Everything posted by ரஞ்சித்
- Maduru Oya Hill.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மாதுரு ஓயா அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய அரச இயந்திரம் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் நாயகர்கள் காமிணியும் ஜெயவர்த்தனவும் மாதுரு ஓயா பகுதியில் பிக்கு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிங்களவர்களின் அடாத்தான நிலஅபகரிப்பிற்கு அரசால் வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட கலவரங்களுக்குப் பின்னரும் ஜெயவர்த்தனவை ஆதரித்து நின்ற ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கூட மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்ட இனக்கலவரங்களினால் சர்வதேச அனுதாபத்தினைப் பெற்றுவந்த தமிழர்களுக்கு மாதுரு ஓயாவின் ஆக்கிரமிப்பை அரசு ஆதரிப்பதென்பது அவர்களது நிலையினை இன்னும் பலப்படுத்தியிருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவையும் இது ஆத்திரப்படுத்தியிருக்கும். ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இரகசியமாக, மெதுமெதுவாகவே செய்ய விரும்பியிருந்தனர். ஆனால், மகாவலி அபிவிருத்திச் சபையில் பணியாற்றிய சிலர் மிகவும் வெளிப்படையாகவும் மூடத்தனமாகவும் மிகப்பெரிய செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்ததன் மூலம் ஜெயாரின் திட்டத்தினைப் போட்டுடைத்துவிட்டனர். இது ஜெயாரின் அரசையும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியிருந்தது. புரட்டாதி 8 ஆம் திகதி தேவநாயகம் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பு அவர் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான விளைவினை ஏற்படுத்தியிருந்தது. மாதுரு ஓயாவின் சிங்கள ஆக்கிரமிப்பை மகாவலி அபிவிருத்தி அமைச்சு துரிதப்படுத்தியது. திம்புலாகலை பிக்குவை அணுகிய அதிகாரிகள், சிங்களக் குடியேற்றத்தினைத் துரிதப்படுத்துமாறு கோரினர். பிக்குவும் மிக வெளிப்படையாகவே இக்குடியேற்றதைச் செயற்படுத்தத் தொடங்கினார். அதன் ஒரு அங்கமாக தவச எனும் சிங்கள நாளிதழில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்ட திம்புலாகலை தேரை, மகவலி நீர்ப்பசணத் திட்டத்தின் மூலம் நண்மையடையப்போகின்ற காணிகளில் விவசாயம் செய்ய விரும்புவோர் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்கிற அறிவிப்பினை அந்த விளம்பரம் தாங்கி வந்தது. மேலும், நாட்டிலுள்ள அனைத்து பெளத்தமத பீடங்களின் நாயக்கர்களுக்கும் திம்புலாகலை பிக்கு அனுப்பிய கடிதத்தில் தத்தமது பகுதிகளில் இருந்து குறைந்தது இரு காணிகளற்ற விவசாயிகளையாவது தெரிவுசெய்து தருமாறு கேட்டிருந்தார். இவ்வாறு 700 காணிகளற்ற சிங்கள விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு மாதுரு ஓயாவிற்குச் சென்றார் திம்புலாகலை தேரை. இவரது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டக்களப்பு அரசாங்க அதிபரையும், ஏனைய அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்திருந்தது. தமிழர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணிகளை ஆக்கிரமித்து நின்ற 700 சிங்கள விவசாயிகளையும், பிக்குவையும் அவ்விடத்தில் இருந்து அகன்றுவிடுமாறு அரசாங்க அதிபர் கோரியபோது அவர்கள் அவரைச் சட்டை செய்யவில்லை. அரசாங்க அதிபர் பொலீஸாரின் உதவியை நாடியபோது அவர்களும் கைவிரித்து விட்டனர். ஆகவே, வேறு வழியின்றி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் கல்க்குடா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அமைச்சர் தேவநாயகத்திற்கு இதுகுறித்த கடிதம் ஒன்றினை அரசாங்கதிபர் அந்தோணிமுத்து அனுப்பிவைத்தார். தமிழர் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட திம்புலாகலைப் பிக்குவின் உருவச்சிலையினைத் திறந்துவைக்கும் போர்க்குற்றவாளி சவீந்திர சில்வா மகாவலி அபிவிருத்திச் சபையும் வெளிப்படையாகவே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. திம்புலாகலை விகாரையிலிருந்து மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு சிங்கள விவசாயிகளை ஏற்றிச்செல்ல அமைச்சின் பாரவூர்திகளை அமைச்சு அனுப்பி வைத்தது. இப்பகுதியில் அத்துமீறிக் குடியேறும் சிங்கள விவசாயிகள் வீடுகளை அமைக்கவென தடிகள், பிளாத்திக்கு துணிகள், வேயப்பட்ட ஓலைகள் மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களையும் அமைச்சகத்தின் பாரவூர்திகள் கொண்டுவந்து சேர்த்தன. இதற்கு மேலதிகமாக சீமேந்துப் பக்கெற்றுக்களும் ஏனைய பொருட்களும் அமைச்சகத்திலிருந்து இப்பகுதிக்கு ஏற்றிவரப்பட்டன. மகாவலி ஆற்றில் பணியில் ஈடுபடுத்த வரவழைக்கப்பட்ட உழவு இயந்திரங்களும், புல்டோசர்களும் மாதுரு ஓயாப் பகுதியில் சிங்களவர்கள் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் காணிகளை துப்பரவாக்கி சமப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டன. புரட்டாதி 15 ஆம் திகதி தேவநாயகத்துடன் மீண்டும் தொடர்புகொண்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து, மாதுரு ஓயாவில் அத்துமீறி நுழைந்து, தமிழர் காணிகளைக் கைப்பற்றி இருக்கும் சிங்களவர்களின் தொகை 40,000 ஆக உயர்ந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே தனது இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பினை மறுநாளே கூட்டிய தேவநாயகம் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் இந்த நிலைமையினால் மிகுந்த அதிருப்தியடைந்து வருவதாகவும் மோதல்கள் உருவாகும் சூழ்நிலையொன்று உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். மகாவலி அபிவிருத்தி அமைச்சு சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தேவநாயகம் குற்றஞ்சாட்டினார். தனது குற்றச்சாட்டினை நிரூபிக்க புகைப்பட ஆதாரங்களை அவர் காட்டினார். மகாவலி அமைச்சுக்குச் சொந்தமான பாரவூர்திகள் விவசாயிகளையும், கட்டடப் பொருட்களையும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குக் கொண்டுவந்து இறக்குவதைப் புகைப்படங்கள் காட்டின. மேலும், மகாவலி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள், ஒப்பந்தக் காரர்கள் என்று பெரும் பட்டாளமே இக்குடியேற்றத்தை செயற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருவதையும் புகைப்படங்கள் காட்டியிருந்தன. புகைப்படங்களுக்கு மேலாக இந்த செயற்பாடுகளை நேரடியாகக் கண்டவர்களும் ஊடகவியலாளர்களிடம் தமது சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டனர். மாதுரு ஓயாவில் தற்போது காணப்படும் நிலைமை அப்பகுதியில் பாரிய விழா ஒன்று நடைபெற்றுவருவது போன்று காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திம்புலாகலை விகாரைக்கு மக்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றனர். பாரவூர்திகளும், மினிவான்களும் மக்களை கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்து மாதுரு ஓயாவின் பல பகுதிகளுக்கு அம்மக்களை மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளே அனுப்பி வைப்பதோடு அம்மக்களுக்குத் தேவையான கட்டடப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். துப்புரவு செய்யப்படும் காணிகளில் மக்கள் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள அதிகாரிகளே உதவுகின்றனர். பல தனியார் அமைப்புக்கள் இம்மக்களுக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர்" என்று பொலொன்னறுவைக்கான லேக் ஹவுஸின் நிருபர் கூறினார். . திம்புலாகலை விகாரை மகவலி அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரிகளின் திரைக்குப் பின்னரான இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிய வதந்திகள் கொழும்பின் உயர்வர்க்க மட்டத்தில் பரவிவரத் தொடங்கின. மேலும் இத்திட்டத்தின் நடத்துனராகச் செயற்பட்டு வந்த ஹேர்மன் குணரட்ண மகவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்கவிடம் மாதுரு ஓயாச் சிங்கள குடியேற்றத்திற்கு இராணுவப் பாதுகாப்பினை வழங்குமாறு கோரியபோதும், இராணுவத்தினருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று கூறி காமிணி அக்கோரிக்கையினை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. குணரட்ணவிடம் பேசிய காமிணி இராணுவத்திற்குப் பதிலாக வேறு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் இத்திட்டத்தின் பிதாமகர்களில் ஒருவரான பண்டிதரட்ண, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டு ஆடிக் கலவரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்ததற்காகவும் பல தமிழர்களைக் கொன்றதற்காகவும் பதவியிலிருந்து விலக்கப்பட்ட கடற்படைவீரர்களை, சட்டவிரோதமாக நடந்துவந்த மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கேட்டுக்கொண்டதாகத் தெரிய வருகிறது. மிகுந்த கோபத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேவநாயகம் எச்சரிக்கை ஒன்றினையும் அங்கு விடுத்தார். "மீண்டுமொருமுறை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இனமோதல் ஒன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமானால், மாதுரு ஓயாவில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். எனது கோரிக்கைகுச் சாதகமான பதில் ஒன்றினை இந்த அரசாங்கத்தினால் தரமுடியாது போனால் நான் எனது பதவியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். தேவநாயகத்தின் இந்த எச்சரிக்கைகள் ஊடகங்களில் வந்ததையடுத்து ஜெயார் கோபப்பட்டார். இன்னொரு இனக்கலவரத்தையோ அல்லது தேவநாயகம் விலகிச் செல்வதையோ ஜெயாரினால் அப்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. தமிழர்கள் தனது ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு தேவநாயகமே ஜெயாருக்கு உதவிவந்தார். தேவநாயகமும், தொண்டைமானுமே தமிழர்கள் மீது ஜெயார் கருணையுடன் இருக்கிறார் என்று காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட நடிகர்களாக அன்று இருந்தார்கள். தேவநாயகத்தின் பதவி விலகலும், இன்னொரு இனக்கலவரமும் மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் தான் இருப்பதை உலகிற்குக் காட்டிவிடும் என்று அவர் அஞ்சினார். ஆகவே, தேவநாயகத்துடன் நேரடியாகப் பேசிய ஜெயார், "நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் பொறுமையாக இருங்கள்" என்று கெஞ்சினார்.
- Dimbulagala monk and army.jpg
- Dimbulagala Vihara.jpg
- Gamini-Dissanayake-1.jpg
- இரண்டாம் பயணம்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைத்து, அழித்துவிட உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் அழைப்பிற்கு வந்தவர்கள் ஓரளவிற்கு நடுநிலைமையுடன் நடந்துகொணடதுடன் அதற்குத் தேவையானளவு முக்கியத்துவத்தையும் தமது ஊடகங்களில் வழங்கியிருந்தனர். ஆனால், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மகாவலி அபிவிருத்தி அமைச்சிற்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிய, ஆனால் பலம்வாய்ந்த குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டுடனான தனிநாட்டுக்கான கோரிக்கையின் அஸ்த்திவாரத்தினை முற்றாகத் தவிடுபொடியாக்கிவிட மகாவலி அபிவிருத்தி என்கிற பெயரில் தாம் எடுத்துவரும் இரகசிய நடவடிக்கைகளை தேவநாயகத்தின் இந்த முயற்சி முறியடித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆகவே தமது இரகசியத் திட்டத்தினை துரிதப்படுத்தும் வேலைகளை அவர்கள் ஆரம்பித்தனர். மகாவலி அமைச்சில் செயற்பட்டு வந்த அதிதீவிர சிங்கள அமைப்பினால் இந்த இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இக்குழுவிற்கு திட்டமிடல்ப் பிரிவின் இயக்குநர் டி.எச். கருணாதிலக்கவும், மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்கவின் செயலாளர் ஹேமப்பிரியவும் தலைமை தாங்கினர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சில் பணியாற்றிய ஏனைய உயர் அதிகாரிகள், சர்வதேச பிரசித்தி பெற்ற சிங்களக் கல்விமான்கள் ஆகியோரும் இத்திட்டத்திற்கு உதவிகளை வழங்கிவந்தனர். தமது திட்டத்தினை செயற்படுத்த மலிங்க ஹேர்மன் குணரட்ணவை இக்குழுவினர் அமர்த்திக்கொண்டனர். அமைச்சகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எனும் பதவியும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அவருக்கு வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு கொழும்பில் அவரது வீட்டில் என்னுடன் பேசிய ஹேர்மன் குணரட்ண, தமது இரகசியத் திட்டத்திற்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்க முழு ஆதரவினையும் வழங்கியதாகக் கூறினார். ஜனாதிபதி ஜெயாரும் இத்திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கியிருந்ததாக தான் நம்புவதாகவும் அவர் கூறினார். தனது நம்பிக்கைக்கான காரணங்களாக பின்வரும் இரு விடயங்களை அவர் முன்வைத்தார். "முதலாவது காரணம், எமது இரகசியத் திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய மூன்று முக்கிய மனிதர்களும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்பட்டவர்கள்". அவர் குறிப்பிட்ட அந்த மூன்று முக்கிய நபர்கள், ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தன, ஜெயார் தனது இன்னொரு மகனாக நடத்திவந்த அமைச்சர் காமிணி திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜெயாரினால் நியமிக்கப்பட்ட பண்டிதரட்ண ஆகியோராகும். இவர்கள் மூவரும் ஜெயாரிடமிருந்து எந்த விடயத்தையும் மறைப்பதில்லை என்று அறியப்பட்டவர்கள். ஹேர்மன் குணரட்ண கூறிய இரண்டாவது காரணம், மாதுரு ஓயா சிங்கள ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யுமாறு ஜெயார் அறிவித்த அதே நாளான ஐப்பசி 6 ஆம் திகதி தனது வீட்டில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்வில் தன்னிடம் கேள்விகேட்ட தாஸ முதலாலிக்குத் காமிணி திசாநாயக்க வழங்கிய பதிலாகும். இதுகுறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம். காமிணியிடம் பேசிய தாஸ முதலாளி, "மகாவலி