Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை! பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார். கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்று (28) முன்னிலையாகப் போவதாக அறிவித்தார். முன்னர் ஒதுக்கப்பட்ட திகதியில் அவர் முன்னிலையாகப் போவதில்லை என்று அறிவித்தார். நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து ரணில் விக்கிரமசிங்க அளித்த சிறப்பு அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியை அரச வங்கியில் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ், அவர் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்துள்ளது. https://athavannews.com/2025/1429749
  2. கனடா கார் தாக்குதல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை! கனடாவின் வான்கூவர் நகரில் சனிக்கிழமை (26) நடந்த சந்தேகத்திற்குரிய கார் மோதிய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடும் வருடாந்திர லாபு லாபு விழாவில் நடந்த இந்த சம்பவத்தில் பல பொது மக்கள் காயமடைந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதான ஆண் சந்தேக நபர் கை-ஜி ஆடம் லோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்சயம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பல கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். என்ன நடந்தது? இந்த தாக்குதல் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 08:14 மணிக்கு (ஞாயிற்றுக்கிழமை GMT 03:14) லாபு லாபு தினத்தைக் குறிக்கும் நிகழ்வில் நடந்தது. இந்த நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27 அன்று கொண்டாடப்படுகிறது. நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக பொலிஸார் சம்பவத்தின் பின்னர் தெரிவித்தனர். வான்கூவரின் தெற்கில் உள்ள கிழக்கு 43 ஆவது அவென்யூ மற்றும் ஃப்ரேசரில் நடந்த தாக்குதலில் ஒரே ஒரு வாகனம் ஈடுபட்டதாக விழாவிற்கு வந்தவர்கள் தெரிவித்தனர். பின்னர், சம்பவத்தில் காயமடைந்த சில பாதசாரிகள் உணவு லொகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர். வாகனத்தின் ஓட்டுநரை அருகில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லாபு லாபு திருவிழா என்றால் என்ன? 1500 ஆம் ஆண்டுகளில் ஸ்பானிஷ் காலனித்துவத்தை எதிர்த்த ஒரு தேசிய வீரரான லாபு-லாபுவை நினைவுகூரும் வகையில், வான்கூவரில் நடைபெறும் லாபு லாபு விழாவும், பிலிப்பைன்ஸ் மற்றும் உலகெங்கிலும் இதே போன்ற விழாக்களும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. லாபுலாபு என்றும் அழைக்கப்படும் லாபு லாபு, பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு தீவான மக்டானின் பூர்வீகத் தலைவராக இருந்தார். 1521 ஆம் ஆண்டில், அவரும் அவரது ஆட்களும் ஃபெர்டினாண்ட் மாகெல்லன் தலைமையிலான ஸ்பானிஷ் படைகளையும் அவரது சில பூர்வீக கூட்டாளிகளையும் மக்டான் போரில் தோற்கடித்தனர். இதனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியின் ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு தாமதமானது. நவீன கால பிலிப்பைன்ஸில் அவர் ஒரு ஹீரோவாகக் கருதப்படுகிறார், மேலும் அவரது நினைவாக நாடு முழுவதும் நினைவுச்சின்னங்கள் பொதுவானவை. தேசிய பொலிஸ் சேவை போன்ற பல பிலிப்பைன்ஸ் அரசு அமைப்புகள் அவரது படத்தை தங்கள் முத்திரைகளில் பயன்படுத்துகின்றன. லாபு லாபு தினம் 2023 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர்ந்த குழுக்களில் ஒன்றாகும். பாதிக்கப்பட்டவர்கள் யார்? இதுவரை, தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் அடையாளம் குறித்து மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற ஒரு சுருக்கமான செய்தியாளர் சந்திப்பில், வான்கூவர் காவல்துறைத் தலைவர் ஸ்டீவ் ராய், பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடங்குவர் என்று கூறினார். அவர்களின் 5 வயது முதல் 65 வயது வரை இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். இந்தத் தாக்குதல் வான்கூவரின் நெருக்கமான பிலிப்பைன்ஸ் சமூகத்தை ஆழமாகப் பாதித்துள்ளது. சந்தேக நபர் யார்? சந்தேக நபரை கை-ஜி ஆடம் லோ (30) என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் அவர் மீது