Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. bbc தமிழ் தான் அனைத்து செய்திகளின் முடிவிலும் கேள்வி குறி .
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்.
  3. இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று . அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
  4. கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம் ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது. ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள். எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால் திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். மாவை மீது குற்றம் ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது. ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள். எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால் திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/tamil-arasuk-katchi-internal-politics-1734860121?itm_source=parsely-detail
  5. நோர்வேயும் ஒரு ஆணியும் புடுங்கவில்லை இந்த விசர் சுமத்திரனும் ஒன்றும் புடுங்கவில்லை இதை ஒரு செய்தியாய் போடுபவர்களை தான் குற்றம் சொல்லனும் .
  6. எலான் முன்னர் அறிவித்தது போல் முதலில் கலிபோர்னியா நகரங்களான லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே மணிக்கு 700 மைல் வேகத்தில் செல்லும் ஹப்பர் லூப் திட்டத்தை நிறைவேற்ற எலானிடம் சொல்லுங்க அதன் பின் பார்க்கலாம் .
  7. "கடல் வள கொள்ளையர்" நல்ல தொரு தலைப்பு .
  8. அனுரா தானும் ஒரு சிங்களவர் என்று நிருபித்து உள்ளார் இவரால் தமிழர்கள் ஒரு போதும் நிம்மதி அடைய போவதில்லை சிங்கள தொடர் தொல்லை தான் அவர் ஊழல் புரிந்தார் இவர் ஊழல் புரிந்தார் என்று சொல்லுகினமே தவிர இவர்தான் என்று குற்றம் சாட்ட முடியாதளவுக்கு நுண் அரசியல் செய்கிறார் பின்னால் அநேகமா சீனா இருக்கலாம் . இனியும் அந்த ஊழல் இந்த ஊழல் என்று பெரிதாய் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் ஏனென்றால் இது அனுரா அரசியல் அவ்வளவே சிங்களம் மாறவில்லை முகமூடி மாற்றி உள்ளனர் .
  9. இனவாதமும் மதவாதமும் இருக்கும் அந்த அழகான தீவு இனி பூமியின் நரகம் அவ்வளவே .
  10. Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர். குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தமி்ழ் பேசும் மக்களின் அரசியல் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அநுர அரசாங்கம் இலங்கையர்களாக சிந்திப்போம் என்று கூறுகின்றமையானது, தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லாதது போன்று காட்டும் தந்திரோபாயமாக உள்ளதாக என அரசியல் ஆய்வாளர் திபாகரன் குறிப்பிட்டுள்ளார். Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியும் தமிழர்களை அதாள பாதாளத்திற்கு தள்ளுவதாக உள்ளது.தமிழர்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார். https://tamilwin.com/article/clean-sri-lanka-special-gazette-released-anura-1734792198
  11. அப்ப நோர்வேயை நம்பாமல் புலிகளின் அரசியல் முக்கியஸ்த்தர்கள் தொடர்ந்து இறுதிவரை சண்டை போட்டு இருக்கணும் என்கிறிர்கள் அப்படியா?
  12. நோர்வேயின் உறுதிப்பாட்டில் தான் புலிகளின் அரசியல் குழு முக்கியஸ்த்தர்கள் சரணடைந்தவர்கள் கடைசியில் என்ன நடந்தது ? அந்த நீண்ட அரசியலின் தாக்கத்தை உருவாக்கியவர்கள் யார் ? இதை புரிந்து கொள்ளாமல் வழமையான தமிழ் தேசிய எதிர்ப்பை காட்டுவதில் நீங்க கில்லாடி பாஸ் .
  13. நோர்வேயும் சரி சுமத்ரனும் சரி சாணக்கி இந்த மூன்றும் இதுவரை தமிழர்களுக்கு துன்பமே விளைவித்து உள்ளார்கள் அதை உணர்ந்த வடகிழக்கு தமிழர்கள் சுமத்தினுக்கும் தேர்தலில் தோல்வியை கொடுத்து உள்ளார்கள் 14வருடம் ஒன்றும் செய்ய முடியாத கூட்டம் தோல்வியை மறக்க மது அருந்த கூடிய கூட்டம் கலந்துரையாடல் என்று அடித்து விட்டு இருக்கினம்
  14. சுமத்திரன் விசுவாசிகளுக்கு நாலு இங்கிலுசில் அடித்து விட்டால் காணும் எதிராளி படுத்திடுவான் என்ற நினைப்பு . out of box மைன்ட் என்றால் கொஞ்சம் பழைய கதை தான்! ஒரு பெருந்தனக்காரர் காரில் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் காரின் ஒரு டயர், டியூப் வெடித்து விட்டது. அதனை கழற்றி காரின் டிக்கியில் இருக்கும் உபரி சக்கரத்தை எடுத்து பஞ்சரான டயரை கழற்றிக்கீழே வைத்துவிட்டு வேறு ஒரு டயரை பொருத்தும் சமயம் அங்கிருந்து நான்கு பொருத்தும் நட்டுக்கள் கால் இடறி ஒரு பெரிய சாக்கடைக்குள் விழுந்து விட்டது. எடுக்க இயலாத ஆழம் கூட! இவர் என்ன செய்வதென்று தெரியாமல் கையைபிசைந்து கொண்டிருந்த நேரம், அவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் இருந்து ஆசாமி நான் ஒரு உங்களுக்கு உதவட்டுமா?என்று கேட்டான். இவன் என்ன உதவப் போகிறான்? என்று அலட்சியமாக நினைத்த முதலாளி இருந்தாலும் வேறு வழியில்லாமல் சரி சொல்லு? என்கிறார்.