-
Posts
15244 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும், 4ஆம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அழைப்பு இந்நிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே இலங்கை பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. https://tamilwin.com/article/60-year-old-woman-questioned-by-crime-stoppers-1733163593
-
இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு தொடர்ந்தும் காலம் அவகாசம் கோரி வருகிறது. எனினும், இலங்கைக்கு எதிரான பிடியை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவுடன், நீண்டகாலமாக நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்று வரை வலியுறுத்தி வருகின்றன. தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றன. அந்தவகையில் இலங்கையில் வரலாற்று ரீதியான ஆட்சியை கைப்பற்றியுள்ள அநுரகுமார திசாநாயக்க அரசு, சர்வதேச பொறிமுறையின் ஊடாக தமிழர்களுக்கான உள்ளக விசாரனையை ஆரம்பிக்க புதிய நகர்வை கையாள திட்டமிட்டுள்ளதாக அரசியல் தற்போது வட்டாரங்களில் சில கருத்துக்கள் மேலோங்கியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ், சர்வதேச பொறிமுறை என்பது அநுர அரசால் கையாள திட்டமிடப்பட்டுள்ள அதிமுக்கிய செயற்பாடு என சுட்டிக்காட்டினார். மேலும் , இவ்வாறான விடயங்கள், புலம் பெயர் அமைப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார். https://tamilwin.com/article/government-challenges-diaspora-organizations-1733156459
-
ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியின் பேரன் மிகவும் வருத்தமடைந்தான். பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான். அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது. கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது.. எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று.. விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான். மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான். கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்தன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்.. நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு.. பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து அனுப்பினார். தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது. தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு.. மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார். கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே.. கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான். கேட்டவன் எதிர்க்கட்சிக் காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்.. நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார். அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு.. ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணி தான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்.. அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார். கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார். அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று.. மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து.. மாநில அமைச்சரிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு வந்து..மாவட்ட கலெக்டரிடமிருந்து தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து விஏஓக்கு வந்து.. விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.. (இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... 🙁 ) சிந்திக்கவும்.😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாள் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
என்னங்க நான் ஜிம்முக்கு ஒர்க் அவுட் பண்ண போறேன்! கணவன் - ஹலோ! யாருங்க ஜிம் கோச்சா! கோச் - சொல்லுங்க ! என்ன வேண்டும் ! கணவன் - சார்! என் மனைவி ஹேமா! உங்க ஜிம்முக்கு தான் ஆறு மாதமா ஒர்க் அவுட் பண்ணராங்க! ஆனா ஒரு இம்புரூவ்மெண்ட்டும் தெரியலையே! கோச் - ஓ நீங்க ஹேமாவின் கணவரா! கொஞ்சம் இருங்க அவங்க எவ்வளவு சின்சியரா ஒர்க் அவுட் பண்றாங்க என்று நீங்களே பாருங்க! -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பெருமாள் replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
