Jump to content

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15243
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பெருமாள்

  1. இனப்பிரச்னையை விட மோசமானது வசதிகள் அற்ற நாடு சிங்கள அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையால் நாடு வங்குரோத்து ஆக அனைத்து மருத்துவ திறமைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேற இப்படியான பிரச்சனைகள் வருவது தடுக்க முடியாது இனிமேலும் மோசம் ஆகலாம் .
  2. தயவு செய்து யாரவாது அவருக்கு நல்ல வழியில் வழி காட்டுங்க ஆள் கண்ட அறிவற்ற ஆட்களுடன் சகவாசம் கொண்டு அழியுமுன் .
  3. உண்மையில் இந்திய படங்களுக்கு மூன்று மணி நேர படம் என்றால் அரை மணி நேரத்தில் பார்த்து விடுவேன் காரணம் கட்டாயம் கதாநாயகன் நாயகியிடம் வழிவது அல்லது நாயகி நாயகனிடம் வளிவது எப்படியும் முக்கால் மணி நேரம் அதன் பின் மரத்தை சுத்தி ஆடுவது இயந்திரமனிதன் போல் ஆடும் கொடுமைகள் முக்கால் மணி நேரம் இதெல்லாம் சேர்த்தால் ஒன்றரை மணி நேரம் இந்த காட்சிகள் வராத இந்திய படங்கள் ஒரு ஐந்து வீதமே இருக்கும் அதன் பின் கதை களத்தை உருவாக்கும் காட்சிகள் அனேகமாக நாங்கள் எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும் அதுக்கு முக்கால் மணி நேரம் அதன் பின் முக்கிய காட்சிகளில் ஒரு சில காட்சிகள் பார்க்க கூடியதாக இருக்கும் இப்படியொரு இரண்டு மூன்று இழவுக்கு ஏன் தியேட்டர். நம்மை பொறுத்தவரை இணையத்தில் இலவசமாக பார்ப்பதே உண்டு .ஆனால் மகாராஜா காட்சிகளை மாற்றி அமைத்து முக்கியமாய் அந்த பெற்றோல் துண்டால் தான் குற்றவாளிகளை கண்டறிகிறார் எனும் காட்சி Netflix வந்த பின்னே அறிய கூடியதாக இருந்தது.அதனால் கொஞ்சம் கடைசி நேர twist இனால் படம் தப்பி பிழைக்கும் . முத்தையா முரளிதரன் போல் தன்னை நடிக்க விடவில்லை என்ற விஜெய் சேதுபதியின் முறுக்கல் எனக்கு பிடிக்காத ஒன்று .
  4. படத்தை தொடர் படமாக எடுத்து இருந்தால் மிகப்பெரிய தோல்வி படமாக இருந்து இருக்கும் .துண்டு துண்டாய் படத்தை காட்டியிருப்பதன் மூலம் வெற்றியை தக்க வைத்து இருக்கிறார்கள் அனுராக் காஷ்யப்பின் மகளைத்தான் சேதுபதி வளர்க்கிறார் என்ற முடிவு தெரியும்போது இரண்டு மூன்று நாளைக்கு அதன் தாக்கம் இருந்ததை மறுக்க முடியாது .
  5. சுமத்திரனுக்கு ஓட்டுக்களை விட்டு கொடுத்ததுக்கு 19 கோடியாக்கும் 😃 இப்படி கோடி கோடியாய் கொட்டி கொடுத்தால் எந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழர் பற்றி பேச மாட்டான்கள் பேருக்கு குழப்ப கதைகளை பேப்பரில் அறிக்கையாக விட்டு விட்டு கொறட்டை விட போய் விடுவார்கள் .
  6. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரனிற்கு (Vijayakala Maheswaran) 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, த.சித்தார்த்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி நிதிகளுக்கான நிதி நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனுக்கான நிதி இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதேநேரம் எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 15 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான அபிவிருத்தி நிதிகளுக்கான நிதியை மாவட்ட செயலகத்திற்கு விடுவித்தமையோடு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தலைவராக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்ட 19 கோடி ரூபா பெறுமதியிலான திட்டங்களுக்கும் விஜயகலா மகேஸ்வரனின் பரிந்துரை எனக் குறிப்பிட்டு நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/19-crore-project-fund-allocation-for-vijayakala-1721876604?itm_source=parsely-special
  7. மற்றவர் கேட்ட்க்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் தனியே உங்கள் கருத்துக்களை மட்டும் விதைத்து கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வது ?
