Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் குறித்த சம்பவத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் பழுதுபார்ப்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள நிலையில், எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இது தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கப்பலில் இருந்து ஹைட்ராலிக் எண்ணெய் கசிந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலுக்கு சொந்தமான நிறுவனமும் தவறை ஏற்றுக் கொண்டு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த இந்திய கப்பலின் கெப்டன் நாட்டை விட்டு வௌியேறுவதை தடுக்கும் வகையில் அவருக்கு பயணத்தடை விதிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு துறைமுக பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_973.html
  2. ஜெனீவாவினால் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால்சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்ந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக நாட்டுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் உயர் அதிகாரிகள், சட்டமா அதிபர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிக்கள பொறிமுறை அன்றைய தினம் ஜெனீவாவில் 46/1 பிரேரணைக்கமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ள வெளிக்கள பொறிமுறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பவுள்ளது. யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சாட்சிகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளே குறித்த வெளிக்கள பொறிமுறையூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 46/1 பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் எமது இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த நாடும் வழக்கு தொடரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் உலக நாடுகளிடம் கலந்தாலோசித்துள்ளார். அவ்வாறு இடம்பெற்றால் அவர்களை வெளிநாடுகளில் கைது செய்யக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது. அது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.” என்றார். https://tamilwin.com/article/geneva-field-trial-controversy-sl-govt-1717053442
  3. நீண்ட காலத்துக்கு பின் கண்டதில் சந்தோசம் .
  4. ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏
  5. உண்மையான இனவாதி இல்லை என்றால் மே 18 கஞ்சியை இவர் குடிப்பதுக்கு யார் தடை ? ஆனால் நம்ம ராசா கோமாளி சுமத்திரன் மே 18 என்று சிரட்டையில் எழுதி அரசியல் பண்ணுது .
  6. எந்நேரமும் மது போதையில் இருப்பவரே இந்த நாட்டின் இராணுவத் தளபதி என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி(Chandima Weerakkody) குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்புத்துறையின் அதி உயர் பதவிகளை வகித்து வரும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன மற்றும் மேஜர் ஜெனரல் இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோரை சந்திம கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், வயோதிப பாதுகாப்பு பிரதானிகள் “நாட்டில் இராணுவத்தளபதி என்று ஒருவர் இருக்கின்றார். அவர் எப்போதும் மது அருந்திய வண்ணம் இருப்பவர். இராணுவத்தில் சிறந்த திறமையானவர்கள் உயர் பதவிகளை வகிக்கக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு வயோதிபர்களை அரசியல் ரீதியாக பதவிகளில் அமர்த்துவதனால் அவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாது. முன்னாள் ஜனாதிபதி விரட்டியடிக்கும் வரையில் இவர்கள் என்ன செய்தார்கள்? புலனாய்வுப் பிரிவினதும், வயோதிப பாதுகாப்பு பிரதானிகளும் என்ன செய்தார்கள்? அனைவரும் 55 வயதை கடந்தவர்கள். இந்த செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவர்கள் என குறிப்பிடப்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்ய போர் இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் பலத்தினைக் கொண்டு வயோதிபர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களை சிறையில் அடைத்தார்கள். எனினும் நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என தீர்ப்பு அளித்தது. அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டதா? தங்களுக்கு எதிரானவர்களுக்கு மட்டும் இவர்கள் எதிராக செயற்படுகின்றனர், நாட்டில் நடக்க வேண்டியது எதனையும் இவர்கள் செய்வதில்லை. யுத்த வீரர்கள் எனப் போற்றப்படும் படையினர் இன்று பலிக்கடாக்களாக மாற்றப்பட்டுள்ளனர், உக்ரைன் – ரஷ்ய போரில் வாடகைப்படையாக ஈடுபடுத்தப்படுகின்றனர் பாதுகாப்புச் செயலாளர் அவன்கார்ட் பிரதானியுடன் உலகின் எத்தனை நாடுகளுக்குச் சென்றார், என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து ஆராய தனியான புலனாய்வுப்பிரிவு நிறுவப்பட வேண்டும்.” என்றார். https://tamilwin.com/article/chandima-accuesed-army-commander-1716174597
  7. எந்த கடை கடைக்கு பெயர் இல்லியா ?
