Everything posted by தமிழ் சிறி
-
சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் !
சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் ! திடீரென உயிரிழக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லை என்றால் குறித்த சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது சுகாதார அமைச்சின் இந்தத் தீர்மானத்துக்கு எதிரான ஆட்சேபனை எதுவும் இருக்குமாயின் அந்தக் குழுவில் சமர்ப்பிக்க முடியுமென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் ”தாய், சேய் சுகாதாரம் தொடர்பில் ஆசிய நாடுகளில் உயர்தரத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு 1,800 சிறுவர்கள் அகால மரணமடைந்துள்ளனர் எனவும், அவர்களில் ஐந்து வயதுக்கு குறைவாக 3,300 சிறுவர்கள் காணப்படுகின்றனர் எனவும், இது மிகவும் அபாயகரமான நிலைமையாகும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், உலக நாடுகள் மத்தியிலும் இதுதொடர்பில் விதிமுறைகள் இருக்கின்றன எனவும், அதற்கமைய, உயிரிழப்புக்கான காரணத்தை அறியாத, ஐந்து வயதுக்கு குறைவான சிறுவர்களின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது சுகாதார அமைச்சின் பரிந்துரையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் காரணத்தை கண்டறியாமல் அந்த உயிரிழப்பை கைவிட்டால் அவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாய்மாரின் உயிரிழப்பு தொடர்பில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அந்த உயிரிழப்புக்கான காரணங்களை கண்டறிவதனூடாகவே தாய்மாரின் உயிரிழப்புகளை தாம் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1430077
-
மட்டு. கரடியனாற்றில் 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது
சுகாதார பரிசோதகர், ஆறாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு... இருந்த நல்ல வேலையை இழந்து விட்டார்.
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
இலங்கை முஸ்லீம்கள் ஏன் இன்னும், இந்தியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. சிலவேளை.... வழக்கம்போல் வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்த பின் நடத்தலாம் என்று இருக்கின்றார்களோ.
-
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!
அமெரிக்கா.... இவர்களுக்கு இடையில் புகுந்து பேச்சு வார்த்தை நடத்தினால்... நிச்சயம் இரண்டு பேரும் சண்டை பிடிப்பாங்கள். 😂 🤣
-
கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
விரிவான தகவலுக்கு நன்றி நிழலி. இங்கும் பல நிறுவனங்கள் ஐ.ரி. சம்பந்தமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து பெருமளவிலான இந்தியர்களை வேலைக்கு எடுத்துள்ளது. அதிலும் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஈழத்தவர்களின் கோவில் பூசை நாட்களில்... நிறையப் பேர் வருவார்கள். அவர்களைப் பிடித்து சாமி தூக்க விட்டால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவில் பணிகளை செய்வார்கள். இந்தியாவில் தம்மை சாமிக்கு கிட்டவே விட மாட்டார்கள் என்று சொல்வார்கள். இங்கு அவர்களை சாமி தூக்க விடுவதால் அவர்களுக்கு நல்ல புளுகம். அவர்களுடன் வேலை செய்யும் மற்றைய வட இந்தியர்களையும் கூட்டி வருவதால்... கோயில் எப்போதும் களை கட்டியபடி இருக்கும். 🙂 இப்போது எம்மவர்களை விட... அவர்களின் வருகை அதிகமாக உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
-
கணவனை சுட்டுக் கொன்ற பாட்டி.
ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳 பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶 அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺 அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐 நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறுமினார்.😡 அதற்கு அங்கு போன பொலிஸார் சொன்னார்கள்......🤭 " நோ சேர்... இன்னும் இல்லை. கழுவிய தரை, இன்னும் காயவில்லை..!😁😄😂 Rj Prasath Santhulaki
-
கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை விட, கனடாவில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம். 😂 🤣
-
கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நிழலி. மூன்று இலங்கைத் தமிழர்களும், ஒரு தமிழக தமிழருமாக... நான்கு தமிழர்கள் கனடா பாராளுமன்றத்தை அலங்கரிப்பது.. மகிழ்ச்சியுடன் பெருமையாகவும் உள்ளது. இம்முறைதானா அதிக தமிழர்கள் தெரிவாகி உள்ளார்கள். அல்லது முன்பும் பலர் தெரிவு செய்யப்படு இருந்தார்களா.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
அவசரப் படாதீர்கள் சாத்தான். மா... புளிச்சுக் கொண்டு இருக்கின்றது. எப்படியும் இன்று இரவு சண்டை தொடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்களில் எதிர்வு கூறுகின்றார்கள். நீங்கள்... சண்டையை உன்னிப்பாக அவதானிக்க, சோளன் பொரி (பொப் கோர்ன்) வாங்கி வைத்து இருங்கள். 😂
-
கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
//ஜோனீட்டா நாதன் அவர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாக பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். // வென்றவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள், ஜோனீட்டா நாதன் தமிழகத் தமிழர்.
