Everything posted by பெருமாள்
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இதே போன்ற சம்பவம் லங்காவில் நடந்து இருந்தால் இப்ப என்ன நடந்து இருக்கும் ?
-
பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி! எதிர்வரும் 3 தினங்களுக்கு தொடரவுள்ள மழை.. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது என்று என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றுச் சுழற்சி இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாகவும், இலங்கையின் தென்மேற்குப் பகுதியை மையம் கொண்டு நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாகவும், வடகீழ்ப் பருவக்காற்றுக் கொண்டு வரும் அதிக ஈரப்பதன் காரணமாக இவ்வாறு நடைபெற வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், குறிப்பாக நாளையும்(10.12.2025) நாளை மறுதினமும் (11.12.2025) நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் நிலப்பகுதிகள் அவற்றின் தரைக்கீழ் நீரை உறிஞ்சும் முழுக்கொள்ளளவை அடைந்து விட்டன. குளங்கள் அவற்றின் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. சில பெரிய குளங்களின் மேலதிக நீர் வெளியேற்றத்துக்கான கதவுகள் இன்று பகல் திறக்கப்பட்டன(இரணைமடு). இந்நிலையில் கிடைக்கும் மழை வீழ்ச்சி முழுவதும் தரை மேற்பரப்பில் தேங்குவதுடன் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தையும் உருவாக்கக்கூடும். எனவே வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள நிகழ்வுகள் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கனமழை கிடைக்கும் என்பதனால் குருநாகல், கண்டி, மாத்தளை,நுவரெலியா, பதுளை, கேகாலை, மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவுக்கான வாய்ப்புக்களும் உண்டு. கனமழை காரணமாக.. நிலச்சரிவு நிகழ்வைப் பல காரணிகள் தூண்டினாலும் இலங்கையைப் பொறுத்தவரை தொடர்ச்சியான மற்றும் கன மழைவீழ்ச்சியே காரணம். இலங்கையின் தென்கிழக்கே காணப்படும் காற்றுச் சுழற்சியும், தென்மேற்கே நிலவும் வளிமண்டல தளம்பல் நிலையும் மேலே குறிப்பிட்ட குருநாகல், கண்டி, மாத்தளை,நுவரெலியா, பதுளை, கேகாலை, மாவட்டங்களுக்கு கன மழை கிடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் எதிர்வரும் 12.12.2025 இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். தற்போது நிலவும் வளிமண்டல நிலைமைகள் காரணமாக இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக் கூடும். உண்மையில் வழமையான பருவ மழைக் காலங்களில் இவ்வாறான மழை என்பது சாதாரணமானது. ஆனால் டிட்வா புயலின் காரணமாக இலங்கை முழுவதும் மிகக் கனமழை கிடைத்துள்ளதனால் இனி வரும் நாட்களில் கிடைக்கும் கனமான மழை கூட (75 மி.மீ முதல் 125 மி.மீ) சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது சிறந்தது. எங்கள் மத்திய மலை நாட்டில் இன்றும் கூட சில சில பகுதிகளில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் இடம்பெறுகின்றன. பல பிரதேசங்களில் கிடைத்த கனமழை காரணமாக மண்ணியல் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளிலும் சற்று கனமான மழை கிடைத்தாலே அது நிலச்சரிவு நிகழ்வைத் தூண்டும். அத்தோடு எதிர்வரும் 15ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். Tamilwinஇலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி!...வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று...
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
சுமத்திரன் கடைசி சண்டையின் பின் தமிழர்களுக்காக அல்லும் பகலும் பாடு பட்டவர் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் என்று அவரின் அடிவருடிகளுக்கு சொன்னால் தான் நிம்மதியாய் இருக்கும்கள் . இங்கு வடகிழக்கு தமிழர்களுக்கு தீர்வு முக்கியமல்ல சுமத்திரன் தலைவராகனும் அதுதான் சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .
-
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற குற்ற வரலாறு இவருக்கு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக பணியிலிருந்து நீக்கம் சுமித் குணசேகர என்ற சந்தேகநபர் 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர் என்றும், அதில் ஒரு சிறுவருடன் தொடர்புடைய பாலியல் குற்றத்தை புரிந்ததாக அவரே ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 2004 ஆம் ஆண்டிலும் ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். குணசேகர மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருந்தபோதிலும், கனடாவில் செய்த குற்றங்களால், அமெரிக்காவில் சட்டப்படி இருக்க இவருக்கு உரிமை இல்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் தகவல் தெரியவந்தவுடன், ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் அவரை உடனடியாகப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. "பாலியல் குற்றவாளி ஒருவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். Tamilwinஇலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது...இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால்...
-
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
இமயமலை கடலுக்குள் அமிழ்ந்து விட்டது என்று சொன்னாலும் நம்பலாம் .சிங்களவர்களின் தமிழர் எதிர்ப்பு இனவாதம் மறந்து விட்டார்கள் என்று சொன்னால் நம்பவே நம்ப கூடாது . இது புலம்பெயர் தமிழர்களிடம் புயல் அழிவுக்கு பணம் கறக்க நடிக்கும் நடிப்பு .எம் தமிழரிடமே பணத்தை வாங்கி வடகிழக்கில் இன்னும் 1௦௦ புத்த விகாரை கட்ட தொடங்குவார்கள் இனவாத சிங்களவர்கள் . அனுரா அரசு என்பது பொருளாதார வங்குரோத்து போன இலங்கைக்கு மற்றொரு முகமூடி அவ்வளவே கொஞ்ச பணம் சேர்ந்தவுடன் வடகிழக்கில் காலாவதியான சிங்கள கோப்பி கடையில் சிங்கள இனவாத புத்தர் சிலை வைத்து புதிய கற்பனை மகாவம்சம் எழுதுவார்கள் சொல்லி வைத்தது போல் கொஞ்ச சிங்கள அரசியல் வாதிகள் தமிழ்நாட்டில் இந்து கோவில் வழிபாடு செய்வார்கள் தமிழ் நாட்டு தமிழரை முட்டாள்கள் ஆக்க .
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
ராஜ பக்சா கூட்டத்தை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்ப வைக்க அண்டம் காக்கை பனம் கள்ளு அருந்தி விட்டு கரைவது போல் தமிழர் இனவழிப்பு நடைபெற வில்லை அப்படி நடந்து இருந்தாலும் நிரூபிக்க ஆதரம்கள் இல்லை என்று உள்ள வெளிநாடுகளுக்கு தனியே பறந்து பறந்து பரப்புரை தமிழருக்கு எதிராக பிரசாரம் செய்தவர் இப்ப என்ன சொல்லுகிறார் என்று கேட்டு சொல்லுங்க அவரின் வால்பிடிகளே.................
-
போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
மொத்தத்தில் இலங்கை தீவு உலகின் குப்பை கூடையாகி விட்டது .
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
நாக பாம்பை கூட நம்பலாம் இந்த சுமத்திரன் சாணக்கியனை நம்பினால் அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழருக்கும் விஷம் வைத்து விடுவார்கள் .
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை
சுனாமியின் போதும் தமிழர்களின் அழிவின் பின்னும் இலங்கை வங்கு ரோத்து நிலையின் பின்பும் சிங்களத்தின் தமிழர் எதிர்ப்பு இனவாதம் எள்ளளவும் குறையவில்லை இனியும் குறையும் என்று நம்புவது அடி முட்டாள் தனத்தையே குறிக்கும் . இங்கு அனுரா அரசு என்ன எந்த அரசை நம்பி பணம் அனுப்பினாலும் பணத்தை வாங்கி தின்று விட்டு கொழுப்பெடுத்து இன்னும் நாலு புத்தர் சிலையை தமிழர் பகுதிகளில் வைத்து இனவாத விசர் ஆடுவினம்.
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை
சுனாமி நேரம் சிங்களம் நடந்து கொண்ட முறை நினைவுக்கு வருவதை தடுக்க முடியல .
- இன்று மாவீரர் தினம்!
-
தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
இந்த பேச்சு வார்த்தைகள் இனவாத சிங்களம் தானாக திருந்தி நடைபெற்றதா ? இதற்குரிய பதில் உங்களிடம் இருந்து நேர்மையாக வரும் என்று நான் நம்பவில்லை .
