Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. கோசனுக்கும் உங்களுக்கும் நான் யார் என்பது இதுவரை தெரியாமல் இருக்காது 😄
  2. யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி என்று எழுத முதுகெலும்பு இல்லை தினக்குரலுக்கு .
  3. இலவசம் எனும் திருட்டு ! திருடன் ஒருவன் இரவில் சுவர் ஏறி குதித்தான்! பெரிய நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. நாய் அவனை பார்த்தது அவன் நாயை பார்த்தான்! நாய் குலைக்க வில்லை! தைரியமாக இரண்டு அடி எடுத்து வைத்தான்! குலைக்க வில்லை! வீட்டில் கதவருகே வந்தான் ! கள்ள சாவி கொண்டு கதவை திறக்க முற்பட்டான்! நாய் அப்பொழுதும் குலைக்க வில்லை! திடீர் என்று அவனுக்கு ஒரு சந்தேகம்! கதவை திறக்கும் போது நாய் குலைத்தால் என்ன செய்ய ! தயாராக வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து நாய்க்கு போட்டான்! நாய் உடனே குலைக்க ஆரம்பித்து விட்டது! திருடன் நாயை பார்த்து கேட்டான்! ஏன் நாயே! நான் சுவர் ஏறி குதித்த போது குலைக்க வில்லை! கதவு வரை நடந்த போது குலைக்க வில்லை! வீட்டின் கதவை திறக்கும் போது குலைக்க வில்லை மாறாக உனக்கு பிஸ்கெட் போடும்போது குலைக்க ஆரம்பித்து விட்டயே என்று கேட்க அதற்கு நாய் இவ்வளவு நேரம் நீ உன் வேலையை செய்கிறாய் என்று நினைத்து கொண்டு இருந்தேன்! ஆனால் தேவை இல்லாமல் எனக்கு பிஸ்கெட் இலவசமாக நீ போடும்போது தான் நீ தவுறு செய்கிறாய் என்று அறிந்து கொண்டேன். இன்று எப்பொழுதெல்லாம் நமக்கு இலவசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அரசு இயந்திரம் தவறு செய்கிறது என்று பொருள்! புரிந்து கொள்ளுங்கள்!
  4. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) மீதான ஐந்தாண்டுத் தடை நீட்டிப்பை டெல்லி உயர் நீதிமன்ற நடுவர் மன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த மே 14ஆம் திகதி ஐந்தாண்டுத் தடை நீட்டிக்கப்பட்ட பின்னர், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ – UAPA) கீழ் அந்த நடுவர் மன்றத்தை மத்திய உள்துறை அமைச்சு அமைத்தது. இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது. வெளியிடப்பட்ட அறிக்கை அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய காரணம் உள்ளதா என்பதை முடிவு செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டது. தனி ஈழம் “இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ அதற்கான பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம் ஈழம் அமைவதற்கான பணிகளில் இரகசியமாக ஈடுபடுவதையோ அந்த அமைப்பு கைவிடவில்லை என நடுவர் மன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்து விட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அரசு அளித்த தகவலின் அடிப்படையில், யுஏபிஏ சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக நடுவர் மன்றம் கூறியுள்ளது. எனவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாகவும் அது அறிவித்து உள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் அந்த அமைப்பு தொடா்ந்து ஈடுபடுகிறது என்றும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. https://tamilwin.com/article/delhi-high-court-confirmed-the-ban-on-ltte-1733757937?itm_source=parsely-detail
  5. கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா, மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். தனராஜ் தங்கராஜா மீது 8 குற்றச்சாட்டுகளும், கிஷானி பாலச்சந்திரன் மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இவர்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-couple-arrested-in-canada-1733758309
  6. முதலில் வடக்கு பக்கம் இருக்கும் கடற்படையை தெற்குக்கு மாற்றி விடனும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் கேரள கஞ்சா கொண்டு வரும் ரோலருக்கு பாதுகாப்பு கொடுப்பதே இந்த சிங்கள நேவிதானமே ? முதலில் தமிழர் பகுதியை கரையான் அரிப்பது போல் அரிக்க சிங்கள அரசியல்வாதிகள் கொடுப்புக்குள் சிரித்து கொண்டு கண்டும் காணாமல் இருந்தார்கள் கடைசியில் சிங்கள பகுதி பள்ளிக்கூட வாசல் மட்டும் விற்பனை நடக்க தொடங்க புதிதாய் வந்த வேட தாரிகள் குய்யோ முய்யோ என்று அலறிக்கொண்டு இருக்கினம் .
