Everything posted by தமிழ் சிறி
-
தடை செய்யப்பட்ட அமைப்புகள்: வர்த்தமானி வெளியீடு
இதில் தமிழ், முஸ்லீம் அமைப்புகள் மட்டுமே இருக்கும். சிங்கள அமைப்புகள் எதுவும்… மருந்துக்கும் இராது. அதனை ஏன் மினக்கெட்டு வாசிப்பான். சிங்களவன் உத்தமனாம் என்பார்கள். 😂
-
ரப் பாடகர் வேடன்
- பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!
பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை! மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது காரியாலயத்தின் நிலம் உடைக்கப்பட்டு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரது கட்சிக் காரியாலயத்தில் வைத்து அவரைக் கைது செய்து 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இந்நிலையிலேயே அவரது கட்சியின் காரியாலயம் சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது காரியாலயத்தில் இருந்தவர்களின் கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியேறவே உட் செல்லவே முடியாதபடி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரியாலயக் கட்டிடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433937- ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்
80 ரூபாய்க்கு வாங்கும் உப்பை, 360 ரூபாய்க்கு சந்தையில் விற்கிறார்கள். இடையில் யார் கொமிசன் அடிக்கின்றார்கள் என்பதையும் வெளியே சொல்லுங்கள்.- யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு
போன வருடம்... தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த பிறப்பு வீதம் அதிகரித்து இருக்கலாம். 😂- சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்
வாழ்த்துக்கள் அஸ்வின். தொடர்ந்து தமிழன் பெருமையை உலகு அறியச் செய்யுங்கள்.- கருத்து படங்கள்
- முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை!
- விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா?
விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா? நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே), பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சியாக, 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுத் தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் (ECI) வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி ஸ்டிக் மற்றும் பந்து, மைக்ரோஃபோன் (மைக்), மோதிரம் மற்றும் விசில் போன்ற சின்னங்கள் சாத்தியமான தேர்வுகளில் முதலிடத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றுள், கிரிக்கெட் மட்டை, மைக், வைரம் மற்றும் மோதிரம் ஆகியவை இதுவரை மிகவும் விரும்பப்படும் தேர்வுகளாகத் தோன்றுகின்றன. இது ஒருபுறம் ஒரு புதிய கட்சிக்கு ஒரு அங்கீகாரமாகத் தோன்றினாலும், மறுபுறம், தமிழகத்தின் ஆளும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, புதிய கட்சிகள் எழுச்சி பெறுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பயன்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு பொதுச் சின்னம் பெறுவதற்கான இந்த போராட்டம், தமிழக அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ள அதிகாரப் போட்டியின் பிரதிபலிப்பாகும். தேர்தல் ஆணைய விதிகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு (மே 6, 2026) ஆறு மாதங்களுக்கு முன்னதாக, நவம்பர் 5 அன்று சின்னத்திற்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கும். டிவிகே வட்டாரங்கள், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், சமீபத்தில் மூத்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தேர்தல் ஆணையத்தின் 190 இலவச சின்னங்கள் பட்டியலில் இருந்து பரிந்துரைகளை அழைத்ததாகத் தெரிவித்தனர். நடிகர் விஜய் தனது திரைப்படப் புகழ் மூலம் அரசியல் களத்தில் நுழைய முயல்கிறார். ஆனால், ஒரு பொதுச் சின்னத்தைப் பெறுவதற்கான போராட்டம், அவர் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கம் உள்ள நிலையில், ஒரு புதிய கட்சிக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் கிடைப்பது மிகவும் முக்கியம். இது ஒருபுறம் ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதி என்றாலும், மறுபுறம், பெரிய கட்சிகள் புதிய கட்சிகள் தங்கள் இடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தடையாக உள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுகிறதா அல்லது ஆளும் கட்சிகளின் செல்வாக்கிற்கு உட்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச் சின்னம் குறித்த போராட்டம், தமிழக அரசியலில் ஒரு பெரிய மோதலைத் தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. https://athavannews.com/2025/1433810- உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய பாதுகாப்புப் படையின் ஆயுதங்கள்!
