Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. இன்று (மார்ச் 11) பிறந்த நாளைக் கொண்டாடும் யாழின் வித்தகர்களில் ஒருவரான இனிய கள உறவு புங்கையூரனுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
  2. யார் பிசாசு என்று கட்டினவனுக்குத் தான் தெரியும். நாங்கள் எல்லாம் வீட்டில எலிகளாக்கும். வாழ்த்துக்கு நன்றி சுபேஸ். ம்.. ம்... கட்டினவனுக்குத் தான் தெரியும் மனிசி எப்படி பூஜிக்கின்றார் என்று.. வாழ்த்துக்கு நன்றி கு.சா அண்ணா வாழ்த்துக்கு நன்றி ammaa நன்றி தமிழரசு...
  3. அநேகமாக நாளைக்கு பிரச்சனைகள் தீரும் என்று நம்புகின்றோம். அப்படியும் தீர வில்லை என்றால் கதிர்காமக் கந்தனுக்கு மொட்டை அடித்து காவடி எடுத்துப் பார்க்கலாம் என்றும் எண்ணியுள்ளோம்.
  4. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் சிறி, நெடுக்கு, புலவர் மகன் ஆகியோருக்கும் என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
  5. சேர்வர் மாற்றத்தின் காரணமாகத்தான் யாழை பார்ப்பதில் பலருக்கு பிரச்சனைகள் வருகின்றன. வழக்கம் போன்று மோகன் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்த்துக் கொண்டு வருகின்றார். கூடிய விரைவில் சரியாகும்.
  6. சரி செய்ய முயல்கின்றோம்.. முகப்பில் இடும் இணைப்புகள் ஒவ்வொன்றும் இடும் பெட்டியின் நீளம் அகலம் என்பனவற்றை ஒற்றி தானாவே தீர்மானிக்கப்படுவதால், சில தலைப்புகள் முழுமையாக வருவதில்லை. ஆனால் அதனை கிளிக் பண்ணி உள்ளே செல்லும் போது முழுமையாக வாசிக்க முடியும். இந்த விளம்பரங்கள் நேரடியாக யாழுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அல்ல. கிளிக் பண்ணி உள்ளே செல்லும் போது அது இன்னொரு தளத்துக்கே எடுத்துச் செல்கின்றது. எனவே இதற்கான இணைப்பினை யாழின் இன்னொரு பகுதி ஒன்றில் கொடுப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. இப்போது இருக்கும் மரண அறிவித்தல் பகுதியை சற்று மேலே நகர்த்த முனைகின்றோம்.
  7. IE 11 இல் இப் பிரச்சனை இருக்கின்றது. இப்போதைக்குள்ள ஒரே இலகுவான மாற்று வழி IE11 இல் இருந்து 10 இற்கு downgrade பண்ண வேண்டியதுதான். அல்லது, Firefox அல்லது Chrome பாவியுங்கள்.
  8. மூதாதையர்களின் வழியொற்றி பெருவாழ்வு வாழும் ராஜவன்னியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  9. என் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த சுபேஸ், புங்கையூரன், குமாரசாமி, nunavilan, கறுப்பி, துளசி, தமிழ் சிறி (அந்த சிவாஸ் ரீகல் சூப்பர்), யாயினி (வாழ்த்து அட்டை அழகாக இருக்கு), மெசொபொத்தேமியா சுமேரியர் , வல்வை சகாறா, ராசம்மா ஆகிய தோழர் தோழிகளுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி. அடுத்த வருடம் 40 இனை எட்டிப் பிடிக்கின்றேன். இப்ப 30 இன் இறுதியில் நின்று கொண்டு இருக்கின்றேன். மனசு முழுதும் காதலும், அழகியலுமாக விரிந்து செல்கின்றது. வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் இரண்டு பிள்ளைகள், வாழ்க்கையையே தரும் மனைவி, அன்பான நண்பர்கள், நினைவில் நிற்கும் கள உறவுகள், என்றுமே எனக்காக உருகத் துடிக்கும் அம்மா, சிநேகிதியாக அக்கா என்று வாழ்க்கை ரம்மியமாக போகின்றது. கடந்து போகும் ஒவ்வொரு வருடமும், இன்னொரு வருடத்தினை வாழ்வதற்கான அவாவினை தந்து கழிகின்றது.
