Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. ஊட்டி குளிர் அதிகம், அதிகாலை நேரம் ! போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோன் கால்! சேரிங் கிராஸ்ல மூணாவது தெருவில் பத்தாம் வீட்டில் இருப்பவன் ! குளிர் காய வைத்திருக்கும் விறகில் போதை பொருள் வைத்து இருக்கிறான் சார்! போய் உடனே அதை கைப்பற்றுங்க! செய்தியை கேட்டவுடன் போலீஸ் படை போலீஸ் அங்கு சென்றது! அந்த வீட்டில் நிறைய விறகு இருந்துச்சு. போலீஸ் கோடாரியால் எல்லா விறகையையும் வெட்டி போட்டு தேட ஒன்றும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். அவர்கள் போனவுடன் அவனுக்கு ஃபோன் வந்துச்சு! சார்! நான் குமார் பேசுகிறேன்! உங்க கிட்ட விறகு வெட்ட சொல்லி ஐநூறு ரூபாய் வாங்கிட்டு போனேன் இல்ல. ஆமாம் ! இப்ப போலீஸ் வந்து விறகு எல்லாம் வெட்டி கொடுத்து விட்டு போய் விட்டார்கள் இல்ல! ஆமாம் குமாரு! ஆனா ஏன் போலீஸ் வந்து விறகை வெட்டி ஒன்றும் புரியவில்லை! அதெல்லாம் விடுங்க சார்! வேலை முடிஞ்சு போச்சு இல்ல! இனி எந்த வேலை என்றாலும் குமாரை கூப்பிடுங்க! சரியா!
  2. ஒரு கதை . ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் சுமத்திரன் என்ற நரி ஒன்று இருந்தது. ஒரு நாள் அந்த நரி இரை தேடி அலைந்து கொண்டிருந்தபோது இறந்து கிடந்த ஒரு யானையின் உடலை பார்த்தது. அதைப் பார்த்ததும் சுமத்திரன் என்ற நரி தலைகால் புரியவில்லை இன்று வசமாக நமக்கு தீனி கிடைத்து விட்டது என்று அந்த யானையை சுற்றி சுற்றி வந்தது. ஆனால் அந்த சுமத்திரன் என்ற நரிக்கு யானையின் தோலை எப்படி உரிப்பது என்று தெரிய வில்லை அதன் கைகளிலும் கால்களிலும் அந்த அளவிற்கு நகங்கள் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தது. யாராவது இந்த வழியில் வந்தால் தந்திரமாக பேசி அவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்று நினைத்தது. அப்போது அந்த வழியில் ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தைப் பார்த்ததும் அந்த சுமத்திரன் என்ற நரிக்கு ஒரு பயம். யானையை சிங்கம் தின்று விடுமோ என்று நினைத்தது. சிங்கம் அருகில் வந்ததும் சுமத்திரன் நரி அந்த சிங்கத்திடம் வாங்கண்ணே எந்த பக்கம் வந்து இருக்கிறீர்கள் என்ற சொல்லி ஒரு வணக்கத்தை வைத்தது. அந்த சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இது நமக்கு வணக்கம் வைக்கிறது நீ யார் என்று கேட்டது. அதற்கு அந்த நரி அண்ணே நீங்கள் தானே இந்த யானையை வேட்டையாடி இங்கு வைத் திருக்கிறீர்கள் அதை நான் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னது. அதற்கு அந்த சிங்கம் இதை நான் அடித்துக் கொல்லவில்லை அதுவாய் இறந்திருக்கலாம் அல்லது வேற யாராவது கொன்றிருக்கலாம். இப்போதைக்கு எனக்கு இதன் இறைச்சி வேண்டாம் என்று அது புறப்பட்டது. நல்ல வேலை சிங்கம் போய்விட்டது என்று நரி பெரும் மூச்சுவிட்டுக் கொண் டிருந்தத வேலையில் அந்தப் பக்கம் ஒரு புலி வந்தது. அந்த புலி சுமத்திர நரியை பார்த்து ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு அந்த நரி சிங்கம் இந்த யானையை வேட்டையாடி இங்கு வைத்துள்ளது. என்னை காவலுக்கு இருக்க சொல்லிவிட்டு போய் இருக்கிறது என்று