Everything posted by தமிழ் சிறி
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை
பாகிஸ்தானில் கழுதை வண்டில் போகின்ற நெடுஞ்சாலையில், போர் விமானத்தை இறக்கலாமா. 😂
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை
இவர்கள்… எங்கள் பொறுமையை சோதிக்கின்றார்கள். 🤣
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
பல நூறு கிலோ தங்கம் இருக்கும் என்று முன்பு சொன்னவர்கள். இப்போ காட்டியது... ஒரு பொட்டலத்தில் உள்ள கொஞ்ச நகைகள் தானாம். மிகுதியை, மகிந்த... உகண்டாவில் கொண்டு போய் பதுக்கி விட்டார் போலுள்ளது. 😂
-
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல்! ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் ஆண்டு மாணவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்கப்பட்ட மாணவர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சுமார் 20 மாணவர்கள் அவரது விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலையிலும் முதுகு பகுதியிலும் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நாட்டில் இன்னும் பேசுபொருளாக இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1430394
-
500 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்க நடவடிக்கை
500 தமிழ் பொலிசார் என்றால்… அதற்குள் முஸ்லீம்களும் அடங்குவார்களா…. அல்லது ஒறிஜினல் தமிழர்களை மட்டும் எடுப்பார்களா. 😂
-
கருத்து படங்கள்
- கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்! — கருணாகரன் —
- பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
- வாக்கு வேட்டைக்காக சில தமிழ் அரசியல் வாதிகள் இனவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர்!
வாக்கு வேட்டைக்காக சில தமிழ் அரசியல் வாதிகள் இனவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர்! வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ் சாட்டியுள்ளார். யாழ். வேலணை பகுதியில் நேற்று (02) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது வடக்கிலும், தெற்கிலும் மக்களை பிரித்தாளும் இனவாதத்தை தோற்கடித்து, முன்னோக்கிச் செல்ல தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். ” அத்துடன் இன ஒற்றுமையை ஏற்படுத்தினால்தான் இந்நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும், இதன் காரணமாகத் தான், இந்த விடயத்துக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி தாம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் அரசியலை ராஜபக்ச அணி தெற்கில் முன்னெடுத்து வருகின்றது எனவும், கடந்த காலங்களில் மக்கள் பாடம் புகட்டியும் அவர்கள் திருந்துவதாக இல்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். அதேபோல வடக்கிலுள்ள சிலரும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி மக்களை பிரித்தாளும் பிரச்சாரத்தை செய்கின்றனர் எனவும், வடக்கு- கிழக்கு பிரதேசங்களுக்காக எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பல இருக்க, எதுவுமே நடக்கவில்லை என்ற தொனியில் அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறு இருப்பினும், வடக்கிலும் தெற்கிலும் இனவாத அரசியலுக்கு மக்கள் இனியும் இடமளிக்கமாட்டார்கள் என்பது தற்போது உறுதியாகியுள்ளது எனவும், அதற்கான சிறந்த செய்தியை மே 6 ஆம் திகதியும் வழங்க வேண்டும் எனவும்,வடக்கில் இருந்து இந்த செய்தி தெளிவாக செல்ல வேண்டும்” எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இதுவரை காலமும் தீர்க்கபடாத தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும் எனவும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இந்த விடயம் தொடர்பில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1430378- பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
சப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரடங்கிய குழு நியமனம். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மூவரடங்கிய விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.ஏ.வை அமரசிங்க தலைமையில் குறித்த விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் தொடர்பில் இதுவரை 16 மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இது குறித்து விசாரிப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினாலும் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. புஸ்ஸல்லாவை பகுதியைச்சேர்ந்த 23 வயதுடைய குறித்த மாணவன், சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsசப்ரகமுவ பல்கலைக் கழக மாணவனின் மரணம்: விசாரணை நடத்த மூவரட...சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மூவரடங்கிய விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின்...- அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கங்கா அதிவேக நெடுஞ்சாலையில் ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரை யிறக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த நெடுஞ்சாலை பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிலையில் இந்திய விமானப்படையின் நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1430384- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
பொது மக்களின் உறுதி உள்ள காணியையே வருடக் கனக்காக பிடித்து வைத்துக் கொண்டு தராதவர்கள்… இந்த நகைகளை அடையாளம் காட்டினால் தருவார்களாம். நம்பும் படியாகவா இருக்கு.- மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள்
யாழ்ப்பாணத்தில் தான்.... இலங்கை உள்ளது. ஏழாலையில் தான்... அந்த "ஜட்டி" உள்ளது.- மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள்
பைத்தியருடன்... இவர் வாக்குவாதப் படும் போதே, ஊசி ஏத்துவார் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டார். 🤣- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
சரியாக சொன்னீர்கள். பட்ட துன்பம் போதாது என்று... புதிதாக துன்பப் படுத்துவார்கள்.- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு! யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பதில் பொலிஸ்மா அதிபரிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையகத்தில் இன்று (02) இந்த நிகழ்வு இடம்பெற்றது. கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நீதிமன்ற உத்தரவிற்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையால் அதன் பெறுமதி மதிப்பிடப்பட்டதன் பின்னர் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படவுள்ளது. தங்க ஆபரணங்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டால் அவற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க தயார் எனவும் இலங்கை இராணுவம் இதன்போது தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1430374- ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்
ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பான அறிவித்தல்! ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வியட்நாமுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் மே 04 முதல் மே 06 வரை வியட்நாம் சோசலிச குடியரசிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த பிரமுகர்களையும் சந்திப்பார். ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகவும் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துவார். இந்த அரசு பயணத்தின் போது இரு தரப்பினரும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வணிக சமூகத்துடனான சந்திப்புகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 55 ஆண்டுகளைக் குறிக்கும் நிலையில், வியட்நாம் சோசலிசக் குடியரசிற்கான பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1430326- மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள்
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1197259185437097 👈 யாழ்ப்பாணம் என்பது ஏழாலையில்தான் இருக்கின்றது. -தேசிய மக்களை சக்தியின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்.- ############# ############## ################ காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=605164445904256 👈 கூட்டமைப்பு 2021´ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் உருவாக்கப் பட்டது எனக் கூறும், யாழ்ப்பாண தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்.
