Everything posted by பெருமாள்
-
பிரித்தானியா இணையும் பாரிய வர்த்தக ஒப்பந்தம்
Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
- தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
போர்க்ளத்துக்கும் ஊர் சண்டியர்களின் கொள்ளுபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகம்கள் எங்கள் இனத்தின் சாபகேடு . கிட்ட தட்ட தமிழ் அரசியல் குரங்கு கூட்டம் பங்கு பிரிக்க வெளிக்கிட்ட கதை தான் . குறைந்தது நாலு கொலையாவது நடந்து இருந்தால் தமிழ்சனம் சந்தோசபட்டு இருக்கும் .
-
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன!
"முடிந்தால் குடுமியை பிடி முடியாவிட்டால் காலை பிடித்துக் கொள்" இது கடந்த 2500 ஆண்டுகளாக இலங்கை ராஜதந்திரத்தின் பாரம்பரியம். அதுவும் குறிப்பாக பௌத்த சிங்கள ராஜதந்திர அணுகுமுறை என்று சொல்வதே பொருந்தும். அத்தகைய ஒரு தொடர்ச்சி குன்றாத ராஜதந்திரப் பின்னணியைக் கொண்ட இலங்கை அரசு இயந்திரம் எப்போதும் எதிரிகளின் முன்னே தன்னை திடமாகவும், நம்பிக்கையாகவும் நின்று கொண்டுதான் அரசியல் காய்களை நகர்த்தும். இந்த அடிப்படையில்தான் இலங்கையின் புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் தனது ராஜதந்திர யூகத்தால் முரண்பட்ட சக்திகளான இந்தியாவையும், சீனாவையும், மேற்குலகத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி கடந்த காலத்தில் வெற்றி கொண்டார்கள் எதிர்காலத்தில் எப்படி வெற்றி கொள்வர் என்பதனை சற்று விரிவாக பார்ப்போம். ராஜதந்திர மூளைகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் எவர் அமர்ந்தாலும் அவரை சிங்கள தேசத்தின் ராஜதந்திர மூளைகள் தூணாக நின்று தாங்கி அந்த அந்த சிம்மாசனத்தை அலங்கரிக்கச் செய்துள்ளனர். கடந்த 76 ஆண்டுகால ஜனநாயக அரசியலிலும் இது தொடர்கிறது. அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கிராமப்புறத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதராகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ பார்க்க கூடாது. சிங்கள ராஜதந்திர கட்டமைப்புக்குள்ளால், பல நூற்றாண்டு காலம் சிங்கள சிம்மாசனத்தை தொடர்ச்சியாக புடை சூழப்பட்டிருக்கும் சிங்கள ராஜதந்திர மூளைகளின் செயற்திறன், தொடர் ராஜதந்திர செயற்பாடுகளினால் சேமிக்கப்பட்ட கூட்டு ராஜதந்திர வளர்ச்சியின் கொள்ளளவு என்பவற்றிற்கு ஊடாகவே பார்க்க வேண்டும். அரசியல் வரலாற்று கூற்று ஒன்றை இங்கே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. "சிம்மாசனங்களின் கீழ் நசிந்து கிடக்கும் மூளைகளின் எண்ணிக்கையோ எண்ணற்றவை" எனவே வரலாற்றுத் தொடர் வளர்ச்சியும், தொன்மையும், செயற்திறன் மிக்க ராஜதந்திர மூளைகள் சிம்மாசனங்களை எப்போதும் புடை சூழ்ந்து தாங்கி நிற்கின்றன. அது சிங்கள தேசத்தின் சிம்மாசனத்திற்கும் பொருத்தமானதாகவே உள்ளது. சிங்களதேச சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் அந்த சிம்மாசனம் ராஜதந்திர மூளைகளால் அலங்கரிக்கப்படும் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் அதற்கு சிம்மசொப்பனமாக நின்று ராஜதந்திர மூளைகள் வெற்றியைத் தேடிக் கொடுக்கும், கொடுத்துள்ளனர் என்பதை இலங்கையின் கடந்கால அரசியல் வரலாறு நிரூபித்திருக்கிறது. இந்திய துணைக்கண்ட புவிசார் அரசியல் இலங்கை அரசுக்கு எப்போதும் சவாலாக, அச்சுறுத்தலாக இருந்திருக்கின்றன. அது அசோகப் பேரரசாயினும் சரி சோழப் பேரரசாயினும் சரி இலங்கைத் தீவின் இறையாண்மைக்கு