Everything posted by பெருமாள்
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
சனத் கமகே மூலம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அம்பலாந்தோட்டை வர்த்தகர் சங்கம், சிவப்பு அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.220 என்ற கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க எடுத்த நடவடிக்கையால், நகரில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்பாட்டு விலைக்கு ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஐந்து கிலோ அரிசியை வர்த்தகர் சங்கம் வழங்கியது. இருப்பினும், கையிருப்பு முடிந்ததும், நூற்றுக்கணக்கான நுகர்வோர் ஏமாற்றத்துடன் வெளியேறினர். https://www.dailymirror.lk/breaking-news/Queues-back-people-jostle-for-rice-purchases/108-299561
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றையதினம்(06.01.2025) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன்போது, கருத்து தெரிவித்த தாயார் ஒருவர், மகனை பெல்ஜியம் செல்வதற்கு உதவுவதாக கூறிய தனது சகோதரன், எங்களை ஏமாற்றி மகனை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகனுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு பின்பு இராணுவத்தில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-in-russian-army-issue-1736165388
-
தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய அரிசி தட்டுப்பாடு - புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள்
நாட்டுக்கு வருகை தரும் சுற்றலா பயணிகளை நம்பியே வருமானம் எதிர்பார்த்து இருந்தால் இதுதான் முடிவு .
-
விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை
பல விடயங்கள் சொல்லலாம் . விவேக் மீடியாவில் உச்சகட்ட வெளிசத்தில் இருந்தவர் . 1. சுசிர் பாலாஜியின் கொலையா தற்கொலையா தெரியாது அவர் என்ன சொன்னார் a1 வாடிக்கையாளர்கள் இருந்தே தரவு திருட்டு நடை பெறுகிறது என்று . அதே போல் சில கேள்விகளுக்கு விடை தெரியவில்லை யாழ் உறவுகளுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் . 2.குறைந்த விலையில் மொபைல் டீல் பிராட் பாண்ட் டீல் கிடைக்கும் சில வருடங்களில் சராசரி விலையையும் விட அதிக பணம் நமது பாங்கில் எடுத்து கொள்கிறார்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் குறைந்தது ஒரு மணி நேரம் காக்க வைப்பார்கள் இணைப்பு வாங்க போகையில் உள்ள வேகம் இந்த பிரச்னையை சொல்லி வெளியேற போகையில் உள்ள வேகத்தையும் கவனியுங்கள் . 3. ஒரு பொருளை வோசிங் மிசினை வாங்க முடிவு செய்து குடும்பத்தாருடன் கதைத்து போனில் உள்ள முக நூலை திறந்தால் வோசிங் மிசின் விளம்பரம் வருவது தற்செயல் ஆனதா ? 4.நமது வீட்டின் பின்புறம் ஆப்பிள் மரங்கள் உள்ளன நவம்பரில் குளிர் தொடங்கி யவுடன் பழம்கள் கொட்டி மரமும் மொட்டையாகி நிக்கும் அந்த கீழே விழுந்த பழங்களை அள்ளி வைப்பது ஒவ்வொரு விண்டரிலும் பெரிய வேலை ஆனால் சுப்பர் மார்கெட்களில் விண்டர் பொழுதுகளிலும் ஆப்பிள் பழம் விற்கிறார்களே எப்படி ? 5. gmail,ஹாட் மெயில் போன்றவை எமக்கு இலவசமாக தருகிறார்கள் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ? இப்படி நிறைய இருக்கின்றன கேள்விகளின் விடையில் உங்களுக்குரிய பதில் இருக்கும் .
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
இப்படி நீங்கள் கேள்வி கேட்பதால் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது அது கதைதான் சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம் . கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்.. கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று . புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?". சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது. "புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை. "புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது. புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை". அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது. "அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?". சிங்கம் பதிலளித்தது.. "புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை." உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்... எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!. நன்றி . சுமத்திரன் எனும் முட்டாள் விசரனால் தமிழரின் அரசியலை பலவருடங்கள் பின்னோக்கி தள்ளியுள்ளான் அதை புரிந்து கொள்ளாது சுமத்திரன் நல்லவன் வல்லவன் என்று புல் நீல நிறம் போல் வாதிடும் உங்களுடன் இனி இந்த திரியில் வாதிப்பதில் பலனில்லை நன்றி வணக்கம் .
