Everything posted by பெருமாள்
-
என் இந்தியப் பயணம்
சக மனிதர்கள் மனிதர்கள் போல நடந்து கொண்டால் அவர் அவ்வாறு எழுதியிருக்க தேவையில்லை என்று நினைக்கிறேன் .
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, எம்.டி.எச்-இன் மெட்ராஸ் கறிப் பொடி, சாம்பார் மசாலா பொடி, மற்றும் கறிமசாலா பொடி ஆகியவற்றில் 'எத்திலீன் ஆக்சைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம், இந்த மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்தியதற்கான காரணத்தை விளக்குகையில், “புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. கார்சினோஜென்கள் என்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பொருட்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள். சிங்கப்பூரில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவுக்கு தடை ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் மூன்று சிறிய கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங்கில் உணவில் எத்திலீன் ஆக்சைடு போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதற்கிடையில், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு அந்நாட்டு உணவு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான முத்தையா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த தயாரிப்பை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் முடிவுக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அதே அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலாக்கள் மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் கூறுகளைக் கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES எவரெஸ்ட் நிறுவனம் சொன்னது என்ன? சிறிய அளவிலான எத்திலீன் ஆக்சைடினால் உடனடி ஆபத்து இல்லை என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நீண்டகால பயன்பாட்டுடன், இத்தகைய இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். செய்தி இணையதளமான வியானுக்கு (Wion) அளித்த பதிலில், தாங்கள் ஐம்பது வருடங்கள் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் என்று எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. "எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு தரங்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம். எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உட்பட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் ஒப்புதல் முத்திரை உள்ளது. ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முன், எங்கள் தயாரிப்புகள் இந்திய ஸ்பைஸ் போர்டு மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன? எத்திலீன் ஆக்சைடு நிறமற்ற மற்றும் எரியக்கூடிய ஒரு வாயு. இது பொதுவாக விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கருத்தடை மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் பிற உலர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுகளை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எத்திலீன் ஆக்சைடு பயன்படுகிறது. இருப்பினும், பல சுகாதார நிறுவனங்கள் இதை புற்றுநோய்க்கான காரணிகளின் (கார்சினோஜென்கள்) பிரிவில் வைத்துள்ளன. கார்சினோஜென்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை. எத்திலீன் ஆக்சைட்டின் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல நாடுகளின் உணவு கட்டுப்பாட்டாளர்கள் உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு குறித்து கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாடுகளில் எத்திலீன் ஆக்சைட்டின் அளவைக் கண்டறிய கடுமையான சட்டங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் எழும் மசாலா பற்றிய கேள்விகள் இந்திய மசாலாப் பொருட்கள் வெளிநாட்டு விதிமுறைகளில் சிக்கியதற்கு உதாரணமாக இதற்கு முன்பும் சில வழக்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. இந்த மசாலாக்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும். சமீபத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தை உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய குழந்தை தானிய பிராண்டான செரிலாக்கும் (Cerelac) அடங்கும். குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பது நல்லதல்ல. சுவிஸ் நிறுவனமான பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் இணைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cd1d2gxelglo
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
இலங்கை மக்களின் இறுதிக்காலத்திலும் வங்கிகளில் வைப்பு தொகைகளை மட்டுப்படுத்திவிட்டு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலதிகமாக வட்டி வருமானம் கிடைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டுமென கேட்பது கேவலமான விடயமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகள் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் சேமலாபா நிதியை வங்கியில் வைப்பு செய்துவிட்டு அதிலிருந்து வரும் வட்டி வருமானத்தை வைத்து வாழ்பவர்கள் அதிகம் எனவும் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இலங்கையில் தமது இறுதி காலத்தில் சிரேஷ்ட பிரஜைகளால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது. வயது முதிர்ந்த காலத்தில் மருத்துவ செலவிற்கு அதிக பணம் தேவைப்படும். இலங்கையில் மக்கள் வாழுகின்றபோதும்,உழைக்கின்ற போதும் வரி செலுத்த வேண்டும் அதேபோன்று ஓய்வில் இருக்கின்ற போதும் வரி செலுத்த வேண்டும். ஆனால் ஏனைய பெரும்பாலான நாடுகளில் மக்களின் ஓய்விற்கு பின்னர் அவர்களின் மறைவு வரை அவர்களின் வாழ்க்கையை தமது கையில் எடுத்து இறுதி காலத்தை ஒழுங்காக கவனிக்கிறார்கள். ஒரு பொருளாதாரத்தை சரியாக முகாமைத்துவம் செய்ய முடியாத கூட்டம் ஒன்று நாட்டை ஆட்சி செய்கின்ற காரணத்தினால் எப்படி ஒரு நல்லாட்சி நடைபெற வேண்டும்,எவ்வாறு ஒரு ஆட்சி நடைபெற வேண்டும் என்ற வரையறைகளை மீறிய நிலையில் இலங்கையின் பொருளாதாரம் சென்று கொண்டிருக்கின்றது. இலங்கை அரசிற்கு வருமானம் வேண்டும் இல்லையென்றால் இந்நிலையிலிருந்து மீள முடியாது என கூறுவார்கள். இதனால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படுகின்றது என கூறியுள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-bank-interest-and-tax-increase-1713744267?itm_source=parsely-api
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
ஒரு கிபோர்டும் இணையமும் இருந்தால் காணும் .