அமைச்சின் இரகசியத் திட்டம் குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா?" என்று வினவியிருந்தார். அதற்குப் பதிலளித்த காமிணி, "ஜனாதிபதிக்கு இத்திட்டம் தெரியும் என்பது மட்டுமல்லாமல், இத்திட்டத்தினை வெற்றிகரமாக பூரணப்படுத்த ஜனாதிபதி நிதியத்திலிருந்தும் பெருமளவு பணத்தினை அவர் வழங்க முன்வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார். பண்டிதரட்ண 1983 ஆம் ஆண்டின் கறுப்பு யூலை இனக்கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஒன்றில், பண்டிதரட்ண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த இரகசியத் திட்டத்திற்கான மூலம் விதைக்கப்பட்டது. அமைச்சகத்தில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளுக்கு இத்திட்டம் தெரியாதவகையில் மிகவும் இரகசியமான முறையில் தீட்டப்பட்டது. இரகசியத் திட்டம் இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. முதலாவது, தமீழத்திற்கான அடிப்படையினை முற்றாக அழிப்பது. இதனை அடைவதற்கு தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பினையும், ஒருமைப்பாட்டினையும் உடைக்கும் நோக்கில், தமிழர் தாயகத்தின் மாதுரு ஓயா, யன் ஓயா, மல்வத்து ஓயா ஆகிய நதிகளை அண்டிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது. மாதுரு ஓயா விவசாயக் குடியேற்றத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையே இருந்த நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்படும். யன் ஓயாக் குடியேற்றத்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு கடுமையாகச் சிதைக்கப்படும். மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்படும். திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் நிலத்தொடர்பை அறுத்தெறியும் மாதுரு ஓயா குடியேற்றத் திட்டம் திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினைச் சிதைக்கும் யன் ஓயாக் குடியேற்றம் புத்தளம் மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் மல்வத்து ஓயா குடியேற்றம் இரகசியத் திட்டத்தின் முதலாவது கட்டம் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை விலத்தியே அமுல்ப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. "இறையாண்மை கொண்ட நாட்டினை உருவாக்க" எனும் தலைப்பில் தான் எழுதிய புத்தகம் தொடர்பாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் 1990 ஆம் ஆண்டு ஆவணி 26 ஆம் திகதி, இந்த இரகசியத் திட்டத்தினை முன்னெடுத்தவர் என்கிற வகையில் ஹேர்மன் ஒரு கட்டுரையினை வரைந்திருந்தார். என்னுடன் பேசுகையில் இத்திட்டத்தின் எல்லைகள் குறித்தும் குறிப்பிட்டார் ஹேர்மன். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள் ஒவ்வொன்றிலும் 50,000 சிங்களவர்களைத் தாம் குடியேற்றத் திட்டமிட்டதாகவும், இதன்மூலம் இப்பகுதிகளின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றிவிடுவதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார். குணரட்ணவுடன் பேசும்போது அவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதனை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தனது திட்டம் வெற்றியடைய வேண்டும் என்று அவர் கொண்டிருந்த உறுதிப்பாடும், அதற்காக அவர் நேர்மையாக உழைத்த விதமும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. அவருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, "நீங்கள் எதற்காகச் சண்டை பிடிக்கிறீர்கள்?" என்று என்னைக் கேட்டார் ஹேர்மன். "தமிழர்களுக்கென்று தனியான நாட்டினை உருவாக்கவே போராடுகிறோம்" என்று நான் பதிலளித்தேன். "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினையே நாம் அழித்துவிட்டால், அதன்பிறகு தமிழீழத்திற்காக நீங்கள் போராட முடியாது, இல்லையா?" என்று அவர் கேட்டார். பின்னர் சலித்துக்கொண்டே, "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினைச் சிதையுங்கள் என்று அவர்களே எங்களிடம் கூறிவிட்டு, பின்னர் சர்வதேசத்திற்குக் காட்ட எம்மை சிறையில் அடைத்து தம்மை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். குள்ளநரிக் கூட்டம்" என்று அவர் மேலும் கூறினார். குணரட்ண உடபட 40 மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் அரசால் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாத பொலீஸ் தடுப்புக்காவல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் மீது நீணட தொடர்ச்சியான விசாரணைகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டன. தொண்டைமானின் சுயசரிதையினை நான் எழுதியது குறித்து முன்னர் கூறியிருந்தேன். இதுதொடர்பான மேலதிகத் தகவல்களை சேகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறையில் ஆரம்பத்தில் பணியாற்றியவர் என்கிற ரீதியில், ஹேர்மன் குணரட்ணவைச் சந்திக்க தொண்டைமான் என்னை அனுப்பியிருந்தார். நான் அவரைச் சந்திக்க வருவது குறித்து தொண்டைமானின் செயலாளர் திருநாவுக்கரசு ஏற்கனவே குணரட்ணவிடம் தெரிவித்திருந்தமையினால், என்னுடன் ஒளிவுமறைவின்றி அவர் பேசினார். தான் எவ்வாறு கைதுசெய்யப்பட்டேன், தொண்டைமான் தன்னை எவ்வாறு பிணையில் விடுவித்தார் என்பது குறித்த பல தகவல்களை குணரட்ண என்னிடம் கூறினார். "காலை 4 மணியிருக்கும், எனது வீட்டுக் கதவினை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்துபார்த்தால் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்க அங்கு நின்றிருந்தார். எனது வீட்டைச் சுற்றிப் பல பொலீஸார் நிற்பதும் எனக்குத் தெரிந்தது. வீட்டில் எனது புதல்விகள் மட்டுமே இருந்தனர். மாதுரு ஓயா இரகசியத் திட்டத்திற்காகவே நான் கைதுசெய்யப்படுவதாக ரொனி என்னிடம் தெரிவித்தார். நான் உடனேயே, இக்கைது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா என்று ரொனியிடம் கேட்டேன். உங்களைக் கைது செய்யச் சொல்லி என்னை அனுப்பியதே ஜனாதிபதிதான் என்று ரொனி பதிலளித்தார். அப்படியானால், காமிணி திசாநாயக்கவுக்கு இக்கைது பற்றித் தெரியுமா என்று நான் மீண்டும் கேட்டேன். நீங்கள் என்னுடன் பொலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், இவைகுறித்து விரிவாக அங்கே பேசலாம் என்று அவர் பதிலளித்தார். என்னைக் கைதுசெய்து ஜீப் வண்டியில் தள்ளி ஏற்றிய விதத்தினைக் கண்ட எனது புதல்விகள் நடுங்கிப் போயினர்" என்று குணரட்ண என்னிடம் கூறினார். பொலீஸ் நிலையத்திலிருந்து காமிணி திசாநாயக்கவையும், பண்டிதரட்னவையும் தொடர்புகொள்ள தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக குணரட்ண கூறினார். ஆனால், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிந்த நாட்களில் தனக்குப் பரீட்சயமான தொண்டைமானுடன் தன்னால் தொடர்புகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "எனது அவல நிலையினை அவரிடம் கூறினேன். எனது புதல்விகள் குறித்த எனது கவலையினைனை அவரிடம் கூறினேன். அதன்பின் உடனடியாக என்னைப் பிணையில் விடுவித்தார்கள். ஜனாதிபதியுடன் தொடர்புகொண்ட