  10. இன்று தன் பிறந்த நாளை கொண்டாடும் கள உறவு கவிஞர் ஜெயபாலன் அண்ணாவுக்கு (பொயட்) என் இனிய பிறந்த தின வாழ்த்துகள். பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்கும் கவிதைக்கும் வளம் சேர்க்கட்டும்!!
  11. இந்த திரியில் தேவையில்லாத அரட்டைகளைத் தவிர்த்தால் எமக்கு நிர்வகிப்பதற்கு சுலபம். பெயர் மாற்றம் கேட்பவர்கள் கூடிய வரைக்கும் ஆங்கிலப் பெயர்களை, ஆங்கிலச் சொற்களை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.
  12. இன்று பிறந்த நாளை கொண்டாடும் தோழி வல்வை சகாறா , நண்பன் ரகுநாதனுக்கும், இசை ரசிகன் முத்துவுக்கும் என் மனங்கனிந்த பிறந்த தின வாழ்த்துகள். சகாறா, போன முறை உங்கள் கண்கண்ட தெய்வத்திடம் இருந்து இளையராஜா நிகழ்ச்சிக்கான ரிக்கெட் கிடைத்தது, இந்தமுறை என்ன கிடைத்தது? ரகுநாதன், பிறந்த நாளில் வழக்கம் போல ரென்ஷனாக இருக்கக் கூடாது...ஓக்கேயா.. கொஞ்சம் பாட்டுகளையும், சினிமாவையும், அழகிகளையும் ரசியுங்கள்.. முத்து சார், உங்களிடம் கேட்டு தரவிறக்கம் செய்ய நிறைய பழைய பாடல்கள் வைத்து இருக்கின்றேன்..
  13. ஜெயபாலன் அண்ணா, நீங்கள் இதனை தொடர்ந்து எழுதுவதில் இருந்து தெரிகின்றது. நீங்கள் உயிரோடு இருப்பது தொடர்பாக நிழலிக்கு விருப்பம் இல்லை என்று தொடர்ந்து காட்ட முனைகின்றீர்கள் என்று. அனுதாபம் தேட முயலும் உங்களுடன் இதற்கு மேலும் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை என்று நம்புகின்றேன். அத்துடன், கைதாகிய பின் எரிக்சொல்க்ஹெய்ம் சொல்ல முன்பே முஸ்லிம்கள் சொல்ல முன்பே உங்களுக்கு கைபேசியில் வெளிநாட்டவர்களுடன் உரையாட விட்ட சிங்களம் உங்கள் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்காது என்பதும் எங்களுக்குத் தெரிந்தே தானிருந்தது. அதே போன்று, உங்களுக்கு உதவியவர்களின் பாதுகாப்பை இரண்டு வார இடைவெளிக்குள் இரண்டாம் அறிக்கை எழுதுவதற்குள் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய இலகுவான நெகிழ்வான இராணுவச் சூழ்நிலை அங்கு இல்லை என்பதும் எனக்குத் தெரியும். நன்றி வணக்கம்
  14. அன்பான ஜெயபாலன் அண்ணா, உங்கள் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி. நான் உங்களுக்கு எழுதிய விடயங்கள் உங்களுக்கு புரிகின்ற விதமாக எழுதவில்லையோ என்று சந்தேகம் வருகின்றது. இப்பொழுது சுருக்கமாக சொல்ல முயல்கின்றேன். நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டதாக உங்கள் முகநூலில் வந்த தகவலைக் கண்டதில் இருந்து விடுதலையாகிய செய்தி வரும் வரைக்கும் உங்கள் விடுதலையை மிகவும் விரும்பிய உறவுகளில் நானும் இருந்தேன். எந்த விதமாகினும் விடுதலையாக வேண்டும் என்பதே எனது எண்ணமுமாக இருந்தது. அதே நேரத்தில், உங்கள் விடுதலையை