Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல் அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது. அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள். அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும். நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
  2. கூடவே ஒன்றுக்கு பத்தாய் அஜினோமோட்டொவை கொட்டி கொட்டி கொத்தை சட்டிக்குள் வைத்து பிரட்டுறம் கொத்து வேறை அது ஐந்தாயிரம் இது இரண்டாயிரம் வாங்க யாரும் இல்லா நேரத்தில் லண்டனில் இருந்து @goshan_che ஆகா ஓகோ என்று படமும் எடுத்து போட்டார் மாத்தையா .
  3. இந்த ஆய்வக அறிக்கையை பார்த்தால் சிங்கள ஏற்றுமதி இறக்குமதி இலகுவாக முடங்கும் நெட்டோ சோடா குடிக்கணும் என்றால் சொறிலங்காவுக்குத்தான் போகணும் .
  4. கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
  5. மோட்டார் வாகனத் திணைக்களத்தில் குவிந்துள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். நமது நாட்டில் அரச வருமானம் குறித்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசாங்கத்தை அன்றாடம் நடத்தத் தேவையான பணத்தைச் சேகரிக்க முடியவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை அச்சிட முடியாது எனவும் அமைச்சர் கூறினார். சாரதி அனுமதிப் பத்திரங்கள் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அரச நிறுவனங்களுக்கு பெரும் பணத்தை மீதப்படுத்துகிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைப் பதிவுசெய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதே இந்த நிறுவனத்தின் பிரதான வருமான ஆதாரமாகும். பணத்தைச் சேகரிக்க முடியவில்லை இதற்கு சுங்க மற்றும் கலால் துறையினரும் பெரும் பங்காற்றி வருகின்றனர். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இந்த நிறுவனங்களில் இடம்பெறும் திருட்டு, மோசடிகள் மறையும். ஆனால், கடத்தல்காரர்களும், சில அதிகாரிகளும் இதை அனுமதிப்பதில்லை. இந்த துறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஒருமுறை மோட்டார் வாகனத் திணைக்களம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் உரிமையை இராணுவத்துக்கு வழங்கியது. இவ்வாறு பல அனுகுமுறைகளை கையாண்டது. இந்த நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் பிரதான நிறுவனங்கள். எதிர்காலத்தில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது இலக்கத்தகடு வழங்கும் முறையும் மாற்றப்படும் என்றார். நமது நாட்டில் அரச வருமானம் குறித்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசாங்கத்தை அன்றாடம் நடத்தத் தேவையான பணத்தைச் சேகரிக்க முடியவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை அச்சிட முடியாது. கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும் வெளிநாட்டு கடனை செலுத்தும் சட்டம் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/important-notice-regarding-driving-licenses-1714042361
  6. சம்மாந்துறை ஹோட்டல்களில் "அதிக அஜினமோட்டோ" கலந்த சம்பலால் பாதிப்பு - சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை Madawala News 5 days ago சம்மாந்துறையில் உள்ள ஹோட்டோல்களில் "அஜினமோட்டோ" கூடுதலாக இட்டு புளிந்த தேங்காயில் சம்பல் செய்து அதிகமாக மக்களுக்கு இரவு நேரங்களில் அள்ளி வழங்குகின்ற ஹோட்டல்கள் சில சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பராட்டாவும் சம்பலும் வாங்கினோம். சாப்பிட்ட பின் ஓரிரு மனித்தியாளங்கள் கழித்து உடம்பில் அறிப்பு ஏற்பட்டு அங்கங்கோ மஸ்குட்டி உடம்பில் பட்டால் எப்படி இருக்கும் அது போன்று போன்று உடம்பில் தாங்க முடிதாக அறிப்பு ஏற்பட்டது. இதுவரை காலமாகவும் எனது வாழ்க்கையில் இவ்வாறான சம்பவம் (அலர்ஜி) இடம் பெறவில்லை. இதுவே முதல் தடவை இது தொடர்பாக வைத்திய ஆலோசனை பெற்ற நான் ஓரளவு சரி ஆகி விட்டது. வைத்தியரும் ஒரு சில ஆலோசனைகளை கூறினார். என்ன சாப்டீங்க? என்று கேட்க பராட்டா சம்பல் மட்டும் என்றேன். இறுதியாக அது மட்டும்தான் சாப்பிட்டேன் என்றேன் சம்பலில் நல்ல ரசமாக இருந்தது கூடுதலாக இருந்ததால் நிறைய சாப்பிட்டன் என்றேன் . இவ்வாறு பல பேருக்கு இது பேன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.