Everything posted by பெருமாள்
-
சிரிக்க மட்டும் வாங்க
மெளனம் சம்மதம்! மட்டும் இல்ல! பொருளும் கூட ! ஒரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் திறமையும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னர் சினந்து கொண்டார். அவரை எப்படியாவது கீழ்மைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஒருநாள் அவையில், மன்ன்ர் அறிவாளியான அந்த அமைச்சரைப் பார்த்து, “முட்டாள்களிடம் பழக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த அமைச்சர் எவ்வித பதிலும் கூறாமல் மெளனமாக இருந்தார். அவர் பதில் தெரியாமல் இருக்கிறார் போலும் என்று நினைத்த மன்னர், “என்ன அமைச்சரே! நான் கேட்ட கேள்வி உமது செவிகளில் விழவில்லையா? “முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” என்று மீண்டும் கேட்டார். அதற்கும் பதில் கூறாமல் மெளனமாகவே அமைச்சர் இருந்தார். இதனால் கோபமடைந்த மன்னர், “என்ன, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எதுவும் கூறாமல் விழிக்கிறீரே! நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லையா? அல்லது என் கேள்விக்குப் பதில் தெரியவில்லையா?” என்று கேட்டார். அமைச்சர், மன்னருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “மன்னர் பெருமானே! உங்கள் கேள்விக்கு உடனே பதிலளித்து விட்டேனே! நீங்கள் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை!” என்றார். உடனே மன்னன், “மூன்று முறை நான் கேட்டும் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அல்லவா இருந்தீர்!” என்றான். அதற்கு அமைச்சர், “ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பேச வேண்டுமென்றால் மெளனம் தான் சாதிக்க வேண்டும்!” என்றார். மன்னர் வாயடைத்துப் போனார். ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவனுக்குப் பிடித்தவரின் மௌனம் தான். பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது!
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
நல்ல நாள் பார்த்து வாடகை வீட்டை காலி செய்து விட்டு சொந்த வீட்டுக்கு குடி போகலாம் என்று நாள் குறித்தான்! சொந்தங்கள், பந்தங்கள் , நட்புகள் எல்லாவற்றையும் குறித்த நாளில் வர சொல்லி இருந்தான்! அவன் கெட்ட நேரம் அவன் வீடு கட்டி இருந்த இடத்தில் நிலை நடுக்கம் வந்து வீடு தரைமட்டம் ஆனது! புது மனை வீட்டுக்கு வந்திருந்த அனைவரும் இடிந்த வீட்டிற்கு முன் அதிர்ச்சியில் சோகமாக நிற்க! அவனோ! வாங்கி வந்து இருந்த இனிப்புகளை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் கொடுக்க! வந்து இருந்தவர்கள் ! அவனை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா 25 வருட உழைப்பு இப்படி மண்ணாக போய் விட்டது! எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டு இருக்க என்று கேட்க! அதற்கு அவன் சொன்னான்! ஐயா வீடு குடி புகும் முன் இடிந்து போனது நல்லது தான்! ஒரு வேளை நாங்க குடும்பத்துடன் குடி வந்த பின் வீடு இடிந்து போய் இருந்தால்! எண்ணவாகி இருக்கும் ! அதான் என்றான் அமைதியாக!
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
பிழையான செய்தி என்று யு டுப் காரங்களுக்கு ரிப்போர்ட் அவ்வளவுதான் .