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
அப்புறம் ?
-
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
நன்றி இணைப்புக்கு . பேராண்டி இஸ்ரேல் ஈரான் யுத்தம் தொரடத்தான் போகுது ரணில் பனையாழ் விழுந்து கிடக்குறார் ஒரு மாடல்ல மாட்டு கூட்டமே ஏறி மிதிக்க போகுது பேசாமல் புத்தர் சிலை விளயாட்ட நிறுத்தி விட்டு நடக்க வேண்டிய வேலையை பார்க்க சொல்லுங்க .
-
ரூபாயின் மதிப்பு வேண்டுமென்றே குறைக்கப்படுகின்றதா?
தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
-
ஈரானுக்கு ஆதரவான இராணுவத் தளம் மீது மிகப்பெரும் தாக்குதல்
- ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது. இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article- ஈரானுக்கு ஆதரவான இராணுவத் தளம் மீது மிகப்பெரும் தாக்குதல்
ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?- கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது
கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நாராயானா ஒருத்தர் ஊர் போய் கண்டபடி புளுகி தொலைக்கிறார் என்று செய்தியில் தேட இந்த செய்தி நேரம் பார்த்து வர அதை நான் இணைக்க நாராயானா இவ்வளவு குழப்பம் அதுவும் ஐந்து பக்கம் நாராயணா மன்னித்துகொள்.- நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும். இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article- சிறீதரனுக்கு எதிரான உள்ளக நகர்வுகள் : முடிவை மறுத்த சுமந்திரன்
எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம். சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார். https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- எனது அறிமுகம்
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அரைகுறையா எந்த விடயத்தையும் தூக்கி பிடித்து கொண்டு ஆடி காலை உடைப்பது உங்கள் வழமையான தொன்று முதலில் யாழில் எப்படி ஒரு செய்தியை இணைப்பது என்பதை புரிந்துகொள்ளுங்க உங்களுக்கு அது பற்றி தெரியாது எப்ப பார்த்தாலும் பழம் சீலை கிழிந்தது போல் மல்லுக்கு மல்லு பல்லுக்கு பல்லு அதுவும் இல்லையா உபரி அவதர்களில் உங்களுக்கு நீங்களே யாழ்ரா அடிப்பது அதை விடுங்க சொல்ல வந்த விடயம் எங்கிருந்து அந்த இணைப்பு எடுக்கப்பட்டது அந்த செய்தி எப்போது வந்தது என்பதுவா உங்களுக்கு தெரிவதில்லை தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்து கொள்ளுங்க சக கருத்தாளர்களிடம் .கீழே இந்த திரிக்கான இணைப்பு லிங்க் தந்துள்ளேன் பார்த்து அறிந்து கொண்டு உங்கள் நக்கல் நளினம்களை நிறுத்தி கொள்ளுங்க . https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு Sri Lanka Economic CrisisSri Lanka TourismSri Lankan PeoplesTourism 2 days ago- தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஒரு மெளன செய்தி ( இன்று படித்ததில் பிடித்தத்து. ) 100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்மா பரிமாறப்பட்டது. அந்த 100 பேரில் 80 பேர் தினமும் உப்மாவுக்கு பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்மா சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள 80 பேர் உப்மாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர். இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் விடுதி காப்பாளர் வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது. இதன்படி எந்த டிபன் அதிக ஓட்டு வாங்குகிறதோ அந்த டிபன் அன்றே சமைக்கப்படும். உப்மா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர். மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 - மசாலா தோசை 16 - ஆலு பரோட்டா & தாஹி 14 - ரொட்டி & துணை 12 - ரொட்டி & வெண்ணெய் 10 - நூடுல்ஸ் 10 - இட்லி சாம்பார் எனவே, வாக்குப்பதிவு முடிவுகளின்படி, உப்மா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது. பாடம்: 80% மக்கள் சுயநலவாதிகளாகவும், பிரிந்து சிதறியவர்களாகவும் இருக்கும் வரை, 20% பேர் நம்மை ஆள்வார்கள்.- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
இது அழகு பதில் .- லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கூகிள் ட்ராஸ்லேட்டையே அதிரவைத்த புள்ளியல்லவா நீங்க . நான் நினைக்கிறேன் சவுக்குவுக்கு ஏன் இலவச விளம்பரம் கூடவே லைக்காவுக்கும் இலவச விளம்பரம் தேவையில்லை என்று தமிழ் ஊடகங்கள் அமைதியாகி விட்டன போல் உள்ளது . ஆனால் யுடுப்பர் ஏன் அமைதியாகினங்கள் என்பது பெரிய கேள்வி குறிதான் . 😀- லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சவுக்குக்கு ஆதவன் இணையம் பற்றி தெரியுமா ?- லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப் subscribers வேணுமென்பதற்காக விட்ட புளுகு பொய் .😀 - ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.