சவாலாக இருந்திருக்கின்றன. இந்து சமுத்திரத்தின் காவலனாக இந்தப் பிராந்தியத்தை கட்டுப்படுத்தக்கூடிய வளங்களைக் கொண்டதாக இந்திய அரசு வளர்ந்திருக்கின்றது. இருந்தபோதிலும் இலங்கைக்கு எதிரே நிற்கின்ற இந்த இந்தியா என்கின்ற பெரிய மதயானையை ஒரு யானைப்பாகன் எவ்வாறு அதன் கழுத்தில் அமர்ந்திருந்து சிறிய அங்குசத்தால் எவ்வாறு கட்டுப்படுத்துகிறானோ அவ்வாறே இந்தியாவை இலங்கை தனது ராஜதந்திர அங்குசத்தாலும், வியூகத்தாலும், செயற்பாடுகளினாலும் தொடர்ந்தும் கட்டுப்படுத்தியும் வெற்றி கொண்டும் வந்துள்ளனர். அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடிப்படையில் இந்திய எதிர்ப்பு வாதியாக இருந்தாலும் அவரை அந்த சிம்மாசனத்தில் தொடர்ந்து தக்கவைக்கவும், இந்தியாவை வெற்றிகொள்வதற்குமான வழிமுறைகளை சிங்கள ராஜதந்திர வட்டாரங்களினால் திட்டமிட்டு வெற்றிகரமாக வெற்றியின் பாதையில் வழிநடத்தப்படுவார். இங்கே இலங்கையின் ராஜதந்திர வரலாற்றை சற்று பார்க்க வேண்டும். உலகளாவிய அரசியல் ராஜதந்திர வரலாற்றில் தொடர்ச்சி குன்றாமல் எழுதப்பட்ட வரலாற்றை இலங்கையை விடுத்து வேற எந்த ஒரு நாட்டிலும் காணமுடியாது. பெருமித உணர்வு இலங்கை தீவில் மட்டுமே கடந்த 2500 ஆண்டுகால வரலாற்றை தொடர்ச்சி குன்றாமல் கி.பி 6ம் நூற்றாண்டில் மகாநாம தேரர் என்ற பௌத்த துறவியினால் பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூலின் ஊடாக தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்திருக்கிறது. விஜயன் தொடக்கம் அநுரகுமார திசாநாயக்க வரை அது தொடர்ச்சி குன்றாமல் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மகாவம்சம் என்ற நூலுக்கு உலகளாவிய ஒரு மதிப்பு உண்டு. அந்த நூலில் கூறப்பட்ட பல விடயங்கள் புனைகதைகளாகவோ, பொய்யாகவோ, ஏற்றுக் கொள்ள முடியாததாகவோ இருக்கலாம். ஆனால் அது ஒரு தொடர்ச்சி ஒன்றாத அரசியல் ராஜதந்திர வரலாற்றை பதிவிட்டு இருக்கிறது என்ற அடிப்படையில் ராஜதந்திரத் தொடர்ச்சியை அது எழுதி வைத்திருக்கிறது என்ற அடிப்படையில் அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதேபோல நவீன வரலாற்றில் மெண்டிஸ் என்னும் சிங்கள வரலாற்று ஆசிரியர் இலங்கையின் 2500 ஆண்டுகால ராஜதந்திர வரலாற்றை 'Foreign Relations of Sri Lanka' (Earliest Times to 1965 L. B. Mendis) என்ற ஆங்கில நூலில் விரிவாக எழுதியுள்ளார். உலகளாவிய நாடுகளில் அந்நாடுகளின் ஒரு சில காலகட்டங்களுக்கான ராஜதந்திர வரலாற்றையே எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், இலங்கை ஒட்டுமொத்தமான ஒரு நீண்ட ராஜதந்திர வரலாற்றை பதிவு செய்து வைத்திருக்கின்ற வரலாற்று உணர்வு மிக்க மக்கள் கூட்டத்தை கொண்ட நாடு என்ற அடிப்படையில் தான் சிங்கள தேசத்தின் சமூகவியலை ஈழத்தமிழர் பார்க்க வேண்டும். ஒரு தொடர்ச்சி ஒன்றாத அரசியல் வரலாற்று ராஜதந்திர நடைமுறைகளை எழுதி வைத்திருக்கிறோம் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கு தங்களுடைய வரலாற்றிலும், அரசியலிலும், ராஜதந்திரத்திலும் ஒரு பெருமிதம் உண்டு. அந்தப் பெருமித உணர்வு அவர்களுக்கு மேலான, மேன்மையான ராஜதந்திர உணர்வையும், ஊக்கத்தையும், கர்வத்தையும் கொடுக்கிறது. அந்தப் பெருமித உணர்வு அந்த மக்கள் கூட்டத்தின் ராஜதந்திர வளர்ச்சிக்கான அடிப்படை மனநிலையையும், வரலாற்று உணர்வையும், யாரையும் வெற்றி கொள்வோம் என்ற துணிவையும், திடசங்கர்பத்தையும் கொடுத்திருக்கிறது. அந்த அடித்தளத்தில் இருந்து கொண்டுதான் சிங்கள மக்களின் ராஜதந்திர வட்டாரங்கள் நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது மிகப்பலமாகவும், வேகமாகவும் சாதுரியமாகவும் வளர்ச்சி பெற்று இன்று மேல் நிலையில் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள தவறக் கூடாது. இலங்கைத் தீவின் மீது முதலாவது படையெடுப்பு கிமு 3ம் நூற்றாண்டில் (கி.