  7. மெதுவா படிச்சுட்டு சிரிச்சுட்டு படுங்க நிம்மதியா தூக்கம் வரும் !! 1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..! 2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..! 3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்! 4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..! 5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..! "நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! . 6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை." இதற்கு மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?" 7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா இருக்கேன்..." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!" "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....." 8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு.? மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை! 9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்… 10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!” 11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?” “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!” 12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்‌போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க… முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே! 13. டீச்சர் கேட்டார்... பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ? குறும்புக்கார மாணவனின் பதில்... எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!! ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..! சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..! சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை... மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை. 14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?‌‌ நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ? ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...! முதல்ல அவரை விடுதலை செய்ங்க...! படித்ததில் ரசித்தது...
  8. ப்ளூ சட்டை மாறனின் புஷ்பா 2 விமர்சனம்! புறாவுக்கு ஒரு போராடா! இதென்ன பெரிய அக்க போரா! இருக்கு! ஏற்கனவே வந்த புஷ்பா 1 எதுக்கு ஓடுச்சு என்று தெரியலை! உலகத்தில் வந்த அனைத்து மசலாக்களையும் போட்டு எடுத்து இருப்பாங்க! சரி புஷ்பா 2 ல ஏதாவது யோசித்து எடுத்து இருப்பாங்க என்று பார்த்தா அதை விட மசாலாவா எடுத்து வைத்து இருக்காங்க! உதாரணத்துக்கு படத்தின் ஃபர்ஸ்ட் Scene சொன்னா போதும்! ஜப்பானில் ஒரு ஹார்பர் காட்டுறாங்க கன்டெய்னர் ஆஃப் லோட் பண்ணும்போது ஒன்று ஓவர் வெயிட் ஆக இருக்க அதில் இருந்து செம்மர கட்டை வந்து விழ! பார்த்தால் அதில் ஒருவன் 45 நாள் உணவின்றி டிராவல் பண்ணி வந்து இருக்கார்! ஜப்பான் காரர்கள் தமிழில் பேச( டப்பிங் ) கன்டெய்னர் உள்ளார இருந்த நம்ம புஷ்பா ( ஹீரோ) ஜப்பான் மொழியில் பேசுறார்! " ஆனா இது புதுசா இருக்கு சார்! இதில் ஒரு லாஜிக் வேண்டும் இல்ல அதற்கு நம்ம ஹீரோ ஒரு புக் எடுத்து காட்டுகிறார் 45 நாளில் ஜப்பான் எப்படி கற்றுக் கொள்வது என்று! ( விதி எல்லாம் நம் விதி) இதில் ஒரு பிரச்சினை இல்லை ஆனா இந்த சீனுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியலை! ஆனா ஃபர்ஸ்ட் ஹால்ஃப் நல்லாதான் இருந்துச்சு ( அப்பாடா ) செகண்ட் ஹாஃப் ல அப்படியே நேர் எதிராக மாறிப் போச்சு! வில்லன் பஹத் பாசில் கூட எப்படி படம் க்ளைமேக்ஸ் போகும் என்று பார்த்தால்! நம்ம எம் ஜி ஆர் காலத்து சென்டிமென்ட் கிளைமாக்ஸ் கூட்டிட்டு போய் இருக்காங்க! தங்கச்சியை கடத்தி கூட்டிட்டு போவது!, ஹீரோ சண்டை போட்டு மீட்பது, பிரிந்த குடும்பம் சேருவது! டேய் இதுவாடா புஷ்பா கதை! திடீர் என்று புது வில்லன் ஜெகபதி பாபு, போதாத குறைக்கு எல்லார் கழுத்தையும் கடித்து வைத்து விடுகிறார் ஹீரோ! குடும்ப சென்டிமென்ட் பிழிந்து அழுகாச்சி படமா எடுத்து வைத்து இருக்காங்க! பொதுவா சொல்லுவாங்க ஹீரோ மொத்த படத்தையும் தோலில் சுமந்தார் என்று இந்த படத்துக்கு கண்டிப்பா அதை சொல்லனும் ஏனென்றால் அப்படி சுமந்த ஒரு சைட் ரொம்ப சைட் வாங்கி விட்டது! அதுக்கு நிச்சயமா ஹீரோவை பாராட்டி ஆக வேண்டும்! ஆனா டெக்னிக்கல் லா ரொம்ப ஸ்ட்ராங்கானா படம் ( இரண்டாவது அப்பாடா) மொத்ததில் இந்த படம் எப்படி இருந்துச்சு என்றால்! முதல்ல சொன்ன மாதிரி முதல் பாகமே எப்படி ஓடிச்சு என்று தெரியலை! வெறும் வெத்து பில்ட் அப்பில் ஓட்டி இருப்பாங்க! போன பார்ட்டில் புஷ்பா என்றால் flower இல்ல ஃபயர் என்றார்கள்! இதில் வைல்ட் ஃபயர்! இன்டர்நேஷனல் ஃப்யர் என்று பில்ட் அப் செய்து இருக்காங்க! அதை தாக்குவதற்கு உங்களுக்கு மன உறுதி இருக்கா என்று பார்த்து கொள்ளுங்க! 200 நிமிடம் படம் என்று திக்குண்ணு இருந்துச்சு! ஆனா படம் பார்த்து முடிக்கும் போது உடம்பு வலியோ தலை வலியோ இல்லை! ஆனா மொத்த படத்தையும் பார்த்து முடித்த பின் எதுக்கு இந்த படத்தை பார்க்கனும் என்றுதான் தோன்றியது( மாறன் பன்ச் ) அதுக்கப்புறம் உங்க இஷ்டம்! நன்றி - ப்ளூ சட்டை மாறன்