பொய் சொன்னது. இதைக் கேட்ட தும் புலி நமக்கு எதற்கு வம்பு நாம் செ ன்று விடுவோம் என்று திரும்பிச் சென்றது. அதன் பின் அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது. அந்தக் குரங்கு நண்பா ஏன் இங்கே நிற்கிறாய் என்று கேட்டது. நரிக்கு ஒரு யோசனை வந்தது குரங்கு சைவம் தானே அசைவம் சாப்பிடாதல்லவா அதனால் இதனிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தது. குரங்கைப் பார்த்து நண்பா உன்னை பார்க்கவே முடியவில்லை என்று கேட்டது. அதற்கு குரங்கு இப்போது என்னை பார்த்து விட்டாய் அல்லவா என்னவென்று சொல் என்றது. சுமத்திர நரி குரங்கிடம் ஒரு சிங்கம் இந்த யானையை வேட்டையாடி என்னை பாதுகாப்பிற்காக இங்கு இருக்கச் சொல்லிவிட்டு போயிருக்கிறது அது வருவதற்குள் நானும் இந்த யானையின் இறைச்சியை ருசி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்னால் இதன் தோலை உரிப்பதற்கு என் கை கால்களில் வலு கிடையாது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் உன் கை கால்களில் நகம் நன்றாக உள்ளது எனவே இந்த யானையின் தோலை உரித்து தருவாயா என்று கேட்டது. குரங்கும் சரி என்று செ ால்லி யானையின் தோல்களை நன்றாக உரித்து இதை நீ சாப்பிடு நான் சென்று வருகிறேன் என்று குரங்கு புறப்பட்டது. உடனே இந்த சுமத்திர நரி சந்தோசத்தில் யானையின் இறைச்சியை உண்ண ஆரம்பித்தது. அந்த நரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சற்று தூரத் தில் நரியின் இனங்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தது அதைப் பார்த்ததும் இந்த சுமத்திர நரிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குடுகுடுவென்று அந்த நரிகளை பார்த்து ஓடியது. இந்த நரி ஓடி வருவதை பார்த்து அங்கு வந்து கொண்டிருந்த நரிகள் எல்லாம் அப்படியே நின்று விட்டது. ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று கேட்டது. அதற்கு இந்த சுமத்திர நரிஅங்கு செல்ல வேண்டாம் அங்கு நிறைய சிங்கங்கள் ஒரு யானையை அடித்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது நாம் அங்கு சென்றால் நம்மளையும் கொன்று விடும் நானே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டேன் வாருங்கள் ஓடிவிடலாம் என்று மற்ற நரிகளை எல்லாம் திருப்பி அனுப்பி விட்டது. சிறிது தூரம் இந்த சுமத்திர நரியும் ஓடுவது போல் ஓடி பாதியிலேயே ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டது. எல்லா நரியும் சென்ற பிறகு இந்த சுமத்திர நரி மட்டும் அந்த யானையின் அருகில் வந்து அதன் இறைச்சியை அளவுக்கு மீறி தின்றது. தின்று முடித்தவுடன் நரியால் கொஞ்சம் கூட அங்கும் இங்கும் நகர முடியவில்லை. அதற்கு தலை சுற்றியது மயக்கம் வருவது போல் இருந்தது உதவிக்கு கூட அருகில் யாரும் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே மயங்கி விழுந்தது. அப்போதுதான் உணர்ந்தது நம் இனம் நம்மோடு இருந்திருந்தால் இப்போது நமக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது நம்மளை காப்பாற்றி இருப்பார்கள் தவறு செய்து விட்டோம் என்று வருந்தியது. வருந்தி என்ன பலன் சிங்களவர்களுடன் வாழ்வதே தனது சந்தோசம் என்றதே அந்த சுமத்திரன் நரி .
