Everything posted by பெருமாள்
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
பின்கதவால் பதவி கிடைத்தது முதல் உலக நாடுகளிடம் ஓடி ஓடி தனியே பேசி இனவழிப்பு அங்கு நடைபெறவில்லை என்று காப்பற்றியதுக்கு சிங்களத்துக்கு விசுவாசமாய் நடந்து கொண்டதுக்கு கிடைத்த வெகுமானம் இது .சிலவேளை தங்களின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் என்று சொறிந்து கொள்ளவும் அவர்களால் முடியும்.இதை மகிந்த தரப்பு ரசிக்காமல் மேலே சொரியவும் செய்யும் .
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
தேங்காய் நாலயிரம் ஒன்று அரிசி பத்தாயிரம் ஒரு கிலோ வரும்போது சிங்களவர்கள் விழித்து கொள்வார்கள் அது மட்டும் பொறுத்து கொள்ளுங்க அது மட்டும் ப..றை தமிழு என்று சொல்லிக்கொண்டு இனவாதம் கக்கி கொண்டு இருக்கட்டும் . அது வரும் வெகு விரைவில் சிங்களத்தின் முக மூடி மாற்றபட்டு இருக்கே தவிர உண்மை முகம் மாற்றப்படவில்லை .
-
ட்ரம்ப் மிரட்டலை தொடர்ந்து பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்த கனேடியர்!
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துவிடுமாறு ட்ரம்ப் விடுத்த மிரட்டலையடுத்து, கனேடியர் ஒருவர் பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளார். டொனால்டு ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் அதே சமயம், அதனையொரு வியாபாரமாக மாற்றும் வகையில் லியாம் மூனி (Liam Mooney) எனும் கனேடியர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். "Canada is Not for Sale" என்ற வாசகத்துடன் கூடிய தொப்பிகளை தயாரித்து வெளியிட்டுள்ளார் மூனி. இந்த முயற்சியால் ஈர்க்கப்பட்ட Ontario Premier டக் ஃபோர்ட் (Doug Ford), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒட்டாவாவில் நடந்த கூட்டத்தில் இந்த தொப்பியை அணிந்தது மிகவும் பிரபலமாகியுள்ளது. இதனால் இத்தொப்பிகளுக்கான ஓன்லைன் ஆர்டர்கள் திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளன. டிரம்பின் உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கனேடிய பொருட்களுக்கு வரி விதிக்க முயற்சி செய்ததைத் தொடர்ந்து, மூனி இந்த தொப்பிகளை உருவாக்க முடிவு செய்தார். இந்நிலையில், டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்று கூறியது கனடாவில் கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த ஃபோர்டு, “கனடா விற்பனைக்கு அல்ல” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். https://news.lankasri.com/article/canadian-launches-hats-after-trump-threats-viral-1737803448
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
சுமந்திரனுக்கு வாகன கதவை திறக்கும் மெய்பாதுகாவலர்கள்: தானே திறந்து கொள்ளும் அநுர. இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. சலுகை அந்தவகையில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது அநுர அரசாங்கம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகத்தை காட்டி சலுகைகளை வழங்குகின்றதா அல்லது சுமந்திரனுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துகொண்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வாகன கதவுகளை திறந்து விடுவது என்பது ஜனாதிபதிகளுக்கான ஒரு விசேட செயற்பாடாகும். இருப்பினும் ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சலுகை தனக்கே வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக அநுர அரசின் கீழ் உள்ள அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் யாரும் பாதுகாப்பு சலுகைகள் எடுத்துக் கொள்ளாத நிலையில், சுமந்திரனுக்கு மாத்திரம் அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தவறான வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக மகிந்த ராஜபக்ச தனது மெய்பாதுகாவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியமைக்கு ஒப்பானதாகவே இது பார்க்கப்படுகின்றது. அத்துடன், இந்த செயலானது, பாதுகாப்பு அதிகாரிகளை மலினபடுத்தும் வகையில் இருப்பதாகவும் சுமந்திரன் விடயத்தில் அநுர அரசு துணை போகின்றதா அல்லது சுமந்திரனோடு பயணிக்கின்றதா என்னும் கேள்வி எழுகின்றது. எனவே, இது தொடர்பில் அநுர அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர். https://tamilwin.com/article/two-bodyguards-given-to-sumanthiran-been-issued-1737893866
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
தமிழருக்கு எதிரான இனவெறி நிறைந்து உள்ளது .
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
பச்சை முடிந்து விட்டது பாஞ்.....😀
-
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகும் உலகம்!