  9. நல்லா இருக்குதுங்க உங்கபுஸ்பா கதை !.............. செம்மரக் கட்டை கடத்துபவன் ஹீரோ! அவனைப் பிடிக்க வரும் போலீஸ் வில்லன்! கெட்டவனை நல்லவனா தூக்கி கொண்டாடுவதும் ! நல்லவனை கெட்டவனாக காட்டுவதும் இந்திய சினிமாவில் மட்டுமே ! அந்த கதைக்கு கோடிக்கணக்கில் வசூலாம் .................. பையா எல்லாம் பகிடிக்குத்தான்
  10. ஒரே தலைவலி... மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன். அவருக்குச் சரியான தலைவலி.. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன். என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது.. அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன். டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம். அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன். ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது. மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்" என்றேன். நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள். 1200 ரூபாயில் ஆரம்பம்.. 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட். பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா?) மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது. ‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன். அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள். 2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன். நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன். அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார். பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன். ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன். சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார். அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன். "சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்” அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?” “ஊஹூம்.. ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்”. என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று விழித்தது. அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.. இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது. நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள். இதில் ரகசியம் என்னவென்றால்... அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை. நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்..
  11. ரோசம் மானம் உள்ளவர்களுக்கு சொன்னால் கொஞ்சமாவது உறைக்கும் உங்க ஆள் முதலில் சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுகிறவரா என்று கேட்டு சொல்லுங்க . சொன்னது போலவே அரசியலில் இருந்து ஓய்வுக்கு போக வேண்டியதுதானே பிறகேன் தொங்கி கொண்டு இருக்கிறார் ?
  12. சூடு கண்ட திருட்டு பூனை இனி தேர்தலில் நிக்காது பின்கதவால் வரவே முயற்சிக்கும் .
  13. இரண்டு சிறுவர்கள் தோட்டத்தில் இருந்து மாம்பழங்களை திருடி ஒரு சாக்கில் கட்டி கொண்டு அருகில் இருந்த சுடுகாட்டில் வைத்து பங்கு பிரிக்கலாம் என்று அங்கு இருந்த கேட்டை தாண்டி குதித்தனர்! அப்பொழுது சாக்கில் இருந்து இரண்டு மாம்பழம் கீழே விழுந்தது. ஒருவன் சொன்னான் விடு வரும்போது எடுத்து கொள்ளலாம் என்று! உள்ளே போய் அமர்ந்து பங்கு போட ஆரம்பித்தார்கள். அப்பொழுது அங்கே ஒரு குடிகாரன் குடித்து கொண்டு இருந்தான் ! இவர்கள் மறைவான இடத்தில் அமர்ந்து பங்கு போட ஆரம்பித்து இருந்தனர்! உனக்கு ஒன்று எனக்கு ஒன்று ! என்று. முழு போதையில் இருந்தவன் பேய் தான் பேசுது என்று அடித்து பிடித்து பக்கத்தில் இருந்த சர்ச்சுக்கு போய் அங்கு இருந்த பாதிரியாரிடம் , ஃபாதர் சீக்கிரம் வாங்க அங்கே இரண்டு பேய் பங்கு போட்டு கொண்டு இருக்கு என்று! ஃபாதரும் சரி என்ன தான் நடக்கிறது என்று பார்க்க அவனுடன் போனார். கேட்டை திறந்து உள்ளே போனவர்! சட்டென்று நின்றார். பங்கு போட்டு முடித்து இருந்தார்கள். ஒருவன் கேட்டான் அப்ப கேட்டில் இருக்கும் இரண்டு! உடனே அடுத்த பையன் சொன்னான்! உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு! என்று அவ்வளவுதான் இப்ப ஃபாதர் தலை தெறிக்க ஓட ஆரம்பித்து இருந்தார்!