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
அடுத்த தொற்று நோய் சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் வராமல் விடாது . கொர்னோ போன்ற பாதிப்பை தராது என்கிறார்கள் ஆனால் பொருளாதார சீரழிவை கொடுக்கும் . கொர்னோ நேரம் கோத்தா செய்வது சரி என்ற யாழ் கள சூரர்களை இப்பவும் தேடுகிறேன் முக்கிமாய் அவர் பேரை சொல்வதுக்கு முன் அவராவே வந்து சரண்டர் ஆவது நல்லது 😆 எல்லாம் பகிடிக்குத்தான் .
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
இரண்டு பட்டம் வேறு வாங்கியிருக்கா அதுவும் 2௦ வயதில் என்கிறார்கள் ஒரே குழப்பமா இருக்கு .
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
உங்களுக்கு ஆங்கிலம் படிப்பிக்க என்னால் முடியாது . கனடா நாடாளுமன்றத்தில் அதன் எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை தினம் கடைப்பிடிப்பு (மே 18) முன்மொழிவு தொடர்பான அறிவிப்பை கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது. இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய அளவிலான மோதலாக உருப்பெற்றுள்ளது. கனடா பிரதமர் தமிழர் இனப்படுகொலை தினமாக மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை மே 23ஆம் தேதி வெளியிட்ட பிறகு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான கனடா தூதுவரை நேரில் அழைத்து, கனடா அரசின் அறிவிப்பை முழுமையாக நிராகரிப்பதாக கூறினார். இலங்கை எம்.பி உதய கம்மன்பில இந்த விஷயத்தில் கனடாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். https://www.bbc.com/tamil/articles/ck7k07g900ro
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Tamil Genocide Remembrance Day: “Fifteen years ago, the quarter-century-long armed conflict in Sri Lanka came to an end. Tens of thousands of Tamils tragically lost their lives, including at the massacre in Mullivaikal. To this day, many more remain missing, injured, or displaced. Today, we honour the victims, survivors, and their loved ones, who live with the lasting pain caused by this senseless violence. “Two years ago, Canada’s Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day. We will always advocate for justice and accountability for the crimes committed during the conflict, as well as for the hardships faced by all in Sri Lanka. In 2023, we imposed sanctions against four former Sri Lankan government officials in response to their violations of human rights in the country during the armed conflict. “Canada is a strong defender of human rights in Sri Lanka. We are advancing our work with international partners to fully implement the United Nations Human Rights Council resolution adopted in October 2022, which calls for greater reconciliation, justice, accountability, and human rights in Sri Lanka. And we continue to urge the Government of Sri Lanka to respect freedom of religion, belief, and pluralism – essential values to build lasting peace. “Today reminds us of our shared responsibility to stand up for human rights, justice, and accountability – values that cannot be taken for granted. Canada will never stop its work to protect human rights across the world. On behalf of the Government of Canada, I invite Canadians to join in honouring the victims of the armed conflict in Sri Lanka. Together, let us reflect on how we can foster a better, more inclusive, and more peaceful world for everyone.” https://www.pm.gc.ca/en/news/statements/2024/05/18/statement-prime-minister-trudeau-on-tamil-genocide-remembrance-day
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
அப்ப கனடா அரசுக்கு புரிந்தது சுத்து மாத்து சுமத்திரனுக்கு விளங்கவில்லை சிலவேளை சாணியில் முக்கி எடுத்த செருப்பால் சுமத்திரனுக்கு தமிழ் மக்கள் திரத்தி திரத்தி அடி போட்டு இருந்தால் விளங்கி இருக்கும் . @Kapithan கடந்த தேர்தலில் தமிழ் சனம் நல்லதொரு முடிவை கொடுத்துள்ளார்கள் .இனி சுத்து மாத்து வெல்வது என்றால் கள்ள வோட்டுக்கள் மூலமே இல்லை பின் கதவு தான் அப்படி வந்தாலும் முன்பு போல் சுத்து மாத்து பண்ணினால் தமிழ் சனம் பொறுமையின் எல்லைக்கு சென்று விடுவார்கள் .6௦ வயதாகி விட்டது ஓய்வுக்கு போக சொல்லுங்க .
