Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. தமிழ் தேசியத்தை எப்போவோ உங்க ஆள் சுமத்திரன் பாடையில் ஏற்றி விட்டார் .
  2. நாட்டை பல்வேறு டிசைனில் கொள்ளையடித்த கொள்ளைகாரர்கள் கடைசி தஞ்சம் தமிழ் எதிர்ப்பு இனவாதம் நாட்டை பிரிக்கபோரான்கள் என்று சாதாரண சிங்கள மக்களை வெருட்டி அவர்களின் தமிழர் எதிர்ப்பு இனவாதத்தை வளர்த்து விடுவது . கடைசியில் முழு தீவும் ஒவ்வொரு நாட்டுக்கு அடிமையாக போகுது .
  3. இவர் நடிகர் சிவாஜியை வென்று விட்டார் இவர் லண்டனுக்கு வரும்போதே ஏதோ நடக்க போகுது என்று சாதாரண யுடுப் அரசியல் ஆய்வாளரே புட்டு புட்டு வைத்து விட்டார்
  4. சுமத்திரன் அரசியலில் பணம் கண்ட பிணம் லேசிலை அந்த பேய் போகாது ஜோம்பிஸ் பேய் போல தமிழருக்கு தீங்கு விளைவித்தபடி இருக்கும் .
  5. நடைமுறை அரசியல் மிகக் கடினமான பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. பலம் வாய்ந்த சக்தியை அழிக்க மென்மையான இராஜதந்திரத்தை ஒரு கூரிய ஆயுதமாக பயன்படுத்தும் வித்தை அரசியலில் உண்டு. முள்ளிவாய்க்காலின் பின் இத்தகைய ஒரு தந்திரத்தை எதிரி மிகச் சாதுரியமாக அரங்கேற்றி வருகின்றார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பின்தள்ள காலனிய ஆதிக்க எஜமான் ஒரு இலகுவான தந்திரத்தை பிரயோகித்தார். அதே தந்திரத்தைத்தான் இப்பொழுது தமிழ் மண்ணில் சிங்கள பேரினவாத சக்திகள் அரங்கேற்றி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன் பிரித்தானியாவை விடவும் சுமாராக 21 மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட இந்தியாவை 7,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பிரித்தானியாவால் இலகுவாக கட்டுப்படுத்தவும் ஆளவும் முடியாது. கோடாலி காம்புகள் அதற்கு வெறும் புயபல பராக்கிரமம் மட்டும் போதுமானதல்ல. சதிகளும், சூழ்ச்சிகளும், இராஜதந்திர வியூகங்களும் அவசியமானவை. அந்த வகையில் இந்திய மக்கள் பெரும் கிளர்ச்சிகளிலோ, ஆயுதம் தாங்கிய போராட்டங்களிலோ ஈடுபடாமல் தடுப்பதற்காக பிரித்தானியரே இந்திய தேசிய விடுதலை அமைப்பை மிதவாத தலைமைகளுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டுமென பிரித்தானிய ஆட்சியாளர்கள் தீர்மானித்தனர். இதற்கமைய, A. O. ஹியூம் ( A.O. Hume ) என்ற பிரித்தானிய உளவாளியினால் 1885ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய அதிர்ச்சியூட்டும் செய்திகள் பிற்காலத்திற்தான் தெரியவந்தன. இலங்கை அரசியலில் தமிழரை தோற்கடிப்பதற்கு தமக்கான நேரடி கையாட்களாக டி.எஸ். சேனநாயக்க அ.மகாதேவாவையும், சிறிமாவோ பண்டாரநாயக்கா குமாரசூரியர், ஆல்பிரட் துரையப்பா போன்றோரையும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன கலாநிதி ஆ.தியாகராஜாவையும் தத்தமது கட்சிகளின் சார்பில் நேரடியாக பயன்படுத்தினர். அவ்வாறு பயன்படுத்தியமை பெரிதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின. இத்தகைய அனுபவங்களில் இருந்து சிங்கள இனவாதம் புதிய பாடங்களை கற்றுக்கொண்டது. அதன்படி முள்ளிவாய்க்காலின் பின்பு இராணுவ ரீதியான இனப்படுகொலையின் வாயிலாக தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டாலும் அதனை வேரோடு அழிப்பதற்கு அரசியல், இராஜதந்திர ரீதியான வழிகள் முக்கியம் என்பதை உணர்ந்தனர். தமிழருக்கான தலைமைத்துவத்தை சிதைப்பதை அவர்கள் முக்கிய இலக்காகக் கொண்டனர். இதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு வாய்ப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ் தலைவர்களை உருவாக்க முற்பட்டனர். குறிப்பாக தமிழரசு கட்சிக்குள் அத்தகைய கோடாலிக் காம்புகளை தமது கையாட்களாக வெளியில் இருந்து புகுத்துவதை நீண்ட கால நோக்கினான முதலாவது தெரிவாகவும் கூடவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கக்கூடிய புல்லுருவிகளை தமது கையாட்களாக மாற்றுவதை இன்னொரு வழிமுறையாகவும் கொண்டனர். 