Everything posted by தமிழ் சிறி
-
ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்!
ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய தலைமை ஆய்வாளர் அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்திற்கு தேசிய பொலிஸ் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தலைமை ஆய்வாளர் ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 15 ஆண்டுகள் அவரது பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். Athavan Newsரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடம...முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியா...
-
மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை!
மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை! ஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க சர்வதேச உதவியை நாடு கோரியுள்ளது. அனர்த்தத்தினால் இதுவரை குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இஸ்ரேலில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவு தினத்தன்று இந்த மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஜெருசலேம் முதல் டெல் அவிவ் வரையிலான பிரதான நெடுஞ்சாலையில் தீ எரிவதையும், சுற்றியுள்ள மலை உச்சிகளில் அடர்ந்த புகை பரவுவதையும் சமூக ஊடகங்களில் காணொளிகள் மற்றும் படங்கள் காட்டுகின்றன. பலர் தங்கள் வாகனங்களை கைவிட்டு தீப்பரவலிலிருந்து தப்பி ஓடுவதைக் காண முடிந்தது. இஸ்ரேலிய ஊடகங்களின்படி, 160 க்கும் மேற்பட்ட மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. பல விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்க முயற்சி செய்கின்றன. மேலும் நாட்டின் இராணுவமும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன என்று அது கூறியது. இருப்பினும், வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று தீயை கட்டுப்படுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1430229
-
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!
சிரிப்பு என்னவென்றால்.... இந்தியா, பாகிஸ்தான் இருவருக்குமே ஆயுதத்தை விற்றுக் கொண்டு, சமாதான பேச்சு வார்த்தையிலும் அமெரிக்கா ஈடுபடும். இந்தியாவும், பாகிஸ்தானும் எமக்குச் செய்த அநியாயத்துக்கு... இவங்கள் சண்டை பிடித்தே அழிய வேண்டும்.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத, குரங்கு சேட்டை இது. இவர்களின் இந்த விளையாட்டை மற்ற நாட்டவர்கள் பார்த்து பைத்தியம் முற்றி விட்டது என்று சிரிக்கின்றார்கள்.
-
யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு!
யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு! யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும், திக்கம் பகுதியில் 5 ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1430215
-
பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!
பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை! ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதுடன், மோடியின் தலைமையின் மீதும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மும்பையில் இன்று (01) ஆரம்பமாகியுள்ள வேவ்ஸ் எனப்படும் 2025 உலக ஆடியோ விஷூவல் பொழுது போக்கு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது 74 வயதான நடிகர் ரஜினிகாந்த், மோடியை ஒரு ‘போராளி’ என்று அழைத்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையை ‘கருணையுடன்’ கையாள பிரதமரை நம்புவதாகவும் பகிர்ந்து கொண்டார். “நமஸ்கார், மரியாதைக்குரிய பிரதமரே, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் அவர்களே. பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற நிகழ்வுக்குப் பின்னர், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசாங்கம் இந்த நிகழ்வை ஒத்திவைக்கும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன், ஏனென்றால் எனது பிரதமர் – நரேந்திர மோடி ஜி (sic) மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.” “அவர் ஒரு போராளி. அவர் எந்த சவாலையும் சந்திப்பார், கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் சொல்லி வருவதை நிரூபிப்பார், இந்த சூழ்நிலையையும் அவர் அழகாகவும் துணிச்சலுடனும் எதிர்கொள்வார், காஷ்மீரில் அமைதியையும் நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார்” என்று அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2025 வேவ்ஸ் உச்சி மாநாடு என்பது மும்பையில் உள்ள JIO மாநாட்டு மையத்தில் நடைபெறும் நான்கு நாள் நிகழ்வாகும். இந்த நிகழ்வு இந்தியாவை கலை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உலகளாவிய முன்னணியில் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய திரைப்பட சகோதரத்துவத்தைச் சேர்ந்த முக்கியப் பெயர்களுடன் தொடர்ச்சியான அறிவார்ந்த உரையாடல்களைக் கொண்டிருக்கும். மேலும் நாட்டின் நாட்டுப்புற நடனம் மற்றும் இசையை அதன் மென்மையான சக்தியாக எடுத்துக்காட்டும். இந்த நிகழ்வில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அக்ஷய் குமார், கரண் ஜோஹர், ஹேமா மாலினி, மிதுன் சக்ரவர்த்தி, இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசாரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். https://athavannews.com/2025/1430224
-
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக்க காத்திருக்கும் ஆளுங்கட்சி!- எம்.ஏ.சுமந்திரன்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரத்தில்... சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும்... திரண்ட மக்கள் வெள்ளம். யாழ்.தேர்தல் வரலாற்றில்... இப்படி ஒரு அவமானம். ஆள் இல்லாத கடையில்... யாருக்கு ரீ ஆத்துகின்றார்கள். சுமந்திரன் செய்த முள்ளமாரி வேலைகளுக்கு கிடைத்த பரிசு.