செத்தும் பழி வாங்கும் சத்தியவதி !!!! ஒரு பெண் கணிப்பொறி நிலையத்திற்கு வந்து தன் புகை படத்தை சிறிது மாற்றம் செய்து கொடுக்க சொன்னார். கடைக்காரர் சொல்லுங்க உங்களுக்கு என்ன மாறுதல் செய்ய வேண்டும். பெண் -ஒன்றும் இல்லைப்பா!! இந்த படத்தோட ஒரு வைர கம்மல், ஒரு சவரன்ல நெத்தி சுட்டி, கழுத்துல ஒரு அஞ்சு பவனுக்கு ஒரு ஆரம், ரெண்டு கைகளிலும் அஞ்சு அஞ்சு தங்க வளவி, அப்புறம் ஒரு பத்து பவுனுக்கு ஒரு ஒட்டியாணம், இத எல்லாம் சேர்த்து ஒரு ஆளுயர புகைப்படம் ஒன்னு வேண்டும் வீட்டில் வைக்க,!!! கடைக்காரன். - என்னம்மா !! உங்க சங்கதி புதிதாக உள்ளதே!! கொஞ்சம் புரியரமாதிரி சொல்லுங்களேன், பெண் - அது ஒண்ணும் இல்லைப்பா !! மருத்துவர் நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று சொல்லிட்டாரு, எப்படியும் எங்க வீட்டுக்காரர் அவரோட வேலை செய்யும் பெண்ணை கல்யாணம் கட்டிக்க போகிறார். வீட்டுக்கு வந்தா அந்த மகராசி இந்த புகை படத்தை பார்த்து இல்லாத இந்த நகையெல்லாம் எங்கே என்று கேட்டு என் கணவனை கொன்று விட வேண்டும்!! அப்பொழுதுதான் என் ஆத்மா சாந்தியடைய வேண்டும்!! -
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஈழத்தில் தமிழ் தேசியம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று பேரினவாதிகளும் தமிழ் தேசிய விரோதிகளும் அகமகிழ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதைக் கண்டோம். இந்த ஐயங்களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் நாட்களே பதில் அளிக்கப்படும் என்பதையும் தமிழ்தேசியப் பற்றுக்கொண்ட நாம் கூறியிருந்தோம். இதனை உறுதி செய்யும் விதமாக வடக்கு நவம்பர் 27ஆம் நாளன்று கிழக்கு தேசம் ஒளியால் நிறைந்திருந்தது. ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி என்பது மண்ணில் விதைக்கப்பட்ட எங்கள் வீர்ர்கள் கனவு குறித்தும் இலட்சியத் தாகம் குறித்தும் உலகிற்கு வெளிப்படுத்திய குரல் என்பதுடன் ஈழத் தமிழர் தேசத்தில் தமிழ்தேசியம் என்றும் வீழ்ச்சியுறாது என்பதும் அழுத்தமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. நடுகல் வழிபாடு மாவீரர் நாள் என்பது ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் தம்மை ஆகுதி ஆக்கிய ஈழ நிலத்து வீரர்களை அஞ்சலிக்கின்ற புனித நாள். விடுதலைத் தாகம் கொண்டு தமிழர் தேசம் எங்கும் விதைக்கப்பட்ட கல்லறைகள் கண் திறந்து பார்க்கும் உணர்வு மேலிடும் நாள். உணர்வுமயமாக மாத்திரம் இந்த நாள் முக்கியத்துவம் பெற்று முடிந்து விடுவதில்லை. பண்பாட்டு ரீதியாவும் அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இந்த நாள் முதன்மை பெறுகின்றது. இறந்தவர்களை வழிபடுதல் என்பது மானுட மாண்பு. தமிழ் சமூகத்தில் தெய்வ வழிபாடுகளும் போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் நட்டுச் செய்யப்படுகிற வழிபாடுகளும் பண்பாடாக இம்மண்ணில் தொன்று தொட்டு நிலவுகிறது. அந்த வகையில் மாவீரர் நாள் என்பதும் மாவீரர் துயிலும் இல்லம் என்பதும் தமிழரின் பண்பாட்டுரிமை மையங்களாகும். இலங்கையிலும் இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள பண்பாட்டு அடையாளங்களை உலக மரபுரிமைச் சின்னங்களாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. உலகமெங்கும் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை பேணுதலும் அதனை மக்கள் கொண்டாடுவதும் பன்னாட்டு விதிகளுக்கு இயைபானது. அப்படியிருக்க ஈழதேசத்தில் 2009 முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் மாவீரர் துயிலும் இல்லங்களை இலங்கை அரசு தன் படைகளைக் கொண்டு சிதைத்தது. ஈழத் தமிழினம் மீது அறமற்ற வகையில் எப்படி இனவழிப்புப் போரைச் செய்து, இனப்படுகொலையைப் புரிந்ததோ அதேபோன்று அறமின்றி மாண்ட வீரர்களின் கல்லறைகளுடனும் யுத்தம் செய்து அழித்து. இருப்பிற்காகப் போராடிய விடுதலைப் போராளிகளின் இருப்பிடங்களும் சிதைக்கப்பட்டன என்பது ஈழ மண்ணில் நாம் சந்திக்கும் இருப்பு சார்ந்த இடரையும் ஒடுக்குமுறையின் கொடூரத்தையும் இந்த உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கின்றன. இராணுவமுகமாகத் துயிலும் இல்லங்கள் அதற்குப் பின்னரும் துயிலும் இல்லங்களில் இராணுவமுகாம்கள் அமைக்ப்பட்டுக் குடியிருந்த மற்றொரு ஆக்கிரமிப்பும் அரங்கேறியது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய போதும் இன்னமும் கோப்பாய் துயிலும் இல்லம், கொடிகாமம் துயிலும் இல்லம், முள்ளியவளை