Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. ஓடி ஓடி உலக நாடெல்லாம் திரிந்து சொறிலங்காவில் இனவழிப்பு நடைபெறவில்லை என்று தனியாக சென்று தமிழரசு கொடுத்த பதவியுடன் சொல்லி நம்ப வைத்த தமிழரின் துரோகி பயல் இப்ப இப்படி சொல்கிறார் .
  2. 15 வருடங்கள் கடந்த போதிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். 15 ஆவது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று(12.05.2024) இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதியினரால் வல்வெட்டு வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் வாரம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் கடைசி நாட்களில் எமது மக்கள் கஞ்சிக்கு கூட பறிதவிக்கின்ற நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-presscomment-mullivaikal-remembrance-day-1715539722 ஓநாய் நீலி கண்ணீர் வடிக்கிறது பதவிக்காக .
  3. தற்போது மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். டயானா கமகேவைப் போன்று 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம்” என சோபித தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். "இந்த எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை மரியாதையுடன் ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று சோபித தேரர் கூறியதுடன், கட்சித் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைவூட்டினார். https://www.madawalaenews.com/2024/05/10_11.html அட புலம்பெயர் சிங்களவர்களால்தான் லங்கா நாடே ஆளப்படுகிறது .
  4. இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது. வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார். செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார். இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும் இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
  5. தமிழனுக்கு ஒரு பிடி உரிமையும் கொடுக்க முடியாது என்ற இனத்துவேசம் இன்று இலங்கை இந்தியாவின் மாகாணம் போல் ஏர்போர்ட் முதல் அனைத்திலும் தாரை வார்த்து கொடுத்துள்ளார்கள் இந்தக்கால சிங்கள மதன முத்தாக்கள் . பகிடி என்னவென்றால் அதானி குழுமம் 20 வருடத்துக்கு ஒப்பந்தம் ஆம் அவ்வளவு காலம் இந்தியாவை சைனா காரன் விட்டு வைப்பானா ? மேலே கொச்சி தூள் கொட்டப்பட்டு உள்ளது அவரவர் அதை எடுத்து கொள்ளும் முறையில் உள்ளது .😃
  6. இறக்குமதியை நிறுத்தி உலக சந்தையில் திகதி முடிந்த மருத்துவ பொருள்களை இறக்கி செயற்கையாக ரூபாவை கட்டுப்படுத்தி விட்டு இந்த குள்ள நரி ரணில் சொல்லுது நாட்டை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தி விட்டேன் என்கிறார் . வாகன இறக்குமதி தொடங்கும்போதுதானே தெரியும் உணமையான நிலவரம் .
  7. செத்தவரில் ஒருத்தர் கூட வட இந்திய தொழிலாளி கிடையாது ? அப்போ அவர்கள் எங்கு தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள் ?
  8. கேட்டது தான் கேட்டிங்க .😃 டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தனது எம்.பி பதவியை நேற்று இழந்தார். https://www.madawalaenews.com/2024/05/i_27.html
  9. அட கிட்டடியில் யாரோ அந்த பப்பை எரித்து நாசம் பண்ணி விட்டார்களேமே .......................
  10. பதவி இழந்த சோகத்தை கொண்டாட லண்டன் சன்ரைஸ் பப்புக்குத்தான் வருவா வெயிட்டிங் 😀
  11. நிமல் பூனை கண்ணை மூடினா உலகம் இருட்டாக்கி விடும் என்பது போல் கதை அளக்கிறார் .