-
சிரிக்க மட்டும் வாங்க
புரிந்து விட்டது இவர்தான் அந்தப் பையன். மலரும் நினைவுகள். 😂
-
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை! இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்ததுடன் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை இரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது. அத்துடன் இருநாட்டு அரசுகளும் தங்கள் இராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன. இந்நிலையில் , இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெளியுறவுத்துறை மட்டுமின்றி, பல்வேறு அளவுகளிலும் இருநாட்டு அரசுகளிடம் பேச உள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1430010
-
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
இந்திய, பாகிஸ்தான் எல்லையில் நின்று சர்க்கஸ் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள். 😂 🤣
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
இந்தக் கூத்தையும் பாருங்கள். 😂
-
"பாகிஸ்தான் மட்டுமல்ல சீனாவுக்கே அழுத்தம் கொடுக்கலாம்" - விக்ராந்துக்கு துணையாக வருகிறது ரஃபேல்-எம்
இவர்கள் குழந்தைப் பிள்ளைகளுக்கு சர்க்கஸ் காட்டத்தான் லாயக்கு. 😂
-
கருத்து படங்கள்
- 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
- கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்!
கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்! கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்துத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவு நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் ஆகியோருக்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்கள், உத்தரவுகளை வழங்கியுள்ளது. கொழும்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். எனவே வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1429989- இலங்கைக்கான பிணை எடுப்புத் திட்டத்தை திருத்தத் தயார்: IMF
இலங்கைக்கான பிணை எடுப்புத் திட்டத்தை திருத்தத் தயார்: IMF ஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் விதிமுறைகளை திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று (29) முன்வந்தது. 2022 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள போராடி வரும் தெற்காசிய தீவு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் இறப்பர் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த மாதம் 44 சதவீத வரியை விதித்தது. அதிகரித்த இந்த கட்டணங்கள் வொஷிங்டனால் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கை அதிகாரிகள் அவற்றை நீக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை. இந்த நிலையில், ட்ரம்பின் வரிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தீவு நாட்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணித் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ செவ்வாயன்று (29) செய்தியாளர்களிடம் கூறினார். இந்த அபாயங்கள் ஏற்பட்டால், அந்த அதிர்ச்சிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். மேலும் தற்போதுள்ள IMF திட்டத்தின் வரையறைகளுக்குள் குறிப்பிட்ட கொள்கை பதில்களை உருவாக்குவதில் நாட்டிற்கு ஆதரவளிப்போம் – என்றும் அவர் உறுதியளித்தார். கொழும்பில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் வொஷிங்டன் விதிக்கும் அதிகரித்த வரிகளை மீண்டும் அமுல்படுத்தினால் நாட்டின் மீட்சி பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்கு சுமார் மூன்று வாரங்களுக்குப் பின்னர் IMF இன் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற மிக அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட நிதியளிக்க அந்நிய செலாவணி தீர்ந்து போன பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை IMF இடமிருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு பொதியை பெற்றது. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க வரி அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, இலங்கை அதன் முன்னோடியில்லாத நெருக்கடிக்குப் பின்னர் முதல் முழு ஆண்டு பொருளாதார விரிவாக்கத்தைப் பதிவு செய்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சியடைந்தது, இது முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 5.0 சதவீதமாகக் கொண்டு வந்தது, இது 2023 இல் 2.3 சதவீத சுருக்கத்துடன் காணப்பட்டது. இலங்கையின் மோசமான பொருளாதார செயல்திறன் 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதம் சுருங்கியது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல மாதங்களாக ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையானது வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது. இது இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தது. அவரை அடுத்து ஜனாதிபதியாக பெறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க வரிகளை இரட்டிப்பாக்கினார், மானியங்களைக் குறைத்தார், விலைகளை உயர்த்தினார் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஓரளவு மேம்படுத்தினார். எனினும், 2025 செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய நிர்வாகம், பிணை எடுப்புக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் மற்றும் வருவாயை உயர்த்துவதில் உறுதியாக இருப்பதாக IMF தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் பிணை எடுப்புத் திட்டத்தின் அடுத்த மீளாய்வு எதிர்வரும் ஜூன் மாதத்தில் IMF நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும் இவான் பாபஜெர்ஜியோ கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429980- கொழும்பு துறைமுகத்தில் உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை! உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA, செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வந்தடைந்துள்ளது, இது இலங்கையின் கடல்சார் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இலங்கை துறைமுக ஆணையத்தின் (SLPA) கூற்றுப்படி, குறித்த கப்பல் தற்போது இலங்கை துறைமுகத்திற்கு வந்த மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக அங்கீகரிக்கப்படலாம். MSC MARIELLA இன் வருகை, உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் சிலவற்றைக் கையாளும் கொழும்பு துறைமுகத்தின் திறனை உறுதிப்படுத்துகிறது என்றும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கிய மத்திய துறைமுகமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது என்றும் இலங்கை துறைமுக ஆணையம் குறிப்பிட்டது. 