  8. உங்களுக்கு டவுன் புள்ளி போட்ட கருத்து பேராண்டி . அத்துடன் நான் நிங்க நினைக்கும் அளவுக்கு பெரிய ஆள் அல்ல . இங்கு ஒண்ணரை ஆகுது இனிய இரவு சொல்வமா ? உங்களில் நிறைய மதிப்பு வைத்து இருக்கேன் பேராண்டி ...
  9. பிரித்தானிய (British) நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து (Sri Lanka) ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். "நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இளவழகன் கூறியுள்ளார். வேட்புமனு இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் (Neil MacDonald) முன்மொழிந்துள்ளார். "போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள சமூகத்திற்கு அவர் பங்களித்த ஒரு செய்தியை எடுத்துச்செல்லும்” என்று அவர் கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த பதவியேற்பின்போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர். பன்முகத்தன்மை இந்நிலையில், இந்து ஒருவர் முதல்வராக வருவது நகரத்தின் பெரும் பன்முகத்தன்மையையும் பன்முக கலாசாரத்தையும் காட்டுகிறது என்று நகர இந்து சமாசத்தின் தலைவரான சச்சின் கராலே கூறியுள்ளார். முன்னதாக இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பணிபுரிந்த பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அவர் ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டுக்கு (Ilford)) குடிபெயர்ந்ததோடு 2006இல் இப்ஸ்விச்சிற்குச் சென்றுள்ளார். இந்தநிலையில் இளவழகன் 2014இல் செயின்ட் ஜோன்ஸ் தொகுதிக்கான தொழில் கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lankan-tamil-first-hindu-mayor-british-city-1715913118?itm_source=parsely-detail தமிழ்வின் மேல் உள்ளவாறு பல்லு தீட்டுது யாழ் முஸ்லிம் பின்வருமாறு பல்லு தீட்டுது இலங்கையிலிருந்து அகதியாக சென்றவர், பிரித்தானியாவில் முதல்வராக பதவியேற்பு. பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இலங்கையர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். "நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இளவழகன் கூறியுள்ளார். இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் முன்மொழிந்துள்ளார். "போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு அகதியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள சமூகத்திற்கு அவர் பங்களித்த ஒரு செய்தியை எடுத்துச்செல்லும்” என்று அவர் கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த பதவியேற்பின்போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்து ஒருவர் முதல்வராக வருவது நகரத்தின் பெரும் பன்முகத்தன்மையையும் பன்முக கலாசாரத்தையும் காட்டுகிறது என்று நகர இந்து சமாசத்தின் தலைவரான சச்சின் கராலே கூறியுள்ளார். முன்னதாக இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பணிபுரிந்த பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அவர் ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டுக்கு குடிபெயர்ந்ததோடு 2006இல் இப்ஸ்விச்சிற்குச் சென்றுள்ளார். இந்தநிலையில் இளவழகன் 2014இல் செயின்ட் ஜோன்ஸ் தொகுதிக்கான தொழில் கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_320.html
  10. அந்த பக்கத்தில் ஏதோ வில்லங்கமான ஒன்று இருந்துருக்கும் நமக்கெல்லாம் இப்போ இருக்கிற பாஸ் போர்ட் எத்தனையாவது என்றே நினைவில் இல்லை வோசிங் மிசின் எனும் குல சாமி இருக்குமட்டும் .😀
  11. இதே கதை சண்டை தொடன்கியபின்னும் 2௦௦7லும் இருந்தது கொழும்பில் .