எதிர்வரும் நாட்களில் உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படும் என உலக பொருளாதார மன்றத்தின்(WEF) கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் 25ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆலிவர் வைமனால் (Oliver Wyman) தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பின்னோக்கி நகரும் பொருளாதாரம் குறித்த அறிக்கையில், உலகம் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தில் பின்னோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு எனில் ரூ.51 இலட்சம் கோடியில் தொடங்கி, ரூ.419 இலட்சம் கோடி வரை உலக வர்த்தகம் பாதிக்கப்படலாம். உலக நாடுகளின் GDP-ல் இந்த பணம் 5% ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இருக்கும் பிரிவினைகள், தன்னிச்சையாக செயல்படுதல் போன்ற காரணங்களால் இவை ஏற்படும் என்று உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது. இதனை 'geoeconomic fragmentation' என்றும் குறிப்பிட்டிருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2008 பொருளாதார வீழ்ச்சியை விடவும், கோவிட் பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அந்த நாடுகளால் அதனை சமாளித்துக்கொள்ள முடியும். ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் இதை தாங்கிக்கொள்ள முடியாது. இந்தியா மட்டுமல்லாது பிரேசில், துருக்கி, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும். இந்த நாடுகளில் GDP 10 சதவிகிதத்திற்கும் குறைவாக போக வாய்ப்புள்ள நிலையில், இவையெல்லாம் அணிசேரா நாடுகளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/world-faces-unprecedented-economic-crisis-1737830282
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
அந்த தமிழரசு கட்சி பெயரை யராவது குரங்கரசு கட்சி என்று பெயரை மாற்றி விடுங்கப்பா . அவங்கள் பெயரை மாற்றும் மட்டும் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு கடைசியில் உதார் விடுவது இந்த குரங்கரசு கட்சி.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எல்லாம் சரி ஊரில் ஓட்டுகுந்துவது போல் இங்கு திண்ணை யை இழுத்து மூடி விட்டார்கள் அதனால் இன்னும் கடுப்புடன் சிலர் இருக்கினம் 😀
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
முக்கியமாய் எழுத்து பிழைகளை கவனிக்கவும் தமிழில் எதிர் கருத்து வைப்பது என்றால் அதற்கு ஒரு தில் வேணும் இப்படி அரைகுறையாய் தமிழை எழுதி தமிழை சிதைக்க வேணாம் .
-
ஜனாதிபதி அநுரவின் வீட்டுக்கு 500 இலட்சம் வாடகை! வெளியான தகவல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லத்தின் மாத வாடகை சுமார் 500 இலட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீட்டின் மாத வாடகை தொடர்பில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி, ஜனாதிபதி தனது இல்லத்திற்காக, இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தில் இருந்து மாதத்திற்கு சுமார் 500 இலட்சத்தை செலவிடுவதாகவும் சாகர குற்றம் சுமத்தியுள்ளார். அரிசி, தேங்காய் பிரச்சினை மேலும், மக்கள் எதிர்கொள்ளும் அரிசி, தேங்காய் மற்றும் உப்பு பிரச்சினைகளைத் அரசாங்கம் விரைவில் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பூனைகளுக்கும், நாய்களுக்கும் உணவளிப்பதால் அரிசி தீர்ந்துவிட்டதாகவும், தேங்காய் சம்பல் தயாரிக்கப்படுவதால் தேங்காய் தீர்ந்துவிட்டதாகவும் சமூகத்தில் பொய்யான கருத்துக்களை அரசாங்கம் வெளிப்படுத்துவதாகவும், அவ்வாறான கதைகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/monthly-rent-for-anura-s-house-around-500-rupees-1737784526
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
முதலில் இங்கு என்ன கருத்து சொல்ல வந்தேன் என்பதை கூட புரிந்து கொள்ள திரணி அற்ற ஆள் அந்தளவுக்கு உங்களுக்கு புலிகள் மீதும் தமிழ் தேசியம் மீதும் அவ்வளவு வெறுப்பு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் காக்கா எச்சம் போடுவது போல் புலிகளை வசை பாடுவதுதான் உங்களின் முழு நேர தொழில் யாழில் கொஞ்சமாவது மற்றவர் எழுதும் கருத்துக்களை கிரகித்து அதற்க்கு தகுந்த பதில் கருத்து எழுத திரும்பவும் பள்ளி சென்று படித்து அதன்பின் யாழில் கருத்து எழுதுங்க .
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
முதலில் எங்கடை அரசியலே முழு விசர் கூட்டமாய் திரியுது இதுக்குள் பக்கத்து வீட்டு அரசியல் அதுவும் நாம் அழிந்து கொண்ட நேரம் மானடா மயிலாட பார்த்த கூட்டம் எக்கேடு போனால் நமக்கென்ன . அதுசரி யாழ்பாணத்தில் இந்திய புரியாணி கடைகள் புதுசு புதுசு ஆய் திறக்கினம் ஒரு புரியாணி பாசல் 15௦௦ ரூபா என்கிறார்கள் அங்கிருக்கும் கூலிக்கு வேலை செய்பவரால் அந்த பாசலை வாங்க முடியுமா ?
