Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. நான் யாழில் இணைந்த வுடன் தனிமடல் போட்டு வரவேற்ற முதலாவது உறவு நீங்கள்!
-
ரயில் மற்றும் 104 பயணிகள்..
ஆண்டு 1955. Zavalichi எனும் உக்ரைனில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இரவு 11 மணி. வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டு இருந்தது. குளிர்காலத்தின் ஆரம்பகாலம் இது. நீண்ட தூரத்தில் இருக்கும் மாதா கோயிலின் மணி அடித்து 11 என்பதை காட்டியது. இரவை இருள் மூடி இருந்தது. கிராமத்தில் உள்ள எல்லாரும் எப்பவோ உறங்க போயிருந்தனர். புலோவிச் தன் நரைச்ச தாடியினை மெதுவாக தடவி விட்டுக் கொண்டு தன் கபினில் மாட்டியிருந்த அட்டவணையை மீண்டும் ஒருமுறை பார்த்து இனி அடுத்த 6 மணித்தியாலங்களுக்கு எந்த ரயிலும் வரப்போவதில்லை என்பதை நிச்சயத்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவி சினிக்கா சமைத்து வைத்து இருக்கும் சூப்பை குடித்து விட்டு 5 மணித்தியாலங்கள் உறங்கலாம் என நினைத்து மதியம் பாதி குடித்து மிச்சம் வைத்து இருந்த சுருட்டின் முனையில் மீண்டும் நெருப்பை பற்ற வைத்தார். புலோவிச் இந்த கிராமத்தில் இருக்கும் சிறு ரயில் நிலையத்தின் சிக்னலுக்கு பொறுப்பானவர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் இராணுவத்தில் இருந்து பணியாற்றி விட்டு ஒய்வு பெற்று விட்டு இப்ப இதற்கு பொறுப்பாக இருக்கின்றார். அவரது 4 மகன்களும் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர். மிகவும் இயல்பான வாழ்க்கை. ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழும் மனிதர் அவர். வீட்டுக்கு செல்வதற்கு நடக்க தொடங்குகின்றார். ரயில் நிலையத்தில் இருந்து நான்கு அடி தூரம் மட்டுமே நடந்து இருப்பார். தூரத்தில் ஒரு ரயில் வரும் ஓசை கேட்கின்றது. இந்த நேரத்தில் எந்த ஒரு ரயிலும் வருவதற்கு வாய்ப்பே இல்லையே என்று தன் கண்களை சுருக்கிக் கொண்டு மீண்டும் பார்க்கின்றார். அந்த ரயில் மெதுவாக ஆனால் சீராக வந்து கொண்டு இருந்தது. அதன் சக்கரங்கள் ரயில் தண்டவாளத்தில் பட்டும் படமாலும் ஒரு தாள கதியில் தவழ்ந்து கொண்டு வருவது போல இருந்தது. தான் சிக்னல் கொடுக்கவில்லையே... எப்படி இந்த ரயில் சிக்னலையும் அலட்சியப்படுத்திக் கொண்டு இப்படி வருகின்றது என அங்கலாய்ப்புடன் அதனையே உற்றுப் பார்க்கின்றார். ரயில் பழமையான ரயில். நீராவி இயந்திரம் மூலம் இயக்கப்படும் ரயில். அதன் எஞ்சின் ஏதோ ஒரு விருந்தில் சிறப்பு நடனம் ஆட வந்திருக்கும் மங்கையின் புன் முறுவல போன்று இருந்தது. அதன் அருகே மெல்லிய புகை மூட்டம் பனியின் சாரல்களுக்கு மத்தியிலும் தெளிவாக தெரிந்தது. புலோவிச் தன் 10 வருட சமிக்ஞை பொறுப்பாளர் காலத்தில் ஒரு போதுமே இந்த ரயிலை