மு247) பௌத்தம் என்ற மதத்தின் பெயரால் அசோகச் சக்கரவர்த்தியினால் மேற்கொள்ளப்பட்டது. மௌரியப் பேரரசின் மன்னன் அசோகன் அனுப்பிய மணிமுடியையும் அசோகனின் “தேவநம்பிய“ என்ற பட்டப் பெயரையும் தாங்கியே சிம்மாசனத்தில் அமர வேண்டிய நிலை தீச மன்னனுக்கு (தேவநாம்பியதீச)ஏற்பட்டது. ஆயினும் தன்மீது வீசப்பட்ட அந்த பௌத்தம் என்கின்ற பலமான ஆக்கிரமிப்பை தமக்கு கேடயமாக தூக்கிப்பிடித்து பிற்காலத்தில் பௌத்தத்தின் பிரிவுகளும், இந்து மதமும் இலங்கையை அடிபணிய வைக்க முடியாதபடி தேரவாத பௌத்தம் சிங்கள மக்களுக்கு கேடயமாக, காப்பரனாக மாற்றியமைக்கப்பட்டது. எதிரியின் எதிரி உனது நண்பன் அந்த பௌத்தமே இன்றும் சிங்கள மக்கள் கூட்டத்தை காக்கின்ற காவலனாக, தடுப்புச் சுவராக சிங்கள மக்களின் சுயாதீனத்தை பேணக்கூடிய அடித்தளமாக அமைந்திருக்கிறது. அவ்வாறே சோழப்பேரரசு எழுச்சி பெற்ற காலத்திலும் சிங்கள மன்னர்கள் “எதிரியின் எதிரி உனது நண்பன்“ என்ற கோட்பாட்டை பின்பற்றி காலத்துக்கு காலம் பாண்டிய, சேர மன்னர்களுடன் நட்புறவைப் பூண்டு சோழர் ஆதிக்கத்தை சிங்கள தேசத்தில் தடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அரியணை ஏற வேண்டிய சோழ இளவரசர் ஆதித்த கரிகாலரை படுகொலை செய்ததில் சிங்கள ராஜதந்திரத்தின் கரங்களும் இருந்துள்ளன என்ற வரலாற்றையும் மறந்து விடக்கூடாது. இந்த விடயத்தில் எதிரியை முளையிலேயே கிள்ளும் தந்திரத்தை அன்று அவர்கள் கையாண்டுள்ளார்கள் என்பது புலனாகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையின் கரையோரத்தை ஒல்லாந்தர் கைப்பற்றிய போது விமலதர்மசூரியன் கண்டிராச்சியத்தை அதனுடைய நில அமைவு காரணமாக சிங்கள மக்களின் திரட்சி, பௌத்தத்தின் வளர்ச்சி காரணமாகவும் தன்னை தனித்துவமாகவும் பலமாகவும் வைத்துக்கொண்டு விமலதர்மசூரியன் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்“ என்று ஒல்லாந்த ஆளுநருக்கு தூது அனுப்பினான். இந்த வரலாற்று பின்னணியில் இருந்துதான் ஜே.ஆர் 1983ம் ஆண்டு ஜூலை படுகொலையின் போது தமிழ் மக்களை நோக்கி "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று அரைகூவல் விடுத்ததன் ஊடாக சிங்கள மக்களின் கடந்த கால வரலாற்று உணர்வைத் தட்டி எழுப்பி சிங்கள மக்களுக்கு கொலை உணர்வை தூண்டி தமிழ் மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்யத் தூண்டினார் என்பதனை வரலாற்று நடைமுறைகளுக்கு ஊடாக நாம் பார்க்க வேண்டும். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆர் சிங்கள ராஜதந்திரம் பற்றி குறிப்பிடுகையில் சிங்கள ராஜதந்திரம் எமக்கு (Golden threads) அதாவது சிங்கள மக்களுக்கே உரித்தான பெறுமதிவாய்ந்த ராஜதந்திர மூலோபாயாம் என்பது எங்களுக்கே உரித்தான தங்கச் சங்கிலி என்று பொருள் படவே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் வார்த்தைகள் அமைந்துள்ளன. இதன் உட்பொருள் என்னவெனில் எக்காலத்திற்கும் பொருத்தமான வளம் பொருந்திய ராஜதந்திரம் மூலோபாயம் சிங்கள மக்களிடன் உண்டு அதனை நாம் எப்போதும் பயன்படுத்துவோம் என்பதாகவே உள்ளது. இத்தகைய ராஜதந்திரத்தை டி எஸ் சேனநாயக்க பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தியுள்ளார். இந்தியா சுதந்திர விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் இந்தியா விடுதலை பெறப்போவது நிச்சயம் எனறு டி.