-
Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன?
https://audioboom.com/posts/8640245-hundreds-of-dead-sea-turtles-are-washing-ashore-on-india-s-coast https://www.thetravel.com/why-are-hundreds-of-endangered-sea-turtles-washing-up-on-the-shores-of-east-india-dead/
-
Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன?
இயற்கையின் அருமை புரியாதவர்கள் தடை செய்யப்பட்ட trawl boats னால் வரும் இயற்க்கை அழிவை தெரிந்து கொண்டும் செயற்படுகிறார்கள் . ஒரு நாள் மீன் வளம் அற்ற கடலை அந்த கடல் காண்பித்து கையை விரிக்கும் அப்ப தெரியும் ஏண்டாtrawl boats பயன்படுத்திய விளைவு . ஒ அந்த விழிப்பு உணர்வில் தான் இலங்கையின் வடகிழக்கு கடற்கரையோரம்உங்கள் மீனவர்களால் சூறையாடபடுகிறதா? ஆமை இறப்பை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது ஆர்வமுள்ளவர்களுக்கு https://www.independent.co.uk/asia/india/sea-turtles-olive-ridley-dead-tamil-nadu-chennai-b2682604.html
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
சுமத்திரன் என்ற முழு விசரணை அரசியலை விட்டு போக வைக்க அர்சுன்னா என்ற பாதி விசரை வெல்ல வைக்க வேண்டி வந்தது அந்த சுமத்திரன் முழு விசர் அரசியலை விட்டு போகாதமுதல் இந்த அரை விசர்ததான் அதுக்காக எவ்வளவு விலையும் கொடுக்கலாம் .
-
நெஞ்சுவலி… அப்பல்லோவில் அன்புமணி
பாவம் anpu மணி இட்லிக்கு என்ன விலை கொடுக்கப்போகிறாரோ தெரியலை ?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பையா பல தடவை சொல்லி விட்டேன் எங்கே இந்த முட்டாள் சுமத்திரன் திரிகளில் அடிவான்குகிராரோ உடனே சீமானின் திரியை காரண காரியமற்று தொடங்குவார்கள் அப்படி தொடங்கி சிலரை வெளியேற்றுவதே ஒரே நோக்கம் அமைதியாக இருங்கள் தேவையற்ற சீண்டல்களில் மாட்டு பட வேண்டாம் . போட்டோ பிழை என்றால் எத்தனை ஒன் லைன் தளம்கள் பக்ட் செக் இருக்கு அங்கு போட்டு பார்க்கலாமே இவ்வளவு கொள்ளுபடுகிற கூட்டம் ரிவேர்ஸ் செக் பண்ணலாமே அவர்களுக்கு அதெல்லாம் தெரியும் ஆனாலும் வம்பிழுத்து உங்களை போன்றவர்களை டென்சன் ஆக்கி சுமத்திரன் திரிகளில் வாங்கிய அடிகளை சமபடுத்துவதே அவர்களின் நோக்கம் .
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
Honda Nissan போன்றவை உள்ளூர் வீதிகளில் பாதுகாப்பாய் ஒடுவதுக்கு கூட வக்கில்லாத கார்கள் .
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
- சதி செய்யும் சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் விசாரணை! அநுர அரசிடம் கோரிக்கை விடுத்த சிறீதரன் எம்.பி
- சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
சிம்பிள் அதானியின் திட்டம் கள் முழுமையாக தடை செய்ய பட்டதா ? இல்லை ஏன் அனாவசியம் அற்று யாழில் இந்திய துணை துதரகம் ? அதயேன் அனுரா அரசு விட்டு வைத்து இருக்கு ?- சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
கவலைப்பட வேணாம் சிங்களம் எந்தபக்கம் மூவ் பண்ணினாலும் "செக்மேட்" தான் . முதலில் தமிழருக்கு ஒரு நிலையான தீர்வை கொடுக்குமட்டும் .- காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் - குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர்
யுத்த நிறுத்தம் வந்தது சரி இந்த சண்டையால் விமான நிறுவனம்கள் அடித்த கொள்ளை கார்கோவுக்கு அடித்த எக்ஸ்ரா காசை இன்னும் குறைக்கவில்லையே ?- சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
"ஒழுங்கு மரியாதையாய் திருகோணமலையை அமெரிக்காவுக்கு எழுதி தந்து விட்டு கிளம்பி போ" - சதி செய்யும் சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் விசாரணை! அநுர அரசிடம் கோரிக்கை விடுத்த சிறீதரன் எம்.பி
Important Information
By using this site, you agree to our Terms of Use.