Everything posted by தமிழ் சிறி
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
@Sasi_varnam எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம்.
-
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
👉 https://www.facebook.com/reel/668494692457194 👈 👆 பில்டிங் ஸ்ராங்கு... பேஸ்மெண்டு வீக்கு. 😂 🤣
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை
👉 https://www.facebook.com/reel/668494692457194 👈 👆 பில்டிங் ஸ்ராங்கு... பேஸ்மெண்டு வீக்கு. 😂 🤣
-
சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கு மட்டும்தான் என்று நினைத்தேன். 😂🤣- காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
ஒரு நிமிட காணொளி: 👉 https://www.facebook.com/100011887622942/videos/pcb.1919938458412390/726041803086513 👈 👆 சுமந்திரனை கிழித்து தொங்க விட்ட... கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன்.- அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டமைக்கு, அவுஸ்திரேயாவில் வாழும் சிங்களவருக்கு ஒரே வயித்தெரிச்ச்சலாக இருந்திருக்குமே.... 😂 எரியட்டும் , எரியட்டும்... நல்லாய் எரியட்டும். 🤣- கருத்து படங்கள்
- பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
- யாருக்கு வாக்களிப்பது? -நிலாந்தன்.-
யாருக்கு வாக்களிப்பது? -நிலாந்தன்.- தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதும் தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் தோற்கடிப்பதற்கு. “இளங்குமரன் என்ன கதைக்கிறார் என்பது மற்றவர்களுக்கும் விளங்குவதில்லை அவருக்கு விளங்குவதில்லை” என்று சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.அது உண்மை. அவருக்கு தமிழும் சரியாக வருவதில்லை தகவல்களும் சரியாகத் தெரிவதில்லை. கதைக்கின்ற பாணியும் ஒரு தினுசானது.அடிக்கடி ஊடகங்களில் அவர் மீம்ஸ் ஆக்கப்படுகிறார். அவருடைய ஆகப்பிந்திய மீம்ஸ் “யாழ்ப்பாணம் தெல்லிப்பளைக்குள் இருக்கிறது” என்பதாகும். மற்றவர் ரஜீவன். இவர் இளங்குமரன் அளவுக்கு வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வதில்லை. அவர் முன்பு சுமந்திரனுக்கு நெருக்கமாக இருந்தவர். ஜனாதிபதித் தேர்தலையொட்டி அனுரவின் பக்கம் தாவினார்.சில கிழமைகளுக்கு முன் நீர்வேலியில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து “நீங்கள் தேசிய மக்கள் சக்திக்குத்தானே வாக்களிப்பீர்கள்? கைகளை உயர்த்திக் கூறுங்கள்” என்று அவர் கேட்டார். பெரும்பாலானவர்கள் கையை உயர்த்தவில்லை.அவர் கேட்டது கொமெடியாகியது. மூன்றாவது உறுப்பினர் மருத்துவர்.அவர் ஒப்பீட்டளவில் நிதானம். ஆனால் கதைத்துப் பிரச்சினைக்குள் மாட்டுவதை விடவும் கதைக்காமல் இருப்பதே உத்தமம் என்று அவர் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. தையிட்டி விகாரை தொடர்பாக அப்பகுதியில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர் தமது இயலாமையை வெளிப்படுத்தும் விதத்திலும், தாங்கள் சொல்லி அரசாங்கம் கேட்காது என்ற பொருள்படவும் தெரிவித்த கருத்துக்களுக்குப் பின் அதிகம் வாய் திறப்பதில்லை.அவ்வாறு கூறியதற்காக அவர் எச்சரிக்கப்பட்டரோ தெரியவில்லை.மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் வாயை இறுகப் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவர். இவர்களைத்தவிர அமைச்சர் சந்திரசேகரனும் அடிக்கடி மீம்ஸ் ஆக்கப்படுகிறார்.அவருடைய உச்சரிப்பு,அவருடைய முகபாவம் எல்லாவற்றையும் வைத்து அவரை மீம்ஸ் ஆக்கி வருகிறார்கள். சாணக்கியன் அவரை மூக்கால் கதைப்பவர் என்று கூறினார். சுகாஷ் அவர் குறிக்கட்டுவான் துறைமுகத்தை ஜெற்றி என்று அழைப்பதற்கு பதிலாக ஜட்டி என்று அழைத்ததை வைத்து விமர்சித்தார்.ஜெற்றியை ஜட்டி என்று கூறியது தவறு.ஆனால் சந்திரசேகரன் தமிழை உச்சரிக்கும் விதத்தைக் கேலி செய்வது என்பது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தமிழர்களின் உச்சரிப்புக்களைக் கேலி செய்வதாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய தரப்புகள் பொறுப்பாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.சந்திரசேகரனின் அரசியலை விமர்சிக்கலாம். என்.பி.பியின் அமைச்சர் என்ற அடிப்படையில் அவரை விமர்சிக்கலாம். ஆனால் அவருடைய உச்சரிப்பை விமர்சிக்கத் தேவையில்லை. இவ்வாறாக தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்களே தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றிவிட்டார்கள். மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியானது தமிழ் மக்களின் பயங்களை நீக்கத் தவறியுள்ளது. தமிழ் மக்களின் பயங்களைப் போக்கும் விடயத்தில் என்பிபி பெரிய மாற்றம் எதையும் காட்டவில்லை தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பான விடயம். தேசிய மக்கள் சக்தியை அல்லது ஜேவிபியை விமர்சிப்பதற்கு இது அதிகம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரத்தில் ஒன்றாக நிற்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது என்றுதான் பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும் எழுதி வருகிறார்கள்; பேசி வருகிறார்கள். ஏதாவது ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன்மூலம் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கட்சிகள் வேண்டுகோள் விடுகின்றன. மணிவண்ணனின் அணியைச் சேர்ந்த ஒருவர் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால் தனது வாக்குகளை வீட்டுக்கு வழங்குமாறு கூறியிருக்கிறார்.