எஸ் உணர்ந்தபோது இலங்கைக்கான விடுதலையை கத்தியின்றி, இரத்தமின்றி நோகாமல் நொங்கு குடிப்பது போன்று விடுதலையைச் சாத்தியம் ஆக்குவதற்கான தந்துரோபாயத்தை வகுத்தார். அதன் அடிப்படையில்த்தான் 20-06-1940ல் இலங்கை தேசிய காங்கிரசின் சார்பில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியத் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்கு “சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சிமுறையோ அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறையோ (Federation or Close Union) அமைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்துரையாட விரும்புகிறோம்“ என்று கடிதம் எழுதியிருந்தார். (ஆதாரம்- மைக்கல் றொபேர்ட் தொகுத்த Documents of the Ceylon National Congress என்ற நூல்) "நாம் இந்திய கூட்டாட்சி அரசில் இணைய ஆர்வமாக உள்ளோம்" என்று கடிதம் எழுதியோடு மாத்திரமல்ல சிங்கள அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரசின் மகாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்த ஆதரவு என்பது உண்மையில் இந்திய காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதற்காகவல்ல அவ்வாறு ஒரு போக்கை காட்டிவிட்டு பிரித்தானியருடன் பேரம் பேசுவதற்கான ஒரு களச் சூழலை ஏற்படுத்துவதையே நோக்காகக் கொண்டது. இரண்டாவது அர்த்தத்தில் பிரித்தானியரை நிர்பந்திக்கச் செய்வது. எமக்கான விடுதலையை தராவிட்டால் நாம் இந்தியாவுடன் இணைந்து விடுவோம் என்பதன் மூலம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் இந்து சமுத்திர ஆளுகையை முடக்கி விடுவோம் என்ற எச்சரிப்பதாகவும் அமைந்தது. ராஜததந்திரி ஜே.ஆர் அவ்வாறே 06-05-1942ல் மும்பையில் டி.எஸ் சேனநாயக்கரை பார்த்து சுதந்திரம் அடையப்போகும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கும் என டைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையாளர் கேட்ட டி.எஸ். சேனநாயக்க அளித்த நேர்காணலில் “பெரிய பலம் பொருந்திய இந்திய சமஷ்டி அமைப்புக்குள் ஓர் அங்கமாக இலங்கை இணைவது இலங்கையின் நலனுக்கு உகந்தது“ என்றும் "நாம் விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் பக்கமே நிற்போம்" என்று பதிலளித்திருந்தார். இந்த அறிவிப்பானது இந்திய பத்திரிகைகளில் வெளிவந்து இந்திய மக்களின் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. இதன் மூலம் இந்தியர்களின் பொது மக்கள் அபிப்பிராயம்(Public opinion) பெறுவதிலும் இந்திய மக்களைக் குஷிப்படுத்துவதிலும் தம்மை நம்ப வைப்பதிலும் கவனமாக இருந்தார். அதன் மூலம் சிங்கள தேசத்தின் நலன்களை அடைவதிலும் சிங்கள ராஜதந்திரிகள் அல்லது தலைவர்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுவர். இவ்வாறுதான் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்து சமுத்திரத்தை அணு ஆயுதமற்ற சமாதான பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்று ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு அரை கூவல் விடுத்தார். இந்து சமுத்திரத்தை சமாதான பிராந்தியமாக ஒருபோதும் மாற்ற முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆயினும், இந்து