தொண்டைமான் என்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டதனாலேயே ஜெயார் என்னை பிணையில் செல்ல அனுமதித்ததாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். நான் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. அப்படியிருந்தபோதும் அவர் எனக்கு உதவினார். அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அவர் கூறினார். இரகசியத் திட்டத்தின் இரண்டாவது கட்டம், முதலாவது கட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இனப்பரம்பலினைப் பாவித்து இலங்கைக்கான புதிய மாகாண வரைபடத்தினை உருவாக்குவது. பின்வரும் நான்கு மாகாணங்களின் எல்லைகளை மீள உருவாக்குவது இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாகும். அம்மாகாணங்களாவன, வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியனவவாகும். இந்த நான்கு மாகாணங்களினதும் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஐந்தாவது மாகாணம் ஒன்றினை உருவாக்குவதே இதன் நோக்கம். இவ்வாறு உருவாக்கப்படும் புதிய மாகாணம், வட கிழக்கு மாகாணம் என்று அழைக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்படும் மாவட்டங்களாவன, 1. வடக்கு மாகாணம் : யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு 2. வட மத்திய மாகாணம் : வவுனியா, அநுராதபுரம், வலி ஓய (மணலாறு, முல்லைத்தீவு மாவட்டத்தை சிதைப்பதன் மூலம் புதிய மாவட்டமான வலி ஓய முல்லைத்தீவிலிருந்து பிரித்தெடுக்கப்படும்). 3. வட மேற்கு மாகாணம் : மன்னார், புத்தளம், குருநாகலை 4. வட கிழக்கு மாகாணம் : பொலொன்னறுவை, திருகோணமலை 5. கிழக்கு மாகாணம் : மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லைகளை இவ்வாறு மீள வரைவதன் மூலம் வட மாகாணம் மட்டுமே தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக விளங்கும். தற்போதைய வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எஞ்சிய மாவட்டங்கள் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களாக மாற்றப்படும். தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணத்தின் தென் எல்லையாக மாங்குளம் அமைந்திருக்கும். குணரட்ண தனது இரகசியத் திட்டத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார். தனது புத்தகத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் அச்சிட்டு வெளியிட்டார். தமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம் அரச மேல் மட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஆதரவு கிடைக்காது போனமையே என்று அவர் நம்புகிறார். நதிகளை அண்டி உருவாக்கப்படும் புதிய மாவட்ட எல்லைகள்
- River basin boundary.jpg
- Panditharadna.jpg
- Malwathu-Oya.png
- Yan Oya.jpg
- Maduru Oya river.jpg
- Panditharadna.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திம்புலாகலை பிக்கு - காவி உடையில் இனவாதப் பேய் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 8 ஆம் திகதி காலை என்னைத் தொடர்புகொண்ட உள்ளகத்துறை அமைச்சர் தேவநாயகத்தின் ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் என்னை அவசர விடயம் ஒன்றிற்காகச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அமைச்சரை அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன். தனது தொகுதியான கல்க்குடாவில் சிங்களக் குடியேற்றம் ஆரம்பித்துவிட்டதாகவும் இதுதொடர்பான தனது அதிருப்தியை தான் ஜெயாரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இச்செய்தியை டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் வெளியிடவேண்டும் என்றும் என்னைக் கேட்டுக்கொண்டார். கல்க்குடா அவரது வேண்டுகோள் எனக்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்தியது. இதில் எனக்கிருக்கும் சிக்கலை அவருக்கு விளங்கப்படுத்தினேன். டெயிலி நியூஸ் பத்திரிக்கை அரசுக்குச் சொந்தமான ஒரு ஊடகம் என்பதனையும், ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அது இயங்கிவருவதையும் அவருக்குப் புரியப்படுத்தினேன். பத்திரிக்கை ஆசிரியர் இவ்வாறான செய்தியொன்றினைப் பிரசுரிக்க விரும்பப்போவதில்லை என்பதுடன், அவ்வாறு பிரசுரிக்கப்படுமிடத்து அது ஜனாதிபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துவதோடு இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துவிடும். ஆகவே, அமைச்சர் தனது நிலைப்பாட்டினை பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றினூடாக வெளிப்படுத்த முடியும் என்றும், அதனை என்னால் செய்தியாக்க முடியும் என்றும் அவருக்கு ஆலோசனை வழங்கினேன். அன்று மாலையே தேவநாயகம் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றினை நடத்தினார். தனது தொகுதிற்குட்பட்ட வடமுனைப் பகுதியில் நடைபெற்றுவரும் முக்கியமான விடயம் தொடர்பாக நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தவே பத்திரிக்கையாளர்களை தான் அழைத்ததாக அவர் குறிப்பிட்டார். மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயகக்கவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கமைய மாதுரு ஓயா பகுதியில் தமிழ் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட விவசாயக் காணிகளில் தெற்கிலிருந்து வரும் சிங்கள விவசாயிகளை திம்புலாகல தேரை என்றழைக்கப்படும் சீலாலங்கார தேரை நீதிக்குப் புறம்பான முறையில் அடாத்தாகக் குடியமர்த்தி வருவதாகக் குறிப்பிட்டார். மாதுரு ஓயா குடியேற்றம் புரட்டாதி முதலாம் திகதி 700 சிங்களவர்களைத் தெற்கிலிருந்து அழைத்துவந்த திமுபுலாகலை தேரை, அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து விடுத்த வேண்டுகோளினை உதாசீனம் செய்து தொடர்ந்தும் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் கூறினார் தேவநாயகம். 1974 ஆம் ஆண்டு இதே பகுதியில் அடாத்தாகச் சிங்களவர்கள் குடியேற முயன்றபோது பொலீஸாரின் உதவியுடன் அவர்களை அங்கிருந்து அரசாங்க அதிபரினால் அப்புறப்படுத்த முடிந்தபோதும், இப்போது பொலீஸார் அரசாங்க அதிபருக்கு உதவ மறுப்பதோடு சிங்களக் குடியேற்றத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினையும் எடுத்திருப்பதாகக் கூறினார். நான் இந்த விடயம் பற்றி மேலும் தேடியபோது, அடாத்தான இச்சிங்களக் குடியேற்றத்தின் பின்னால் இருப்பது தேவநாயகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அதே மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்க என்பதுடன், அவரின் ஆசீருடன் இயங்கும் திம்புலாகலை தேரை அரசாங்க அதிபரை உதாசீனம் செய்துவருவதுடன், பொலீஸாரும் அமைச்சர் காமிணியின் சொற்படி நடப்பதையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. வடமுனைப் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாகக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பது முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பொது மேலாளர் ஹேர்மன் குணரட்ன என்பதும் எனக்குத் தெரிந்தது. மலையகத்தில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான வன்முறைகளையடுத்து பல மலையகத் தமிழர்கள் வடமுனைப்பகுதியில் அரச காணிகளில் குடியேறிவருவதாக வேண்டுமென்றே வதந்தி ஒன்று பரப்பப்பட்டது. இதனை மகாவலி அபிருத்தியமைச்சர் காமிணி திசாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார் ஹேர்மன் குணரட்ன. இதனையடுத்து அப்பகுதிகளில் உடனடியாக சிங்களவர்களைக் குடியேற்றுமாறு காமிணி அவருக்கு உத்தரவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து திம்புலாகலை தேரையினைத் தொடர்புகொண்ட ஹேர்மன், சிங்களவர்களை அப்பகுதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கோரியதுடன், இக்குடியேற்றத்திற்கான அனைத்து உதவிகளையும் மகாவலி அபிவிருத்திச் சபையே வழங்கும் என்றும் உறுதியளித்தார். அமைச்சரினதும், அமைச்சின் மேலாளரினதும் உத்தரவாதத்தினையடுத்தே திம்புலாகலை தேரை சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுத்திருந்தார். மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து வடமுனையில் இடம்பெற்றுவந்த அடாத்தான சிங்களக் குடியேற்றம் தொடர்பான கடிதம் ஒன்றினை உள்ளக அமைச்சர் என்கிற ரீதியிலும், அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியிலும் அமைச்சர் தேவநாயகத்திற்கு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய கடிதத்தின் முதற்பகுதி, இப்பகுதியில் இடம்பெற்றுவரும் குடியேற்றங்கள் தொடர்பான சரித்திரத்தை விளக்கியிருந்தது. கடிதத்தின் இப்பகுதியை பத்திரிக்கையாளர்களுக்குப் படித்துக் காட்டிய அமைச்சர் தேவநாயகம், "இப்பகுதியில் மலையகத் தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் குடியேறிவருவதாக திம்புலாகலை தேரை பரப்பி வரும் பொய்யான பிரச்சாரத்திற்கு இதன்மூலம் பதில் வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மேலும் கள்ளிச்சேனை, ஊற்றுச்சேனை ஆகியன பாரம்பரிய தமிழ்க் கிராமங்கள் என்றும் அக்கடிதத்தில் விரிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. கிராம அபிவிருத்தித் திட்டத்திற்கமைய 1958 ஆம் ஆண்டிலேயே 685 ஏக்கர்கள் உயர் நிலக் காணிகளும், வயற்காணிகளும் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததுடன் இப்பகுதிகளுக்கான நீர்ப்பாசணத் திட்டமும் நடைமுறையில் இருந்தது என்கிற விடயங்களும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. தொடர்ந்து பேசிய தேவநாயகம் நீர்ப்பாசண அமைச்சுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இத்திட்டத்தின் கீழ் 10 மலையகத் தமிழ்க் குடும்பங்களைத் தான் குடியமர்த்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 1977 ஆம் ஆண்டு தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையடுத்து இன்னும் 48 மலையகத் தமிழ்க் குடும்பங்களை மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்கவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினூடாக இப்பகுதியில் தான் குடியமர்த்தியதாக அவர் கூறினார். மேலும், இப்பகுதியில் மீதமாயிருந்த காணிகளை இதேபகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த தமிழ் விவசாயிகளுக்குத் தான் வழங்கியதாகவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் மாதுரு ஓயா நீர்ப்பாசணத் திட்டத்தின் வலதுபுற அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்பட்ட இன்னும் 600 ஏக்கர் காணிகளை 200 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் சுவீகரித்துக்கொண்டதாகவும், ஆனால் 1979 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்க கொண்டுவந்த காணி சுவீகரிப்புச் சட்டத்தின் மூலம் இக்காணிகள் இவர்களுக்கே சொந்தமாவதாகவும் கூறினார். மலிங்க ஹேர்மன் குணரட்ன (இடது) ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மலையகத் தமிழர்களை கிழக்கு மாகாணத்தில் அரசுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறுமாறு தூண்டிவருகின்றனர் என்பது அபத்தமான பொய்ப்பிரச்சாரம் என்றும் தேவநாயகம் கூறினார். மாதுரு ஓயாக் குடியேற்றத் திட்டத்தில் தமிழர்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே திம்புலாகல தேரை சிங்களவர்களை அடாத்தாகக் கொண்டுவந்து குடியேற்றிவருவதாக தேவநாயகம் பத்திரிக்கையாளர்களிடம் மேலும் தெரிவித்தார். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த காணிகளிலேயே சிங்களவர்களை பெளத்த பிக்கு தற்போது குடியமர்த்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். "தமிழருக்குச் சொந்தமான காணிகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் குடியேற முயற்சிக்குமிடத்து, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இப்பகுதியில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. நான் இதுகுறித்து ஜெனாதிபதிக்குத் தெரிவித்திருப்பதுடன், இன்னொரு இனக்கலவரம் ஏற்படுவதைத் தடுக்குமாறும் கோரியிருக்கிறேன். அவர் சரியான முடிவினை எடுப்பார் என்று நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
- Kalkudah.png
- Hermon Gunaratne.jpg
- Dimbulagala monk.jpg
- Maduru Oya scheme.png
-
இரண்டாம் பயணம்
தில்லிக்குச் செல்லும் விமானத்தை எதிர்பார்த்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமர்ந்திருந்தேன். தில்லியுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிய விமான நிலையம் இலங்கையினுடையது. பழமையானபோதும் கூட ஓரளவிற்குத் தூய்மையாக இருந்தது. நள்ளிரவு நேரமான போதும் மிகுந்த சனக்கூட்டம். வெளிநாட்டவர்கள் பலரும் அக்கூட்டத்தில் காணப்பட்டனர். இவர்களுள் இந்தியர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். பலர் வந்து செல்கிறார்கள் போலும். சற்றுத் தாமதமாக இந்தியன் எயர்வேஸ் விமானம் வந்து சேர்ந்தது. இலங்கையைச் சேர்ந்த சில ஊழியர்களே அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். பயணிகளை மரியாதையாக நடத்தியதுபோல் உணர்ந்தேன். விமானத்தில் ஏறுமுன் கெடுபிடிகளை அவர்கள் கட்டவிழ்த்துவிடவில்லை. நாட்டைவிட்டு வெளியேறுகிறவர்களை எதற்குச் சோதிக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம். விமானத்தினுள் ஏறும்போது தவறாமல் நமஸ்த்தே என்று ஒரு விமானப் பணிப்பெண் வரவேற்றாள். செயற்கையான அவளது சிரிப்பை ஏனோ ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஹெல்லோ என்று ஆங்கிலத்தில் நானும் செயற்கையாக அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு இருக்கை தேடி அமர்ந்துகொண்டேன். சிறிய விமானம், இரண்டு, இரண்டு இருக்கைகளாக இரு வரிசைகள். விமானம் நிரம்பியிருந்தது. சுமார் இரண்டரை மணிநேரத்திற்குப் பின்னர் அதே இந்திரா காந்தி விமான நைலையத்தில் இறக்கிவிட்டார்கள். சிட்னிக்கான விமானத்திற்கு இன்னும் 6 மணித்தியாலங்கள் இருந்தன. உள்வருகை சுங்க அதிகாரிகளிடம் கடவுச் சீட்டைக் கொடுத்து மீள்பறப்பிற்கான அனுமதியைப் பெறுவதற்கான வரிசையில் நின்றுகொண்டேன். எனக்கு முன்னால் ஒரு