நன்றாக இருக்கும் மூன்று டயர்களிலிருந்தும் ஒவ்வொரு நட்டினை எடுத்து நான்காவது சக்கரத்துக்கு பொருத்திச் செல்லுங்கள். அருகில் இருக்கும் ஊர் வந்தவுடன் நான்கு புதிய நட்டுக்கள் வாங்கி பொருத்திக் கொள்ளுங்கள் என்றார். அதவாதுஒரு பிரச்சனையை வழக்கமான முறையில் சிந்தித்து மேலும் பிரச்னையை உருவாக்கி கொள்ளாமல் சமயத்துக்கு ஏற்ப சிந்தித்து இலகுவான வழிமுறைய கண்டு பிடித்தல் இன்னுமொரு உதராணம் . அது மிகவும் மிகப்பிரபலமான விமான நிலையம். அனைத்து வானூர்திகளும் சரியான நேரத்தில் புறப்படும் மற்றும் வந்து சேரும்.ஆக அங்கே பிரச்சினை என்ன வென்றால், பயணிகள் அனைவரும் விமானத்தில் இறங்கி தங்களுடைய சுமைகளை எடுக்க அதற்கான இடத்திற்க்கு வந்து விடுகிறார்கள்.ஆனால் அவர்களுடைய சுமைகள் வருவதற்க்கு அதிகம் நேரம் ஆகிறது. இதனால் பயனிகள் பொறுமை இழந்து விமான நிலைய அதிகாரிகளுடன் சண்டையிடுகிறார்கள். இதற்கு தீர்வு கான விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு விதமான கலந்தாய்வு மூலம் சில புதிய முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக புதிய அதி நவீன இயந்திரம் வாங்குதல். அதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்துதல் …. ஆனாலும் பயணிகள் பிரச்சினை தீரவில்லை.மேலும் பல பயணிகளின் புகார்கள் அதிகரித்து கொண்டிருந்தது. இதற்கான தீர்வுதான் என்ன என்று சிந்தனை செய்யும்பொழுது அங்கே ஒரு மாற்று சிந்தனையாளரின் யோசனை என்னவெனில் பயணிகள் விமானத்தில் இறங்கி தங்களுடைய பயணச்சுமைகளை எடுக்கும் இடத்தின் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தவது (Zigzag way) புதிய பாதை அமைப்பது.இதனால் பயணிகள் தங்ளுடைய பயணச்சுமைகள் இருக்கும் இடத்திற்க்கு வருவதற்கு அதிக நேரமாகும் .இதற்குள் நாம் அவர்களுடைய பயணச்சுமைகளை அதற்கான இடத்திற்க்கு கொண்டு வந்து விடலாம் என்ற அந்த யோசனையும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு பயணிகள் பிரச்சினையும் தீர்ந்தது. அதுசரி இந்த out of box மைன்ட்க்கும் உங்கள் விசர் சுமத்துரனுக்கும் என்ன சம்பந்தம் ? இதுவரை அப்படி எந்த அறிகுறியுமே காணவில்லையே கடந்த 14வருடங்களில் ?
  15. தமிழரசுக்கட்சியின்(Itak) பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியலினூடாக தெரிவுசெய்தமையானது சுமந்திரனை(M.A.Sumanthiran) நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தந்திரோபாயமாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் மதன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய பட்டியலுக்கான பெயர் பட்டியல் உறுப்பினர்களை முன்னதாகவே கொடுக்காதது சுமந்திரனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான உத்தியாக கூட இருக்கலாம். தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும், சத்தியலிங்கம் நடுநிலையானவர் அல்ல, அவர் ஒரு குழு சார்ந்து செயற்படக் கூடியவர். சுமந்திரன் மீதான வெறுப்பே தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணம். தாம் நினைக்கின்ற விடயங்களை எடுத்து நடத்தக்கூடிய விடயங்களில் சுமந்திரன் வல்லவர் என குறிப்பிட்டுள்ளார். சம்பந்தனின் பதவியையும், அவரின் வயது மூப்பையும் அவர் தனக்கு சாதகமாக சுமந்திரன் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://tamilwin.com/article/sumathiran-s-next-step-to-enter-parliamen-1734690467?itm_source=parsely-detail
  16. மெளனம் சம்மதம்! மட்டும் இல்ல! பொருளும் கூட ! ஒரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் திறமையும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னர் சினந்து கொண்டார். அவரை எப்படியாவது கீழ்மைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஒருநாள் அவையில், மன்ன்ர் அறிவாளியான அந்த அமைச்சரைப் பார்த்து, “முட்டாள்களிடம் பழக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த அமைச்சர் எவ்வித பதிலும் கூறாமல் மெளனமாக இருந்தார். அவர் பதில் தெரியாமல் இருக்கிறார் போலும் என்று நினைத்த மன்னர், “என்ன அமைச்சரே! நான் கேட்ட கேள்வி உமது செவிகளில் விழவில்லையா? “முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” என்று மீண்டும் கேட்டார். அதற்கும் பதில் கூறாமல் மெளனமாகவே அமைச்சர் இருந்தார். இதனால் கோபமடைந்த மன்னர், “என்ன, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எதுவும் கூறாமல் விழிக்கிறீரே! நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லையா? அல்லது என் கேள்விக்குப் பதில் தெரியவில்லையா?” என்று கேட்டார். அமைச்சர், மன்னருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “மன்னர் பெருமானே! உங்கள் கேள்விக்கு உடனே பதிலளித்து விட்டேனே! நீங்கள் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை!” என்றார். உடனே மன்னன், “மூன்று முறை நான் கேட்டும் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அல்லவா இருந்தீர்!” என்றான். அதற்கு அமைச்சர், “ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பேச வேண்டுமென்றால் மெளனம் தான் சாதிக்க வேண்டும்!” என்றார். மன்னர் வாயடைத்துப் போனார். ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவனுக்குப் பிடித்தவரின் மௌனம் தான். பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது!