சமுத்திரத்தை அனுவாயுதமற்ற சமாதான பிராந்தியமாக அறிவிக்க வேண்டும் என்பதன் மூலம் இந்திய மக்களின் பொது அபிப்பிராயத்தையும், விருப்பையும் அவர் பெற்றுக் கொண்டார் என்பது மாத்திரமல்ல 1962 சீன-இந்திய யுத்தத்தின் போது சீனாவின் பக்கம் இலங்கை நின்றது என்ற கரையையும் கழுவிக் கொண்டார். தங்கள் மீதான பொது அபிப்பிராயத்தை திரட்டுவதில் இலங்கையின் கடந்த அரசியல் வரலாற்றில் எப்போதுமே அவர்கள் வெற்றியையே பெற்றிருக்கிறார்கள். தமிழினத்தின் மீதான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அதனால் ஏற்பட்ட அபகீர்த்தியைகூட உலகப் பொது அபிப்பிராயத்தில் இருந்து பெரிய சேதமின்றி கடந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதே டி.எஸ் நேனநாயக்க 1947ஆம் ஆண்டு இலங்கை தேர்தலில் பிரதமராக வந்தவுடன் பிரித்தானிய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டார். தாம் “பிரித்தானியாவின் நல்ல நண்பர்“ என்றும் “யுத்தத்தின் போதும் சமாதானத்தின் போதும் பிரித்தானியாவின் பக்கம் நின்றே எப்போதும் செயற்பட்டவர்கள்“ என்றும் எனவே தம்மீது நம்பிக்கை வைக்குமாறும் ஓலிவர் குணதிலக பிரித்தானியருடன் பலகட்ட பேச்சுக்களின் போது எடுத்துக்கூறி, யாப்பு உருவாக்கம், இலங்கை சுதந்திரம் அடைவது பற்றிய தீர்மானம், பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பிரித்தானிய தளங்களை அமைத்தல் போன்ற முடிவுகளை டி.எஸ்.சேனநாயக்கவின் சார்பில் நிறைவேற்றினார். (இவை தொடர்பான விபரங்களை Sir Charles Joseph Jeffries vOjpa OEG, A Biography of Sir Oliver Ernest Goonetilake என்ற நூலில் வரும் Prelude to Freedom’, ‘Crucial Negotiations’ போன்ற அத்தியாயங்களின் 88, 89ம் பக்கங்களில் காணலாம்.) அதுவரை காலமும் இந்தியாவுக்கு ஆதரவு முகம் காட்டிய டி எஸ் சேனாநாயக்க இந்தியாவின் முதுகில் ஓங்கி குத்தி விட்டார் என்ற வரலாற்றையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு போக்கு காட்டி இன்னொரு இடத்தில் ராஜதந்திர வியூகத்தை இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் ஜே.ஆர் இப்படிச் சொன்னார் "நான் ஒரு குத்துச்சண்டை வீரன் எதிரிக்கு மூக்கில் குத்துவதாக பாசாங்கு செய்து மூக்கை பார்த்த வண்ணம் நின்று கொண்டு அடி வயிற்றுக்கு இலக்கு வைத்து குத்துவேன்" அந்த அளவிற்கு இலங்கையின் நவீன வரலாற்றில் ராஜதந்திரத்தில் ஜே.ஆர் முதன்மையானவர், முக்கியமானவர். உண்மையில் நவீன அரசியல் ராஜதந்திரத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மாக்கியவல்லியும், இந்தியா ராஜதந்திரியான சாணக்கியரும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் ராஜதந்திரத்தை ஜே.ஆரிடம் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் என்று சொன்னால் மிகையில்லை. இந்தப் பின்னணியில் தற்போது இந்தியாவுக்கு சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி எதைச் சுமந்து செல்லப் போகிறார், எதை சுமந்து வரப் போகிறார் என்று பார்ப்போமானால் தங்கச்சங்கிலி ராஜதந்திர பாரம்பரியத்தின் பாதுகாப்புடனும் நம்பிக்கையுடனும் இந்தியாவுக்குள் நுழையப்போகும் அநுர. https://tamilwin.com/article/what-is-anura-carrying-to-india-1734290079
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு. வயது போக போக இளமயாய் தோன்றுவது போல் உள்ளது பேப்பர் உடன் சேர்ந்து எடுத்த படம் பார்த்தேன் கொஞ்சம் முதல் .