அப்பிரிக்க இளைஞன், இந்தியாவூடாக சிட்னிக்கு வருகிறான். அவனது கடவுச்சீட்டினைப் பரிசோதிக்கும் சுங்க அதிகாரிக்கு 25 இலிருந்து 30 வயதுதான் இருக்கும். அந்த ஆப்பிரிக்க இளைஞனை இந்திய அதிகாரி நடத்திய விதம் அங்கு நின்றவர்களை மனங்கோண வைத்தது. ஒருவரையொருவர் நாம் பார்த்துக்கொண்டோம். "எங்கேயிருந்து வருகிறாய்?, எங்கு செல்கிறாய்? எதற்காகச் செல்கிறாய்? எந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போகிறாய்? அங்கு படிப்பதற்கு உனக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? நீ அங்கு வேலைசெய்வதற்காகத்தான் போகிறாய் என்று நான் நம்புகிறேன், அங்கு நீ தங்கியிருக்கும் விலாசம் என்ன? எவ்வளவு பணம் கொண்டுசெல்கிறாய்? எதற்காக இந்தியாவிற்கூடாகப் பயணம் செய்கிறாய்?" என்று அடுத்தடுத்து அவனைக் கேள்விகளால்த் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தான் அந்த இந்திய அதிகாரி. அந்த இளைஞனின் பல்கலைக்கழக விபரங்களைக் காட்டுமாறு பணித்தான். அந்த ஆவணங்கள் அவனுக்குத் திருப்திகரமாக இருக்கவில்லையென்பது அவனது முகபாவனையில் இருந்து தெளிவாகியது. அருகிலிருந்த இன்னொரு அதிகாரியிடம் அவற்றைக் காண்பித்து இவை போலியானவை எனுமாப்போல் பேசிக்கொண்டான். சிறிதுநேரம் அந்த இளைஞனைக் குடைந்தெடுத்த பின் போக விட்டான். தனது நாட்டினூடாக இன்னொரு நாட்டிற்குப் பயணிக்கும் வெளிநாட்டவரை இந்தியர்கள் எவ்வளவு தூரத்திற்கு கீழ்த்தரமாக நடத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். எனது முறை வந்தது. எங்கேயிருந்து வருகிறாய் என்கிற அதே கேள்வி. கொழும்பு என்று சொன்னதும், எங்கே போகிறாய் என்று அடுத்த கேள்வி. சிட்னி என்றதும் கடவுச்சீட்டினைப் பார்த்துவிட்டு, சரி போகலாம் என்று அனுமதித்தான். விமான நிலையம் விசாலமானது என்று பலமுறை சொல்லியாயிற்று. அதிலும் ஒரு சின்னச் சிக்கல். இன்னும் 5 மணித்தியாலங்கள் இருக்கின்றன சிட்னிக்கான விமானம் வருவதற்கு. இவ்வளவு நேரம் என்ன செய்வது என்று யோசனை எழவே, சரி விமான நிலைய Wifi இனை இணைந்த்து ஏதாவது பார்க்கலாம், நேரத்தைப் போக்கலாம் என்று தோன்றியது. சரி, விமான நிலையத்தின் Wifi இனை எனது கையடக்கத் தொலைபேசியில் தேடிய போது இணைப்புக் கிடைத்தது. ஆனால் அதற்கான கடவுச்சொல் தெரியாது. ஆகவே அங்கு பணிபுரியும் அதிகாரி எவரிடமாவது கேட்கலாம் என்று தேடினால் பலர் இருக்கிறார்கள், ஆனால் எவருமே நின்று, நிதானித்து நான் கேட்பதற்குப் பதிலளிப்பார்கள் போல்த் தெரியவில்லை. ஒருவாறு அதிகாரியொருவரை அணுகி, Wifi கடவுச்சொல் எங்கெடுக்கலாம் என்று வினவினேன். "அதற்கு நீங்கள் தகவல் அறியும் நிலையத்திற்குப் போகவேண்டும், விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அது இருக்கிறது" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். விமான நிலையத்தின் பலவிடங்களில் தகவலறியும் நிலையத்திற்கான வழிகாட்டும் அம்புக்குறிகள் கீறப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் வழியே போனால் சுற்றிச் சுற்றி ஒரே இடத்திற்கு வருவது போலத் தோன்றியது. 10 - 15 நிமிடங்கள் நடந்து ஒருவாறு அந்த நிலையத்தைக் கண்டுபிடித்தேன். அங்கிருக்கும் ஸ்கானர் ஒன்றினுள் உங்களது கடவுச்சீட்டை வைத்து ஸ்கான் செய்தால் உங்களுக்கான கடவுச்சொல் ஒன்றினை அது தரும். நான்கு மணித்தியாலங்களுக்கு அது செல்லுபடியாகும். சரி, மீதி நான்கு மணித்தியாலங்களுக்குப் பொழுது போக்குக்கிடைத்துவிட்டது என்கிற சந்தோசத்தில் இடம் தேடி அமர்ந்துகொண்டு யூடியூப் பார்த்தேன். யாழில் என்ன செய்தி, சி.என்.என் என்ன சொல்கிறது என்று அலசிவிட்டு இறுதியாகக் களைத்துப்போய் பேசாமல் இருந்துவிட்டேன். நேரமாகியதும் சிட்னி செல்லும் இந்தியர்களின் கூட்டம் அப்பகுதியில் அதிகமாகியது. விமானத்தில் பயணிகளை ஏற்றும் நேரம் வந்தபோதும் கடவுச்சீட்டுக்களைப் பரிசோதித்து விமானத்தினுள் அனுமதிக்கும் நிலை திறக்கப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் விமானச் சேவையின் பணியாளர் ஒருவர் வந்தார். காத்திருக்கும் மக்களைச் சட்டை செய்யாது வேண்டுமென்றே தொலைபேசியில் யாருடனோ சத்தமாக உரையாடிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் பயணிகள் கூட்டம் தாமாகவே வரிசை ஒன்றினை ஏற்படுத்தி தமக்கருகில் பயணப் பொதிகளையும் இழுத்துவைத்துக்கொண்டனர். இவை எல்லாவற்றையும் அந்த அலுவலகர் ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டு வேண்டுமென்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடிந்ததும், "நான் இன்னும் கவுன்ட்டர் திறக்கவிலை, ஏன் இங்கு வந்து நிற்கிறீர்கள், அழைக்கும்போது வருங்கள், இப்போது உங்கள் இருக்கைகளுக்குச் செல்லுங்கள், அழைக்கும்போது வந்தால்ப் போதும்" என்று ஹிந்தியில் சத்தம் போடுவது புரிந்தது. பலர் தமது பொதிகளை வரிசையில் நின்ற இடத்திலேயே விட்டு விட்டு தமது இருக்கைகளுக்குத் திரும்பினார்கள். சிறிது நேரத்தின் பின்னர் சீக்கிய இனப் பணியாளர் ஒருவர் வந்தார். கூடவே பெண் பணியாளரும் வந்திருந்தார். அவர்களைக் கண்டபின்னர்தான் முதலாவது பணியாளரின் முகத்தில் சிரிப்பே வந்தது. பின்னர் இரு வரிசைகளில் நிற்குமாறு பயணிகளை அழைத்து கடவுச் சீட்டினை பரிசோதித்து உள்ளே அனுபினார்கள். வழமைபோலவே விமானத்தில் ஏறுமுன் எல்லைப் பாதுகாப்புப் படைவீரரின் வீரம் பயணிகள் மீது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. ஆளை விட்டால்ப் போதுமடா சாமி என்று அவர்களுக்கும் அவர்களது நாட்டிற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அதே விமானம், அதே பணிப்பெண்கள், அதேயுணவு, இதைத்தவிர அந்த விமானப் பயணம் குறித்து சொல்வதற்கு விசேடமாக எதுவும் இருக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி காலை 8 மணிக்கு சிட்னியில் வந்திறங்கினேன். அன்று மாலையே வேலைக்குச் செல்லவேண்டும். எல்லாம் பழமைக்குத் திரும்பியாயிற்று. முற்றும் ! இதனை எழுதும்படி கேட்டுக்கொண்ட நிழலிக்கும், கருத்தும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
அமெரிக்க இராணுவம் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் ஆதரவுபெற்ற இஸ்லாமியக் குழு அமெரிக்காவுக்கெதிரான தாக்குதல்களை தாம் நிறுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஈராக் அரசுக்கு அவமானம் ஏற்படுவதைத் தடுக்கவே தாம் இதனைச் செய்வதாகவும் கூறியிருக்கிறது. ஆனால், அமெரிக்கா தனது பதிலடி பற்றிய தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும், விரைவில் அது நடக்கும் என்றும், பல படி நிலைகளில் தாக்குதல் அமையும் என்றும் கூறியிருக்கிறது. ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்கள், ஈரானின் விசேட படைகளின் தளபதிகள் போன்றோர் இலக்குவைக்கப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
-
இரண்டாம் பயணம்
எனது அம்மம்மாவின் வீட்டை இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறீர்கள்!!! எப்படிச் சாத்தியம்? எதற்காக அங்கு போகவேண்டி வந்தது?