1977 - பொது தேர்தல் முதல் கட்டமாக அத்தகைய கோடாலிக் காம்புகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதில் வெற்றி கண்டன. அடுத்த கட்டமாக தமிழரசுக் கட்சியை உடைப்பதில் திறமையாக செயற்பட்டனர். அதுவும் இப்போது துண்டுபட்டு போய் உள்ளது. பொருத்தமான தருணங்களில் அந்தத் தமிழரசு கட்சியை முடக்குவதிலும் வெற்றி பெற்றனர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழரசு கட்சியை முடக்கும் வகையில் அதனை நீதிமன்றம் வரை இழுத்து தமது சதிகார அரசியலை வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளனர். இப்போது இந்தத் தமிழரசுக் கட்சிக்குள் புகுந்துள்ள இத்தகைய உளவாளிகளை கட்சிக்குளிருந்து அம்பாந்தோட்டைக் கடல் வரை துரத்தி அடிக்காமல் தமிழரசு கட்சியை மீட்கவோ, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கவே முடியாது. தமிழர் விடுதலை கூட்டணி 1980ஆம் ஆண்டு ஜே.ஆர் இன் மாவட்ட அபிவிருத்திச் சபைக்குள் சரணடைந்த காலத்தில் "கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்" , "அமீர் அண்ணாச்சி தமிழீழம் என்னாச்சு?" என்ற கோஷங்களுடன் இளைஞர், யுவதிகளும் மக்களும் எழுந்தனர். தமிழ் மக்களின் தன்னிகரில்லா தலைவனாய் 70களின் பிற்பகுதியில் எழுந்த அமிர்தலிங்கத்திற்கு, 1977 பொது தேர்தலின் மூலம் மக்களின் பேராதரவுடன் பெரும் தலைவனாய் அமிர்தலிங்கம் மணிமுடி சூடிக்கொண்டார். அவ்வாறு ஒரு பெரும் தலைவனாய் திகழ்ந்த அமிர்தலிங்கத்திற்கு 1981ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் கொடும்பாவி கட்டி எரிக்கப்பட்டது. அன்றிலிருந்து அமிதலிங்கத்தாலும் அவரது ஒத்தூதிச் சகாக்களினாலும் தமிழ் மண்ணில் தங்கள் சொந்த கிராமங்களுக்குக்கூட போக முடியாத நிலை இருந்தது. கிராமங்களிலுள்ள கோவில்களுக்குக்கூட அமிர்தலிங்கத்தால் போகமுடியவில்லை. முள்ளிவாய்க்கால் சம்பவம் அப்படி என்றால் முள்ளிவாய்க்காலின் பின்பு ஹாயூம்ங்களாய், கோடாலிக்காம்புகளாய் வலம் வருபவர்களின் கதி என்ன? 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாய் மணிமுடி தரித்துக்கொண்ட கோட்டாபயவையும், ராஜபக்சக்களையும் வாக்களித்த அதே மக்களே நிற்க, இருக்க இடம் இல்லாமல் நாடுவிட்டு நாடு துரத்தினர். சிம்மாசனத்திலிருந்து இழுத்து வீழ்த்தினர் என்ற கண்கண்ட வரலாற்றை மறந்திட முடியாது. கொள்கையும், இலட்சியமும், தமிழ் பற்றும்மிக்க தமிழரசு கட்சி தொண்டர்களே நீங்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம். மாறாக எதிரியால் கட்சிக்குள் புகுத்தப்பட்டிருக்கும் சதிகார ஹியூம்ங்களையும், கோடாலிக் காம்புகளையும், வேடதாரிகளையும் கட்சியைவிட்டு ஓட ஓட துரத்தி அடியுங்கள். அதுதான் உண்மையான ஜனநாயகம். மைத்திரிபால - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஒரு வருடத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும் என்றும் அப்படி இல்லையேல் தான் பதவி விலகுவேன் என்றும் மேடைக்கு மேடை முழங்கிய அ.