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
அனுரா சுமத்துதிரனை கண்டு கொள்ளவே இல்லை அதுக்காகவே இந்த பில்டாப்பு. அதுக்காக முன்னே சொன்ன சுமத்து சொன்ன வாக்கியங்கள் ஐநாவுக்கு தெரியாதா ? இனி இந்திய பயணம் முடிந்தது இனி சைனா பயணம் போகணும் அனுரா பார்க்கலாம் எப்படி சுளிக்கிறார் என்று ? மாவீரார் நினைவு கூர்தலை கூட இம்முறை கெடு பிடி அற்று ஒரு வரைமுறைக்குள் நினைவு கூர்வ இறங்கி வந்து இருக்கிறார்கள் அதுக்காக பழைய விடயங்களை விட்டு விட முடியாதது.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
என்ன வித்தியாசம் ? படிச்ச மேதாவி நீங்கள் கொஞ்சம் விளங்கபடுத்துங்க 😄
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நேற்று சண்டே சாயந்திரம் சாப்பிடலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட் போனேன் !!!!!! பார்த்தா ஒரே கூட்டம் !!!!!!! எல்லா டேபிளும் ஆள் உட்கார்ந்து இருக்காங்க !!!! அதுவும் சோடி !!!! !சோடியா !!!!!!! எனக்கு பசி !!!!!!!!!!! மற்றும் கொஞ்சம் லைட்டா வயித்தெரிச்சல் ! உடனே போனை எடுத்தேன் !!!!!!!! நண்பனை அழைத்தேன் !!!!!! " மச்சான் உன் ஆளு இங்கதான் யாருடனோ !!!!!!!!! கடலை போட்டு கொண்டு !!!!!!! மன்னிக்கவும் சாப்பிட்டு கொண்டு இருக்கு !!!!! சீக்கிரம் வா மச்சான் !!!!!! " என்று சொன்ன மாத்திரம் தான் ! ரெண்டே நிமிசத்தில் !! ஆறு டேபிள் காலி !!!!!! நான் பொறுமையா அமர்ந்து சாப்பிட்டு வந்தேன் ! வயிறும் நிறைந்தது ! வயித்தெரிச்சல் குறைந்தது !
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார். போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்.. அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும். சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது. அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர். அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி வெடவெடவென நின்றான். பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில் கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான். சரி இப்ப நல்ல கருத்துக்களை பார்ப்போம்! 1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.) 2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..) 3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும். 4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)
-
குட்டிக் கதைகள்.
ஒரு அரேபிய ஷேக் லண்டன் சென்று இருந்தார்! ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல டாக்சியில் ஏறினார்! நல்ல ஆங்கில பாடல் ஒலித்து கொண்டு இருக்க! நம்ம ஷேக் ட்ரைவர் கிட்ட அப்பா கொஞ்சம் அந்த பாட்டை நிப்பாட்டு! என்று கேட்க அதற்கு அவர் இல்லப்பா எங்க இறை தூதர் வாழ்ந்த காலத்தில் இந்த மாதிரி ரேடியோ , மற்றும் மனதை மயக்கும் இசைகள் இல்லை எங்களுக்கு அனுமதியும் இல்லை என்று சொல்ல! ஆங்கில டாக்சி டிரைவருக்கு கோபம் வர அதை வெளியில் காட்டாமல், பாய் சொல்றேன் என்று கோவித்து கொள்ளாதீர்கள் இறை தூதர் இருந்த காலத்தில் கார் கூட இல்லை ! மேலும் அதிக விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் நீங்க கீழே இறங்கி காத்திருங்கள் ஒட்டகம் வரும் என்று சொல்லி அவரை கீழே இறக்கி விட்டு போய் விட்டார்.
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
அதென்ன வேறு ?
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
உங்களின் புலி எதிர்ப்பு வாதம் தமிழ்தேசிய எதிர்ப்பு இப்படி எழுத வைக்குது என்று நினைக்கிறேன் கொஞ்சம் வெளியாலையும் எட்டிபாருங்க உலகம் வெகு வேகமாய் போய் கொண்டு இருக்கு .
-
மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் - இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி
இது எந்த கூட்டம் ?
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
அதுக்கு காரணமே நீங்கள் தானே விளங்கா விட்டால் ஓசி விசுகோத்து க்கு யார் படிக்க போனார்கள் ? out of box மைன்ட் என்றால் விளக்கமாக சொல்லுங்க பார்கலாம் பேராண்டி ?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
எத்தனை முறை நிருபிப்பது ?