எட்டு இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். “குற்றச்சாட்டு மதிப்பீடு நடந்து வருகிறது, மேலும் குற்றச்சாட்டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன,” என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். புலனாய்வாளர்கள் தாக்குதலின் எந்த நோக்கத்தையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், “இந்த வழக்கில் உள்ள சான்றுகள் இது ஒரு பயங்கரவாதச் செயல் என்று நம்புவதற்கு எங்களை வழிநடத்தவில்லை” என்று பொலிஸார் நம்புவதாக ராய் கூறினார். சந்தேக நபருக்கு “மனநலம் தொடர்பான காவல்துறை மற்றும் சுகாதார நிபுணர்களுடனான குறிப்பிடத்தக்க தொடர்புகளும்” இருப்பதாக அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1429717
  3. ரஷ்யாவுக்காகப் போரிட வீரர்கள் அனுப்பியதை ஒப்புக் கொண்ட வடகொரியா! உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி கிம் ஜாங் உன் பிறப்பித்த உத்தரவின்படி, குர்ஸ்க் எல்லைப் பகுதியை ரஷ்யப் படைகள் “முழுமையாக விடுவிக்க” தங்கள் வீரர்கள் உதவியதாக பியோங்யாங்கின் இராணுவம் கூறியது. வட கொரிய வீரர்களின் “வீரத்தை” ரஷ்ய தலைமைத் தளபதி வலேரி ஜெராசிமோவ் பாராட்டிய சில நாட்களுக்குப் பின்னர் பியோங்யாங்கின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மொஸ்கோ முதல் முறையாக போரில் வடகொரியாவின் ஈடுபாட்டைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. வட கொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட 11,000 வீரர்களில் குறைந்தது ஆயிரம் பேர் மூன்று மாதங்களில் உயிரிழந்துள்ளதாக நம்புவதாக மேற்கத்திய அதிகாரிகள் முன்னதாக கூறியிருந்தனர். தென் கொரிய மற்றும் மேற்கத்திய உளவுத்துறை, கடந்த ஆண்டு வடகொரியா குர்ஸ்க்கு ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பியதாக நீண்ட காலமாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியாவின் புதிய அறிவிப்பின்படி, பியோங்யாங் மற்றும் மொஸ்கோ இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்று KCNA தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1429745
  4. ஹஹாஹா…. டிரம்பின் Body Language ஐ இப்போதான் கவனித்தேன். 😂 எப்பிடி இருந்த நான்… இப்பிடி ஆயிட்டேன் பீலிங். 🤣
  5. உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன். நீண்ட இடைவெளிக்கு பின் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் விளைவாக கண்டிமா நகரை நோக்கி லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்தார்கள். சன நெரிசலில் சிக்கி ஓர் இருதய நோயாளி இறக்க நேரிட்டது. பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருளுக்காக நின்ற மிக நீண்ட வரிசைகளுக்குப் பின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் வந்தார்கள். எதிர்பாராத இந்த ஜனத்தொகையினால் கண்டி மாநகரம் குப்பை மேடாகியது. நகரத்துக்குள் புதிதாக நுழையும் ஜாத்திரிகர்களை வரவேண்டாம் என்று கூறித் தடுத்து நிறுத்த வேண்டி ஏற்பட்டது. கண்டி மாநகரின் புவியியல் கொள்ளளவை மீறி யாத்திரிகர்கள் குவிந்தார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் சுகாதார ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க மாநகர நிர்வாகத்தால் முடியவில்லை. இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் குப்பைகளை முழுமையாக அகற்ற முடியவில்லை. எனது நண்பர் ஒருவர் சொன்னார், புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சாதாரண சிங்கள மக்களை அனுமதித்ததன்மூலம் சிங்கள பௌத்த கூட்டுணர்வை தன்னோடு வைத்துக் கொண்டிருக்க தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என்று. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இம்மாதம் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் உழைக்கின்றார்கள்.புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு மக்களை அனுமதித்தமை தேர்தல் உள்நோக்கங்களைக் கொண்டது என்று ஊகிக்கக்கூடியதாக உள்ளது என்றும் நண்பர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தியானது ஓர் ஆளுங்கட்சி என்ற அனுகூலங்களைப் பயன்படுத்தி, அரச வளங்களைப் பயன்படுத்தி அரச வைபவங்களை,பண்பாட்டு நிகழ்வுகளை தனது தேர்தல் பிரச்சாரக் களங்களாக திட்டமிட்டு மறைமுகமாகப் பயன்படுத்தி வருகிறது. தென்னிலங்கையில் சிங்கள பௌத்த உணர்வுகளை ஒன்றுகுவித்து அதன் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது. அதேசமயம் தமிழ்ப் பகுதிகளில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மையை அவர்கள் தங்களுக்குரிய பிரகாசமான வெற்றி வாய்ப்பாகக் கருதுகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கியும் தமிழ் கட்சிகள் ஐக்கியப்படாத ஒரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியானது தமிழ்ப் பகுதிகளில் உற்சாகமாக வேலை செய்கின்றது.பெரும் கூட்டங்களை ஒழுங்குப்படுத்தி தமிழ் மக்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் பெரிய கூட்டங்களை நடத்துவதற்கு நிதி இல்லையாம்.அதனால் அவர்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களை மட்டும்தான் ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.இது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் காணப்பட்ட ஒரு தோற்றப்பாடாகும். பெரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாவிட்டால் மக்கள் மத்தியில் நொதிப்பை ஏற்படுத்த முடியாது. அது தேசிய மக்கள் சக்திக்குத் தெரிந்திருக்கின்றது. ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியில் தங்கி இருப்பவை.புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி பெரிய அளவில் கிடைக்கவில்லை என்றால் அவர்களால் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாதா? புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதிப் பங்களிப்பு இல்லை என்றால் தாயகத்தில் கட்சிகளால் ஒரு கட்டத்துக்கு மேல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்பதைத்தான் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலும் பொது தேர்தலும் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் நமக்கு உணர்த்துகின்றனவா? தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே ஒற்றுமைப்படா விட்டால் அல்லது குறைந்தபட்சம் பகை தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்றையாவது செய்திருந்திருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் வாக்குகள் நான்குக்கு மேற்பட்ட தரப்புகளால் சிதறடிக்கப்படும் வாய்ப்புக்களைக் குறைத்திருக்கலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த பாடத்தின் அடிப்படையில் கற்றுக்கொண்டு தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே ஏதாவது ஒருங்கிணைப்புக்குப் போக வேண்டும் என்று பல்வேறு தரப்புகளும் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்தன. கடந்த பெப்ரவரி மாதம் ஐநா அதனுடைய 70ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தை யாழ். திண்ணை விடுதியில் கொண்டாடிய பொழுது அதில் சுமந்திரனும் வந்திருந்தார். அவர் என்னிடம் கேட்டார், அனுர அலை இப்பொழுது ஓய்ந்து விட்டதா? இல்லையா? என்று. நான் சொன்னேன், அது இப்பொழுது அனுர அலை மட்டும் அல்ல, ஆளுங்கட்சி அலை, அரசாங்க அலை. அரசாங்கம் என்ற அடிப்படையில் அரச வளங்களைப் பயன்படுத்தி அந்த அலையை அவர்கள் தட்டி எழுப்பலாம். எனவே அதை எதிர்கொள்வதற்கு தமிழ் தரப்பு ஏதாவது பகை தவிர்ப்பு உடன்படிக்கைக்கு போவதுதான் புத்திசாலித்தனமானது என்று. அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அதே வைபவத்தில் மணிவண்ணனைக் கண்ட போதும் இந்த விடயத்தை நான் சொன்னேன். பகை தவிர்ப்பு உடன்படிக்கை தொடர்பாக அவர் அதிகமாகக் கேட்டறிந்தார்.அது அவசியம் என்பதனை அவர் உணர்ந்திருப்பதாகத் தெரிந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனால் யாழ்.மாநகர சபையில் ஏனைய கட்சிகளுக்கு ஒரு பெரிய போட்டியாளர் அகற்றப்பட்டிருக்கிறார். இவ்வாறு ஏதாவது ஒரு போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைக்கு போகுமாறு தமிழ்க் கட்சிகளுக்கு உரிய காலத்திலேயே கூறப்பட்டிருந்த போதிலும்,பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகள் அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. அல்லது அதனை அவர்கள் தமது கட்சி நோக்கு நிலையில் இருந்தே அணுகினார்கள் என்று தெரிகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி முதலில் ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது சங்குக் கூட்டணிதான். ஆனால் சந்திரகுமாரை உள்ளீர்த்த காரணத்தாலும் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து ரெலோ இயக்கம் வாக்களித்த காரணத்தினாலும் சங்குக் கூட்டணிக்குள் உடைவு ஏற்பட்டது. விளைவாக, இப்பொழுது சங்குக் கூட்டணி முன்னம் இருந்ததை விடவும் மெலிந்து போய் இருக்கிறது. எனினும் கிளிநொச்சியில் சந்திரகுமாருக்கு உள்ள வாக்குப் பலத்தை அவர்கள் அதிகம் நம்புவதாகத் தெரிகிறது. தமிழரசுக் கட்சி கூட்டுக்குப் போகத் தயார் இல்லை.அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் சரியானவைகள் போல தோன்றலாம். ஆனால் யதார்த்தத்தில் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டி எழுப்ப அவர்கள் இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்பதுதான் உண்மை. தாங்கள் தனித்து நின்று வெல்லலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை காரணமாகத்தான் அவர்கள் ஐக்கிய முன்னணிகளை குறித்து அல்லது குறைந்தபட்சம் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்கவில்லை. மூன்றாவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. கடந்த காலத்தில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் கற்றுக் கொண்டு அவர்கள் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அது நம்பிக்கையூட்டும் ஒரு விடயம். எனினும் தமிழ் வாக்காளர்களுக்கு அது நம்பிக்கையூட்டுமா இல்லையா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மேலும் இந்தக் கூட்டு ஏனைய மூன்று தமிழ்த் தேசியத் தரப்புகளோடு பகை தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்றுக்குப் போவதற்கு தயாரில்லை என்று தெரிகிறது. ஏனென்றால் அவர்களுடைய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களில், கட்சிப் பிரமுகர்கள் பேசும் பேச்சுக்களைப் பார்த்தால் அவ்வாறு பகை தவிர்ப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை என்றே தெரிகிறது. நான்காவது, விக்னேஸ்வரனின் மான் கட்சி. மணிவண்ணன் போட்டிக் களத்தில் இருந்து அகற்றப்பட்டமை அக்கட்சியைப் பொறுத்தவரை பெரிய வீழ்ச்சி. இவ்வாறாக, தமிழ்த் தேசியத் தரப்பு இப்பொழுது நான்காக நிற்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்ற பொது எதிரிக்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் மட்டும்தான் அவர்கள் ஒன்றாக நிற்கின்றார்கள். ஏனைய விடையங்களில் அவர்கள் தனித்தனியாகவே நிற்கிறார்கள்.என்.பி.பியை எதிர்ப்பதால் மட்டும் அதைத் தோற்கடித்துவிட முடியாது என்பிபிக்கு எதிராக ஒரே அணியில் நின்றால்தான் அதைத் தோற்கடிக்கலாம். அதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கற்ற பாடம். தனித்தனியாக நின்றதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களால் தேசத் திரட்சியைப் பாதுகாக்க முடியவில்லை.அதன் விளைவாகக் கிடைத்த வெற்றிகளின் அடிப்படையில்தான் அண்மையில் அமைச்சர் பிமல் ரட்டநாயக்க “நாங்கள் தான் இலங்கைத் தீவில் உள்ள மிகப்பெரிய தமிழ்க் கட்சி” என்று கூறியிருக்கிறார். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தங்களுக்குக் கிடைத்த ஆசனங்களின் அடிப்படையில் அங்கெல்லாம் தாங்கள்தான் பெரிய தமிழ்க் கட்சி என்று அவர் கூறுகிறார். இந்த அடிப்படையில் முழு இலங்கையிலும் தேசிய மக்கள் சக்திதான் மிகப்பெரிய தமிழ்க் கட்சி என்று அவர்கள் கூறத் தொடங்கி விட்டார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அவர்கள் தமது வெற்றி வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்வார்களாக இருந்தால், தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதவில்லை, ஒரு தேசிய இனம் என்று கருதவில்லை, ஒரு தேசிய இனம் என்ற காரணத்தால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வை அவர்கள் கேட்கவில்லை,என்று கூறக்கூடும். அதை எப்படித் தமிழ்த் தேசியக் கட்சிகள் தடுக்கப் போகின்றன? https://athavannews.com/2025/1429675
  6. மிகுந்த முயற்சியுடன் தான் நினைத்ததை சாதித்துக் காட்டிய மாணவன். காணொளியின் இறுதியில் பெற்றோர் படபடத்த நெஞ்சுடன் நிற்கும் போது, இவன் கூறிய பதிலை கேட்டு அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.