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய பாதுகாப்புப் படையின் ஆயுதங்கள்! ஒபரேஷன் சிந்தூரின் போது, இந்திய நிறுவனங்கள் தயாரித்த ஆயுதங்கள், பாகிஸ்தானின் ஆயுதங்களை விட சிறப்பாக செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது துருக்கி மற்றும் சீன ஆயுதங்களையும் விட சிறப்பாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பாதுகாப்புத்துறையின் ஆயுதங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. அதன்பிறகு, பல நாடுகள் இந்திய பாதுகாப்பு உபகரணங்களில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன. அந்தவகையில் இந்தியாவின் ஆயுத உற்பத்தித்துறையில் சிறந்து விளங்கும், நைப் லிமிட்டெட் (Nibe Limited) நிறுவனம் தற்போது இஸ்ரேலின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிடமிருந்து பெரிய ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு USD 17.52 மில்லியன், அதாவது இந்திய பெறுமதியில் சுமார் ₹150 கோடியாகும், இந்த ஒப்பந்தத்தின் கீழ், நைப் லிமிட்டெட், 300 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கக்கூடிய யூனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் Make in India மற்றும் Aatmanirbhar Bharat என்ற இந்தியாவின் தன்னிறைவு கனவிற்கு பெரிய ஊக்கமாக உள்ளது என அந் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433803- காசா போர் நிறுத்தம்; அமெரிக்க முன்மொழிவை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்!
காசா போர் நிறுத்தம்; அமெரிக்க முன்மொழிவை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்! ஹமாஸுடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (30) தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்கும், மோதலை தூண்டிய தாக்குதலில் பிடிபட்ட பணயக்கைதிகளை மேலும் திருப்பி அனுப்புவதற்கும் ஒரு ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வது குறித்து நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேல் புதிய முன்மொழிவினை “ஆதரித்து” என்றார். இதேவேளை, புதிய காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் அண்மைய முன்மொழிவை பாலஸ்தீனிய ஆயுதக் குழு நிராகரிக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை இந்த திட்டம் பூர்த்தி செய்யவில்லை என்றும், சரியான நேரத்தில் அது பதிலளிக்கும் என்றும் ஹமாஸ் அதிகாரி கூறினார். 60 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, ஹமாஸ் இரண்டு கட்டங்களாக 10 உயிருள்ள பணயக்கைதிகளையும் 18 இறந்த பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைப்பதைப் பார்ப்போம் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்தத்தில் இரண்டு மாத கால போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, மார்ச் 18 அன்று இஸ்ரேல் காசா மீது முழுமையான முற்றுகையை விதித்து, ஹமாஸுக்கு எதிரான தனது இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கியது. https://athavannews.com/2025/1433853- 300 க்கும் மேற்பட்டோர் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்கள் சிறை
300 க்கும் மேற்பட்டோர் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்கள் சிறை. பிரான்ஸில் 300 க்கும் மேற்பட்டோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகாலம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஜோஎல் லெ ஸ்குவார்னெக் (Joël Le Scouarnec) என அழைக்கப்படும் 74 வயதான நபருக்கே குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 1990களிலிருந்து 2017 வரையிலான காலப்பகுதியில், தன்னிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்த சுமார் 300 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த ஜோல் லே? கடந்த 2017ஆம் ஆண்டு ஜோல் லே மீது, அண்டை வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாகக் கொடுத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பொலிஸார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதன்போது அவரது வீட்டிலிருந்து 3,00,000 புகைப்படங்களும் 650 ஆபாசமான விடியோக்களும், தான் செய்த பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி அவர் கைப்பட எழுதி வைத்திருந்த புத்தகங்களும் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் 2020ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போதுதான், மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டார். மருத்துவர் அளித்த தகவல் மற்றும் கிடைத்த விடியோ, புகைப்படங்களின் அடிப்படையில், அவர் 158 ஆண் மற்றும் 141 பெண் உட்பட ஏராளமான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தமை உறுதி செய்யப்பட்டது. குறித்த வழக்கானது உலகளவில் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவ்வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில் 74 வயதான ஜோஎல் லெ ஸ்குவார்னெக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதிக பட்ச தண்டனையாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. Athavan News300 க்கும் மேற்பட்டோர் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சத்திர...பிரான்ஸில் 300 க்கும் மேற்பட்டோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகாலம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஜ...- இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம்
மண்டபத்தின் திறப்பு இன்னும் இந்தியத் தூதரகத்தில் மட்டுமே உள்ளது. அதனால் யாழ்ப்பாணிகள்.. மண்டபத்தின் வெளியில் நின்று கட்டிடத்தை பார்த்து விட்டு, போக வேண்டியதுதான். தமிழனின் மையப் பகுதியில் அமைந்த கட்டிடத்தினை, தமிழன் பாவிக்கக் கூட உரிமை இல்லை. பெயர் மட்டும்... கலாச்சார மண்டபமாம். இது என்ன காலாச்சாரமோ... கட்டினவனுக்குத்தான் வெளிச்சம். பிற் குறிப்பு: எனது அறிவுக்கு எட்டியவரை.... இந்த மண்டபத்தை இந்தியா தனக்குப் பாவிக்க கட்டியதாகவே கருதுகின்றேன். ஒரு காலத்தில் இந்தியாவின் சொல்லுக்கு... இலங்கை கீழ்ப்படியாமல் முறுகல் நிலை ஏற்பட்டால்... இந்திய இராணுவத்தை பலாலியில் கொண்டுவந்து இறக்கி.. இதனை இந்திய ராணுவ முகாமாக பாவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. மையப் பகுதியில் இந்த நிலத்தை யாழ். மாநகரசபை இந்தியாவிடம் கொடுத்ததே பெரிய தவறு. கோடிக்கு கணக்கில்... கோவிலுக்கு செலவு செய்யும் நம்மவர்கள்... அந்த மண்ணுக்கு என்று பொதுவாக ஒரு அழகிய பிரமாண்டமான கட்டிடத்தை கட்டி இருக்கலாம். நம்மிடம்தான்... தூர நோக்குப் பார்வை என்றும் இருந்ததில்லையே.- அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