விரும்பிய காரணத்துக்காக முதல் அறிக்கை என்று நீங்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நான் ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்கள் முதல் அறிக்கையினை கண்டித்து விமர்சிப்பதால் மட்டுமே நான் அதி தீவிர தமிழ் தேசியத்தினை வலியுறுத்துகின்றவராக நீங்கள் நிறுவ முயல்வது தவறு. என் எழுத்துகள் என்றுமே அதி தீவிர தமிழ் தேசியத்தை வலியுறுத்துவன அல்ல. அத்துடன் புலம்பெயர்ந்த ஒருவர் தாயகத்துக்கு செல்வதை ஒரு தவறான விடயமாக பார்க்கும் சிந்தனையும் என்னிடம் இல்லை. என்னைக் கேட்டால் தாயகத்திற்கு ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழரும் தன் பிள்ளைகளுடன் சென்று காட்டி அந்த மண்ணுடனான நேரடி பரிச்சயத்தினை பேண வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன் (இதன் அர்த்தம் சுற்றலாவாக செல்வது அல்ல). எனவே நீங்கள் தாயகம் சென்றதோ அல்லது மீண்டும் அங்கு செல்ல நினைப்பதோ தவறு என்று ஒரு இடத்திலும் குறிப்பிட வில்லை, அப்படி எண்ணவும் இல்லை. நீங்கள் அங்கு சென்று கைதாகியதும் விடுதலையானதும் ஒரு சாதாரண நிகழ்வாக கொள்ள முடியவில்லை. சிங்களம் தன் மேலதிகாரத்தினை வெளிநாட்டில் இருந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்றுச் செல்கின்றவர்கள் மீதும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் பிரயோகிக்கும் என்பதை மீண்டும் உலகுக்கு காட்டும் ஒரு செயல். கைதில் இருந்து விடுவிப்பு வரை நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு கிளைச் சம்பவங்களிலும் எந்த நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் பேரினவாத அம்சம் நிறைந்து கிடக்கின்றது. ஆனால் உங்கள் முதல் அறிக்கை இந்த பேரினவாத அம்சங்களை வெளிக்காட்டுகின்றதா? மீண்டும் இதனை அழுத்திக் கேட்கின்றேன், உங்கள் முதல் அறிக்கை இந்த பேரினவாத அம்சங்களை அதன் அதே தீவிரத் தன்மையுடன் வெளிக்காட்டுகின்றதா? இல்லை என்று தான் நான் சொல்வேன். பேரினவாதத்தின் தீவிரத்தினை காட்டமல் விட்டது மட்டுமன்றி, அதனை நீர்த்துப் போகின்ற செயலைத்தான் உங்கள் அறிக்கை செய்கின்றது என்பதே என் முடிவு. முக்கியமாக அரச மேல்மட்டம் (உங்கள் அறிக்கையில் கோத்தா) நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பது போன்றும் அதன் கீழ் மட்டம் (உங்கள் அறிக்கையில் பொலிஸ் கான்ஸ்டபிள்) தான் பேரினவாதத்தின் தீவிரத்துடன் இருப்பது போன்றும் உங்கள் அறிக்கையின் அரசியல் பேசவில்லையா? இதைத்தான் நான் கடுமையாக விமர்சிக்க முயல்கின்றேன். ஜெயபாலன் என்ற தனிமனிதனுடன் எனக்கு எந்தவிதமான விரோதமும் இல்லை, 'உவன் எங்கள் சொத்து' என்று வாஞ்சையுடன் அழைக்கும் வண்ணம் தான் ஜெயபாலன் என்ற மனிதனுக்குள் புதைந்து