  7. 3 A எடுத்தவர்களின் பெயர்களையும், படத்தையும், பாடசாலையையும் குறிப்பிடும் போது.... 3 F எடுத்தவர்களையும் குறிப்பிட்டு ஆறுதல் சொல்லாமல் இருப்பது கண்டிக்கப் பட வேண்டும். 🤣
  8. அழிக்க இருந்த சாராயப் போத்தலுக்குள்... தேயிலைச் சாயம் இருந்த மாதிரி, இவர்கள் கைப்பற்றிய ஹெரோயினை எடுத்து விட்டு கோதம்ப மாவை வைத்திருந்தால் எப்படி விற்பதாம். முன்னைய அரசாங்கத்தில் ஏற்கெனவே இவர்கள் கைப்பற்றுகின்ற கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் சுழற்சி முறையில் மீண்டும் வேறு ஆட்களுக்கு கைமாறி விற்பனை செய்யப் படுவதாக ஒரு முன்னாள் அமைச்சர் பாரளுமன்றத்தில் காவல்துறையினரை கண்டித்து இருந்தார்.
  9. கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு! கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்தியதாக சாட்சிகள் விவரிக்கின்றனர். என்ன நடந்தது என்பது குறித்து வான்கூவர் பொலிஸார் எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிழக்கு 41வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெருவில் இரவு 8 மணிக்குப் பின்னர் ஒரு சாரதி கூட்டத்திற்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அவர்கள் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2025/1429677
  10. உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை! வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேநேரம், அவர்கள் இலங்கை மட்டத்திலும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்தனர். யாழ்ப்பாணத்தில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் உயரிய மாணவர்களின் பெறுபேறுகள். https://athavannews.com/2025/1429667
  11. உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை! வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேநேரம், அவர்கள் இலங்கை மட்டத்திலும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்தனர். யாழ்ப்பாணத்தில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் உயரிய மாணவர்களின் பெறுபேறுகள். Athavan Newsஉயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல...வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்...
  12. ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்! உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் “ஸ்ரீ தலதா வழிபாட்டின்” இறுதி நாள் (27) இன்றாகும். இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பக்தர்கள் புனித புனித தந்த தாதுவை பார்வையிட்டு வழிபடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் அமைந்துள்ள புனித தந்ததாது நினைவுச் சின்னத்தைக் பார்வையிட்டு வழிபடும் வாய்ப்பு 18 ஆம் திகதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு கிடைத்தது. கடந்த 9 நாட்களில், இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபட வாய்ப்பைப் பெற்றுள்ளதுடன், இன்றும் அதனை காண்டு வழிபட ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், கண்டி நகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவது உட்பட, நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தும் திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் இந்த வேலைத்திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1429644
  13. ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்! இதற்கிடையில், கண்டி நகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவது உட்பட, நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தும் திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  14. தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்! இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில், நீதிமன்ற ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோ ஹெராயின் புத்தளம், பாலாவியவில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 2021 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட 250.996 கிலோ ஹெராயின் இதில் அடங்கும். இதன் மூலம் ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டினரிடம் இருந்த 243.052 கிலோ ஹெராயின் தொகையும் இதில் அடங்கும். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாளை காலை 7.00 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து ஹெராயின் விடுவிக்கப்பட்டு செய்யப்பட்டு புத்தளத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் முன்னிலையில் போதைப்பொருள் அழிக்கப்படவுள்ளது. https://athavannews.com/2025/1429664
  15. 177,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி! 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பெறுபேறுகளின்படி மொத்தமாக 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது பரீட்சைக்கு தோற்றிய மொத்த மாணவர்களில் 64.43 சதவீதமாகும். இதற்கிடையில், 456 பரீட்சார்த்திகளின் பரீட்சை முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள் மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே 2 முதல் மே 16 ஆம் திகதி வரை ஆன்லைன் முறை மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 222,774 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 51,587 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றினர். க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் நேற்று மாலை (26) ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தன. https://athavannews.com/2025/1429649