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
பல கோடி செலவழித்து எடுத்த good bad uglyஅசித்து படமும் வெளிவருவதுக்கு முன்பே பெட்டிக்குள் முடக்கபட்டு விட்டது . Good Bad Ugly: கதைத்திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி? படத்தின் டீசர் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில், படக்குழு புது சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதாவது, விடாமுயற்சி படம், ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல் என்றும், இதனை ப்ரேக் டவுன் படக்குழுவினரிடம் எந்த விதமான உரிமம் பெறாமல் படத்தினை எடுத்து விட்டதாகவும், லைகா தரப்பில் படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்குவதாக முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வருகின்றன. இப்படியான நிலையில், ப்ரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாராமவுண்ட் நிறுவனம், ரூபாய் 150 கோடு நஷ்ட ஈடு கேட்டு லைகாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read more at: https://tamil.filmibeat.com/news/ajithkumar-good-bad-ugly-director-adhik-ravichandran-opens-about-gbu-fans-happy-148009.html
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
சிங்களவர்கள் என்றாலும் தமிழர்கள் என்றாலும் என்ன செய்தாவது அந்த நாட்டை விட்டு ஓடித்தப்பிக்கணும் எனும் நிலை .
-
விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை
தனிப்பட்ட ஒவொருவரும் கண்காணிப்பில் உள்ளோம் ஆகவே இரண்டு மாதங்களுக்கு ஒரு புது ஐடியை பார்வையில் இடுவது நல்லது . உதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மெயில் ஐடியை மாற்றுவது .
-
சீனாவில் புதிய வைரஸ் பரவல் - இலங்கை எச்சரிக்கை நிலையில்
உலகம் முழுக்க இருக்கிற சீனர்கள் தங்களின் நாட்டுக்கு திரும்பி ஜனவரி 29 அவர்களின் புது வருசத்தை கொண்டாடி விட்டு அப்படியே இலவச இணைப்பாக புதிய தொற்று நோயோடு வந்து இறங்கி இங்குள்ள நாடுகளில் நோயை பரப்ப போகினம் .
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
இந்த ஜென்மத்தில் இவைகள் திருந்த மாட்டினம் .
-
ஓய்வின் பின்னர் அரகலய சர்ச்சை தொடர்பில் மனம் திறந்த சவேந்திர சில்வா
2022ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது என ஓய்வு பெற்ற இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) இடம்பெற்ற சவேந்திர சில்வாவின் பதவி விலகும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தினால் ஏற்பட்ட குழப்ப நிலை, எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு சிக்கலான கட்டமாகும். இது எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை காட்டிக்கொடுத்தது. குறைந்தபட்ச அதிகாரம் இராணுவம் என்பது ஒரு உத்தியோகபூர்வ ஆயுதப் படையாகும். இது வெளியில் அல்லது உள்நாட்டில் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்க தயாராக உள்ளது. அரகலய போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டேன். எந்த ஒரு சாதாரண அப்பாவி குடிமகனும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறப்பதை நான் விரும்பவில்லை. நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஒருவனாக இருக்க நான் விரும்பவில்லை. இதேவேளை, அதிகார வெறி பிடித்த ஆட்சியாளர்கள் கூறுவது போல், அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற தீய நோக்கம் என்னிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/savendra-silva-on-aragalaya-protest-1735664997
-
2025இல் இலங்கை ரூபாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி!