கண்டதில்லை. இப்படி பழைய ரயிலை ரஷ்சியஅரசு பயன்படுத்துவதும் இல்லை. அவர் தன் கண்களை மேலும் சுருக்கி ரயிலையே பார்த்துக் கொண்டு நிற்கின்றார். அது அவர் நிற்கும் இடத்தினை கடக்க தொடங்குகின்றது. அப்பொழுதுதான் அதை கவனிக்கின்றார். அதன் எஞ்சினில் ரயிலை செலுத்துவதற்கு எவரும் இல்லை. எஞ்சின் கண்ணாடியில் எந்த முகத்தையும் காணவில்லை. புலோவிச்சின் தோலில் இருந்து அவரது வெண்ணிற முடிகள் மெல்ல கிளர்ந்து எழுகின்றன. ரயிலின் பெட்டிகளிலும் எவரும் இல்லை போன்றே தோன்றுகின்றது. அதன் அனைத்து சிவப்பு நிற யன்னல்களும் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பெட்டியின் நுழைவாயில்களும் கறுப்பு நிற கதவுகளால் சாத்தப்பட்டு இருந்தன. புகைபோக்கியுனூடாக திரவ நுரை வெளியாகிக் கொண்டு இருந்தது. இறந்த காலம் ஒன்றை தனக்குள் புதைத்துக் கொண்டு அந்த ரயில் செல்வதாக புலோவிச்சுக்கு தோன்றியது ரயில் கடக்கும் போது, மாதா கோயிலின் மெழகுவர்த்தி வாசனையை ஒத்த வாசனை காற்றில் பரப்பிக் கொண்டு கடந்து கொண்டிருந்தது. வெண்ணிற அன்னம் ஒன்று தன் சிறகுகளை படபடவென அடிக்கும் ஓசையுடன் ரயில் அவரை விட்டு கடந்து செல்கின்றது. அதன் கடைசிப் பெட்டியும் கடந்து சென்ற பின் தண்டவாளத்தில் இருந்து நெடிய தூரம் சென்று மறையும் வரைக்கும் அவர் பார்த்துக் கொண்டு நின்றார். அடுத்த நாள் காலையில் தொலைபேசி மூலம் ஏனைய ரயில் நிலையங்களில் விசாரிக்கும் போது, அப்படி ஒரு ரயில் தம் நிலையங்களை கடந்து செல்லவே இல்லை என அறிந்தவுடன் அவர் செய்த முதல் வேலை, வேலையை விட்டு விலகியதே. (ரயில் இன்னும் பயணம் செய்யும்) பின் குறிப்பு: இக் கதை 'உண்மையாக நடந்தது' என்று சொல்லப்படுகின்ற ஒரு மர்மமான கதையை / செய்தியை ஒட்டி (unresolved mystery), அதைத் தழுவி புனையப்படுகின்றது.... இந்தக் கதையை கண்டிப்பாக உங்களில் சிலர் அறிந்து இருப்பீர்கள். அப்படி அறிந்து இருப்பின் இப்போதைக்கு அதை சொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாதவூரானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இதை வைத்து இலங்கை மற்றும் இந்தியாவில் யாழிணையத்தை தடை செய்யாமல் விட்டால் சந்தோசம்.
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
தொடருங்கோ நெடுக்கு.... உங்கள் எழுத்து நடை வாசிக்க கொஞ்சம் கடினமாக எனக்கு இருப்பினும் தொடர்ந்து வாசிக்கின்றேன்... இடையிடையே படங்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
கொஞ்ச நேரத்துக்கு முன் கொழும்பில் வசிக்கும் அம்மாவுக்கு தொலைபேசினேன். நான்: "அம்மா .. முழு நாட்டுக்கும் ஊரடங்கு போட்டுள்ளார்கள்... கவனம் வெளியே போக வேண்டாம்" அம்மா: "ஓமடா.. கொழும்பில் இந்தியன் ஆமி வந்து நிற்குதாம்..அதுதான் ஊரடங்கு போட்டுள்ளார்கள்" என்னத்தைச் சொல்ல...