மூன்று நாளைக்கு இந்த மாத்திரைகளை உபயோகியுங்கள். இனி இது போன்ற சாப்பாடுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு போட்டால் நின்றுவிட்டது என்று இல்லாமல் 3நாள் பாவியுங்கள் என்பது மட்டுமில்லாமல் எனது சந்தேகங்களுக்கும் பல தெளிவூட்டல்களை வழங்கினார். ஆனால் என்னைப்போன்று பல பேர் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அறிகின்றேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்ககூடாது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன். "அஜினமோட்டோ" பாவனையை குறைப்போம்.🤝 ஐ.எல்.எம் நாஸிம் (ஊடகவியலாளர்) https://www.madawalaenews.com/2024/04/i_262.html
  7. நான் நினைக்கிறன் பேராண்டி எலக்சனில் நிக்கப்போறார் போல் உள்ளது 😀வாழ்த்துக்கள் இப்பவே சொல்லி வைக்கிறேன் .
  8. இலங்கை இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .
  9. அப்படியே உன்காப்பா# யார் என்று சொன்னால் நல்லது ஏனென்றால் ரெம்ப பெண்ணையன் ஆகுவது எனக்கு பிடிக்காது .0 நீங்கள் உண்மையான ஆன் என்றால் நேரில் படம் போட்டு வர முடியுமா ?
  10. அவர் கொதிக்கிறார் என்றால் நியாயத்துக்கு கொதிக்கிறார் நீங்க ஏன் சொறிலங்காவுக்கு முட்டு கொடுப்பது ?
  11. பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை ஆட்கடத்தல் குழுவொன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்து ஆட்சேர்ப்பு செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு இன்று (24) நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில், ரஷ்ய போரில் இலங்கையர்கள் ரஷ்ய போரில் நமது வீரர்கள் பலர் பயன்படுத்தப்படுகின்றார்கள். குசாந்த குண சின்ஹா என்ற நபர் பலரை அழைத்துச் சென்று ரஷ்ய இராணுவத்தில் இணைத்துள்ளார். இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். தற்போது குஷாந்த குணசிங்கவை காணவில்லை. இந்தியாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் இந்த ஆட்கடத்தலை செய்து வருகின்றார். இவரிடமிருந்து பதினெட்டு இலட்சத்தை பெற்று இராணுவ வீரர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைந்துள்ளனர். இலங்கை மக்கள் இரு தரப்பினராக பிரிந்து தற்போது சண்டையிட்டு வருகின்றனர். எத்தனை பேர் இதுவரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாது. இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் இது முற்றிலும் சட்டவிரோதமானது. நாட்டில் வருமானம் இல்லாத காரணத்தினால் நமது இராணுவத்தில் உள்ளவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்றும் கேள்வி எழுப்புகின்றேன். இந்த மக்கள் பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/ukrain-russian-war-joint-srilankans-1713965289
  12. உக்ரேனிலும் சிங்கள ராணுவம் ரஸ்யாவிலும் சிங்கள ராணுவம் இனவாத சிங்கள அரசே அந்நிய செலவாணிக்கு அனுப்பிவைத்து விட்டு ரஸ்சயா வில் சிங்கள ராணுவம் மேற்குலக நாடுகளின் கண்களை உறுத்த தொடங்கியவுடன் தங்களுக்கு தெரியாது அப்படி இப்படி சரடு விடுகிறார்கள் . இறுதிக்கட்ட சண்டைக்கு மேற்குலக நாடுகள் நவீன ஆயுதப்பயிற்சிகள் கொடுத்தவை சிங்கள ராணுவத்துக்கு இப்ப அந்த நவீன ராணுவ பயிற்சி மேற்குலகுக்கு எதிராக திரும்பி உள்ளது .நல்ல விடயம் நடக்குது .