-
இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ...........!
-
சிரிக்க மட்டும் வாங்க
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது. சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
-
சிரிய கிளர்ச்சியாளர்களுடன் பிரித்தானியா கொண்டுள்ள தொடர்பு!
சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
-
பிரித்தானியா இணையும் பாரிய வர்த்தக ஒப்பந்தம்
Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
- தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
போர்க்ளத்துக்கும் ஊர் சண்டியர்களின் கொள்ளுபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகம்கள் எங்கள் இனத்தின் சாபகேடு . கிட்ட தட்ட தமிழ் அரசியல் குரங்கு கூட்டம் பங்கு பிரிக்க வெளிக்கிட்ட கதை தான் . குறைந்தது நாலு கொலையாவது நடந்து இருந்தால் தமிழ்சனம் சந்தோசபட்டு இருக்கும் .
-
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன!
"முடிந்தால் குடுமியை பிடி முடியாவிட்டால் காலை பிடித்துக் கொள்" இது கடந்த 2500 ஆண்டுகளாக இலங்கை ராஜதந்திரத்தின் பாரம்பரியம். அதுவும் குறிப்பாக பௌத்த சிங்கள ராஜதந்திர அணுகுமுறை என்று சொல்வதே பொருந்தும். அத்தகைய ஒரு தொடர்ச்சி குன்றாத ராஜதந்திரப் பின்னணியைக் கொண்ட இலங்கை அரசு இயந்திரம் எப்போதும் எதிரிகளின் முன்னே தன்னை திடமாகவும், நம்பிக்கையாகவும் நின்று கொண்டுதான் அரசியல் காய்களை நகர்த்தும். இந்த அடிப்படையில்தான் இலங்கையின் புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் தனது ராஜதந்திர யூகத்தால் முரண்பட்ட சக்திகளான இந்தியாவையும், சீனாவையும், மேற்குலகத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி கடந்த காலத்தில் வெற்றி கொண்டார்கள் எதிர்காலத்தில் எப்படி வெற்றி கொள்வர் என்பதனை சற்று விரிவாக பார்ப்போம். ராஜதந்திர மூளைகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும் அவரை சிங்கள தேசத்தின் ராஜதந்திர மூளைகள் தூணாக நின்று தாங்கி அந்த அந்த சிம்மாசனத்தை அலங்கரிக்கச் செய்துள்ளனர். கடந்த 76 ஆண்டுகால ஜனநாயக அரசியலிலும் இது தொடர்கிறது. அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதராகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ பார்க்க கூடாது. சிங்கள ராஜதந்திர கட்டமைப்புக்குள்ளால், பல நூற்றாண்டு காலம் சிங்கள சிம்மாசனத்தை தொடர்ச்சியாக புடை சூழப்பட்டிருக்கும் சிங்கள ராஜதந்திர மூளைகளின் செயற்திறன், தொடர் ராஜதந்திர செயற்பாடுகளினால் சேமிக்கப்பட்ட கூட்டு ராஜதந்திர வளர்ச்சியின் கொள்ளளவு என்பவற்றிற்கு ஊடாகவே பார்க்க வேண்டும். அரசியல் வரலாற்று கூற்று ஒன்றை இங்கே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. "சிம்மாசனங்களின் கீழ் நசிந்து கிடக்கும் மூளைகளின் எண்ணிக்கையோ எண்ணற்றவை" எனவே வரலாற்றுத் தொடர் வளர்ச்சியும், தொன்மையும், செயற்திறன் மிக்க ராஜதந்திர மூளைகள் சிம்மாசனங்களை எப்போதும் புடை சூழ்ந்து தாங்கி நிற்கின்றன. அது சிங்கள