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
இனி விசர் சுமத்திரன் கனடா பக்கம் போனால் உடுப்பை கழட்டி விட்டு அடி போட்டுத்தான் அனுப்புங்கள் .
- மனித பாவனைக்கு உதவாத அரிசி இறக்குமதி! திருப்பி அனுப்ப நடவடிக்கை
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
எனக்கென்னவோ சுமத்திர கள்ளனும் இந்த பார் கள்ளனும் உள்ளுக்குள் டீல் போட்டு விளையாட்டு காட்டுகினம் போல் உள்ளது . இந்த எட்டு நாளைக்குள் எண்ணத்தை செய்து விடபோகிறார் ? அநேகமா இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் பினாமி சொத்து லண்டனிலும் கனடாவிலும் தான் குவிந்து கிடக்கின்றது போல் உள்ளது .
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார். கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார். தமிழ் மக்களின் நெருக்கடிகள் இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lankan-mp-sumanthiran-visits-ottawa-1734244102?itm_source=parsely-detail
-
மனித பாவனைக்கு உதவாத அரிசி இறக்குமதி! திருப்பி அனுப்ப நடவடிக்கை
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோ நாட்டரிசி, மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. பாவனைக்கு உதவாத அரிசி அதன்படி தற்போது இந்தியாவில்(India) இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் சனிக்கிழமை வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது. அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என நேற்று (14) உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர், சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை. தற்போதைக்கு மனித பாவனைக்கு உதவாத குறித்த அரிசித் தொகையை மீண்டும் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/imported-rice-in-sri-lanka-found-infested-1734238699
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
முதலில் இந்த படத்தில் இருக்கும் கண்ணாடி போட்ட குரங்கை யும் சீனாவுக்கு அனுப்பும் குரங்குகள் உடன் அனுப்பி வைக்கவும் தமிழரசு கட்சி உருப்படும் இந்த குரங்கின் வேலைதான் இவ்வழவு கலவரமும் .
-
திண்ணை
- வவுனியாவில் தேன் என சீனிப்பாணியை விற்ற மூவர் கைது!
அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ?- திண்ணை
திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄- உண்மையான வடக்கின் வசந்தம் இனிதான்! - கடற்தொழில் அமைச்சர்
முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும் வெடித்தது காணும் .- யாழ்ப்பாணத்தில் கூரைமேல் சோலார் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி!