  8. பதில் வரும் ஆனா வராது 😀 முதலில் யாழில் எதிராளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தாங்கள் விரும்பிய வண்ணம் திரியை கொண்டு கொண்டு போவதில் பேராண்டி வல்லவர் இவரை போல் ஒரு சிலர் இருக்கினம் நாங்களும் இவர்களை போல் எழுத வெளிக்கிட்டால்திரிக்குள் வைரஸ் பாய்ந்ததுபோல் இருக்கும் .
  9. EU திட்டவில்லை EU தடை போட இந்திய அரசுதான் முழுமுதல் காரணம் முதலில் அதை புரிந்து கொள்ளுங்க வழக்கம் போல் தடை எடுக்கும் நேரம் இந்தியாவின் கை பொம்மைகள் இங்கு வேண்டத்தகாத சம்பவங்களை செய்வார்கள் அதனால் தடை நீடிக்குது.
  10. ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் மீது வகுபெடுக்க போறிங்கள் அவர்களை விடுங்க புலி இளைத்து விட்டது என்பதற்காக கண்ட அட்வைஸ் கொடுக்க வெளிக்கிட வேணாம் அவர்களுக்கு என்ன நடக்கணும் என்பது அவர்களுக்கு தெரியும்.
  11. இதில் இந்திராகாந்தி இருந்தாலும் புலிகளின் வளர்ச்சி கண்டு ராஜீவ் செய்த அதே வேலையை செய்து இருப்பா வெளியுறவு கொள்கைகள் ஒரு போதும் மாறாது எங்கடையள் இன்னும் நம்பிக்கொண்டு இருகினமாம் அம்மா இருந்தால் ஈழம் கிடைத்து இருக்கும் என்று . புலிகளும் தங்கள் கட்டுபாட்டு பகுதிகளில் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி நடாத்தினார்கள் அதை பார்த்து அந்த நடைமுறை அரசை கலைக்க சொல்லி நின்ற முதலாவது நாடு இந்தியா அமெரிக்கா கரும்புலி அமைப்பை பேருக்குதன்னும் கலைக்க சொல்லி கொண்டு இருக்க வடக்கன் நடைமுறை அரசை கலைக்க சொல்லி அடம்பிடித்து கொண்டு இருந்தான் காரணம் தமிழ்நாடு தங்களை விட்டு போகும் என்ற பயத்தில் அப்படி தமிழ்நாடு போனால் தென்மாநிலம்கள் ஒவ்வொன்றாக சீட்டு கட்டு சரிவதை போல் சரியும் இந்தியா எனும் மாய பிம்பம் காணாமல் போய்விடும் என்ற பயம் .ஆனால் அப்படி நடக்க வாய்ப்புக்கள் மிக மிக குறைவு ஏனென்றால் கக்கூசும் நல்ல குடி தண்ணியும் இருந்தால் அதுதான் சுதந்திரம் என்று நம்ப வைக்கபட்ட மக்கள்தான்தான் புதிய இந்தியாவில் அதிகம் .
  12. பேராண்டி நேரடியா பதில் வேணுமென்றால் ஆயுத போராட்டம் என்பது இனி கனவுதான் . ltte ஆரம்பிக்காது அவர்கள் என்ன நினைத்து [போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த எல்லையுடன் நிறுத்தி கொண்டு விட்டார்கள் இதற்க்கு பலநூறு கரும்புலிகள் தெற்கில் இருந்தும் அமைதி ஆகின்றோம் என்ற ஒரு அறிவிப்பின் பின் கடந்த 15 வருடத்தில் ஒரு வெடிசத்தம் அவர்களிடம் இருந்து வரவில்லை . ஆனால் பக்கதில் இருக்கும் இந்தியா திரும்பவும் ஆயுத போராட்டத்துக்கு சிலவேளை வேலன் சுவாமிகள் போன்ற முழு பயித்தியம் கள் தலைமை தாங்கி போராடுவினம் . ஜனநாயக வழிதான் இனி வேற வழியே கிடையாது . எல்லாம் சரி உங்களிடம் ஒரே ஒரு கேள்வி இந்த ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ltte குண்டு வைத்தார்களா ? என்ன இழவுக்கு அவர்கள் இல்லாமல் போன பின்பும் தடையை வைத்து இருக்கிறார்கள் ? சிங்கள அரசியல் வாதிகள் ஒரு பக்கம் என்றால் வடகிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஒருபக்கம் இரண்டு தரப்பும் உணர்ச்சி அரசியல் பல்லுக்கு பல்லு கத்திக்கு கத்தி என்று விசர் கூத்து ஆடி கடைசியில் இரண்டு தரப்புமே அழிந்து போய் இருக்கிறம் கண்ணுக்கு முன்னே பல நாடுகளின் சுரண்டல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடக்கிறதை தடுக்க முடியாமல் இருக்கிற இளைய சந்ததி அது சிங்களவர் தமிழர் என்று பார்க்காமல் கனடா அவுஸ் போன்ற நாடுகளுக்கு பறந்து தப்பி கொள்கின்றனர் . இனியாவது சிங்கள அரசியல் விசருகள் தமில் எதிர்ப்பு இனவாதம் கக்குவதை நிறுத்தி தங்கடை கூட்டதுக்கு உண்மையான நிலையை சொல்லி அரசியல் செய்வார்களா ?