  3. 2௦௦5ல் யாழின் சில ஊர்களுக்கு போனபோது அங்குள்ள மக்களை விட இந்த கட்டாகாலி நாய்கள் தான் பல்கி பெருத்து ஊரின் ஒவ்வொரு சந்திகளிலும் கூட்டமாக இருந்தன .
  4. நீதிபதி இளம் செழியனுக்கு விடுப்பு கொடுத்து விட்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள் போல் உள்ளது .
  5. முழுமையான காரணம் இந்திய தலைநகரம் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து எழுப்ப படும் காற்று மாசுக்கள் என்கிறார்கள் உண்மையாக இருக்குமா ?
  6. பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்த்து..... தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.... ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது... ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை.... காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....! (உதாரணத்திற்க்கு..... தமிழ் வீட்டில் வளரும் நாய் உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...) எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர் எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட... . அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை.... கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்...... அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது..... அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ... உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் வழங்கபடும் என்றனர்.... பணம் வேண்டுமா.....? விலை கூடிய கார்கள் வேண்டுமா..? மாளிகை வேண்டுமா....? அரசாங்க பணிகள் வேண்டுமா...? என்று... அவர் மறுத்துவிட்டார்... எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்... அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.... சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்.... ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ... அதற்க்கு அவர்...சொன்னார்.... இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்.... அவள் சொல்வாள்... . ""எந்த நாய் கேட்க்க போகுதுன்னு... இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு..".".. அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
  7. இது அவரேதான் சுமத்திரன் எனும் குள்ள நரி . இதுவும் அந்த சுமத்திரன் தான் இதுக்கெல்லாம் கேஸ் போட என்று வெளிகிடுவம் என்றும் சொல்வார்கள் போடுங்க அப்ப தெரியும் 😃
  8. தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கியபடி தங்களுடைய சிங்கள அரசியல்வாதிகள் எப்படி நாட்டை குட்டி சுவராக்கி உள்ளனர் என்று இப்போ சாதாரண சிங்கள மக்களுக்கும் தெரிய வந்துள்ளது . நல்ல காலம் பார் லைசன்ஸ் லிஸ்ட் போல் இதுவும் வாய் பேச்சில் காணாமல் போய்விடும் என்று நினைத்து இருந்தேன் .
  9. இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) வீட்டில் யாழ் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. காட்சிப்படுத்தப்பட்ட பதாகை மேலும், அந்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்குறித்த பதாகை தொடர்பில் பொலிஸார் மாவையின் வீட்டாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, அந்த பதாகையை காட்சிப்படுத்தியது யார், மற்றும் அதன் பின்னணி என்ன என்பவை தொடர்பில் மாவையின் குடும்பத்தாரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டிற்கமையவே, இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இது குறித்து உறுதிபடுத்துவதற்கு, கே.கே. எஸ் பொலிஸாரை தொடர்பு கொண்ட போதிலும், அவர்கள் தமக்கு இந்த விடயம் தொடர்பில் தெரியாது என தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த பதாகை விவகாரம் குறித்து இன்று காலை தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை, மேற்குறிப்பிட்ட தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர், செய்த முறைப்பாட்டின் போது, குறிப்பாக இந்த பதாகை காட்சிபடுத்தப்பட்டிருந்ததனால், தமக்கு உயிரச்சுறுத்தல், இருந்தமையாலேயே இறுதி வணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/mavai-death-police-inquiry-on-mavai-s-house-1738844183
  10. கொஞ்சம் உயரத்துக்கு போனால் தமிழனுக்கு மூளை முழம் காலுக்குள் போயிடும் தன்னினம் எக்கேடு கெட்டாலும் திரும்பி பார்க்காதுகள் அது வழமையான ஒன்று .