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ஒரே போஸ்டில் தமிழ் சிறி ஒபாமா ஆகிவிட்டார்
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
பிந்திக் கிடைத்த தகவல்களின் படி பாரதப் பிரதமர் மோடியும் அதி உயர்ரக போர் விமானம் ஒன்றை தானே செலுத்தியபடி இலங்கை விரைகின்றார். இலங்கைக்கு உடனடியாக உதவுவதில் தன்னுடன் இணையுமாறு ராகுலை அவர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இலங்கையில் திராவிட மாடலை அமுல்படுத்தினால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
இந்தியா, சீனா, ரஷ்சியா மட்டுமல்ல, எந்த நாடுகளிடமும் நாம் எதனையும் கேட்டுப் பெற முடியாது தான் நிதர்சனம். ஆனால் இதில் சீனாவும் ரஷ்சியாவும் இலங்கைக்கு செய்த உதவிகளை விட (ஆயுத உதவி மற்றும் இலங்கையை ஐ.நாவில் காப்பாற்றுவது) மேற்கு எமக்கு செய்தது தான் மிகப் பெரும் துரோகம். எம் போராட்ட வலுவை முற்றாகச் சிதைத்ததில் மேற்கினது பங்களிப்பு முக்கியமாக அமெரிக்காவினது பங்களிப்பு இந்தியாவின் பங்களிப்புக்கு நிகரானது. எனக்கு தெரிந்து இருவரைத் விர மனித உயிர்களின் இழப்பை எவரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தப் போரை ஆரம்பிக்க கூடிய தவிர்க்க முடியாத நிலைக்கு ரஷியாவை கொண்டு நிறுத்திய காரணங்களை நியாயப்படுத்துகின்றதை தான் அவதானிக்க முடிகின்றது. இன்று வெள்ளைத் தோலும் நீல நிறக் கண்களும் கொண்ட மக்களின் இறப்புக்காக இங்கு கவலைப்படும் பலர் அமெரிக்காவின் ஆதரவுடன் சவூதி யேமனில் நடாத்தும் படுகொலைகளுக்கு கவலைப்படுவதை காண முடியுது இல்லை. அதே போன்று அன்று அலெப்போ நகர் மீது 4 வருடங்கள் முற்றுகையிட்டு இறுதியில் குளோரின் குண்டுகள் உட்பட இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தி சிரிய மக்களை கொல்லும் போதும் எவரும் யாழில் கவலைப்பட்டு கண்ணீர் விட்டு, கட்டுரைகள் எழுதியதையும் அவதானிக்கவில்லை.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
பிரபா, எங்கள் நிலையைக் எவருக்கு ஒப்பிட்டு காட்டி நியாயம் கேட்க போகின்றீர்கள்? மேற்குலகிடமா? எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.
-
இரத்த சரித்திரம்
செய்தாச்சு...
-
நானும் அந்த போதைவஸ்துகாரனும்
கொழும்பான், உங்கள் எழுத்து நடை ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு உரிய எழுத்து நடை. நின்று நிதானமாக எழுதியுள்ளீர்கள். உங்கள் அனுபவத்தை போல எத்தனையாயிரம் அனுபவங்கள் எம் மக்களுக்கு. வெள்ளைத் தோலும் நீல நிற கண்களும் எமக்கும் இருந்திருந்தால் எம் துயரத்துக்கான நியாயமாவது கிடைத்து இருக்கும். தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினியிற்கும் அண்மையில் பிறம்த தினம் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி எனக்கு / எமக்கு வரும் சில கனவுகள் இனம்புரியாத உணர்வுகளை தோற்றுவிப்பன. அடுத்த நாள் காலையில் எழுந்தால் அக் கனவின் சுமை கண்களின் வழி மனதெங்கும் பரவி அன்றைய நாளின் மீது கவிழும் மேகமாக தொடரும் இயல்புள்ளன. என்ன கனவு என்று தெளிவாக அடுத்த நாள் சொல்ல முடியாமல் இருக்கும். மீள அதை நினைவில் கொண்டு வர முடியாமல் இருக்கும். அது தரும் உணர்வுகளையும் பழக்கமான வார்த்தைகளால் அளக்க முடியாமல் இருக்கும். அப்படி ஒரு கனவு நேற்றுக் காலையில் வந்தது. அதில் கடல் நிரம்பி இருந்தது. விடிய எழும்பும் போது கண்களில் எரிச்சலும் மனசில் உளைச்சலுமாக இருந்தது. அதை எழுத்தில் கொண்டு வர எடுத்த முயற்சி தான் இது. யாழின் 24 ஆவது அகவைக்கு என்று மினக்கெட்டு எழுதவில்லை இது. தானாக வந்த கவிதை.