சுமந்திரன் ஜனநாயகத்தின் பெயரால் தான் வாக்குறுதி அளித்தபடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழரசு கட்சி தொண்டர்களே ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புங்கள். தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டியது அவரது ஜனநாயக பூர்வமான கடமை. அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது அவரது பொறுப்பு. அதை நடைமுறையாக்க வேண்டியது தமிழரசு கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரினதும் கடமையும், பொறுப்பும், பணியுமாகும். இதுவரை எதிரியால் கொன்றொழிக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களின் பேரால், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள் கற்பிணித் தாய்மார், பெண்கள் வயோதிபர்கள் என கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் பேரால், இதுவரை காலமும் ஏற்பட்ட அளப்பெரும் இழப்புக்கள், ஒப்பற்ற தியாகங்கள் என்பனவற்றின் பேரால் இத்தகைய ஹியூம்களையும், கோடாலி காம்புகளையும் முதலில் அகற்றி போராட்டத்தை சுத்திகரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையும் பொறுப்புமாகும். https://tamilwin.com/article/political-article-tamilwin-lamkasri-1726051278
  6. உலகளவில் ஆறு மீன் பிடி முறைகள் தடை செய்யபட்டுள்ளது . 6 Illegal Fishing Methods and Destructive Practices Cyanide fishing. A deadly chemical used by offenders to stun the fish and make them easier to catch. Use of explosives. ... Keeping undersized or oversized fish. ... Overfishing. ... Bycatch. ... Bottom trawling.
  7. தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் இரண்டு பகுதியும் தங்களின் அரசியல் இருப்புக்கு இனம்களின் சந்தேகத்தை நீக்காமல் இனவாதத்தை வளர்த்து விட்டு இன்று இரண்டு பகுதியுமே வெளிநாடு என்று ஓடித்தப்புகின்றனர் .
  8. உலகில் தடை செய்யப்பட்ட ரோலர் bottom trawling. இந்த முறையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்களை பிடித்து அவர்கள் பகுதி மீன் வளத்தை இல்லாமல் பண்ணிவிட்டு இலங்கையின் வடகிழக்கு கடலின் மீன் வளத்தை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறார்கள் . படத்தில் உள்ளவாறு கடலின் அடியில் உள்ள சிறு மீன் குஞ்சுகளை கூட விட்டுவைக்காமல் துடைத்து எடுத்து விடுவார்கள் முதலில் இந்த வகை மீன்பிடி முறை மூலம் கடல் வளத்தை அழிகிறார்கள் என்ற விபரம் கூட தெரியாதவர்கள் தான் மீன்பிடிக்க வரும் கூலிகள் ஆனால் மீன் பிடி வள்ள உரிமையாளர்கள் பெரும் பணக்கார அரசியல் வாதிகள் அவர்களுக்கு பணம் ஒன்றே குறி .
  9. 8௦ களுக்கு பிறகு வந்தவங்கள் கனடா குளிரை லண்டன் குளிரை பார்த்து பயந்து மறுபடியும் அந்த தீவை நோக்கி ஓடுன்றான்கள். அங்கு ச்சினியும் விசமாகது இயற்கை உரங்களும் பொய் பெயரில் குலவை அடிக்குது .
  10. இது எனக்கு ஒரு உளவியல் பிரச்சனையாக தெரிகிறது . நல்ல மன நல மருத்துவர் இதை சரி செய்து இருப்பார் . இனி புலம்பெயர் கூட்டம் இவற்றை விரும்பியோ விரும்பாமலோ ஏற்கத்தான் வேணும் 8௦ களுக்கு பிறகு பிறந்த வடகிழக்கு கூட்டம் குறைவு . திடீர் என பூமியில் இருந்து பிடுங்கப்பட்ட மக்கள் கூட்டம் போல் புலம்பெயர் வாழ்க்கை அமைய போவுது அதற்கு நாங்க மனதளவில் தயாராகணும் , இன்று அவர்களுக்கு நடப்பது தான் நாளை உங்களுக்கும் .