  11. இலங்கையில் இருந்து உயிருக்கு பயந்து வாழமுடியாமல் இந்தியாவுக்கு சென்று அகதி தஞ்சம் கேட்ட தமிழரை எப்படி இந்திய நடுவண் அரசு நடாத்தியது ?
  12. திமுகவில் இன்பநிதிக்காவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதால் கட்சியிலிருந்து விலகினேன் என்று திமுக நிர்வாகி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகி விலகல் தமிழக மாவட்டமான சேலம், ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் எழில்அரசன் (35). திமுக நிர்வாகியான இவர், கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையில், "சேலம் மத்திய மாவட்ட திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்த நான், கீழ்காணும் காரணங்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன். *திமுக ஆட்சியில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. * பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "நான் 2015-ம் ஆண்டு முதல் கட்சியில் இருக்கிறேன். அடிப்படை உறுப்பினர் முதல் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதியை குறுகிய காலத்திற்குள் இளைஞரணிச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர். பல ஆண்டுகளாக கட்சியில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லை. வரும் காலத்தில் இன்பநிதிக்காகவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று தான் வேதனையாக உள்ளது. இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன்" என்றார். https://news.lankasri.com/article/will-have-to-work-for-inbanidhi-dmk-member-resign-1738733894
  13. உலகின் முதல் 10 தரவரிசையிலான நாடுகள் ஃபோர்ப்ஸ் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளமுடன் இஸ்ரேல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சக்திவாய்ந்த நாடுகள் எனினும் இந்தியா இந்த 10 நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படாமை குறித்து, பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. இந்த பட்டியல் பல முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்றபோதும், அதிக மக்கள் தொகை, நான்காவது பெரிய இராணுவம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட இந்தியாவை ஏன் இந்த பட்டியில் சேர்க்கவில்லை என்ற கேள்வியே எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பட்டியல், ஐந்து முக்கிய காரணிகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று ஃபோர்ப்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியா தலைமைத்துவம், பொருளாதார செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, வலுவான சர்வதேச கூட்டணிகள் மற்றும் ஒவ்வொரு நாட்டின் இராணுவ வலிமை என்பனவே அவையாகும் என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பட்டியலில்,உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. பட்டியலின்படி, முதல் 10 இடங்களில், அமெரிக்கா, சீனா, ரஸ்யா ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/10-most-powerful-countries-in-the-world-1738687143?itm_source=parsely-detail
  14. நாங்க சாமத்தில் பேய்கள் வெளியிரங்கும் நேரம் யாளுக்கு வருவதுண்டு இப்படி வயிறு வலிக்க சிரிக்க வைக்க வேணாம் 😄
  15. தமிழரசு கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை> கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும்> சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் 31ம் திகதி அன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது> வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சீ.வி.சிவஞானம் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி சுமந்திரன் தரப்போடு முரண்பட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு மோசமான செயற்பாடு. மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தனக்கு சார்பான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளில் சுமந்திரன் மும்முரமாக இருந்துள்ளார். மாவை சேனாதிராசா அவர்களை மாற்றவேண்டும் என்றால்> அல்லது அவர் ராஜினாமா செய்துள்ளார் என்றால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தலைவராக சிறிதரன் இருககின்றார். அவரை தலைவராக தெரிவு செய்வதுதான் ஒரு அறநெறிக்கு உட்பட்தாகும். அதை விடுத்து அதைப்பற்றி எதுவுமே பேசாமல் இன்றைக்கு சி.