  13. நீங்களும் சாதாரண சிங்களவர்கள் சிந்திப்பது போலவே தேவையற்ற பயங்களை உருவாக்கி வைத்து உள்ளீர்கள் தடை நீங்கினால் உடனே திரும்பவும் ஆள் சேர்த்து சண்டை சிங்கள ஆமியுடன் நடக்கும் என்பதெல்லாம் தேவயற்ற பயம் இனி சண்டை என்பதே இருக்காது . அதே நேரம் இந்த தடையை காட்டி முக்கியமாய் சிங்களவர்களுக்கு ஆதரவு போல் நடித்து பல நாடுகள் இலங்கையின் வளம்களை சிங்களவர் தமிழர் கண்ணுக்கு முன்னே கொள்ளை அடிக்கிறார்கள் பல வளம்கள் சுரண்டபடுகிறது முக்கியமாய் இந்திய அரசின் சுரண்டல் கள் எல்லாவற்றையும் விட மோசமானது உலகத்தில் காலாவதியாகிய மருந்துகளின் பயன்பாடு தெரிந்தே இறக்குமதி செய்கிறார்கள் இன்னும்நிறைய சொல்லலாம் . முதலில் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் நிம்மதியான வாழ்வையும் சிங்களவருக்கு நிகரான உரிமைகளுடன் வாழ விடுங்க பார்ப்பம் அதன் பின் யாரும் பிரிவினை என்பது நினைத்தும் பார்க்க மாட்டார்கள் இதுதான் உண்மையான விடயம் அப்படி சிங்களவரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ வெளிகிட்டால் பக்கத்தில் இருக்கும் இந்திய பரதேசி கூட்டத்துக்கு நித்திரை போயிடும் .
  14. முதலில் எண்ணத்துக்கு சண்டை தொடங்கியது ? இரண்டாவ்து அப்படி தமிழர் சிங்களவர்கள் சண்டை தொடங்கியதால் யாருக்கு லாபம் ? கடைசியில் புலி கள் மீது தடை போட்டு லாபம் அடைந்தவர்கள் யார் ? மேல் உள்ள கேள்விகளுக்கு பதிலை ஆராயுங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை வரும் . மேலும் சிங்களவருக்கு உள்ள உரிமையுடன் பூர்வீக குடிகளான தமிழர்கள் நாங்களும் வாழனும் என்று கேட்டது தப்பா ? அதெல்லாம் கிடையாது அடிமை போல் இருங்கள் என்று கூறியது யார் ? முதலில் சிங்களவர்களுக்கு நல்ல படிப்பை கொடுங்க அந்த தீவு திருந்தும் எங்களுக்கு வகுப்பெடுத்து ஒன்றும் நடக்காது . நேற்று சனிக்கிழமை பிரைவேட் ஜெட் ல் கனடாவில் இருந்து வந்து லண்டனில் சாமத்திய வீடு கொண்டாடி விட்டு பின்னேரமே அவர்களின் உறவினர் கூட்டம் அதே பிரைவேட் நான்கு விமானம்களில் பறக்கின்றனர் புலம்பெயர் என்கோ போயிட்டினம் . சிங்களம் இன்னும் பாண் விலை இறங்குமா என்று பார்த்து கொண்டு இருக்கினம் . ஆரம்பத்தில் எங்களை சம உரிமையுடன் நிம்மதியா இருக்க விடுங்க என்றுதானே கேட்டோம் ? இன்னிக்கு பாணுக்கும் பணிசுக்கும் அடி பட வேண்டி யாரல் வந்தது எல்லாம் உங்கடை மோட்டு சிங்கள அரசியல்வாதிகளால் வந்தது அதை சிங்களம் உணராது காரணம் எங்களில் உள்ள கோடரி காம்புகள் அவங்களை உசுபேத்தி கொண்டு இருப்பினம் .