-
இரண்டாம் பயணம்
கம்பகவிற்கு நான் சென்றபோது எனது அக்காவும் கொழும்பிலிருந்து வந்திருந்தார். சித்தியின் வீட்டில் மதிய உணவை உட்கொண்டுவிட்டு பிற்பகலில் கொழும்பிற்குக் கிளம்பினோம். வத்தளையில் அக்கா இறங்கிக்கொள்ள நான் கொட்டகேனவுக்கு வந்து சேர்ந்தேன். அன்றிரவு ஜெயரட்ணம் கொழும்பில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்க ஏற்பாடு செய்திருந்தான். மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி அவனுடைய பிறந்தநாள். கொழும்பில் தன்னுடைய நண்பர் ஒருவரது திருமணத்திற்காக வந்திருந்த அவன் என்னையும் அன்றிரவு தன்னுடன் ஹோட்டலில் தங்குமாறு அழைத்திருந்தான். இரவு 8 மணியளவில் ஹொட்டேலுக்குச் சென்றேன். கிங்ஸ்பெரி என்று அழைக்கப்படும் ஐந்து நட்சத்திர விடுதி அது. 2019 ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலில் தாக்கப்பட்ட விடுதிகளில் ஒன்று. அறையில் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவுணவிற்காக சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். பல்வேறான உணவுவைகள். விரும்பியதைக் கூச்சமின்றி எடுத்துச் சாப்பிடக்கூடிய வசதி. உண்டு கொண்டிருக்கும் போது அங்கு கடமையாற்றும் பலர் நண்பனிடம் வந்து மரியாதையாகப் பேசுவதும் சுகம் விசாரிப்பதும் தெரிந்தது. அடிக்கடி இங்கு வந்துபோகிறான் என்பதும் புரிந்தது. உணவருந்திக்கொண்டே சுற்றுமுற்றும் நோட்டம் விட்டேன். சுமார் 200 அல்லது 250 விருந்தினர்கள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். ஒரு சில முஸ்லீம் குடும்பங்களும் அங்கிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குழுவாக வந்திருந்தனர். இரவுச் சாப்பாடு ஒருவருக்கு 7500 இலங்கை ரூபாய்கள். இலங்கையில் சாதாரண தொழில் செய்யும் ஒருவருக்கு ஒருவேளைச் சாப்பாட்டிற்கு இவ்வளவு தொகை செலுத்துவதென்பது நினைத்துப் பார்க்கமுடியாத விடயம். ஆனாலும், பலர் அங்கே இருந்தனர். சுமார் 9:30 அல்லது 10 மணியளவில் மீண்டும் அறைக்கு வந்தோம். பல்கனியில் இருந்தபடி காலிவீதியின் போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டே பேசினோம். இரவு 12 மணிவரை இருந்து நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, அறையில் இருந்த கேக்கினை சிறிது வெட்டி உண்டுவிட்டு தூங்கிப்போனேம். முதலாம் திகதி காலை 7 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து, வழமைபோல நண்பனுக்கு முன்னர் காலைக்கடன் கழித்து, நண்பன் ஆயத்தமாகியதும் கீழே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று முப்பது நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, குளித்துவிட்டு காலையுணவிற்கு மறுபடியும் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். நண்பனது பிறந்தநாள் குறித்து அங்கு பணிபுரிபவர்கள் நன்கு அறிந்தே இருந்தார்கள். ஆளாளுக்கு வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றார்கள். நாம் காலையுணவை உட்கொண்டு முடித்ததும் தாமே தயாரித்து வைத்திருந்த பிறந்தநாள் கேக்கினை கொண்டுவந்து, சுற்றிநின்று சிலர் வாழ்த்துப்பாட, நண்பன் கேக்கினை வெட்டினான். அங்கும் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். சிறிதுநேரம் அறைக்குச் சென்று பேசிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்று நான் கொட்டகேனவுக்குப் போனேன். மறுநாள்ப் பயணம். கொழும்பில் சில பொருட்களை வாங்கவேண்டி இருந்தமையினால், பிற்பகலில் கொட்டகேனவை சுற்றி வலம் வந்தேன். இரவானதும் நான் தங்கியிருந்த உறவினர்கள் வீட்டில் சிலநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு 10 மணியளவில் குட்டித்தூக்கம் ஒன்றிற்காக முயன்றேன், தோல்வியில் முயற்சி முடிந்தது. அதிகாலை 3 மணிக்கு விமானம். விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னராவது நிற்கவேண்டும் என்பதால் 12 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். சுங்கப் பகுதியில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. கூடவந்த சித்தப்பாவிற்கு சைகை காட்டி வழியனுப்பிவைத்து விட்டு தில்லிக்குச் செல்லும் இந்தியன் எயர்லைன் விமான அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்
- IMG_2750[1].JPG
- IMG_2751[1].JPG
-
இரண்டாம் பயணம்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான புகையிரதப் பயணம் சுவாரசியமாக அமைந்திருந்தது. பல விடயங்கள் குறித்து அலசினோம். பாடசாலை நாட்கள், நண்பர்கள், தொழில், பிள்ளைகள் என்று பல விடயங்கள். நானும் அதே புகையிரதத்தில் ஜெயரட்ணத்துடன் கொழும்பு செல்கிறேன் என்று அவரது மனைவிக்கு தெரிந்திருந்தமையினால் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொடுத்துவிடப்பட்டிருந்தது. சோறு, கோழிக்கறி, முட்டை, உருளைக்கிழங்கு என்று அருமையான வீட்டுச் சாப்பாடு. பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். எனது தாயாரின் தங்கைகளில் ஒருவர் கம்பகவில் வாழ்ந்து வருகிறார். 