வி.கே.சிவஞானம் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். இது தமிழரசு கட்சியில் சுமந்திரன் பிரிவினருக்கு எதிராக இருக்கின்றவர்களை அகற்றி> சிறிதரனை தனிமைப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கை உள்வாரியாக இடம்பெறுகின்றது என்றே நான் நினைக்கின்றேன ;. இன்னும் கொஞ்சக்காலத்தில் சிறிதரன் தனிமைப்பட்டுப் போக சிறிதரனுக்கு எதிராக ஒரு ஒழுக்காற்று தீர்மானத்தை நிறைவேற்றி அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கூட பறிக்கக்கூடிய ஒரு நிலை இருக்கும் என நான் நினைக்கின்றேன். குறைந்தது ஆறு மாதத்திற்குள் சுமந்திரன் சிறிதரனை கட்சியிலிருந்து நீக்கி அல்லது தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சத்தியலிங்கத்தை பதவியிலிருந்து இராஜினாமா செய்யச்சொல்லி தான் அதற்கூடாக பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். இன்னொரு பக்கமாக சுமந்திரன் ஊடக பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏற்கனவே சிறினேசன் அவர்கள் ஊடக பேச்சாளராக இருக்கின்றார். அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். தற்போது புதிதாக கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்றும்> பாராளுமன்றத்தின் ஊடக பேச்சாளராக சிறிநேசன் இருப்பாரென்றும் கூறப்படுகிறது. ஒரு கட்சிக்கு ஏன் இரண்டு ஊடக பேச்சாளர்கள்? ஒரு கட்சிக்கு ஒரு ஊடக பேச்சாளர் போதுமானதே. சுமந்திரனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். தமிழரசு கட்சியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மாவை சேனாதிராசா தான் என சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்கள். மாவை சேனாதிராசாவில் விமர்சனங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இந்த போக்குகள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் சுமந்திரன் தான் என்பது இன்றைக்கு வெட்ட வெளிச்சமான உண்மையாகும். இதிலே தமிழரசு கட்சி என்பது ஒரு பாரம்பரிய கட்சி> அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது> அதற்கு வடக்கு கிழக்கு கட்டமைப்பு இருக்கிறது. அது பலவீனப்பட்டு செல்வது தமிழ் அரசியலை பலவீனப்படுத்துவது தமிழ் அரசியலை பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும். ஆகவே தமிழரசு கட்சியை பாதுகாக்கின்ற நடவடிக்கையை கட்சிக்காரர்கள் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. எனவே வெளியிலிருந்து மக்கள் ஒரு பலமான அழுத்தத்தை கொடுப்பதன ; ஊடகவே இதனை முன்னேற்றமுடியும் என நான் கருதுகின்றேன். அதிலிருந்து நாம் தவறுவோமாகவிருந்தால் ஒரு குறுகிய காலத்திலேயே இலங்கை தமிழரசு கட்சி வடக்கிலே இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகக்கூடி ஒரு சூழல் வரலாம் என்பதே எனது நிலைப்பாடு. இந்தப் போக்கை தமிழ் மக்கள் அனுமதிக்கப்போகிறார்களா என்பதுதான் எனது கேள்வி. இதில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு விடயம் இது ஒரு கொள்கைப் பிரச்சினை. தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய அரசியலும் இதுவரை பின்பற்றிய அரசியலை கைவிட்டு இன்னோர் அரசியலை கொண்டு செல்வதற்காக குறிப்பாக இறைமை அரசியலை கைவிட்டு ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் ஒரு அரசியலை கொண்டு செல்வதற்கும்> இணக்க அரசியலை கொண்டு செல்வதற்க்காகவும் சுமந்திரன் இந்த வேலையை செய்கிறார். இந்த பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் ஏன்பதே எனது நிலைப்பாடாகும் என்றார். https://uthayannews.ca/wp-content/uploads/2025/01/Jan_3_2025.pdf