  12. நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப் போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம் அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது . மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
  13. இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு. Madawala News 14 hrs ago கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும் ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில் அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது . இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் . அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார். அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் . அப்போது, அவர் பாதுகாப்பு அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது , ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது . அரசியல்வாதியின் இந்த செயல் தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024 சர்வதேசம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும் ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில் அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது . இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் . அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார். அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் . அப்போது, அவர் பாதுகாப்பு அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது , ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது . அரசியல்வாதியின் இந்த செயல் தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது . இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
  14. “பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது; இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே!!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சபையில் தெரிவிப்பு! ஊடகப்பிரிவு- உள்நாட்டு கடல் வளங்களையே இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத இலங்கை கடற்படையினரை, மத்திய கடல் பிரதேசத்தை பாதுகாக்கும் பணிக்காக அனுப்பியிருப்பதன் பின்னணி என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் (14) இடம்பெற்ற பாலஸ்தீனின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியின் கப்பற்போக்குவரத்தை பாதுகாக்கப்போகிறது? எனவே, அரசாங்கம் பாலஸ்தீன் விவகாரத்தில் இரட்டைமுகத்துடன் செயற்படுவதாக நான் சந்தேகிக்கின்றேன். பாலஸ்தீனர்களை விரட்டியதால் ஏற்பட்ட இஸ்ரேலிய தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையும் ஆட்களை அனுப்பியுள்ளது. இது ஏன்? இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் இராணுவத்தை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது? வெளிநாட்டமைச்சர் இதற்குப் பதலளிக்க வேண்டும். வெறும் தலையாட்டியாக இருக்காமல், இஸ்ரேலின் வெறித்தனங்களை அரசாங்கம் கண்டிப்பது அவசியம். சொந்தமண்ணிலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட "நக்பா" தினத்தில், நான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். சர்வதேச நியதிக்கு உடன்பட்டு பாலஸ்தீனை அங்கீகரியுங்கள். இஸ்ரேலின் இன ஒழிப்புச் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையில், இலங்கை செயற்படக்கூடாது. தர்மமின்றி, இனவெறியோடு தலைவிரிகோலமாக தாண்டவமாடும் யூத இராணுவம் முழு பாலஸ்தீனையுமே அழிக்கத் துடிக்கிறது. பதிலடிப்போரென்ற போர்வையில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் நிரபராதிகள் அனைவரையும் சல்லடைகளால் துளைக்கிறது இஸ்ரேல். வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள் இன்னும் நிவாரண நிலையங்களும் விமானத்தாக்குதல்களால் தகர்க்கப்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகளின் ஒருதலைப்பட்ச போக்குகள், ஜனநாயகத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தால் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்கா, பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களையோ அல்லது மனிதாபிமானத்தையோ கண்டுகொள்ளவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.madawalaenews.com/2024/05/i_48.html
  15. யார் அந்த பொது தமிழ் ஜனாதிபதி வேற்பாளர் ? இப்போதைக்கு எரிக் கும் வந்து போயிட்டுது ஜப்பானும் வந்து போயிட்டுது அமெரிக்கனும் வந்து போயிட்டுது கடைசியில் தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்துரை பரப்புரை கொண்டவர்களும் போறார்கள் வருகிறார்கள் இன்னும் போய் கொண்டும் இருக்கிறார்கள் இந்த செய்தி வந்ததில் இருந்து பலருக்கு இரவு துக்கம் போயிட்டுது . நமக்கு ஏதோ ஒரு தீர்வையாவது இப்படியாகினும் கிடைக்குகட்டும் அங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ற எண்ணம் மட்டுமே.
  16. அதுகள் 3௦ மைலுக்கு மேல் டான்ஸ் ஆடாது என்ற நம்பிக்கையில் அரசு அறிவித்து இருக்கும் 😀
  17. அதிசயம் அற்புதம் அந்த ராணுவ வீரர் இளம் வீரர் ஆக இருப்பார் ஆனேகமாக என்று நினைக்கிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.