  15. இல்லாத பொல்லாத வியாதி கள் இனி உப்பு குளத்தில் இருந்து யாழ் மக்களுக்கு பரவ போகின்றது எவன் பார்த்த வேலையாக இருக்கும் ? இதைத்தான் சொல்றது என்கடயல் சோதனை க்கு மட்டுமே படித்து பாஸ் பண்ணியவர்கள் மற்றபடி உலகத்தை பற்றிய அறிவு சுத்தம் .
  16. எல்லாம் சரி தமிழ் மக்களுக்காககடைசி வரை கத்தி கொண்ட சிங்கள இடது சாரிக்கு நம்ம தமிழ் அரசியல் வாதிகள் என்ன மரியாதை கொடுத்தார்க\ல்; ?
  17. லண்டனில் நடைபெற்ற மாவீரர் கூட்டத்தில் ஒரு முறை சிறப்புரை இவர்தான் அதன் பின் திரும்பி கொழும்பு சென்றபோது இனவாத சிங்களவர்களால் தாக்கபட்டார் அதன் பின்னரும் தமிழர்களுக்கு ஆதரவாகவே இருந்தார் . ஆழ்ந்த இரங்கல்கள்.
  18. தாங்களே தங்களின் கோயிலின் மீது எழுதி துளைத்து போட்டு அதை அரசியல் ஆக காட்டுகிறார்கள்.
  19. நண்பன் ஒருத்தன் குறைபட்டு கொண்டான் ஆதாவினில் விளம்பரம் கொடுத்த போது பேருக்கு ஒரே ஒரு முறை சொல்லி விட்டு அதற்க்கு அப்புறம் விளம்பரம் செய்கிறோம் என்று பொய்யான நேரத்தை வாங்கி கொண்டார்கள் என்றான் . இதற்க்கு ஆதவன் விளம்பர பிரிவு எந்த நியாயயும் சொல்ல முடியாது ஆதாரம் என்னிடமும் உள்ளது .
  20. ஆதவன் செய்தி காரருக்கு இப்பத்தான் உபயோகமான செய்தி கிடைத்து இருக்கு 😃
  21. ஐபோன் பிரியர்கள் உடனே சண்டைக்கு வரவேணாம் நமது இன்ஸ்டகிராமுக்கு அங்கு பதில் அளிப்பதை விட இங்கு பதில் சொல்கிறேன் உங்கள் முதலாவது நோக்கியா பிளாக் பெரி என்னவானது ?
  22. நானெல்லாம் இவ்வளவுக்கு போகமாட்டேன் பார்ப்பது தமிழ் கண் தான் அதுக்குள் ஏதாவது நல்லதாய் இருந்தால் மட்டுமே தியேட்டர் பக்கம் போவது அப்படி பார்ப்பதில் வருடம் இரண்டு மூன்று படம் தான் பார்ப்பதுக்கு தெரிவாகும் அப்படியும் தப்பி பிழைத்தால் நெட்பிளிக்கஸ் அவர்கள் தானே ai வைத்து அநேக ஆங்கில படங்களை தமிழில் டப் பண்ணி வெளி விடுகிறார்கள் . சுஜாதா என்ற மனிதர் போன பின் சங்கருக்கு சரக்கு தீர்ந்து விட்டது . அதே போல் இன்று உள்ள ஐபோன் என்ற பெயரே நாளைக்கி பலருக்கு தெரியாமல் போகலாம் இதுதான் உலகம் .
  23. @நியாயம் நீங்க என்னதான் குத்தி முறிந்தாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை . ஊடகங்களில் வரும் செய்திகள் அட சம்பந்தன் இவ்வளவுக்கு தமிழர்க்கு எதிராக துரோகத்தனம் பண்ணியிருக்கார் என்று தெரியவருது.
  24. மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் வேலையை நிறுத்தும் நேரம் உணர்ந்து கொள்வோம் .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.