நல்லை ஆதீனம் இறையடி குறித்து இறை பிரார்த்தனை செய்தி வெளியிட்டார் தருமை ஆதீன குரு முதல்வர் ! உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்காக வெளியிட்ட இறை பிரார்த்தனை செய்திக் குறிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாம் மாவிட்டபுரம் கும்பாபிஷேகம் தரிசிக்க சென்றபோது கூட சித்தாந்த மாநாட்டிற்கு அவருக்கு அழைப்பு விட்டோம் எனவும் இந்தியாவில் தங்கி மருத்துவம் பார்க்கலாம் எனவும் கேட்போது வருகிறேன் என்று கூறி மகிழ்ந்தவர் மாநாடு தொடக்கத்தில் முதல்நாள் பரிபூர்ணம் எய்தியமையால் தாங்முடியாது துயறுருகின்றோம் என்று அவர் இறை பிரார்த்தனை செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தருமை ஆதீனத்தில் முறையாக காஷாயம் தீட்சைகள் பெற்று ஈழத்தமிழர் வாழும் தேசந்தோறும் பலமாநாடு நிகழ்வுகளில் பங்கேற்று சமயம் பரப்பிய பெருமைக்குரியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். சைவம் காக்கும் தூண்சரிந்தது தக்கவர்கள் அம்மடத்தின்னின்று சமயத்தை காக்க செந்தமிழ் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம் – என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430344- மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!
எரியும் இஸ்ரேல், 39Km தூர இட இஸ்ரேல் மக்கள் அவதி! இஸ்ரேலின், ஜெருசேலம் - தெல் அவிவ் அதிவேக பாதையை அண்மித்த காட்டுப்பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் காட்டுத்தீ சடுதியாக பரவ ஆரம்பித்து, பல இடங்களுக்கும் மிக வேகமாக பரவியது, இதன் காரணமாக ஏறத்தாள 39 கிலோமீற்றர் தூர பாதையை அண்மித்த மக்கள் பெரும் அவதி அடைந்ததோடு, காட்டுத்தீயானது கட்டிடங்கள் மற்றும் மக்களின் இருப்பிடங்களுக்கும் பரவியமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் அரசாங்கமானது விஷேட ‘National Emergency’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, தீயை அணைக்கும் பணியில் பல அயல் நாடுகளின் உதவியோடு தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்!
42695 நாள் வாழ்ந்த உலகின் மிக வயதான கன்னியாஸ்திரி தாய் 116’வது வயதில் இயற்கை எய்தினார்! Inah Canabarro Lucas (இனா கனபர்ரோ லூகஸ்) பிரேஸிலை சேர்ந்த கன்னியாஸ்திரி ஆவார், இவர் 1908 ஆம் ஆண்டு ஜூன் 8’ம் திகதி பிறந்தவர். மகிழ்வாக வாழ்ந்து வந்த இவர் உலகின் அதிகூடிய வயதுடையவர் என்று அறியப்படுகிறார், இறக்கும்போது இவருடைய வயது 116 ஆண்டுகள் 326 நாட்கள் ஆகும், ஏப்ரல் 30 அன்று இவர் இயற்கை எய்தினார், மொத்தமாக 42,695 நாட்கள் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
பலவருட பலகோடி தங்கம் இன்று வெளியில் கொண்டு வரப்பட்டது! Vaanam.lk- பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
ஒரு பிரச்சினை கொதி நிலையில் இருந்தால்... அதனை ஆறப் போட, விசாரணைக் கமிஷன் ஒன்றை போடுவது அரசாங்கத்தின் வழமை. இதுவரை... ஏதாவது ஒரு கமிஷன் விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டதாக வரலாறே இல்லை. மக்களை ஏமாற்றுவதற்கென்றே இந்த கமிஷன் விசாரணைகள்.- யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!
பாவம் ஜேர்மனி. உக்ரேனுக்கு... ஆயுதம், பணம், லட்சக் கணக்கான அகதிகள் என்று எடுத்து.. உக்ரேனின் கனிம வளத்தை ஆட்டையை போடுவோம் என்று காத்திருக்க, டிரம்பு... செலென்ஸ்கியை வெருட்டி கையெழுத்து வாங்கிப் போட்டார். அணில் ஏற விட்ட, 🐕🦺 யின் நிலைமை. 🤣 - கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்! — கருணாகரன் —
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.