Everything posted by ரஞ்சித்
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இவளது செயற்பாட்டினை சட்ட ரீதியாக அணுகினால் என்ன? பிரான்ஸில் உள்ளவர்கள் இதை ஏன் முயற்சிக்கக் கூடாது? விசுகு அண்ணை, இதுகுறித்து எவருடனாவது பேசினீர்களா? அல்லது முயற்சிக்க முடியுமா? இவள் இப்படியே தொடர்வது பலரையும் மனதளவில் பாதிக்கப்போகிறது. இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள். இதை ஜனநாயகத்தைப் பேணுவோம், விமர்சனங்களுக்கு இடம்கொடுப்போம், ஆகவே அவளைப் பேச விடுங்கள் என்று எவராவது கருதினால், அவர்கள் அவள் பேசுவதைக் கேட்கவில்லையென்றே பொருள்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
ஓ, நீங்களும் இவளின் செயலினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
- Jaffna map.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்தியாவின் சமாதான முயற்சிகளை தனது இராணுவத்தினரின் நலனுக்காகப் பாவிக்க எண்ணிய ஜெயாரும், தொடர்ச்சியான தாக்குதல்களில் இறங்கிய போராளிகளும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்கள், குறிப்பாக பிரபாகரன் இந்தியாவின் இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தார். ஆகவே, இந்தியாவின் இந்தத் திடீர் மாற்றத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையினைக் கையாள்வது குறித்து ஆராய ஈழத்தேசிய விடுதலை முன்னணி - புலிகள் கூட்டமைப்பு அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபடத் தொடங்கியது. அதுபோன்றே, இந்தியாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்த நினைத்த ஜெயவர்த்தனவும், லலித்தும், இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையூடாக தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தையும், அவர்களின் கோரிக்கையான தனிநாடு அல்லது சுயாட்சி நிறைந்த பிராந்தியம் எனும் கருப்பொருளையும் முற்றாகவே சிதைத்துவிட கங்கணம் கட்டினர். தனது இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு, அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்கிக் கொடுக்க நினைத்தார் ஜெயார். யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் கடமைகளை முற்றிலுமாகக் கைவிட்டிருந்த பொலீஸார் தமது முகாம்களைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தனர். வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் பொலீஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக கவச வாகனத் தொடரணிகளில் ரோந்து புரிந்து வந்தனர். போராளிகள், இந்த ரோந்து தொடரணிகள் மீதும், இராணுவ முகாம்கள் மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் தமது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே வந்தனர். சித்திரை 10 ஆம் திகதி ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்துகொண்ட அதே நாள், புலிகள் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்திருந்தனர். இத்தாக்குதல் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலும், பாதுகாப்புத் துறையினரின் அதிகாரிகள் மட்டத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக தமிழ் மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களுக்கு ஜெயார் உத்தரவிட்டார். இது அன்று நிலவிய சூழ்நிலையினை மோசாமக்கி விட்டிருந்தது.இத்தாக்குதல்கள் போராளிகளை நோக்கி மக்களை மேலும் தள்ளிவிட்டது. பெருமளவு இளைஞர்கள் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்டதுடன், தமிழ் மக்களைக் காக்கும் வீரன் என்கிற நிலைக்குப் பிரபாகரன் மக்கள் மத்தியில் உயர்ந்துகொண்டிருந்தார். தமிழ் மக்களைக் காக்கும் நோக்கில் புலிகளுடன் இணைந்து ஏனைய போராளி அமைப்புக்களும் கண்ணிவெடித் தாக்குதல்கள் மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என்பவற்றில் ஈடுபடலாயினர். இராணுவத்தினரும், பொலீஸாரும் முகாம்களுக்குள் தொடர்ந்தும் முடக்கப்பட்டு வந்ததுடன் அவர்களின் ரோந்து அணிகள் மீது பதுங்கியிருந்து தாக்கும் செயற்பாடுகளும் போராளிகளால் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. சித்திரை 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல எத்தனித்த 27 தமிழ்ப் பொதுமக்களை கடற்படை சுட்டுக் கொன்றிருந்தது. இத்தாக்குதலுக்குப் பழிவாங்க மாத்தையா தலைமையிலான புலிகளின் அணியொன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் ரோந்து சென்ற பொலீஸ் இராணுவ வாகனத் தொடரணி மீது சித்திரை 21 ஆம் திகதி (1985) தாக்குதலொன்றினை மேற்கொண்டது. படகில் கொல்லப்பட்ட அனைவரையும் பயங்கரவாதிகள் என்று அழைத்த லலித் அதுலத் முதலி, கடற்பயணத் தடையினை மீறி எவர் சென்றாலும் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது சரியென்று பாராளுமன்றத்தில் கூறினார். ஒட்டுசுட்டான் கண்ணிவெடித் தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் பலியாகினர். தம்மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதலில் இராணுவ இறங்கியது. புலிகளின் தாக்குதல் நடைபெற்ற பிரதேசத்தைச் சுற்றிவளைத்த இராணுவம், அங்கிருந்த 24 இளைஞர்களை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றது. தம்மால் கொல்லப்பட்ட தமிழர்களை அனைவரையும் புலிகள் என்று அறிவித்த இராணுவம், கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னரான துப்பாக்கிச் சண்டையில் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது. பின்னர், அதேநாள், அப்பிரதேசத்தில் வான் ஒன்றில் பயணித்த 10 தமிழர்களை வீதியில் இறக்கிய இராணுவம், அவர்களையும் வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றது. அங்கு கொல்லப்பட்ட பத்து அப்பாவிகளும் புலிகளின் பட்டியலில் இராணுவத்தினரால் சேர்க்கப்பட்டார்கள். மறுநாளான சித்திரை 22 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பகுதியில் சென்ற இராணுவ தொடரணி மீது மாத்தையா தலைமையிலான புலிகள் அணி நடத்திய தாக்குதலில் 20 இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பலியானார்கள். சித்திரை 25 ஆம் திகதி, என்றுமில்லாதவாறு புளொட் அமைப்பு ஒரு தாக்குதலில் இறங்கியது. சிங்களப் பகுதியான மதவாச்சி பொலீஸ் நிலையம் மீது புளொட் நடத்திய தாக்குதலின் போது 12 ரைபிள்களும், 24 ஒற்றைச் சன்னத் துப்பாக்கிகளும், ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும், துப்பாக்கி ரவைகளும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இத்தாக்குதலில் சிங்களப் பொலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தேசிய புரட்சி குறித்துப் பேசிவந்த புளொட் , ஒரு சிங்களவரைக் கொன்றதற்காக சிங்கள மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது. புலேந்திரனுடன் பிரபாகரன் 1987 ல் அதேநாள், அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படை மீது ஈரோஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆறு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர். மறுநாள், சித்திரை 26 ஆம் திகதி, புலிகளின் திருகோணமலை மாவட்டத் தளபதி சந்தோசம் மாஸ்ட்டரும், புலேந்திரன் அம்மானும் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கட்டைப்பறிச்சான் பகுதியில் இராணுவ ரோந்தணி மீது தாக்குதல் ஒன்றினை நடத்தினர். கண்ணிவெடியில் அகப்பட்ட இராணுவத்தினர் பயணம் செய்த ஜீப் வண்டி சிதறியபோது, ஒரு லெப்டினன்ட் தர அதிகாரியும் ஆறு சிப்பாய்களும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடைபெற்று இருநாட்களுக்குப் பின்னர், சித்திரை 28 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருவேறு கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டன. இவற்றில் முதலாவது தாக்குதலை நடத்திய கிட்டு, ஈழநாடு பத்திரிக்கையிடம் பேசும்போது பிரபாகரனின் வழிநடத்துதலிலேயே அத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தின் கரவெட்டிப் பகுதியில், நவிண்டில் வீதியில் கண்ணிவெடி நிலத்திற்குக் கீழ் புதைக்கப்பட்டிருந்தது. "தொடரணியின் முன்னால் வரும் ஜீப் வண்டியை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்குவதென்றும் தீர்மானித்தோம். ஜீப் தாக்குதலுக்குள்ளானதும், பின்னால் வந்துகொண்டிருந்த துருப்புக் காவியில் பயணிக்கும் இராணுவத்தினர் உடனேயே வெளியில் குதித்து பதில்தாக்குதலுக்கு நிலையெடுப்பார்கள் என்று நான் அனுமானித்தோம். அவர்கள் நிலையெடுக்கக் கூடிய இடங்கள் என்று நாம் கருதிய இடங்களில் எமது போராளிகளை நிலைவைத்திருந்தோம். இராணுவத்தினர் நிலையெடுக்கும்போது அவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்குமாறு போராளிகளுக்குப் பணித்திருந்தோம். நாம் நினைத்தவாறே அனைத்தும் நடந்தது" என்று கிட்டு கூறினார். எட்டு வாகனங்கள் அடங்கிய தொடரணியின் முன்னால் வந்த ஜீப் வண்டி தாக்குதலுக்கு உள்ளானது. அதிலிருந்து எட்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். பின்னால் வந்துகொண்டிருந்த துருப்புக் காவி வாகனங்களில் பயணித்த இராணுவத்தினர் உடனடியாக வாகனங்களை விட்டிறங்கி அயலில் இருந்த தோட்டக் காணிகளில் நிலையெடுத்துத் தாக்கத் தொடங்கினர். ஆனால், அக்காணிகளில் ஏற்கனவே மறைந்திருந்த புலிகளின் தாக்குதல் அணி, இராணுவத்தினரின் பதுங்கு நிலைகளுக்குப் பின்னால் இருந்து இராணுவத்தினர் மீது மீது தனது தாக்குதலை ஆரம்பித்தது. இத்தாக்குதலில் மேலும் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மொத்தமாக 18 இராணுவத்தினர் அன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட, புலிகளின் தாக்குதல் அணி இழப்பின்றி முகாம் திரும்பியது. அதேநாள் மாலை, பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்கருகில் பதுங்கியிருந்த புலிகள், அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து வெளியே வரவிருந்த இராணுவத்தினருக்காகக் காத்திருந்தனர். வெளியே வந்த ஜீப் வண்டி மீது கிர்னேட்டுக்கள் கொண்டும், பெற்றொல்க் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடத்தினர். ஜீப் தீப்பற்றிக்கொள்ள அதில் பயணித்த நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சித்திரை 30 ஆம் திகதி, குருநகர் இராணுவ முகாமிலிருந்து கொழும்புத்துறை நோக்கிப் பயணித்து, பின்னர் அரியாலையூடாக நெடுங்குளம் வீதி வழியே வந்த இராணுவத் தொடரணியுடன் புலிகள் நேரடியான துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். கடுமையான சண்டையில் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட இராணுவத் தொடரணி பின்வாங்கிச் சென்றது.