தேசத்தின் சிம்மாசனத்திற்கும் பொருத்தமானதாகவே உள்ளது. சிங்களதேச சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் அந்த சிம்மாசனம் ராஜதந்திர மூளைகளால் அலங்கரிக்கப்படும் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் அதற்கு சிம்மசொப்பனமாக நின்று ராஜதந்திர மூளைகள் வெற்றியைத் தேடிக் கொடுக்கும், கொடுத்துள்ளனர் என்பதை இலங்கையின் கடந்கால அரசியல் வரலாறு நிரூபித்திருக்கிறது. இந்திய துணைக்கண்ட புவிசார் அரசியல் இலங்கை அரசுக்கு எப்போதும் சவாலாக, அச்சுறுத்தலாக இருந்திருக்கின்றன. அது அசோகப் பேரரசாயினும் சரி சோழப் பேரரசாயினும் சரி இலங்கைத் தீவின் இறையாண்மைக்கு சவாலாக இருந்திருக்கின்றன. இந்து சமுத்திரத்தின் காவலனாக இந்தப் பிராந்தியத்தை கட்டுப்படுத்தக்கூடிய வளங்களைக் கொண்டதாக இந்திய அரசு வளர்ந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இலங்கைக்கு எதிரே நிற்கின்ற இந்த இந்தியா என்கின்ற பெரிய மதயானையை ஒரு யானைப்பாகன் எவ்வாறு அதன் கழுத்தில் அமர்ந்திருந்து சிறிய அங்குசத்தால் எவ்வாறு கட்டுப்படுத்துகிறானோ அவ்வாறே இந்தியாவை இலங்கை தனது ராஜதந்திர அங்குசத்தாலும், வியூகத்தாலும், செயற்பாடுகளினாலும் தொடர்ந்தும் கட்டுப்படுத்தியும் வெற்றி கொண்டும் வந்துள்ளனர். அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடிப்படையில் இந்திய எதிர்ப்பு வாதியாக இருந்தாலும் அவரை அந்த சிம்மாசனத்தில் தொடர்ந்து தக்கவைக்கவும், இந்தியாவை வெற்றிகொள்வதற்குமான வழிமுறைகளை சிங்கள ராஜதந்திர வட்டாரங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக வெற்றியின் பாதையில் வழிநடத்தப்படுவார். இங்கே இலங்கையின் ராஜதந்திர வரலாற்றை சற்று பார்க்க வேண்டும். உலகளாவிய அரசியல் ராஜதந்திர வரலாற்றில் தொடர்ச்சி குன்றாமல் எழுதப்பட்ட வரலாற்றை இலங்கையை விடுத்து வேற எந்த ஒரு நாட்டிலும் காணமுடியாது. பெருமித உணர்வு இலங்கை தீவில் மட்டுமே கடந்த 2500 ஆண்டுகால வரலாற்றை தொடர்ச்சி குன்றாமல் கி.பி 6ம் நூற்றாண்டில் மகாநாம தேரர் என்ற பௌத்த துறவியினால் பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூலின் ஊடாக தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்திருக்கிறது. விஜயன் தொடக்கம் அநுரகுமார திசாநாயக்க வரை அது தொடர்ச்சி குன்றாமல் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மகாவம்சம் என்ற நூலுக்கு உலகளாவிய ஒரு மதிப்பு உண்டு. அந்த நூலில் கூறப்பட்ட பல விடயங்கள் புனைகதைகளாகவோ, பொய்யாகவோ, ஏற்றுக் கொள்ள முடியாததாகவோ இருக்கலாம். ஆனால் அது ஒரு தொடர்ச்சி ஒன்றாத அரசியல் ராஜதந்திர வரலாற்றை பதிவிட்டு இருக்கிறது என்ற அடிப்படையில் ராஜதந்திரத் தொடர்ச்சியை அது எழுதி வைத்திருக்கிறது என்ற அடிப்படையில் அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதேபோல நவீன வரலாற்றில் மெண்டிஸ் என்னும் சிங்கள வரலாற்று ஆசிரியர் இலங்கையின் 2500 ஆண்டுகால ராஜதந்திர வரலாற்றை 'Foreign Relations of Sri Lanka' (Earliest Times to 1965 L. B. Mendis) என்ற