  16. இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படும் இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும் எனக் கூறிய இலங்கையின் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்> கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தும் இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித்தொழிலாளர்களே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த படகுகளின் உரிமை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 'அந்த செயற்பாடு என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்த இழுவைமடியில் இழுவைப் படகுகளில் வருகின்றவர்கள் மீன் பிடிக்க வருகின்றவர்கள் அங்கிருக்கின்ற கூலித் தொழிலாளர்களாகும். அந்த படகு உரிமையாளர்களை எடுத்துப் பார்க்கின்ற போது> அங்கிருக்கின்ற அரசியல்வாதிகள் அல்லது பெரும் முதலைகளாகும். ஆகவே அந்த வகையிலே நிச்சியமாக நாளைக்கு அந்த படகுகள் பறிமுதல் செய்யப ;படுகின்ற போது> கைது செய்யப்படுகின்ற போது> மனிதாபிமான அடிப்படையில் அதில் இருக்கின்ற கூலித் தொழிலாளர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது தான் மனிதாபிமான நடவடிக்கையே தவிர> அல்லது இந்தியா வந்து இங்கு என்ன செய்துகொண்டு போனாலும் சரி> அவர்கள் எங்களது கடலை நாசமாக்கினாலும் சரி... இப்ப எங்களுக்கு இறால் பிடிக்கின்ற காலம் இது. இறால் பிடிக்கின்ற காலத்திலே> உண்மையிலேயே எங்களுடைய கடல்களை அழித்துக்கொண்டு போகின்ற செயல்பாடுகளை இந்திய மீனவர்கள் செய்கின்றார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள்." இந்திய மீனவர்கள் நாட்டுக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இந்தியாவின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அறிந்திருப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 'இது தொடர்பான செயற்பாடுகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தெரியும். தமிழ் நாட்டிலுள்ள புத்திஜீவிகளுக்கும் நன்றாகவே தெரியும். அது மாத்திரமின்றி டில்லியிலிருக்கின்ற மத்திய அரசாங்கத்திற்கும் தெரியும். அதில் இருக்கின்ற இது தொடர்பான அறிஞர்களுக்கும் நன்றாகவே தெரியும்." இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அழிவுகரமான ஆக்கிரமிப்பினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்து குறித்தும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 'இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல> எதிர்கால தலைமுறையும்> எதிர்கால வாழ்க்கையும். அந்த வகையில் இவ்வாறு அழிக்கப்படுமானால்> இன்னும் 15> 20 வருடங்களுக்கு பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போகின்ற கடல் பாலைவனமாக மாறுகின்ற ஒரு நிலை ஏற்படும் என்பது நாங்கள் மாத்திரமல்ல> சகல அறிஞர்களுக்கும் தெரிந்த விடயமாகும்." இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கிலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க. ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடக்கு மீனவர்களை திருப்திப்படுத்தும் நிலையான தீர்வு கிடைக்காத நிலையில்> யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கடற்றொழில்> நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். 'இதற்குப் பின்னர் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அனைத்து பேச்சுக்களும் முடிந்துவிட்டன. இதன் பின்னர் எவருடனும் பேச்சுவார்த்தை இல்லை". கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுகள் தொடரும் எனவும் தொழில்நுட்பம்> தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அமைச்சர் கூறுகிறார். வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டவிரோத இந்திய மீன்பிடி முறைகளால் கடனில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அச்சம் எழுந்துள்ளது. டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லியில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது> இரு நாட்டுத் தலைவர்களும் கடற்றொழில் பிரச்சினையை 'முக்கியமானது" என அடையாளப்படுத்தியிருந்தனர். மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும் என நாங்கள் கலந்துரையாடினோம் என இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். 