- Prabakaran and Pulendran.jpg
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தாக்கப்பட்ட பின்னர் இன்னும் அதிகமாக இவள் தலைவர் மீதும், போராட்டம் மீதும் சேற்றை அள்ளி வார்க்கிறாள் என்று அறியக் கிடைத்தது. இப்படியானவர்கள் அடங்கப்போவதில்லை. அவள்பாட்டில் விட்டிருக்கலாம். ஒரு நாய்க்குக் கல்லெறிந்து, ஊரிலிருக்கும் நாய்களெல்லாம் குரைக்கத் தொடங்கியிருக்கின்றன. இவள் சிங்களத்தியாக இருக்கலாம். இவள் பேசும் தமிழ் கொச்சையானது. இவளுக்கும் குடு சித்தாத்துக்கும் தொடர்பிருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன், பாருங்கோ" என்று சொல்லவும், சரி பார்க்கிறேன் என்று கூறினேன். தலைவர் குறித்தும், போராளிகள், மாவீரர்கள் குறித்தும் அவதூறு பேசுவோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஓரளவிற்கு என்ன பேசுவார்கள் என்பது குறித்த அனுமானமும் எனக்கு ஓரளவிற்கு இருந்தமையினால், இவள் புதிதாக என்னதான் பேசிவிடப்போகிறாள் என்று, மனதைக் கல்லாக்கிக்கொண்டு பார்க்கத் தொடங்கினேன். இன்ஸ்ட்ரகிராம் தளமாக இருக்கவேண்டும். நேரடியாக தனது முகத்தைக் காட்டிக்கொண்டு, துணைக்கு ஒரு மூன்று அல்லது நான்கு நபர்களை நேரலையில் அழைத்து வைத்துக்கொண்டு தலைவரைப் பற்றியும், மாவீரர் பற்றியும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தூஷண வார்த்தைகளால் இடைவிடாது திட்டுகிறாள். மகிந்தவையும், சிங்கள இராணுவத்தையும் அடிக்கொருமுறை போற்றும் இவள், தமிழருக்கென்று நாடு கிடைக்கக் கூடாதென்பதை மிகவும் ஆணித்தரமாகக் கூறுகிறாள். தனது நேரலைக் கருத்துக்களை கேட்பவர்களும் தொலைபேசியில் பேசலாம் என்று கூறிவிட்டு, அப்படி வந்து அவளது கருத்துக்களை விமர்சிப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக, அவர்களின் தாயை, தங்கையை, அக்காவை வைத்து செவிகொடுத்துக் கேட்கமுடியாதளவிற்கு வைகிறாள். ஒருகட்டத்தில் "உனது தாயை....... பண்ணுவதற்கு இப்போதே ஆமிக்காரர் கொஞ்சப்பேரை அனுப்புகிறேன், பாக்கிறியாடா?" என்றும், "நீ இருக்கிற இடத்தைச் சொல்லுடா, இப்பவே மகிந்தவின்ர ஆமியை அனுப்பி உனக்கு .... அடிக்கிறேன்" என்றும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தொடர்ந்தும் பேசுகிறாள். இவளது கருத்துக்களை மறுதலித்து, இவளின் நோக்கத்தை வெளிப்படுத்த முனைந்தவர்களை உடனடியாக நேரலையில் இருந்து தடுத்து, மற்றையவர்களை விவாதத்திற்கு அழைக்கிறாள். இவளுக்கு ஆதரவாக நேரலயில் பேசும் ஒரு சிலரும் அவளைப்போன்றே தமிழர்களை ஒரு இனமாக கொச்சைப்படுத்தி வருகிறார்கள். "கருணாவைக் கூப்பிடட்டுமாடா? அவன் வந்து உங்களுக்கெல்லாம் இன்னொருக்கா ...அடிக்கச் சொல்லவாடா?" என்று இன்னொரு கருத்தாளரிடம் அட்டகாசமாகச் சொல்கிறாள். பிரான்ஸ் நாட்டின் பரீசில் இருக்கலாம் என்று நம்பப்படும் இவள் சில நாட்களுக்கு முன்னர் தன்னை எவரும் அடையாளம் காண்மாட்டார்கள் என்கிற துணிவில் லா சப்பல் எனும் பகுதியூடாக நடைபவணியில் செல்லும்போது ஒரு தமிழ் இளைஞர் இவளைப் பார்த்துவிடுகிறார். அவளருகில் சென்று "நீதானே தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திப் பேசுபவள்?" என்று கேட்கவும் அதே வைராக்கியத்துடன், "என்னடா செய்யப்போகிறாய், நான் அப்படித்தான் சொல்லுவன்டா" என்று ஆரம்பிக்கிறாள். இவர்களுக்கிடையிலான வாக்குவாதம் வீதியில் நடந்துசென்ற இன்னும் பல தமிழர்களை ஈர்க்கவே அவர்களும் அவளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இதனையடுத்து அவளைச் சுற்றிவளைத்த தமிழ் இளைஞர்கள், அவளை நோக்கி மிகுந்த ஆத்திரத்துடன் கேள்விகளை முன்வைக்க அவளும் பதிலுக்குப் பேச எத்தனிக்கிறாள். இந்தவேளையில் "என்ர அம்மா உனக்கு வேசியாடி?" என்று ஒரு இளைஞர் அவளைக் கேட்டுக்கொண்டே அவளது முகத்தில் முதலாவதாக அறைகிறார். நிலைகுலைந்து போன அவள், தனது குரலை அடக்கிக்கொண்டு, "அண்ணா, இங்க பாருங்க.." என்று தனது அகம்பாவம் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு ஒதுங்கப் பார்க்கிறாள். ஆனால், அவளை விடாது தொடர்ந்த இளைஞர்கள் மூன்று நான்கு முறை அறைகிறார்கள். பயம் பற்றிக்கொள்ளவே, வீதியில் இருந்த கடையொன்றிற்குள் நுழைய அவள் எத்தனித்தபோதும், கடை உரிமையாளரான தமிழர், "இஞ்சை வரவேண்டாம், வெளியால போ" என்று கூறி கதவைத் திறக்க மறுக்கிறார். கடை இடுக்கில் மாட்டிக்கொண்ட அவளை இளைஞர்கள் சூழ்ந்து நின்று மீண்டும் கேள்வி கேட்கின்றனர். இடையே வீதியால் சென்ற இன்னொரு இளைஞர் தான் கொண்டுவந்த முட்டையை அவள் முகத்தின்மீது எறிய, அவளது அச்சம் அதிகரிக்க ஒடுங்கியபடியே நிற்க, இரண்டாவது முட்டையும் வீசப்படுகிறது. தமிழ் இளைஞர்களிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி, "எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, அடிக்க வேணாம்" என்று வயிற்றைக் காட்டிக் கெஞ்சவும், கூட்டத்தில் இருந்த ஒரு தமிழர், "பொம்பிளையடா, அடிக்காதையுங்கோ, விடுங்கோ, சுஜி, நீ தலைவற்ற படத்தை உன்ர இன்ஸ்ட்டகிராமில் காட்டிக்கொண்டு அவரைக் கொச்சைப்படுத்துறது நிப்பாட்டு, இனிமேல் தலைவரைப் பற்றியும், போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது" என்று கேட்க, அருகிலிருந்த இளைஞர், "ஏன் அண்ணா இவளிட்டை போய்க் கெஞ்சிறியள்? இவள் செய்த வேலைக்கு ஏன் கெஞ்சுறியள்" என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். இந்தச் சம்பவத்தை அருகில் நின்ற பலரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் படமாக்கியிருக்கிறார்கள். யூ டியூப், முகப்புத்தகம் என்பவற்றில் ஒவ்வொரு கோணத்தில் இவளின் அகம்பாவம் உடைக்கப்படும் ஒளிப்படங்கள் வலம் வருகின்றன. குறிப்பு :இவள் பேசும் தமிழ் மொழியின் உச்சரிப்பு தமிழர் தாயகத்திற்குச் சொந்தமனாதல்ல. முழுக்க முழுக்க கொழும்புத் தமிழ் . அவளே, "நான் கொழும்புத் தமிழடா, உங்கட தமிழ் இல்லடா" என்றே தன்னை அறிமுகப்படுத்துகிறாள். இவளது வீடியோக்களை நான் இணைக்கவில்லை. வேண்டுமானால் தேடிப்பாருங்கள். விசுகு அண்ணை, உங்களுக்கு இதுகுறித்து ஏதாச்சும் தெரியுமோ?- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திம்புப் பேச்சுவார்த்தை முஸ்தீபுகள் 1985 ஆம் ஆண்டு வைகாசி 23 ஆம் திகதி இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை அவரது அலுவலகம் அமைந்திருக்கும் செளத் புளொக்கில் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரைச் சந்தித்து டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக செவ்வி காணவே அங்கு சென்றேன். நான் அங்கு இருந்த நேரத்தில், அறையின் கதவைத் திறந்துகொண்டு சற்றுக் குட்டையான உருவ அமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் உள்ளே எட்டிப் பார்த்தார். "மன்னிக்க வேண்டும், ஒரு இரண்டு நிமிடங்கள் தருவீர்களா?" என்று என்னிடம் கேட்டுக்கொண்ட பண்டாரி, எழுந்துசென்று அந்தக் குள்ளமான மனிதரைக் கைலாகு கொடுத்து வரவேற்றார். சில நிமிட நேரம் அவருடன் பேசிய பின்னர், "நான் உங்களைக் கொழும்பில் சந்திக்கிறேன்" என்று கூறி விடைகொடுத்தார். பின்னர், தான் அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டு பேசத் தொடங்கினார். "இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்தியத் தூதுவரே அவர். நான் இலங்கைக்குச் செல்லும்போது, அவரும் அங்கிருப்பார்" என்று என்னிடம் கூறினார். "அப்படியா, ஏன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை? நான் அவரிடமும் பல விடயங்கள் குறித்து செவ்வி காணவேண்டுமே?" என்று நான் கேட்டேன். பதிலளித்த பண்டாரி, "நீங்கள் அவரை கொழும்பில் சந்திப்பீர்கள்" என்று கூறினார். அந்தக் குள்ளமான மனிதர் வேறு யாருமல்ல. அவர்தான் வைகாசி 27 ஆம் திகதி கொழும்பிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்ட ஜே.என்.டிக்ஷீட். அதற்கு முதல்நாள் கொழும்பை வந்தடைந்த டிக்ஷீட், தனது நியமனக் கடிதத்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஹமீதிடம் கையளித்து பணியை ஆரம்பித்திருந்தார். தனது நியமனத்தை ஜெயவர்த்தனவிடமும் அவர் அன்றிரவு 9:30 மணிக்கு அவரது இல்லத்திற்குச் சென்று காண்பித்தார். அவரை முதன்முதலாக பேட்டிகண்ட செய்தியாளரும் நான் தான். மறுநாள் காலை தில்லியிலிருந்து புறப்பட்டு இலங்கை செல்லும் வழியில், திருச்சியில் இறங்கி எனது சகோதரனுடன் ஒருநாளைக் கழித்தேன். திருச்சியில் இருந்த நாளில், கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியும் எனது நண்பருமான ஒருவரைச் சந்திக்க முயன்றேன். அவர் அப்போது தமிழ்ப் போராளி அமைப்புக்கள் மீது இந்தியாவின் கட்டளைகளுக்கு அமைந்து நடக்கும் அழுத்தத்தினை கொடுக்கும் அதிகாரிகளுடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். ஆனியில், தில்லிக்குப் பயணித்த தமிழர் பிரதிநிதிகளுடன் அவரும் சென்றிருந்தார். பண்டாரியிடம் விடைபெற்று கொழும்பு செல்ல டிக்ஷீட் வந்தபோது, நான் இலங்கை தொடர்பான இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து பண்டாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். தென்னாசியாவில் சமாதான வலயம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ரஜீவ் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்று பண்டாரி என்னிடம் தெரிவித்தார். இந்தியாவின் அயல் நாடுகளுடன் சிநேகபூர்வமான உறவினை உருவாக்க ரஜீவ் முயன்றுகொண்டிருந்தார். அயல்நாடுகளுடன் கெடுபிடியான மூத்த அண்ணன் எனும் அவப்பெயரைக் களைந்துவிட ரஜீவ் முயன்றுவருவதாக கூறப்பட்டது. ஆகவே, ரஜீவின் இந்த சிந்தனையூடாகவே இலங்கையுடனான உறவும் இருக்கவேண்டும் என்று தாம் விருபுவதாக நான் சந்தித்த இந்தியர்கள் என்னிடம் கூறினார்கள். "சிறிலங்காவில் சண்டைகள் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். 28 ஆம் திகதி நான் இலங்கைக்குச் செல்லும்போது இதற்கான அடித்தளத்தினை இடும் பணிகளை ஆரம்பிப்பேன்" என்று பண்டாரி என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவர் கூறும் அடித்தள வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பதை நான் அறிவேன். பங்குனியில் அவர் முதன்முதலாக இலங்கை வந்திருந்தபோது, "இந்தியாவின் விருப்பத்தின்படி ஒழுகி நடக்க போராளிகள் ஒத்துக்கொள்கிறார்களா?" என்று நான் அவரிடம் கேட்டபோது, "அவர்களுக்கு வேறு வழியில்லை, இந்தியா சொல்வதை அவர்கள் நிச்சயம் கேட்கவேண்டும். பேச்சுவார்த்தைகள் ஊடாக தமக்குத் தேவையானதை அவர்கள் பெற்றுக்கொள்ள முயலவேண்டும்" என்று பண்டாரி என்னிடம் அன்று கூறியிருந்தார். இயல்பாகவே அடுத்ததாக அவரிடம் கேட்கவேண்டிய கேள்வியொன்று எண்ணத்தில் வந்துபோனது, "அப்படியானால், ஜெயாரும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி நடப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், அன்று அதனைக் கேட்பதை நான் தவிர்த்துக்கொண்டேன். எனது தகவல்களைத் தாங்கியவாறு டெயிலி நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது. நான் கொழும்பை வந்தடைந்தவுடன், லலித் அதுலத் முதலி எனக்கு நன்றி தெரிவித்திருந்ததாக எனது ஆசிரியர் மணிக் டி சில்வா என்னிடம் கூறினார். மேலும், டிக்ஷீட்டை இந்திய வெளியுறவகத்தில் சந்தித்து செவ்வி கண்டமைக்காகவும் மணிக் என்னிடம் நன்றி தெரிவித்தார். டிக்ஷீட் என்னைக் கண்டவுடன் அதிசயித்துப் போனார். "நான் கொழும்பு வருமுன் வெளியுறவுச் செயலாளரைச் சந்திக்க வந்தபோது, அவருடன் பேசிக்கொண்டிருந்தது நீங்கள் தானே?" என்று என்னைக் கேட்டார். அந்தச் சந்திப்பும், மட்ராஸ் கிறிஸ்ட்டியன் கல்லூரியில் நாம் இருவரும் கல்விகற்றோம் என்கிற விடயமும் எம்மிருவரையும் நெருங்கி வரப்பண்ணியிருந்தது. என்னிடம் பேசும்போது, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மிகுந்த கண்ணியத்துடன் தன்னை நடத்தியதாக டிக்ஷீட் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தீர்க்கமான உறவு ஒன்று உருவாகும் வேளையில் நீங்கள் வருகை தந்திருக்கிறீர்கள் என்று தன்னை ஹமீது வாழ்த்தியதாகவும் டிக்ஷீட் என்னிடம் கூறினார். இலங்கை தொடர்பாக இந்திரா கடைப்பிடித்த கொள்கைகள், நோக்கங்களை விடவும் ரஜீவ் காத்திரமான கொள்கைகளையும், செயற்பாடுகளையும் மேற்கொள்வார் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஹமீது டிக்ஷீட்டிடம் கூறியிருக்கிறார். இந்த நிபந்தனையுடனேயே இந்தியாவின் கோரிக்கையான போராளிகளுடன் இலங்கையரசாங்கம் நேரடியாகப் பேசவேண்டும் என்பதனை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஹமீது மேலும் கூறியிருக்கிறார். டிக்ஷீட்டுடனான முதலாவது சந்திப்பிலேயே அவர் பத்திரிக்கையாளர்களுடன் மிகவும் நட்பாகப் பழகக் கூடியவர் என்பதை அறிந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்களை எப்படி இலாவகமாகக் கையாளவேண்டும் என்கிற உத்தியையும் அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். பத்திரிக்கையாளர்கள் தன்னிடமிருந்து எதனை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்ட அவர், அவர்களைத் தனது நோக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் நன்கு தெரிந்துவைத்திருந்தார். ஜெயவர்த்தன்விடம் தனது நியமனக் கடிதத்தினைக் காண்பிக்கச் சென்றபோது, ஜெயவர்த்தனவுடன் தான் பேசிய விடயங்கள் சிலதை, "இதனை வெளியில்க் கூறவேண்டாம்" என்கிற எச்சரிக்கையுடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார் டிக்ஷீட். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, பண்டாரி நாளை இலங்கை வருகிறார். வந்தவுடன் உங்கள் அரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒழுங்குகள் பற்றிப் பேசுவார் என்று கூறியிருக்கிறார் டிக்ஷீட். மேலும், தமிழ்ப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிப்போர் குறித்த விடயங்கள் தொடர்பாகவும் பண்டாரி உங்களிடம் அறியத் தருவார் என்றும் ஜெயாரிடம் அவர் கூறியிருக்கிறார். அடுத்ததாக, ரஜீவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான உத்தியோக பூர்வமான அழைப்பினையும் பண்டாரி விடுப்பார் என்று டிக்ஷீட் கூறியிருக்கிறார். டிக்ஷீட்டிடம் பேசிய ஜெயார், ரஜீவுடனான சந்திப்பை தான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடந்தகால கசப்புணர்வுகளையும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கைகளையும் களைய ரஜீவ் முயற்சிப்பார் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்களுக்கான நடவடிக்கைகள் குறித்த செயற்திட்டத்தினை ரோ வின் இயக்குனர் சக்சேனாவே வரைந்திருந்தார். அதன் பிரதியொன்று லலித் அதுலத் முதலியுடனான சந்திப்பின் பின்னர் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தில் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள், கால அட்டவணை போன்றவை உள்ளிட்ட பல இரகசிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி என்னவெனில், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதுதான் என்று டிக்ஷீட் என்னிடம் கூறினார். எனது செவ்வியினூடாக இலங்கையரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் யுத்த நிறுத்தம் குறித்த செய்தியை இலங்கை மக்களுக்கு அறியத்தரவும், அதற்காக அவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர் எண்ணியிருந்தார்.- JN DEEP SHIT.jpg
- சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
இருக்கலாம். சிரியாவுடன் மேற்குலகு இராஜதந்திர உறவுகளை இப்போதும் பேணுகின்றனவா?- மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை
பலஸ்த்தீனத்தையும், இஸ்ரேலையும் உங்களால் எப்படி ஒரே தராசில் சமமாகப் பார்க்க முடிகிறது? மகிந்தவுக்கு வாழ்த்துச் செய்தியனுப்பியதும், அவனின் பெயரை தமது உள்ளூர் வீதியொன்றிற்கு இட்டதையும் தவிர உங்களுக்கு பலஸ்த்தீனர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கெடுதிகள் என்ன? ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பாலஸ்த்தீனத்திற்கு எதற்காக எமது போராளிகள் சென்று வந்தார்கள்? சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேல் எமக்கெதிரான இனக்கொலையில் ஆற்றிய, ஆற்றிவரும் பங்கென்ன? 1980 களின் ஆரம்பத்தைலிருந்தே இஸ்ரேல் எமக்கெதிரான இனவழிப்பில் நேரடியாகப் பங்குபற்றி வருவது உங்களுக்குத் தெரியுமா? சிங்களக் காட்டேறிகளான விசேட அதிரடிப்படையினை உருவாக்க இஸ்ரேல் வழங்கிய உதவி தெரியுமா? பத்துத் தமிழர்களைக் கொல்லுங்கள், அதில் ஒரு புலி இருப்பான் என்கிற கொள்கையினை சிங்களத்திற்குச் சொல்லிக் கொடுத்தது யார்? ஒவ்வொரு இராணுவத்தினனின் மரணத்திற்கும் பத்துத் தமிழர்களை பழிவாங்குங்கள் என்கிற கொள்கையினை இலங்கைக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? தமிழர்களின் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, அவற்றிற்குக் காவலாக இராணுவ முகாம்களை அமையுங்கள், சிங்கள் குடியேற்றக்காரர்களை ஆயுததாரிகளாக்குங்கள் என்று அறிவுரை கொடுத்தது யார்? இன்று காசாவிலும் மேற்குக்கரையிலும் நடக்கும் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்களும், ஆயுதமயமாக்கப்பட்ட யூதர்களும் உங்களுக்கு நினைவுபடுத்துவது எதனை? இன்றுவரை தமிழர்களுக்கெதிரான யுத்தத்தில் கிபிர், டோரா, கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், பயிற்சிகள் என்று சிங்கள ஆக்கிரமிப்பாளனுக்கு உதவுவது யார்? இந்த உதவிகளும், பலஸ்த்தீனன் மகிந்தவைப் பாராட்டியதும் சமனாகத் தெரிகிறதா உங்களுக்கு? புலிகள் கொடூரமானவர்கள் இல்லை. ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். பெண்களை மதிப்பவர்கள். ஆகவே ஹமாசின் கொடூரங்களுடன் புலிகளை ஒப்பிட முடியாது. ஆனால், சிங்களக்குடியேற்றங்களைக் கலைப்பதற்கு அவற்றின் மீது புலிகளும் தாக்குதல் நடத்தினார்கள். ஆயுதமயமாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக்காரர்களைக் கொன்றார்கள். பதின்ம வயது பெளத்த பிக்குகளும்ம் புலிகளால் இலக்கு வைக்கப்பட்டார்கள். இவைகூட பழிவாங்கலுக்காகவும், சிங்களக் குடியேற்றங்களைக் கலைப்பதற்காகவும் நடத்தப்பட்டவைதான். கமாஸ் அக்டோபர் 7 ஆம் திக தி தாக்குதல் நடத்தியதும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியேற்றமாக மாற்றப்பட்ட, ஆயுதமயமாக்கப்பட்ட குடியேற்றக் காரர்கள் மீது தான். ஆனால், அவர்களின் மதமும், வெறியும் ஆயுதமயமாக்கப்பட்ட யூதர்கள்மீது அட்டூழியங்களைப் புரிய தூண்டியது. கமாசும், புலிகளும் ஒன்றல்ல. ஆனால், குடியேற்றங்கள் மீதான தாக்குதல்களின் நோக்கங்கள் ஒன்றுதான். கமாசைப் பழிவாங்கவும், அழிக்கவும் பலமான இஸ்ரேல் செய்துவரும் இனவழிப்புச் சரியென்று நாம் வாதாடினால், எம்மீது நடத்தப்பட்டதைச் சிங்களவன் சரியென்று வாதாடும்போது நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விடும்.- மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை
2009 இல் வன்னியில் நடத்தப்பட்ட மனிதப் பேரவலமும், இன்று காசாவில் நடத்தப்படும் பேரவலமும் ஒப்பிடப்படுதலுக்கான காரணங்கள், 1. ஆக்கிரமிப்பாளனினால் முற்றான முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு, தம்மிடமிருக்கும் அனைத்துக் கனரக ஆயுதங்களாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டனர். 2. உணவும், அத்தியாவசிய மருந்துப்பொருட்களும் ஆக்கிரமிப்பாளனினால் அடைபட்டுப்போயிருந்த மக்களுக்கு வழங்கப்படுவது தடுக்கப்பட்டது. ஐ.நா உட்பட சர்வதேச நிவாரண அமைப்புக்களால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் கூட, ஆக்கிரமிப்பாளனினால் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடப்பட்டே அனுமதிக்கப்பட்டது. வன்னியில் வெறும் 25 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான உணவும், காசாவில் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான உணவும் உள்ளே அனுமதிக்கப்பட்டது. 3. முற்றுகைக்குள்ளான மக்கள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் அட்டூழியங்கள் வெளித்தெரியாதவாறு இருக்க முதலில் செய்தியாளர்கள் தடுக்கப்பட்டனர் அல்லது குறிவைத்துக் கொல்லப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டுக் காணமலாக்கப்பட்டனர். 4. ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அச்சுருத்தல் விடுக்கப்பட்டு கொலைக்களத்திலிருந்து அவர்கள் அகற்றப்பட்டனர். வன்னியில் இயங்கிய சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திற்கோ ஐ.நா வுக்கோ, சர்வதேச மருத்துவர் குழுவிற்கோ எம்மால் பாதுகாப்புத் தரமுடியாதென்று கூறியும், ஐ.நா அதிகாரிகள் தங்கியிருந்த பகுதிக்கு அண்மையாக குண்டுவீசியும் அவர்களை வன்னியில் இருந்து அப்புறப்படுத்தியது சிங்களம். காசாவில் வேண்டுமென்றே ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் பணியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் இஸ்ரேலிய இனக்கொலையாளிகளால் இலக்குவைத்துக் கொல்லப்பட்டார்கள். 5. ஐ.நா வினாலும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினாலும் அகதி முகாம்கள், பவைத்தியசாலைகள், யுத்த சூனிய வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் மீது தாக்குதலை நடத்தவேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அந்த அடையாளங்களைக் கொண்டே வைத்தியசாலைகள் மீதும், அகதிகள் முகாம்ம்கள் மீதும், யுத்த சூனிய வலயம் மீதும் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். காசாவில் சர்வதேச நிவாரணப் பணியாளர்கள் தமது வாகன விபரங்களை இஸ்ரேலிய இனக்கொலையாளிகளிடம் கொடுத்துவிட்டு கிளம்பியபோதே அவர்களது வாகனங்கள் அதே அடையாளங்களைக் கொண்டு இலக்குவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. காசாவில் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகளும் ஒன்றில் முற்றாகவோ அல்லது பாதியாகவோ அழிக்கப்பட்டிருப்பதுடன், பல நூற்றுக்கணக்காணோர் அங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். யுத்த சூனிய வலயத்தில் வைத்தே சர்வதேச நிவாரணப் பணியாளர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொன்றிருக்கிறார்கள். 6. வன்னி யுத்தத்திலும், காசா யுத்தத்திலும் பாலியல் வன்புணர்வுகள் யுத்தத்தில் ஒரு ஆயுதமாகப் பாவிக்கப்பட்டிருக்கின்றது. 7. மனிதாபிமான யுத்தம் என்கிற பெயரில் வன்னியில் நடந்தேறியது இனக்கொலை. காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவை அழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அப்பாவிகளை ஆயிரக்கணக்கில் கொன்றுவருகிறது இஸ்ரேல். 8. வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களை அருகிலிருந்தே சுட்டுக்கொன்றது சிங்களப் பேரினவாதம். காசாவிலும் இதுவே இன்று நடக்கிறது. வெள்ளைக்கொடியுடன் அருகே வாருங்கள் என்று கூறிவிட்டு வயோதிபப் பெண்கள், சிறுவர்கள் என்று பாரபட்சம் இன்றிச் சுட்டுக் கொல்கிறது இஸ்ரேலிய ராணுவம். எங்களைப்போன்ற, விடுதலை வேண்டிப் போராடும் ஒரு இனத்திற்கு நடக்கும் அவலத்தைக் கண்டும் காணாதது போல கடந்து சென்றுவிட வேண்டும் என்று கேட்பவர்கள், தமக்கு நடந்த கொடூரங்கள் குறித்துப் பேசும் தகுதியை இழந்து விடுகின்றனர்.- சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
உக்ரேன் ரஸ்ஸியப் போரில் இது உண்மைதான். அதாவது இறையாண்மையுள்ள நாடான உக்ரேனிற்குள் தனது படைகளை அனுப்பி ஆக்கிரமிப்பில் ரஸ்ஸியா ஈடுபடுவது. அடுத்தது, இந்தியா தனது படைகளை இலங்கைக்குள் அனுப்பியது. ஆனால், அதுகூட இலங்கையின் சம்மதத்துடன், வெளிப்படையான ஒப்பந்தம் ஒன்றிற்கூடாகத்தான் நடைபெற்றது. தமிழ்ப் போராளிகளை இந்தியாவின் முகவர்கள் என்று நீங்கள் கூறூவீர்களென்றால் உங்களின் புரிதலில் தவறு இருக்கிறதென்று அர்த்தம். இப்போது நடப்பது அதுதானே? ஹமாசும், ஹிஸ்பொள்ளாவும் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்களுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடர்பு என்ன? நான் அப்படி நினைக்கவில்லை. அடிப்படைவாத முஸ்லீம்களுக்கெதிரான நிலைப்பாடு பலருக்கும் இருக்கிறது. அதுகூடக் காரணமாக இருக்கலாம்.- சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