ஆங்கில நூலில் விரிவாக எழுதியுள்ளார். உலகளாவிய நாடுகளில் அந்நாடுகளின் ஒரு சில காலகட்டங்களுக்கான ராஜதந்திர வரலாற்றையே எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், இலங்கை ஒட்டுமொத்தமான ஒரு நீண்ட ராஜதந்திர வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கின்ற வரலாற்று உணர்வு மிக்க மக்கள் கூட்டத்தை கொண்ட நாடு என்ற அடிப்படையில் தான் சிங்கள தேசத்தின் சமூகவியலை ஈழத்தமிழர் பார்க்க வேண்டும். ஒரு தொடர்ச்சி ஒன்றாத அரசியல் வரலாற்று ராஜதந்திர நடைமுறைகளை எழுதி வைத்திருக்கிறோம் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கு தங்களுடைய வரலாற்றிலும், அரசியலிலும், ராஜதந்திரத்திலும் ஒரு பெருமிதம் உண்டு. அந்தப் பெருமித உணர்வு அவர்களுக்கு மேலான, மேன்மையான ராஜதந்திர உணர்வையும், ஊக்கத்தையும், கர்வத்தையும் கொடுக்கிறது. அந்தப் பெருமித உணர்வு அந்த மக்கள் கூட்டத்தின் ராஜதந்திர வளர்ச்சிக்கான அடிப்படை மனநிலையையும், வரலாற்று உணர்வையும், யாரையும் வெற்றி கொள்வோம் என்ற துணிவையும், திடசங்கர்பத்தையும் கொடுத்திருக்கிறது. அந்த அடித்தளத்தில் இருந்து கொண்டுதான் சிங்கள மக்களின் ராஜதந்திர வட்டாரங்கள் நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது மிகப்பலமாகவும், வேகமாகவும் சாதுரியமாகவும் வளர்ச்சி பெற்று இன்று மேல் நிலையில் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள தவறக் கூடாது. இலங்கைத் தீவின் மீது முதலாவது படையெடுப்பு கிமு 3ம் நூற்றாண்டில் (கி.மு247) பௌத்தம் என்ற மதத்தின் பெயரால் அசோகச் சக்கரவர்த்தியினால் மேற்கொள்ளப்பட்டது. மௌரியப் பேரரசின் மன்னன் அசோகன் அனுப்பிய மணிமுடியையும் அசோகனின் “தேவநம்பிய“ என்ற பட்டப் பெயரையும் தாங்கியே சிம்மாசனத்தில் அமர வேண்டிய நிலை தீச மன்னனுக்கு (தேவநாம்பியதீச)ஏற்பட்டது. ஆயினும் தன்மீது வீசப்பட்ட அந்த பௌத்தம் என்கின்ற பலமான ஆக்கிரமிப்பை தமக்கு கேடயமாக தூக்கிப்பிடித்து பிற்காலத்தில் பௌத்தத்தின் பிரிவுகளும், இந்து மதமும் இலங்கையை அடிபணிய வைக்க முடியாதபடி தேரவாத பௌத்தம் சிங்கள மக்களுக்கு கேடயமாக, காப்பரனாக மாற்றியமைக்கப்பட்டது. எதிரியின் எதிரி உனது நண்பன் அந்த பௌத்தமே இன்றும் சிங்கள மக்கள் கூட்டத்தை காக்கின்ற காவலனாக, தடுப்புச் சுவராக சிங்கள மக்களின் சுயாதீனத்தை பேணக்கூடிய அடித்தளமாக அமைந்திருக்கிறது. அவ்வாறே சோழப்பேரரசு எழுச்சி பெற்ற காலத்திலும் சிங்கள மன்னர்கள் “எதிரியின் எதிரி உனது நண்பன்“ என்ற கோட்பாட்டை பின்பற்றி காலத்துக்கு காலம் பாண்டிய, சேர மன்னர்களுடன் நட்புறவைப் பூண்டு சோழர் ஆதிக்கத்தை சிங்கள தேசத்தில் தடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அரியணை ஏற வேண்டிய சோழ இளவரசர் ஆதித்த கரிகாலரை படுகொலை செய்ததில் சிங்கள ராஜதந்திரத்தின் கரங்களும் இருந்துள்ளன என்ற வரலாற்றையும் மறந்து விடக்கூடாது. இந்த விடயத்தில் எதிரியை முளையிலேயே கிள்ளும் தந்திரத்தை அன்று அவர்கள் கையாண்டுள்ளார்கள் என்பது புலனாகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையின் கரையோரத்தை ஒல்லாந்தர் கைப்பற்றிய போது விமலதர்மசூரியன் கண்டிராச்சியத்தை அதனுடைய நில அமைவு காரணமாக சிங்கள மக்களின் திரட்சி, பௌத்தத்தின் வளர்ச்சி காரணமாகவும் தன்னை தனித்துவமாகவும் பலமாகவும் வைத்துக்கொண்டு விமலதர்மசூரியன் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்“ என்று ஒல்லாந்த ஆளுநருக்கு தூது அனுப்பினான். இந்த வரலாற்று பின்னணியில் இருந்துதான் ஜே.ஆர் 1983ம் ஆண்டு ஜூலை படுகொலையின் போது தமிழ் மக்களை நோக்கி "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று அரைகூவல் விடுத்ததன் ஊடாக சிங்கள மக்களின் கடந்த கால வரலாற்று உணர்வைத் தட்டி எழுப்பி சிங்கள மக்களுக்கு கொலை உணர்வை தூண்டி தமிழ் மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்யத் தூண்டினார் என்பதனை வரலாற்று நடைமுறைகளுக்கு ஊடாக நாம் பார்க்க வேண்டும். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆர் சிங்கள ராஜதந்திரம் பற்றி குறிப்பிடுகையில் சிங்கள ராஜதந்திரம் எமக்கு (Golden threads) அதாவது சிங்கள மக்களுக்கே உரித்தான பெறுமதிவாய்ந்த ராஜதந்திர மூலோபாயாம் என்பது எங்களுக்கே உரித்தான தங்கச் சங்கிலி என்று பொருள் படவே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் வார்த்தைகள் அமைந்துள்ளன. இதன் உட்பொருள் என்னவெனில் எக்காலத்திற்கும் பொருத்தமான வளம் பொருந்திய ராஜதந்திரம் மூலோபாயம் சிங்கள மக்களிடன் உண்டு அதனை நாம் எப்போதும் பயன்படுத்துவோம் என்பதாகவே உள்ளது. இத்தகைய ராஜதந்திரத்தை டி எஸ் சேனநாயக்க பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தியுள்ளார். இந்தியா சுதந்திர விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் இந்தியா விடுதலை பெறப்போவது நிச்சயம் எனறு டி.எஸ் உணர்ந்தபோது இலங்கைக்கான விடுதலையை கத்தியின்றி, இரத்தமின்றி நோகாமல் நொங்கு குடிப்பது போன்று விடுதலையைச் சாத்தியம் ஆக்குவதற்கான தந்துரோபாயத்தை வகுத்தார். அதன் அடிப்படையில்த்தான் 20-06-1940ல் இலங்கை தேசிய காங்கிரசின் சார்பில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியத் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்கு “சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சிமுறையோ அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறையோ (Federation or Close Union) அமைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்துரையாட விரும்புகிறோம்“ என்று கடிதம் எழுதியிருந்தார். (ஆதாரம்- மைக்கல் றொபேர்ட் தொகுத்த Documents of the Ceylon National Congress என்ற நூல்) "நாம் இந்திய கூட்டாட்சி அரசில் இணைய ஆர்வமாக உள்ளோம்" என்று கடிதம் எழுதியோடு மாத்திரமல்ல சிங்கள அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரசின் மகாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்த ஆதரவு என்பது உண்மையில் இந்திய காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதற்காகவல்ல