80 களில் கிழக்கின் சிங்களக் குடியேற்றக்கிராமமான வெலிக்கந்தைக்கு தொழில் நிமித்தம் சென்றவேளை அங்கு அவருடன் பணிபுரிந்த அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எனது சித்தி காதலித்து திருமணம் முடித்திருந்தார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தபொழுதிலும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. சித்தியின் கணவர் சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர். சிறிமா முதல் சந்திரிக்கா வரை அனைத்து சுதந்திரக் கட்சித் தலைவர்களையும் தீவிரமாக ஆதரித்து வந்தவர். சந்திரிக்கா ஆட்சியில் இருந்தகாலத்தில் அவர் குறித்துப் பேசும்போது மரியாதையாக "மேடம்" என்றே பேசுவார். அவ்வளவு விசுவாசம். 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பப்பகுதியிலும் சித்தியும் கணவரும் பதவிய, மணலாறு (வலிஓய), அத்தாவட்டுனுவெவ, சம்பத்நுவர ஆகிய சிங்களக் குடியேற்றங்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். சித்தியின் கணவர் தனது மகனை சிங்கள பெளத்தனாக வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். எக்காரணம் கொண்டு அவன் தனது தாய்வீட்டாருடன் நெருங்கிப் பழகுவதை அவர் விரும்பவில்லை. மேலும், இனப்பிரச்சினை தொடர்பான சிங்களவர்களின் நிலைப்பாட்டினை அவனுக்குப் புரியவைப்பதிலும் அவர் வெற்றி கண்டிருந்தார். இதில் சித்தியின் சொல்லிற்கு எந்தப் பெறுமதியும் இருக்கவில்லை. அவர்களின் குடும்பம் தொடர்ச்சியாக சிங்களப் பகுதிகளிலேயே வாழ்ந்துவந்ததனால், சித்தியும் நாளடைவில் தன்னை ஒரு சிங்களப் பெண்ணாகவே அடையாளப்படுத்திக்கொண்டார். குடியேற்றக்கிராமங்களில் வாழ்ந்துவந்ததனால் இராணுவத்தினருடனான பழக்கமும், அப்பகுதிகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. நாம் 90 களின் ஆரம்பத்தில் கொழும்பிற்கு வந்ததையடுத்து சித்தியும் கொழும்பு மகாவலி அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கு மாற்றலாகி வர சித்தியின் கணவரோ கஹட்டகஸ்டிகிலிய எனும் அநுராதபுரக் கிராமங்களில் ஒன்றில் கிராம சேவகராக பணியாற்றி வரலானார். சித்தியுடன் அவரது மகனும் கொழும்பில் எங்களுடன் தங்கிப் படித்துவந்தான். விடுமுறைகளுக்கு அநுராதபுரம் சென்று வரும்வேளை எனக்கும் சித்தியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். எல்லையோரக் கிராமங்களில் நடக்கும் மோதல்களில் புலிகளைக் கொன்றுவிட்டோம், ஆயுதங்களைக் கைப்பற்றிவிட்டோம் என்று அரசதரப்புச் செய்திகளை அப்படியே உண்மையென்று நம்பி என்னுடன் வந்து வாதாடுவான். வயதில் சிறியவனான அவனிடம் நான் தேவையற்ற விதமாக அரசியல் பேசுவதாக சித்தி என்னைக் கடிந்துகொள்வதுண்டு. "நீங்கள் அவனுக்கு உண்மையைச் சொல்லி வளர்த்திருந்தால் அவன் இப்படிப் பேசமாட்டான்" என்று நான் கூறுவேன். ஆனால், அவரால் அதனைச் செய்யமுடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், காலப்போக்கில் சித்தியின் கணவரின் அதிதீவிர சிங்கள பெளத்த இனவாதம் மெளனித்துப் போனது, குறைந்தது அப்படிக் காட்டிக்கொண்டார். எனது தாயாரின் சகோதரர்கள் அவரது குடும்பத்திற்குப் பெருமளவு பண உதவிகளைச் செய்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அவரது மருத்துவச் செலவுகளுக்கும் அவர்களே உதவிசெய்துவந்தனர். ஆகவே, தனது கடும்போக்கு அரசியலை எம்முடன் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கினார். ஆனால் மகனோ அவரைவிடவும் மிகத்தீவிரமான சிங்களத் தேசியவாதியாக மாறிப்போனான். எனது தாயாரின் சகோதரர்கள் வெளிநாட்டிலிருந்து அவர்களைப் பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் மனம் புண்படும் விதமாக அரசியல் பேசியிருக்கிறான். சில முறை அவன் அப்படிப் பேசுவதை அவனது தந்தையே தடுத்து, "யாருடன் பேசுகிறாய் என்பதை மனதில் வைத்துக்கொள்" என்று கூறிய சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. அவர்களே இப்போது கம்பகவில் வசித்து வருகிறார்கள். சிட்னியிலிருந்து கிளம்பும்போது சித்தியின் கணவருக்குச் சுகமில்லை என்று கேள்விப்பட்டேன். சரி, இவ்வளவு தூரம் வந்துவிட்டேன், அவரையும் ஒருமுறை பார்த்துவிட்டே வரலாம் என்று எண்ணி ஜெயரட்ணத்திடம் விடைபெற்றுக்கொண்டு கம்பகவை புகையிரதம் அடைந்தபோது இறங்கிக்கொண்டேன். புகையிரத நிலையத்திலிருந்து அரைமணிநேர பஸ் பயணம், பின்னர் ஓட்டோவில் பத்துநிமிடம் என்று பயணித்து சித்தியின் வீட்டை அடைந்தேன். 2018 இல் பார்த்ததுபோல சித்தி இருந்தார். ஆனால் கணவரோ சற்றுச் சுகயீனமுற்று இருப்பது தெரிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றினால் நடக்க அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் வரவேற்றார். ஊர்ப்புதினங்கள், தொழில், வாழ்க்கை என்று சில விடயங்கள் குறித்துப் பேசினோம். அரசியல் கடுகளவேனும் வெளியில் வரவில்லை. அதை அவரே தவிர்ப்பதுபோலத் தோன்றியது எனக்கு. மகன் திருமணம் முடித்து வேறு இடத்தில் வசித்துவருகிறான் என்று தெரிந்தது. தம்மை அடிக்கடி வந்து பார்ப்பதையே மகன் தவிர்க்கிறான் என்கிற கவலை அவர்கள் இருவரிடத்திலும் இருக்கிறது. விடைபெற்று வரும்போது என்னைக் கட்டியணைத்து வழியனுப்பினார் சித்தியின் கணவர். சிலவேளை தனது மகனை நினைத்து அவர் ஏங்கியிருக்கலாம். தனிப்பட்ட ரீதியில் அவருடன் எனக்கு மனக்கஸ்ட்டம் ஏதுமில்லை. நான் எதிர்ப்பது அவரது தீவிர சிங்கள பெளத்த மனநிலையினைத்தான். 40 வருட திருமணவாழ்வில் சிங்களவரான அவருக்கு தமிழர் தரப்பு நியாயத்தை சித்தியினால் எடுத்துக்கூறமுடியாமைக்காக அவர்மீது சற்று ஏமாற்றும் இற்றைவரை இருந்தே வருகிறது.