Everything posted by நிழலி
-
'திருமணமான பெண்கள், விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- உச்ச நீதிமன்றம்
அப்படியே திருமணமான ஆண்களும் பக்கத்து வீட்டில்/ முன் வீட்டில் மற்றும் தோழிகளின் வீட்டில் தங்க முடியும் என்றும் தீர்ப்பு எழுதுங்கள் யுவர் ஆனர். நாங்களும் மேஜர் தான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகஸ்ட் முதலாம் திகதி பிறந்த தினம் (இன்று) கொண்டடிய கிருபனுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் இணைக்கும் நீண்ட திரிகளை போல நீண்ட காலத்துக்கு சந்தோசமாகவும் சிறப்பாகவும் வாழ வாழ்த்துக்கள். அத்துடன் ஆதவனுக்கும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் எந் நாளும்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏனப்பா... ஒரு மனுஷன் vacation கிக்கேஷன் எல்லாம் போறது இல்லையா? சொந்த கிந்த அலுவல்களும் இருக்கும் தானே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் யாயினியிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மதுரை தமிழின் பேராண்டிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்த்தியன், நுணா இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜவன்னியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மகளும் மனைவியும் Nutcracker எனும் ballet dance நிகழ்வுக்கான ஒத்திகை பார்க்க மாலை 4 மணிக்கே சென்று விட்டு இருந்தனர். வேலை முடிந்து வரும் போது இடையில் பாகிஸ்தான் உணவு விடுதியில் வாங்கிய Kebab, Naan மற்றும் Nihari எனும் கறி யுடன் பொழுது போனது நான் மனம் மகிழ்ந்து பார்க்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயிற்சியும் பொறுமையும் தேவைப்படும் ஒரு நடன நிகழ்வு. சரியாக என் பிறந்த நாள் காலங்களில் நிகழும். எனக்கான பெரும் பரிசு அது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றி. 33 வயதில் யாழில் இணைந்து இன்று 43 வயதில் வந்து நிற்கின்றேன். கால ஒட்டம் சிந்தனைகளிலும் கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணம் நகர்கின்றது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய நவீனன் மற்றும் விசுகு அண்ணாவுக்கு என் நன்றி யாழில் அதிகம் மினக்கெட முடியாதளவுக்கு வேளை பளு அதிகரித்து விட்டது. வருட முடிவில் நேரம் கிடைக்கும் என நினைக்கின்றேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சண்டமாருதன், சகாறா, ரகுநாதன் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
'வால்காவில் இருந்து கங்கை வரை' எனும் பயண கட்டுரை நூலை வாசித்துக் கொண்டு வருகின்றேன் புனைவையும் வரலாற்றையும் தத்துவார்த்தமாக விவரித்து எழுதப்படட நூல் இது. பாரஸீகத்தில் இருந்த ஆரியர்களின் வருகையிலிருந்து, யவனர்களின் அறிமுகம், ஆங்கிலேயர்களின் வருகை வரைக்கும் எழுதப்பட்டு இருக்கு. ஆரியர்களின் ஆக்கிரமிப்பு, விசுவாமித்திரர் வசிஷ்டர் போன்றவர்களின் பித்தலாட்டம், அவர்கள் அரசரிடம் இருந்து பெறும் தட்ஷனைகளுக்காக ரிக் வேதத்தில் சேர்த்த அரசனை புகழ்ந்து பாடும் பாடல்கள் என்று விரிவாக உள்ளன. இசை, உங்களை போன்றோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நூல் என்று எண்ணுகின்றேன் நூல் பற்றி :https://ta.wikipedia.org/wiki/வால்காவிலிருந்து_கங்கை_வரை