2023 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட MSC MARIELLA 399.9 மீட்டர் நீளமும் 61.3 மீட்டர் அகலமும் கொண்டது. தற்போது, முனையத்தில் மேம்பட்ட கப்பல்-கரை (STS) கேன்ட்ரி கிரேன்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவை திறமையான மற்றும் பாதுகாப்பான கொள்கலன் செயல்பாடுகளை செயல்படுத்துகின்றன என்று இலங்கை துறைமுக ஆணையம் குறிப்பிட்டது. இந்த சாதனை, நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை துறைமுக ஆணையத்தின் வலிமையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று துறைமுக அதிகாரசபை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1429957- 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை! அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் (Attaullah Tarar) இன்று (30) காலை கூறினார். ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்திய ஆயுதப்படைகளுக்கு “முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை” வழங்கிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது தொடர்பில் அட்டாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் பதவிட்ட ஒரு அறிக்கையில், எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு கடுமையான விளைவுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்தார். அத்துடன், பஹல்காம் சம்பவத்தை ஒரு தவறான சாக்காகப் பயன்படுத்தி, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் இந்த பதவில் சுட்டிக்காட்டினார். அதேநேரம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேதனையின் வலியை உண்மையிலேயே புரிந்துகொள்கிறது. உலகில் எங்கும் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் நாங்கள் எப்போதும் அதைக் கண்டித்து வருகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார். பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானிய சதிகள் இருப்பதாக இந்தியா கூறி வருகிறது. இதனால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இராஜதந்திர தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியதால், பஹல்காம் படுகொலையில் தொடர்புடைய ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் “ஆதரவாளர்களையும்” இந்தியா “அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும் என்று பிரதமர் மோடி ஏப்ரல் 24 அன்று உறுதியளித்தார். பதற்றங்களுக்கு நடுவே பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா குறைத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது, அட்டாரி-வாகா எல்லையை மூடியது, அனைத்து பாகிஸ்தான் இராணுவ இணைப்புகளையும் வெளியேற்றியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கைகளுடன் பதிலளித்து 1972 சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. https://athavannews.com/2025/1429986- "பாகிஸ்தான் மட்டுமல்ல சீனாவுக்கே அழுத்தம் கொடுக்கலாம்" - விக்ராந்துக்கு துணையாக வருகிறது ரஃபேல்-எம்
இவர்களுக்கு வாய் தான் பெரும் பிரச்சினை. 😂- கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்! நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி இறுதியில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் முழுநேர பிரதமராகக் கடமையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேவேளை குறித்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 5 இலங்கை தமிழர்கள் வேட்பாளராக களம் இறங்கியிருந்த நிலையில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழர்களான ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளமை இலங்கையர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Athavan Newsகனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர...நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்ச...- கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு!
கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு! கனடாவில் 3 நாட்களுக்கு முன்னர் மாயமான இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான மாணவி கடற்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த வன்ஷிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், இவர் கனடாவில் உள்ள ஒட்டாவா நகரில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இவர் மாயமாகியுள்ளளார் எனவும், வாடகைக்கு அறை ஒன்றை காணச் சென்ற வேளையில் அவர் மாயமாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது தொலைபேசியும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தீவிரமாக தேடி வருவதாக தூதரகமும் அறிவித்து இருந்திருந்த நிலையில் வன்ஷிகாவின் உடல் கல்லூரி அருகில் உள்ள கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உரிய துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், மாணவி எப்படி உயிரிழந்தார் கொல்லப்பட்டாரா, உடன் சென்றவர்கள் யார், தொலைபேசி எங்கே என்ற விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429944- மகன் வாங்கிய சீன வெடியை கடித்து பார்த்த பெண் பல் வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!
இந்தப் பெண் பல் வைத்தியர்... வாழ்க்கையில் சீன வெடியை பார்த்ததே இல்லையா? மோட்டு சிங்களத்தி. 🤪 😂 - 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.