கிடக்கும் நுட்பமான கவிஞன் இருக்கின்றான். அவனை எப்பவும் ஆராதிப்பேன். அவன் கவிதைகளை உரத்துப் படித்துக் காட்டி என் பிள்ளைகளுக்கும் கவிதாவுணர்வை கொண்டு வரப் பார்பேன். அந்தக் கவிஞனுடனும், ஜெயபாலன் என்ற தனிமனிதனுடனும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் அவன் அரசியலில் கண்டிப்பாக கோபம் இருக்கின்றது. அந்த அரசியலை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கும் 'முதல் அறிக்கையில் கோபம் இருக்கின்றது. அதை கண்டிப்பாக தொடர்ந்து எதிர்பேன். அது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கவும் விரும்புவேன் நன்றி நிழலி (மற்றது, குருபரன் குளோபல்செய்தித் தளத்தில் செய்தி போடும் முன் முகநூல் தகவலை வைத்து யாழில் உங்கள் கைதை செய்தியாக மணிவாசகன் போட்டு இந்தத் திரியை ஆரம்பித்து இருந்தார். ஆகவே உங்கள் கைதை செய்தியாக முதலில் உலகுக்கு கொண்டு வந்தது உங்கள் முகநூலும் எங்கள் யாழும் தான் )
  15. தாக்கியவர்கள் அல்ல... கேள்வி கேட்டவர்கள் மீதுதான் கோவம். நான் இறுதியில் உங்களை பற்றி எழுதியது நூற்றுக்கு நூறு விகிதம் சரி என்பதை நிறுவி விட்டீர்கள். ஒரு நுட்பமான கவிஞன் அரசியல் வாதியாக மாறும் போது, அந்த நுட்பங்களை எவ்வளவு சாமர்த்தியமாக பயன்படுத்தி பிழைப்புவாதியாக மாறுவான் என்பதை உங்கள் வாழ்வு எங்களுக்கு காட்டுகின்றது. நன்றி வணக்கம்
  16. சபேசன், கவிஞருக்கு என்றைக்காவது தாயகம் போக வேண்டி தேவை இருக்கும் என்பதையும் அதற்காக எவரையும் நோகடிக்காமல் இருக்கும் தேவை இருப்பதையும் புரிந்து கொள்கின்றேன். அவ்வாறு தேவை இருப்பவர் தன் விடுதலைக்கு உழைத்தவர்களுக்கு பெரிய நன்றி என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். பதிலாக மிக மோசமான மனித உரிமைகளை மீறியவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவேண்டி வந்த தேவை என்ன? நீங்கள் சொல்வது போன்று, அங்கு கைது செய்யப்பட்டு பின் (காசு கொடுத்தோ கொடுக்காமலோ) விடுவிக்கப்பட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் விடுதலையாகி வந்து மெளனமாகி இருக்கின்றார்களே ஒழிய, தன்னை நல்லவிதமாக நடத்தினார்களோ என்றோ நெஞ்சு வலியால் அவதிப்பட்டு ஆஸ்பத்திரியில் படுக்க போகும் போது ஒருவர் தன்னை கொலை செய்ய முனைந்தாரென்றோ, கோத்தாவை விட அவர் கொடியவர் என்றோ அறிக்கை விடவில்லையே? பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்தவர்கள் கையில் துப்பாக்கிகளுடன் நிற்கையில் அவர்கள் முன் நின்று "அம்மாவின் சமாதியைப் பார்க்க விடு அல்லது சுட்டுக் கொள்ளு" என்று ஆக்ரோசம் கொண்ட கவிஞர் பல்லாயிரம் மைல்கள் கடந்து அறிக்கை விடும் போது மட்டும் நிதானமாக இருக்கின்றார் என்பதை நம்பவேண்டும் என்கின்றீர்கள்.