துயிலும் இல்லம், மல்லாவி ஆலங்குளம் துயிலும் இல்லம் என்பன இராணுவத்தின் பாரிய முகாம்களாக உள்ளன. “என் உறவு விதைக்கப்பட்ட துயிலும் இல்லத்திற்கு நான் செல்ல முடியாமல் போனேன். என் பிள்ளை அனாதையாகக் கிடக்கிறான்…” என்ற வார்த்தைகளை நேற்று மல்லாவியில் இருந்து கேட்ட வேளை மனம் துடித்தது. வடக்கு, தெற்கு என்ற பிரிவில்லை என்று சொல்லுகிற அநுர அரசாங்கம் இந்தத் துயிலும் இல்லங்களை உடன் விடுவிக்க வேண்டும். அரசுக்கு எதிராக தமது அரசியல் கொள்கை சார்ந்து ஆயுதம் ஏந்திய ஜேவிபி, இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஈழ விடுதலைப் போராளிகளை அங்கீகரிக்க வேண்டும். அப்படியொரு காலமும் ஈழத்தில் திரும்பும். அந்த நம்பிக்கையை நவம்பர் 27 இம்முறையும் நிரூபித்திருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெறாத நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் (மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த பகுதியில்) வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் தமிழ் தேசியம் இலங்கையில் வீழ்ச்சி பெற்றுவிட்டது என்ற தோரணையை பேரினவாதிகளும் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களும் எற்படுத்த முனைந்தனர். அதாவது யார் ஆட்சி புரிந்தாலும் ஆதரிப்போம் என்ற பேரினவாத ஒத்தோடிகள் இதில் அகமகிழ்ந்தனர். தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் மீதுள்ள விரக்தியாலும் விமர்சனத்தாலும் தான் அப்படி அமைந்தன. தமிழ் தலைமைகளின் சிதறலும் தன்னல அரசியல் போக்கும் எம்மை பின்னடைவுக்குத் தள்ளின. இதனை தமிழ் அரசியல்வாதிகள் உணரத் துவங்கியுள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு ஒரு சிறந்த பாடத்தை வழங்கியிருக்கும். உணர்வுகள் சிதறாது ஆனால், வாக்குகள் சிதறினாலும் உணர்வுகள் சிதறாது. இதனை மாவீரர் நாள் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிறந்தநாள் என்பன உணர்த்தியுள்ளன. அத்துடன் சில கட்டுப்பாடுகளுடன் சிங்கள மக்கள் மற்றும் அரசு மாவீரர்களைக் கொண்டாட இம்முறை அதிகாரபூர்வமாக அனுமதித்துள்ளது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான இடம். அத்துடன் சிங்கள நண்பர்கள், உறவுகள் பலரும் மாவீரர் நாள் பற்றியும் தலைவர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிறந்தநாள் பற்றியும் விசாரித்துக் கொண்டார்கள். வரும் காலத்தில் இன்னமும் இதில் முன்னேற்றம் வரும் என்றார்கள். சிங்கள மக்கள் எங்களை ஏற்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்பது ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படை. அந்த மாற்றம் நிகழத் தொடங்குகிற போதுதான் இலங்கையில் அமைதி நிலையாகத் திரும்பும். பேரினவாத ஒத்தோடிகளாகச் செயற்படும் சில தமிழரின் அரசியல் மிகவும் ஆபத்தானது. சிங்கள மக்கள்கூட எம்மாவீரர்களை ஏற்றுக்கொண்டு வருகின்ற காலத்தில் இவர்கள், தமிழ் தேசியத்திற்கு எதிராக தம் வன்மங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இதில் சில தமிழ் எழுத்தாளர்களும் உள்ளனர். போர் முடிந்த கையுடன் ஈழத்தில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் மகிந்த ராஜபக்ச ஈழ மக்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார் என்றும் முள்வேலி முகாங்கள் சிறப்பாக உள்ளன என்றும் பேட்டி கொடுத்தார்கள். உலகின் முள்வேலி முகாம் என்ற நரகத்தை சிறப்பான இடம் என்று சொன்ன எழுத்தாளர்களிடம் வேறென்ன வெளிப்படும்? பேரினவாதிகளுக்குப் பதில் எனவே, இவர்கள் தேர்தல் முடிவுகளை வைத்து, வடக்கு கிழக்கு மக்கள் தமது கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்று டில்வின் சில்வா, உதயகம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற பேரினவாதிகள் தமது இனவாத மொழியில் பேசியதைப் போலவே அரச ஒத்தோடிகளின் பதிவுகளும் கருத்துக்களும் இருந்தன. யாவற்றுக்குமான பதில் நாளே நவம்பர் 27. எல்லா ஐயங்களுக்கும் எல்லாக் கேள்விகளுக்கும் கொட்டும் மழையிலும் பெரும் புயலிலும் இயற்கை இடருக்கு முகம் கொடுத்த சமயத்திலும் வடக்கு கிழக்கு எங்குமுள்ள துயிலும் இல்லங்களில் திரட்சிபெற்ற மக்கள் விண்ணீராலும் கண்ணீராலும் அஞ்சலி செலுத்தி பெருவிடையை அளித்துள்ளனர். நிகரற்ற தியாகங்களாலும் அதியுன்னத வீரங்களாலும் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம், எங்கள் தேசத்தில் விதையாக இருந்து விடுதலைக்கும் அமைதிக்கும் வழிப்படுத்தும் என்ற பெரு நம்பிக்கையைப் பெற்றோம். https://tamilwin.com/article/tamil-desiyam-maveerar-day-2024-special-content-1732834128