அவ்வாறு ஒரு போக்கை காட்டிவிட்டு பிரித்தானியருடன் பேரம் பேசுவதற்கான ஒரு களச் சூழலை ஏற்படுத்துவதையே நோக்காகக் கொண்டது. இரண்டாவது அர்த்தத்தில் பிரித்தானியரை நிர்பந்திக்கச் செய்வது. எமக்கான விடுதலையை தராவிட்டால் நாம் இந்தியாவுடன் இணைந்து விடுவோம் என்பதன் மூலம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் இந்து சமுத்திர ஆளுகையை முடக்கி விடுவோம் என்ற எச்சரிப்பதாகவும் அமைந்தது. ராஜததந்திரி ஜே.ஆர் அவ்வாறே 06-05-1942ல் மும்பையில் டி.எஸ் சேனநாயக்கரை பார்த்து சுதந்திரம் அடையப்போகும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கும் என டைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையாளர் கேட்ட டி.எஸ். சேனநாயக்க அளித்த நேர்காணலில் “பெரிய பலம் பொருந்திய இந்திய சமஷ்டி அமைப்புக்குள் ஓர் அங்கமாக இலங்கை இணைவது இலங்கையின் நலனுக்கு உகந்தது“ என்றும் "நாம் விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் பக்கமே நிற்போம்" என்று பதிலளித்திருந்தார். இந்த அறிவிப்பானது இந்திய பத்திரிகைகளில் வெளிவந்து இந்திய மக்களின் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. இதன் மூலம் இந்தியர்களின் பொது மக்கள் அபிப்பிராயம்(Public opinion) பெறுவதிலும் இந்திய மக்களைக் குஷிப்படுத்துவதிலும் தம்மை நம்ப வைப்பதிலும் கவனமாக இருந்தார். அதன் மூலம் சிங்கள தேசத்தின் நலன்களை அடைவதிலும் சிங்கள ராஜதந்திரிகள் அல்லது தலைவர்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுவர். இவ்வாறுதான் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்து சமுத்திரத்தை அணு ஆயுதமற்ற சமாதான பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்று ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு அரை கூவல் விடுத்தார். இந்து சமுத்திரத்தை சமாதான பிராந்தியமாக ஒருபோதும் மாற்ற முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆயினும், இந்து சமுத்திரத்தை அனுவாயுதமற்ற சமாதான பிராந்தியமாக அறிவிக்க வேண்டும் என்பதன் மூலம் இந்திய மக்களின் பொது அபிப்பிராயத்தையும், விருப்பையும் அவர் பெற்றுக் கொண்டார் என்பது மாத்திரமல்ல 1962 சீன-இந்திய யுத்தத்தின் போது சீனாவின் பக்கம் இலங்கை நின்றது என்ற கரையையும் கழுவிக் கொண்டார். தங்கள் மீதான பொது அபிப்பிராயத்தை திரட்டுவதில் இலங்கையின் கடந்த அரசியல் வரலாற்றில் எப்போதுமே அவர்கள் வெற்றியையே பெற்றிருக்கிறார்கள். தமிழினத்தின் மீதான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அதனால் ஏற்பட்ட அபகீர்த்தியைகூட உலகப் பொது அபிப்பிராயத்தில் இருந்து பெரிய சேதமின்றி கடந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதே டி.