2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதால் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும். இதனால், தற்போது அதிகரித்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி அப்போது சரிவடைய வாய்ப்புள்ளது. தற்போது இலங்கையில் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் கடன்கள் கிடைக்கப்பெறுவதாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்து வருகின்றது. எனினும், இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்படும் போதும் கடன்களை மீள செலுத்தும் போதும் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும். இதேவேளை, இலங்கையின் கைத்தொழில் துறை முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு வளர்ச்சியை கடந்த காலங்களில் காட்டியுள்ளமை ஒரு சாதகமான பொருளாதார அம்சமாக கருதப்படுகின்றது. https://tamilwin.com/article/sri-lankan-rupee-crisis-awaits-in-2025-1735665684
-
யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் அத்து மீறிய செயற்பாடுகள்
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'ரோ' காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளும் அவ்வாறே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான படைத்தரப்பு உறவுகள் வலுவாக இருப்பதாக இந்தியா தெரிவித்து வருகின்றது. புலனாய்வு அமைப்புக்களின் தலையீடு இல்லாமல் இவ்வாறு படைத்தரப்பு உறவுகள் வலுவாக அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு. https://tamilwin.com/article/indian-raw-activities-in-sri-lanka-1735605571
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
வாழ்த்துக்கள் மிக விரைவாக அழியட்டும் . முதலில் ஒழுங்கான கதையமைப்பு கிடையாது இன்னமும் நஞ்சு என்று எழுதிய போத்தலை காட்டினால் தான் விளங்கி கொள்ளும் ரசிக குஞ்சு மணிகள் இன்னை வரைக்கும் நீச்சல் குளத்தில் பாயும் போது வண்டியட விழுவது ஒரு பாய்ச்சல் என்று காட்டுவது ஒரு தமிழ் படத்தில் கூட முறையான நீச்சல் பாய்தல் கிடையாது இப்படி கேணத்தனமான காட்சிகளை வைத்து விட்டு படம் ஓடா விட்டாலும் ஓடுது அள்ளுது என்று மீடியாவில் அள்ளி விட்டு கடைசியில் ஒப்பாரி வைப்பது அவர்களின் வாடிக்கை . netflix போன்றவை ஆங்கில படங்களுக்கும் தமிழ் ஆக்கம் செய்து வெளியிடுகிறார்கள் . இன்னமும் விஜயையும் அசித்தையும் கிழட்டு ரசனியையும் நம்பினால் இதுதான் வழி .
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
இப்ப எல்லாம் முழு பயித்தியம் கள் தான் அரசியல் செய்கின்றன போல் உள்ளது அங்கு அண்ணாமலை இங்கு அர்ச்சுனா .
-
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
ஒருவரியில் வரவேண்டிய செய்தி வீரகேசரி படிப்பவர் எண்ணிக்கை குறைவு செய்தியைநீட்டிப்பதில் அவர்களின் வறுமை தெரிகிறது . ஒத்தை வரி செய்திகள் என்ற திரியை திறக்கலாமா என்ற யோசனை உள்ளது காலையில் எழுந்ததும் நான்கு தளம்களுக்கு விசிட் பண்ணி இப்படி நேரத்தை விழுங்கும் செய்திகளை படிச்சு நொந்து போவதை தவிர்க்கலாம் .
- தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார்
-
இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்குமாறு வடக்கு மக்கள் கோரவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகின்றார்களே அன்றி இராணுவத்தினரின் காணிகளை அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் நடைபெற்ற விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் மர நடுகை விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். https://tamilwin.com/article/vedhanayagan-on-governor-n-vedhanayakan-1735169633 “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர்.
-
முள்ளிவாய்க்கால் செல்வதை தவிர்க்கும் மெல்கம் ரஞ்சித்
முள்ளிவாய்க்கால் பேரவலம் இடப்பெற்ற பகுதிக்கு செல்வதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்றுவரை தவிர்த்து வருகின்றார். சர்வதேசத்தின் பிரதிநிதிகள் பலர் இதுவரை முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்துள்ள போதிலும் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் முள்ளிவாய்க்காலுக்கு செல்லவில்லை. யுத்த காலத்தில் கடும்போக்காக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு சாதகமான கருத்துக்களை கூறிவந்த மெல்கம் ரஞ்சித், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக குரல் எழுப்பவில்லை. இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய அவர், தற்போது அந்த விடயத்திலும் சிறிது அமைதி காப்பது போலவே உள்ளது. https://tamilwin.com/article/malcolm-ranjith-avoids-going-to-mullivaikkal-1735171168
- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.