  13. சித்திரவதை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை (Deshabandu Tennakoon) சந்தித்ததற்காக கனேடிய (Canada) பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றின் செய்தியின்படி, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பீல் பிராந்திய பொலிஸ் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah), டிசம்பர் 29, 2023இல் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் சீருடையுடன் இருந்ததை காட்டியுள்ளது. புகைப்படங்களில் இருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளில் ஒருவரான இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, ஒரு நபரை "இரக்கமின்றி" தாக்கியதற்காக, இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. கோரிக்கை நிராகரிப்பு 2023ஆம் ஆண்டு டிசம்பர் 14இல், திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை தென்னக்கோன் கைது செய்து கொடூரமாக தாக்கியுள்ளார் என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கனடாவின் பொலிஸ் அதிபர் ஒருவர், இலங்கையில் பல முறைகேடுகளுக்கு காரணமான அதே நிறுவனத்திடம் இருந்து மரியாதையை பெறுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மருத்துவர் துசியன் நந்தகுமார் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலுக்கான கோரிக்கையை துரையப்பா நிராகரித்துள்ளார். எனினும், பீல் பிராந்திய பொலிஸ் பேச்சாளர், துரையப்பாவின் இலங்கை பயணத்தை "தனிப்பட்டது என்றும் பீல் பிராந்திய பொலிஸ் துறைக்கும் இலங்கையில் உள்ள எந்தவொரு அமைப்புக்கும் இடையில் ஒத்துழைப்பும் இல்லை” என்று கூறியுள்ளார் இருப்பினும், துரையப்பா தனது பீல் பொலிஸ் சீருடையை அணிந்து பலமுறை புகைப்படங்களில் காட்சியளித்துள்ளார். கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான ரதிகா சிற்சபேசன், ஒருவர் சீருடை அணிந்தால், "நீங்கள் தலைவராக உள்ள அமைப்பை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்" என்றே அர்த்தம் என்று கூறியுள்ளார். கூடுதல் சந்திப்புகள் இது, ஒரு கனேடியனாக, பீல் பகுதியில் வளர்ந்தவள் என்ற முறையில் தனக்கும், பீலில் தொடர்ந்து வாழும் தமிழர்களாக அடையாளம் காணும் அனைத்து மக்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்பதே தமது கருத்து" என்று சிற்சபேசன் தெரிவித்துள்ளார். துரையப்பா தனது குடும்ப விடுமுறைக்காக அவர் பிறந்த நாட்டிற்குச் சென்றிருந்தபோது, இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக பீல் பேச்சாளர் தெரிவித்துள்ளார். துரையப்பா தென்னகோனை நேரடியாகச் சந்தித்தாரா என்று கேட்டபோது, பேச்சாளர் அதனை உறுதிப்படுத்தவில்லை. அவர்கள் ஒன்றாக நிற்பதையும் விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிடும்போது துரையப்பாவின் பின்னால் தென்னக்கோன் நிற்பதையும் புகைப்படம் காட்டுகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வு ஒரே கூட்டமா அல்லது துரையப்பாவும் தென்னகோனும் ஒன்றாக புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்திற்கு வெளியே சந்தித்தார்களா என்பது உட்பட ஏதேனும் கூடுதல் சந்திப்புகள் நடைபெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், அண்மைய தீர்ப்பு உட்பட தென்னகோன் பற்றிய தகவல்களை முன்கூட்டியே துரையப்பாவுக்கு, வழங்கியதாக கனேடிய பொலிஸ் தெரிவித்துள்ளது. கனேடிய அரசாங்கம் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்யவில்லை, இது தனிப்பட்ட விஜயமாக கருதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பீல் பிராந்திய பொலிஸாருடன், ரோயல் கனேடிய பொலிஸின் நெருங்கிய பணி உறவைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கான அதன் இணைப்பு அதிகாரி துரையப்பாவுக்கு இலங்கையில் உள்ள பொலிஸ் அமைப்புகளை சந்திக்கும் ஏற்பாடுகளை வழங்க முன்வந்துள்ளார் என்று ரோயல் கனேடிய பொலிஸ் பேச்சாளர் ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். https://tamilwin.com/article/canadian-peel-regional-police-chief-criticism-1713930656?itm_source=parsely-api
  14. புலம்பெயர் தமிழர்கள் குளிருக்குள் இருந்து கஷ்ட்டப்பட்டு உழைத்த பணத்தை இனவாத சிங்கள அரசு நடாத்தும் வங்கிகள் ஏமாற்றி வாங்கி விட்டு இப்போ 1லட்ஷத்துக்கு வரி கட்டணும் என்கிறார்கள். அது சரியா ? @colomban நீங்கள் கலாநிதி எம்.கணேசமூர்த்தியை விட அதிகம் படித்து விட்டிர்கள் ஆக்கும் ? புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓடும் என்றவர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன். இதை சொல்வதுக்கு ஒரு தகுதி வேணும் பத்து வருடத்துக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு இலங்கையில் பாலும் தேனும் ஓடுவது போல் இங்கு கதையளக்க கூடாது முடிந்தால் அங்கு இருப்பவர்கள் எழுதட்டும் பார்க்கலாம் உங்களால் அங்கு இருக்க முடியாது எனவே ..........................