எஸ் நேனநாயக்க 1947ஆம் ஆண்டு இலங்கை தேர்தலில் பிரதமராக வந்தவுடன் பிரித்தானிய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டார். தாம் “பிரித்தானியாவின் நல்ல நண்பர்“ என்றும் “யுத்தத்தின் போதும் சமாதானத்தின் போதும் பிரித்தானியாவின் பக்கம் நின்றே எப்போதும் செயற்பட்டவர்கள்“ என்றும் எனவே தம்மீது நம்பிக்கை வைக்குமாறும் ஓலிவர் குணதிலக பிரித்தானியருடன் பலகட்ட பேச்சுக்களின் போது எடுத்துக்கூறி, யாப்பு உருவாக்கம், இலங்கை சுதந்திரம் அடைவது பற்றிய தீர்மானம், பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பிரித்தானிய தளங்களை அமைத்தல் போன்ற முடிவுகளை டி.எஸ்.சேனநாயக்கவின் சார்பில் நிறைவேற்றினார். (இவை தொடர்பான விபரங்களை Sir Charles Joseph Jeffries vOjpa OEG, A Biography of Sir Oliver Ernest Goonetilake என்ற நூலில் வரும் Prelude to Freedom’, ‘Crucial Negotiations’ போன்ற அத்தியாயங்களின் 88, 89ம் பக்கங்களில் காணலாம்.) அதுவரை காலமும் இந்தியாவுக்கு ஆதரவு முகம் காட்டிய டி எஸ் சேனாநாயக்க இந்தியாவின் முதுகில் ஓங்கி குத்தி விட்டார் என்ற வரலாற்றையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு போக்கு காட்டி இன்னொரு இடத்தில் ராஜதந்திர வியூகத்தை இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் ஜே.ஆர் இப்படிச் சொன்னார் "நான் ஒரு குத்துச்சண்டை வீரன் எதிரிக்கு மூக்கில் குத்துவதாக பாசாங்கு செய்து மூக்கை பார்த்த வண்ணம் நின்று கொண்டு அடி வயிற்றுக்கு இலக்கு வைத்து குத்துவேன்" அந்த அளவிற்கு இலங்கையின் நவீன வரலாற்றில் ராஜதந்திரத்தில் ஜே.ஆர் முதன்மையானவர், முக்கியமானவர். உண்மையில் நவீன அரசியல் ராஜதந்திரத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மாக்கியவல்லியும், இந்தியா ராஜதந்திரியான சாணக்கியரும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் ராஜதந்திரத்தை ஜே.ஆரிடம் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னால் மிகையில்லை. இந்தப் பின்னணியில் தற்போது இந்தியாவுக்கு சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி எதைச் சுமந்து செல்லப் போகிறார், எதை சுமந்து வரப் போகிறார் என்று பார்ப்போமானால் தங்கச்சங்கிலி ராஜதந்திர பாரம்பரியத்தின் பாதுகாப்புடனும் நம்பிக்கையுடனும் இந்தியாவுக்குள் நுழையப்போகும் அநுர. https://tamilwin.com/article/what-is-anura-carrying-to-india-1734290079
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு. வயது போக போக இளமயாய் தோன்றுவது போல் உள்ளது பேப்பர் உடன் சேர்ந்து எடுத்த படம் பார்த்தேன் கொஞ்சம் முதல் .
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
இனி விசர் சுமத்திரன் கனடா பக்கம் போனால் உடுப்பை கழட்டி விட்டு அடி போட்டுத்தான் அனுப்புங்கள் .
- மனித பாவனைக்கு உதவாத அரிசி இறக்குமதி! திருப்பி அனுப்ப நடவடிக்கை
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
எனக்கென்னவோ சுமத்திர கள்ளனும் இந்த பார் கள்ளனும் உள்ளுக்குள் டீல் போட்டு விளையாட்டு காட்டுகினம் போல் உள்ளது . இந்த எட்டு நாளைக்குள் எண்ணத்தை செய்து விடபோகிறார் ? அநேகமா இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் பினாமி சொத்து லண்டனிலும் கனடாவிலும் தான் குவிந்து கிடக்கின்றது போல் உள்ளது .