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
நேற்று என் கனவில் கடல் வந்தது என் கடல் நீலமாய் இருக்கவில்லை அதன் அலைகள் கடும் சிவப்பிலும் ஆழத்தில் தொலைந்திருந்த எங்கோ புதைந்து கிடந்த என்றோ மறந்து விட்ட ரகசியங்களின் நிறமாகவும் இருந்தது. கரையே அற்ற பெருங்கடல் அது இரக்கமற்றவர்களின் பிரார்த்தனை போலவும் மரணங்களைக் கொண்டாடும் கடவுள்களின் துதிப்பாடலைப் போலவும் இரைச்சலாக இருந்தது. ஈரமற்ற நீர்ப்பரப்பாய் வானமற்ற நீர் வனமாய் உயிர்கள் அற்ற ஆழியாய் அது பரந்து சூழ்ந்தது அதன் அலைகளின் நுனிகளை பற்றி இருந்தேன் நுரைகளால் நிரம்பிக் கிடந்தேன் அதன் பெரும் இரைச்சலை எனக்குள் இறக்கிக் கொண்டேன் அலைக்கழிக்கும் ஒரு பெரும் துயரத்தின் ஆழத்துக்குள் அதன் சுழி என்னை இட்டுச் சென்றது மீள முடியாத பெரும் சுழி அது தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் சில கணங்களும் பின் விலகி எதிர் துருவங்களில் சில கணங்களுமாக நேர் கோட்டிலும் குறுக்குவாட்டிலும் பின் சிறுத்தும் பரந்தும் சுருங்கியும் விரிந்தும் என்னை இறுக்கி பிழிந்து உயிர் குடிக்கும் பெரும் சுழி அது மூச்சிழந்து கிடந்தேன் உடல் மரத்து வேர்வை ஆறாகி பெருக தப்ப வழியற்று தப்பும் ஆசையும் அற்று அதன் நெடிய கரங்களுக்குள் இன்னும் நெருக்கிக் கொண்டு அலைக்கழிந்தேன் ஈற்றில் முன்னை இட்ட தீ சுழிக்குள் தகித்து எரிய கடலில் சாம்பலாகி அலைகளில் துகள்களாகி கோடிக்கணக்கான அணுக்களாகி கரைந்தே போனேன். நேற்று என் கனவில் கடல் வந்தது இமைகள் திறந்த பொழுது அந்தக் கடல் வற்றிக் கொண்டது வற்றிப் போக முன் என் அறையெங்கும் சேற்று மணத்தை நிரப்பி விட்டுச் சென்றிருந்தது... March 27, 2022
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மிகவும் தவறான, ஆபத்தான கருத்து. யாழ் இணையம் ஒரு கருத்துக்களம். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எவரும் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். அவ்வாறு தம் கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று உத்தரவு விட உங்களால் முடியாது. யாழின் பிறந்த தினத்துக்காக சுய ஆக்கங்களை யாழ் வரவேற்பதே கருத்துக்களத்தை மேலும் விரிவுபடுத்தவே. கருத்துக்களத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்காமல் இந்த திரியை கொண்டு சொல்லுங்கள்.
-
மனிதாபிமானப் பன்னாடை
நல்ல கவிதை புங்கை. நீண்ட காலத்தின் பின் உங்களின் சுய ஆக்கம் நல்ல கனமான ஒன்றைத் தாங்கி வந்துள்ளது. மேற்குலக ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, மேற்குலகில் வாழ்கின்றோம் என்பதற்காய் அதன் போர்களை நியாயப்படுத்துகின்றவர்கள் கூட இந்த பன்னாடையை போன்றவர்கள் தான். உலகமே ஒரு விதத்தில் இந்தப் பன்னாடை போன்றது தான் - நாம் உட்பட.
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ live stream மினூடாக நிகழ்ச்சியின் இறுதி இரண்டு மணித்தியால நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. அலைபேசியின் திரையை அகண்ட தொலைக்காட்சி திரைக்கு mirror பண்ணி பார்த்தமையால் அருமையான அனுபவம் கிடைத்தது. ஆனாலும் நேரில் பார்த்த அனுபவம் இதை விட பல மடங்கு அற்புதமாக இருந்திருக்கும்.
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
என்ன ஒரு வில்லத்தனம்!😂
-
,எஸ்கியூஸ் மீ மூருகா
புத்தன், உங்கள் இந்த சிறுகதையை யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தவா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் நுணா!
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
என்றென்றும் மறக்க முடியாத சந்திகளில் ஒன்று! இந்தச் சந்திக்கு வாய் பேச முடிந்தால், ஒரு பெரும் வரலாற்றையே சொல்லத் தொடங்கும்.
-
காதாலே பேசிப் பேசி கொல்லாதே..!
நானும் ஒரு ஆன்ட்ராய்ட் பயனாளி. தற்போது Samsung s21 கைபேசியும் Samsung watch 4 வும் பயனபடுத்தி வருகின்றேன் (என்னை நான் ஒரு Anti Apple product person என்று சொல்வதுண்டு) ஆனால் மனைவியும் பிள்ளைகளும் எப்பவும் அப்பிள் போன் தான் பயன்படுத்துகின்றனர். எப்பவாவது அவர்களின் போனை நான் பயனபடுத்த வேண்டிய நிலை வரும் போது ஒவ்வொரு முறையும் வெறுத்து விடுவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஆன்ட்ராய்ட் எப்பவும் பாவனையாளர்களின் தேவைக்கு ஏற்ப தன் அம்சங்களை (Features) கொடுக்கும். அப்பிள் தன் அம்சங்களுக்கு ஏற்ப பயனாளரை மாறச் சொல்லும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!