இல்லை, இறையாண்மையுள்ள நாடு ஒன்றின் மீது அத்துமீறி உள்நுழைந்து தாக்குவது தவறுதான். ஆனால், இதற்குப் பின்னாலுள்ள அரசியலை நீங்கள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இஸ்ரேலுக்குள் தனது முகவர்களான ஹமாஸையும், ஹிஸ்புள்ளாவையும் ஏவித் தாக்குதல் நடத்திவிட்டு, தாம் உதவியதாக ஈரான் கூறும்போது, இஸ்ரேல் நேரடியாக ஈரான் மீதோ அல்லது அதன் படைகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் சிரியா மீதோ தாக்குதல் நடத்துகிறது. உண்மை. ஆனால், சிரியாவினுள் ஈரான் நிற்பது சிரியாவைத் தளமாகக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்கத்தான் என்று இஸ்ரேல் சொல்கிறது. அதுமட்டுமல்லாமல், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை முற்றாக துடைத்தழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று கூறும் ஒரு நாடு தனக்கருகில் களம் அமைக்கும்போது, இஸ்ரேல் பேசாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு தூரத்திற்குச் சரியானதாக இருக்கும்? இதற்கான பதிலை உங்களின் இரண்டாவது கூற்றிற்கான பதிலில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.- சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
Iran has a significant military presence in Syria. At the height of its intervention between 2015 and 2018, approximately 10,000 IRGC forces and 5,000 Iranian Army members were deployed to Syria. Additionally, around 2,000 officers from the Quds Forces command an estimated 131 military garrisons, along with tens of thousands of Iran-backed Shia jihadists across regions controlled by the Syrian regime1. This presence reflects Iran’s active involvement in the Syrian civil war. Furthermore, recent events indicate ongoing tensions. For instance, in April 2024, Israeli airstrikes targeted the Iranian embassy compound in Damascus, resulting in the death of General Mohammad Reza Zahedi and other casualties2. Additionally, the United States has conducted strikes against Iran-backed groups in Syria, responding to attacks on US troops. These actions highlight the complex dynamics involving Iran, Syria, and other regional actors3. In summary, Iran maintains a substantial military footprint in Syria, with both regular forces and proxy militias actively engaged in the conflict. The situation remains fluid, and developments continue to unfold in the region. சிரியாவில் ஈரான் கணிசமானளவு இராணுவத்தினரை நிலைவைத்திருக்கிறது. குறிப்பாக கட்ஸ் மற்றும் புரட்சிகர படையணிகள் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கான முகாம்கள் சிரியாவின் தலைநகர் முதல் நாட்டின் பலவிடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, ஈரானிய தூதரகம் என்று சொல்லப்படும் ஒரு கட்டடத் தொகுதியில் அவர்கள் தங்கவைக்கப்படவில்லை என்று நிச்சயமாகக் கூறமுடியுமா? அடுத்தது, தாக்கப்பட்டது ஈரானின் தூதரகம் இல்லை, ஆனால் அக்கட்டத் தொகுதியின் இன்னொரு பகுதி. குறிவைக்கப்பட்டது ஈரானியத் தூதுவர் அல்ல, இராணுவத் தளபதி. இத்தளபதி ஈரானின் விசேட படைகளின் ஈரானுக்கு வெளியிலான செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவர். ஆகவே, இவர் சிரியாவில் நிற்பது சுற்றுலாக் கண்காட்சியில் கலந்துகொள்ள அல்ல. மாறாக தனது படைகளை நெறிப்படுத்தவே.- சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
உண்மை, இஸ்ரேல் தான் கூறுகிறது. உண்மையாக இருக்கவேண்டும் என்று இல்லை. ஆனால், ஈராக்கிலும், சிரியாவிலும் பெருமளவு ஈரானிய சிறப்புப் படையினர் களம் அமைத்திருப்பதும் உண்மைதானே? ஆகவே, ஈரானிய தூதரகம் என்று சொல்லப்படும் கட்டடத் தொகுதி ஒன்றிற்குள் அவர்களின் சிறப்புப் படைகளின் பிரிவொன்று இருக்கவும் வாய்ப்பிருக்கின்றதல்லவா? இல்லையென்று சத்தியம் செய்ய முடியுமா எவராலும்? சுலைமானி 2020 இல் கொல்லப்பட்டபோது, அவர் கூட ஈராக்கில் இயங்கும் தனது இராணுவத்தினரைச் சந்திக்கச் சென்றதாகவே கூறப்பட்டது.- சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
Israel hasn’t claimed responsibility for the attack but has argued that the target was a “military building of Quds forces” — a unit of the IRGC responsible for foreign operations. “This is no consulate, and this is no embassy,” Israel Defense Forces (IDF) spokesperson Rear Adm. Daniel Hagari told CNN.- சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி
சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி சிரியாவின் ராணுவத்திற்கு உதவவென்றும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தாக்குதல்களை செயற்படுத்தவென்றும் சிரியாவின் தலைநகரில் இயங்கிவந்த ஈரானின் கட்ஸ் படைகளின் கட்டடம் ஒன்று இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு அகப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தூதரகம் என்று அறியப்பட்ட இக்கட்டடத் தொகுதி பல கட்டடங்களைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பாகும். இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகரகர காவற்படையின் மிக முக்கிய தளபதியும், இன்னொரு படைப்பிரிவின் தளபதியும் உட்பட 7 ஈரானிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தளபதியின் நடமாட்டத்தினைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்த இஸ்ரேல், சிரியாவில் அவர் நடமாடியவேளை கொன்றிருக்கிறது. 2020 இல் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கொல்லப்பட்ட ஈரானிய மூத்த தளபதியான அல் சுலைமானியின் இழப்பிற்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்கும் ஈரானின் மிக முக்கிய தளபதி இவரென்பது குறிப்பிடத் தக்கது. இவரது படுகொலைக்குப் பழிவாங்கியே தீருவோம் என்று சூளுரைத்திருக்கும் ஈரான், இத்தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. இஸ்ரேலுடனோ அல்லது அமெரிக்காவுடனோ நேரடியான மோதலொன்றைத் தவிர்க்க விரும்பும் ஈரான், தனது முகவர்களான லெபனானின் ஹிஸ்புள்ளாக்கள், யெமெனின் ஹூத்திகள், ஈராக் - சிரியாவில் இயங்கும் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிப் படைகளைக் கொண்டு இஸ்ரேல் மீதோ அல்லது வளைகுடாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் மீதோ தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://edition.cnn.com/2024/04/02/middleeast/iran-response-israel-damascus-consulate-attack-intl-hnk/index.html- மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை
மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முற்றான முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு, செயற்கையான பட்டினிச்சாவினை எதிர்நோக்கியிருக்கும் மில்லியன் கணக்கான பாலஸ்த்தீனர்களுக்கு நிவாரணம் வழங்கவென வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சென் (World Central Kitchen) எனும் நிவாரண அமைப்பு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் பகுதியில் இயங்கி வருகிறது. அடைபட்டிருக்கும் பலஸ்த்தீனர்களின் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்திருக்கும் இவ்வேளையில், இப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணியிலேயே இப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரு வாகனங்களில் புறப்பட்ட இப்பணியாளர்கள், தமது வாகன விபரங்கள், அடையாளங்கள், செல்லுமிடம் போன்ற அனைத்து விபரங்களையும் இஸ்ரேலிய இராணுவத்திடம் அறிவித்த பின்னரே தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், தமக்கு வழங்கப்பட்ட வாகன அடையாளங்களை வைத்தே இஸ்ரேலிய விமானப்படை இவ்வாகனங்களை யுத்த சூனிய வலயம் என்று இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்ட பகுதியில் வைத்துத் தாக்கியழித்திருக்கிறது. இத்தாக்குதலில் 4 மேற்குநாட்டு பணியாளர்கள் உட்பட ஏழு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க கனேடிய பிரஜாவுரிமை பெற்ற ஒருவர், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போலந்து நாட்டவர் என சிலர் அடக்கம். இந்த நிவாரணப் பணியகத்தின் நடத்துனர் இத்தாக்குதல் குறித்துப் பேசுகையில், நாம் வழங்கிய வாகன விபரங்களைக் கொண்டே எமது பணியாளர்களை இலக்குவைத்து இஸ்ரேல் படுகொலை செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். வழமை போல இத்தாக்குதல் குறித்து தகவல் ஏதும் இல்லை, வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் கூறியிருக்கிறார். சுமார் 2.2 மில்லியன் பாலஸ்த்தீனர்களை செயற்கையான பட்டினிச் சாவிற்கு தள்ளிச் சென்றிருக்கும் இஸ்ரேல், வேண்டுமென்றே இம்மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் அளவை குறைத்து அனுமதித்து வருவதுடன், அத்தியவசியமாகத் தேவைப்படும் மருந்துப் பொருட்களையும் தடை செய்திருக்கிறது. 2008 - 2009 இல் வன்னியில் சிங்கள மிருகங்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த 420,000 தமிழர்களுக்கு வெறும் 25 வீதமான உணவுப்பொருட்களை மட்டுமே அனுமதித்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வைத்தியசாலைகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிடப் புள்ளிகளைப் பயன்படுத்தியே அவ்வைத்தியசாலைகள் மீது இலக்குவைத்து தாக்கி பல நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்ட, சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களை ஒத்தவை இத்தாக்குதல்கள். பாலஸ்த்தீன மக்கள் மீதான அப்பட்டமான இனக்கொலையில் இதுவரை இஸ்ரேலிய மிருகங்கள் 33,000 அப்பாவிகளைப் படுகொலை செய்திருக்கின்றன. இஸ்ரேலிய இனக்கொலையினை ஆதரிக்கும் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம். https://edition.cnn.com/2024/04/01/middleeast/world-central-kitchen-killed-gaza-intl-hnk/index.html- சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி
சியோனிச யூதர்களுடன் எவ்வாறு அமெரிக்க கிறிஸ்தவ சுவிசேசக அமைப்புகள் ஒன்றித்துள்ளன என்பது பற்றிய ஆழமான பார்வையும் புரிதலும் ஈழத்தமிழர்களுக்குத் தேவை. ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆழமாகப் பயணித்துவந்துள்ள கத்தோலிக்கர் இந்த விடயத்தில் ஈழத்தமிழர் தேசத்தின் தேர்ந்த கேடயங்களாகத் தொடர்ந்தும் விளங்கமுடியும். மறைந்த சிங்கராயர் அடிகளார், எஸ். ஏ. டேவிட் போன்றோர் ஆரம்பித்துவைத்த முனைப்பில் இருந்து மறைந்த மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப் வரை சுயாதீனமான தளத்தில் நின்றவாறு ஈழத் தமிழர் விடுதலையை நெஞ்சில் சுமந்து பங்காற்றிய கத்தோலிக இயக்கம் மீண்டும் இது தொடர்பில் வலுப்பெற வேண்டும். அமெரிக்காவில் சியோனிஸ்டுகள் கையாளும் அணைவுக்குழு அணுகுமுறையைத் தாமும் நகலெடுத்து அதன் மூலம் அமெரிக்காவின் இலங்கைத் தீவு தொடர்பான வெளியுறவுக்கொள்கையை ஈழத்தமிழர்களுக்குச் சார்பாக மாற்றிவிடலாம் என்ற சிந்தனை அமெரிக்காவில் வாழும் ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களிற் கணிசமானோரிடம் இயல்பான ஒரு தரகு முதலாளித்துவ மனநிலையாக நிலவிவந்துள்ளது. இந்த மனநிலைப் பீடிப்பின் தாக்கத்தினால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உன்னதமான ஒரு விடுதலை இயக்கம் இன அழிப்புப் போர் ஊடாக அழிக்கப்படுவதற்கு இவர்களும் ஒருவகையிற் காரணமாயினர் என்பது கசப்பான உண்மை. இஸ்ரேலிய யூதரும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான பிரபல ஊடகவியலாளருமான கிடியன் லெவி 2015 ஏப்ரல் 10 அன்று வோஷிங்டனில் தேசிய ஊடக அமையத்தில் ஆற்றிய உரை: அமெரிக்க கிறிஸ்தவ சியோனிசம் பற்றி அருட்திரு டொன் வாகனர் 06 மார்ச் 2022 அன்று வோஷிங்டனில் தேசிய ஊடக அமையத்தில் ஆற்றிய உரை: அதேவேளை, அமெரிக்க யூதராயிருந்தும் சியோனிசத்துக்கு எதிராகவும் மதசார்பற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களின் முற்போக்குத் தன்மையை இனங்கண்டு ஆதரிக்கக் கூடிய மனப்பாங்கைக் கொண்டவராகவும், அமெரிக்க வெளியுறவுக்கொள்கையைக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கிய சிந்தனையாளராகவும் மட்டுமல்ல உலகின் முதன்மை வெளியரங்க நுண்ணறிஞராக மிளிர்ந்து மூப்படைந்திருக்கும் நோம் சோம்ஸ்கியை ஈழத்தமிழர்கள் தகுந்த முறையில் அணுகத் தவறிய தொடை நடுங்கித்தனம் குறித்த அசை மீட்டலும் இங்கு அவசியமாகிறது. அமெரிக்கா ஏன் இஸ்ரேலின் குற்றங்களுக்கு முழுத் துணையாக இருக்கிறது என்பதற்கு ஏழு வருடங்களுக்கு முன் நுண்ணறிஞர் நோம் சோம்ஸ்கி கொடுத்த ஆழமான ஒரு விளக்கம்: ஹாமாசின் தாக்குதலைப் புரிந்து கொள்ளலாமே அன்றி, கண்டிக்க இயலாது என்று பியர்ஸ் மோர்கனுக்கு மறுத்துரைத்துப் பதிலடி கொடுத்த பலஸ்தீனருக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களைப் பதிவு செய்தவரும், நோம்ஸ்கி வழி வந்தவருமான யூதப் பேராசிரியர் நோமன் பிங்கெல்ஸ்ரைன்: 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஈழத் தமிழரைப் பீடித்துள்ள தொடை நடுங்கி நோயின் பக்க விளைவுகளைக் களைவதை விடுத்து, நோயின் மூலத்தை அறிந்து அதை மாற்றியமைப்பதே காலத்தின் தேவை. இதற்கான புரிதல்களைப் பெற்று, தொடைநடுங்கித் தனத்தை அறுத்தெறிந்து, கழிவன கழிந்த புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்படுவதற்குரிய அறிவியற் கருத்துருவாக்கம் இன்றி அடுத்த கட்டம் இல்லை. எதிர்வருங்காலத்து ஈழத்தமிழர் தலைமுறை தொடை நடுங்கிகளைப் போலச் சிந்திக்கப்போவதில்லை. அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை விமர்சிக்கும் துணிவுபெற்ற சமூக மனநிலையை மாறிவரும் உலக ஒழுங்கும் விழிப்புணர்வுபெறும் மக்கள் சமூகமும் விரைவாக ஏற்படுத்திவருகின்றன. உக்ரைன் போரோடு அமெரிக்காவின் அநீதியான தாராளவாத மேலாதிக்கம் என்ற வெளியுறவுக்கொள்கை மக்கள் மத்தியில் விரைவாக அம்பலமாகிவருகிறது. எவ்வாறு வியட்நாம் போரில் இருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட அமெரிக்க மக்கள் பரப்பில் உருவான கருத்துமாற்றம் பெரிதும் உதவியதோ, அதைப் போல தவறான அமெரிக்க வெளியுறவுக்கொள்கை தொடர்பாக அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டுவரும் கருத்துமாற்றமும் எதிர்கால மாற்றங்களை ஏற்படுத்தும். மிகப்பலமாக இவற்றை அம்பலப்படுத்திவருபவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க சியோனிசத்தை எதிர்க்கின்ற அமெரிக்க அறிஞர்களாகக் காணப்படுகின்றனர். ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போல வெளியுறவுக்கொள்கையின் தவறான தாராளவாத மேலாதிக்கத்தைக் கோட்பாட்டுரீதியாகச் சிதைத்துவருகிறார் பிரபல அமெரிக்க அரசியல் அறிஞர் மியர்ஸ்கைமர். இவரைப்போல, அமெரிக்க இராணுவ வட்டாரப் பின்னணியில் இருந்து அமெரிக்க வெளியுறவுக்கொள்கையைக் காரசாரமாக விமர்சித்து உலகளாவிய கருத்துருவாக்கத் தளத்தில் அமெரிக்கக் காலாட்படையின் முன்னாள் கேணல் டக்ளஸ் மக்ரகரும் அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவின் முன்னாள் புலனாய்வாளரும் ஈராக் தொடர்பான முன்னாள் ஐ.நா. ஆயுதப் பரிசோதகருமான ஸ்கொட் ரிற்றரும் மிகவும் பிரபலமாகியுள்ளனர். ஸ்கொட் ரிற்றர் (07 நவம்பர் 2023): கேணல் டக்ளஸ் மக்ரகர் (31 ஜனவரி 2024): இவர்களைப் பார்த்து ஆதல் உலக ஓட்டங்களைப் புரிந்து, சற்றேனும் துணிவு பெற்று, ஈழத்தமிழரின் தொடைநடுங்கி அணைவுக்குழுச் செயற்பாட்டாளர்கள் தம்மை முன்னேற்றிக் கொள்ளவேண்டும். அமெரிக்காவிலுள்ள சியோனிச இஸ்ரேல் லொபியும் சியோனிசத்துக்கு மாற்றான யூத பரோபகாரியின் நிதிமூலமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கான ஊற்றுக்களாக இருக்கையில், அதே லொபி வழிமுறையை நாமும் எமது மிகச் சொற்பமான வளங்களைப் பயன்படுத்திக் கையாண்டு மாற்றிவிடலாம் என்ற சிந்தனை, அடிப்படையிலேயே கோளாறான சிந்தனை மட்டுமல்ல, கணக்கியல் ரீதியாகத் தப்பான கணக்குமாகும். லொபி வேலைக்குப் புறப்பட்ட ஈழத்தமிழர் செயற்பாட்டாளர் கருத்துரீதியாக எதிர்லொபியாளர்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமையும் இதன் விபரீத விளைவாகியுள்ளது. இது தொடைநடுங்கித் தனத்தின் ஆபத்தான தாக்கங்களில் ஒன்று. ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மாறி மாறிக் காவடி எடுக்கவேண்டியிருந்த ஒரு துருவ உலக ஒழுங்கின் அழிவில் இருந்து ஈழத்தமிழர் விடுதலை அரசியல் புதிய படிமைக்குள் புத்தாக்கத்தோடு அடுத்த நகர்வுகளை விரிக்கவேண்டும். அமெரிக்க, இந்திய வெளியுறவுக் கொள்கைகளை விமர்சிக்கத் துணிந்த புதிய தலைமுறை ஈழத்தமிழர் செயற்பாட்டாளரின் வருகை தவிர்க்கமுடியாத வரலாற்று நியதியாகும். https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39986- சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி
[TamilNet, Sunday, 04 February 2024, 15:40 GMT] இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இன அழிப்புப் போரொன்றை ஓர் அரசு நடாத்தினால் அதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான 1948 ஆம் ஆண்டுச் சட்டத்தின் (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) ஊடாக அவ்வரசு எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை சியோனிச இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கைச் சர்வதேச நீதிமன்று நம்பகமான நீதிவரம்புக்குட்படும் (prima facie jurisdiction) குற்றச்சாட்டாக ஏற்றுக்கொண்டமை கனதியாக நிறுவியுள்ளது. இதுவரை காலமும் தமது நலன்களுக்கேற்ப அமெரிக்காவும் அதன் அணிவகுப்பும் சர்வதேசச் சட்டங்களையும் நிறுவனங்களையும் ‘விதிகளின் பாற்பட்ட சர்வதேச ஒழுங்கு’ (Rules-Based International Order) என்று விளித்துக் கட்டமைத்து வந்தன. இதற்கு இன்னொரு பெயர் தாராளவாத சர்வதேச ஒழுங்கு (Liberal International Order). இந்த ஒழுங்கு ஏற்படுத்திய ஆழமான வடுக்களில் ஒன்றே தமிழீழ மெய்நடப்பு அரசு மீதான 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு. ஒரு துருவ உலக ஒழுங்கு (unipolar world order) தனிப்பெரும் உலக ஓட்டமாகக் கோலோச்சிய காலத்தில் (1990-2017) இன அழிப்பு என்ற உச்சக் குற்றத்தை எங்கு அனுமதிப்பது, எங்கு மறுப்பது, எங்கு ஒளிப்பது என்பதை அமெரிக்கா தீர்மானித்து வந்தது. யூதர்கள் மீது நடைபெற்ற பெருங்குற்றத்தோடு ஏனைய இன அழிப்புகளை ஒப்பிட இயலாது என்ற மன நிலையை அரசியல் சியோனிஸ்டுகள் கொண்டுள்ளனர். இதனால் இந்தச் சொல்லை வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் ஒருபுறம் இயங்கிவந்தனர். மறுபுறம், மேற்குலக தாராளவாத மேலாண்மை (Liberal Hegemony) எனும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சார்ந்த அணிவகுப்பானது, தனது தேவைக்கேற்ப, சேர்பியாவுக்கு எதிராக பொஸ்னிய மக்களின் அவலத்திலும், மியான்மாருக்கு எதிராக ரொஹங்கியா மக்களின் அவலத்திலும், சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பு என்ற பார்வையில் குறித்த குற்றங்கள் எடுத்தாளப்படுவதற்கு ஏதோ ஒரு வகையில் இடமளித்தது. ஆனால், ஈழத்தமிழர் மீதான இன அழிப்பைப் பேசாப்பொருளாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது. அமெரிக்காவின் இந்த வெளியுறவுக் கொள்கைக்கு பலத்த அடியைத் தற்போது தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது. இஸ்ரேல் மீது இன அழிப்பு என்ற அடிப்படையில் வழக்குத் தொடுத்தால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது தென்னாபிரிக்காவுக்கு முன்னரே தெரிந்த ஒன்று. இருந்தபோதும், அந்தக் கோபத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை என்ற துணிவை மாறிவரும் உலக ஒழுங்கு அந்த நாட்டுக்கு வழங்கியிருந்தது. இஸ்ரேல் காசாவில் புரிவது இன அழிப்பு அல்ல என்றும், அவ்வாறான பார்வையில் தென்னாபிரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுத் தகுதியற்றது (meritless) என்றும் கருத்து வெளியிட்ட அமெரிக்காவுக்கு அந்தக் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை சர்வதேச நீதிமன்று ஏற்றுக்கொண்டுள்ளமை, ‘விதிகள்-சார்ந்த சர்வதேச ஒழுங்கு’ என்ற கட்டுக்குள் இன அழிப்பைத் தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டிய சர்வதேச நீதி இனிமேலும் முடக்கப்பட முடியாதது என்பதை முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லிவைத்துள்ள மகத்தான நகர்வாகும். கனடா நாட்டின் மொன்றியலில் இருந்து பலஸ்தீனிய பகுப்பாய்வாளர் மொயின் ரபானி 2024 ஜனவரி 27 அன்று யூரியூப் ஒளியலை நிலையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்: உலக ஒழுங்கு மாறிவருவதால் ஏற்பட்டுள்ள சூழலில் தனது நலன் சார்ந்த பலப் பரீட்சையாக மட்டும் தென்னாபிரிக்கா இந்த வழக்கை முன்னெடுக்கவில்லை. உண்மையில், இதற்கான நெறியமைக்கும் முன்தீர்ப்பு (precedent setting) மாற்றம் – அதாவது சர்வதேசச் சட்டத்தில் வழமைச் சட்டமாக (customary law) மாறிய நிகழ்வு – கம்பியா என்ற சிறிய ஆபிரிக்க நாடு பதினோராயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் மியன்மார் அரசு மீது ரொஹிங்யா மக்கள் மீது மியன்மார் இராணுவம் புரியும் இன அழிப்புத் தொடர்பாகத் தொடுத்த வழக்கில் அனைத்து அரச தரப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாக சர்வதேச சட்டம் வழங்கும் Erga Omnes partes என்ற கடப்பாட்டை நிறைவேற்றும் பொறுப்பு என்ற அடிப்படையில், ஒரு முக்கிய மைற்கல் நிகழ்வாக, நான்கு வருடங்களுக்கு முன்னர் 2020 ஜனவரி 23 அன்று நிறுவப்பட்டுவிட்டது. ரொஹிங்யா இன அழிப்பு வழக்குத் தொடர்பான 23 ஜனவரி 2020 அல் ஜஷீரா ஒளிபரப்பு நிகழ்ச்சியிலிருந்து: TamilNet article (23 December 2019): Tamils learning lessons from ICJ-case against Myanmar, ICC-investigation on Israel மியான்மார் மீது கம்பியாவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அடுத்ததாக பலம் பொருந்திய இஸ்ரேல் மீது ஆபிரிக்கக் கண்டத்தின் முக்கிய நாடான தென்னாபிரிக்கா அதே நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் சர்வதேசச் சட்டம் சார்ந்த இந்தப் படிமை மாற்றம் (paradigm-shift) கெட்டியாகியுள்ளது. அது மட்டுமல்ல, குறித்த நகர்வுக்கான அறம் நெல்சன் மண்டேலாவின் நிலைப்பாட்டோடு தொடர்புபட்ட விடுதலை அரசியலின் நீட்சியுமாகும் என்பது குறிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது. பலஸ்தீனம் விடுதலை பெறாமலும், கிழக்குத் தீமோர், சூடான் உள்ளிட்ட உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் சிக்கல்கள் தீர்த்துவைக்கப்படாமலும், தென்னாபிரிக்க விடுதலை முற்றுப்பெறாது என்று நெல்சன் மண்டேலா 1997 இல் வெளிப்படுத்தியிருந்த நிலைப்பாடு இதற்கான சான்று: “But we know too well that our freedom is incomplete without the freedom of the Palestinians; without the resolution of conflicts in East Timor, the Sudan and other parts of the world.” (மூலம்: 04 டிசம்பர் 1997 - Address by President Nelson Mandela at International Day of Solidarity with Palestinian People, Pretoria) இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான பின் அமெரிக்காவுக்கு நெல்சன் மண்டேலா சென்றிருந்தபோது, 11 பெப்ரவரி 1990 அன்று மேற்கொண்ட வெளிப்படுத்தலும் இத்தோடு ஒருசேர நினைவுபடுத்தி நோக்கப்படவேண்டியது: ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப் போரை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு மனிதாபிமான அவலம் என்றும், இரண்டு தரப்புகள் இழைத்த சர்வதேசக் குற்றங்கள் என்றும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் மட்டுப்படுத்தியது. அதே அமெரிக்கா, பலஸ்தீனத்தின் காசா மீதான இன அழிப்புப் போர் தொடர்பாகவும் ஐ.