-
ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி
யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் காட்டியதில் இருந்து இன்று வரை... யாழ். மக்களுக்காக ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. யாழ். மண்ணில் இந்தியா ஒரு மண்டபத்தை கட்டி, தனது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளது. யாழ். வைத்தியாசாலையில் இந்திய அமைதிப் படையால்... கொல்லப் பட்ட நோயாளர்களுக்கு, பொதுமக்களுக்கும், வைத்தியர்களுக்கும், தாதியர்களுக்கும் இவர்களால்... ஒரு அஞ்சலி நிகழ்வு வைக்க முடியுமா? அந்த மண்ணில் நிகழ்ந்த கொடுமைக்கு இல்லாத அஞ்சலி... காஷ்மீரில் நடந்த கொலைக்கு இங்கு ஏன் அஞ்சலி? இந்த நிகழ்வுக்கு போனதுகளுக்கு... காலில் இருக்கிறதை கழட்டி அடிக்க வேண்டும்.
-
சிறீதரன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பிய தமிழரசுக் கட்சி!
சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும்... பொன்னாடை போர்த்தும் நிகழ்வில், 10 பேரைக் கூட சேர்க்க வக்கு இல்லை. அதற்குள்... இருக்கிறவனுக்கு விளக்கம் கோரி கலைக்கிற யோசனை வேறை கிடக்குது. வெட்கம் கெட்டதுகளுக்கு திருந்துகின்ற புத்தியே இல்லை. உங்களால் தான்... அர்ச்சுனாவுக்கும், அனுராவுக்கும் பின்னால் மக்கள் போகின்றார்கள்.
-
இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
இஞ்சை பார்ரா.... தேர்தல் நேரம் வழக்கமாக விடும் சவுண்டுகளை விடுகிறார்கள். தேர்தல் முடிந்த பின்... ஆட்களை காணக் கிடைக்காது.
-
பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது – கருணா ஆதங்கம்
கருணாவுக்கு... பிள்ளையான் இல்லாமல் இருப்பது , தனிமை... வாட்டி வதைக்குது போலுள்ளது. கவலைப்படாதீர்கள்... விரைவில் பிள்ளையான் தான் இருக்கும் இடத்திற்கே உங்களை கூப்பிட்டு விடுவார். அதுவரை... பொறுமை காக்கவும்.
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
நீங்கள் குழப்படி செய்யாமல் இருந்தால்... அவர்கள் ஏன், தினமும் அர்ச்சனை செய்கிறார்கள். அர்ச்சனையுடன் நிறுத்தி விடுவார்களா, அல்லது சாத்துப் படி பூசையும் நடக்குமா? 😃 பிழை உங்களில் போலுள்ளது. 😂 அடிக்கடி ஒன்றுக்குப் போகின்றவர்களை, கொடுத்து வைத்தவர்கள் என்று டாக்டர்கள் சொல்வார்கள். 🤣
-
மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்!
- கருத்து படங்கள்
- மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்!
மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்! 2025 மே 1 இன்று இலங்கை, சர்வதேச தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுடன் நினைவுகூருகிறது. குறிப்பாக கொழும்பில் குறைந்தது 15 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர். முக்கிய மே தின பேரணிகள் இங்கே: கொழும்பு தேசிய மக்கள் சக்தி (NPP): தேசிய மக்கள் சக்தி அதன் முக்கிய பேரணியை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துகிறது. இந்த இடத்தில் அரசியல் கூட்டங்கள் மீதான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் காலி முகத்திடலுக்கு திரும்புவதை இந்த நிகழ்வு குறிக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP): SLPP யின் பேரணி நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP): கொழும்பு 10, டார்லி வீதியில் உள்ள அதன் தலைமையகத்தில் முன்னாள் தலைவர் டி.பி. இளங்கரத்னவுக்கு மலர் அஞ்சலி செலுத்துதல் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு நினைவு நிகழ்வை நடத்துகிறது. முன்னணி சோசலிசக் கட்சி: அவர்களின் பேரணி கிருலப்பனை லலித் அதுலத்முதலி மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிற குறிப்பிடத்தக்க இடங்கள்: ஹைட் பார்க், விஹாரமஹாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கம், கொழும்பு நகராட்சி மன்ற வளாகம், ஆர்மர் வீதி, ஈ.ஏ. குணசிங்க சிலைக்கு அருகில் உள்ள வாழைத்தோட்டம், பி.டி. சிறிசேனா மைதானம், தபால் தலைமை அலுவலகம், கொஸ்கசந்தி மற்றும் பொது நூலகத்தில் கூடுதல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. கொழும்புக்கு வெளியே ஐக்கிய மக்கள் சக்தி (SJB): எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாகலை நகரில் பிற்பகல் 2:00 மணிக்கு SJB தனது பேரணியை நடத்துகிறது. இதில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வஜன பலய (மக்கள் சக்தி கட்சி): இந்தக் கட்சி, வாரக்காபொல வாராந்திர சந்தை மைதானத்தில் காலை 10:30 மணிக்கு “தொழிலாளர்கள் தொழில்முனைவோரை நோக்கி” என்ற தலைப்பில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்கிறது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமை தாங்குகிறார். இலங்கை தமிழரசுக் கட்சி : ITAK வின்பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. பேரணிகள் காரணமாக இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பணியில் உள்ள போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1430151- யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!
உக்ரேனுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா! பல மாதங்களாக நடைபெற்ற பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் உக்ரேனும், அமெரிக்காவும் புதன்கிழமை (ஏப்ரல் 30) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட உக்ரேனிய கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரஷ்யாவுடனான போரிலிருந்து உக்ரேனின் பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்காக ஒரு மறுகட்டமைப்பு முதலீட்டு நிதியை நிறுவ இரு நாடுகளும் இந்த ஒப்பந்தம் மூலமாக ஒப்புக் கொண்டுள்ளன. உக்ரேனில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர் என்பதை இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்துவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். அதேநேரம், அமெரிக்க இராணுவ உதவியைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் அவசியமானதாகக் கருதப்படுகிறது என்று உக்ரேன் கூறியுள்ளது. எனினும், இந்த ஒப்பந்தம் குறித்து ரஷ்யா இன்னும் பதிலளிக்கவில்லை. உக்ரேனில் கிராஃபைட், டைட்டானியம் மற்றும் லித்தியம் போன்ற முக்கியமான கனிமங்கள் அதிக அளவில் இருப்பதாக நம்பப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இராணுவ பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவற்றின் பயன்பாடு காரணமாக அவை மிகவும் பெறுமதி மிக்கதாக கருதப்படுகின்றன. அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது. https://athavannews.com/2025/1430182- பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
என்ன இழவோ… தெரியவில்லை, சாமம் 12 மணிக்கு முழிப்பு வந்திடுது. இனி… திரும்ப நித்திரை வர மூன்று மணி ஆகும். சரி… சரி… நீங்கள் இன்னும் நித்திரை கொள்ளவில்லையா, அல்லது… ஒண்டுக்கு இருக்க எழும்பினீங்களா. 🤣- பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
பொய் சொன்னால்… சாமி கண்ணை குத்தும். 😂 இலங்கை முஸ்லீம்களின் யோக்கியதை, எனக்கு வடிவாய் தெரியும். நீங்கள் அவர்களுக்கு, வெள்ளை அடிக்க வேண்டாம். 🤣- கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