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா (China) கணிப்பிட முடியாது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள், மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன், "சீன தூதுவருக்கு சிறிய தெளிவுபடுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமால் ஆக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன. தவிர தமிழ் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள். இன்றுவரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது. வெறுமனே நாடாளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல. அதையும் தாண்டி உள்ளது. ஆகவே, இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலை ஆகவே, இன்றுவரை தமிழ் மக்களின் பிரச்சினை, காணாமல் ஆக்கபட்டோர் பிரச்சினை இன்றுவரை எமக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த விடயங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம். கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்றவகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்றவகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை. நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம். தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர் ரீதியாக மாத்திரமன்றி பண்பாடு ரீதியாக பொருளாதார ரீதியாக மேற்கொள்ளப்படுவது ஆகும்” என தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/uoj-students-tirade-chinese-ambassador-s-opinion-1732896524?itm_source=parsely-detail
-
இதில் மும்முரமாக நின்றவர் வவுனியாவில் கார்த்திகை பூ வாங்க சென்றவர் கொலை செய்யபட்டுள்ளார் சில ஊடகங்களில் மோட்டர் சைக்கிள் விபத்து என்று சொல்லப்பட்டு உள்ளது .
-
குடைக்குள் பந்து விளையாடும் மகா ராசன் உலகில் இவர் ஒருத்தர்தான் . தமிழ் bbc யார் ? டெல்லிக்கு சார்பானவர்கள் அதுவும் கேள்விதான் போட்டு உள்ளார்கள் பேராண்ட்டி நீங்க நாலு படிப்பு படிச்சவர் தானே கேள்விகுறி எல்லாம் ஆதாரத்துக்கு எடுத்து செல்ல முடியுமா பேராண்டி ?
-
அப்படியா ஏன் அது பற்றிய விபரங்கள் தமிழ் ஊடகங்களில் வரவில்லை ?
-
வாழ்க்கையில் யார் முன்னேறிய வர்கள் ! ஒரு பெரிய கம்பெனி முன் ஒருவர் டீ கடை வைத்திருந்தார். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து டீ சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்" "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து டீ கேனில் டீ விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்... நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்... ஆனால் உங்களுக்கு அப்படியில்லை... உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது... உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்.... உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்... நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்.... உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க.... ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.... மேனேஜர் குடித்த டீ'க்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்... ஆகவே "தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது" THANKS - kongu guru prakash
-
திரைப்பட பாடலாசிரியர் வாலியின் நகைச்சுவை! திரைப்பட பாடலாசிரியர் 'வாலி'யை, ஒரு சமயம் அவருடைய நண்பர் ஒருவர் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர் "டி.எஸ். ரங்கராஜன் என்ற அம்சமான உங்கள் இயற்பெயரை விடுத்து, வாலி என்று தாங்கள் பெயர் வைத்துக்கொள்ள என்ன காரணம்?" என்று கேட்டார். அதற்கு வாலி அவர்கள், "இராமாயணத்தில் வரும் வாலி எதிராளியின் பலத்தில் பாதியைப் பெற்று விடுபவன். அதேபோல நான் பார்ப்பவர்களின் அறிவில் பாதியைப் பெறவே இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன் " என்று கூறினார். உடனே அந்த அதிக பிரசங்கித்தனமான நண்பர் வாலியை மட்டம் தட்டுவதாக எண்ணி "உங்களைப் பார்த்தால் அப்படி அறிவைப் பெற்றவர் போல் தெரியவில்லையே? என்று கிண்டலாகச் சொன்னார். அதற்கு வாலி சிரித்துக் கொண்டே, "நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவே இல்லையே!" என்று மடக்கி நண்பரை திக்கு முக்காட வைத்தாரே பார்க்கலாம் !