  14. வயித்து பிழைப்புக்கு களவெடுப்பவனை மன்னிக்கலாம் ஆனால் இப்படியான சுகபோகத்துக்கு அடிமையானவர்களை மன்னிக்க முடியாது .
  15. பாவம் எடை மிசின் தாங்காது மக்கர் பன்னபோவுது மச்சான் நல்ல சுகமோ விசாரித்ததை கூறி விடுங்கள் நன்றி .
  16. இப்படி அரசியை இறக்கி விலையை குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தால் அனுராவை வழக்கமான அரசியல்வாதியாகவே பார்க்க தோணுது இவர்களின் ஆட்சியில் மக்களிடம் நல்லபெயர் வாங்க இப்படி அரசியல் செய்தால் மீட்சி என்பது கிடையாது இவ்வளவு காலமும் தமிழர் எதிர்ப்பு இனவாத போதையில் இருந்த சிங்களவர்கள் பழி சுமக்கத்தான் வேணும் இல்லையென்றால் எந்தபக்கமும் மூவ் பண்ணினாலும் checkmate தான் .
  17. உங்களுக்கே ஆத்திரம் வருதுல்ல? நகைச்சுவை….. ஒரு ரயில் திடீரென வயலில் இறங்கி ஓடி நல்ல வேளையாக மறுபடி டிராக்கில் ஏறி ஓடியது..ஓட்டுநர் மீது ரயில்வே துறை விசாரணை நடந்தது... ஏன் வண்டியை வயலில் இறக்கினீர்கள்?தண்டவாளத்தில் ஒரு ஆள் ஹாயா நடந்து போனான்..ஹாரன் அடிக்க வேண்டியதுதானே?பாத்த உடனே ஹாரன் அடிச்சேன்.. அவன் விலகல..மறுபடியும் ஹாரன் அடிக்கலயா?அடித்தேன். ஹாரனை அழுத்தி அடிச்சேன் .. அவன் விலகவே இல்லை..அப்போ பரவாயில்லனு அவன் மேல ஏத்த வேண்டியது தானே... அவன் மேல ஏத்த உங்களுக்கே ஆத்திரம் வருதுல்ல?அப்போ எனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்திருக்கும்? ஆனா வண்டி கிட்ட வந்த உடனே அந்த திமிரு பிடிச்சவன் வயல்ல இறங்கி ஓட ஆரம்பிச்சிட்டான்...
  18. பார் லிஸ்ட் விடுகிரம் என்ற ஒரு வார்த்தையில் தமிழ் சனம் மயங்கி போய் கிடக்கு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் ஒரேயடியாக மறந்து போய் கிடக்கினம் .
  19. நான் யார் என்ன செய்கிறன் என்ற விபரங்கள் உங்களிடம் இருக்கு ஆனாலும் யாழில் என்னை பற்றி எழுதும்போது வேறு விதமாகத்தான் எழுது கிரியல் அதுக்கு நன்றி பாஸ் . முதலில் அந்த சன்ரைஸ் பப் காணாமல் போகணும் 😄
  20. நாங்க ஒன்றும் ஸ்ரீயின் அடி பொடி இல்லை முதலில் உங்க சுமத்து யாருக்கு பார் லைசன்ஸ் வாங்கினார் என்று பாருங்க இல்லை என்றால் ....................................................................................?
  21. அவ சும்மா அடித்து விடுகிறா உண்மையிலே அவ அங்கு வந்து இருந்தால் யாழில் உங்கள் கருத்து திரியை பார்க்காமல் போயிருக்க மாட்டா அப்படி சிலவேளை அவ வந்து இருந்தாலும் உங்களுக்கு கட்டாயம் பலகார தட்டுப்பாடு வந்து இருக்கும் .😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.