  17. வணக்கம் ஜெயபாலன் அண்ணா, மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி. எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் கவிதைகள் எப்படி என்றுமே இனிமையாக இருக்கின்றதோ அதே போன்றே உங்கள் விடுதலையும் இனிமையான ஒரு விடயமாகவே எனக்கு என்றும் இருக்கும். ஆயினும் வந்து சேர்ந்த சோர்வு ஆறும் முன் நீங்கள் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருக்கும் உங்கள் அரசியல், அடக்கு முறைகளை - அது புலிகளின் அடக்கு முறைகளாக இருந்தாலும் சரி, இலங்கை பேரினவாதத்தின் அடக்கு முறையாக இருந்தாலும் சரி எதிர்க்கும் எவருக்கும் - உங்கள் அரசியலை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காவிடினும் கூட - சிறிய அதிர்ச்சியையேனும் தரக்கூடிய ஒரு அறிக்கையாகவே பார்க்கப்படும் / பார்க்கப்படுகின்றது. உங்கள் கைதின் மூலம் சிங்கள அரசு தெளிவான பல செய்திகளை உலகுக்கு உணர்த்தி இருக்கின்றது. அவற்றில் முக்கியமானவை, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்ற தமிழராகவோ அல்லது சிங்கள பேரினவாதத்தினை கேள்வி கேட்பவராகவோ இருந்தால் அவர்களை தாம் நினைச்ச மாதிரி கடத்தவும், கைது செய்யவும், காணாமல் போக்கவும் முடியும் என்பதும், அவ்வாறு அரசியல் / இலக்கியம் செய்ய வரும் எவரும் தம் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டவராக மட்டும் இருக்க வேண்டும் என்பதுவும், இவற்றினை எல்லாவற்றையும் விட அங்கு முதலீடு செய்ய முனையும் தமிழர்களின் இருப்பையும் ஒரு நிமிடத்தில் இல்லாமலாக்க முடியும் என்பனவும் ஆகும். ஆனால் பலரால் உணரப்பட்ட இந்த செய்திகளின் எந்தவொரு சாராம்சத்தினையும் உங்கள் முதல் அறிக்கை கொண்டு இருக்கவில்லை. அத்துடன், இன்று இலங்கை அரசு பற்றிய சரியான பிம்பம் உலகெங்கும் உறுதியாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, உங்கள் கைது பற்றியும் அதன் பின் விடுதலை செய்யப்படும் வரைக்கும் நடந்த விடயங்கள் என நீங்கள் வெளியே வந்து சுதந்திரமாக வெளியிட்ட இந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களும் அந்த பிம்பத்தினை வெகு சாமர்த்தியமாக உடைக்கும் காரியமாகவே படுகின்றது. உங்களை கைது செய்த TID பிரிவினரில் இருந்து, பசீர் சேகுதாவுத்தின் சொல்லைக் கேட்டு விடுதலை செய்யச் சொன்ன அச்சாப் பிள்ளை கோத்தா வரைக்கும் சிங்கள் மேலாதிக்கம் ஒரு நெகிழ்வான தன்மையைக் காட்டி இருக்கு என்று காட்டி விட்டு அந்த மேலாதிக்கத்தின் எதேச்சாதிகாரத்துக்கு ஒற்றைப் பிரதிநிதியாக ஒரு சிங்கள பொலிஸ் கான்ஸ்டபிளை மட்டும் காட்டி நிற்கும் உங்கள் சாமர்த்தியம் திட்டமிடப்படாமல் அறிக்கையில் வந்துள்ளதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு சொல்லும் மிகவும் கனவமாக கையாளப்பட்டுத் தான் இந்த அறிக்கையை தயாரித்து இருக்கின்றீர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது. உங்கள் கடத்தலே ஒரு நாடகம் என்றோ ஜெயபாலன் இலங்கை அரசுடன் இணைந்து நடிக்கின்றார் என்றோ நான் இங்கு எழுத முனையவில்லை. 90 களில் வெள்ளவத்தை ரோகினி ரோட்டில் உங்களை சந்திக்கும் போது எந்தளவுக்கு நீங்கள் இலங்கை அரசின் ஆள் இல்லை என்று நம்பினேனோ அதே அளவுக்கு இன்றும் உங்களை நம்புகின்றேன். . ஆனால் கடத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகி வந்த பின்னும் பலரை பகைக்க மனம் இன்றி அவர்களை நோகாமல் அரசியல் செய்யும் உங்கள் தந்திர / சாமர்த்தியமான அரசியலைத் தான் நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். சாமர்த்திய அரசியல் செய்கின்றோம் என்று உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற முனையும் சாகசத்தினைத் தான் கேள்வி கேட்கின்றேன். மற்றவர்களின் கடுமையான கேள்விகளை நலித்துப் போகச் செய்யும் வாசகங்களை அறிக்கையில் கொண்டு வந்த உங்கள் இலக்கிய 'நேர்மை' பற்றியே வினவுகின்றேன். என் கேள்விகளிலும் வினாக்களிலும் தவறுகள் இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்தும் வரைக்கும் காத்து இருக்கின்றேன். அது வரைக்கும் நல்ல கவிதைகளை எழுதத் தெரிந்த, பலமுள்ளவர்களை கடுமையாக பகைக்கின் அரசியல் செய்ய முடியாது, என்று நம்புகின்ற புகழ்ச்சியை மிகவும் விரும்பும் ஒரு வெறும் கலகக்காரனாகவே உங்களை உணர்ந்து கொள்கின்றேன். நன்றி