  11. லட்சகணக்கிலை புலம்பெயர் தமிழர் களின் வயதுகள் கிழ வயதாகிறது நல்ல பென்சன் சேமிப்பு இவற்றை கறக்க இரண்டு அரசுகளும் பொறி வைக்கின்றனர் .போற போக்கிலை இரண்டென்ன ஒரு நாளைக்கு நான்கு விமானம் பறந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை .
  12. கேட்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் அல்ல நேசரியில் இருந்து மறுபடியும் படித்து விட்டு வந்து எனக்கு பதில் எழுதவு ம் .
  13. உங்கள் கற்பனைகளை யாழில் விதைக்க வேண்டாம் . எத்தனை முறை அந்த தீவுக்கு சண்டைக்கு பின் சென்று வந்து உள்ளீர்கள் ?
  14. லண்டன் தான் வாகன நெரிச்சல் கவலைப்படுவது உங்க நாட்டுக்கு வந்தபின் லண்டன் சொர்க்கமா தெரியுது .டொரண்டோ மோட்டர்வேயில் கூட நித்திரை கொள்ளும் அளவுக்கு வாகன நெரிச்சல் .
  15. 2௦௦9 மோசமான தோல்விக்கு பின் தமிழ் நாதம் நடத்தியவர் கனடா வில் மார்க்கம் பகுதியில் எப்படி இருந்தார் என்று சமிபத்தில் மார்க்கம் சென்றபோது காது கூசியது ?.
  16. நான் போனால் கோசான் போன்றவர்கள் வருவார்கள் 😀 யாழ் யாரையும் நம்பி இவர்தான் என்று இருக்காது அது பாட்டுக்கு ஓடிக்கொண்டு இருக்கும் சிலர் நினைப்பது தான்கள் இல்லாவிட்டால் யாழ் முடுபடும் என்று ஆனால் அது நடக்காது ஈழத்தமிழர் உலகில் இருக்கும் வரை யாழ் இருக்கும் மோகன் அண்ணாவிடம் பழகியவர்கள் சொன்ன செய்தி .
  17. அரியநேந்திரன் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது ஆனால் அவர் கிழக்கை சேர்ந்தவர் அவர ஏமாற்ற கூடாது நீங்கள் இவ்வளவு தூற்றிய பின் நமது 129 ஓட்டும் அவருக்கே வாழ்க அரியநேந்திரன் . என்ன பார்கிறீர்கள் ஒவ்வொரு புலம்பெயரும் தனக்கு வோட்டு உரிமை இல்லா விட்டாலும் ஊரில் உதவி பண்ணிய புண்ணியம் . இதே சுமத்திரன் சஜித்தை வெல்ல சொல்கிறார் சஜித் தோல்வி அடைந்தால் சுமத்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கட்டும் நானும் யாழில் அரசியல் எழுதுவதை நிப்பாட்டுகிறேன் .
  18. உலகில் துறவிகளால் தான் ஆபத்து 😄
  19. ராசா நீங்கதான் வரனும் வந்து இனத்துவேசத்தை கொட்டி தீவை முற்று முழுதாய் இந்துமா கடலில் முழ்கடித்து விடுங்க நமக்கும் வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் அந்த பாழாப்போன நாடு பூம்புகார் கடல் கொண்டது போல் இலங்கை தீவும் இந்துமாகடலில் காணாமல் போகட்டும் வரலாறு எழுதட்டும் இனதுவேசத்தால் அழிந்த தீவு என்று . மேல் உள்ளது ஒரு டவுளுக்கு எழுதப்பட்டது யாரும் சண்டைக்கு வர வேணாம் 😀
  20. உங்களுக்கு இதை எழுதும்போது சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் வேறிடத்தில் இருக்க வேண்டிய ஆள் . முக்கியமானவர்களுக்கு அழைப்பே போகவில்லையாம் இது சுமட்😀டிரனின் அறிக்கையாம் . நீங்க தீர்க்க தரிசி . சிலவேளை ரணிலே பெட்டியை கொடுத்து அவசர அவசரமாய் சஜித்துக்கு ஆதரவு சொல்லும் படி ஏவியிருக்கலாம் காரணம் அனுராவின் எழுச்சி இரண்டு கிழமைக்கு முன் யார்க்கு ஆதரவு சன்று கூறிய கூட்டம் இப்ப ஏன் அவசர அவசரமாய் இந்த அறிக்கை ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.