிவிடக்கூடாது என்று அஞ்சிய லலித் அதுலத் முதலி, போராளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். மார்கழி 8 ஆம் திகதி வட மாகாணம் முழுவதையும் 42 மணிநேர ஊரடங்குச் சட்டத்திற்குள் கொண்டுவந்து , அப்பகுதியெங்கும் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கையினை அவர் ஆரம்பித்தார். கிராமம் கீராமமாக சுற்றிவளைத்த இராணுவத்தினரும் பொலீஸாரும், வீடு வீடாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது பல இளைஞர்கள் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைகளுக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மொத்தமாக 3,000 இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்களுள் 800 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். தேடுதல் நடவடிக்கைகளின்போது பத்து இளைஞர்களை இராணுவம் கொன்றிருந்தது என்று யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுவின் அறிக்கை கூறியது. தமிழர்களுக்கெதிரான உணர்வுகள் சிங்களப் பகுதிகளில் மீண்டும் மூர்க்கமாகத் தூண்டிவிடப்பட்டது. இரத்திணபுரியில் இயங்கிவந்த தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளைச் சிங்களவர்கள் எரித்தனர். ஹட்டன் நகரிலும் இரு தமிழ்க் கடைகள் எரியூட்டப்பட்டன. மலையகத்தின் பல நகரங்களிலும் தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், பெருமளவிலானவர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகினர். கறுப்பு நீல நிறங்களில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் திருகோணமலை நகரில் தோன்றியிருந்தன. "தமிழ் ஈழம் கேட்பவர்கள் துரோகிகள்" என்று ஒரு சுவரொட்டி கூறியது. "அனைத்துத் துரோகிகளையும் திருகோணமலையினை விட்டுத் துரத்துவோம்" என்று இன்னொரு சுவரொட்டி கூறியது. "சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைபார்க்க முடியாது என்றால், தமிழர்கள் திருகோணமலையில் வேலை பார்ப்பது எப்படி?" என்று கேள்வியெழுப்பியது இன்னொரு சுவரொட்டி. வலி ஓயாவிலிருந்து தமிழர்களை இனச்சுத்திகரிப்புச் செய்துவந்த அதேவேளை, தமிழர்கள் மீதான படுகொலைகளும் அப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வந்தன. மார்கழி 6 ஆம் திகதி தமிழரின் பூர்வீகக் கிராமமான திரியாயில் 24 மணிநேர ஊரடங்கினை இராணுவம் அமுல்ப்படுத்தியது.அக்கிராமத்தில் வசித்து வந்த 1399 குடும்பங்களையும் விளையாட்டு மைதானம் ஒன்றில் கூடுமாறு ஒலிபெருக்கியில் இராணுவம் அறிவித்தது. இராணுவ அறிவிப்பை ஏற்று மைதானத்தில் கூடிய பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலை இராணுவம் மேற்கொண்டது. கடுங்காயங்களுக்கு உள்ளான நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதேவகையான தாக்குதல்கள் வேறு தமிழ்க் கிராமங்களிலும் நடைபெற்றன. பெரியகுளத்தில் 20 இளைஞர்களைக் கைதுசெய்த இராணுவம் அவர்களை வீதியோரத்தில் வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றது. 1984 ஆம் ஆண்டு மார்கழி முதல் 1985 ஆம் ஆண்டு தை வரையான காலப்பகுதியில் பின்வரும் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டனர். கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கணுக்கேணி, உத்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, செம்மலை, தண்ணிமுறிப்பு மற்றும் அளம்பில். போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளை மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலும் அரசாங்கம் தொடர்ந்து நடத்தி வந்தது. மார்கழி 12 ஆம் திகதி செய்தியாளருக்கு செவ்வியளித்த அரச பேச்சாளர், யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குச் சற்று வெளியே அமைந்திருந்த கைதடிப் பகுதியில் குறைந்தது 200 பயங்கரவாதிகளைத் தாம் கைதுசெய்திருப்பதாகக் கூறினார். ஆனால், கைதுசெய்யப்பட்ட அனைவரும் தனியார் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்களே என்று யாழ்ப்பாணம் பிரஜைகள் குழு அறிவித்திருந்தது. மன்னாரின் ஜீவோதயம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பாதிரியார் ஜெயராஜசிங்கத்தின் நினைவுத் தூபி 2003 மறுநாள், மார்கழி 13 ஆம் திகதி மெதடிஸ்த்த திருச்சபையினைச் சேர்ந்த பாதிரியார் என்.ஜெயராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டர் வண்டி மன்னாரின் முருங்கன் பகுதியூடாகச் செல்லும்போது இராணுவச் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டது. பின்னர் பாதிரியார் ஜெயராஜசிங்கம், அவரது சாரதி அப்துள் காதர் சுலைமான் மற்றும் முருங்கன் பொலீஸ் நிலையத்தில் கொன்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்த ஜேசுதாசன் ரோச் ஆகிய மூவரினதும் உடல்கள் பாதி எரிந்த நிலையில் பாதிரியாரின் காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. ஐந்து நாட்களுக்குப் பின்னர், மார்கழி 18 ஆம் திகதி மட்டக்களப்பில் ஜீப் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த எட்டுப் பொலீசாரும் அவர்களது சாரதியும் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர். மறுநாள், மார்கழி 19 ஆம் திகதி இரு அதிகாரிகளும் இரு சிப்பாய்களுமாக நான்கு இராணுவத்தினர் பதவியாவில் கண்ணிவெடியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டனர். பழிவாங்கும் தாக்குதல்களில் ஈடுபட்ட இராணுவம் நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. அதேநாள் புல்மோட்டைப் பகுதியில் இரு இராணுவத்தினர்கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் இன்னும் நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். மார்கழி 8 இலிருந்து 10 வரையான நாட்களில் தான் வட மாகாணத்தில் முடுக்கிவிட்ட தேடுதல் வேட்டை நடவடிக்கைகள் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களை நிறுத்தப் போதுமானவை அல்ல என்பதை உணர்ந்த லலித் இன்னுமொரு தேடுதல் நடவடிக்கையினை மார்கழி 19 ஆம் திகதி ஆரம்பித்தார். இராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் சுமார் ஆயிரம் இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்டனர். தனது இராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடமட்டாங்கள் முடக்கப்பட்டு வருகின்றமையினால், தாம் இனிமேல் ரொக்கெட் தாக்குதலிலும், சிறியரக எறிகணைத் தாக்குதல்களிலும், குண்டுவீச்சிலும் ஈடுபடப்போவதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. சண்டை மேலும் விஸ்த்தரிக்கப்பட்டது. பொதுமக்களின் மரணங்கள் கடுமையாக அதிகரிக்க ஆரம்பித்தன. கார்த்திகை மாதத்தின் இறுதிப்பகுதியில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டியிருந்தது. இராணுவத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த புதியவகைத் தாக்குதல்கள் போராளிகளையும் அத்தாக்குதல்களில் ஈடுபட உந்தியிருந்தது என்று என்னுடன் தனிப்பட்ட ரீதியில் பேசிய சில அதிகாரிகள் தெரிவித்தனர். லண்டனில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் இயன் ஜக் இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்களுக்குச் சென்றுவந்தார். 1984 ஆம் ஆண்டு மார்கழி 16 ஆம் திகதி அவர் எழுதிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. "உண்மையாகச் சொல்வதானால், இலங்கை இராணுவம் தனது சொந்த நாட்டிற்குள்ளேயே முற்றுகைக்கு உள்ளக்கப்பட்டு, மண்மூட்டைகளுக்கும், முட்கம்பிகளுக்கும் பின்னால் மறைந்து நடுங்கிக்கொண்டு நிற்கிறது" என்று எழுதினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.