  18. இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு என்ன பலம் இருக்குது என்று நினைக்கின்றீர்கள் சுண்டல்? அவர்கள் எல்லாம் பொம்மை அமைச்சர்கள். இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட நீட்ட உரிமையற்றவர்களாகத்தான் அன்றும் இன்றும் இருக்கின்றார்கள். இந்த வாரம் நிந்தவூரில் அதிரடிப்படையினரின் அட்டகாசத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் இளைஞர்கள் பலரை அதிரடிப்படையினரும், பொலிசாரும் கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் எங்கு இருக்கின்றார்கள் என்று கூட தெரியவில்லை. முஸ்லிம் இளைஞர்களை கைதைக் கூட எதிர்க்க முடியாதவர்களாகத்தான் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். அஸ்வராலும், ஹக்கீமாலும் இலங்கை பேரினவாததுக்கு எதிராக எப்போது குரல் கொடுக்கினமோ அன்றே அவர்களுக்கும் இதே நிலைதான் வரும். இது தான் யதார்த்தம்.
  19. கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால்; கைது:- கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார். மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது உறவினர்கள்; உறுதி செய்துள்ளனர். நோர்வே குடியுரிமை பெற்ற வ.ஐ.ச ஜெயபாலன் தற்போது பெரும் பகுதி காலத்தை தமிழகத்தில் கழித்து வந்தார். கடந்த வாரம் இலங்கை சென்ற அவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தாயின் நினைவு தினமான இன்று மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியை பார்க்க சென்ற வேளை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வவுனியா காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx
  20. மாங்குளத்தில் உள்ள தாயின் சமாதியைப் பார்க்க (இது இப்ப இராணுவத்தினரின் பண்ணை / முகாம் பிரதேசத்தில் இருப்பதாக முன்னர் அறிந்து இருந்தேன்) செல்லும் போது கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்கின்றனர் என்பதை அறிய முடிகின்றது. இன்னும் முழுவிபரமும் கிடைக்கவில்லை,
  21. கடந்த சில வாரங்களாக முகப்பு மட்டும் அடிக்கடி தானாக mobile theme இற்கு சென்று சிறிது நேரம் கழித்து மீண்டும் சரியான theme இற்கு செல்வதை அவதானித்துள்ளோம். கருத்துக்களம் இணைப்பை அழுத்தி செல்லும் போது எல்லாம் சரியாக தெரிகின்றது. ஸ்கிரிப்ட் இல் அல்லது settings இல் எங்காவது சின்ன தவறு உள்நுழைந்துள்ளது போன்று இருக்கின்றது. விரைவில் சரிபடுத்த முயல்வோம்.
  22. மன்னிக்கவும் எக்காரணம் கொண்டும் அவ்வாறு மாற்ற முடியாது. ஒருவரின் கல்வித் தகமைகள் அவர் சார்ந்த தொழில் துறைக்குரியனவே அன்றி யாழ் போன்ற கருத்துக்களத்துக்கு உரியன அல்ல. அவ்வாறான ஒரு வழக்கமும் இதுவரைக்கும் இல்லை. இனியும் இருக்கப்போவது இல்லை. நன்றி வணக்கம்.
  23. விக்கி சொல்லி இருப்பது போன்று தமிழக தலைவர்களை அரசியல்வாதிகளை நம்புவதை விட பன்மடங்கு சிங்கள அரசியல்வாதிகளை நம்பலாம். முதலில் இந்திய இறையாண்மையைத் தாண்டி ஒரு சிறு துரும்பும் தமிழக அரசியல்வாதிகளால் தலைவர்களால் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலை பற்றி செயலாற்ற முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. நன்றி வணக்கம்! (நிழலி எஸ்கேப்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.