நா. பாதுகாப்புச்சபையை வீற்றோ மூலம் முடமாக்கிவந்துள்ளது. இந்தப் பின்னணியில் தான், மறைந்த நெல்சன் மண்டேலாவின் வழிவந்த தென்னாபிரிக்கா எந்தவொரு இஸ்லாமியத் தேச அரசும் செய்ய முன்வராத அளப்பரிய துணிவோடும் ஆற்றலோடும் உலக மனச்சாட்சியை ஆழமாகத் தொடும் தனது நகர்வை சர்வதேச நீதிமன்றில் 2023 டிசம்பர் 29 ஆம் நாள் முன்னெடுத்தது. ஆபிரிக்க நோக்கு நிலையில் இருந்து இஸ்லாமிய நாடுகளை நோக்கி முன்வைக்கப்படும் ஒளியலைப் பார்வை ஒன்று வருமாறு: South Africa's application instituting proceedings against Israel at ICJ இதன் விளைவாக, 2024 ஜனவரி 26 அன்று வெளியான இடைக்கால நடவடிக்கைகள் (provisional measures) தொடர்பான சர்வதேச நீதிமன்றின் தீர்ப்போடு தென்னாபிரிக்காவின் வழக்கு இன அழிப்புக் குற்றங்களை அணுகும் உலகளாவிய சட்ட அடிப்படையில் விசாரணைக்குத் தேவையான நம்பத்தக்க இன அழிப்புக் குற்றச்சாட்டாகக் (plausible genocide) கையாளப்பட்டு தொடர்ந்தும் விசாரிக்கப்படும் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ICJ verdict on Provisional Measures இவ்வாறு சர்வதேச சட்டத்தில் இன அழிப்புத் தொடர்பான படிமை மாற்றம் ஏற்படுகையில், சர்வதேச அரசியலில் ஏற்படுத்தப்பட வேண்டிய படிமை மாற்றம் தொடர்பான ஈழத்தமிழர் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கைத் தீவில் ‘இரண்டு-அரசுத் தீர்வு’ (Two-State Solution) என்ற விடயத்தை இந்தியாவோடு சேர்ந்து அமெரிக்கா பேசாப்பொருளாக்கியது ஏற்கனவே தெரிந்த உண்மை. ஒரு துருவ உலக ஒழுங்கின் உச்சத்தின் போது “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்றால் ஒன்றில் விடுதலைப் புலிகளே தாமாக தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுமாறு நிர்ப்பந்திக்கப்படவேண்டும் அன்றேல் அவர்கள் அழியவேண்டும் என்று பிராந்திய வல்லாதிக்கமும் உலக வல்லாதிக்கமும் ஒத்திசைந்து செயற்பட்டன. பலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யசீர் அரபாத்துடன் இஸ்ரேல் 1993 ஆம் ஆண்டு உடன்படவேண்டியிருந்த ஒஸ்லோ உடன்படிக்கைகளை இஸ்ரேல் தனது நகர்வுகள் மூலம் ஆப்பு வைத்து மடைமாற்றம் செய்தது. அதே போன்ற மடைமாற்றத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சமாதான நடவடிக்கை திணிக்க முயன்றபோது, அதை மிக நுட்பமாக மறுத்து இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை (ISGA) என்ற திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். Tigers release proposal for Interim Self Governing Authority (01 November 2003) LTTE issues Communiqué in Oslo (09 June 2006) TamilNet releases LTTE documents of 2006 talks (31 December 2011) ஒஸ்லோ உடன்படிக்கையை எப்படித் தான் அமெரிக்க உதவியுடன் தடுத்துக்கொண்டதாக பந்தய ஓட்டக் குதிரையின் வாயிலிருந்து நேரடியாக வெளிப்பட்ட சாட்சியம் போல பெஞ்சமின் நேத்தன்யாகு 2001 ஆம் ஆண்டு சொல்லியது: இதைப்போலவே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஒஸ்லோ பேச்சுவார்த்தையை மிலிந்த மொராகொட போன்றோர் அமெரிக்க உறவோடு ஒருதலைப் பட்சமாக மடைமாற்றம் செய்தனர். Wikileaks US Cable: Ranil Wickramasinghe tilts towards US, Moragoda's startling proposal to U.S. officials (29 May 2003) ஜோர்ஜ் புஷ் தலைமயிலான அமெரிக்காவினதும், சோனியா காங்கிரஸ் தலைமையில் மன்மோகன் சிங் 2004 ஆம் ஆண்டு பிரதமராகிய போதான தீக்ஷிற் மீள்வருகையுடனான இந்தியாவினதும் ஒன்றித்த ஆசி இதற்கு அடித்தளமிட்டது. இதன் விளைவான முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் பின் 14 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழருக்கான அரசியற்தீர்வு எப்போதோ கிழிந்து உக்கிப்போன 13 ஆம் திருத்தத்தில் மட்டுமே இன்றும் தொங்குவதாக இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் – அவை இணைந்து இயங்கினாலும் சரி தனித்தனியே இயங்கினாலும் சரி – போதித்து வருகின்றன. இதிலே பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தற்போதைய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜய்சங்கர் (தீஷித்தோடு 1987 இல் கடமையாற்றியவர்) ஈழத்தமிழர் தொடர்பாகக் கையாளும் வெளியுறவுக்கொள்கையும் –காங்கிரஸ் விட்ட அதே வழியில் பயணித்து – ஈழத்தமிழர்களுக்குப் பாதகமாகச் செயற்பட்டுவருகிறது. இந்தப் பின்புலத்தில், எவ்வாறு பலஸ்தீன மக்களுக்கான வாக்குறுதியாக ஐ.நா. வில் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு-அரசுக் கொள்கை ஒருதுருவ உலக ஒழுங்கில் வெற்றுப் பேச்சாக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுத், திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் பலஸ்தீனர்களின் தாயகம் சூறையிடப்படுகிறதோ, அதைப் போல, தமிழீழ மெய் நடப்பு அரசு அழிக்கப்பட்ட பின் ஈழத் தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படைகள் சிதைக்கப்பட்டுவருகின்றன. பலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சிதைத்து இரண்டு இயக்கங்களை பெரும் பிளவாக்கி மோதவிட்ட சூழ்ச்சியை எவ்வாறு இஸ்ரேல் செய்து முடித்ததோ அதைப்போல தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் உச்ச நிலையிலும் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை இஸ்ரேல் வழங்கியது. ஏதோ, முள்ளிவாய்க்கால் தொடர்பாக இஸ்ரேல் இலங்கையிடமிருந்து கற்றுக்கொண்டு காசாவில் இன அழிப்புப் போரை முன்னெடுப்பதாகச் சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். உண்மை அதுவல்ல. மாறாக, முள்ளிவாய்க்காலைத் தனக்குத் தேவையான முன்னோடிப் பரிசோதனைக் களமாக இலங்கையூடாக இஸ்ரேல் பயன்படுத்திக்கொண்டது என்பதே நடைமுறையில் நடந்தேறிய விடயம். அதுமட்டுமல்ல, இலங்கை அரசு ஆரம்ப காலத்தில் இருந்து இஸ்ரேல் மாதிரியை ஈழத்தமிழர் தொடர்பாக நகலெடுத்துப் பின்பற்றிவருகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஜோன் பில்ஜர் (1939–2023) போன்ற ஒரு சில உலக ஊடகவியலாளர்கள் இதை 2009 ஆம் ஆண்டிலேயே எடுத்துச் சொல்லியிருந்தனர். Tamils need to be heard - John Pilger (17 May 2009) இன்றுவரை மத்திய கிழக்குத் தொடர்பாகப் பேசாப் பொருளாயிருந்த இரண்டு-அரசுத் தீர்வு என்பது தற்போது மீண்டும் உலகளாவிப் பரவலாகப் பேசப்படும் பேசுபொருளாகியுள்ளது. இதைப் போல ஈழத்தமிழர் தேசம் குறித்தும் இரண்டு அரசுத் தீர்வு என்பது மீண்டும் பேசுபொருளாக்கப்படவேண்டும். ஒரு துருவ உலக ஒழுங்கு நலிவடைந்து பல்துருவ ஒழுங்கு உருவாகிவரும் சூழலில் அமிலப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சர்வதேசச் சட்டமும் (International Law) உலக மக்களின் கருத்தை உதறித்தள்ளிவிடமுடியாது கருத்திற்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு திண்டாட்டத்துக்கு உள்ளாகியுள்ள சர்வதேச அரசியலும் (international politics) படிமை மாற்றத்துக்கு உள்ளாகிவரும் தவிர்க்கப்பட இயலாத நியதி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குப் பயமின்றித் தென்னாபிரிக்காவால் அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராகவும், எங்கோ தொலைவில் இருக்கும் கம்பியாவால் மியான்மாருக்கு எதிராகவும் ஏற்படுத்த இயலுமாயுள்ள Erga Omnes partes கடப்பாட்டை இலங்கை தவிர்ந்த 152 தேச அரசுகளில் ஒன்றால் ஈழத்தமிழர் தொடர்பாக, இந்தியாவையும் அமெரிக்காவையும் மட்டுமல்ல தேவையானால் சீனாவையும் ரஷ்யாவையும் கூட மீறிச் செய்ய முடியும். 153 State Parties to Genocide Convention as of April 2022 ஜெனீவாவிலிருக்கும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் இன அழிப்பு நீதி தொடர்பான கோடிகாட்டல்கள் எதுவும் வெளிவராது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தடுத்துவந்துள்ளன. ஆனால், அங்கு சாதிக்க இயலாததை ஐ.நா. உயர் நீதிமன்றம் என்று வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிமன்றில் சாதிக்கச் செய்யத் தேவையான வழி முறைகளை ஈழத்தமிழர் மேற்கொள்ளவேண்டும் என்ற ஆலோசனையை பிரபல சர்வதேசச் சட்ட பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் காலம் தவறாமல் அவ்வப்போது மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறிய போதும் தமிழர் அமைப்புகள் தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவை அணுகுமுறைக்குள் அல்லது எதுவித பலனும் தர இயலாத வேறு கற்பனைகளுக்குள் தமது வளங்களை, அதுவும் அவற்றைக்கூட மிகவும் மட்டுப்படுத்தி, பயன்படுத்திவந்துள்ளன. Boyle prefers IIIM demand over ICC-referral, says specific reference to genocide essential (07 January 2021) Professor Boyle calls for BSD Campaign against genocidal Sri Lanka (28 October 2018) Stopping Sri Lanka's genocide at ICJ, UN- Prof. Boyle (11 March 2009) இருப்பினும், சாத்தியமில்லை என்பதைச் சாத்தியமாக்குவதே விடுதலைப் போராட்ட அரசியல் என்பதை உணர்ந்து இனியாவது நல்ல ஆலோசைனைகளத் தரம்பிரித்து இனங்கண்டு நம்பிக்கை பெற்றுச் செயலாற்றவேண்டும். பதினான்கு வருடங்களாக அறிந்தோ அறியாமலோ செயற்பாடின்றி இருந்த ஈழத்தமிழர்களும், கண்மூடித்தனமாகச் செயற்பட்டுத் தவறாகப் பயணித்துப் பாடங்களைக் கற்றுக்கொண்டவர்களும், மேற்கினதும் இந்தியாவினதும் இணைந்த அல்லது வெவ்வேறான பலதரப்பட்ட சூழ்ச்சிகளுக்குப் பலியாகியுள்ளோரும் தம் தவறுகளை உணர்ந்து தோல்வி நிலையில் இருந்து வெளிப்பட்டு தம்மைத் தாமே தடவழித் திருத்தத்துக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் அல்லது ஓய்வுபெற்றுக் கொள்ளவேண்டும். அதேவேளை, ஏற்கனவே காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டு அவற்றைப் பலனளிக்கவிடாது தடுத்த உட்காரணிகளால் நலிவடைந்தோர் மீண்டும் உரம்பெற்று இறுதி ஆட்டத்திற்கு எழுந்தாக வேண்டிய வரலாற்றுத் தருணத்துக்குத் தம்மைத் தயார்ப்படுத்தவேண்டிய காலம் இது. மாறும் உலக ஒழுங்கு தானாக ஈழத்தமிழருக்காக எதையும் கொண்டுவந்து தராது. வாளாவிருந்து ஈழத்தமிழர் எதையும் சாதிக்க இயலாது. ஆதலால், உலக ஒழுங்கின் மாற்றத்தில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளத் தக்கதாக தேசியக் கொள்கை நிலைப்பாட்டை நங்கூரமிட்டு நிலைப்படுத்திக்கொள்வது வரலாற்றுக் கடமையாகிறது. * * * முள்ளிவாய்க்காலின் பின்னான 14 வருடங்களின் பின்னர் தற்போது இந்த தாராளவாத மேலாதிக்கம் தோற்க ஆரம்பித்துள்ளமை மனத் திருப்தியையும் உற்சாகத்தையும் அளிக்கும் நற்செய்தியாகும். அமெரிக்காவின் தாராளவாத மேலாதிக்கத்தின் உலகளாவிய கதை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதை ஐயந்திரிபற விளங்கிக்கொள்ள ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களும் அரசியலாரும் கருத்துருவாக்கிகளும் சமகால உலகின் முதன்மையான நடப்பியல்வாத (Realism) அரசறிவியலாளரும் பேராசிரியருமான ஜோன் மியஸ்ஹைமர் என்ற அமெரிக்கர் வெவ்வேறு காலகட்டங்களில் முன்வைத்த பின்வரும் மூன்று கருத்துரைகளையும் கிரகிப்பது மிகவும் பலனளிப்பதாய் இருக்கும். ஒருவகையில், மியஸ்ஹைமரை விட உலகில் எவராலும் இதை மேலும் தெளிவாகவும் அழகாகவும் விளக்க இயலாது எனலாம். நடப்பியல்வாதியான இவரது விரிவுரைகளும் விளக்கங்களும் – இரண்டு அரசுத் தீர்வு தொடர்பான இவரின் மட்டுப்படுத்தப்பட்ட பார்வைக்கு அப்பால் – சர்வதேச உறவுகள் என்ற துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளங்கிக்கொள்ளப் பெரிதும் உதவும். 