இங்கு சோலார் பனல் பூட்டிய ஆட்களிடம் நன்மை ஆ இல்லை பிழையா ? ரெண்டுக்கும் நடுவிலை மண்டைய ஆட்டுவார்கள் . இந்த யுடுப் கோஸ்டிகள் தான் இவற்றை ஊதி பெருபிப்பது ஒரு விடயம் சரியோ பிழையோ என்பதுக்கு முதல் முந்திரி கொட்ட போல் நிப்பினம் .- தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வாழ்க்கையை நன்கு துவங்கிட வேண்டிய கதைகள்: 1. நோக்கியா ஆண்ட்ராய்டை நிராகரித்தது 2. yahoo Google ஐ நிராகரித்தது 3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை நிராகரித்தது வாழ்க்கை பாடங்கள்: 1. வாய்ப்புகளை தவற விடாதீர்கள் 2. மாற்றத்தைத் தழுவுங்கள் 3. கால ஓட்டத்திற்கு ஏற்ப நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காலாவதியாகிவிடுவீர்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. Facebook whatsapp மற்றும் instagram ஐ கைப்பற்றுகிறது 2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது மேலும் பாடங்கள்: 1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள் 2. முன்னேறி சென்று போட்டியை அகற்றுங்கள். 3. புதுமைகளைத் தொடருங்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. கர்னல் சாண்டர்ஸ் 65 இல் KFC ஐ நிறுவினார் 2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி 55 வயதில் ஓய்வு பெற்றார். மேலும் பாடங்கள்: 1. வயது என்பது வெறும் எண் 2. தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் இறுதியாக: ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கலின் விளைவாக லம்போர்கினி நிறுவப்பட்டது. பாடங்கள்: யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், எப்போதும்! ✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள் ✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் ✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
👨🦗ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன் .... 👩🦗பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு ... 👨🦗ஆண் கொசு : கண்ணே !!! உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன் .... 👩🦗பெண் கொசு : சரி .. சரி ... மொதல்ல தூங்க போ டார்லிங்... 👨🦗ஆண் கொசு : உன்ன நா மெர்சிடஸ் கார்ல உட்கார வெச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன் .... 👩🦗பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ் னு புரியுது டியர்.... காலையில பேசலாம் போய் தூங்கு ... 👨🦗ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா ..??? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின், வைரத்துல நகை போடுவேன் பாரு ... 👩🦗பெண் கொசு : நா நம்புறே டியர் ... நீ இப்போ தூங்க போ .... 👨🦗ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1,00,00,000 கொடுப்பேன் பாரு .... இப்போது 👨🦗ஆண் கொசுவை ஓங்கி அறைந்த 👩🦗பெண் கொசு ... "ஸ்ரீதரனின் கள்ள லைசன்ஸ் பாரில் சரக்கை அடிச்சவனை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேனு எத்தன தடவ சொல்லி இருக்கேன்...!!! ???" 😡😡😡 🙀🙀🙀😹😹 படித்ததில் வயிறு வலிக்க சிரித்த பதிவு..!!- உலகம் முழுவதும் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கின
கன பேருக்கு நேற்று இரவு கை கால்கள் நடுக்கம் வந்து இருக்கும் .- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
அனுரா உண்மையான சிங்கள பவுத்தனாக இருந்தால் 1978 ல் இந்திய ஏவு படைகளால் உயிருடன் கட்டி v வீதியில் போடப்பட்ட jvp உறுப்பினர்களின் மேல் இந்திய படைகளின் டாங்கி படையணியின் வெறியாட்டத்தை நினைவு கூற சொல்லுங்க .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அறிவாளிகள் என்று சொல்லி திரியும் முட்டாள்களுக்கு சமர்ப்பணம் நம்ம ஆளு லண்டனில் படித்து கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு பீட்டர் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவருக்கு நம்ம ஆளை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சமயம் மதியம் அவர் உணவு அருந்தி கொண்டிருந்த மேசையில் நம்ம ஆள் அமர்ந்தார். நம்ம ஆளை வெருப்பேற்ற " பறவையும் ! பன்றியும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த முடியாது ! " என்று எல்லோரும் கேட்கும் மாறு சத்தமாக சொல்ல! அதற்கு அவர் ! நம்ம ஆளை பார்த்து! " சரி அப்படி என்றால் நான் பறந்து போகிறேன்! " என்று சொல்லி விட்டு வேறு மேசைக்கு சென்று விட்டார். பேராசிரியருக்கு அவமானம் ஆகி விட்டது. எப்படியாவது நம்ம ஆளை பழி வாங்க நினைத்த அவர் அப்பொழுது வந்த தேர்வில் கடினமான கேள்விகளை கேட்டு இருந்தார். ஆனால் நம்ம ஆள் நன்றாக படித்து இருந்ததால் சரியாக விடை அளித்து இருந்தார். திருத்திய விடை தாளை கொடுக்கும் முன் நம்ம ஆளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்க! நம்ம ஆள் சரி என்று சொல்ல! பேராசிரியர் " நீ நடந்து போகும் போது வழியில் உனக்கு பை கிடைக்கிறது அதில் நிறைய பணமும், அறிவும் இருக்கு! அதில் நீ எதை எடுப்பாய் என்று கேட்க! நம்ம ஆள் யோசிக்காமல் நான் பணத்தை தான் எடுப்பேன் என்று சொல்ல! பேராசிரியர் சிரித்து கொண்டே என்ன ! நானாக இருந்தால் அறிவை தான் தேர்ந்து எடுப்பேன் என்று சிரித்து கொண்டே சொல்ல ! அதற்கு நம்ம ஆள் அது சரி சார் பொதுவாக ஒருவர் தன்னிடம் இல்லாத ஒன்றை தானே தேர்ந்து எடுப்பார் என்று சொல்ல! வகுப்பில் எல்லோரும் சிரிக்க பேராசிரியருக்கு அவமானமாக போய் விட்டது. கோபத்தில் விடை தாளில் Idiot ( முட்டாள் ) என்று எழுதி விடை தாளை நம்ம ஆள் கிட்ட நீட்ட. நம்ம ஆள் வாங்கி பார்த்து விட்டு ஐயா உங்க கையொப்பம் போட்டு இருக்கீங்க ஆனா என் கிரேட் ( Grade) எவ்வளவு என்று போட மறந்து விட்டீர்கள்! என்று சொல்ல பேராசிரியர் திகைத்து போய் நின்றார்!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஏண்டி இவன் தான் உன் கள்ளக் காதலனா! ஏண்டி என்ன தைரியம் இருந்தா உன் கள்ளக் காதலனை வீட்டுக்கே கூட்டி வந்து இருப்ப! பாக்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். என்னடி உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு! மூ...வி மூ.வி! குடிச்சா உனக்கு கண்ணு மண்ணு தெரியாது ! கண்ணாடி முன்னாடி நின்று உளராமல் பேசாம தூங்கு சரியா?- குட்டிக் கதைகள்.
கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை.. அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது, அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு. இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு. அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது. என்ன நடக்கும்.? மான் பிழைக்குமா? மகவை ஈயுமா? மகவும் பிழைக்குமா? இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா? வேடனின் அம்புக்கு இரையாகுமா? புலியின் பசிக்கு புசியாகுமா? மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்.. மான் என்ன செய்யும்? மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை. அப்போது நடந்த நிகழ்வுகள்....... மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது. தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது.. அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது. நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்.. சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்.. நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்.. அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும். இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. எதில் என் கவனம்? எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்? வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.. அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார். இறைவன் தூங்குவதும் இல்லை.. துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன சார் யோசனை சொல்றேன் என்று ஆளை காலி பண்ண ஐடியா கொடுக்குறீங்க! ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ" என்றாள். கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா" என்றாள். கண்டக்டர் வந்து "என்னம்மா அந்தம்மா ஜன்னலை திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா?" என்று கேட்டார். அதற்கு முதல் பெண் சொன்னாள் "இங்கே பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செத்துப் போவேன்" என்றாள். இரண்டாவது பெண் "இங்கே பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்"னாள். கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டரை கூப்பிட்டு "அங்கே என்ன பிரச்னை" என்று கேட்டான். கண்டக்டர் சொன்னார் "அதை ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேன்ங்குது. இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செத்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது". அந்த மனுசன் "நான் ஒரு யோசனை சொல்லவா?" என்று கேட்டான். கண்டக்டர் "சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப் போறேன்னு பார்ப்போம்" என்றார். அவன் சொன்னான் "கொஞ்ச நேரம் ஜன்னலை அடைச்சி வை, அந்த அம்மா செத்துப் போகும், அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வை இந்தம்மா செத்துப் போகும் நாம நிம்மதியா போகலாம்" என்றான். கண்டக்டர் சொன்னார் "நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றது"ன்னு கேட்டார். அதற்கு அவன் சொன்னான் "அதைப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான்.. அதனால தான் அந்த யோசனையை சொன்னேன்" என்றான். கண்டக்டர்: 😳😳😳 - வவுனியாவில் தேன் என சீனிப்பாணியை விற்ற மூவர் கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.