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி... சூழ்ச்சிக்கு இரையாகும் வரலாறு! கீழடி அகழாய்வின் மூன்றாம் கட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவதாகக் கூறி, இந்த ஆண்டு ஆய்வைப் பற்றிய அறிக்கையை அகழாய்வுப் பொறுப்பாளர் ஸ்ரீராமன் வெளியிட்டார். மூன்றாம் கட்ட அகழாய்வு என்பது தமிழ்ச் சமூகம் போராடிப் பெற்றது. கீழடி அகழாய்வைத் தொடர அவர்களுக்கு விருப்பமில்லை. எனவே, மூன்றாம் ஆண்டுக்கான அனுமதியைத் திட்டவட்டமாக மறுத்தார்கள். நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, இரண்டு ஆண்டுகள் நடந்த அகழாய்வைப்பற்றி அதன் பொறுப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தரவில்லை என்று ஒரு காரணத்தைச் சொன்னார்கள். கீழடியோடு அகழாய்வுத் தொடங்கப்பட்ட இடம் குஜராத் - வாட்நகர் (மோடியின் சொந்த ஊர்). அதே போல, ராஜஸ்தானில் உள்ள பிஞ்ஜூர். இந்த இரண்டு இடங்களிலும் 2017-ம் ஆண்டு அகழாய்வு செய்வதற்கான உத்தரவை மத்திய தொல்லியல் துறை, 2016 டிசம்பர் மாதமே வழங்கிவிட்டது. ‘கீழடிக்கு அனுமதி வழங்காமல் இந்த இரு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது எவ்வாறு? அனுமதியை மறுப்பதற்கு விதவிதமான காரணங்களைக் கண்டுபிடித்தனர். அதையும்மீறி கடின உழைப்பைச் செலுத்தி அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினர் இடைக்கால அறிக்கையை வழங்கினார்கள். அதன்பிறகும் அனுமதி தர மனம் வரவில்லை. தொடர்ந்து எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல்களால் வேறுவழியின்றி பிப்ரவரி 20-ம் தேதி இந்த ஆண்டுக்கான அனுமதியை வழங்கினர். ஆனால், நிதி எதுவும் வழங்கவில்லை. மார்ச் 17-ம் தேதி நிதியை வழங்கிவிட்டு மார்ச் 24-ம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்தனர். ஆய்வுக்கான புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீராமன் , ஏப்ரல் 24-ம் தேதி பொறுப்பேற்று, ஆய்வைத் தொடங்கி, இப்போது முடித்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பலரும் சந்தேகப்பட்டது போலவே, கீழடி அகழாய்வை முடக்குவதற்கான அடித்தளமிடும் வேலையை அந்த அறிக்கை செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளும், 102 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இந்த ஆண்டு தோண்டப்பட்டதோ, வெறும் எட்டுக் குழிகள் மட்டும்தான். அந்த எட்டுக்குழிகளில் ஒன்றுகூட இயற்கை மண்படிவம் (Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அதாவது, ஒரு குழியைக்கூட முழுமையாகத் தோண்டவில்லை. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட தொழிற்கூடம் போன்ற பகுதியின் கட்டட அமைப்புகளின் தொடர்ச்சி தென் திசையில் நிலத்துக்குள் அமைந்திருந்தது. அதன் தொடர் கட்டட அமைப்பைக் கண்டறிய வேண்டுமென்றால், தென் திசையில் அகழாய்வுக் குழியை அமைத்திருக்க வேண்டும். ஆனால், தென் திசையில் ஒரு குழிகூட அமைக்காமல், நேர் எதிராக வட திசையில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளும் கீழடி தொல்லியல் மேட்டின் வெவ்வேறு இடங்களாகத் தேர்வுசெய்து மொத்தம் ஒன்பது இடங்களில் அகழாய்வுக் குழிகளை அமைத்தனர். காரணம், ஓர் இடத்தில் தடயங்கள் கிடைக்காவிட்டாலும், இன்னோர் இடத்தில் கிடைக்கும் என்பதால். இந்த ஆண்டு, ஒரே ஓர் இடத்தில் மட்டுமே எட்டுக் குழிகளையும் தோண்டியுள்ளனர். இவற்றைப் படிக்கிற ஒருவரால், இதில் நடந்துவரும் சூழ்ச்சியை எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ‘இவ்வளவுக் குறைவான பகுதியில் மட்டுமே அகழாய்வுப் பணியைச் செய்துள்ளீர்களே, ஏன்?’ எனக் கேட்டதற்கு, மழையைக் காரணம் சொல்கிறார் ஸ்ரீராமன். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்ட இரண்டு ஆண்டுகளும் கீழடியில் மழையே பெய்யவில்லையா? அல்லது, இந்த ஆண்டு இடைவிடாமல் கீழடியில் தொடர் மழை பெய்ததா? ‘முதல் ஆண்டு (2015), அகழாய்வுப் பணியை மூன்று மாத கால தாமதத்துடன்தான் அமர்நாத் ராமகிருஷ்ணனால் தொடங்க முடிந்தது. அப்படியிருந்தும், அவரால் 43 அகழாய்வுக் குழிகளை அமைக்க முடிந்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் எட்டுக் குழிகளை மட்டுமே தோண்டியதற்கு என்ன காரணம்?’ என்ற ஊடகங்களின் கேள்விக்கு, “இங்கு நடப்பது PWD வேலையல்ல” என்று பதிலளிக்கிறார் ஸ்ரீராமன். உண்மை என்னவென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளும் அகழாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்குச் சராசரியாக 80-க்கும் மேல் இருந்தது. இந்த ஆண்டு சராசரியின் அளவு 20 கூட இல்லை. இந்த ஆண்டு கண்டறியப்பட்டதில், 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில், 90 விழுக்காடு கண்ணாடியால் செய்யப்பட்டவை என்று கூறும் அறிக்கை, இந்த இடத்தில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ, பரவலாகவோ கட்டப்பெறவில்லை” என்று கூறுகிறது. கீழடியின் சிறப்புமிக்க பங்களிப்பே அங்கு கிடைத்துள்ள கட்டுமானங்கள்தான். சங்ககாலத்தில் இருந்த ஒரு நகர அமைப்பு, முழுமையான கட்டட வடிவத்தில் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. மிகவிரிந்த அளவு கட்டட அமைப்புகள் முதல்முறையாக கீழடியில்தான் நமக்குக் கிடைத்துள்ளது. முதலாண்டு ஆய்வில் கிடைத்தவைகளெல்லாம், குடியிருப்புப் பகுதிகளாக இருந்தன. இரண்டாமாண்டு ஆய்வில், பெரும் தொழிற்கூடம் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அதன் தொடர்ச்சியாக எந்தக் கட்டடப் பகுதியும் கிடைக்கவில்லை என்ற முடிவை நோக்கியே இந்த ஆய்வின் போக்கு, திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறிய விஷயங்கள் மூலம் உணரமுடிகிறது. “இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகள், கரிமப் பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டு காலநிர்ணயம் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான், அவர்கள் நினைத்ததை நடத்தப்போகும் இடம். கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு இருபது கரித்துகள் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப அனுமதி கேட்டது. ஆனால் மத்திய அரசோ, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கி இரு மாதிரிகளை மட்டுமே ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வு செய்யப்பட்ட இரு கரித்துகள் மாதிரிகளின் காலம் கி.மு 200 மற்றும் கி.மு 195 என்ற முடிவு வெளியானது. கடந்த ஆண்டு, நாலரை மீட்டர் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியின் நடுப்பகுதியில், அதாவது இரண்டாவது மீட்டரில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகள்தான் அவை இரண்டும். அதற்குக் கீழே இரண்டரை மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் எல்லாம் இன்னும் ஆய்வுக்கு அனுப்பப்படாமலே வைக்கப்பட்டுள்ளன. அவைகள் அனுப்பப்பட்டால் கீழடியின் காலநிர்ணயம் இன்னும் பின்னோக்கிப்போகும் என்பது யாவரும் அறிந்ததே. அவற்றை அனுப்பாமல் வைத்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராமன் , “இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகளைக் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பி காலநிர்ணயம் செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார். ஒரு குழிகூட இயற்கை மண்படிவம் (Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அப்படியிருக்க, இவர் எடுத்துள்ள கரித்துகள் மாதிரிகள் மேல்நிலை யிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகத்தான் இருக்கும். அவை, காலநிர்ணய ஆய்வுக்கு அனுப்பப்பட்டால் மிகவும் முன்தள்ளப்பட்ட காலத்தையே குறிக்கும். அதாவது, கீழடியின் காலத்தை முன்தள்ளிக் கொண்டுவருவதற்கான ஏற்பாடாகவே இது இருக்கும். எனவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு சேகரித்த பதினெட்டு கரிமத் துகள்களைக் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பிய பிறகுதான், இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கரிமத்துகள்களை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால், ஸ்ரீராமனால் ஆயிரம் ஆண்டுகளை எளிதில் விழுங்க முடியும். இங்கு நடப்பது PWD வேலையாக இருக்குமேயானால், இதில் நிகழும் ஊழலையும் மோசடியையும் வெளிப்படையாக அறியலாம். ஆனால், அகழாய்வுப் பணியல்லவா...மோசடிகளும் சூழ்ச்சிகளும் மிகமிக நுட்பமானவை. அதே நேரத்தில், வரலாற்றின் திசைவழியையே மாற்றக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை. சிந்துவெளியில் கண்டறியப்பட்ட திமிலுடைய காளையைக் குதிரையென்றும், அங்கு யாககுண்டங்கள் கிடைத்துள்ளது என்றும் சிலர் கூறிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சுமார் நூறு ஆண்டுகள் சர்வதேச சமூகம் உற்றுநோக்கும் சிந்துவெளி ஆய்வையே தலைகீழாக மாற்றும் முயற்சிகள் நடக்கும்போது, வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள கீழடி ஆய்வை விழுங்கி ஏப்பம்விட இவர்களால் முடியும், தமிழ்ச்சமூகம் விழிப்பு உணர்வற்று இருந்தால். படங்கள்: ஈ.ஜெ. நந்தகுமார், வீ.சதீஷ்குமார் http://www.vikatan.com/juniorvikatan/2017-oct-08/investigation/135117-su-venkatesan-discuss-about-keeladi-excavation.html
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கட்டிளம் காளைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
நீதி மன்ற உத்தரவு மகிழ்ச்சியை தருகின்றது திராவிட நாகரிக்கத்தின் தொன்மையை நிரூபிக்கும் இந்த அகழ்வும் ஆராச்சியும் ஸ்ரீராம் எனும் பார்ப்பனரை வைத்து இந்துத்துவா திசை திருப்பும் செயலை திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் கட்சிகள் ஏன் இன்னமும் தடுக்க முனையவில்லை. திராவிடத்தை நிராகரிக்கும் சீமான் போன்றவர்களும் தமிழர் நலனுக்காக இதை கண்டிக்க கூடாதா (அல்லது இது தொடர்பாக ஏதும் செயற்பாடுகளில் உள்ளார்களா ?)
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தமா?! தீர்ப்பு என்னவாகும்? பாலமுருகன். தெ வி.சதிஷ்குமார் சிவகங்கை மாவட்டம் கீழடியில், மூன்று மாதங்களுக்கு முன் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இந்த ஆய்வுப் பணி, இம்மாதம் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில், கீழடி குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணையில் இருக்கிறது. முந்தைய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது குறித்தும், `கீழடியில் எடுக்கப்பட்ட பொருள்களை இங்கேயே வைத்து மியூசியம் அமைக்க முடியுமா?' என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு, இம்மாதம் 21-ம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நீதிபதிகள் கீழடிக்கு வருவதாக திடீர் தகவல் கிடைத்தது. “கீழடியில் இதுக்குமேல் ஒன்றும் இல்லை. மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம்” என்று சொல்லி, மூடத் தயாராகிவிட்டார் கீழடி தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம். நீதிபதிகள் சதீஸ்குமார், சுந்தரேசன் ஆகியோர் கீழடியைப் பார்வையிட்டார்கள். அப்போது நீதிபதிகள் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் “இங்கு, அருங்காட்சியகம் அமைக்க முடியுமா? அப்படி அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆகையால், பராமரிப்பது கடினம். அதே நேரத்தில் இது அரசாங்கம் முடிவு பண்ணவேண்டிய விஷயம்'' என்றவரிடம், நீதிபதிகள் “இங்கு உள்ள பொருள்கள் எவ்வளவு வருடங்கள் பழைமையானவை?” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு லேயருக்கும் ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு உள்ள பானைகள் ஐந்நூறு ஆண்டுகளுக்குமேல் பழைமைவாய்ந்ததாக இருக்கலாம்” என்றார் அந்த அதிகாரி. மேலும், நீதிபதிகள் “என்னென்ன பொருள்கள் கிடைத்திருக்கின்றன?” என்று கேட்டார்கள். “இங்கு அதிக அளவில் பாசிமணிகள் கிடைத்திருக்கின்றன. தங்கம், செப்பு, உறைகிணறு, தந்தத்தால் ஆன சீப் போன்றவை கிடைத்திருக்கின்றன. பிராமி, தேவநாகரி எல்லாம் தமிழுக்குப் பிறகே உருவாகியிருக்கின்றன. மதுரையைச் சுற்றி தமிழ் எழுத்துகள் மேட்டுப்பட்டி, அரிட்டாபட்டி மாங்குளம் போன்ற ஏரியாக்களில் அதிகம் காணப்படுவதோடு, தென்னிந்தியாவில் மிக அதிக அளவில் தமிழ் எழுத்துகள் கிடைத்திருக்கின்றன” என்றார் ஸ்ரீராம். கீழடி அகழ்வராய்ச்சிக்கு முதல் மற்றும் இரண்டாம்கட்ட ஆய்வுப் பணிக்கு இடம் கொடுத்த விவசாயி சந்திரன், நீதிபதிகள் திரும்பிச் செல்லும்போது குறுக்கிட்டு, “அய்யா, நான் இந்த அகழ்வாராய்ச்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகள்ல ஒருவன். எங்களை இந்த அதிகாரி தரக்குறைவாகப் பேசுகிறார். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் மரியாதை குறைவாக நடத்துகிறார். இதே அதிகாரி நீடித்தால் நாங்கள் யாரும் அகழ்வராய்ச்சிக்கு நிலம் கொடுக்க மாட்டோம். எனவே, பழைய அதிகாரி அமர்நாத் வந்தால் மட்டுமே ஆராய்ச்சிக்கு நிலம் கொடுப்போம்” என்று தெரிவித்த விவசாயி சந்திரன், “அய்யா, இந்த அகழ்வாராய்ச்சியை நிறுத்தக் கூடாது. இது எங்களுக்குப் பெருமையான விஷயம்” என்றார். கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இடம் கொடுத்த விவசாயிகளில் ஒருவரான சந்திரனிடம் பேசினோம்... “எங்களுக்கு வழங்கப்பட்ட கூலியில், மோசடி செய்யப்பட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு மரியாதை இல்லை. ஸ்ரீராம் எங்களை அதிகார தோரணையில் மிரட்டுகிறார். இவருக்கு அகழ்வராய்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணமே இல்லை. கீழடிக்கு எப்படியாவது மூடு விழா நடத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்துகொள்கிறார். அரசாங்கம் கொடுத்த நிதியில் பெரும்பான்மையான அளவை, அவரின் சொகுசான வாழ்க்கைக்குப் பயன்படுத்தியுள்ளார். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை மறைத்திருக்கிறார். தங்கம் போன்ற பொருள்கள் கிடைத்திருப்பது கீழடியில்தான். அதிகாரி ஸ்ரீராம் வந்ததிலிருந்தே எடுக்கப்பட்ட பொருள்கள் மர்மமாகவே உள்ளன. ஆராய்ச்சியில் கிடைத்த பெரும்பான்மையான பொருள்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை. ஏனென்றால், எடுக்கப்பட்ட பொருள்கள் பத்திரிகைகளுக்கோ பொதுமக்களுக்கோ காட்சிப்படுத்தவில்லை. விவசாயிகள், நிலம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதிகாரி வேறு நபராக மக்களோடு மக்களாகப் பழகக்கூடியவராக இருக்கவேண்டும்” என்றார் விவசாயி சந்திரன். கீழடி தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீராம் பேசும்போது, “நான்காம்கட்ட ஆய்வுப் பணிகள்குறித்து மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணியைத் தொடர தொல்லியல் துறை அனுமதி வழங்கிய பிறகு மீண்டும் பணி தொடரும்” என்றார். http://www.vikatan.com/news/tamilnadu/102804-what-is-the-judgement-of-keezhadi-excavation.html
- தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல நந்தன்
- சென்னையின் முகம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் மகனை வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றி!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் கிருபனுக்கும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்