1. மூன்று மாதங்களுக்கு முன்னர் (23 ஒக்டோபர் 2023) இஸ்ரேல் - ஹமாஸ், உக்ரைன் - ரஷ்யா, சீனா தொடர்பாக அவுஸ்திரேலிய சுயாதீன ஆய்வுகளுக்கான மையத்தில் (CIS) மீயஸ்ஹைமர் வழங்கிய விரிவுரை: 2. பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் (29 ஒக்டோபர் 2007) அமெரிக்க இஸ்ரேல் அணைவுக் குழுவின் (Israel Lobby) ஆபத்தை விளக்கும் நூலின் வெளியீட்டோடு மீயஸ்ஹைமர், ஸ்டீபன் வோல்ற் ஆகியோர் கேம்பிரிஜ் விவாத அரங்கில் வழங்கிய விரிவுரையும் கேள்வி-பதிலும்: 3. ஆறு வருடங்களுக்கு முன்னர் (15 நவம்பர் 2017) அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் வழங்கிய தாராண்மைவாத மேலாதிக்கம் பற்றிய 101 விரிவுரை: * * * எதிரிகளை விட இரண்டகர்கள் ஆபத்தானவர்கள் என்பது பல போராட்டங்கள் தரும் பட்டறிவு. ஆனால், இவர்கள் இருதரப்பினரை விடவும் ஈழத்தமிழருக்குள் இருக்கும் "தொடை நடுங்கிகள்" மிகுந்த ஆபத்தை விளைவிப்பவர்கள் என்பது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலம் தரும் முக்கிய படிப்பினை. இன்றைய ஈழத்தமிழர் அரசியல், கருத்துருவாக்கம் உள்ளிட்ட செயற்படுபரப்பு தொடை நடுங்கிகளால் நிரம்பி வழிகின்றது. இரு துருவ உலக ஒழுங்கும் அதைத் தொடர்ந்த ஒரு துருவ உலக ஒழுங்கும் ஈழத்தமிழருக்குள் ஏற்படுத்திய பாதகமான உள்ளிருந்தே முடக்கும் நோய் இதுவாகும். சமகால சர்வதேச அரசியலைக் கூர்மையாகக் கிரகிக்கும்போது தான் இந்த நோயின் ஆபத்தான தார்ப்பரியம் புரியும். குறிப்பாக, தாராளவாத மேலாதிக்கத்துக்கும் (Liberal Hegemony), அணைவுக்குழு மனநிலைக்குள்ளும் (Lobbyist mindset) சிறைப்பட்டுள்ள இந்தத் தொடை நடுங்கித்தனத்தின் பிடியில் இருந்து முதலில் ஈழத் தமிழர் விடுதலை பெற வேண்டும். ஆகவே, இந்த நோயின் மூலம் எது என்பது பற்றிய பார்வை அவசியமாகிறது. குறிப்பாக இதன் சர்வதேச ஊற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உய்த்துணர்ந்துகொள்வது மிகவும் பயன் தருவதாகும். இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை எவ்வாறு ஈழத்தமிழர் விடுதலைக்குக் குந்தகமாக இருந்துவந்துள்ளது என்பதை ஒப்பீட்டளவில் ஈழத்தமிழர்கள் நன்கு புரிந்துவைத்துள்ளார்கள். இருந்தும், இந்தியா தொடர்பாகக் கூட அமிர்தலிங்கத்தைத் துரோகியாக்கிய இந்திராகாந்தி பற்றிய பார்வையில் ஈழத்தமிழர்களிடையே இன்றும் கணிசமான தெளிவின்மை நிலவுகிறது. இந்தியாவை எதிர்கொண்டு முன்னேறும் ஆற்றல் மட்டுமல்ல பட்டறிவும் கொண்டதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் விளங்கியது. இந்தியாவால் தனித்து அழிக்கப்பட இயலாத போராட்ட இயக்கமாக அது கூர்ப்படைந்திருந்தது. ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இந்தியாவையும் விஞ்சிய தளத்தில் முள்ளிவாய்க்கால் முடிவை நிருணயித்தது. இந்தப் புவிசார் அரசியல் எவ்வாறு நடைமுறையில் பாரதூரமான வெளியுறவுக்கொள்கையாக இயங்கியது என்பது பற்றிய வரலாற்றுப் புரிதல் பெருமளவு ஈழத்தமிழரிடையே இன்னும் ஏற்படவில்லை. அந்தப் புரிதல் ஏற்படும்போது தான் முள்ளிவாய்க்காலில் சரணாகதியாகாத போராட்டத்தின் கனதியும், அடுத்த கட்டத்துக்கான பொருள்கோடலும் பொருத்தமாக எடுத்தாளப்படும் சூழல் தோன்றும். அமெரிக்காவின் புவிசார் அரசியற் பார்வைகள் பற்றி ஏற்கனவே பலரும் நன்கு அறிந்துள்ளனர். இந்தப் புரிதலுக்கு தமிழீழ விடுதலைப் போரின் உச்சக் காலத்தில் மாமனிதர் சிவராம் பொதுவெளியில் இட்ட அடித்தளம் கணிசமாகப் பங்காற்றியிருந்தது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பின் புவிசார், அரசியல் இராணுவ நகர்வுகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு நகர்த்தவல்ல தலைமை ஈழத்தமிழரிடம் இருப்பதை நன்கு உணர்ந்துகொண்ட சிவராம், அரச, அரச சார்பற்ற சக்திகள் தீர்மானித்துவந்துள்ள ஆபத்தான போக்குகளை எதிர்கொண்டு முன்னேறத்தக்க அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது பற்றிய ஆழமான திட்டமிடலில் ஈடுபட்டிருந்த போது, சந்திரிகா அரசின் காலத்தில் அவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய அரச புலானாய்வுத் துறையால் அரசியற் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார். சிவராமின் படுகொலைக்குப் பின்னர் கணினியில் இருந்து மீட்கப்பட்டு வெளியான கட்டுரை அவரது புரிதல் எவ்வாறு இருந்தது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. US's strategic interests in Sri Lanka- Taraki (30 July 2005) தாராளவாத மேலாதிக்க அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்குள் அணைவு அரசியல் மூலம் பலியாகாது ஈழத்தமிழர் விடுதலை அரசியலைக் காக்கும் கருத்தியலை உருவாக்குவதிலும், அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசியல் சியோனிசத்தாலும் இன்ன பிற காரணிகளாலும் ஈழத்தமிழர் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள தொடை நடுங்கித்தனத்தைப் பிய்த்தெறிவதிலும் இருந்து அடுத்த கட்ட நகர்வு நடைமுறைப்படுத்தப்படவேண்டியது. ***************************************************** தேசியவாதத்துக்கு எதிரான தனது உலகப் பார்வையாற் தூண்டப்பட்டு, இன அழிப்புக்கு எதிரான நேர்மறையான சமய சார்பற்ற முற்போக்குத் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஆபத்தாக நோக்கி, தான் பின்னிய சர்வதேச தன்னார்வ வலைப்பின்னல் மூலம் மனித உரிமைக்கும் சன நாயகத்துக்கும் உதவுதல் என்ற போர்வையிற் செயற்பட்டு, பன்னாட்டுத் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் புலி-எதிர்ப்புவாதத்துக்கு நிதியூட்டம் புரிந்த நிறுவனங்களிற் பல ஜோர்ஜ் சோரோசிடமிருந்து நிதியுதவி பெற்றவை. The Guardian: The George Soros philosophy – and its fatal flaw (06 July 2018) பின்வரும் ஒளியலை விவரணம் ஓர் அமெரிக்க வலதுசாரிப் பார்வையாய் இருப்பினும், இடதுசாரி போல மாயத் தோற்றமளிக்கும் சோரோசை அறியாதவர்கள், அவரின் ஊட்டத்தில் இயங்கும் வலைப்பின்னலை அறிந்து கொள்ளப் பொருத்தமான வகையில் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதால் இங்கு இணைக்கப்படுகிறது: * * * அமெரிக்காவின் அதிகாரபூர்வ வெளியுறவுக்கொள்கையைக் கணிசமாகத் தீர்மானித்த சியோனிசத்துக்குப் பயன்பட்ட இராஜதந்திரத்தின் சிகரமாயிருந்து அண்மையில் நூறு வயதில் மறைந்த அமெரிக்க யூதரான ஹென்றி கிசிஞ்சரும் அவர் வழி வந்தோரும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பதை அறிந்து தெளிவதன் ஊடாகவும்; சியோனிசத்துக்கு எதிரான அமெரிக்க யூதராயிருந்த போதும் தனது பொருண்மிய வளத்தையும், கருத்தியலையும், தன்னார்வ வலைப்பின்னலையும் அமெரிக்க அரசு போர்களின் ஊடாகச் செய்த உலகளாவிய அரசாங்க மாற்றங்களுக்கு ஈடாகத் தானும் தனது தாராளவாத மேலாதிக்கப் பார்வையூடாக மேற்கொண்டு இன்றும் தொண்ணூறு வயதுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் பிறிதொரு பேர்வழியான ஜோர்ஜ் சோரோஸின் உலகளாவிய திறந்த வலைப்பின்னல் ஈழத்தமிழர்களுக்குள் வளர்த்த புலி எதிர்ப்பு, தேசியக் கோட்பாட்டு எதிர்ப்பு போன்ற போக்குகளை இனங்கண்டுகொள்வதன் ஊடாகவும்; அமெரிக்க சியோனிச அணைவுக்குழு (AIPAC), அதையும் விஞ்சி சியோனிசத்தோடு விவிலேயப் பிணைப்பில் இருக்கும் அமெரிக்கச் சுவிசேசக அணைவுக்குழு ஆகியவற்றையும் அவற்றின் தன்மைகளையும் சரிவரப் புரிந்து கொள்வதன் ஊடாகவும் இந்தத் தொடை நடுங்கித் தன்மையின் மூலங்கள் ஈழத்தமிழர்களுக்குள் எங்கிருந்து புகுந்துகொள்கின்றன என்பதை அடையாளங் கண்டுகொள்ளலாம். ******************************************************************* ஹென்றி கிசிஞ்சர் பற்றிய சில ஒளியலைப் பார்வைகள்: * * *- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இரண்டாவது சந்திப்பு கள நிலவரத்தைச் சற்றும் புரிந்திராத இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும், அவர்களால் வழிநடத்தப்பட்ட ரஜீவும் ஜெயவர்த்தனவுடனான உறவுப்பாலத்தைக் கட்டும் முயற்சியில் மூழ்கியதுடன், யுத்த நிறுத்தம் குறித்த அதீத நம்பிக்கையுடன், பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளிலும் முழுமூச்சாக இறங்கியிருந்தனர். இந்தியர்களின் இந்த மனநிலை போராளித் தலைவர்கள் இரண்டாவது முறை சந்திப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தியிருந்தது. முதலாவது சந்திப்பு நடந்து சரியாக ஒரு வாரத்தின் பின்னர் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது. பிரபாகரன் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. புலிகள் சார்பாக பாலசிங்கமும் இராஜநாயகமும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய பாலசிங்கம், கூட்டமைப்பின் பெயர் குறித்து பிரபாகரன் சிக்கல் எதனையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்று தன்னிடம் கூறி அனுப்பியதாக அறிவித்தார். மேலும், பதம்நாபா அன்று கூறிய ஒற்றுமையே இன்று அவசியம், கூட்டமைப்பின் பெயர் அல்ல என்பதை பிரபாகரனும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். ஆகவே, போராளிகளின் கூட்டமைப்பை "ஈழத் தேசிய விடுதலை முன்னணி - புலிகள் முன்னணி" என்று அழைக்கப்படுவது பொருத்தமானது என்று பாலசிங்கம் பிரேரித்தபோது, ஏனைய தலைவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். பெயரில் விட்டுக் கொடுப்பொன்றினைச் செய்ததன் ஊடாக போராளிகளுக்கிடையில் ஒற்றுமையினை உருவாக்கியதுடன், புலிகளின் தனித்துவத்தையும் பிரபாகரன் உறுதிப்படுத்திக் கொண்டார். மேலும், புலிகளின் மேலாதிக்கமும் இக்கூட்டமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இக்கூட்டமைப்பு வெளியார் பார்வைக்கு அழகனாதாகத் தோன்றினாலும், தொடர்ச்சியான சச்சரவுகளைக் கொண்ட, ஒருவரில் ஒருவர் சந்தேகம் கொண்ட, ஒருவரை ஒருவர் தடக்கி வீழ்த்த தருணம் பார்த்திருக்கும் இவர்களை இந்திய புலநாய்வுத்துறை மிக இலகுவாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடும் என்று பிரபாகரன் நம்பினார். குறிப்பாக, சிறீ சபாரட்ணத்தின் மீது ரோ கொண்டிருந்த செல்வாக்கின் அளவை உணர்ந்துகொண்ட பிரபாகரன், போராளி அமைப்புக்களுக்கிடையிலான கூட்டமைப்பின் மூலம் அச்செல்வாக்கினை குறைக்கலாம் என்று எதிர்பார்த்தார். பிரபாகரன் எதிர்பார்த்தது போலவே போராளித்தலைவர்களை திம்பு பேச்சுவார்த்தை நோக்கி இந்தியா தள்ளிச் சென்றது. இப்பேச்சுக்களை டெயிலி நியூஸ் சார்பாகப் பதிவு செய்ய நானும் திம்பு சென்றிருந்தேன். அங்கிருந்த வேளை இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை செவ்வி காணும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 10 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து தமிழ்நாட்டுத் தலைவர்களையும், கொழும்பின் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளையும் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் அப்போது இந்தியா வகுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு போராளிகளைப் பலவந்தப்படுத்தும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.- உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம் சாட்டிய சிறிசேன
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