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
- துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
இங்கிலாந்து மக்களின் வரிபணத்தில் தமிழ் பி பி சி செத்த வீடு கொண்டாடுது .- தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
அரசியல் தீர்வு என்பது முழுமையாய் ஏமாற்று பொருளாய் மாறிய பின் .உங்கள் பார்வையில் எப்படி நடந்து கொண்டு இருந்தால் நல்லது நடந்து கொண்டு இருக்கும் அந்த தீவில் ?- தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதே ?- தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!
கனடா- பிரம்டன் நகரசபை தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது. பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது. தமிழீழத் தேசியக் கொடி முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள் https://tamilwin.com/article/recognition-of-tamil-eelam-national-flag-in-canada-1763634312- இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?
இங்கு எல்லை தாண்டுவதை விட உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையே பாரிய பிரச்சனை அந்த முறை மூலம் அவர்கள் நாட்டுக்குள் அண்டை மாநில மீனவர்களை இதே வேதாரணியம் மீனவர்கள் சிறை பிடித்து பாரிய சர்ச்சைகள் உருவாகுவது வழமை ஆனால் வேண்டும் என்றே அந்த செய்திகள் மழுங்கடிக்கப்பட்டு போகின்றன . இந்த விளக்கம் கூட தெரியாத வகையில் இலங்கை மீன்பிடி அமைச்சர் இருக்கிறார் . பி பி சி தமிழ் இங்கிலாந்து வரி பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்திய மத்திய அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊது குழல் அவர்களிடம் உண்மை வருமா ? செய்தி இருட்டடிப்பு தாண்டி உண்மை செய்திகள் அத்தி பூத்தது போல் வரும் அதில் ஒன்று கிழே இணைக்கிறேன் . இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை. நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும். ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி. ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும். மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Buy one get one free யோ அல்லது பேப்பர்காரனின் எழுத்து பிழையோ ? ஒண்ணுமே புரியலை .- பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
ஐயப்ப சாமி உண்மையோ பொய்யோ தெரியாது நண்பர் ஒருத்தர் கடந்த கொர்னோ காலத்தை விட 28 வருடமாய் சென்று வருகிறார் அப்படி சென்று வரும்போது அவரின் சுகர் பிரசர் போன்றவை கட்டுப்பாட்டில் ஒரு சில மாதம்களுக்கு இருக்கும் காரணம் அங்குள்ள காலநிலை நடந்து திரிந்து மலை ஏறுதல் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் .ஆனால் இன்னும் சில புதிய சாமிகளின் அலப்பறை தாங்க முடியாது விமானத்தில் செல்லும்போது விமானத்தின் கதிரையில் இருக்காமல் தரையில் வாழையிலை போட்டு கறுத்த உடுப்புடன் கூட்டமாக உணவு உண்ணுகிறார்கள் அவர்களுக்கு யார் அப்படி செய்ய சொல்லிய வர்கள் என்று தெரியவில்லை .- பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
அப்ப அவர்களின் மலையாளிகளின் பதிமுகம் தண்ணி எனப்படும் மூலிகை தண்ணி டுபாக்கூர் தானா ?- இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
இந்த சட்டம் நடைமுறைக்கு வரா விட்டால் ரிபோர்ம் வருவது 1௦௦ வீதம் உறுதி .- ஏன் இந்தியர்களை குறி வைக்கிறார்கள்?
- சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
கொலை செய்யபட்ட காரணம் எங்கும் தெளிவாக இல்லை ஒரு பத்து பவுன் நகைக்கு கொலை என்பது சந்தேகமாக உள்ளது .- சிறுவர்களை புலிகள் மண்ணில் புதைத்திருக்க மாட்டார்கள் -சன்னி ஞானந்த தேரர் யாழில் தெரிவிப்பு!
சிறுவர்களை புலிகள் மண்ணில் புதைத்திருக்க மாட்டார்கள் -சன்னி ஞானந்த தேரர் யாழில் தெரிவிப்பு! November 4, 2025 0 செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர் தெரிவித்தார். யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=347309 - துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.