  15. அப்ப தெரிந்தவர்கள் கொஞ்சம் விளங்கப்படுத்தலாமே ? நான் படிக்காதவன் தான் உங்களை போல் சோதனைக்கு படித்த ஆள் அல்ல . விழுந்து விழுந்து இனவாத சிங்களவனுக்கு முதுகு சொரிந்து விடுவதில் அப்படியென்ன இன்பம் கிடைக்குது என்பது எனக்கு விளங்கவில்லை உங்களின் அநேக பதிவுகள் இணைப்புகள் வடகிழக்கு தமிழர்களுக்கு எதிரானவையாய் இருப்பது யாழ் கள வாசகர்களுக்கு தெரியும் .
  16. இப்பதான் சுட்ட வடை என்று காகம் கொத்த தொடங்க கீழே நின்ற நரி சொல்லியதாம் அது பழைய ஊசி போன வடை என்று சொல்ல சீ என்று காக்கா பாட்டு பாடாமல் காலால் தட்டி விட @goshan_che அந்த புதிய வடை யை தூக்கி கொண்டு ஓடினாராம் ஆனால் வடையை சுட்ட கிழட்டு பெருமாளுக்கு தெரியும் எது புதிது எது பழையது என்று . யூடுப் காணொளி பழையது செய்தி புதிது 😀
  17. கண்ணு பட போகுது சுத்தி போடுங்க அண்ணா .
  18. நீங்க என்ன சொன்னாலும் இலங்கை சிங்கள இனவாத அரசு புலம்பெயர் தமிழரை அதிக வட்டி எனும் ஆசையை காட்டி மோசம் செய்து விட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டதுக்கு நன்றி .
  19. மாணவர் விசாவில் இங்கும் அள்ளுப்பட்டு வந்து இருக்கிறார்கள் வந்த பின்தான் இங்கிலாந்தின் உண்மை முகம் தெரிந்து ஆடிப்போயுள்ளார்கள் ஈஸ்ட்காம் பக்கம் கோவில்களில் மதியம் வழங்கும் இலவச உணவுக்கு அடிபிடியாய் நிற்பார்கள் அநேகமானவர்கள் ஆந்திரா கன்னடா பக்கம் இருந்து வந்தவர்கள்.
  20. இங்கு ஊர் பொய் வந்து விட்டு சிங்கள பக்கமும் போய் சுத்தி பார்த்து திண்டு விட்டு இங்கு வந்து சொறிலங்கா என்று எழுதுபவர்களுக்கு பாடம் எடுப்பவர்கள் சொல்ல மறந்த விடயம் இலங்கையில் சேமிப்பு இட்டால் அதிக வட்டி வீதம் என்று 90 வீதமான புலம்பெயர் தமிழர் தலை சொறிலங்காவால் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் அதிக வட்டி சேமிப்பில் அதிக காலம் பிக்ஸ் பண்ணினாள் இன்னும் அதிக வட்டி என்று ஆசை காட்டி புலம்பெயரின் சேமிப்பு பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள் இனி என்ன அதிக வரியை புலம்பெயர் தமிழர் விரும்பியோ விரும்பாமலோ இனவாத சிங்கள அரசுக்கு கொடுத்து கொண்டு இருக்க வேண்டியதுதான் .
  21. உங்கள் குரல் தான் எனது முடிவும் நன்றி நெடுக் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.