அந்த சார், யார் என்பதில் இரண்டு விதமான சந்தேகங்கள் இணையத்தில் பேசப் பட்டது. ஒரு சாரர்… அந்த சார், உதயநிதி என்கிறார்கள். உதயநிதி உத்தமன் இல்லை என்றபடியால்….இதுவும் ஏற்கக் கூடியதே. 😂 தமிழகத்திற்கு வரும் ஆளுநர்கள் எல்லோரும்… பொம்பிளை கள்வர் போல் உள்ளது. ஆளுநர் ரவிக்கு முன்பு இருந்த பன்வாரிலால் புரோகித் என்ற 75 வயது மதிக்கத் தக்க ஆளுநர் ஒருமுறை கள ஆய்விற்குப் போகும் போது, கிடுகு மறைப்பில் ஒரு பெண் குளித்துக் கொண்டு இருந்த போது… ஓலைக் கிடுகை விலக்கிப் பார்த்தாரம். 😁 அதற்கு முன்பு இருந்த சென்னா ரெட்டி என்ற ஆளுநர், ஜெயலலிதா அம்மையாரையே தவறான நோக்கத்தில் கூப்பிட்டார் என்று… அம்மையாரே கூறி உள்ளார். 🤣- தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
நல்ல ஒரு குணசித்திர நடிகர். ஆழ்ந்த அனுதாபங்கள்.- யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்
நீங்கள் நினைப்பது மாதிரி... யாழ்ப்பாணத்தில் 80 % சிங்களவர் வாசித்தால் சரி.- யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்
யாழ் ஆஸ்பத்திரிக்கு நியமிக்கப் பட்ட 268 தாதியரில்.... 200 பேர் சிங்களவர், 60 பேர் மட்டுமே தமிழர். தமிழர் செறிந்து வாழும் மாவட்டத்தில் 80% சிங்கள தாதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், மீதம் 20% மட்டுமே தமிழ் தாதிகள்.- விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது!
விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது! கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 49 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்த விமானத்தில் சந்தேக நபர் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானப் பணிப்பெண் உடனடியாக விமானிக்குத் தகவல் தெரிவித்தார். அதன் பின்னர் சந்தேக நபரான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த பயணி நீர்கொழும்பு தடயவியல் மருத்துவப் பரிசோதகரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1433743- உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா பச்சைக் கொடி!
உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா பச்சைக் கொடி! உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் மீது அண்மையில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலேயே உக்ரேனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆம் திகதி உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீது கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். குறிப்பாக புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும், புடினுக்கும் தனக்கு நல்ல உறவு காணப்பட்டது எனவும், ஆனால் அவருக்கு தற்போது ஏதோ நடந்துள்ளது எனவும் அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் எனவும்” ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அத்துடன் புடின் தேவையில்லாமல் பலரைக் கொன்று வருகின்றார் எனவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனில் உள்ள பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் விமர்சனத்தைத் தொடர்ந்து புடினின் முக்கிய ஆலோசகர் மற்றும் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் வ்லாடிமிர் மெடின்ஸ்கி(Vladimir Medinsky), உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரஸ்டென் உமெரோவுடன் Rusten Umerov தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார் எனவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் திங்கட் கிழமை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433710- கருத்து படங்கள்
- தெற்குக் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான விபரம் வெளியானது!
- ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!
- கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
துமிந்த திஸாநாயக்கவுக்கு ஜூன் 5 வரை விளக்கமறியல்! முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தையில், ஹேவ்லொக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடந்த மே 23 அன்று கைது செய்யப்பட்ட துமிந்த திஸாநாயக்க கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தார். ஹேவ்லொக் டவுனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1433736- முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை!
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை! 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தகர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தியிருந்தது. அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2025/1433718- தெற்குக் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான விபரம் வெளியானது!
தெற்குக் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான விபரம் வெளியானது! தெற்குகடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில்778கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது. இதன்போது படகில் இருந்து 11 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் இதேவேளை கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களுடன் இரண்டு படகுகள் இன்று காலை திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தெற்குகடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில்778கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது அவற்றில் 275 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 503 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புபிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1433635 - பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.