  12. உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை என இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு (45790) கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்த நிலையில், உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை, இது அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இயல்பான ஒரு சூழ்நிலை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்தார். ஏர் இந்தியா, பிஓஏசி மற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ் போன்ற பணக்கார நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டவில்லை என்றும் சில விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நஷ்டம் காரணமாக எயார் இந்தியா டாட்டா நிறுவனத்திற்கு விற்றுத் தீர்ந்துவிட்டது என்றும், எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அரசு வழங்கியதாகவும் கூறினார். இலங்கை போன்ற சிறிய நாடு அந்த வகையில் விமான சேவையை பராமரிக்கும் நிலையில் இல்லை என்றார். "விமானம் வாங்குவதற்கு எங்களிடம் நிதி இல்லை. பெரிய மூலதனத்தை முதலீடு செய்ய முடியாது. குத்தகைக்கு விமானங்களை எடுக்கிறோம். 6,000 ஊழியர்களின் வேலை பாதுகாப்பை உறுதிசெய்ய விமான சேவையை தொடர பெரிய மூலதனத்தை கொண்டு வரக்கூடிய குழுவுடன் நாங்கள் சேர வேண்டும்" என அவர் கூறினார். 2023 ஆம் ஆண்டில் 791 பணியாளர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர், இது கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு ஆகும், அதே நேரத்தில் அது 2023 இறுதிக்குள் ரூ.609 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் சுமார் 474 பணியாளர்கள் இராஜினாமா செய்திருந்தமையினால் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார். https://www.madawalaenews.com/2024/05/iii.html
  13. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 2014-2015 ஆம் ஆண்டில் 16330 கோடி ரூபாய்க்கு மேல், 2015-2016 இல் 13084 கோடி ரூபாய்க்கு மேல், 2016-2017 ல் 2800 கோடி ரூபாய்க்கு மேல், 2017-2018 இல் 417 கோடி ரூபாய்க்கு மேல், 2018-2019 இல் 4413 கோடி ரூபாய்க்கு மேல், 2020 - 2021 இல் 4970 கோடி ரூபாய்க்கு மேல், 2021 2022ல் 16358 கோடி ரூபாய், 2022 - 2023 இல் 7130 கோடி ரூபாய் மற்றும் 2023 - 2024 இல் 1247 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு 2021-2022ல் விமான நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட இழப்பு 16358 கோடி ரூபாய் எனவும் அவர் தெரிவித்தார் https://www.madawalaenews.com/2024/05/i_19.html
  14. கடைசியில் நம்ம பட்ட பெயரை சொல்லிட்டான் போல இருக்கு 😃
  15. ஒவ்வொரு மரமும் வெயிலின் வெக்கையை குறைக்கும் இந்த தறித்த மரத்தின் சாபம் பல பேரை கொள்ளும் . மரங்களின் அருமை தெரியாதவர்களின் சந்ததி உருப்பட போவதில்லை .
  16. இந்த கள்ள கடல் சமீபத்தில் தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது அது என்ன அலை என்று தெரியாமல் மடவளவு போன்ற இணையம்கள் செய்தி போட்டு இருந்தன .
  17. வாழை தோட்டத்து பக்கத்தில் சாக்கு கடை சாப்பாடு என்று நண்பர்கள் வாங்கி வருவார்கள் கொழும்பில் 80 கடைசியில் 90தொடக்கம் ஆக இருக்கனும் ஒரு பாசல் நாலு பேர் சாப்பிடலாம் அதுக்குள் சிலந்தி புழு எல்லாமே கண்டு அதன்பின் வெளியில் என்றால் வெஜ் தான் இன்று வரை .
  18. என் பெறா மக்கள் ஆறு பேரும் இறால் சாப்பிடாங்கள் காரணம் புழு என்பார்கள் .
  19. இந்த திரியை விளங்க நினைப்பவன் மினக்கெட்டு மொழிமாற்றம் செய்து இங்குஇணைத்து உள்ளார் இனி ஸ்டாட் மியூசிக் ............................................................................
  20. இவர் வேறை ஏப்ரல் போய் மே வந்து விட்டது இன்னும் விண்டர் ஜகேட்கள் விடைபெறவில்லை நம்ம நிலைமை இப்படி . பாரதி பாடியது போல் இருந்தால் ஏனப்பா இப்படி வெக்கை ?.
  21. சிங்களவன் கட்டா சம்பல் அடிமை அவனா இருக்காது .
  22. இம்கூம் நம்ம கிட்ட இந்த பாட்ஸா எல்லாம் பலிக்காது ஊசி போடும் ரூமுக்குள் தள்ளி கொண்டு போனாலே காணும் விண்டோவுக்குள்ளால் பாய்ந்து பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்து உச்சியில் இருந்து இரவு ஏழுமணிக்கு பின்தான் இறங்குவம் பகல் பொழுது மட்டும் வெள்ளை யூனிபோம் போட்ட பிசாசுகள் வேப்ப மரத்தை பார்த்து கத்தி கொண்டு இருப்பினம் .
  23. மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பலரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கி வைத்து இருந்த குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.madawalaenews.com/2024/05/180.html இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.