  17. நல்ல நாள் பார்த்து வாடகை வீட்டை காலி செய்து விட்டு சொந்த வீட்டுக்கு குடி போகலாம் என்று நாள் குறித்தான்! சொந்தங்கள், பந்தங்கள் , நட்புகள் எல்லாவற்றையும் குறித்த நாளில் வர சொல்லி இருந்தான்! அவன் கெட்ட நேரம் அவன் வீடு கட்டி இருந்த இடத்தில் நிலை நடுக்கம் வந்து வீடு தரைமட்டம் ஆனது! புது மனை வீட்டுக்கு வந்திருந்த அனைவரும் இடிந்த வீட்டிற்கு முன் அதிர்ச்சியில் சோகமாக நிற்க! அவனோ! வாங்கி வந்து இருந்த இனிப்புகளை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் கொடுக்க! வந்து இருந்தவர்கள் ! அவனை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா 25 வருட உழைப்பு இப்படி மண்ணாக போய் விட்டது! எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டு இருக்க என்று கேட்க! அதற்கு அவன் சொன்னான்! ஐயா வீடு குடி புகும் முன் இடிந்து போனது நல்லது தான்! ஒரு வேளை நாங்க குடும்பத்துடன் குடி வந்த பின் வீடு இடிந்து போய் இருந்தால்! எண்ணவாகி இருக்கும் ! அதான் என்றான் அமைதியாக!
  18. பிழையான செய்தி என்று யு டுப் காரங்களுக்கு ரிப்போர்ட் அவ்வளவுதான் .
  19. அனுரா சுமத்துதிரனை கண்டு கொள்ளவே இல்லை அதுக்காகவே இந்த பில்டாப்பு. அதுக்காக முன்னே சொன்ன சுமத்து சொன்ன வாக்கியங்கள் ஐநாவுக்கு தெரியாதா ? இனி இந்திய பயணம் முடிந்தது இனி சைனா பயணம் போகணும் அனுரா பார்க்கலாம் எப்படி சுளிக்கிறார் என்று ? மாவீரார் நினைவு கூர்தலை கூட இம்முறை கெடு பிடி அற்று ஒரு வரைமுறைக்குள் நினைவு கூர்வ இறங்கி வந்து இருக்கிறார்கள் அதுக்காக பழைய விடயங்களை விட்டு விட முடியாதது.
  20. நேற்று சண்டே சாயந்திரம் சாப்பிடலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட் போனேன் !!!!!! பார்த்தா ஒரே கூட்டம் !!!!!!! எல்லா டேபிளும் ஆள் உட்கார்ந்து இருக்காங்க !!!! அதுவும் சோடி !!!! !சோடியா !!!!!!! எனக்கு பசி !!!!!!!!!!! மற்றும் கொஞ்சம் லைட்டா வயித்தெரிச்சல் ! உடனே போனை எடுத்தேன் !!!!!!!! நண்பனை அழைத்தேன் !!!!!! " மச்சான் உன் ஆளு இங்கதான் யாருடனோ !!!!!!!!! கடலை போட்டு கொண்டு !!!!!!! மன்னிக்கவும் சாப்பிட்டு கொண்டு இருக்கு !!!!! சீக்கிரம் வா மச்சான் !!!!!! " என்று சொன்ன மாத்திரம் தான் ! ரெண்டே நிமிசத்தில் !! ஆறு டேபிள் காலி !!!!!! நான் பொறுமையா அமர்ந்து சாப்பிட்டு வந்தேன் ! வயிறும் நிறைந்தது ! வயித்தெரிச்சல் குறைந்தது !
  21. நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார். போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்.. அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும். சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது. அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர். அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி வெடவெடவென நின்றான். பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில் கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான். சரி இப்ப நல்ல கருத்துக்களை பார்ப்போம்! 1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.) 2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..) 3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும். 4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.