  16. மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களையும், தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்ற யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரட்டையர்களுக்கு வாழ்த்துக்கள். தகுந்த முறையில் கல்வி அறிவு புகட்டிய... அவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  17. தீவிரவாதிகளின் குடியிருப்புகளை குறிவைத்து ஜம்மு-காஷ்மீரில் தீவிர தாக்குதல்! கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கடந்த 48 மணி நேரத்தில் ஆறு தீவிரவாதிகளின் குடியிருப்புகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதுடன், “பயங்கரவாத சுற்றுச்சூழல் அமைப்பை அகற்றும்” தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மைய நடவடிக்கையில், ஷோபியன் மாவட்டத்தின் ஜைனாபோரா (Zainapora) பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான அட்னான் ஷாஃபியின் வீடு வெடித்துச் சிதறிக்கப்பட்டது. இந்த தாக்குதலின் சில மணி நேரங்களுக்கு முன்பு, தற்போது பாகிஸ்தானில் வசிக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான ஃபரூக் அஹமட்டின் குப்ரா நகரில் அமைந்துள்ள வீடு குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளது. ஃபரூக்கின் வீட்டோடு, ஏனைய தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சொத்துக்களும் குறிவைக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், கடந்த வெள்ளிக்கிழமை, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு தீவிரவாதிகளின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடர்ந்த பைன் காட்டில் இருந்து 4 முதல் 5 பேர் வரையிலான தீவிரவாதிகள் வெளிவந்து, சுற்றுலாப் பயணிகள் மீது AK-47 துப்பாக்கிளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், 26 பேர் உயிரிழந்தனர். 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பள்ளத்தாக்கில் நடந்த மிகவும் பேரழிவு தரும் சம்பவங்களில் ஒன்றாக இது பதிவானது. இதேவேளை, மத்திய உள்துறை அமைச்சின் (MHA) உத்தரவைத் தொடர்ந்து, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் வழக்கை, பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முறையாகக் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் முகாமிட்டுள்ள இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குழுக்கள், சாட்சியங்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் மூத்த அதிகாரிகளால் மேற்பார்வையிடப்படும் இந்தக் குழுக்கள், அமைதியான மற்றும் அழகிய பைசரன் பள்ளத்தாக்கில் தங்கள் கண்களுக்கு முன்பாக நடந்த கொடூரமான தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளை ஆய்வு செய்கின்றனர். https://athavannews.com/2025/1429655
  18. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி! நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி உட்பட பல உலகத் தலைவர்கள் வத்திகானுக்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் பிரான்சிஸ் திருத்தந்தையின் நல்லடக்க ஆராதனைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கியும் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429622
  19. ஈரானிய துறைமுக வெடிப்பு சம்பவம்; 18 பேர் உயிரிழப்பு! ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த அனர்த்தத்தில் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை காலை தெற்கு நகரமான பந்தர் அப்பாஸுக்கு அருகிலுள்ள நாட்டின் மிகப்பெரிய வணிகத் துறைமுகமான ஷாஹித் ராஜீயிலேயே இரசாயனக் கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளை வெடிக்கச் செய்து பல வாகனங்களை அழித்ததுடன், வெடிப்பின் தாக்கத்தை 50 கிலோ மீற்றர் தொலைவில் உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. எனினும், இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஷாஹித் ராஜீயில் உள்ள கொள்கலன்களில் இரசாயனங்களை மோசமாக சேமித்து வைத்ததே வெடிப்புக்குக் காரணம் என்று ஈரானின் அவசரகால மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் ஜஃபாரி குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறெனினும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் உத்தரவிட்டதுடன், தீயை அணைக்கவும், ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஹோர்மோஸ் நீரினைக்கு அருகில் அமைந்துள்ள ஷாஹித் ராஜீ துறைமுகம் ஈரானின் மிகப்பெரிய கொள்கலன் மையமாகும். இது நாட்டின் பெரும்பாலான கொள்கலன் பொருட்களைக் கையாளுகிறது என்று அரசு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. https://athavannews.com/2025/1429658
  20. ரிஷாட் பதியுதீன் பரம்பரை பணக்காரர் அல்ல. நீங்கள் கூறுவது…. பதியுதீன் மஹ்மூத். அவர்தான் ஶ்ரீமாவோ ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர்.
  21. கோழி முட்டையை கூட இறக்குமதி செய்யும் நாட்டில், ஜட்டி உற்பத்தியில் தன்னிறைவு காண…. மக்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய சந்திரசேகரன் ஐயாவுக்கு இந்த நாடே கடமைப் பட்டிருக்கு. 😂
  22. 👉 https://www.facebook.com/watch?v=1377835846823602 👈 👆 பாடமாய் அமையும் காணொளி💔 டான் பிரசாத்தின்... துடிக்கும் குழந்தைகள், தவிக்கும் மனைவி😕

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.