'எவ்வாறாயினும்> மனிதாபிமான உதவிகளை வழங்குவதா அல்லது பெறுவதா என்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை." இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது> இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால்> வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்குமென கவலையடைந்திருந்தனர். எனவே தமிழ்நாட்டு முதலமைச்சருடன் இணைந்து அமைதியான தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் மீனவர் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்திய மீனவர்கள் வட கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை 'ஆக்கிரமிப்பு" என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு பேசாலையிலேயே இருக்கின்ற மீனவர்களை நாங்கள் சந்திக்கின்ற போது> வல்வெட்டித்துறையில் இருக்கின்ற மீனவர்களை சந்திக்கின்ற போது> ஏனைய பிரதேசங்களில் இருக்கின்ற மீனவர்களை சந்திக்கின்ற போது> மீனவர்கள் சொல்லுகின்றார்கள்> 'ஐயா எங்களுக்கு இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து நிறுத்துங்கள். அல்லது நாங்கள் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளப் போகின்றோம்." கடலைச் சுரண்டும் இழுவைமடி மீன்பிடி இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார். 'இதே வார்த்தையை இந்திய து}துவருக்கும் கூட நான் சொன்னேன். அது மாத்திரம் அல்ல> இந்த இழுவைப் படகுகள் என ;பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவை இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால்> இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். https://uthayannews.ca/wp-content/uploads/2025/01/Jan_3_2025.pdf
  17. சம்பந்தர் மற்றவர்கள் போல் நெருக்கடியான கால கட்டத்தில் இறக்கவில்லை . அதை முதலில் புரிந்து கொள்ளுங்க இயல்பான நாளில் இறந்த ஒரு அரசியல் தலைவரை மக்களே இல்லாமல் அநாதை பிணம் போல் தகனம் செய்தார்கள் அதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தமிழ் மக்களின் இறுதி மரியாதையும் பழி வாங்கலும் . ஆனால் அதே கட்சி தான் மாவையருக்கு தமிழ் மக்கள் கொடுத்த இறுதி மரியாதை பார்த்தீர்கள் தானே ? ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்றதை அவனின் இழவு வீடு சொல்லிவிடும் .
  18. மாவையின் உடல் தகன மயானத்தில் தடை விதிக்கப்பட்ட 19 நபர்கள்: சர்ச்சையை கிளப்பிய பதாகை By Sajithra 11 hours ago இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அந்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் துரோகிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mavai-death-ban-poster-showed-up-1738493675
  19. தமிழரசுக்கட்சின் மூத்த தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் மரணம் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. அவரின் மரணத்திற்கு முன்னர் தமிழசசுக்கட்சியின் இரு முக்கியஸ்தர்களை சந்தித்ததாகவும், அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், மாவை சேனாதிராஜாவின் மரணம் தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மற்றும் சட்டத்தரணி உமாகரன் இராசையா இன்றைய 02.02.2025 ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேரலையாக தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்ளனர். லங்காசிறியின் ஊடறுப்பு நேரலையை இலங்கை நேரம் - இரவு 09.00 பிரித்தானிய நேரம் - மாலை 3.30 ஐரோப்பிய நேரம் - மாலை 4.30 காணலாம். https://tamilwin.com/article/mavai-death-controversy-udaruppu-live-today-1738510352?itm_source=parsely-detail
  20. வடகிழக்கு தமிழர் களுக்காக 7 வருடத்துக்கு மேல் சிறையில் இருந்த ஒரு தமிழ் அரசியல்வாதியை உங்களால் சுட்டி காட்ட முடியுமா ? அனாதை பிணமாக சம்மந்தர் போனது போலத்தான் சுமத்திரன் இறந்தாலும் என்ன கொஞ்ச சிங்கள இனவெறியர்கள் சுமத்திரன் பிணத்துக்கு காவல் காப்பார்கள் அவ்வளவுதான் 😀
  21. முதலில் பயங்கரவாத தடை சட்டத்தை எடுக்காமல் தமிழ் மக்களுக்கு புனுகு பூசுவதில் ஒன்றும் நடக்காது புலம்பெயர் தமிழர்கள் நம்ப போவதில்லை .
  22. இரண்டாவது சியா மாசெட்டி தாக்குதல் வல்வெட்டி துறையில் அல்ல வல்வெட்டியில் அயலூரில் நடந்ததாய் ஞாபகம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.