நீங்கள் றீல் விடுகிறீர்கள். 🤣 கனடா ஹரி ஆனந்த சங்கரி, நம்ம கிளிநொச்சி உடும்பு ஆனந்தசங்கரியின் மகன் என்று பலரும் சொல்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை பற்றி தெரிந்தவர்கள் கூறினால் நல்லது. சோழ அரச வம்ச வாரிசு என்பதெல்லாம்... உடான்ஸ் சாமியாரின் உருட்டு. 😂- இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக்க காத்திருக்கும் ஆளுங்கட்சி!- எம்.ஏ.சுமந்திரன்
தனது இரண்டு பிள்ளைகளையும் சிங்களவருக்கு திருமணம் முடித்து கொடுத்தவர்... சிங்களவர்களுடன் வாழ்வது பெருமை என்று சொன்ன சுமந்திரன், இப்போ... தேர்தல் நேரம், இனப்பரம்பல் பற்றி கதைத்து, மக்களை முட்டாள் ஆக்கப் பார்க்கின்றாரா? உங்களது அரசியல் சித்து விளையாட்டு எல்லாம்... அரதப் பழசு. இப்போ... மக்கள் உசாராகி விட்டார்கள், இனியும் மக்களின் காதில் பூ சுற்றலாம் என நினைத்தால்.... உங்களைப் போன்ற முட்டாள்கள் வேறு எவரும் இருக்க முடியாது.- கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ஹரி ஆனந்தசங்கரி நாட்டுப் பற்று உள்ளவர். அத்துடன் திறமைசாலி. அவர் மீண்டும் அமைச்சராக வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.- இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
👉 https://www.facebook.com/reel/536881486084084 👈 👆 கண் முழியால்... பாகிஸ்தான்காரனுக்கு பயம் காட்டும் இந்திய இராணுவம். 😂- இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
நான்... பியர் குடிப்பதை நிறுத்தி, நான்கு வருடமாகி விட்டது ஈழப்பிரியன். இப்ப... ஒன்லி மில்க் தான் குடிப்பது. 😂- செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்! யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்று நடைபெற்றது. கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் பிரதிநிதிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், பொலிஸார், என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்ட தரப்புகள் கலந்துகொண்டனர். புதைகுழியை அகழ்வதற்கான நிதி மத்திய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி ஆய்வுப் பணிகளை முன்னெடுத்த, மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவ , இதுதொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்குத் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். இந்நிலையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பகட்ட கள ஆய்வுப் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளார். சிந்துப்பாத்தி மயானத்தில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களில், இரண்டு விலங்குகளின் என்புகள் எனவும் ஏனைய அனைத்தும் மனித என்புத் தொகுதிகளுடன் தொடர்புடையவை என்ற விடயமும் ஏற்கனவே நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430074- சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் !
சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் ! திடீரென உயிரிழக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லை என்றால் குறித்த சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது சுகாதார அமைச்சின் இந்தத் தீர்மானத்துக்கு எதிரான ஆட்சேபனை எதுவும் இருக்குமாயின் அந்தக் குழுவில் சமர்ப்பிக்க முடியுமென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் ”தாய், சேய் சுகாதாரம் தொடர்பில் ஆசிய நாடுகளில் உயர்தரத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு 1,800 சிறுவர்கள் அகால மரணமடைந்துள்ளனர் எனவும், அவர்களில் ஐந்து வயதுக்கு குறைவாக 3,300 சிறுவர்கள் காணப்படுகின்றனர் எனவும், இது மிகவும் அபாயகரமான நிலைமையாகும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், உலக நாடுகள் மத்தியிலும் இதுதொடர்பில் விதிமுறைகள் இருக்கின்றன எனவும், அதற்கமைய, உயிரிழப்புக்கான காரணத்தை அறியாத, ஐந்து வயதுக்கு குறைவான சிறுவர்களின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது சுகாதார அமைச்சின் பரிந்துரையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் காரணத்தை கண்டறியாமல் அந்த உயிரிழப்பை கைவிட்டால் அவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாய்மாரின் உயிரிழப்பு தொடர்பில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அந்த உயிரிழப்புக்கான காரணங்களை கண்டறிவதனூடாகவே தாய்மாரின் உயிரிழப்புகளை தாம் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1430077 - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.