-
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் தனது 86 ஆம் வயதில் காலமானார். மலேசியாவின் செல்வந்தர்கள் தரவரிசையில் ஆனந்த கிருஷ்ணன் மூன்றாம் நிலையை வகிப்பதாக போர்பஸ் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. மலேசிய தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் கூட்டாண்மையை நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஆனந்த கிருஷ்ணனின் பங்களிப்பு அளப்பரியது என பாராட்டப்பட்டுள்ளது. ஆனந்த கிருஷ்ணன் மலேசியா பொருளாதார நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கிய காலத்தில் கிருஷ்ணன் பொருளாதாரத்திற்கு வழங்கிய பங்களிப்பு முக்கியமானது என கூறப்பட்டுள்ளது. தொலைதொடர்பு, ஊடகம், சக்தி வளம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிருஷ்ணன் தடம் பதித்து வெற்றியீட்டியுள்ளார். ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து தசம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகனான அதான் சிரிப்பாணியோ தனது 18 ஆவது வயதில் தந்தையின் சொத்துக்களை கைவிட்டு பௌத்த துறவியாக துறவு பூண்டு தாய்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். வியாபார நடவடிக்கை அவரது இரண்டு மகள்களும் வியாபார நடவடிக்கைகளில் அதிக நாட்டம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனந்தகிருஷ்ணன் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மலேசியாவின் பிரிக் பீட்ஸ் பகுதியில் பிறந்தார். அவுஸ்திரேலியாவின் மெல்பன், பல்கலைக்கழகத்திலும் ஹவார்ட் வியாபார கல்லூரியிலும் ஆனந்த கிருஷ்ணன் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/ananda-krishnan-the-elusive-billionaire-died-1732783235?itm_source=parsely-detail
-
ஆதராம் ? விடியோ பார்க்கவில்லையா ? நீங்கள் பார்க்காமல் இருந்து இருக்க சந்தர்ப்பம் இல்லை இப்ப மறுபடியும் பார்க்கணும் என்று ஆசைப்பட கூடாது .
-
சர்வ சாதரணமா கூகிளில் தட்டும் போது வந்து விழும் படங்கள் தற்போது வரவில்லை மற்றபடி கொசிப் ஒன்றும் கிடையாது .
-
சட்டம் கடுமையாக்கப்பட்டால் எல்லாம் சரியாக்கபடும் இதே கேள்வியை சிங்கப்பூரில் கேட்டு பாருங்க அப்படித்தான் . முதன் முதல் கனடா வந்தபோது ஒரு பப் காண்பதே அரிதானது இங்கு இங்கிலாந்தில் பப் இல்லாத இடத்தை காண்பது அரிது . இளசுகளுக்கு ரெத்தம் சூடானது இலகுவாக டம்மி ஐடி தயாரித்து தேவையான பொருள்களை வாங்கி விடுவார்கள் .
-
கேவலமான படங்கள் என்பது அவர்களுக்கு அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு எதிரான படங்கள் இப்படி சொல்லியும் உங்களுக்கு புரியாது என்றால் இதுக்கு மேல் கதைக்க முடியாது . ஏன் அவரின் உயிருக்கு ஆபத்து வந்தது ? மற்றைய தமிழ் அரசியல் வாதிகளுக்கு வராத உயிர் ஆபத்து உங்கடை சுமத்துக்கு மட்டும் ஏன் வந்தது ? பின்கதவால் வந்த நா.....ஏன் இரண்டாவது தேர்தலில் ராணுவ பாதுகாப்புடன் தேர்தல் பரப்புரை செய்ய வேண்டிய தேவை என்ன ? மூன்றுக்கும் உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் .
-
இந்தியாவுக்கு எதிரான அரசு இலங்கையில் அமைந்தால் ஐயாவின் வீரவேச அறிக்கைகள் பாய்ந்து வரும் ஊடகங்களில் இது வழக்கமான ஒன்றுதான் . முள்ளி வாய்காலில் ஒன்றரை லட்சம் சனத்தின் அழிவுக்கு நீலி கண்ணீர் விடுவோர் இந்திரா காந்தியின் தவறான வழிகாட்டல் என்பதை இலகுவாக மறைத்து விடுகினம் . கண்ட கண்ட யாழ் சண்டியர்களுக்கும் இராணுவ பயிற்சியை கொடுத்து இலங்கையை குழப்ப நிலைக்கு கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர் . பலர் நினைக்கினம் இந்திரா இருந்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்து இருக்கும் என்று அவர் உயிருடன் இருந்தாலும் முள்ளி வாய்க்கால் நடந்து இருக்கும் . கொஞ்சம் முன்னாடியே நடந்து இருக்கும் .
-
சில படங்கள் இவர்களை பற்றிய கேவலமான தரவு படங்களை கூகிளில் இருந்து பெட்டிசம் போட்டு அழித்து விட்டார்கள் இதுக்கு ஒரு வழி இருக்கு செய்து விட்டு சொல்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் .