முதலாவது சந்திப்பு நான்கு முக்கியமான போராளித் தலைவர்களுக்கிடையிலான முதலாவது சந்திப்பு சென்னையில் அமைந்திருக்கும் நட்சத்திர விடுதியான Plush Hotel இல் சித்திரை 10 ஆம் திகதி (1985) நடைபெற்றது. புலிகள் இயக்கத்தில் சார்பில் பிரபாகரன், இராசநாயகம், பாலசிங்கம் ஆகியோர் பங்குபற்றினர். டெலோ அமைப்பின் சார்பில் சிறீ சபாரட்ணமும், மதியும் பங்குபற்றினர். ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, குலசேகரன், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் அமைப்புச் சார்பாக பாலகுமாரும் முகிலனும் பங்குபற்றினர். ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் என்கிற ரீதியில் ரமேஷ் இக்கூட்டத்தை நடத்தியதுடன், விருந்தினர்களையும் வரவேற்றார். பிரபாகரன், பாலகுமார், சிறீ சபாரட்ணம் ஆகியோருக்கிடையில் ஏற்கனவே பரீட்சயம் இருந்தது. ஆனால், பிரபாகரனும், பத்மநாபாவும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல்த் தடவை. வழமைபோலவே, சூழ்நிலையின் தீவிரத்தினைத் தணிக்கும் விதமாக நகைச்சுவையாக சில விடயங்களைப் பேசத் தொடங்கினார் பாலசிங்கம். ஆனால், கூட்டம் தீவிரமாகவே நடைபெற்றது. ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கும் முன்னர் இரு விடயங்கள் குறித்துப் பேச்சினை ஆரம்பித்தார் பிரபாகரன். முதலாவது, அக்கூட்டமைப்பின் பெயர். இரண்டாவது , போராளி அமைப்புக்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகள். "நாங்கள் போராடுவதற்கு எதற்காக?" என்று பிரபாகரன் கேட்டார். "அது தமிழ் ஈழத்திற்காகவா அல்லது ஈழத்திற்காகவா? நாமும், டெலோ அமைப்பும் தமிழ் ஈழத்திற்காகவே போராடுகிறோம், ஆனால் உங்கள் அமைப்பின் பெயரில் ஈழம் என்றே இருக்கிறது. முதலில் எமது நோக்கம் குறித்த தெளிவு எமக்கு இருக்க வேண்டும். ஆகவே, ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் பெயர் மாற்றப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். பிரபாகரன் கூறியதில் ஒரு காரணம் இருந்தது. ஈழம் எனும் சொல் புராதன இலக்கியங்களில் முழு இலங்கை நாட்டையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. சங்க கால இலக்கியங்களில் இலங்கைத் தமிழ்ப் புலவர் ஒருவரை ஈழத்து பூத்தந்தேவனார் என்று குறிக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுவகைகளை ஈழத்து உணவு என்று சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன. ஆகவேதான், இலங்கையில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை புலிகளும், டெலோ அமைப்பும் தமிழ் ஈழம் என்று அழைக்கின்றன. இவ்விரு போராளி அமைப்புக்களும் தமது போராட்ட இலட்சியத்தை தமிழ் ஈழம் என்றே அழைத்தும் வருகின்றன. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்போ அல்லது ஈரோஸ் அமைப்போ தமிழ் ஈழத்திற்கும், ஈழத்திற்குமான வேறுபாட்டினை நோக்கவில்லை. பாலகுமார் இதுகுறித்துப் பேசும்போது, "நாமும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும் ஈழம் என்றே பாவித்து வருகிறோம், நாம் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்கிற கூட்டமைப்பினை உருவாக்கும்போது டெலோவும் அதனை ஏற்றுக்கொண்டது" என்று பதிலளித்தார். நிலைமையின் பதற்றத்தைத் தவிர்க்க எத்தனித்த பத்மநாபா, "நாம் பெயர் குறித்து சர்ச்சையில் ஈடுபடலாகாது. எமக்குள் ஒற்றுமையே முக்கியமானது. அவசியமென்றால், பெயர்மாற்றம் குறித்தும் சிந்திக்கலாம்" என்று கூறினார். பதிலுக்குப் பேசிய பாலகுமார், "ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைப் பொறுத்தவரை பெயர் மாற்றம் ஒரு பெரியவிடயமாக இல்லாதிருக்கலாம், ஆனால் நான் எனது அமைப்பில் உள்ளவர்களுடன் பேசித்தான் இதுகுறித்துக் கருத்துக் கூறமுடியும்" என்று கூறினார். பின்னர் போராளிகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் பெயர் குறித்து பின்னர் தீர்மானிக்கலாம் என்று கூறியதுடன், இச்சந்திப்பின் பெயரை "ஈழத் தேசிய விடுதலை முன்னணி - புலிகள் சந்திப்பு" என்று அறிக்கையில் குறிப்பிடலாம் என்று இணங்கினர். இதன்மூலம், கூட்டமைப்பிற்குள் இணைந்தாலும், புலிகளின் தனித்துவத்தை பிரபாகரனால் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது. கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையின் முதலாவது வாக்கியம் பின்வருமாறு அமைந்திருந்தது, "ஈழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியும், புலிகள் இயக்கமும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்திருக்கிறோம்" . இக்கூட்டத்தில் பிரபாகரனால் எழுப்பப்பட்ட இரண்டாவது விடயம், ஒரு போராளி அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்கு போராளிகள் தாவுவது அவ்வமைப்புக்களுக்குள் முரண்பாட்டினை உருவாக்கி வருகிறது என்பது. "எனது அமைப்பிலிருந்து வெளியேறி, இன்னொரு அமைப்பிற்குச் சென்று, அங்கிருந்து எனது அமைப்பைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி, எமது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்குப் பாதகம் ஏற்படுத்த எவர் முயன்றாலும், நிச்சயமாக நான் அவர்களைப் பிடிப்பேன். அவ்வாறே, உங்களின் அமைப்புக்களிலிருந்து எவர் வெளியேறி எனது அமைப்பில் இணைந்து, உங்களின் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்க முயன்றால் நீங்களும் அதைச் செய்யுங்கள். இவ்வாறான இயக்கத் தாவல்களை நாம் முறியடிக்க வேண்டும். ஒரு போராளி தனது அமைப்பிலிருந்து வெளியேற விரும்பினால், அவர் அதனைத் தாராளமாகச் செய்யலாம், ஆனால், அவர் இன்னொரு அமைப்பில் இணைய முடியாது. ஆகவே, நாம் இதுகுறித்து முடிவொன்றிற்கு வரவேண்டும். உங்கள் அமைப்பிலிருந்து வெளியேறி எனது அமைப்பில் சேர வருபவர்களை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, அதுபோலவே எனது அமைப்பிலிருந்து உங்களிடம் வருபவர்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கூறினார். பிரபாகரனது கருத்தை பத்மநாபா ஏற்றுக்கொள்ள மறுத்தார். இவ்வாறான் நடவடிக்கைகள் போராளிகளின் சுதந்திரத்தைப் பாதித்து விடும் என்று அவர் கூறினார். அது ஜனநாயகத்திற்கு முரணானது என்று வாதிட்டார். பத்மநாபாவின் கருத்தினை சிறீ சபாரட்ணமும் பாலகுமாரும் ஆதரித்தார்கள். இதனால், இவ்விடயம் அப்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டது. கூட்டத்தின் முக்கிய விடயம் குறித்து தலைவர்களிடையே இணக்காப்பாடு ஏற்பட்டிருந்தது. அதாவது, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எடுத்திருக்கும் புதிய வெளியுறவுக் கொள்கை. பாலசிங்கம் இத்தீர்மானம் குறித்து தனது போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், இணைந்த செயற்பாடுகளுக்கான திட்டத்தினை வரைதல், பொதுவான அரசியல் நோக்கத்தில் இணக்கப்பாடு : சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்திற்கு முற்றான சுதந்திரத்தை ஏற்படுத்துவது. இலங்கை இராணுவத்திற்கெதிராக ஒவ்வொரு அமைப்பும் செய்யவேண்டிய பங்கினை ஏற்றுக்கொள்வது. அமைப்புக்களுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் மூலம் ஒன்றிணைந்த இராணுவ தாக்குதல்களை உருவாக்குவது. இந்தியா முன்னெடுத்துவரும் யுத்த நிறுத்த முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்தாலோசிக்க தலைவர்கள் அனைவரும் தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொள்வது. கூட்டத்தின் முடிவில் தலைவர்கள் அனைவரும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டதுடன், குழுவாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பாலசிங்கத்தின் கூற்றுப்படி அக்கூட்டம் சுமூகமாகவும், வினைத்திறன் கொண்டதுமாக அமைந்திருந்தது. தலைவர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை, ஈழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்ல ஈழத் தேசிய விடுதலை முன்னணியும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இணைந்து செயலாற்றுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பு சித்திரை 1984 இல் உருவாக்கப்பட்டதுடன், இக்கூட்டமைப்பில் மூன்று போராளி அமைப்புக்களான டெலோ, ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இந்த நான்கு போராளி அமைப்புக்களினதும் ஒன்றிணைவின் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆயுத ரீதியான போராட்டமென்பது மிக முக்கிய திருப்பமாக உருமாறியிருக்கிறது. இதன்மூலம் புரட்சிகரப் போராளிகள் ஒன்றிணைந்து தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்த முடியும். இராணுவ அடக்குமுறைகளுக்கு நாளாந்தம் முகங்கொடுத்து வரும் தமிழ் மக்கள், எமது இந்த அறிவிப்பின் மூலம் மகிழ்வடைவார்கள் என்றும், இதனால் உற்சாகமடைந்து தமது விடுதலை பாதையில் முன்னோக்கிப் பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஆகிய நாம் பின்வரும் அரசியல் நோக்கங்களை வரிந்து கொண்டிருக்கிறோம், 1. சிங்கள அடக்குமுறை ஆட்சியிலிருந்து எமது தாய்நாட்டின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் நாம் வென்றெடுப்போம். 2. சுய நிர்ணய உரிமையின் அடிப்படியில் உருவாக்கப்படும் சுதந்திரமான தனிநாட்டைத் தவிர வேறு எந்தத் தீர்விற்கும் நாம் உடன்படப் போவதில்லை. 3. ஒருமித்த மக்கள் ஆயுதப் போராட்டத்தை எமது போராட்ட வடிவமாக வரிந்துகொள்ளுவோம். 4. எமது விடுதலைப் போராட்டத்தினை சோசலிசப் பாதையில் வழிநடத்துவதனூடாக, சோசலிச சமூகத்தை எமது தாயகத்தில் ஏற்படுத்துவோம். 5. உலக ஏகாதிபத்தியங்களில் இருந்தும், நவ காலணித்துவ அடக்குமுறைகளிலிருந்தும் எமது தாயகத்தை விடுவித்து, அணிசேராக் கொள்கையுடன் அதனை வழிநடத்துவோம். அரசியல் ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நாம் இணைந்து செயற்படுவதென்றும், இலங்கை இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைந்து செயற்படுத்துவதென்றும் நாம் முடிவெடுத்திருக்கிறோம். எமது மக்களிடமும், எமது மக்களின் விடுதலையினை ஆதரிக்கும் அன்பர்களிடமும் நாம் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் தந்துவரும் ஆதரவினையும் உதவியினையும் மேலும் தொடர்வதன்மூலம், எம்மால் இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒருங்கிணைவை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான். அறிக்கையின் இறுதியில் பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பாலகுமார் மற்றும் பத்மநாபா ஆகியோர் கையொப்பம் இட்டிருந்தனர். போராளி அமைப்புக்களுக்கிடையிலான கூட்டமைப்பு தொடர்பான செய்திகள் வெளிவர ஆரம்பித்த போது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று அனைவருமே மிகுந்த உவகையடைந்து காணப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழான ஈழநாடு இதனை வரவேற்றிருந்தது. பல முக்கியமான தமிழர்களும், அமைப்புக்களும் போராளிகளுக்கிடையிலான ஒற்றுமையினை பாராட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் மற்றும் கருநாநிதி ஆகியோரும் இதனை வரவேற்றிருந்தனர். இது இவ்வாறிருக்க, போர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தமது தாக்குதல்களை போராளிகள் தீவிரப்படுத்தியிருந்தனர். பண்டிதரின் வீரச்சாவினையடுத்து புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாக பதவியேற்றுக்கொண்ட கிட்டு, போராளிகளிடையே காணப்பட்ட புதிய உத்வேகத்தை இராணுவத்தினர் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தியதோடு, ஒவ்வொரு அமைப்பிற்குமென்று பகுதிகளை பொறுப்புக் கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களின் ஊடாக புலிகள் அமைப்பே இராணுவத் தாக்குதல்களில் முன்னணிக்கு வரத் தொடங்கியிருந்தது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதை இராணுவமும், பொலீஸாரும் ஒரு நடைமுறையாகவே கடைப்பிடித்து வந்தனர். ஆனால், இப்பழிவாங்கல்த் தாக்குதல்களைத் தடுப்பதற்குப் போராளிகள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மக்களிடையே வரவேற்பினைப் பெறத் தொடங்கின. இவ்வாறான தடுப்புத் தாக்குதல்களை கிட்டுவே முன்னின்று, ஒருங்கிணைத்து நடத்தினார். - தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
Important Information
By using this site, you agree to our Terms of Use.