நல்லூர் பிரதேச சபையில் ஐங்கரநேசன் தன்னுடைய வாக்காளர்களை வீட்டுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்.அர்ஜுனா தான் போட்டியிடாத இடங்களில் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார். ஆனால் இங்கே உள்ள பிரதான கேள்வி எது என்றால், தமிழ் மக்கள் ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கும் அர்ச்சுனாவுக்கும் வாக்களித்தார்கள்? என்பதுதான்.மிக எளிமையான பதில், தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட ஐக்கியமின்மைதான். அதனால் தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தைப் பரிசோதித்தார்கள். அதேசமயம் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூறுவதுபோல தலைக் கணக்கை எண்ணினால் அது தேசிய மக்கள் சக்திக்கு வெற்றிதான். ஆனால் வாக்களிப்புக் கோலத்தைத் தொகுத்துப் பார்த்தால் அது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்குத் தோல்வியல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் 80,000 சொச்சம். வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்டு சுயேச்சைகளுக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அதாவது தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த வாக்குகளை விடவும் அதிக வாக்குகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு கிடைத்திருக்கின்றன. எனவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து விலகி விட்டார்கள் என்பது பொருத்தமான ஒரு கருத்து அல்ல. தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திக்கிறார்கள் என்பது அந்த வாக்களிப்பில் தெரிகிறது. ஆனால் கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை. அப்பொழுது மட்டுமல்ல, இப்பொழுதும் அதுதான் நிலைமை. தமிழ் மக்கள் கட்சிகளாகப் பிரிந்துதான் நிற்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கட்சிகள் நான்கு தரப்புகளாக நிற்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரே குரலில் பிரச்சாரம் செய்யும் இந்தக் கட்சிகள்,தங்களுக்கு இடையே மோதிக் கொள்கின்றன. ஒருவர் மற்றவரைத் துரோகியாக்குவது; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துவது;கூட்டத்தில் கைதட்டுகளை பெறுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவது…. இப்படித்தான் இருக்கிறது தேர்தல் போட்டிக் களம். இதே நிலைமைதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் காணப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்விகளில் இருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓரளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறது. அது ஒரு கூட்டை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அந்தக் கூட்டு ஏனைய மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் அர்ச்சுனாக்களுக்கும் எதிராக, தனிப்பெரும் சக்தியாக எழுச்சி பெறுமா? என்று பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. முன்னணிக்கு முன்பை விட ஆதரவு கூடியிருக்கிறது. ஆனால் அது தமிழரசுக் கட்சியின் இடத்தைப் பிடிப்பதற்கு இன்னும் வளர வேண்டும். தமிழரசுக் கட்சி ஏனைய எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளை விடவும் வடக்கு கிழக்கு தழுவிய கிராமமட்ட அடிமட்ட வலைப் பின்னலைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி. அதுதான் அவர்களுடைய பலம். குறிப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர்களுக்கு மிகவும் அனுகூலமான அம்சம் அது. சுமந்திரன் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின் கட்சியின் கீழ்மட்ட வலையமைப்பை எப்படிக் கட்டியெழுப்புவது என்ற விடயத்தில் திட்டமிட்டு உழைக்கின்றார்.அவர் உள்ளூராட்சி சபையில் தமிழரசுக் கட்சியை தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார் என்றுதான் ஒரு தோற்றம் கிடைக்கிறது.ஆனால் அந்த உழைப்புக்குப் பின்னால் வேறு ஒரு மறைமுக இலக்குகளும் உண்டு.அடுத்த கட்சித் தலைமைக்கான தேர்தலின்போது பொதுச்சபையில் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பாதுகாப்பது முதலாவது இலக்கு.உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கிராம மட்டங்களில் இறங்கி வேலை செய்யும் பொழுது கட்சியின் கீழ்மட்ட வலையமைப்பு பெருமளவுக்கு சுமந்திரனுக்கு விசுவாசமானதாக மாற்றப்படுகிறது. அது சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய கட்சித் தலைமைக்கான தேர்தல்களில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தலாம். இது முதலாவது இலக்கு. இரண்டாவது இலக்கு, அவ்வாறு வெற்றி பெறுவதன் மூலம் சிறீதரணை ஓரங்கட்டலாம். சிறீதரனை கிளிநொச்சிக்குள்ளேயே சுருக்கி விடலாம். ஒரு கட்டத்தில் முடியுமானால் அவரைக் கட்சியில் இருந்தும் நீக்கலாம். எனவே உள்ளூராட்சி சபைகளுக்காக சுமந்திரன் உழைப்பது என்பது தனிய கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமல்ல.சிறீதரனை தோற்கடிக்க வேண்டும், அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடும்தான். இப்படிப்பட்ட உள்நோக்கங்களோடு மக்களைத் திரட்டும் அரசியல்வாதிகள் தேசத்தைத் திரட்ட உதவ மாட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள்தான் தேசத்தை உடைத்தன. இப்பொழுதும் அதே நிலைமைதான். இது தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமானது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களும் அமைச்சரும் தமிழ் மக்கள் மத்தியில் கடுமையாக வேலை செய்கிறார்கள். ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் தங்களுடைய மதிப்பை உயர்த்துவதற்குத் தவறியிருக்கிறார்கள்.இது தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றி வாய்ப்புகளை பாதிக்கக்கூடியது. இந்த மாற்றம் தமிழ் தேசியக் கட்சிகளின் உழைப்பினால் கிடைத்த ஒன்று அல்ல. மாறாக தேசிய மக்கள் சக்தியின் இயலாமையின் விளைவு. எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இருந்த “புதியது; மாற்றத்தைக் காட்டுவது” என்ற கவர்ச்சி இப்பொழுது குறைந்துவிட்டது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களே அந்தக் கவர்ச்சியை குறைத்து விட்டார்கள். இது முதலாவது விடயம். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கிடைத்த பின்னடைவு ஐக்கியமின்மையால் கிடைத்தது. அது அப்படியே இப்பொழுதும் உண்டு. முன்னணி ஒரு மாற்றத்தைக் காட்டியிருக்கிறது அவ்வளவுதான்.இது இரண்டாவது விடயம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு வாக்களிப்புக் கோலத்தில் பிரம்மாண்டமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை.இது மூன்றாவது விடயம். சங்குக் கூட்டணி தெட்டம் தெட்டமாக வெற்றிகளைப் பெறக்கூடும். சந்திரகுமாரை இணைத்துக் கொண்டதால் கிளிநொச்சியில் அவர்களுக்கு ஒரு புதிய வாக்கு பரப்பு கிடைத்திருக்கிறது. இது நாலாவது. இந்த நான்கு தோற்றப்பாடுகளையும் பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்தால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் ஒரு பகுதி தேசிய மக்கள் சக்திக்குப் பாதகமானது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு தமிழ் தேசியத் தரப்புக்குச் சாதகமானது. ஆனால் முழுமையான தமிழ்த் தேசிய ஐக்கியம் இன்னமும் ஏற்படவில்லை. அந்த ஐக்கியத்துக்குள் தமிழரசுக் கட்சி வந்தால் தான் அது பிரமாண்டமானதாக மாறும். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வென்றெடுக்கும் கூட்டு அரங்கில் இல்லை. அதே சமயம் என்பிபி அதன் கவர்ச்சியை இழந்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் என்பிபிக்கு வாக்களித்த காரணம் ஒப்பீட்டளவில் அப்படியே இருக்கிறது. ஆனால் அந்த வெற்றிக்கு என்பிபி தகுதி உடையது அல்ல என்பதனை வடக்கு கிழக்கில் உள்ள அதன் பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் விட்ட அதே தவறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் விடக்கூடாது என்று தமிழ்மக்கள் சிந்திப்பார்களாக இருந்தால் தாங்கள் ஒரு தேசம், ஒரு தேசிய இனம் என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டுவார்களா? https://athavannews.com/2025/1430452- பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
உயிரிழந்த பல்கலைக் கழக மாணவனுக்காகக் களமிறங்கிய சட்டத்தரணிகள்! சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக இன்று (03) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன்போது உயிரிழந்த மாணவனுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த 29 ஆம் திகதி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சு நேற்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும், 16 மாணவர்களிடம் சமனலவெவ பொலிஸார் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். அந்த மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான ரச்சிக பலிஹவடன மற்றும் கல்ஹார விஜேசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430417- உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவு!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவு! உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற இறுதி அரசியல் பிரச்சாரக் கூட்டங்களின் காணொளி காட்சிகள் மற்றும் விபரங்களை நாளை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரச்சாரம் செய்ய முடியும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிருவாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்துவதாகவும் இறுதி பிரச்சாரக் கூட்டங்களின் விவரங்களை வெளியிடும்போது அனைத்து கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் மற்றும் செய்தித்தாள்களில் முறையே ஒளிபரப்பு நேரம் மற்றும் இடம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம், செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை வழங்குவதிலோ அல்லது வேறு எந்த வகையிலும் கட்சிகள் / குழுக்கள் / வேட்பாளர்களை ஊக்குவிப்பதன் மூலமோ அல்லது அவர்களை புண்படுத்தும் எந்தவொரு தோற்றத்தையும் காட்டுவதன் மூலமோ எந்தவொரு அரசியல் பிரச்சார செய்திகளும் செய்யப்படக்கூடாது எனவும் அறிவித்துள்ளது. இதேவேளை, உரிமம் பெற்ற தேர்தல் அலுவலகங்கள் அதாவது ஒவ்வொரு பிரிவுக்கும் தாபிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் தாபிக்கப்பட்ட ஊடக அலுவலகங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் இன்று முதல் 7ஆம் திகதிவரை இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஉள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் அனைத்தும்...உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பிற்கு நாற்ப...- முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு!
முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று தமிழீல விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து அப் பகுதியில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு துண்டு பிரசுரங்கள் பெற்றுக்கொண்ட மக்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேவேளை குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை வலைவீசி தேடு நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருவதுடன் இதுவரை அவர் எந்தவித தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வேட்பாளரின் இந்த செயற்பாட்டுக்கு ஏனைய கட்சிகளும் விசனம் வெளியிட்டுள்ளார். Athavan Newsமுல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங...முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்ப...- அதிவேக நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்தியா ஒத்திகை
பாகிஸ்தானுக்கு இருக்கு... ஆப்பு.- இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
தல வந்திட்டான்யா.- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி தேர்தல் மாதிரி வாக்குச் சீட்டு. - யாழ்.மாநகர சபை.- அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனீஸ் உடன் அஷ்வினி அம்பிகைபாகர். பிரிட்டன், கனடாவைத் தொடர்ந்து அவுஸ்ரேலியாவிலும் ஈழத்தமிழர் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.- முடிவுக்கு வரும் "ஸ்கைப்" !
முடிவுக்கு வரும் "ஸ்கைப்" ! மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் தனது செயலியான ஸ்கைப் -ஐ வரும் எதிர்வரும் 5ம் திகதி முதல் மூடப்போவதாக அறிவித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் ஸ்கைப்பிற்குப் பதிலாக பயனாளர்கள் மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஸ்கைப் பயனாளர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டே டீம்ஸ் செயலியில் இணைந்து கொள்ளலாம் என்றும் பழைய உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் போன்றவை அப்படியே இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரானா காலக்கட்டத்தில் ஜூம் செயலி, கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயனர்கள் பெரிதும் பயன்படுத்தியதால் ஸ்கைப் தளத்திற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430432- சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா!
சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா! சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஆரம்ப கால அனுமதியை வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டொலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா முன்னதாக அறிவித்திருந்தது. இதேவேளை, அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா போர் விமானத்தில் பயன்படுத்த இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430445- இலக்கிய உறுபொருள் - சுப.சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் அவர்களே…. உங்களது சிறு இலக்கிய உறு பொருள் நன்றாக உள்ளது. தொடர்ந்து பதியுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளோம். 👍🏽- காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மீன்பிடி மற்றும் கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்
ஆஸ்திரேலியாவில்... அஷ்வினி அம்பிகைபாகர், முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.